Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்

22 நிமிடங்களுக்கு முன்னர்
இரான் தாக்குதல்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, 

தாக்குதலுக்கு ஆளான ஃபக்ரிஸாதேவின் கார்

இரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். 

அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள இரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஸரீஃப், இது ஒரு நாட்டின் ஆதரவுடன் நடந்த தீவிரவாத செயல் என்று தெரிவித்துள்ளார். 

இரானிய அணுசக்தித்துறை திட்டங்களின் மூளையாக ஃபக்ரிஸாதே இருந்ததாக மேற்கத்திய உளவு அமைப்புகள் கருதுகின்றன. 

மேலும், மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை, "இரானிய வெடிகுண்டு உலகின் தந்தை" என்று ராஜீய அதிகாரிகள் அழைப்பதாகவும் கூறப்படுகிறது. 

இரான் அரசு, அதன் அணுசக்தி மேம்பாட்டுக்காக யுரேனியம் செறிவூட்டலை பெருக்கி வருவதாக வல்லரசு நாடுகள் கவலை வெளியிட்டு வந்த நிலையில், அந்நாட்டின் அணுசக்தி தலைமை விஞ்ஞானி கொல்லப்பட்டிருக்கிறார். செறிவூட்டப்பட்ட யுரேனியம், அந்நாட்டின் அணுசக்தி சிவில் திட்டங்களுக்கு மட்டுமின்றி ராணுவ அணு ஆயுத திட்டங்களுக்கும் முக்கியமானதாக கருதப்பட்டு வருகிறது.

ஆனால், அமைதி பயன்பாடுக்கு மட்டுமே தமது அணுசக்தி திட்டம் உள்ளது என்று இரானிய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

2010-2012ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் நான்கு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவற்றின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக இரான் குற்றம்சாட்டியது. 

இந்த நிலையில், 2018ஆம் ஆண்டில் இரானிய அணுசக்தி திட்டம் தொடர்பாக நிகழ்ச்சியொன்றில் பேசியபோது, ஃபக்ரிஸாதேவின் பெயரை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு குறிப்பிட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

என்ன நடந்தது?

ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டது தொடர்பாக இரானிய பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, இரானிய அணுசக்தி அமைச்சகத்தின் அங்கமான ஆராய்ச்சி அமைப்பின் தலைமை விஞ்ஞானியான ஃபக்ரிஸாதே சென்ற வாகனத்தை ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இலக்கு வைத்ததாக கூறப்பட்டுள்ளது. 

"பாதுகாவலர்களுடன் வாகனத்தில் சென்ற அவரையும் அவரது காவலர்களையும் இலக்கு வைத்த தீவிரவாதிகள், அனைவரையும் சுட்டுத்தள்ளினார்கள். ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஃபக்ரிஸாதேவை கொண்டு சென்றபோதும் அவரை உயிர் பிழைக்க வைக்கும் மருத்துவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. அதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்து விட்டது," என்று இரானிய பாதுகாப்புத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஃபக்ரிஸாதே சென்ற கார் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்சார்ட் நகரில் கார் வெடிப்பு சத்தம் கேட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

"இரானின் தலைசிறந்த விஞ்ஞானியை தீவிரவாதிகள் கொன்று விட்டனர்," என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஸாரிஃப் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

Twitter பதிவின் முடிவு, 1

"கோழைத்தனமான இந்த தாக்குதல் பின்னணியில் இஸ்ரேலின் பங்கு இருப்பதற்கான வலுவான அறிகுறிகள் தென்படுகின்றன என்றும் போரை விரும்பும் சூழ்ச்சியாளர்களின் நோக்கம் அதில் தெரிகிறது," என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ஒரு நாடு கட்டவிழ்த்த பயங்கரவாத செயலை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும் ஸாரிஃப் அழைப்பு விடுத்துள்ளார். 

இரான் தாக்குதல்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, 

தாக்குதல் நடந்த சம்பவ பகுதி

மொஹ்சென் ஃபக்ரிஸாதே யார்?

இரானிய அணுசக்தித்துறையில் தனித்துவம் வாய்ந்த சிறந்த விஞ்ஞானி ஃபக்ரிஸாதே. இரானிய புரட்சிகர ராணுவப்படையின் உயரதிகாரியாகவும் அவர் விளங்கினார். 

இரானிய ஆயுத திட்டங்களின் சக்திவாய்ந்த மூளையாக ஃபக்ரிஸாதே இருந்தார் என அவரை மேற்கத்திய பாதுகாப்பு படைகளின் வட்டாரங்கள் அழைத்தன. 

2018ஆம் ஆண்டில் இஸ்ரேல் திரட்டிய ரகசிய ஆவணத்தின் அடிப்படையில், இரானிய அணு ஆயுத திட்டங்களை உருவாக்கியதே ஃபக்ரிஸாதே என்று தெரிய வருகிறது. 

இரானிய அணு ஆயுத திட்டத்தின் தலைமை விஞ்ஞானி ஃபக்ரிஸாதே. இந்த பெயரை நினைவில் கொள்ளுங்கள் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு வெளிப்படையாகவே அவரது பெயரை நிகழ்ச்சியொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். 

2015ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், இரண்டாவது உலக போரின்போது முதலாவது அணு ஆயுதங்களை தயாரித்த ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெமருடன் ஃபக்ரிஸாதே ஒப்பிடப்பட்டிருந்தார். 

இந்த நிலையில், அவரது படுகொலை தொடர்பான தமது கருத்தை இன்னும் இஸ்ரேல் வெளியிடவில்லை.

https://www.bbc.com/tamil/global-55107379

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலை உலகவரைபடத்திலிருந்து முற்றாகத் துடைப்பழிப்பதே ஈரானிய அடிப்படைவாத முல்லாக்களின் ஒரே நோக்கம். அவசர அவசரமாக அணுவாயுதம் ஒன்றைத் தயாரிக்க அவர்கள் விளைவது அதற்குத்தான். இஸ்ரேல் முந்திக்கொண்டுவிட்டது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அணுவாயுதப்பலம் இருப்பது முழு உலகிற்கும் ஆபத்தானது. ஆகவே இப்போது நடந்திருப்பது நல்ல விடயமே. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் படுகொலை – இஸ்ரேல் மீது சந்தேகம்

ஈரானின் அணுவாயுத திட்டங்களின் தலைவர் என கருதப்படும் ஈரானின் விஞ்ஞானியொருவர் இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

iran-sci-300x188.jpg
மொஹ்சென் பக்ரிசாதே என்ற ஈரானின் அணுவிஞ்ஞானி கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரானின் பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது.
பேராசிரியரும் ஈரானின் புரட்சிகர இராணுவத்தின் முக்கிய உறுப்பினருமான மொஹ்சென் பக்ரிசாதே கொல்லப்பட்டுள்ளார் என ஈரானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

iran-sc3-300x200.jpg
ஈரான் தலைநகருக்கு அருகில் அவரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் கொல்லப்பட்டுள்ளனர் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் தலைநகருக்கு அருகில் உள்ள அப்சார்ட் என்ற நகரில் அவர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குண்டுவெடிப்பு சத்தமும் துப்பாக்கி பிரயோகமும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார் ஒன்றே இலக்கு வைக்கப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு படையினர் வீதிகளை மறிப்பதை ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது.

iran-sce2-300x188.jpgஇன்று மதியம் ஈரானின் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளிற்காக அமைப்பின் தலைவர் மொஹ்சென் பக்ரிசாதே பயணம் செய்த காரின் மீது ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் தாக்குதலை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள ஈரானின் பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளிற்கும் இடையிலான மோதலின் போது மொஹ்சென் பக்ரிசாதே காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் அவரை காப்பாற்றுவதற்கான மருத்துவ குழுவின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகள் காரின் மீது குண்டுதாக்குதலை மேற்கொண்ட பின்னர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

iran-sce1-300x188.jpg

ஈரானின் ஆன்மீக தலைவரின் ஆலோசகர் ஹொசெய்ன் டெகான் என்பவர் இது இஸ்ரேலின் செயல் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
சியோனிஸ்ட்கள் அவர்களது சூதாட்ட சகாவின் அரசியல் வாழ்க்கையின் இறுதி நாட்களில், முழுமையான யுத்தமொன்றை ஈரான் மீது திணிப்பதற்காக ஈரான் மீது அழுத்தங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/93292

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

இஸ்ரேலை உலகவரைபடத்திலிருந்து முற்றாகத் துடைப்பழிப்பதே ஈரானிய அடிப்படைவாத முல்லாக்களின் ஒரே நோக்கம். அவசர அவசரமாக அணுவாயுதம் ஒன்றைத் தயாரிக்க அவர்கள் விளைவது அதற்குத்தான். இஸ்ரேல் முந்திக்கொண்டுவிட்டது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அணுவாயுதப்பலம் இருப்பது முழு உலகிற்கும் ஆபத்தானது. ஆகவே இப்போது நடந்திருப்பது நல்ல விடயமே. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

நீங்கள் என்ன USA யிலோ இருக்கிறீர்கள்.... 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டார்! | Athavan News

ஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டார்!

ஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே (Mohsen Fakhrizadeh) கொல்லப்பட்டுள்ளார் என ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான அப்சார்ட்டில் அவரது வாகனத்தில் வைத்து அவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகள் ஃபக்ரிசாதேவின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடனர் தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஈரானிய விஞ்ஞானி பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவராக தற்போது பணியாற்றியுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர் மாநாடொன்றில் குறித்த ஈரான் விஞ்ஞானியின் பெயரை நினைவில் கொள்ளவேண்டும் என தெரிவித்திருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

அத்துடன், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஈரானிய அணு விஞ்ஞானிகளைக் குறிவைத்து தொடர்ச்சியான கொலைகளை இஸ்ரேல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கொலை குறித்தும் இஸ்ரேல் மீது சந்தேகம் எழுந்துள்ளதுடன் விஞ்ஞானியின் கொலை குறித்து கருத்துக்கூற இஸ்ரேல் மறுத்துள்ளது.

http://athavannews.com/ஈரானிய-உயர்மட்ட-அணுசக்தி/

On 28/11/2020 at 06:08, ரஞ்சித் said:

இஸ்ரேலை உலகவரைபடத்திலிருந்து முற்றாகத் துடைப்பழிப்பதே ஈரானிய அடிப்படைவாத முல்லாக்களின் ஒரே நோக்கம். அவசர அவசரமாக அணுவாயுதம் ஒன்றைத் தயாரிக்க அவர்கள் விளைவது அதற்குத்தான். இஸ்ரேல் முந்திக்கொண்டுவிட்டது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அணுவாயுதப்பலம் இருப்பது முழு உலகிற்கும் ஆபத்தானது. ஆகவே இப்போது நடந்திருப்பது நல்ல விடயமே. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

மிக மிக சரியான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருந்த 12 பேர் கொண்ட குழுவினர்- மின்சாரத்தை துண்டித்த பின்னர் இடம்பெற்ற தாக்குதல்- ஈரானின் விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட விதம் குறித்து பரபரப்பு தகவல்கள்

தமிழில்
தினக்குரல் இணையத்தளம்

ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் என கருதப்படும் விஞ்ஞானி மொஹ்சென் பாக்ரிஜடே படுகொலை செய்யப்பட்டமை உலகம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்ட விதம் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

36175790-8997575-Mohsen_Fakhrizadeh_Maha
62 பேர் கொண்ட குழுவினரே இந்த படுகொலையை முன்னெடுத்தனர் என ஈரானில் கொரோனா வைரசின் தீவிரத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் முகமது அஹ்வாஸ் தெரிவித்துள்ளார்.
ஈரானிலிருந்து கசிந்த தகவல்களை தான் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய அதிகாரிகள் இஸ்ரேலின் மொசாட்டின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
இஸ்ரேலே இந்த தாக்குதலை மேற்கொண்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டில் பாதுகாப்பு துறை மற்றும் புலனாய்வு துறையினர் மூலம் மிகவும் உயர்தர பயிற்சிகள் வழங்கப்பட்ட 12 பேர் கொண்ட குழுவொன்று ஈரானின் தலைநகரிலிருந்து கிழக்கே ஐம்பது கிலோமீற்றர் தொலைவில் உள்ள அப்ஸார்ட் நகரில் காத்திருந்தது என பத்திரிகையாளர் முகமது அஹ்வாஸ் தெரிவித்துள்ளார்.

36221298-8997575-image-a-36_160663365936
அது சுமார் பத்தாயிரம் பேர் வாழும் மலைப்பகுதி – கொலை செய்யப்பட்ட விஞ்ஞானிக்கு அங்கு மாளிகையொன்று காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 50 பேர் இந்த கொலைக்கு அவசியமான விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
மொஹ்சென் பாக்ரிஜடே டெஹ்ரானிலிருந்து அங்கு வரவுள்ளார் என்பது அவர்களிற்கு தெரிந்திருந்தது அவர்கள் அவரது வருகையை அவதானித்தவந்தமிருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த நகரத்திற்கான நுழைவாசலில் உள்ள சுற்றுவட்டமொன்றில் அவர்கள் விஞ்ஞானியை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
ஒரு ஹ_ண்டாய் சான்ட பே நான்கு பேருடன் காத்திருந்தது,நான்கு மோட்டார் சைக்கிள்களும் இரண்டு சினைப்பர்களும் ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவரின் வருகைக்காக காத்திருந்தனர்.
இதனை தவிர நிசான் வாகனமொன்றும் காத்திருந்தது.அந்த வாகனத்தில் குண்டு பொருத்தப்பட்டிருந்தது.
எதிர்பார்க்கப்பட்டதற்கு அரை மணித்தியாலம் முன்னதாகவே வாகனத்தொடரணி அந்த பகுதிக்கு வந்தது.அந்த வாகனத்தொடரணியில் குண்டு துளைக்காத மூன்று வாகனங்கள் காணப்பட்டன.
அந்த வாகனங்கள் வந்ததும் அந்த பகுதிக்கான மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது என பத்திரிகையாளர் அஹ்வசே தெரிவித்துள்ளார்.
முதல் கார் அந்த சுற்றுவட்டத்தை கடந்து சென்றதும் அவர்கள் தாக்குதல் அணியினர் தயராகிவிட்டனர்.
மூன்றாவது கார் அந்த சுற்றுவட்டத்தை கடந்து சென்றதும் நிசான் வெடித்துள்ளது.இதனால் அந்த பகுதியில் காணப்பட்ட மின்சார கம்பங்கள சிதறுண்டன என தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ளன.
வெடித்தகுண்டு மிகவும் சக்திவாய்ந்தது சிதறல்கள் 300 மீற்றர் வரை காணப்பட்டன என ஈரானின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
பயணித்துக்கொண்டிருந்த இரண்டாவது கார் நெருங்கி வந்ததும் அந்த காரின் மீது இரண்டு சினைப்பர் வீரர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

36219282-8997575-image-a-35_160663030660
கார்கள் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதும் அந்த பகுதியில் சில நிமிடங்கள் கடும் துப்பாக்கி மோதல் இடம்பெற்றுள்ளது என ஈரானின் புரட்சிகர இராணுவத்துடன் தொடர்புடைய சமூக ஊடக அலைவரிசையொன்று தெரிவித்துள்ளது.

36178822-8997575-Iranian_State_TV_releas
அந்த கொலையாளிகள் குழுவின் தலைவர் விஞ்ஞானியை காரிலிருந்து வெளியே இழுத்து சுட்டுக்கொன்றார் – விஞ்ஞானி கொலை செய்யபப்படுவதை உறுதி செய்வதற்காக அவ்வாறு அவர் செயற்பட்டார் என ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன என பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

36208738-8997575-Iran_s_Judiciary_Chief_
சேதம் எதனையும் சந்திக்காத அந்த குழுவினர் பின்னர் அங்கிருந்து மாயமாக மறைந்துவிட்டனர் என ஈரான் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானியின் மெய்பாதுகாவலர்கள் திருப்பி தாக்கியதால் உண்டான துப்பாக்கி சத்தத்தை தாங்கள் கேட்டதாகவும் பாரிய வெடிப்பு சத்தத்தை கேட்டதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்..

https://thinakkural.lk/article/93755

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடியான வேலைகளை அட்சரம் பிசகாமல் முடிக்க இஸ்ரேல் கிடொன் (Kidon) என்று மொசாட்டில் தனிப்படைப்பிரிவே வைத்துள்ளது. அவர்களது கைவண்ணமேதான்

  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2020 at 06:08, ரஞ்சித் said:

இஸ்ரேலை உலகவரைபடத்திலிருந்து முற்றாகத் துடைப்பழிப்பதே ஈரானிய அடிப்படைவாத முல்லாக்களின் ஒரே நோக்கம். அவசர அவசரமாக அணுவாயுதம் ஒன்றைத் தயாரிக்க அவர்கள் விளைவது அதற்குத்தான். இஸ்ரேல் முந்திக்கொண்டுவிட்டது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அணுவாயுதப்பலம் இருப்பது முழு உலகிற்கும் ஆபத்தானது. ஆகவே இப்போது நடந்திருப்பது நல்ல விடயமே. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

யாரோ ஒரு நாட்டுக்காரர் முந்தி இருக்கிறார்கள் இவரை கொல்ல முஸ்லீம்கள் உலக வல்லரசுகளுக்கு ஒரு சவாலகவே இருக்கிறார்கள் அவ்வப்போது ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் தாக்குதலை பார்க்கும் போகுது 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

உப்பிடியான வேலைகளை அட்சரம் பிசகாமல் முடிக்க இஸ்ரேல் கிடொன் (Kidon) என்று மொசாட்டில் தனிப்படைப்பிரிவே வைத்துள்ளது. அவர்களது கைவண்ணமேதான்

ஊரில சொல்லுவார்கள் ஆள் மொசாட்டான ஆள்  நியாபகம் இருக்கா  அப்ப மொசாட்டா இருக்குமோ 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

குருக்கள் செய்தால் குற்றமில்லை ஆக்கும். இதிலை ஈரானின் இறையாண்மை அப்பிடி இப்பிடி என்று ஒன்றும் இல்லையோ?இல்லை ராஜீவ் காந்தி கொலையுடன் ஒப்பிட்டு பார்த்தேன் (தனிப்பட்ட ரீதியில் எனக்கு முஸ்லிம் தீவிரவாதிகளைப் பிடிக்காது). ஆனால் இஸ்ரேல் செய்தால் சரி விடுதலைப்புலிகள் செய்தால் (முழுமையாக உறுதிப்படுத்தாவிட்டாலும்) பிழையோ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாதவூரான் said:

இதை தான் நான் நேற்று எழுதுவம் என்று போட்டு பேசாமல் போட்டன்...ரஞ்சித் நினைப்பார் எப்ப பார்த்தாலும் தனக்கு எதிராய் எழுதுகிறாள் என்று🙂 ... இங்க சில பேரது கருத்து வல்லரசு நாடுகள் மட்டும் எது வேணாலும் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் மூடிட்டு இருக்கோணும் 

12 hours ago, வாதவூரான் said:

குருக்கள் செய்தால் குற்றமில்லை ஆக்கும். இதிலை ஈரானின் இறையாண்மை அப்பிடி இப்பிடி என்று ஒன்றும் இல்லையோ?இல்லை ராஜீவ் காந்தி கொலையுடன் ஒப்பிட்டு பார்த்தேன் (தனிப்பட்ட ரீதியில் எனக்கு முஸ்லிம் தீவிரவாதிகளைப் பிடிக்காது). ஆனால் இஸ்ரேல் செய்தால் சரி விடுதலைப்புலிகள் செய்தால் (முழுமையாக உறுதிப்படுத்தாவிட்டாலும்) பிழையோ?

ஈரானின் இறையாண்மை என்று ஒன்று இருக்கலாம். ஆனால் உலகில் பயங்கரவாதத்தின் அச்சாணிகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது. சிரியா, ஏமன், லெபனான், ஹமாஸ் என்று பயங்கரவாத நாடுகள், இயக்கங்களுக்கு ஆயுதத்தையும் பணத்தையும் அள்ளி வழங்குகிறது. அரபு நாடுகள் கூட ஈரானின் செயலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஈரான் இஸ்ரவேலை அழிப்பதட்கு கங்கணம் கட்டிகொண்டு இருக்கும் ஒரு பயங்கரவாத நாடு. எனவே ஈரானின் அணுவாயுத , பயங்கரவாதத்துக்கு உதவுவர்களை அழிக்க வேண்டிய தேவை இருக்கிறது. மற்றயது இஸ்ரேல் பயங்கரவாதிகளைத்தான் அழிக்க மூடப்படுகிறது. அரசியல் தலைவர்களை அல்ல. விஞானியாக இருந்தாலும் பயங்கரவாதத்துக்கு ஒத்துழைத்தால் அவர் பயங்கரவாதிதான்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருக்கலாம். பலஸ்தீனர்களை அழித்து அவர்களின் நிலங்களை (அம் மண் இருவருக்கும் சொந்தமானது வரலாறு) அபகரிக்கலாம். ஈரான் மட்டும் அணு ஆயுதத்தை  ஏன் வைத்திருக்க முடியாது?. குறிப்பிட்ட நாடுகள் மட்டும் தான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியுமா?

ஈரான் பெரிய ஒரு குண்டை இஸ்ரேலின் மீது வீசுகிறது என வைப்போம். இப்போ உலகில் ஈரானிய விஞ்ஞானியின் கொலைக்கு வாய் மூடி மெளனிகளாக இருப்போர்  இது தகுமா எனும் அளவில் கண்டனங்களை தெரிவிப்பார்கள்.
சுத்த சுயநல உலகம் என்பது வெள்ளிடை மலை.

சவூதியும் தலபானுக்கு பண உதவி அளிக்கிறது. யாரும் சவூதியை பயங்கரவாத நாடு என்று அழைக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

ஈரானின் இறையாண்மை என்று ஒன்று இருக்கலாம். ஆனால் உலகில் பயங்கரவாதத்தின் அச்சாணிகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது. சிரியா, ஏமன், லெபனான், ஹமாஸ் என்று பயங்கரவாத நாடுகள், இயக்கங்களுக்கு ஆயுதத்தையும் பணத்தையும் அள்ளி வழங்குகிறது. அரபு நாடுகள் கூட ஈரானின் செயலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஈரான் இஸ்ரவேலை அழிப்பதட்கு கங்கணம் கட்டிகொண்டு இருக்கும் ஒரு பயங்கரவாத நாடு. எனவே ஈரானின் அணுவாயுத , பயங்கரவாதத்துக்கு உதவுவர்களை அழிக்க வேண்டிய தேவை இருக்கிறது. மற்றயது இஸ்ரேல் பயங்கரவாதிகளைத்தான் அழிக்க மூடப்படுகிறது. அரசியல் தலைவர்களை அல்ல. விஞானியாக இருந்தாலும் பயங்கரவாதத்துக்கு ஒத்துழைத்தால் அவர் பயங்கரவாதிதான்.
 
இந்தக் குப்பையெல்லாம் எங்க புறக்கினனீங்க.. 🤥

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Robinson cruso said:

குருசோ,

என்னைப் பொறுத்தவரை ராஜீவ் காந்தியும் பயங்கரவாதி தான் அரசியல் வாதியா இருந்த பயங்கரவாதி. அதாவது இரண்டு செயலும் ஒன்றுதான்

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானியப் போரியல் அணு விஞ்ஞானி ஆட்களின்றி செய்மதி மூலம் நடத்தப்பட்ட சமர்க் களத்தில் வீழ்ந்தாரா?

கார்த்திகேசு குமாரதாஸன்

தெஹ்ரானில் அணு விஞ்ஞானியை குறி வைத்துக் கொன்ற தாக்குதல் உலகம் நவீன டிஜிட்டல் போர் யுகம் ஒன்றுக்குள் நகர்வதன் அறிகுறிகளைக் காட்டியிருக்கிறது. போர் முனைகளுக்கு வெளியே முக்கிய புள்ளிகளது வாகனங்கள் தொலைவில் இருந்து வான் வழியாக மட்டுமே குறி வைக்கப்படலாம் என்றிருந்த கதையையும் அது மாற்றியிருக்கிறது.

992.jpgஈரானின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் அந்த நாட்டின் அணு ஆயுத சக்தியின் ‘தந்தை’ எனவும் வர்ணிக்கப்பட்டுவந்த இராணுவ விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே (Mohsen Fakhrizadeh) செய்மதி ஊடாக இயக்கப்படக்கூடிய தானியங்கி ஆயுதங்களால் மிக நவீன போர் உத்தி மூலம் இலக்கு வைக்கப்பட்டே வீழ்த்தப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

உலக வல்லரசுகளால் நெருங்க முடியாத ஈரானின் புலனாய்வுப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை உலுக்கிவிட்டிருக்கும் இந்தப் படுகொலை தொடர்பாக வெளியாகும் தகவல்கள் தாக்குதலில் நவீன தொழில்நுட்ப உத்திகள் மூலம் இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காட்டுகின்றன.

நாட்டின் இருதயப் பகுதி போன்ற தலைநகர் தெஹ்ரானில் விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே தனது மனைவி மற்றும் மெய்க்காவலர்கள் சகிதம் பயணித்துக் கொண்டிருந்த கார் கடந்த வெள்ளியன்று பட்டப்பகலில் நடு றோட்டில் வைத்து திடீர் தாக்குதலுக்கு இலக்கானது.

ஆயுதபாணிகள் சுமார் ஒரு டசின் பேர் கார் மீது இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டனர் என்றும் பின்னர் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த ‘நிசான்’ பிக்கப் வாகனம் ஒன்றில் பொருத்தியிருந்த குண்டை வெடிக்கச் செய்தனர் எனவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மெய்க்காவலர்களுக்கும் ஆயுத பணிகளுக்கும் இடையேஇடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் படுகாயமடைந்த விஞ்ஞானி பக்ரிசாதே அவசரமாக அங்கிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சமயம் உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடத்தில் ஆயுதபாணிகள் நால்வரது உடல்கள் காணப்பட்டன என்பன போன்ற தகவல்களை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

பக்ரிசாதே பயணித்த குண்டு துளைக்க முடியாத கார் துப்பாக்கிச் சன்னங்களால் சல்லடையிடப்பட்ட நிலையில் வீதியோரமாக நிற்கும் காட்சிகள் தெஹ்ரானில் இருந்து வெளியாகின.

இஸ்ரேலின் தேசிய புலனாய்வு அமைப்பான மொஸாட், நாடு கடந்து இயங்கும் ஈரானிய எதிரணியான முஜாஹிதீன்-இ கல்க் (Mujahideen-e Khalq) அமைப்புடன் சேர்ந்து நடத்திய படுகொலை இது என்று குற்றச்சாட்டியுள்ள ஈரான், அதற்குப் பழிவாங்கும் வகையில் தக்க பதிலடி கொடுக்கத் தயாராவதாகத் தெரிவித்துள்ளது.
ஈரானின் உள்நாட்டுப் பாதுகாப்பின் பலவீனங்களைப் பகிரங்கப் படுத்தியிருக்கும் இத் தாக்குதலுக்கு அதன் பதிலடி எப்படி அமையும் என்பதை அறிவதற்காக முழு உலகமும் காத்திருக்கிறது.

991.jpgஅதேவேளை தெஹ்ரான் தாக்குதல் தொடர்பாக முதலில் உடனடியாக வெளியிடப்பட்ட செய்திகள் அனைத்துக்கும் மாறாகப் புதிய தகவல்களை ஈரானிய பாதுகாப்புத் தரப்பினர் வெளியிட்டுள்ளனர்.

“தாக்குதலாளிகள் எவரும் களத்தில் இன்றி முழுவதும் தொலைவில் இருந்து இயக்கப்படும் தொழில் நுட்பம் (remote-controlled technology) மூலமே இது நடத்தப்பட்டிருக்கிறது” என்று ஈரானின் அதி உயர் பாதுகாப்புச் சபையின் செயலாளர் அலி ஷம்கானி தெரிவித்திருக்கிறார்.

திங்களன்று நடைபெற்ற அணு விஞ்ஞானியின் இறுதிச் சடங்கின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஷம்கானி, “துரதிர்ஷ்டவசமாக மிகவும் குழப்பமான ஒரு தாக்குதல் இது” என்று குறிப்பிட்டார்.

களத்தில் ஆயதபாணிகளுடன் மோதல் நடந்தது என்று முதலில் வெளியாகிய செய்தி இதன் மூலம் மறுதலிக்கப்படு கிறது.

முதலில் பிக் அப் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி இயந்திரத்துப்பாக்கி ஆட்கள் இன்றியே தொலைக்கட்டுப்பாட்டு நுட்பத்தால் இயக்கப்பட்டிருக்கிறது.

தனது காரில் குண்டுகள் பாயும் ஓசை கேட்டு வெளியே இறங்கியவேளை
மூன்று குண்டுகள் விஞ்ஞானியின் உடலைத் துளைத்துள்ளன.. அதன் பின்னரே வாகனத்தில் பொருத்தியிருந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கிறது.
வாகனத்தில் தன்பாட்டில் இயங்கிய துப்பாக்கியுடனேயே மெய்க்காவலர்கள் சிறிது நேரம் சமரில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

தூரக்கட்டுப்பாட்டு இயங்கு முறைகள் மூலம் (remote-controlled technology) குண்டுகள் வெடிக்க வைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள் செய்மதி மூலம் தூரக்கட்டுப்பாட்டு தொழில் நுட்பத்தால் இயக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அண்மைக் காலங்களில் ஆட்களின்றிப் பறக்கும் ட்றோன் விமானங்கள் மூலம் ஈரானின் முக்கிய புள்ளிகள் சிலர் தரையில் இலக்கு வைக்கப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி ஈராக்கில் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய ட்ரோன் விமானத் தாக்குதலில் ஈரானிய இராணுவ மேஜர் ஜெனரல் காஸீம் சொலைமானி (major general Qasem Soleimani) கொல்லப்பட்டார். செய்மதியின் கட்டுப்பாட்டில் ஆட்கள் இன்றி இயங்கும் நவீன ட்ரோன் விமானம் மூலம் அமெரிக்கா திட்டமிட்டு நடத்திய மிகத் துல்லியமான தாக்குதல் அது. ஆனால் கடைசியாக தற்போது தெஹ்ரானில் நடந்திருக்கும் தாக்குதலின் ‘தொழில் நுட்பம்’ ஈரானிய வல்லுநர்களைப் பெரிதும் குழப்பி விட்டிருப்பது தெரிகிறது.

வாகனத்தில் அல்லது வீதியோரத்தில் எங்காவது பொருத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள் செய்மதி தொழில் நுட்பம் ஊடாக இயக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஈரானியர்கள் சந்தேகிக்கின்றனர்.

ஒரு வாகனம் – இயந்திரத் துப்பாக்கி – வெடி குண்டு ஆகிய இவை மூன்றுடன் அதி உயர் உணர் திறன் கொண்ட நவீன டிஜிட்டல் தொழிற் நுட்ப இயங்கு திட்டம் ஒன்று வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டுள்ளது.

“அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதேவைக் கொன்ற தாக்குதல் களத்தில் எவரும் இன்றி முழுவதுமாக தொலைவில் இருந்தே நடத்திமுடிக்கப் பட்டிருக்கிறது” என்று ஈரானிய செய்தி ஊடகமான “பார்ஸ்” (FARS) வெளியிட்டிருக்கும் தகவலைச் சுட்டிக்காட்டி உள்ள இராணுவ ஆய்வாளர்கள் –

அத் தகவல் உண்மையானால் உலகெங்கும் தீவிரவாதக் குழுக்களது கைகளில் கிடைத்துள்ள தூரக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தில் இயக்கப்படும் இயந்திரத் துப்பாக்கி களால் (remote-controlled machine gun) நாடொன்றின் தலைநகரில் முக்கிய பிரமுகரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட முதலாவது பெரும் தாக்குதலாக அது இருக்கும் என்று கூறியுள்ளனர்.

நெருங்க முடியாத இலக்கு ஒன்றை மிகத் தொலைவிலேயோ அன்றி வேறு ஒரு நாட்டில் இருந்தோ தாக்கும் போது அதில் தவறு நேரும் பட்சத்தில் பெரும் தோல்வியாக முடிவதுடன் அதில் பயன்படுத்தப்பட்ட அதி உயர் தொழில் நுட்ப சாதனங்கள் எதிரியின் கைகளில் சிக்கிவிடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.
இதனைச் சுட்டிக் காட்டுகின்ற பாதுகாப்பு ஆய்வாளர்கள் சிலர் இத்தாக்குதல் குறித்து ஈரான் வெளியிட்டுவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சந்தேகிக்கின்றனர்.

இயந்திர மனித (Robot) தொழில் நுட்பத்துடன் கூடிய இயந்திரத் துப்பாக்கிகள் சிரியாவில் ஐ. எஸ். தீவிரவாதிகள் உட்பட சில கிளர்ச்சிப் படைகளால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் உள்ளன. ஆனாலும் எல்லைதாண்டி எதிரியின் களத்துக்குள் – அதுவும் ஈரா‌ன் போன்ற இரும்புத் திரைக் கட்டுக்காவல்கள் நிறைந்த நாடொன்றின் தலைநகரில்- அந்த நவீன துப்பாக்கிகள் வெடித்திருப்பது உலகெங்கும் போர் உத்திகளின் போக்கில் ஒருபெரும் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

வால்களை விட்டு விட்டு நேரடியாகத் தலைகளை இலக்கு வைக்கும் 21 ஆம் நூற்றாண்டின் நவீன தாக்குதல் பணிகள், வான் வழியாக ட்ரோன் விமானங்கள் மூலம் மட்டுமே நடத்தப்படலாம் என்று இருந்துவந்த எதிர்பார்ப்புகளையும் இந்தச் சம்பவம் தவிடுபொடியாக்கி இருக்கிறது.

https://thinakkural.lk/article/94631

21 hours ago, Kapithan said:

இந்தக் குப்பையெல்லாம் எங்க புறக்கினனீங்க.. 🤥

கப்பி, இதை எல்லாம் வாசித்து குழம்பிப்போய் (confused ) இருக்கக்கூடாது. 

குப்பை என்றால் எது குப்பை என்று எழுத வேண்டும்.இரான் செய்யும் பயங்கரவாதம் குப்பையா அல்லது இஸ்ரவேல் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் முயட்சி குப்பையா?

 ஈரான் நாடே குழம்பிப்போய் இருக்கும்போது நீங்கள் மட்டும் எப்படி குழம்பாமல் இருக்க முடியும். இன்னும் நிறைய குழப்பங்களை எதிர்பாருங்கள். 😜

14 hours ago, வாதவூரான் said:

குருசோ,

என்னைப் பொறுத்தவரை ராஜீவ் காந்தியும் பயங்கரவாதி தான் அரசியல் வாதியா இருந்த பயங்கரவாதி. அதாவது இரண்டு செயலும் ஒன்றுதான்

என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கை தமிழர்களின் அழிவுகளின் அவரின் பங்களிப்பு இருந்தது உண்மை. அத்துடன்  பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா , பிரித்தானியா போன்ற நாடுகளும் , ஐக்கிய நாடுகள் சபையும் தமிழர்களின் அழிவிட்கு பொறுப்பு கூற வேண்டும். அப்படி பார்க்கும்போது முழு உலகமும் பொறுப்பு கூற வேண்டும்.

அதாவது இந்தியா ஈரானைப்போல உலக பயங்கரவாதத்தில் ஈடுபடவில்லை.எனவே உங்கள் கருத்துடன் ஒத்துப்போக முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

கப்பி, இதை எல்லாம் வாசித்து குழம்பிப்போய் (confused ) இருக்கக்கூடாது. 

குப்பை என்றால் எது குப்பை என்று எழுத வேண்டும்.இரான் செய்யும் பயங்கரவாதம் குப்பையா அல்லது இஸ்ரவேல் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் முயட்சி குப்பையா?

 ஈரான் நாடே குழம்பிப்போய் இருக்கும்போது நீங்கள் மட்டும் எப்படி குழம்பாமல் இருக்க முடியும். இன்னும் நிறைய குழப்பங்களை எதிர்பாருங்கள். 😜

எனது கேள்விக்கு பதிலைத் தாருங்கள்.

1) இஸ்ரேலுக்கு ஏன் ஆதரவு கொடுக்கிறீர்கள்.. ?

2) ஈரானை பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும், பயங்கரவாத நாடாக ஏன் கருதுகிறீர்கள்..?

3) இவற்றிற்கான ஆதரங்களாக எதனைக் கருதுகிறீர்கள்.. ?

(அமெரிக்கா சொன்னது ஆட்டுக்குட்டி சொன்னது என்று சளாப்பக் கூடாது. சரியா.. 😜)

1 hour ago, Kapithan said:

எனது கேள்விக்கு பதிலை தாருங்கள்.

1 . நீங்கள் ஏன் ஈரானை ஆதரிகிறீர்கள் ?
2 . இது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளில் பயங்கரவாதத்தை கடடவிழ்த்துவிடுபவர்கள்  அவர்களே. முஸ்லீம் நாடுகளே அவர்களை பயங்கரவாத நாடக அறிவித்திருக்கின்றன. அவர்களால் நேரடியாக தாக்கமுடியாத படியால் இஸ்ரவேலின் உதவியுடன் அவை தமது காரியத்தை சாதிக்கின்றன.
3 . யேமெனில் பயங்கரவாதிகளுக்கு ஆயுத விநியோகத்துடன் ஏமன் அரசுக்கு எதிராகவும் இரணியர் போராடுகின்றனர். சிரியாவில் தளம் அமைத்து இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாதத்தில் ஈடுபடுகின்றாரனார். ஹமாஸுக்கு பணம் , ஆயுதம் கொடுத்து பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுகின்றாரனார். லெபனானில்  ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு ஆயுதம் பணம் கொடுத்து அந்த நாடடையே குட்டிசுவராகிவிடடார்கள். இதட்கும் மேலாக இஸ்ரவேல் நாடடையே அளிப்பதட்காக அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுக்கோ ண்டிருக்கிறார்கள். இஸ்ரவேலை அழிப்பதட்கும் சவால் விட்டிருக்கிறார்கள்.

இத்தேட்கெல்லாம் அமெரிக்காவோ , அர்ஜன்டீனாவோ அறிக்கைவிட வேண்டியதில்லை. நேர்மையாய் சிந்திப்பவர்களுக்கு இது விளங்கும். இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சிந்தித்தால் நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. தெரிவிப்பது நாங்கள் , தீர்மானிப்பது நீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நவீன போர் முறைக்குள் உலகம்! செய்மதி மூலமான தாக்குதலிலேயே ஈரான் அணுவிஞ்ஞானி மரணம்.?

202011272314454811_Tamil_News_Tamil-News 

தெஹ்ரானில் அணு விஞ்ஞானியை குறி வைத்துக் கொன்ற தாக்குதல் உலகம் நவீன டிஜிற்றல் போர் யுகம் ஒன்றுக்குள் நகர்வதன் அறிகுறிகளைக் காட்டியிருக்கிறது. போர் முனைகளுக்கு வெளியே முக்கிய புள்ளிகளது வாகனங்கள் தொலைவில் இருந்து வான் வழியாக மட்டுமே குறி வைக்கப்படலாம் என்றிருந்த கதையையும் அது மாற்றியிருக்கிறது.

ஈரானின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் அந்த நாட்டின் அணு ஆயுத சக்தியின் ‘தந்தை’ எனவும் வர்ணிக்கப்பட்டுவந்த இராணுவ விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே(Mohsen Fakhrizadeh) செய்மதி ஊடாக இயக்கப்படக்கூடிய  தானியங்கி ஆயுதங்களால் மிக நவீன போர் உத்தி மூலம் இலக்கு வைக்கப்பட்டே வீழ்த்தப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

உலக வல்லரசுகளால் நெருங்க முடியாத ஈரானின் புலனாய்வுப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை உலுக்கிவிட்டிருக்கும் இந்தப் படுகொலை தொடர்பாக வெளியாகும் தகவல்கள்  தாக்குதலில்  நவீன தொழில்நுட்ப உத்திகள் மூலம் இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காட்டுகின்றன.

நாட்டின் இருதயப் பகுதி போன்ற தலைநகர் தெஹ்ரானில் விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே தனது மனைவி மற்றும் மெய்க்காவலர்கள் சகிதம் பயணித்துக் கொண்டிருந்த கார் கடந்த வெள்ளியன்று பட்டப்பகலில் நடு றோட்டில் வைத்து திடீர் தாக்குதலுக்கு இலக்கானது.

ஆயுதபாணிகள் சுமார் ஒரு டசின் பேர் கார் மீது இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டனர் என்றும் பின்னர் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த ‘நிசான்’ பிக்கப் வாகனம் ஒன்றில் பொருத்தியிருந்த குண்டை வெடிக்கச் செய்தனர் எனவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மெய்க்காவலர்களுக்கும் ஆயுத பணிகளுக்கும் இடையேஇடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் படுகாயமடைந்த விஞ்ஞானி பக்ரிசாதே அவசரமாக அங்கிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சமயம் உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடத்தில் ஆயுதபாணிகள் நால்வரது உடல்கள் காணப்பட்டன என்பன போன்ற தகவல்களை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

பக்ரிசாதே பயணித்த குண்டு துளைக்க முடியாத கார் துப்பாக்கிச் சன்னங்களால் சல்லடையிடப்பட்ட நிலையில் வீதியோரமாக நிற்கும் காட்சிகள் தெஹ்ரானில் இருந்து வெளியாகின.

இஸ்ரேலின் தேசிய புலனாய்வு அமைப்பான மொஸாட்,  நாடு கடந்து இயங்கும் ஈரானிய எதிரணியான முஜாஹிதீன்-இ கல்க் (Mujahideen-e Khalq) அமைப்புடன் சேர்ந்து நடத்திய படுகொலை இது என்று குற்றச்சாட்டியுள்ள ஈரான், அதற்குப் பழிவாங்கும் வகையில் தக்க பதிலடி கொடுக்கத் தயாராவதாகத் தெரிவித்துள்ளது.

ஈரானின் உள்நாட்டுப் பாதுகாப்பின் பலவீனங்களைப் பகிரங்கப் படுத்தியிருக்கும் இத் தாக்குதலுக்கு அதன் பதிலடி எப்படி அமையும் என்பதை அறிவதற்காக முழு உலகமும் காத்திருக்கிறது.

அதேவேளை தெஹ்ரான் தாக்குதல் தொடர்பாக முதலில் உடனடியாக வெளியிடப்பட்ட  செய்திகள் அனைத்துக்கும் மாறாகப் புதிய தகவல்களை ஈரானிய பாதுகாப்புத் தரப்பினர் வெளியிட்டுள்ளனர்.

“தாக்குதலாளிகள் எவரும் களத்தில் இன்றி முழுவதும் தொலைவில் இருந்து இயக்கப்படும் தொழில் நுட்பம் (remote-controlled technology) மூலமே இது நடத்தப்பட்டிருக்கிறது” என்று ஈரானின் அதி உயர் பாதுகாப்புச் சபையின் செயலாளர் அலி ஷம்கானி தெரிவித்திருக்கிறார்.

திங்களன்று நடைபெற்ற அணு விஞ்ஞானியின் இறுதிச் சடங்கின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஷம்கானி, “துரதிர்ஷ்டவசமாக  மிகவும் குழப்பமான ஒரு தாக்குதல் இது “என்று குறிப்பிட்டார்.

களத்தில் ஆயதபாணிகளுடன் மோதல் நடந்தது என்று முதலில் வெளியாகிய செய்தி இதன் மூலம் மறுதலிக்கப்படுகிறது.

முதலில் பிக் அப் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி இயந்திரத்துப்பாக்கி ஆட்கள் இன்றியே தொலைக்கட்டுப்பாட்டு நுட்பத்தால் இயக்கப்பட்டிருக்கிறது.

தனது காரில் குண்டுகள் பாயும் ஓசை கேட்டு வெளியே இறங்கியவேளை

மூன்று குண்டுகள் விஞ்ஞானியின் உடலைத் துளைத்துள்ளன.. அதன் பின்னரே வாகனத்தில் பொருத்தியிருந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கிறது.

வாகனத்தில் தன்பாட்டில் இயங்கிய துப்பாக்கியுடனேயே மெய்க்காவலர்கள் சிறிது நேரம் சமரில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

தூரக்கட்டுப்பாட்டு இயங்கு முறைகள் மூலம் (remote-controlled technology) குண்டுகள் வெடிக்க வைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள் செய்மதி மூலம் தூரக்கட்டுப்பாட்டு தொழில் நுட்பத்தால்  இயக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அண்மைக் காலங்களில் ஆட்களின்றிப் பறக்கும் ட்றோன் விமானங்கள் மூலம் ஈரானின் முக்கிய புள்ளிகள் சிலர் தரையில் இலக்கு வைக்கப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி ஈராக்கில் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய ட்ரோன் விமானத் தாக்குதலில் ஈரானிய இராணுவ மேஜர் ஜெனரல் காஸீம் சொலைமானி (major general Qasem Soleimani) கொல்லப்பட்டார். செய்மதியின் கட்டுப்பாட்டில் ஆட்கள் இன்றி இயங்கும் நவீன ட்ரோன்  விமானம் மூலம் அமெரிக்கா திட்டமிட்டு நடத்திய மிகத் துல்லியமான தாக்குதல் அது. ஆனால் கடைசியாக தற்போது தெஹ்ரானில் நடந்திருக்கும் தாக்குதலின் ‘தொழில் நுட்பம்’ ஈரானிய வல்லுநர்களைப் பெரிதும் குழப்பி விட்டிருப்பது தெரிகிறது.

வாகனத்தில் அல்லது வீதியோரத்தில் எங்காவது பொருத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள் செய்மதி தொழில் நுட்பம் ஊடாக இயக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஈரானியர்கள் சந்தேகிக்கின்றனர்.

ஒரு வாகனம் – இயந்திரத் துப்பாக்கி – வெடி குண்டு ஆகிய இவை மூன்றுடன் அதி உயர் உணர் திறன் கொண்ட நவீன டிஜிட்டல் தொழிற் நுட்ப இயங்கு திட்டம் ஒன்று வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டுள்ளது.

“அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதேவைக் கொன்ற தாக்குதல் களத்தில் எவரும் இன்றி முழுவதுமாக தொலைவில் இருந்தே நடத்திமுடிக்கப் பட்டிருக்கிறது” என்று ஈரானிய செய்தி ஊடகமான “பார்ஸ்” (FARS) வெளியிட்டிருக்கும் தகவலைச் சுட்டிக்காட்டி உள்ள இராணுவ ஆய்வாளர்கள் –

அத் தகவல் உண்மையானால் உலகெங்கும் தீவிரவாதக் குழுக்களது கைகளில்  கிடைத்துள்ள தூரக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தில் இயக்கப்படும்  இயந்திரத் துப்பாக்கி களால் (remote-controlled machine gun) நாடொன்றின் தலைநகரில் முக்கிய பிரமுகரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட முதலாவது பெரும் தாக்குதலாக அது இருக்கும் என்று கூறியுள்ளனர்.

நெருங்க முடியாத இலக்கு ஒன்றை மிகத் தொலைவிலேயோ அன்றி வேறு ஒரு நாட்டில் இருந்தோ  தாக்கும் போது அதில் தவறு நேரும் பட்சத்தில் பெரும் தோல்வியாக முடிவதுடன் அதில் பயன்படுத்தப்பட்ட அதி உயர் தொழில் நுட்ப சாதனங்கள் எதிரியின் கைகளில் சிக்கிவிடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.

இதனைச் சுட்டிக் காட்டுகின்ற பாதுகாப்பு ஆய்வாளர்கள் சிலர் இத்தாக்குதல் குறித்து ஈரான் வெளியிட்டுவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சந்தேகிக்கின்றனர்.

இயந்திர மனித(Robot) தொழில் நுட்பத்துடன் கூடிய இயந்திரத் துப்பாக்கிகள் சிரியாவில் ஐ. எஸ். தீவிரவாதிகள் உட்பட சில கிளர்ச்சிப் படைகளால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் உள்ளன.  ஆனாலும் எல்லைதாண்டி எதிரியின் களத்துக்குள் – அதுவும் ஈரா‌ன் போன்ற இரும்புத் திரைக் கட்டுக்காவல்கள் நிறைந்த நாடொன்றின் தலைநகரில்- அந்த நவீன துப்பாக்கிகள் வெடித்திருப்பது உலகெங்கும் போர் உத்திகளின் போக்கில் ஒருபெரும் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

வால்களை விட்டு விட்டு நேரடியாகத் தலைகளை இலக்கு வைக்கும் 21 ஆம் நூற்றாண்டின்  நவீன தாக்குதல் பணிகள், வான் வழியாக ட்ரோன் விமானங்கள் மூலம் மட்டுமே நடத்தப்படலாம் என்று இருந்துவந்த எதிர்பார்ப்புகளையும் இந்தச் சம்பவம் தவிடுபொடியாக்கி இருக்கிறது

குமாரதாஸன், பாரிஸ்

https://thamilkural.net/thesathinkural/views/98647/

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Robinson cruso said:

எனது கேள்விக்கு பதிலை தாருங்கள்.

1 . நீங்கள் ஏன் ஈரானை ஆதரிகிறீர்கள் ?
2 . இது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளில் பயங்கரவாதத்தை கடடவிழ்த்துவிடுபவர்கள்  அவர்களே. முஸ்லீம் நாடுகளே அவர்களை பயங்கரவாத நாடக அறிவித்திருக்கின்றன. அவர்களால் நேரடியாக தாக்கமுடியாத படியால் இஸ்ரவேலின் உதவியுடன் அவை தமது காரியத்தை சாதிக்கின்றன.
3 . யேமெனில் பயங்கரவாதிகளுக்கு ஆயுத விநியோகத்துடன் ஏமன் அரசுக்கு எதிராகவும் இரணியர் போராடுகின்றனர். சிரியாவில் தளம் அமைத்து இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாதத்தில் ஈடுபடுகின்றாரனார். ஹமாஸுக்கு பணம் , ஆயுதம் கொடுத்து பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுகின்றாரனார். லெபனானில்  ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு ஆயுதம் பணம் கொடுத்து அந்த நாடடையே குட்டிசுவராகிவிடடார்கள். இதட்கும் மேலாக இஸ்ரவேல் நாடடையே அளிப்பதட்காக அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுக்கோ ண்டிருக்கிறார்கள். இஸ்ரவேலை அழிப்பதட்கும் சவால் விட்டிருக்கிறார்கள்.

இத்தேட்கெல்லாம் அமெரிக்காவோ , அர்ஜன்டீனாவோ அறிக்கைவிட வேண்டியதில்லை. நேர்மையாய் சிந்திப்பவர்களுக்கு இது விளங்கும். இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சிந்தித்தால் நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. தெரிவிப்பது நாங்கள் , தீர்மானிப்பது நீங்கள்.

7 hours ago, Robinson cruso said:

எனது கேள்விக்கு பதிலை தாருங்கள்.

1 . நீங்கள் ஏன் ஈரானை ஆதரிகிறீர்கள் ?
2 . இது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளில் பயங்கரவாதத்தை கடடவிழ்த்துவிடுபவர்கள்  அவர்களே. முஸ்லீம் நாடுகளே அவர்களை பயங்கரவாத நாடக அறிவித்திருக்கின்றன. அவர்களால் நேரடியாக தாக்கமுடியாத படியால் இஸ்ரவேலின் உதவியுடன் அவை தமது காரியத்தை சாதிக்கின்றன.
3 . யேமெனில் பயங்கரவாதிகளுக்கு ஆயுத விநியோகத்துடன் ஏமன் அரசுக்கு எதிராகவும் இரணியர் போராடுகின்றனர். சிரியாவில் தளம் அமைத்து இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாதத்தில் ஈடுபடுகின்றாரனார். ஹமாஸுக்கு பணம் , ஆயுதம் கொடுத்து பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுகின்றாரனார். லெபனானில்  ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு ஆயுதம் பணம் கொடுத்து அந்த நாடடையே குட்டிசுவராகிவிடடார்கள். இதட்கும் மேலாக இஸ்ரவேல் நாடடையே அளிப்பதட்காக அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுக்கோ ண்டிருக்கிறார்கள். இஸ்ரவேலை அழிப்பதட்கும் சவால் விட்டிருக்கிறார்கள்.

இத்தேட்கெல்லாம் அமெரிக்காவோ , அர்ஜன்டீனாவோ அறிக்கைவிட வேண்டியதில்லை. நேர்மையாய் சிந்திப்பவர்களுக்கு இது விளங்கும். இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சிந்தித்தால் நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. தெரிவிப்பது நாங்கள் , தீர்மானிப்பது நீங்கள்.

உங்கள் பதிலைப் பார்க்க விழுந்து விழுந்து சிரிக்கத்தான் முடிகிறது....😂😂

1) நீங்கள் ஏன் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள் என்பற்கு உங்களிடம் பதில் இல்லை. இதற்குப் நேர்மையாகப் பதிலுரைத்தால் மிகுதிக் கேள்விகள் எழவே வாய்ப்பில்லை என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டு அதற்குப் பதிலளிப்பதைத் தவிர்க்கிறீர்கள். 

நீங்கள் மித்திரன் பத்திரிகை வாசகரோ அல்லது தினமலர் அபிமானியா... 😂😂

Just now, Kapithan said:

சும்மா புலுடா விடாதேயுங்கோ? நான் எழுதினத்துக்கு பதில் எழுதுங்கோ காப்பி. உங்களுக்கு மட்டும்தான் கேள்வி கேட்கத்தெரியும் எண்டு எழுததையுங்கோ. பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை ஆதரிக்கிறோம் எண்டு எழுதி இருந்தால் என் கேள்விக்கு உங்கள் பதில் சரியாக இருந்திருக்கும். அதில் இருந்து எனது பதில் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.