Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் கிறிஸ்தவ பாதிரியார்கள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

இதை செய்ய வலுவான விஞ்ஞான ஆதராம் இருந்தால் பரவாயில்லை ஆனால் அதுவும் இல்லை.

ஆனால் வலுவான விஞ்ஞான ஆதராம் இருந்தால் கூட அவர்கள் அதை பயன்படுத்த மாட்டார்கள் 😟

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த உடலுக்கு மரியாதையை செய்து  வழியனுப்புவது வளமை.  அதை சடங்கு என்று சொல்வார்கள். இந்துக்கள் எரிப்பதும்  இஸ்லாமியர் புதைப்பதும்  கிறீஸ்தவர்கள் அடக்கம் செய்வதும் ஒரு  சமய சடங்கு . இந்த சடங்கை செய்ய விடாது மறுப்பது ...அவர்கள் விருப்பதுக்கு மாறாக செய்வது . தவறு தானே ?...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்படுவதால் கடும் சீற்றம்

இன்டிபென்டன்ட்

முஸ்லீம்களின் மதநம்பிக்கைகளுக்கு எதிராக இலங்கை அதிகாரிகள் தகனம் செய்த உடல்களில் கொரோனாவினால் உயிரிழந்த 20 மாத குழந்தையும் உள்ளதை அறிந்த முஸ்லீம்கள் சீற்றத்தில் கொதித்தெழுந்துள்ளனர்.
இந்துசமுத்திரத்தின் தீவின் முஸ்லீம் சிறுபான்மையினத்தவர்கள் கொரோனாவினால் உயிரிழந்த அனைவரையும் தகனம் செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக நீண்ட காலமாக எதிர்ப்பை வெளியிட்டு வந்துள்;ளனர்.
இஸ்லாம் உடல்களை தகனம் செய்வதை குற்றமாகவும் உடல்களை அவமதிக்கும் நடவடிக்கையாகவும் கருதுகின்றது.

muslim-pro-300x225.jpg
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கும் பொது சுகாதாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ள போதிலும் இலங்கையில் சீற்றம் அதிகரித்து வந்துள்ள போதிலும் அரசாங்கம் தொடர்ந்தும் முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்து வருகின்றது.
இறுதியாக 20 மாத குழந்தை அவ்வாறு தகனம் செய்யப்பட்டமை கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது.
டிசம்பர் 9 ம் திகதி பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அந்த குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தனது கைக்குழந்தையின் – மகனின் தகனத்தை கூட தான் சென்று பார்க்க முடியவில்லை என குழந்தையின் தந்தை எம்எவ்எம் பாஹிம் தெரிவித்தார்.
எனது குழந்தையை தகனம் செய்யும் பகுதிக்கு என்னால் செய்ய முடியாது என நான் தெரிவித்துள்ளேன் என அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் அனுமதி வழங்காத நிலையில் எந்த ஆவணத்திலும் கைச்சாத்திடாத நிலையில் எப்படி குழந்தையின் உடலை எரிக்க முடியும் என எனது குடும்பத்தினரும் நண்பர்களும் கேட்டனர் என அதிகாரிகளை கேட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

protesr-agai-forced-cra-300x225.jpg
குழந்தை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களால் உடலை தகனம் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர் என தெரிவித்துள்ள தந்தை அவர்கள் அவசரஅவசரமாக குழந்தையின் உடலை தகனம் செய்தனர் போல தென்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
நாங்கள் கேள்விகளை எழுப்பியவேளை அவர்கள் உரிய பதிலை வழங்கவில்லை என குறிப்பிட்ட அவர் குழந்தையின் உடலை பலவந்தமாக தகனம் செய்வதற்கு பதில் அடக்கம் செய்வதற்கு அவர்கள் அனுமதித்திருந்தால் நாங்கள் ஒரளவாவது நிம்மதி அடைந்திருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே எங்களால் தாங்க முடியாமலுள்ளது என தந்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் பாரம்பரியமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது வழமை.
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் நிலத்தடி நீரை மாசடையச்செய்யும் என்பதால் உடல்களை தகனம் செய்யவேண்டும் என இலங்கை அரசாஙகம் வாதிடுகின்றது.

london-pro1-300x225.jpg
ஆனால் உலக சுகாதார ஸ்தாபனம் இதனை நிராகரிக்கின்றது.
தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை நோய்பரவலை தடுப்பதற்காக புதைக்கவேண்டும் என்ற பொதுவான அபிப்பிராயம் ஒன்று காணப்படுகின்றது,ஆனால் இதனை நிருபிப்பதற்கானபோதிய ஆதாரங்கள் இல்லை என கொரோன வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாள்வது குறித்து செப்டம்பரில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட வழிகாட்டுதல்கள் தெரிவித்துள்ளன.
தகனம் என்பது கலாச்சாரம் மற்றும் வளங்களை பொறுத்தவிடயம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கொரோனவிற்கு முன்னரே இலங்கையில் பௌத்தர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான இனரீதியான பதட்டம் காணப்பட்ட நிலையில் உடல்களை தகனம் செய்யும் விவகாரம் புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது.

https://thinakkural.lk/article/99142

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, நிலாமதி said:

இறந்த உடலுக்கு மரியாதையை செய்து  வழியனுப்புவது வளமை.  அதை சடங்கு என்று சொல்வார்கள். இந்துக்கள் எரிப்பதும்  இஸ்லாமியர் புதைப்பதும்  கிறீஸ்தவர்கள் அடக்கம் செய்வதும் ஒரு  சமய சடங்கு . இந்த சடங்கை செய்ய விடாது மறுப்பது ...அவர்கள் விருப்பதுக்கு மாறாக செய்வது . தவறு தானே ?...

சரியான கருத்து சகோதரி. 👍🏽

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிலாமதி said:

இறந்த உடலுக்கு மரியாதையை செய்து  வழியனுப்புவது வளமை.  அதை சடங்கு என்று சொல்வார்கள். இந்துக்கள் எரிப்பதும்  இஸ்லாமியர் புதைப்பதும்  கிறீஸ்தவர்கள் அடக்கம் செய்வதும் ஒரு  சமய சடங்கு .

சமய சடங்குகள் இல்லாமல் இறந்தவருக்கு மரியாதையை செய்து வழியனுப்பும் முறையும் வெளிநாடுகளில் உள்ளது.

44 minutes ago, நிலாமதி said:

கிறீஸ்தவர்கள் அடக்கம் செய்வதும் ஒரு  சமய சடங்கு .

கிறீஸ்தவர்கள் அதிகம் வாழ்கின்ற மேற்கு நாடுகளில் எரிக்கும் முறை அதிகரித்து வருகிறது.

6 hours ago, Kapithan said:

அப்படியா...🤔

எனக்குமொரு எலும்புத்துண்டு பார்சல்... 😜

நிச்சயமாக எலும்புத்துண்டு பார்சல் பச்சோந்திகளுக்கு கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஆனால் வலுவான விஞ்ஞான ஆதராம் இருந்தால் கூட அவர்கள் அதை பயன்படுத்த மாட்டார்கள் 😟

இதை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால் அவர்களை போல் நாங்கள் நடக்க முடியாது, கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

இறந்த உடலுக்கு மரியாதையை செய்து  வழியனுப்புவது வளமை.  அதை சடங்கு என்று சொல்வார்கள். இந்துக்கள் எரிப்பதும்  இஸ்லாமியர் புதைப்பதும்  கிறீஸ்தவர்கள் அடக்கம் செய்வதும் ஒரு  சமய சடங்கு . இந்த சடங்கை செய்ய விடாது மறுப்பது ...அவர்கள் விருப்பதுக்கு மாறாக செய்வது . தவறு தானே ?...

நிச்சயமாக தவறுதான்.

யூகேயில் வெட்டை வெளியில் கட்டை போட்டு எரிக்க முடியாது, சூழல் கேட்டால் என்று சட்டம் இருந்தது. ஒரு வகை இந்துக்கள் அது தமது சமய முறை, அப்படி எரிக்காவிட்டால் தமக்கு மோட்சம் கிடைக்காது என்று வழக்கு போட்டு, வெட்டையில் எரிக்க முடியாது ஆனால், கூரை அற்ற ஒரு கட்டிடத்தினுள் எரிக்கலாம் என்று நீதி மன்றம் சொல்லியது.

ஆனால் இந்த கட்டிடம் ஒரு அங்கீகரிக்க பட்ட சுடுகாடாக இருக்க வேண்டும். இன்னும் அப்படி ஒரு சுடுகாடு கட்டபடவில்லை. பிரச்சனை இழுபட்டு போகிறது.

ஆனால் இங்கே தடைக்கு தகுந்த காரணங்கள் காட்டபட்டன.

ஆனால் இலங்கையில்? உலகம் முழுவதும் 6 அடியில் புதைத்தல் ஒரு கேடுமில்லை எனும் போது வேண்டும் என்றே மத குரோதமாகவே இதை பார்க்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Robinson cruso said:

நிச்சயமாக எலும்புத்துண்டு பார்சல் பச்சோந்திகளுக்கு கிடைக்கும்.

இது யாழில் தடை செய்யப்பட்ட வார்த்தை பாஸ் .

மட்டுகள்  வந்தால் ஒரே வீச்சு .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

கிறீஸ்தவர்கள் அதிகம் வாழ்கின்ற மேற்கு நாடுகளில் எரிக்கும் முறை அதிகரித்து வருகிறது.

ஒரு... சவத்தை, எரித்தால்... அன்றோடு காரியம் முடியும்.
புதைத்தால்... மன்னாரில் புதைக்க வேண்டும்,
மட்டக்களப்பில்  புதைக்க வேண்டும், என்று சொல்வார்கள்.

அந்த... நேரம், காத்தான் குடி நினைவு கூட... இவங்களுக்கு வராது.
எல்லா.. மூனாக்களையும், மாலைதீவுக்கு... அனுப்ப வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

நிச்சயமாக எலும்புத்துண்டு பார்சல் பச்சோந்திகளுக்கு கிடைக்கும்.

எனக்கு பார்சல் shiping செய்தாயிற்று. உங்களுக்கு பார்சல் வந்துவிட்டதோ... அல்லது இனிமேல்தான் order செய்வதாக உத்தேசமோ.. 😜😜

(Y this கொலைவெறி.. Mr. வங்காலையான்..😂😂)

1 hour ago, பெருமாள் said:

இது யாழில் தடை செய்யப்பட்ட வார்த்தை பாஸ் .

மட்டுகள்  வந்தால் ஒரே வீச்சு .

விடுங்க Boss.

வங்காலையான் தனது நீண்ட நாள் காண்டை(?😂) கொஞ்சம் வெளியில எடுத்து விடுகிறார். கொஞ்சம் relax ஆக இருக்கட்டும்.. 😂😂

6 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு... சவத்தை, எரித்தால்... அன்றோடு காரியம் முடியும்.
புதைத்தால்... மன்னாரில் புதைக்க வேண்டும்,
மட்டக்களப்பில்  புதைக்க வேண்டும், என்று சொல்வார்கள்.

அந்த... நேரம், காத்தான் குடி நினைவு கூட... இவங்களுக்கு வராது.
எல்லா.. மூனாக்களையும், மாலைதீவுக்கு... அனுப்ப வேண்டும். 

உங்களுக்கு மாலைதீவின் மீது ஏன் இத்தனை கொலைவெறி.. 😜

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

உங்களுக்கு மாலைதீவின் மீது ஏன் இத்தனை கொலைவெறி.. 😜

மாலை  தீவு, மாசிக் கருவாடு... உலகப் புகழ் பெற்றது,
இப்ப.. அதை, நினைத்தாலும்.... நாக்கில்... எச்சில்  ஊறும்.
இனி.. அந்த, வில்லங்கம் வராது.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாதிரிமார் அநியாயத்துக்கு நல்லவங்களாக இருக்காங்களே. கொரோனாவால் இறந்த கிறீஸ்தவர்களை புதைக்க கேட்டால் பரவாயில்லை. முஸ்லிம்களையும் சேர்த்துக்கொண்டதுதான் கடுப்பாகுது. நன்றிக் கடனாக மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் ஒன்றைப் பரிசளிப்பார்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஆனால் இலங்கையில்? உலகம் முழுவதும் 6 அடியில் புதைத்தல் ஒரு கேடுமில்லை எனும் போது வேண்டும் என்றே மத குரோதமாகவே இதை பார்க்க முடியும்.

இலங்கையில் பவுத்த மதத்துக்கே முன்னுரிமை. அந்த மதத்தின் சடங்கு முறைகளே பின்பற்றப்படவேண்டும் எனும் கருத்தை சட்டமாக்க கொரோனாவும் சிங்களத்துக்கு  துணை போகுது. எங்கும் சிங்களம், எதிலும் பவுத்தம் இதுதான் இறுதி முடிவாகலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

சமய சடங்குகள் இல்லாமல் இறந்தவருக்கு மரியாதையை செய்து வழியனுப்பும் முறையும் வெளிநாடுகளில் உள்ளது.

கிறீஸ்தவர்கள் அதிகம் வாழ்கின்ற மேற்கு நாடுகளில் எரிக்கும் முறை அதிகரித்து வருகிறது.

இதெல்லாம் அவரவர் விருப்ப பட்டியலுக்குள் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை....  
துல்பன்,  கட்டாயம்  கலந்து... கொள்ள வேண்டிய, தலைப்பு  இது. :grin:

அவர்... கலந்து கொள்ளும் வரை, 
திரியை.... அணைக்காமல் பாதுக்காக்க வேண்டியது... நமது பொறுப்பு. 🤣

16 hours ago, குமாரசாமி said:

ஓகே  துல்பனுக்காக மண்ணெண்ணை செலவு என்ரை பொறுப்பு....😎

16 hours ago, தமிழ் சிறி said:

இதைப்  பார்த்த பின்.. துல்பன்,  நிச்சயம்  வருவார் என்ற.. நம்பிக்கை உள்ளது. :)

அவரிடம் இருந்து, சில அறிவுரைகளை... கேட்க வேண்டும் என்ற ஆவலும், இருக்கு 😎

ரெண்டு பேரும் ஒருக்கா நல்லூரில் 40 பேர் நின்று கும்பிட்டார்கள் என்று சொல்லுங்க அங்கு வந்து உங்கள் இருவரையும் கும்மி எடுப்பார் யுவரானர் ? :grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

இலங்கையில் பவுத்த மதத்துக்கே முன்னுரிமை. அந்த மதத்தின் சடங்கு முறைகளே பின்பற்றப்படவேண்டும் எனும் கருத்தை சட்டமாக்க கொரோனாவும் சிங்களத்துக்கு  துணை போகுது. எங்கும் சிங்களம், எதிலும் பவுத்தம் இதுதான் இறுதி முடிவாகலாம். 

ம்ம்ம்...வாஸ்தவமான கருத்துத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வாலி said:

இந்தப் பாதிரிமார் அநியாயத்துக்கு நல்லவங்களாக இருக்காங்களே. கொரோனாவால் இறந்த கிறீஸ்தவர்களை புதைக்க கேட்டால் பரவாயில்லை. முஸ்லிம்களையும் சேர்த்துக்கொண்டதுதான் கடுப்பாகுது. நன்றிக் கடனாக மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் ஒன்றைப் பரிசளிப்பார்கள்! 

😂 

நன்றிக் கடனாக மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் ஒன்றை இவர்களுக்கு பரிசளித்து  தங்களுக்கு விருப்பமான பரிசை சொர்கத்தில் பெற்று கொள்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 18/12/2020 at 15:42, தமிழ் சிறி said:

ஒடுக்கப் பட்டவர்களுக்கும் துன்பப் படுவோருக்கும் ஆதரவளிப்பதும் அநீதியை எதிர்ப்பதும்...
என்று ஒரு நொண்டிச் சாட்டு, சொல்லிக் கொண்டு.. முஸ்லீம்களுக்கு ஆதரவு கொடுக்க  வருகிறார்கள்.

சிறி உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்போதுமே ஒடுக்கப்படுபவர்களுக்காகவும்,  துன்பப்படுபவர்களுக்காகவும், அநீதிக்கெதிராகவும் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இனம், மதம், மொழி பார்த்து செயற்படுபவர்களல்ல. இந்த எரிக்கும் சட்டம் அவர்களது மத நம்பிக்கையையும் பாதிப்புள்ளாக்குகிறது இருப்பினும் புதைப்பதால் சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்கிற காரணம் சொல்லப்பட்டதால் தம் நம்பிக்கையை விட மற்றவர்களின் நன்மை கருதி பேசாமல் இருந்திருப்பார்கள். ஆனால் இறந்தவர்களை புதைப்பதனால் சுகாதார ஆபத்தில்லை என்று ஐ. நா, இலங்கை சுகாதார மருத்துவ நிபுணர்கள் அறிவித்த பின்னும் இலங்கை அரசு பிடிவாதமாக இருப்பது கொரோனவைச்சாட்டி தன் விருப்பத்தை நிறைவேற்றி சிறுபான்மையினரை அடிமைப்படுத்தும் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. நம்ம அரசியற்  தலைவர்களும் முஸ்லிம்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வந்தார்களேயொழிய அவர்களோடு ஒட்டிஉறவாடும், தோள்கொடுக்கும்  கிறிஸ்தவர்களும் இதனால் பாதிப்படைகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டினால் தீட்டுப்பட்டுவிடும் என்பதனாலோ என்னவோ தவிர்த்து விட்டார்கள். அதனால் தமது உரிமைக்காக தங்களுக்கு தெரிந்த, அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்கள். இந்தப் பாதிரிமார்  முஸ்லிம்களுக்காக பிழையானவற்றுக்கு எல்லாம் ஆதரவு கொடுக்க மாட்டார்கள். பொறுத்திருந்து சரியான காரணத்தோடு தமது ஆதரவையும், அதே நேரம் பிழையான செயற்பாட்டிற்கு தமது எதிர்ப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள். கிறிஸ்தவ பாதிரியாருக்கு ஒரு பிக்கு கன்னத்தில் அறைந்தபோது அதை நிஞாயப்படுத்தி, கைதட்டி கருத்து பதிந்தவர்களும் இங்கே  உண்டு. அதேனோ கிறிஸ்தவர்கள் மட்டில் எமக்கு இவ்வளவு வெறுப்பு.

On 19/12/2020 at 09:27, Kapithan said:

எனக்கு பார்சல் shiping செய்தாயிற்று. உங்களுக்கு பார்சல் வந்துவிட்டதோ... அல்லது இனிமேல்தான் order செய்வதாக உத்தேசமோ.. 😜😜

(Y this கொலைவெறி.. Mr. வங்காலையான்..😂😂)

விடுங்க Boss.

வங்காலையான் தனது நீண்ட நாள் காண்டை(?😂) கொஞ்சம் வெளியில எடுத்து விடுகிறார். கொஞ்சம் relax ஆக இருக்கட்டும்.. 😂😂

எலும்புத்துண்டுக்காக அலைந்தும் இல்லை. அலையப்போவதும் இல்லை. ஒரு கொலை வெறியும் கிடையாது. கப்பியுடன் கொஞ்சம் அடிபட ஆசை. அவ்வளவுதான்.

அது என்ன காண்டை? புது தமிழ் சொல்லா?
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.