Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான்

spacer.png

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் சரிபாதியாக 117 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகமான ராவணன் குடிலில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சீமான் நேற்று (நவம்பர் 18) மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ஸ்டாலின் தொகுதியில் அவரை எதிர்த்து நீங்கள் போட்டியிடப் போவதாக தகவல்கள் வந்துள்ளதே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு வழக்கமான தன்னுடைய சிரிப்பை வெளிப்படுத்திய சீமான், “மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகிறார்கள். நானும் அதையே நினைக்கிறேன்” எனப் பதிலளித்தார்.

பிகாரில் தேஜஸ்வி யாதவுக்கு வந்த நிலை, தமிழகத்தில் திமுகவுக்கு வரக்கூடாது என்றால் காங்கிரஸை அது கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சீமான், அதிமுகவுக்கு எதிர்காலம் வேண்டும் எனில் பாஜகவைக் கழற்றிவிட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பாஜக நடத்தும் வேல் யாத்திரை மூலமாக நாம் தமிழருக்குத்தான் விளம்பரம் கிடைக்குமெனவும், பாஜகவுக்கு அல்ல எனவும் கூறியவர், 10 ஆண்டுகளாக தான் பேசிவரும் கொள்கைகளை தற்போது பாஜக கையில் எடுத்திருப்பதாகச் சாடினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வந்த நிலையில், ஸ்டாலினை எதிர்த்து போட்டி என அறிவித்துள்ளார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் கடலூரில் நின்ற சீமான் 12,000 வாக்குகளைப் பெற்றார். அக்கட்சி 1 சதவிகித வாக்குகளையும் பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில் 4 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வழக்கமாகத் தேர்தலில் இரண்டு தலைவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவதில்லை. எனினும், சிரித்துக்கொண்டே சொன்னதைப் பார்த்தால் இது சீமானின் இறுதி முடிவும் அல்ல என்பது தெரிகிறது.

https://minnambalam.com/politics/2020/11/19/12/asselbly-election-contest-against-stalin-says-ntk-chief-seeman

  • Replies 59
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் தேர்தல் வாக்கு என்பது விற்பனைப்பொருள். அங்கே நீதி,நியாயம்,மக்கள் நலன் எதுவும் கிடையாது. இப்படியான சூழ்நிலையில் சீமான் போன்ற தமிழின நலன்வாதிகளும்,சமூக நலவாதிகளும் வெல்வது கடினமானதுதான்.  என்னவொன்று கொளத்தூரில் ஒவ்வொரு வாக்கும் பலமடங்கு விலை உயரும்.
இருந்தாலும்...

சீமான் வெற்றி பெற நானும் என நண்பர்கள் சார்பிலும் தமிழ் நலன் விரும்பிகள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

நானும் இதை பார்த்தனான்.ஆனாலும் ஆஆஆ வென்றிருக்கிற முதலைகளுக்கு ஏன் தீனி போடுவான் என்று விட்டுவிட்டேன்.
நீண்ட காலத்தின் பின் சீமானைப் பற்றிய செய்தி.இணைப்புக்கு நன்றி கிருபன்.
கிருபன் இணைத்தபடியால் அணையாமல் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ஸ்டாலின் தொகுதியில் அவரை எதிர்த்து நீங்கள் போட்டியிடப் போவதாக தகவல்கள் வந்துள்ளதே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு வழக்கமான தன்னுடைய சிரிப்பை வெளிப்படுத்திய சீமான், “மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகிறார்கள். நானும் அதையே நினைக்கிறேன்” எனப் பதிலளித்தார்.

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, zuma said:

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

பாஜக வானாலென்ன எதுவாயிருந்தாற்தானென்ன - தமிழ்த்தேசியம் பாக்கு நீரிணைக்கு வடக்கிலும் தெற்கிலும் நிலைபெற்றால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

எப்படி என விளங்கப்படுத்தவும்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, zuma said:

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

காங்கிரஸ் என்றால் ஓகேயா....?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

காங்கிரஸ் என்றால் ஓகேயா....?

அவருக்கு யார் வென்றாலும் கவலையில்லை, தமிழ் தேசியம் தோற்றால் சரி

1 hour ago, nunavilan said:

எப்படி என விளங்கப்படுத்தவும்??

சும்மா வாயில் வந்ததை பதிந்தால் இப்படியெல்லாம் கேள்வி கேட்கப்படாது, அழுதிடுவேன்😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் இதை பார்த்தனான்.ஆனாலும் ஆஆஆ வென்றிருக்கிற முதலைகளுக்கு ஏன் தீனி போடுவான் என்று விட்டுவிட்டேன்.
நீண்ட காலத்தின் பின் சீமானைப் பற்றிய செய்தி.இணைப்புக்கு நன்றி கிருபன்.
கிருபன் இணைத்தபடியால் அணையாமல் இருக்கும்.

இல்லாத பொல்லாததை சொல்லுவார்கள். நிரூபிக்க சொல்லி கேட்டால் 3,4 நாட்களுக்கு வனவாசம் சென்று விடுவார்கள். 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

தமிழகத்தில் வழக்கமாகத் தேர்தலில் இரண்டு தலைவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவதில்லை. எனினும், சிரித்துக்கொண்டே சொன்னதைப் பார்த்தால் இது சீமானின் இறுதி முடிவும் அல்ல என்பது தெரிகிறது.

ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டால் வரவுள்ள  தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் தோல்வி என்பதை ஒப்புக்கொள்வதோடு ஸ்டாலின் முதலமைச்சர் என்பதையும் ஒத்துக்கொள்வதாக அமையும்.😀

இது ஒரு அரசியல் தற்கொலை என்பதால் காரைக்குடிப் பக்கம் போய்விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்: சீமான் ஏன் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்!? 

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் பாணியில் இப்போதே "இது அழாப்பும் தேர்தல்" என்று கு.சா சொல்லி விட்டார்! எனவே போட்டியிட்டு முகம் குப்புற விழுந்தாலும் மீசைக்கு காப்புறுதி வாங்கியாகி விட்டது! 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மை என்றால்.. தாவீர் - கோலியாத் பலப்பரீட்சை தான். முயற்சி செய்வது வெற்றிகாக என்றாலும்.. முயற்சி செய்யாமல் இருப்பதை விட முயற்சி செய்வது எவ்வளவோ மேல். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

எப்படி என விளங்கப்படுத்தவும்??

ஸ்டாலினுக்கு கிடைக்கும் வாக்குக்களை பிரித்து தனது B ரீம் அதிமுகவை வெல்ல வைக்க பாஜகா தனது C ரீம் சீமானை போடடியிட வைக்க  யோசித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, zuma said:

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

கட்டுரையின் இறுதிப் பகுதியையும் தயை கூர்ந்து வாசிக்கவும்..

😜

  • கருத்துக்கள உறவுகள்

Catwalk Proud GIF - Catwalk Proud Tamil GIFs

சீமான்...  ஸ்ராலினை எதிர்த்து... போட்டியிடலாம், என்ற செய்தியை... கேட்டதும்,
ஸ்ராலினுக்கு...  மெரினாவில்,  " யூரின்"  போயிருக்கும் என்று நினைக்கின்றேன்.  

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தான் கொஞ்ச வித்துவான்கள் சைக்கிள் சின்னத்துக்கு நக்கலடித்தவர்கள். அவர்கள் திரும்பவும்  எதிர்வு கூறுவதை நினைக்கும் போது ...அதுவும்  A ரீம் ,  Bரீம்  என கன்னை பிரித்தலை நினைக்கும் போது.......   🙃

  • கருத்துக்கள உறவுகள்

2011-ல் கருணாநிதி... 2021-ல் ஸ்டாலின் - கொளத்தூரில் போட்டியிடுகிறாரா சீமான்?#TNElection2021

ஸ்டாலின் - சீமான்

ஸ்டாலின் - சீமான்

சீமான், சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என முடிவானது. அதிலும், குறைவான வாக்களர்களைக் கொண்ட ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என்றே இறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில்தான், தற்போது, இப்படியொரு பதிலைச் சொல்லியிருக்கிறார் சீமான்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ஒரு போர்க்களக் காட்சி வரும். ஒருபுறம் ரீமாசென் தரப்பினர், துப்பாக்கி, பீரங்கி, ஹெலிகாப்டர் என நவீன ஆயுதங்களோடு சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்தப் பக்கம் பார்த்திபன் தரப்பு, வில், அம்பு, கற்களை வைத்துக்கொண்டு சண்டையிடுவார்கள். ஒரு கட்டத்தில் ரீமா தரப்பின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பார்த்திபன் படையின் ஒருசிலரைத் தவிர்த்து அனைவரும் இரையாகிப் போவார்கள். ஒரு நான்கைந்து பேர் சூழ்ந்திருக்க, பார்த்திபன் கார்த்தியிடம், ``இந்தப் படைக்கலத்தின் பேர் என்ன, இதைப் பற்றி தாங்கள் முன்னமே விவரிக்கவில்லையே... அச்சபடுவோம் என்றா?'' என தனக்குப் பின்னால் இருப்பவர்களைப் பார்க்க, அனைவரும் உரக்கச் சிரிப்பார்கள். அதற்கு ஈடான ஒரு காட்சி நேற்று, தமிழக அரசியல் களத்தில் நடந்தேறியது.

சீமான் செய்தியாளர் சந்திப்பு
 
சீமான் செய்தியாளர் சந்திப்பு

விடுதலைப் போராட்ட வீரர், வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாளை முன்னிட்டு, அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது பத்திரிகையாளர்கள், ''நீங்கள் சென்னையில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிலும் ஸ்டாலின் வெற்றிபெற்ற கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதாகச் சொல்கிறார்களே அது உண்மைதானா, போட்டியிடுவீர்களா?'' எனக் கேட்க, சீமான் திரும்பி, தன் தம்பிமார்களைப் பார்க்க அனைவரும் உரக்கச் சிரித்துவிட்டு, ``நிக்கனும்னு எல்லோரும் நினைக்கிறாங்க... நானும் நிக்கலாம்னு நினைக்கிறேன்...அத அப்புறம் யோசிப்போம்'' என பதில் தந்தார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தீவிரமான தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில்தான், அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் தொகுதி குறித்து பேச்சு எழுந்துள்ளது.

2010-ம் ஆண்டே நாம் தமிழர் இயக்கத்திலிருந்து கட்சியாக மாறினாலும், அது முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டது 2016-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில்தான். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, மற்ற கட்சிகளுக்கு முன்பாகவே தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார் சீமான். கடலூர் சட்டமன்றத் தொகுதியில் அவர் போட்டியிட்டார் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அவரின் சொந்த மாவட்டத்தில்தான் போட்டியிடமுடியும் என்கிற மரபை உடைப்பதற்காக வட தமிழகத்திலும், அதிலும் குறிப்பாக வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் மக்கள் அடிக்கடி பாதிக்கப்படும் கடலூரில் சீமான் போட்டியிட முடிவெடுத்ததாகவும் அப்போது அந்தக் கட்சியினரால் விளக்கம் தரப்பட்டது.

நாம் தமிழர் கட்சி
 
நாம் தமிழர் கட்சி

ஒருபுறம் அ.தி.மு.கவின் அமைச்சர் எம்.சி.சம்பத், மறுபுறம் தி.மு.க-வின் மாநில மாணவரணிச் செயலாளர் புகழேந்தி, பா.ம.க சார்பில் ஒருவர், மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா சார்பில் ஒரு வேட்பாளர் என ஐந்து முனைப் போட்டி நிலவியது. அதனால் சீமானால் அங்கு வெறும் 12,497 வாக்குகளை மட்டுமே வாங்க முடிந்தது. அதனால், வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில், தென் மாவட்டத்தில், தன் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டு. சிவகங்கையா, காரைக்குடியா என விவாதிக்கப்பட்டு பின் காரைக்குடி தொகுதிதான் என முடிவானது. ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்த சர்வேயில் அந்தத் தொகுதியில் சீமானால் வெற்றிபெறுவது கடினம் என ரிசல்ட் வர, சென்னையில் ஒரு தொகுதியில் போட்ட்யிடலாம் என முடிவானது. அதிலும், குறைவான வாக்களர்களைக் கொண்ட ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என்றே முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில்தான், தற்போது பத்திரிகையாளர்கள் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப் போவதாகச் சொல்கிறார்களே எனக் கேட்க இப்படியொரு பதிலைச் சொல்லியிருக்கிறார் சீமான்.

2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறு சீரமைப்பில், வில்லிவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளும், நீக்க‌ப்ப‌ட்ட‌ புர‌சைவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளையும் உள்ள‌ட‌க்கி கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமியை விட வெறும், 2,819 வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார் ஸ்டாலின். ஆனால், 2016 தேர்தலில் தன்னை எதிர்த்துப் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜே.சி.டி பிரபாகரை விட 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார் ஸ்டாலின். அவருக்கு மிகவும் சாதகமான தொகுதியாகவே கொளத்தூர் தொகுதி இருக்கிறது. இந்தநிலையில் சீமான் இங்கு போட்டியிடுவாரா?...நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்.

''2011-ம் வருடமே அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதியை எதிர்த்து, எங்கள் அண்ணனை நிற்க வைக்க பலர் முயற்சி செய்தார்கள் ஆனால், நாங்கள் தேர்தல் பாதைக்கு அப்போது வரவில்லை. எங்களுக்கு சரியான கட்டமைப்புகளும் அப்போது இல்லை. ஆனால், இப்போது அப்படி அல்ல, 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சிக்கு கிளைகள் இருக்கின்றன. சென்னையில்தான் அண்ணன் போட்டியிடுகிறார்; அது உறுதி. ஆலந்தூர்தான் முடிவாகியிருந்தது. ஆனால், கொளத்தூரில் போட்டியிடலாம் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்'' என்றனர்.

ஸ்டாலின்
 
ஸ்டாலின்

சீமான் கொளத்தூர் தொகுதியில் போட்ட்யிட்டால் அது ஸ்டாலினின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதா என தி.மு.க வட்டாரத்தில் பேச, ''அவர் நிற்பதால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. கடலூரில் போட்டியிட்டு அவர் டெபாசிட் கூட வாங்கவில்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினராக எங்கள் தலைவர், கொளத்தூர் தொகுதியில் செய்திருக்கிற பணிகள் என்பது மகத்தானது. கொரோனாவுக்கு பின்பு மட்டும் அல்ல அதற்கு முன்பாகவே அவர் அங்கு சிறப்பான பல பணிகளைச் செய்திருக்கிறார். அதனால் எங்கள் தலைவருக்கான வாக்குகளைச் சீமானால் ஒன்றும் செய்யமுடியாது. எங்களுக்கான வாக்குகள் அப்படியே எங்களுக்குத்தான் விழும். எதிர்க்கட்சிகளுக்குப் போகிற வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார். அதனால் எங்கள் தலைவரின் வெற்றி வித்தியாசம் இன்னும் அதிகமாகும்'' என்கின்றனர் மிகுந்த உற்சாகமாக.

ஆனால், சீமான் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காண்பிப்பதற்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து, அரசியல் விமர்சகர்கள் பேசும்போது,``கன்ஷிராம் பாணியைத்தான் சீமான் கடைபிடிக்கிறார். ஸ்டாலினை மையமாக முன்வைத்தால் மிகப்பெரிய பப்ளிசிட்டி கிடைக்கும் என நினைக்கிறார். தவிர, ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவதன் மூலமாக, திராவிடமா, தமிழ்த் தேசியமா என்கிற விவாதத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கலாம் என நினைக்கிறார். அந்த ஒரு தொகுதியில் மட்டுமல்லாது, 233 தொகுதியிலும் அதை விரிவுபடுத்துவார் தன்னுடைய பேச்சுத் திறமையால் கருத்தியல் ரீதியாக கடுமையான சவாலை ஸ்டாலினுக்கு ஏற்படுத்த முடியும் என நினைக்கிறார். கொளத்தூரில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் ஸ்டாலினுக்கு நான்தான் போட்டி என முன்வைத்து தன் கட்சியை வளர்க்கப் பார்க்கிறார் சீமான்'' என்கின்றனர்.

சீமான்
 
சீமான்

அதேவேளை, ``ஆன்டி பிஜேபி என்கிற அடிப்படையில், தி.மு.க-வும் நாம் தமிழரும் ஒரே கொள்கையைத்தான் கடைபிடித்து வருகிறார்கள். அப்படியிருக்கும்போது, ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிட்டால் பா.ஜ.கவின் 'பி' டீம் என்கிற பெயர்தான் அவருக்கு ஏற்படும். தேர்தல் அரசியல், கருத்தியல் ரீதியான விவாதத்துக்கான களம் அல்ல. அதனால், அது மக்களிடம் பெரியளவில் எடுபடாது. ஆனால், சீமான் அங்கு போட்டியிட்டால் அவர் தி.மு.க-வுக்குச் செல்கின்ற வாக்குகளைத்தான் பிரிப்பார். ஆனாலும்,கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினின் வெற்றி உறுதியானது. அதில், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதனால், சீமான் மற்றவர்களின் வெற்றியைத் தடுப்பது குறித்து சிந்திப்பதை விட்டுவிட்டு, தனக்கு ஆதரவான தொகுதி எது, எங்கு நின்றால் வெற்றி பெறலாம் என யோசிப்பதே அவருடைய கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது'' என்கிற கருத்துக்களும் அரசியல் நோக்கர்களால் முன்வைக்கப்படுகிறது.

ஏறக்குறைய நாம் ஆரம்பத்தில் பார்த்த ஆயிரத்தில் ஒருவன் காட்சியைப் போல, துணிவும் தைரியமும் இருந்தால் மட்டும் போதாது; போதிய வலிமையும் களத்துக்குத் தேவையான ஆயுதங்களைக் கையில் எடுத்தால் மட்டுமே வெற்றியைப் பெறலாம் என்பதே போர்க்களமும் சரி தமிழகத் தேர்தல் களமும் சரி நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடமாக இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியினர் அதைப் புரிந்துகொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

https://www.vikatan.com/government-and-politics/politics/is-seeman-competing-kolathur-in-2021-election

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 20/11/2020 at 15:56, Justin said:

ட்ரம்ப் பாணியில் இப்போதே "இது அழாப்பும் தேர்தல்" என்று கு.சா சொல்லி விட்டார்! எனவே போட்டியிட்டு முகம் குப்புற விழுந்தாலும் மீசைக்கு காப்புறுதி வாங்கியாகி விட்டது! 

நான் இந்திய/தமிழக பழைய தேர்தல் நிலவரங்களை வைத்து கருத்து எழுதினேன். தாங்கள் ஒரு குறுகிய எண்ணைச்சட்டிக்குள் நின்று எரிந்து பொரிந்திருக்கின்றீர்கள்.

தடைகளிலும் அழிவுகளிலும் சுகம் காண்பவர்களிடம் நல்ல எண்ணங்களை/ கருத்துக்களை எதிர்பார்ப்பதும் ஒரு வித முட்டாள்தனம்தான்.

இனிவரும் காலங்களில் தமிழக அன்றைய இன்றைய அரசியல் நிலவரங்கள் எப்படியானது என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். இல்லையேல் வரலாற்று ஆசிரியர்களை அணுகி பயில முயலுங்கள். எமக்கு இந்திய அரசியலை உங்களுக்கு அறிவுறுத்தும் அளவிற்கு நேரமில்லை. அத்துடன் நேரம் காலம் எல்லாம் எமக்கு பொன்னானது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 23:07, nunavilan said:

எப்படி என விளங்கப்படுத்தவும்??

அமித்சா வருகையின் பின் அதிமுக-பிஜேபி கூட்டணி உறுதி. அநேகமாக 30-35 தொகுதிகளில் பிஜேபி கேட்க கூடும். 

பிஜேபிக்கு 5-10 சீட் கன்பெர்ம்?

திமுக நாயக்கர் (தெலுங்கு) சாதி கட்சியிலும், அதிமுக தேவர் சாதி கட்சியிலும் பிரபலமானவை.

திமுகவின் வாக்கு வங்கியில் தமிழ் ஆதரவு வாக்கை சீமானும், தெலுங்கு ஆதரவு வாக்கை திமுகவில் இருந்து பாஜாகவுக்கு இழுக்க பட்ட வி பி துரைசாமியும், ராதாரவி, தெலுங்கு சமிதி ஆட்கள் பிரிக்க. அதிமுக தோளில் சவாரி செய்தபடி பாஜக தாமரையை தமிழ்நாட்டில் மலரச்செய்ய வேண்டும்.

இதுதான் அமித் ஜி மாஸ்டர் பிளான்.

ஏற்கனவே பீகாரில் 4 முறை முதல்வராக இருந்த ஜாம்பவான் நிதீஷ் குமாருடன் கூட்டணி வைத்து, கூடாரத்து ஒட்டகமாகி, இன்று பிஜேபி அங்கே தனி பெரும் கட்சியாகி நிதீசை பொம்மை முதலவராக்கி, தனக்கு இரெண்டு துணை முதலவர்களையும் எடுத்துள்ளது பிஜேபி.

இதே கேம்பிளாந்தான் அதிமுகவுக்கும். இன்னும் இரெண்டு தேர்தலின் பின் தமிழ்நாட்டில் பிஜேபிதான் தனி பெரும் கட்சி. அவர்களின் ஜூனியர் பார்ட்னர் அதிமுக.

தேர்தலுக்கு முதலே பேசியபடி ஒப்பந்த பணத்தை  தெலுங்கு சமிதி ராதாரவி தரவளிகளும், சீமானும் அமித்சாவிடம் கறாராக வாங்கி விட வேண்டும். இல்லாட்டி ஜி நாமத்தை போட்டுவிட்டு போய்கிட்டே இருப்பார்.

On 20/11/2020 at 21:11, nunavilan said:

இப்படி தான் கொஞ்ச வித்துவான்கள் சைக்கிள் சின்னத்துக்கு நக்கலடித்தவர்கள். அவர்கள் திரும்பவும்  எதிர்வு கூறுவதை நினைக்கும் போது ...அதுவும்  A ரீம் ,  Bரீம்  என கன்னை பிரித்தலை நினைக்கும் போது.......   🙃

சைக்கிளளை பற்றி அப்போ சொன்ன நக்கல் இப்போதும் பொருந்தும். பாராளுமன்றில் நேரு சூட் போட்டு ஆங்கிலத்தில்  கதைப்பதை விட ஒரு ஆணியும் அவர்கள் புடுங்க போவதில்லை.

குறைந்த பட்சம் விக்கியுடன் சேர கூடமுடியா அளவுக்கு கஜனின் சுயமுனைப்பு எழும்பி ஆடுகிறது. மணியை கூட தக்கவைக்க முடியவில்லை. அம்பாறைக்கு போய் டீ பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு கஜேந்திரன் அந்த பக்கம் தலை கறுப்பும் இல்லை.

சுமந்திரன் சம்பந்தரின் கையாலாகதனம், விக்கி வாக்கை பிரித்தமையால் ஒரு எம்பி சீட்டும், 60 வாக்கு வித்தியாசத்தில் ஒரு தேசிய பட்டியல் சீட்டும் கிடைத்தது - இதை வைத்து அடுத்த 5 வருடம் கமெடி பண்ணுவார்கள். வேறு எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இரெண்டு தேர்தலின் பின்

கொரனா வரப்போவதே யாருக்கும் தெரியவில்லை. இதற்குள் நீங்கள் வேறு. பீகாரை தமிழ் நாட்டுடன் ஒப்பிடவே முடியாது. மொத்தத்தில் வித்தியாசமான வாக்காளர்கள். தெற்கில் பா ஜா க காலடி வைப்பதற்கு மிகுந்த பிராயதனம் பண்ணுவது உண்மை. அதற்காக உங்கள் சமன்பாடு?  ************ அடிக்க பல்லு கொட்டியது  போல என எண்ணுகிறேன். 
இருந்தாலும் யாரின் கருத்தையும் குறைவாக எடை போடுவதில்லை. இவர் இப்படி சொல்லி இருந்தேரே என எப்போதாவது ஒரு கணம் எண்ணுவதுண்டு.

இப்போதே தமிழக வாக்குகள் பிரிந்த நிலையில் (சீமான், கமல், ராமதாஸ், விஜயகாந், தி.முக, அ.தி.மு.க வகையறாக்கள்) பா.ஜ.க ஆட்சி அமைப்பது என்பது கற்பனைக்கெட்டிய தூரம் வரை இல்லை. 

நீங்களும் கஜேந்திரனை (சைக்கிள்) நக்கலடித்தவர் அல்லது அதற்கு ஆதரவாக பச்சை குத்தியவர் என எண்ணுகிறேன். 

என்ன இருந்தாலும் காலமும் காட்சிகளும் மாறிய படி உள்ளதை அவதானிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nunavilan said:

பீகாரை போல அல்ல தமிழக வாக்காளர் என்பது என்னவோ உண்மைதான். மேற்கு வங்க, கேரள, தமிழக வாக்காளர் ஏனைய இந்திய வாக்காளர் போல இல்லை. முன்னைய இரெண்டுக்கு கம்யூனிஸ்டுகளும் பின்னையதுக்கு பெரியாரும் காரணம்.

ஆனால் தமிழகத்தை விட முற்போக்கான மாநிலமாக கருதபட்ட மேற்கு வங்கத்திலே கூட இப்போ மம்தாவுக்கு அடுத்து பிஜேபிதான்.

2021 பிஜேபி தமிழகத்தில் களத்தில் இறங்கும் தேர்தல். மூன்று தேர்தலின் பின், பிஜேபி இரெண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகவருவதே திட்டம்.

சைக்கிள்காரர் - நக்கல் அடித்தவர்களில் நான் ஒருவந்தான். இன்றுவரை நான் நக்கல் அடித்ததை சரி என்றே அவர்கள் நிறுவியும் வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

சைக்கிள்காரர் - நக்கல் அடித்தவர்களில் நான் ஒருவந்தான். இன்றுவரை நான் நக்கல் அடித்ததை சரி என்றே அவர்கள் நிறுவியும் வருகிறார்கள்.

நீங்கள் புரட்டுவதில் வல்லவர் என்பதும் தெரியும். நீங்கள் நக்கல் அடித்தது அவர்கள் வரமாட்டார்கள் என்பதே. ஒத்து கொள்ளுங்க ராஜா ஒத்து கொள்ளுங்க.

நீங்கள் கஜேந்திரனின் இன்றைய பாராளுமன்ற உரையை   கேட்கவில்லை என நினைக்கிறேன். சிரிப்பதற்கு எவ்வளவோ  பேர் இன்று உள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 21:09, குமாரசாமி said:

சீமான் வெற்றி பெற நானும் என நண்பர்கள் சார்பிலும் தமிழ் நலன் விரும்பிகள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

On 20/11/2020 at 16:13, nedukkalapoovan said:

இந்தச் செய்தி உண்மை என்றால்.. தாவீர் - கோலியாத் பலப்பரீட்சை தான். முயற்சி செய்வது வெற்றிகாக என்றாலும்.. முயற்சி செய்யாமல் இருப்பதை விட முயற்சி செய்வது எவ்வளவோ மேல். 

On 20/11/2020 at 20:47, தமிழ் சிறி said:

Catwalk Proud GIF - Catwalk Proud Tamil GIFs

சீமான்...  ஸ்ராலினை எதிர்த்து... போட்டியிடலாம், என்ற செய்தியை... கேட்டதும்,
ஸ்ராலினுக்கு...  மெரினாவில்,  " யூரின்"  போயிருக்கும் என்று நினைக்கின்றேன்.  

ஐயாமார்களே,

இந்தப் பழைய செய்தியை ஒருமுறை படித்தால் உண்மை நிலவரம் விளங்கும். 

டெபாசிட் கட்ட பணம் பாட்டி சொத்தில் இருந்துதானே வரும். புகையாகக் போகட்டும்😁

டெபாசிட் இழந்த பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்... சீமான், தமிழிசையும் தப்பவில்லை

Published: Friday, May 20, 2016, 10:42 [IST]
 
சென்னை: தமிழக சட்டசபை 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சீமான்உட்பட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். இதேபோல சட்டசபை தேர்தலில் தனி அணியாக களமிறங்கிய பாஜக வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இதில் தப்பவில்லை.

ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளை விட 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே அவர்கள் கட்டிய டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும். முதன்முறையாக இந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமிறங்கியது. இந்த தேர்தலில் 232 தொகுதிகளில் மொத்தம் 4, 58,104 வாக்குகள் பெற்றது நாம் தமிழர் கட்சி. மொத்தம் 1.1% வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி

spacer.png

நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்ட சீமான், கடலூர் தொகுதியில் போட்டியிட்டார் அந்த தொகுதியில் அவர் 12,497 ஓட்டுகள் மட்டுமே பெற்று 5வது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு டெபாசிட்டை இழந்தார்.

இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்தனர்.

தமிழகத்தில் தனி அணியாக போட்டியிட்ட பாஜக 157 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. இதில் குமரி, கோவை மாவட்டங்களைத் தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவில் பாஜக வேட்பாளர்கள் பெறவில்லை.

பாஜக இந்த தேர்தலில் மொத்தம் 12,28, 692 வாக்குகளை பெற்றுள்ளது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 2.8% ஆகும்.

https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-tamilisai-loss-deposit-254149.html

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

தங்கள் கையெழுத்திலேயே இதற்குப் பதில் உள்ளது..

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

குறைந்தது ஒரு சவாலை.. அழுத்தத்தை.. கொடுப்பதும்.. மக்களுக்கு செய்ய வேண்டியதை சொல்லி இனங்காட்டுவதும்.. வெற்றிக்கு முயற்சிப்பதும்.. தவறே அல்ல. நாம் தமிழர் முயற்சிக்கட்டும்.. வெற்றி ஓர் நாள் கைகூடும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.