Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரிமை கோரப்படாத முஸ்லிம்களின் உடல்கள் தகனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image-17-768x510-1.jpg?189db0&189db0

முஸ்லிம்களினால் உரிமை கோரப்படாத கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் பணி நேற்று (09) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தை சேர்ந்த 19 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினர் உரிமை கோர மறுத்து வந்தனர்.

இந்நிலையில் அவ்வாறு உரிமை கோரப்படாத சடலங்களையும் கொரோனா சட்டத்தின் கீழ் தகனம் செய்ய முடியும் என்று சுகாதார பணிப்பாளருக்கு சட்டமா அதிபரால் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முதற்கட்டமாக நேற்று ஐந்து உடல்களும், இன்று மேலும் சில உடல்களும் தகனம் செய்யப்பட்டுள்ளது.

உரிமை கோரப்படாத முஸ்லிம்களின் உடல்கள் தகனம்! | NewUthayan

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபங்கள் உரித்தாகட்டும்...ஆனால் பிணத்தை வைத்து அரசியலாக்க முனைவது தடுக்கப்பட வேண்டும்....எமது இனம் எத்தனை இடர்பட்ட வேளையிலும்  சிங்களத்துடன் சேர்ந்து விட்ட சேட்டைகள் ஏராளம்..இந்த நிலையிலும் கூட கல்முனை கணக்காளரை நிறுத்தியவர்கள்.... கூட்டமைப்பினர் பார்லிமன்ரில் பேசும்போது சீ னாக்களுடன் சேர்ந்து அட்டகாசம்....இப்ப அவைக்கு வழக்குப் பேசவும் ..மன்றில் கதைக்கவும் தமிழர் தேவை..

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:
image-17-768x510-1.jpg?189db0&189db0

முஸ்லிம்களினால் உரிமை கோரப்படாத கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் பணி நேற்று (09) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தை சேர்ந்த 19 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினர் உரிமை கோர மறுத்து வந்தனர்.

இந்நிலையில் அவ்வாறு உரிமை கோரப்படாத சடலங்களையும் கொரோனா சட்டத்தின் கீழ் தகனம் செய்ய முடியும் என்று சுகாதார பணிப்பாளருக்கு சட்டமா அதிபரால் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முதற்கட்டமாக நேற்று ஐந்து உடல்களும், இன்று மேலும் சில உடல்களும் தகனம் செய்யப்பட்டுள்ளது.

உரிமை கோரப்படாத முஸ்லிம்களின் உடல்கள் தகனம்! | NewUthayan

ஐயஹோ....நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த Fire வைக்கும் மாந்தரை நினைத்து 
ஒருகாலத்தில் ஊர்காவற்படையுடன் ஓடி ஓடி தமிழர்களின் வீட்டிற்கும் சொத்திற்கும்  வைத்த Fire, பாவம் Fire அது என்ன பண்ணும் அதற்கு வைக்கும் இடமெல்லாம் எரிக்க மட்டுமே தெரியும் , வைக்கும் நாம்தான் யோசிக்கணும் அடுத்தவனுக்கு வைத்த  இதே Fire நமக்கும் பத்திக்கிட்டா என்னாகுமென்று.   

  • கருத்துக்கள உறவுகள்

செத்த உடலுக்கு என்னடாப்பா தெரியும் அது எரியுதா இல்ல அழுகிறதா என இங்க அதான் கதை ஏன் எரிக்கணும் என இதுக்கு நம்ம காம்புகள் வேற பாராளுமன்றத்தில் உரை வேற

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

செத்த உடலுக்கு என்ன டாப்பா தெரியும் அது எரியுதா இல்ல அழுகிறதா என இங்க அதான் கதை ஏன் எரிக்கணும் என இதுக்கு நம்ம காம்புகள் வேற பாராளுமன்றத்தில் உரை வேற

அப்படி சொல்ல முடியாது. மரித்த மனித உடல்களுக்கு ஒரு மரியாதை செய்ய வேண்டுமென்ற நியதி எல்லா மார்க்கத்திலும் உண்டு. எனவே அப்படி விட்டுவிட முடியாது. இந்து பவுத்த முறைகளில் எரிக்கும் முறை இருந்தாலும் இஸ்லாமிய , கிறிஸ்தவ முறைகளில் அப்படி இல்லை. எனவே அரசு சர்வதேச முறமைகளுக்கு அமைய அதை அனுமதித்திருக்க வேண்டும். இங்கு இனவாதத்தினால்தால் இப்படி எல்லாம் நடக்கிறது. இனவாதியான கர்தினால் இதட்கு விருப்பமில்லாவிடடாலும் முஸ்லிம்களுக்கு ஒரு படம் கட்பிக்க இதட்கு சம்மதம் தெரிவித்து விடடார். தமிழர்களுக்கும் அப்படி நிலைமை வரும்போது அதட்கும் அவர் தனது சம்மதத்தை தெரிவிப்பார். அது வேறு விடயமாக இருந்தாலும் இங்கு அதை குறிப்பிட வேண்டி உள்ளது. மற்றபடி சோனவன் தமிழனுக்கு துரோகம் செய்தாலும் நியாயத்தை கதைப்பதில் தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

இனவாதியான கர்தினால் இதட்கு விருப்பமில்லாவிடடாலும் முஸ்லிம்களுக்கு ஒரு படம் கட்பிக்க இதட்கு சம்மதம் தெரிவித்து விடடார். தமிழர்களுக்கும் அப்படி நிலைமை வரும்போது அதட்கும் அவர் தனது சம்மதத்தை தெரிவிப்பார்

விவேக்கின் பப்ளிக் பப்ளிக் ஜோக் பார்த்திருக்கிறீர்களா 
அதில வரும் ரவுடி கேரக்டர் தான் நம்ம மல்க்கி
குண்டு வெடிப்பில் சிதறியது  தமிழர்களும் .கலப்பு கிறிஸ்தவர்களும் தானே அதுதான் அமைதி(பப்லிக்)  அமைதி(பப்லிக்) என்று அமத்தி வாசிச்சார்  ,காலி கம்பஹா போன்ற இடங்களில் பட்ட சிங்கள கிறிஸ்தவர்கள் சிதறியிருக்கவேண்டும் , பப்ளிக்காவது பிரைவட்டாவது வெட்டி தள்ளுங்கோடா என்று அவரும் ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு கோதாவில் இறங்கியிருப்பார்    

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த அண்ணா சொன்னால் தம்பிமார் கேட்கவேண்டும். அடம் பிடிக்க கூடாது என்று உபதேசம் செய்வார். அவரது  போதனை இனம், மொழி சார்ந்தே ஒலிக்கும்.

4 hours ago, அக்னியஷ்த்ரா said:

விவேக்கின் பப்ளிக் பப்ளிக் ஜோக் பார்த்திருக்கிறீர்களா 
அதில வரும் ரவுடி கேரக்டர் தான் நம்ம மல்க்கி
குண்டு வெடிப்பில் சிதறியது  தமிழர்களும் .கலப்பு கிறிஸ்தவர்களும் தானே அதுதான் அமைதி(பப்லிக்)  அமைதி(பப்லிக்) என்று அமத்தி வாசிச்சார்  ,காலி கம்பஹா போன்ற இடங்களில் பட்ட சிங்கள கிறிஸ்தவர்கள் சிதறியிருக்கவேண்டும் , பப்ளிக்காவது பிரைவட்டாவது வெட்டி தள்ளுங்கோடா என்று அவரும் ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு கோதாவில் இறங்கியிருப்பார்    

அவர் எங்களது மதத்தலைவராக இருந்தாலும் இங்கு உண்மையை எழுத வேண்டுமென்பதால் எழுதுகிறேன். கம்பஹா எனும்போது நீர்கொழும்பு , கந்தான , ஜால, மாபோல போன்ற நிறைய கரையோர பிரதேசங்கள் உள்ளடங்கும்.

அங்குள்ள கத்தோலிக்கர்கள் எல்லோரும் சிங்களவர்கள் அல்ல. ஏறக்குறைய முப்பது நாட்பது வருடங்களுக்கு முன்னர் சிங்கள மொழிக்கு மாற்றப்படடவர்கள். இப்போது அவர்கள் சிங்களவர்களாக மாறிவிடடார்கள். நான் முன்பும் ஒரு முறை எழுதி இருந்தேன். அங்கு நீங்கள் போய் மிகவும் வயதானவர்களுடன் பேசினால் தமிழில்தான் பேசுவார்கள். அவர்களுக்கு சிங்களம் தெரிந்தாலும் தமிழில்தான் பேசுவார்கள்.

நீர்கொழும்பு மீனவர்கள் பருவ காலத்தில் மீன் பிடிப்பதட்கு மன்னருக்கு வருவதுண்டு. அவர்கள் மன்னார் நகருக்கு வரும்போது அவர்கள் பேசுவதை கவனித்திருக்கிறேன். அவர்கள் தமிழில்தான் கதைப்பார்கள். ஆனால் எங்களுக்கு அது விளங்காது. அது ஒரு சிங்களதமிழ். இப்போது நூறு வீதம் சிங்களத்திலேயயே பேசுகிறார்கள்.

எனவே கம்பகாவில் உள்ளவர்கள் எல்லாம் சிங்கள கிறிஸ்தவர்கள் என்று கூற முடியாது. கொல்லப்படடவர்களில் நிறைய கலப்பு கிறிஸ்தவர்களும் உண்டு.

 நான் நினைக்கிறேன் தமிழ் கத்தோலிக்க குருமார் தமிழர் போராட்டத்தை தீவிரமாக ஆதரிப்பதால் அவரும் ஒரு தீவிரமான மறு பக்கத்தை எடுக்கிறாரோ தெரியவில்லை. கடவுளுக்கே வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மதவாதிகளுக்கு சரியான தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, MEERA said:

இங்கு மதவாதிகளுக்கு சரியான தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

சிங்கள பெளத்த இன, மதவாதிகளுக்கு என்ன தண்டனை மீரா?  தொடர்ந்து மூளையை பாவித்து தப்புகிறார்கள் எனவும் கருத்துக்கள் எழுதுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

செத்த உடலுக்கு என்ன டாப்பா தெரியும் அது எரியுதா இல்ல அழுகிறதா என  💯

இங்க அதான் கதை ஏன் எரிக்கணும் என இதுக்கு நம்ம காம்புகள் வேற பாராளுமன்றத்தில் உரை வேற

முஸ்லிம்கள் அடுத்த தேர்தலில் சாணாக்கியன் இராசபுத்திரன் இராசமாணிக்கத்திற்கு பெருமளவில் வாக்களிப்பார்கள் தானே

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

இங்கு மதவாதிகளுக்கு சரியான தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

8 hours ago, nunavilan said:

சிங்கள பெளத்த இன, மதவாதிகளுக்கு என்ன தண்டனை மீரா?  தொடர்ந்து மூளையை பாவித்து தப்புகிறார்கள் எனவும் கருத்துக்கள் எழுதுகிறார்கள்.

மூளைதான் கடவுள். அதை நம்பும் வரை எந்த மதவாதியும், இனவாதியும், தண்டிக்க படமாட்டார்கள்.

முடியும் தறுவாயில் இருந்த போரை, விரைந்து முடிக்க, தமது புதிய ஆயுதத்தை பரிசோதிக்க, போர் முனையில் இருந்து பல மைலுக்கு அப்பால் இருந்த இன்னொரு நாட்டின் இரெண்டு நகரங்களையும், அதன் அப்பாவி மக்களையும், வயது வித்தியாசம் இன்றி நொடிகளில் அழித்தார்களே நியாபகம் இருக்கிறதா?

அதைவிட பெரியதொரு இனப்படுகொலை உலகில் உண்டா?

அதை விட பெரியதொரு போர்குற்றம் உலகில் உண்டா?

ஆனால் அந்த தாக்குதலை ஆணையிட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்களா?

வாள் முனையில் மதம் பரப்பிய முகமது நபி (சல்) தண்டிக்க பட்டாரா? இல்லை.

ஆனால் அன்பை போதித்த யேசுநாதரை சிலுவையில் அறைந்தார்கள்.

உங்கள் நம்பிக்கைகளை நான் விமர்சிக்கவில்லை. ஆனால் பாவிகள் தண்டிக்க படுவதும் தப்புவதும் அவர்கள் மூளையை பாவிப்பதில் மட்டுமே தங்கியுள்ளது.

வெல்பவர்களால்தான் வரலாறு எழுதப்படுகிறது, கடவுளால் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு பிபிசி தமிழ் பேஸ்புக்கில சீரியல் நடிகை சித்திரா இறந்த செய்திக்கு கீழ் ஒருத்தன் எழுதி இருக்கன் நான் இலங்கை முஸ்லீம் இங்கு பத்துமாத குழந்தையின் உடல் தீயில் எரிகிறது இதுமுக்கியமா என்று ஏதோ பத்துமாத குழந்தையை சிங்களவன் உயிரோடு எரிப்பதுபோல்கதறிட்டு கிடக்குரானுங்க.. எவ்ளாத்தை உயிரோட இழந்துட்டு வந்து நிக்குரம் நாங்க அப்ப சுங்களவனோட சேந்து ஜால்ராபோட்டிட்டு இப்போ செத்த பிணம் எரியுரதுக்கு அதுவும் அறிவியல் காரணுங்களுக்காக எரிக்கபடுகிர பிணங்களுக்கு ஏதோ ஒட்டுமொத்த உலகமே தமக்கு அநீதி இழைத்து விட்டத்போல் புலம்பிக்கிட்டு கிடக்குரானுங்க.. உண்மையில மோட்டு மதங்களால இன்னும் நாகரீகம் அடையாத காட்டனுவளில இவனுங்களும் ஒருத்தனுங்க.. எனக்கு இவனுகள கண்ணிலயே காட்டகுடாது.. சுத்த சுயநலம் புடிச்சவனுங்க..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

முடியும் தறுவாயில் இருந்த போரை, விரைந்து முடிக்க, தமது புதிய ஆயுதத்தை பரிசோதிக்க, போர் முனையில் இருந்து பல மைலுக்கு அப்பால் இருந்த இன்னொரு நாட்டின் இரெண்டு நகரங்களையும், அதன் அப்பாவி மக்களையும், வயது வித்தியாசம் இன்றி நொடிகளில் அழித்தார்களே நியாபகம் இருக்கிறதா?

அதைவிட பெரியதொரு இனப்படுகொலை உலகில் உண்டா?

இது தவறான வரலாறு. அமெரிக்கா ஜப்பானின் நட்புநாடாக இருந்த நிலையில் முற்றிலும் எதிர்பார்க்காத நிலையில், அமெரிக்காவின் பேர்ள் ஹாரபர் மீது ஜப்பான் குண்டுகளை வீசி அமெரிக்காவின் கடற்படையின் 80வீதத்தையும் அழித்தது. இது நடந்த போது ஜப்பானிய அரசின் உயர்மட்ட அமைச்சர்கள் அமெரிக்காவில் வணிகம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். 

இதனால் அமெரிக்கா ஜப்பானை உடனடியாக போரை நிறுத்தி சீனா, கொரியா மற்றும் ஏனைய ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வெளியேறுமாறு பணித்தது. ஜப்பான் தனது ஆக்கிரமிப்பை மேலும் தொடர்ந்த போது நிறுத்தாவிட்டால் மாபெரும் அழிவை சந்திப்பீர்கள் என அமெரிக்கா எச்சரித்தது. அமெரிக்க கடற்படையை அழித்த மமதையில் ஜப்பான் அதை நம்பவில்லை. முதல் அணுகுண்டின் பின் மீண்டும் பலமுறை ஜப்பானை போரை நிறுத்துமாறு அமெரிக்கா எச்சரித்தது. அமெரிக்காவிடம் இரண்டாவது குண்டு இருக்கும் என்று நம்பாத ஜப்பான் தனது ஆக்கிரமிப்பை விடவில்லை. 

 பேர்ள் ஹாரபரின் அழிவை நேரடியாக போய் பார்த்து இந்த வரலாற்றை அங்கு கேட்டறிந்து கொண்டே இங்கு எழுதுகிறேன். இன்றும் ஜப்பான்அமெரிக்காவின் நட்புநாடு.   ஜப்பானில் இருந்தே அவர்களிடம் இந்த அணுக்குண்டு  தாக்குதல் பற்றி கேட்டபோது, தமது ஆட்சியாளர்களின் தவறு பற்றியும் அமெரிக்க உதவி பற்றியும் ஜப்பானியரே எனக்கு சொன்னார்கள். போரில் சரணடைந்த ஜப்பானிய அரசர் மற்றும் மக்களுக்கு அமெரிக்கா உதவி ஜப்பானை மீண்டும் உலகின் இரெண்டாவது செல்வந்த நாடாக உயர்ந்தெள உதவியது.  ன்று இந்து சமுத்திர, பசுபிக் சமுத்திர சீன ஆதிக்கத்துக்கு எதிரான அமெரிக்க முயற்சிக்கு வலதுகரமாக இருப்பது ஜப்பான். பேர்ள் ஹார்பர் இருக்கும் ஹவாய் மாநிலத்தில் ஜப்பானிய அமெரிக்கரே பெரும்பான்மை மக்கள். கலிபோர்னியா, வாஷிங்டன் மாநிலங்களிலும் ஜப்பானிய அமெரிக்கர்  பெருமளவில் வாழ்கிறார்கள். இதிலே எங்கே இனப்படுகொலை?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

இங்கு மதவாதிகளுக்கு சரியான தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

நன்றி,  மீரா.....  :)

ஆரம்பத்தில் இருந்து, வாசியுங்கள், திருவாளர் கற்பகதரு. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

இது தவறான வரலாறு. அமெரிக்கா ஜப்பானின் நட்புநாடாக இருந்த நிலையில் முற்றிலும் எதிர்பார்க்காத நிலையில், அமெரிக்காவின் பேர்ள் ஹாரபர் மீது ஜப்பான் குண்டுகளை வீசி அமெரிக்காவின் கடற்படையின் 80வீதத்தையும் அழித்தது. இது நடந்த போது ஜப்பானிய அரசின் உயர்மட்ட அமைச்சர்கள் அமெரிக்காவில் வணிகம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். 

இதனால் அமெரிக்கா ஜப்பானை உடனடியாக போரை நிறுத்தி சீனா, கொரியா மற்றும் ஏனைய ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வெளியேறுமாறு பணித்தது. ஜப்பான் தனது ஆக்கிரமிப்பை மேலும் தொடர்ந்த போது நிறுத்தாவிட்டால் மாபெரும் அழிவை சந்திப்பீர்கள் என அமெரிக்கா எச்சரித்தது. அமெரிக்க கடற்படையை அழித்த மமதையில் ஜப்பான் அதை நம்பவில்லை. முதல் அணுகுண்டின் பின் மீண்டும் பலமுறை ஜப்பானை போரை நிறுத்துமாறு அமெரிக்கா எச்சரித்தது. அமெரிக்காவிடம் இரண்டாவது குண்டு இருக்கும் என்று நம்பாத ஜப்பான் தனது ஆக்கிரமிப்பை விடவில்லை. 

 பேர்ள் ஹாரபரின் அழிவை நேரடியாக போய் பார்த்து இந்த வரலாற்றை அங்கு கேட்டறிந்து கொண்டே இங்கு எழுதுகிறேன். இன்றும் ஜப்பான்அமெரிக்காவின் நட்புநாடு.   ஜப்பானில் இருந்தே அவர்களிடம் இந்த அணுக்குண்டு  தாக்குதல் பற்றி கேட்டபோது, தமது ஆட்சியாளர்களின் தவறு பற்றியும் அமெரிக்க உதவி பற்றியும் ஜப்பானியரே எனக்கு சொன்னார்கள். போரில் சரணடைந்த ஜப்பானிய அரசர் மற்றும் மக்களுக்கு அமெரிக்கா உதவி ஜப்பானை மீண்டும் உலகின் இரெண்டாவது செல்வந்த நாடாக உயர்ந்தெள உதவியது.  ன்று இந்து சமுத்திர, பசுபிக் சமுத்திர சீன ஆதிக்கத்துக்கு எதிரான அமெரிக்க முயற்சிக்கு வலதுகரமாக இருப்பது ஜப்பான். பேர்ள் ஹார்பர் இருக்கும் ஹவாய் மாநிலத்தில் ஜப்பானிய அமெரிக்கரே பெரும்பான்மை மக்கள். கலிபோர்னியா, வாஷிங்டன் மாநிலங்களிலும் ஜப்பானிய அமெரிக்கர்  பெருமளவில் வாழ்கிறார்கள். இதிலே எங்கே இனப்படுகொலை?

வணக்கம் யூட்,

இனப்படுகொலைக்கு எதிரான ஒப்பந்தம் இனப்படுகொலைக்கான சர்வதேச சட்ட வரைவிலக்கணத்தை இப்படி வரையறுக்கிறது (emphasis in bold is mine and intended). 

Definition

Convention on the Prevention and Punishment of the Crime of Genocide

Article II

In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such: 

  1. Killing members of the group; 
  2. Causing serious bodily or mental harm to members of the group;
  3. Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part; 
  4. Imposing measures intended to prevent births within the group;
  5. Forcibly transferring children of the group to another group.

Elements of the crime

The Genocide Convention establishes in Article I that the crime of genocide may take place in the context of an armed conflict, international or non-international, but also in the context of a peaceful situation. The latter is less common but still possible. The same article establishes the obligation of the contracting parties to prevent and to punish the crime of genocide.

The popular understanding of what constitutes genocide tends to be broader than the content of the norm under international law. Article II of the Genocide Convention contains a narrow definition of the crime of genocide, which includes two main elements: 

  1. A mental element: the "intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such"; and 
  2. A physical element, which includes the following five acts, enumerated exhaustively:
    • Killing members of the group
    • Causing serious bodily or mental harm to members of the group
    • Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part
    • Imposing measures intended to prevent births within the group
    • Forcibly transferring children of the group to another group

இந்த வரைவிலக்கணத்தை தமிழில் சுருங்க கூறின், இன உறுப்பினர்களை கொல்லுதல், கடும் உடல் அல்லது மன காயத்துக்கு ஆளாக்கல், திட்டமிட்டு அந்த இன குழுவை பெளதீகரீதியில் முற்றாக அல்லது பகுதியாக அழிக்கும் விதமாக வாழ்க்கை நிலையை அந்த குழுவின் மீது கட்டமைத்தல், பிறப்பை தடுக்கும் முறைகளை கைகொள்ளல், சிறுவர்களை வலுகட்டாயமாக ஒரு குழுவில் இருந்து இன்னொரு குழுவுக்கு இடமாற்றல். 

ஆகியவற்றில் எதாவதொன்றை, ஒரு இனத்தை முற்றாகவோ பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செய்தல்.

இனப்படுகொலை என்பதன் வரைவிலக்கணம் இதுதான். 

சட்டத்தில் எந்த ஒரு குற்றத்தையும் நிறுவ இரெண்டு விசயம் அவசியம். ஒன்று actus reus எனப்படும் நடவடிக்கை (act). மற்றையது mensrea எனப்படும் நோக்கம் (intention).

அமெரிக்கா செய்தது இனப்படுகொலை என்பதற்க்காகன “நடவடிக்கை” யை மிக இலகுவாக யாரும் கண்டு கொள்ளலாம்.

ஆனால் “நோக்கு” இருந்ததா? என்பதுதான் இந்த வழக்கை தீர்மானிக்கும் கேள்வி.

நிற்க- எந்த வழக்கும் கோர்ட்டுக்கு போக முன்னமே “நடவடிக்கை” “நோக்கம்” இரெண்டும் பொலிஸ்/அரச தரப்பிடம் 100%. இராது.

அப்படி இருப்பின் வழக்கே தேவையில்லை நேராக தண்டனைக்கு போகலாம்.

 வழக்கில் சாட்ட்சியங்கள் அடிப்படையில் இந்த இரெண்டும் இருந்ததாக நிறுவவேண்டும். அதாவது try the evidence = trial. 
 
இதில் நீங்கள் சொன்ன அமெரிக்கா என்ன செய்தது, பேர்ள் ஹாபர் எல்லாம் சாட்சியமாக வராது, ஆனால் தமக்கு genocidal intention இருக்கவில்லை என்பதற்கான narrative ஐ கட்டமைக்க அவை பயன்படும்.

சட்டத்தில் prima facie என்பார்கள். அதாவது at face value - there is a case to answer. தமிழில் சரியான சொல் முகாந்திரம் என நினைக்கிறேன்.

முடிவாக அமெரிக்கா ஜப்பானில் செய்தது இனப்படுகொலை என்ற வழக்குக்கு முகாந்திரம் இருக்கிறது. ஆனால் வழக்கு போடப்படவில்லை. 

என்னை பொறுத்தவரை இதை இனப்படுகொலை என நிறுவி இருக்கலாம். 

இன்னொருவர் இல்லை என வாதாடலாம்.

ஆனால் வழக்கு போடபடவில்லை ஆகவே நாங்கள் விடிய, விடிய கதைத்தாலும் ஒன்றும் ஆகபோவதில்ல.

எனது அடுத்த குற்றசாட்டான அமெரிக்கா போர்குற்றம் இழைத்தது என்பதை நீங்கள் மறுதலிக்கவில்லை என்பதை காண்கிறேன். 

போர் குற்றதுக்காவாவது அமெரிக்கா தண்டிக்க பட்டதா? இல்லை. ஆகவே நான் சொல்லா வந்த விடயம் - கடவுள் இல்லை மூளைதான் தண்டனையை தீர்மானிக்கிறது என்பது still stands.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விளங்க நினைப்பவன் said:

முஸ்லிம்கள் அடுத்த தேர்தலில் சாணாக்கியன் இராசபுத்திரன் இராசமாணிக்கத்திற்கு பெருமளவில் வாக்களிப்பார்கள் தானே

கனவிலும் நடக்காது என்னதான் சாணாக்கியன் தொண்டை கிழிய கத்தினாலும் அவர்கள் வாக்களிக்கமாட்டார்கள்  தமிழர்கள் வேண்டுமானால் முஸ்லீம்கள்களுக்கு வாக்களிப்பார்கள் தமிழர்கள் டிசைன் அப்படி முஸ்லீம்கள் அப்படியல்ல தற்போதய நிலையில் பலர் பல வீடியோக்கள் விடுகிறார்கள் முஸ்லீம்கள் . அதாவது சாணாக்கியன் பாராளுமன்றத்தில் கதைச்சத பற்றியும் சாணாக்கியன்ற ............... தை வாங்கி குடிக்கவும் என்று சொல்லியும் தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ  பழகவேண்டுமென்றும் சிலர் முஸ்லீம் எம்பிக்கள் கூத்தமைப்புடன் சேர்ந்து இயங்க வேண்டுமெனவும் கூறுகிறார்கள் 

ஆனால் கல்முனையை  விட்டுக்கொடுக்க முடியாதாம்  வடக்கு பிரதேச செயலகத்தை  இதுதான் அவர்கள் ஒற்றுமை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.