Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

un-mulli-stature-696x522.jpg
 30 Views

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிங்களப் பேரினவாத அரசினால் இடித்து அழிக்கப்பட்டதைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் அவை முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இப் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சுவிஸ் தமிழர் இளையோர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இனவழிப்பு சிங்கள பேரினவாத அரசு இடித்துடைத்ததை கண்டித்து மாணவ சமூகம், மக்கள் அதிரடியாக போராட்டத்தில் குதித்தனர். நொடிப்பொழுதில் தாயக உறவுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் இளையோர்கள் சமூக வலைத்தளங்களில் தாயக நிலைமையை வெளிக்கொண்டுவந்தார்கள்.

அந்தவகையில் இன்று ஐக்கிய நாடுகள் அவை தமிழ் மக்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாதைகளை தாங்கிய வண்ணம் சிங்கள பேரினவாத அரசை கண்டிக்கும் முகமாக நிகழ்வில் கலந்துகொண்ட மக்களால் கோசங்கள் எழுப்பப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தமது முழுமையான ஆதரவை தாயகத்தில் போராடும் மாணவ சமூகத்திற்கு வழங்கும் உணர்வோடு தமது கடும் குளிரையும் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

https://www.ilakku.org/?p=39391

  • Replies 100
  • Views 9.7k
  • Created
  • Last Reply

எதற்காக  கவனயீர்பபு ஆர்பாட்டம், போராட்டம்  செய்கிறார்களோ அதை தாங்களாகவே பிரயோசனம் அற்றதாக செய்வதில்  நம்மவர்கள் கில்லாடிகள் என்பது புலிக்கொடிகளை தூக்கி சென்றதன் மூலம் நிருபித்து விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனம் இல்லாமல் போனதென்ன?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

எதற்காக  கவனயீர்பபு ஆர்பாட்டம், போராட்டம்  செய்கிறார்களோ அதை தாங்களாகவே பிரயோசனம் அற்றதாக செய்வதில்  நம்மவர்கள் கில்லாடிகள் என்பது புலிக்கொடிகளை தூக்கி சென்றதன் மூலம் நிருபித்து விட்டார்கள். 

கனடா அரசு பேரணிக்கு ஆதரவு கொடுத்தும் பேரணியில் வானத்தின் கோர்ணை அடித்து சென்று அந்த சூழலுக்கு இடையூறு கொடுத்ததாக முகநூலில் அதிகம் பேசப்படுகிறது .

யாராவது பங்குபற்றி ஆட் கள் இருக்கிறார்களோ இதே போல பிரான்சிலும் நடந்ததாம் நிலவரம் என்ன மாதிரியோ தெரியல

8 hours ago, nunavilan said:

பிரயோசனம் இல்லாமல் போனதென்ன?

இவ்வாறான மக்களின. சார்பில் செய்யப்படவேண்டிய கவனயீர்பபு ஆர்பாட்டங்கள் neutral  ஆக செய்யப்படும் போது உள்ளூர் மக்களிடம் இலகுவாக போய் சேரும் என்பது எனது அபிப்பிராயம். இவ்வாறாக புலிக்கொடிகளுடன் போகும் போது எதிர்வினையையே ஏற்படுத்தும். அதையே ஶ்ரீலங்கா அரசும் விரும்புகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கனடா அரசு பேரணிக்கு ஆதரவு கொடுத்தும் பேரணியில் வானத்தின் கோர்ணை அடித்து சென்று அந்த சூழலுக்கு இடையூறு கொடுத்ததாக முகநூலில் அதிகம் பேசப்படுகிறது .

யாராவது பங்குபற்றி ஆட் கள் இருக்கிறார்களோ இதே போல பிரான்சிலும் நடந்ததாம் நிலவரம் என்ன மாதிரியோ தெரியல

நான் கலந்துகொள்ளவில்லை. அதனால் கலந்து கொண்டவர்கள் செயல்பாடு, வடிவம் குறித்து கருத்து சொல்ல முடியவில்லை. இங்கே செய்தித் தளங்களில் இது குறித்து செய்திகள் வெளிவந்தன. 
வேற்று இனத்து மக்கள்பெரிய அளவில் அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. ஒண்டாரியோ மாகாண முதல்வர் தனது ஆதரவு தமிழ் மக்களுக்கு என்றும் உண்டு என்று தெரிவித்த காணொளி பார்த்தேன்.
பொதுவாக வெளியில் வந்து ஒரு போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்தால் ஒரு சில அசௌகரியங்கள் இருக்கும்.
டொரோண்டோவில் எப்படியும் ஒரு ஆர்ப்பாட்டம், பேரணி சின்னதாக எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கும். 

மற்றும்படி கொடி விற்பனை, இசைத்தட்டு, புத்தகம் விற்பனை எம்மவர் கூடும் இடங்களில் தான் விற்கலாம்.
அது தனிப்பட்ட முறையில் ஒருவருடைய வியாபாரம் இல்லை. அதன் மூலம் திரட்டப்படும் நிதி (ஆயிரம், இரண்டாயிரம்...) இங்கே நடக்கும் நிகழ்வுகள், விழா போன்ற விடயங்களுக்கு பயன்படுவதாக அறிந்தேன். 

உள்ளூரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எமது தார்மீக ஆதரவு உண்டு என்பதன் ஒரு செய்திதான் இது.
இதனால் தான் அங்கே மாற்றங்கள் நிகழ்ந்தது என்று சின்னப்பிள்ளை தனமாக யோசிக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Sasi_varnam said:

உள்ளூரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எமது தார்மீக ஆதரவு உண்டு என்பதன் ஒரு செய்திதான் இது.
இதனால் தான் அங்கே மாற்றங்கள் நிகழ்ந்தது என்று சின்னப்பிள்ளை தனமாக யோசிக்கக் கூடாது.

சரியான வார்த்தையை சரியான இடத்தில் சொன்னீர்கள் சசிவர்ணம்.👍 👍👍👍👍

ஊர்வலங்களும் . கண்டன ஆர்ப்பாட்டங்களும் , பொது இட பிரச்சாரங்களும், கவனயீர்ப்பு ஊர்வலங்களும் கண்துடைப்பிற்காக செய்பவையல்ல என்பதை ஒரு சிலர் புரிந்து கொள்ள மறுக்கின்றர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, nunavilan said:

பிரயோசனம் இல்லாமல் போனதென்ன?

இதுதான் பிரயோசனம் இல்லாமல் போனது. 😎

TamilNet

நீ சிங்களக்கொடி தோக்கி ஆட்டினாலும் ஈழத்தமிழினம் இரண்டாம் தரமே.

நீ சிங்களக்கொடி தோக்கி தூக்கி ஆட்டினாலும் ஈழத்தமிழினம் இரண்டாம் தரமே.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

சரியான வார்த்தையை சரியான இடத்தில் சொன்னீர்கள் சசிவர்ணம்.👍 👍👍👍👍

ஊர்வலங்களும் . கண்டன ஆர்ப்பாட்டங்களும் , பொது இட பிரச்சாரங்களும், கவனயீர்ப்பு ஊர்வலங்களும் கண்துடைப்பிற்காக செய்பவையல்ல என்பதை ஒரு சிலர் புரிந்து கொள்ள மறுக்கின்றர்கள்.

உந்த குளிருக்கை, எழும்பி ஓடிப்போய், ஏதோ தம்மால்  முடிந்த ஏதோ ஆர்பாட்டத்தினை செய்யினம். அதிலை ஓரிருவர் கொடி பிடித்தால், எல்லோரும் பிழை எண்டு சொல்லுறது சரி இல்லை.

சும்மா ஈசி சேறிலை  இருந்து கிழடுகள் புறுபுறுக்கிறமாதிரி எதையாவது சொல்ல வேணும் எண்டதுக்காக சொல்லக்கூடாது.

கனடாவில் நடந்தது, கவன ஈர்ப்பு கார் ஓட்டம். நடந்து, போகவோ, கூட்டமாக சேரவோ தடை உள்ள நேரத்தில், இதுவே அவர்களுக்கு தோன்றி உள்ளது.

கவனத்தினை ஈர்க்க, ஹோர்ன்  அடித்து உள்ளனர். சிலர் புறுபுறப்பதன் மூலம், கவனத்தினை ஈர்த்து ஏன் என்று அறிய வைத்துள்ளார்கள்.

இதேபோலவே 2009ல் உயர் தெருவில் நடந்து போய், ஒட்டுமொத்த கனடா கவனத்தினை ஈர்த்தனர். அதேபோல் பிரித்தானிய பாராளுமன்றின் முன்னால், கவனம் ஈர்க்கப்பட்டது.

அப்போதும் கூட, இதில் பிரயோசனம் இல்லை. மினக்கெட்ட  வேலை என்று, இங்கே சொன்னார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, Nathamuni said:

அன்று தொடக்கம் புலி / சீமான் வக்கிரம் உள்ளவர்கள்  இன்றைய ஈழத்தமிழர் நிலைப்பாடு - முன்னேற்றங்கள் பற்றி ஏதாவது சொல்லட்டும்?
சும்மா கொடி தூக்கினால் குற்றம் , ஈழமக்கள் விடுதலை பற்றி கதைத்தால் குற்றம்.

குற்றம் பிடிக்க வெளிக்கிட்டால் ஒரு துளி நீரிலும் குற்றம் பிடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

எதற்காக  கவனயீர்பபு ஆர்பாட்டம், போராட்டம்  செய்கிறார்களோ அதை தாங்களாகவே பிரயோசனம் அற்றதாக செய்வதில்  நம்மவர்கள் கில்லாடிகள் என்பது புலிக்கொடிகளை தூக்கி சென்றதன் மூலம் நிருபித்து விட்டார்கள். 

உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக. ஆனால் ஜெனிவாவில் வாழும் பிற இனத்தவர்களுக்கு கூட எம் மக்களின் துயரம் தெரிகிறது. புலிக்கொடி பற்றித் தெரிகிறது. தமிழீழத் தேசியக் கொடியான.. புலிக்கொடி சுவிஸ்லாந்து உட்பட ஐரோப்பாவில் பிடிக்க தடையில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைவுத்தூபி இடிப்பு -விளக்கம் கோரும் பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்

January 13, 2021
 
Share
 
MP-Siobhain-McDonagh-1-696x560.jpg
 65 Views
நினைவுத்தூபியை இடித்தது தொடர்பில் சிறீலங்கா தூதுரகத்திடம் விளக்கம் கோருகிறார் பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்.
 
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தது தொடர்பில் விளக்கம் கோரியும், அதனை மீள அமைக்க கோரியும் நான் சிறீலங்கா தூதரகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன் என பிரித்தானியாவின் மிச்சம் பகுதியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
 
Video Player
 
00:00
 
01:39
 
அவர் விடுத்துள்ள காணொளி செய்தியில்,

தமிழ் மக்களுக்கான செய்தி இது. 2008 – 2009 வரையிலான காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நினைவுத்தூபியை சிறீலங்கா அரசும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகமும் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (8) இரவு இடித்துள்ளது.

இது தொடர்பில் கடந்த வாரம் பெருமளவான தமிழ் மக்கள் எனக்கு மின்னஞ்சல்களை அனுப்பி இருந்தனர். நினைவாலயங்கள் எங்கள் எல்லோருக்கும் முக்கியமானது. அதுவே எமது வரலாற்றை அறிய முக்கியமானது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தது தொடர்பில் விளக்கம் கோரியும், அதனை மீள அமைக்க கோரியும் நான் சிறீலங்கா தூதரகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் நீதி கோரி கடந்த 11 வருடங்களாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும், அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த விவகாரங்கள் எதிர்வரும் மார்ச்மாதம் இடம்பெறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/?p=39423

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

எதற்காக  கவனயீர்பபு ஆர்பாட்டம், போராட்டம்  செய்கிறார்களோ அதை தாங்களாகவே பிரயோசனம் அற்றதாக செய்வதில்  நம்மவர்கள் கில்லாடிகள் என்பது புலிக்கொடிகளை தூக்கி சென்றதன் மூலம் நிருபித்து விட்டார்கள். 

புலிக்கொடிகள் இல்லாமல் போயிருந்தால் பிரயோசனமாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா??

எதற்காக கவனயீர்ப்பு போராட்டம் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? அல்லது செய்யவே கூடாதா??

புலிக்கொடிக்கும் உங்களுக்கும் தனிப்பட ஏதாவது பிரச்சனை உண்டா??

5 hours ago, nunavilan said:

புலிக்கொடிகள் இல்லாமல் போயிருந்தால் பிரயோசனமாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா??

எதற்காக கவனயீர்ப்பு போராட்டம் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? அல்லது செய்யவே கூடாதா??

புலிக்கொடிக்கும் உங்களுக்கும் தனிப்பட ஏதாவது பிரச்சனை உண்டா??

இதில் என்ன தனிப்பட்ட பிரச்சனை இருக்கிறது,  நுணா. எனது தனிப்பட்ட வாழ்வை அறிந்திருந்தால், நீங்கள் இப்படிக் கூறி இருக்க மாட்டாரகள். இருப்பினும் ஒருவரது கருத்தை தொடர்ந்து அவதானிக்கும் போது அவர் தனிப்பட்ட ரீதியில் கூறுகிறாரா, அல்லது கோட்பாட்டு ரீதியில் கருத்தியலை கூறுகிறாரா என்பதை கணிப்பது மிக இலகு. ஆனால் கருத்தியல்  ரீதியிலான எதிர்க்கருத்தை வைக்க முடியாத சிலர் இங்கு இப்படி தனிப்பட்ட ரீதியானது என்று வசை பாடுவது வழமை. ஆனால் உங்களிடம் இருந்து இதை உண்மையில் நான் எதிர் பாரக்கவில்லை.  

மக்கள் போராட்டங்கள் நடுநிலையான அமைப்புக்கள் மூலம் முன்னடுக்கப்படும் போது அதன் பெறுமதி அதிகம் என்பது நான் சொல்லி தெரியவேண்டிய விடயம் இல்லை. அரசியல் ரீதியான ஒரு பக்கச்சார்பான  முத்திரை குத்தல்களுக்கு துணை போவது  அப்போராட்டதை நீர்ததுப்போக செய்யும் என்பது எமது அனுபவத்தில் கண்ட பாடம். அதையே குறிப்பிட்டேன். 

Edited by tulpen
வசன நடைத் திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Sasi_varnam said:

நான் கலந்துகொள்ளவில்லை. அதனால் கலந்து கொண்டவர்கள் செயல்பாடு, வடிவம் குறித்து கருத்து சொல்ல முடியவில்லை. இங்கே செய்தித் தளங்களில் இது குறித்து செய்திகள் வெளிவந்தன. 
வேற்று இனத்து மக்கள்பெரிய அளவில் அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. ஒண்டாரியோ மாகாண முதல்வர் தனது ஆதரவு தமிழ் மக்களுக்கு என்றும் உண்டு என்று தெரிவித்த காணொளி பார்த்தேன்.
பொதுவாக வெளியில் வந்து ஒரு போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்தால் ஒரு சில அசௌகரியங்கள் இருக்கும்.
டொரோண்டோவில் எப்படியும் ஒரு ஆர்ப்பாட்டம், பேரணி சின்னதாக எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கும். 

மற்றும்படி கொடி விற்பனை, இசைத்தட்டு, புத்தகம் விற்பனை எம்மவர் கூடும் இடங்களில் தான் விற்கலாம்.
அது தனிப்பட்ட முறையில் ஒருவருடைய வியாபாரம் இல்லை. அதன் மூலம் திரட்டப்படும் நிதி (ஆயிரம், இரண்டாயிரம்...) இங்கே நடக்கும் நிகழ்வுகள், விழா போன்ற விடயங்களுக்கு பயன்படுவதாக அறிந்தேன். 

உள்ளூரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எமது தார்மீக ஆதரவு உண்டு என்பதன் ஒரு செய்திதான் இது.
இதனால் தான் அங்கே மாற்றங்கள் நிகழ்ந்தது என்று சின்னப்பிள்ளை தனமாக யோசிக்கக் கூடாது.

சச்ச நான் அப்படி நினைக்கக்கல  ஆர்ப்பாட்டம் பேரணிக்கு ஏதாவது பலன் கிடைக்க வேண்டும் அவ்வளவுதான் . 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

இதில் என்ன தனிப்பட்ட பிரச்சனை இருக்கிறது,  நுணா. எனது தனிப்பட்ட வாழ்வை அறிந்திருந்தால், நீங்கள் இப்படிக் கூறி இருக்க மாட்டாரகள். இருப்பினும் ஒருவரது கருத்தை தொடர்ந்து அவதானிக்கும் போது அவர் தனிப்பட்ட ரீதியில் கூறுகிறாரா, அல்லது கோட்பாட்டு ரீதியில் கருத்தியலை கூறுகிறாரா என்பதை கணிப்பது மிக இலகு. ஆனால் கருத்தியல்  ரீதியிலான எதிர்க்கருத்தை வைக்க முடியாத சிலர் இங்கு இப்படி தனிப்பட்ட ரீதியானது என்று வசை பாடுவது வழமை. ஆனால் உங்களிடம் இருந்து இதை உண்மையில் நான் எதிர் பாரக்கவில்லை.  

மக்கள் போராட்டங்கள் நடுநிலையான அமைப்புக்கள் மூலம் முன்னடுக்கப்படும் போது அதன் பெறுமதி அதிகம் என்பது நான் சொல்லி தெரியவேண்டிய விடயம் இல்லை. அரசியல் ரீதியான ஒரு பக்கச்சார்பான  முத்திரை குத்தல்களுக்கு துணை போவது  அப்போராட்டதை நீர்ததுப்போக செய்யும் என்பது எமது அனுபவத்தில் கண்ட பாடம். அதையே குறிப்பிட்டேன். 

நீங்கள்  ஒரு  ஆர்ப்பாட்ட  ஊர்வலத்தை உங்களது   எண்ணக்கருவை  பிரதி பலிப்பதாக  செய்யலாமே??

நம்பினால்  நம்புங்கள்

நீங்கள் அவ்வாறு  செய்யும்போது புலிக்கொடி  பிடிக்காமல்  நான் நிச்சயம்  வந்து  கலந்து கொள்வேன்

(இதையும்  தனிப்பட என  நீங்கள்  எடுக்கக்கூடாது)

  • கருத்துக்கள உறவுகள்

யாரும், யாரையும் குறை சொல்லவில்லை. 'தானும் தின்னான், தள்ளியும் இரான்' எண்டு இருக்கக்கூடாது என்பது தான் சொல்லவருவது.

நம்மால்  முடியவில்லையா, முடிந்தவர்களை, பாராட்டவும் முடியவில்லையா, குறணி பிடிக்காமல் கடந்து செல்லவேண்டும். 

கொடி பிடிப்பது எனக்கும் உடன்பாடு இல்லை. ஆனால், நீ என்ன செய்து கிழித்தாய் என்று மனசாட்சி கேட்க்கும் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஓம், செய்வது தான் முக்கியம்! செய்யும் செயலுக்கு வினைத்திறன் இருக்கிறதா என்றெல்லாம் கேட்பது தவறு! 

  • கருத்துக்கள உறவுகள்

"மக்கள் போராட்டங்கள் நடுநிலையான அமைப்புக்கள் மூலம் முன்னடுக்கப்படும் போது.."
அப்படியான நடுநிலையான அமைப்புக்கள் எவை? அவை ஆரம்பித்து வைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எவை? குதர்க்கமாக கேட்கவில்லை. தெரிந்துகொள்ளவே கேட்கிறேன்.

நடுநிலை என்ற தன்மையை எப்படி புரிந்துகொள்ளலாம்?
தமிழர் சார்பாக நாங்கள் ஒரு விடயத்தை மேட்கொள்ளும் போதே அந்த "நடுநிலை" என்ற சமன்பாடு அடிபட்டு போகிறதே. 

சின்ன உதாரணம் : 
தீபா மேத்தாவின் திரைப்படத்தை பார்க்காமலேயே கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்து குப்பையில் தூக்கி கடாசியவர்கள் நாங்கள்.

அவன் சிங்கக்கொடியை தூங்குகிறான் அவனை பிரதிபலிக்க 
நீ எதை தூக்குவாய் உன்னை பிரதிபலிக்க?
வெள்ளை கொடியை தூக்கியே பிணமாய் விழுந்தவர் நாங்கள்...

1 hour ago, விசுகு said:

நீங்கள்  ஒரு  ஆர்ப்பாட்ட  ஊர்வலத்தை உங்களது   எண்ணக்கருவை  பிரதி பலிப்பதாக  செய்யலாமே??

நம்பினால்  நம்புங்கள்

நீங்கள் அவ்வாறு  செய்யும்போது புலிக்கொடி  பிடிக்காமல்  நான் நிச்சயம்  வந்து  கலந்து கொள்வேன்

(இதையும்  தனிப்பட என  நீங்கள்  எடுக்கக்கூடாது)

விசுகு உங்கள் கேள்வியை அப்படியே கடந்து சென்றுவிடலாம் என்று தான் முதல் நினைத்தேன். என்றாலும் மனச்சாட்சி விடவில்லை.

 உங்கள் எண்ணக்கருவின் அடிப்படையில் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தை செய்யலாமே! நானும் கலந்து கொள்கிறேன் என்று மிக இலகுவாக உங்களால் இன்று சுதந்திரமாக  கூறமுடிகிறது.

ஒரு காலத்தில் ஐரோப்பாவில் அவ்வாறு தமது எண்ணக்கருவின் அடிப்படையில் அரசியல் செய்ய முற்பட்டவர்களின்  கை, கால்கள் முறிக்கப்பட்ட போது நீங்களும் நானும் மௌனமாக அதை  அங்கீகரித்தோம். ஒவ்வொரு மே தினத்திலும்  அவ்வாறு ஊர்வலம் போன பலரின்  மண்டை உடைக்கப்பட்ட சம்பவங்கள்  இந்நாட்டு மீடியாக்களில் வரும் போது கூட  நாம் அனைவரும் மெளனம் காத்தோம். அவர்கள் செய்தால் சரியாக தானே இருக்கும் என று கூட நம்பினோம். 

இன்று மிக  இலகுவாக இப்படி கூற உங்களால் முடிகிறது. என்னால் அது முடியவில்லை.  

26 minutes ago, Sasi_varnam said:

"மக்கள் போராட்டங்கள் நடுநிலையான அமைப்புக்கள் மூலம் முன்னடுக்கப்படும் போது.."
அப்படியான நடுநிலையான அமைப்புக்கள் எவை? அவை ஆரம்பித்து வைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எவை? குதர்க்கமாக கேட்கவில்லை. தெரிந்துகொள்ளவே கேட்கிறேன்.

நடுநிலை என்ற தன்மையை எப்படி புரிந்துகொள்ளலாம்?
தமிழர் சார்பாக நாங்கள் ஒரு விடயத்தை மேட்கொள்ளும் போதே அந்த "நடுநிலை" என்ற சமன்பாடு அடிபட்டு போகிறதே. 

சின்ன உதாரணம் : 
தீபா மேத்தாவின் திரைப்படத்தை பார்க்காமலேயே கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்து குப்பையில் தூக்கி கடாசியவர்கள் நாங்கள்.

அவன் சிங்கக்கொடியை தூங்குகிறான் அவனை பிரதிபலிக்க 
நீ எதை தூக்குவாய் உன்னை பிரதிபலிக்க?
வெள்ளை கொடியை தூக்கியே பிணமாய் விழுந்தவர் நாங்கள்...

ச‍சிவர்ணம் நடுநிலை அமைப்புகள் என்று நான் கூறியது எங்கோ இருந்து புதிதாக வரும் அமைப்புகளை அல்ல. ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும்  உள்ள தமிழ் அமைப்புகளே எந்த விதமான தனிப்பட்ட அரசியல் இயக்க/கட்சி சார்பற்ற வகையில் தேவையற்ற முத்திரை குத்தல்களுக்கும் இடமளிக்காது  தமிழ் மக்களுக்கு இழைக்கபட்ட இன்னும் இழைக்கப்ட்டுகொண்டிருக்கும் அநீதிகளை புதிய தந்திரோபங்களை உபயோகித்து  பரப்புரை செய்து  தமிழ் மக்கள்  சார்பாக கவனயீர்ப்பை செய்யுயும் போது அதன் பெறுமதி அதிகமாக இருக்கும் என்பதையே குறிப்பிட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இடிக்கப் பட்டது முள்ளிவாய்க்காலில் படுகொலையான தமிழ் மக்களின் நினைவுத் தூபி. 

இதை எதிர்ப்பவர்கள் அரை டசின் புலிக்கொடிகளோடு நின்றால் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை!

ஆனால் சிங்களவன் இந்தப் படத்தைக் காட்டி "புலிகளின் நினைவுத் தூபியை இடித்ததால் புலம்பெயர் புலி  ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!" என்று செய்தி போட்டாலும் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை!

நியாயத்திற்கும் அநியாயத்திற்குமிடையே நடுநிலை இல்லை! ஆனால், தவறான கருத்துப் பரவ இடங்கொடுக்கக் கூடாது என்ற பொதுப்புத்திசாலித்தனத்தைக் கோருவது தவறல்ல!

இதைத் தான் பந்தி பந்தியாக ருல்பென் விளக்க வேண்டியிருக்கிறது இங்கே!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

விசுகு உங்கள் கேள்வியை அப்படியே கடந்து சென்றுவிடலாம் என்று தான் முதல் நினைத்தேன். என்றாலும் மனச்சாட்சி விடவில்லை.

 உங்கள் எண்ணக்கருவின் அடிப்படையில் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தை செய்யலாமே! நானும் கலந்து கொள்கிறேன் என்று மிக இலகுவாக உங்களால் இன்று சுதந்திரமாக  கூறமுடிகிறது.

ஒரு காலத்தில் ஐரோப்பாவில் அவ்வாறு தமது எண்ணக்கருவின் அடிப்படையில் அரசியல் செய்ய முற்பட்டவர்களின்  கை, கால்கள் முறிக்கப்பட்ட போது நீங்களும் நானும் மௌனமாக அதை  அங்கீகரித்தோம். ஒவ்வொரு மே தினத்திலும்  அவ்வாறு ஊர்வலம் போன பலரின்  மண்டை உடைக்கப்பட்ட சம்பவங்கள்  இந்நாட்டு மீடியாக்களில் வரும் போது கூட  நாம் அனைவரும் மெளனம் காத்தோம். அவர்கள் செய்தால் சரியாக தானே இருக்கும் என று கூட நம்பினோம். 

இன்று மிக  இலகுவாக இப்படி கூற உங்களால் முடிகிறது. என்னால் அது முடியவில்லை.  

எப்பொழுதுமே

வெள்ளைத்திரையில்  தெரியும் கறுப்புப்புள்ளியையே  பார்த்து  பழகிவிட்டவர்கள்  எதையுமே செய்துவிடமுடியாது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எப்பொழுதுமே

வெள்ளைத்திரையில்  தெரியும் கறுப்புப்புள்ளியையே  பார்த்து  பழகிவிட்டவர்கள்  எதையுமே செய்துவிடமுடியாது.

ஒரு பெரிய கறுப்பு ஓட்டையை வெள்ளைத் திரையென்று பாராட்ட முடியாது! ஆனால், உங்களுக்கு அபிமானமான கொடி மட்டும் தெரிந்தால் போதுமென்ற மனப்பாங்கு இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

ஒரு பெரிய கறுப்பு ஓட்டையை வெள்ளைத் திரையென்று பாராட்ட முடியாது! ஆனால், உங்களுக்கு அபிமானமான கொடி மட்டும் தெரிந்தால் போதுமென்ற மனப்பாங்கு இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன்!

அது அபிமானக்கொடியா 

மானக்கொடியா என்பதை  முடிவு  செய்யவேண்டியது  அதை  தாங்கி  நிற்கும்  மக்களே

உங்களால் எதையுமு  செய்யமுடியாதபோது

செய்பவர்களை 

அதை  செய்யாதே

இதை  செய் எனச்சொல்ல  எந்த  அருகதையும் கிடையாது 

என்பது தான் ஆகுக்குறைந்த ஐனநாயகப்பண்பும்  கூட.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.