Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்.... நல்லதொரு பதிவிற்கு நன்றி. 
எனக்குத் தெரிந்தவர்கள்,  IT சம்பந்தப் பட்ட துறைகளில்,
கல்வி கற்காததால்... அவர்களுக்கு, இது சரிவராது என நினைக்கின்றேன்.

ம்..ம்ம்ம் 

அது வல்ல விஷயம்...

IT துறைக்கு வருவத்துக்கு.... அதில் தான் படிக்க வேண்டும் என்று இல்லையே... நீங்களும் கூட செய்யலாம். தேவையானால்.... உதாரணமாக, ஒரு இணைய தளத்தினை அமைக்க நீங்கள் இலகுவாக படித்துக் கொள்ளலாம். அதுதான் IT.  நீங்கள் வலைத்தளம் அமைத்து தரும் ஒரு வியாபாரத்தினை ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு வேலையில் சேரலாம்.

வெட்டி ஆடலாம் என்கிற மனம் தான் தேவை.

  • Replies 110
  • Views 14.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சரி ஜெட் வேண்டாம் ஒரு கப்பலாவது வாங்கி தேம்சில நிப்பாட்டுங்கோ, அடுத்த ஒன்றுகூடலை நடத்தலாம்🤣.

அமெரிக்கன் சீஈஓ எண்டால் கடுமையா வேலை வாங்குவாங்களே?

சம்பளம் கூட என்று அமெரிக்க கொம்பனிக்கு போய், இதுக்கு கேரளாவுக்கு அடிமாடாய் போகலாம் என்ற நிலைக்கு ஆகின சிலரை எனக்கு தெரியும்.

ஒப்பந்த வேலைக்கு போவதில்லை என்பது சரியான முடிவே.

ஒரு வயசுக்கு மேல் work-life balance ரொம்ப முக்கியம். Contract வேலையில் இது கஸ்டம்.

இப்போதைக்கு குளிக்கும் தொட்டிக்குள் காகிதக்கப்பல்தான் விடலாம்!🤣

தேம்ஸ் நதியில் கப்பல் என்ன ஒரு படகு வாங்கினாலே பாய்ந்து ஏற நதிக்கரையோரம் ஒருவர் காத்திருப்பார்😍 ஆனால் ஒன்றுகூடலில் படம் மட்டும் எடுக்கவிடமாட்டார்😜

கடுமையான வேலையை நாங்கள்தான் மற்றவர்களிடம் வாங்கவேண்டும். ஒரு சிலர் வாங்குகின்ற காசுக்கும், மேலே வரவேண்டும் என்பதற்கும், பலதையும் அறிந்து அனுபவத்தைக்  வேலை செய்வார்கள். ஒரு சிலர் ஐஸ் அடித்து ரைம்சீற்றில் கணக்குக் காட்டிவிட்டுப் போகப் பார்ப்பார்கள். எல்லா வகையினரையும் எப்படி சமாளிக்கவேண்டும் என்ற “கலை” தெரிந்தால் அடிமையாக வேலை செய்யவேண்டியதில்லை.

இப்போது தினமும் 11:30 இலிருந்து 13:30 வரை ஒருவர் ஒருவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தோடு 09:30 க்கும் 16:30 க்கும் 15 நிமிடங்கள் தியானவகுப்பு உள்ளது! நான் சனி, ஞாயிறு தியானிப்பதால் வேலையில் இன்னமும் தியானத்திற்குப் போகவில்லை. போனவர்கள் நல்லது என்றுதான் சொன்னார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

ம்..ம்ம்ம் 

அது வல்ல விஷயம்...

IT துறைக்கு வருவத்துக்கு.... அதில் தான் படிக்க வேண்டும் என்று இல்லையே... நீங்களும் கூட செய்யலாம். தேவையானால்.... உதாரணமாக, ஒரு இணைய தளத்தினை அமைக்க நீங்கள் இலகுவாக படித்துக் கொள்ளலாம். அதுதான் IT.  நீங்கள் வலைத்தளம் அமைத்து தரும் ஒரு வியாபாரத்தினை ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு வேலையில் சேரலாம்.

வெட்டி ஆடலாம் என்கிற மனம் தான் தேவை.

நான்... சிலோனிலை, பள்ளிக்கூடம் போன காலங்களிலேயே....
ஒழுங்காக  படிக்காத ஆள். படிப்பு.. என்றால், அப்பவே.... எனக்கு அலர்ஜி. :grin:

இப்ப.. என்னை, படிக்கச் சொன்னால்.. கெட்ட  கோவம் வரும். ஆமா...  🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

நான்... சிலோனிலை, பள்ளிக்கூடம் போன காலங்களிலேயே....
ஒழுங்காக  படிக்காத ஆள். படிப்பு.. என்றால், அப்பவே.... எனக்கு அலர்ஜி. :grin:

இப்ப.. என்னை, படிக்கச் சொன்னால்.. கெட்ட  கோவம் வரும். ஆமா...  🤣

உது படிப்பில்லை... பயிற்சி.. கண்டியலே.... கொத்துரொட்டி போட பழகுற மாதிரி 🤣

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

இப்போதைக்கு குளிக்கும் தொட்டிக்குள் காகிதக்கப்பல்தான் விடலாம்!🤣

தேம்ஸ் நதியில் கப்பல் என்ன ஒரு படகு வாங்கினாலே பாய்ந்து ஏற நதிக்கரையோரம் ஒருவர் காத்திருப்பார்😍 ஆனால் ஒன்றுகூடலில் படம் மட்டும் எடுக்கவிடமாட்டார்😜

கடுமையான வேலையை நாங்கள்தான் மற்றவர்களிடம் வாங்கவேண்டும். ஒரு சிலர் வாங்குகின்ற காசுக்கும், மேலே வரவேண்டும் என்பதற்கும், பலதையும் அறிந்து அனுபவத்தைக்  வேலை செய்வார்கள். ஒரு சிலர் ஐஸ் அடித்து ரைம்சீற்றில் கணக்குக் காட்டிவிட்டுப் போகப் பார்ப்பார்கள். எல்லா வகையினரையும் எப்படி சமாளிக்கவேண்டும் என்ற “கலை” தெரிந்தால் அடிமையாக வேலை செய்யவேண்டியதில்லை.

இப்போது தினமும் 11:30 இலிருந்து 13:30 வரை ஒருவர் ஒருவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தோடு 09:30 க்கும் 16:30 க்கும் 15 நிமிடங்கள் தியானவகுப்பு உள்ளது! நான் சனி, ஞாயிறு தியானிப்பதால் வேலையில் இன்னமும் தியானத்திற்குப் போகவில்லை. போனவர்கள் நல்லது என்றுதான் சொன்னார்கள்!

எல்லாம் படம் எடுத்து அதுநாளைக்கு பேப்பர்ல வதுட்டாலும் எண்ட பயம்தான்🤣.

பிரபல்யஸ்தர் என்றால் இப்படி சில தொல்லைகள் வழமைதானே.

நான் நீங்கள் வெண்முரசு படிக்கிறன் எண்டு சொல்லேக்கையே நினிச்சனான் இவர் வேலையை ஆரையோ வச்சு வாங்கிற ஆள் எண்டு 🤣. இல்லாட்டில் அதை படிக்க எங்க நேரம்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

நான்... சிலோனிலை, பள்ளிக்கூடம் போன காலங்களிலேயே....
ஒழுங்காக  படிக்காத ஆள். படிப்பு.. என்றால், அப்பவே.... எனக்கு அலர்ஜி. :grin:

இப்ப.. என்னை, படிக்கச் சொன்னால்.. கெட்ட  கோவம் வரும். ஆமா...  🤣

அண்ணை,

உப்பிடி எல்லாரும் நழுவினால் எப்படி? 

யார் நாளுக்கு £600 பவுண் வேலைக்கு போய், உழைச்சு, நல்ல கார் வாங்கி, தமிழினத்தை முன்னேற்றுவது?

தனிய நாதத்தால மட்டும் முடியுமே?

விசுகு அண்ணை பட்டும் படாமல் நழுவிற்றார்.

அக்கினி? ஜோக் எண்டு சொல்லாமல் ஜோக் அடிச்சிட்டு போய்ட்டார்.

அக்காச்சி? ஆர் யூ சீரியஸ் ? எண்டு விளங்காதமாரி நடிக்கிறா?

மருதர் வந்து அக்காச்சிய கலாய்ச்சிட்டு போட்டார்.

கிருபன் ஜி சம்பந்தமில்லாமல் அமெரிக்கன் சீ இ ஓ வை பற்றி கதைக்கிறார்.

இப்ப நீங்களும் இப்படிச் சொன்னால் - இந்த இனத்தை யார் தான் காப்பாற்றுவது?

யூடியூப் பாக்க தெரியுமோ?

நிகே போடுற சுண்டைகாய் சம்பல் வீடியோ மாரித்தான். 

வெளிக்கிடுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IT ல குப்பை கொட்டுற விவசாயி விக்கும், நிழலியும், மருதரும், முதல்வனும், இசைக்கலைஞனும்... 1000 முட்டை ஆமை கேசுகள். 

நான் ஒரு முட்டை கேசு. கூரையில் நின்டு கத்துவதன் காரணம்.... யாருக்காவது உதவும் எண்டு தான். 

அதுக்காக, அவர்கள் உதவ மாட்டார்கள் என்று இல்லை. யாராவது காலை முன்னுக்கு வந்தால், தான் எல்லோரும் வருவார்கள்.

நிழலியும் , கிருபனும் வந்தார்கள்.....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

கவலை படாதேங்கோ நாதம்,

உவையள் பின்னடிச்சாலும் முந்தி TNA க்கு ஈபிகாரர் ஆக்களை பிடிச்சமாரி கதற, கதற வண்டிலே ஏத்துறம், யூடிப்ப போடுறம், தமிழ் இனத்தை மீட்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

கவலை படாதேங்கோ நாதம்,

உவையள் பின்னடிச்சாலும் முந்தி TNA க்கு ஈபிகாரர் ஆக்களை பிடிச்சமாரி கதற, கதற வண்டிலே ஏத்துறம், யூடிப்ப போடுறம், தமிழ் இனத்தை மீட்கிறம்.

மொட்டை அடிச்சு வெயிலுக்க விட மாட்டீங்க தானே பொஸ்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

மொட்டை அடிச்சு வெயிலுக்க விட மாட்டீங்க தானே பொஸ்

🤣 மீரா வேலணை காம்பில நிண்ட ஆள் போல கிடக்கு🤣

மொட்டை வெய்யில் மட்டும் இல்லை - வெள்ளை அரைக்கை பனியன், காக்கி டவுசர், டெனிஸ் சப்பாத்து எல்லாம் உண்டு🤣

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சம்மரில் Udemy இல்  Python Bootcamp From Zero to Hero in Python எனும் course ஐ £10 (என்று நினைக்கின்றேன்) செலுத்தி 16 வயது மகனும் நானும் கற்றோம்.

https://www.udemy.com/share/101W94BUoddFdbTXg=/

மூளைக்கு வேலை கொடுப்பதில் ஆர்வம் இருந்தால் எதுவித அடிப்படையும் இல்லாமல் கற்கலாம். பல வீடியோக்களும், பயிற்சிகளும் உள்ளன. திரும்ப திரும்பக் கற்கலாம்.

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கடந்த சம்மரில் Udemy இல்  Python Bootcamp From Zero to Hero in Python எனும் course ஐ £10 (என்று நினைக்கின்றேன்) செலுத்தி 16 வயது மகனும் நானும் கற்றோம்.

https://www.udemy.com/share/101W94BUoddFdbTXg=/

மூளைக்கு வேலை கொடுப்பதில் ஆர்வம் இருந்தால் எதுவித அடிப்படையும் இல்லாமல் கற்கலாம். பல வீடியோக்களும், பயிற்சிகளும் உள்ளன. திரும்ப திரும்பக் கற்கலாம்.

ஏன் அங்கை போய் காசை கொடுப்பான்.

முதலாவது 21M  பெரும், இரண்டாவதை 15M பேரும் பார்த்திருக்கினமே. 👍

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கை எனக்கு ஒன்டும் இல்லை.அங்கால போய் பாப்பம் ஆடு மாடு ஏதாவது நிக்குதோ என்டு.🤣

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

ஏன் அங்கை போய் காசை கொடுப்பான்.

முதலாவது 21M  பெரும், இரண்டாவதை 15M பேரும் பார்த்திருக்கினமே. 👍

நான் அதிகம் பணம் செலவழிக்காமல் பாவித்ததைத்தான் மேலே தந்துள்ளேன். 

பல்லாயிரம் வீடியோக்கள் உள்ளன. இவற்றின் மூலம் Python 🐍 என்றால் என்ன என்ற அடிப்படையை அறியலாம்.  ஆனால் அதில் நல்ல பயிற்சிகளையும், நுணுக்கங்களையும் அறிந்து வேலை ஒன்று தேடுமளவிற்கு போகவேண்டுமானால் structured ஆன course செய்யவேண்டும். Coursera இலும் பல உள்ளன. 

பின்வருவனவும் நான் ஓரளவு பாவித்திருந்தேன்.

Python 2: https://learnpythonthehardway.org/book/

Python 3 க்கு $29.99 பணம்  கேட்கின்றார்கள்.

HOW TO CREATE A WEBSITE

https://websitesetup.org

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

என்ர மூத்தவன் master 2  முடிச்சு வேலைக்கு போய் 7 வருசமாகுது

ஆனால் எப்பவும் படித்தபடியே தான்  இருப்பான்

அடிக்கடி பரீட்சை இருக்கு  படிக்கணும் என்பான்

எனது இலக்குக்கு அவன் படித்து  விட்டதால்

அதுக்கு பின்னர்  என்ன படிக்கிறாய் என்ன  பரீட்சை  என்று  கேட்பதில்லை

இதுகள் போலத்தான் கிடக்கு

கேட்கலாம் தான்

ஆனால்  ரதி  சொன்ன மாதிரி நமக்கு  புரியணுமே????

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

என்ர மூத்தவன் master 2  முடிச்சு வேலைக்கு போய் 7 வருசமாகுது

ஆனால் எப்பவும் படித்தபடியே தான்  இருப்பான்

அடிக்கடி பரீட்சை இருக்கு  படிக்கணும் என்பான்

எனது இலக்குக்கு அவன் படித்து  விட்டதால்

அதுக்கு பின்னர்  என்ன படிக்கிறாய் என்ன  பரீட்சை  என்று  கேட்பதில்லை

எந்தத் துறையானாலும் கற்றல் எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும். மாறும் தொழில்நுட்பங்களை பயிலாமால் வேலையில் நீடிப்பது இலகு இல்லை. மேலாளாராக, நிறுவனராக வந்தாலும் கீழே உள்ளவர் சொல்வதைப் புரிந்து விரைவாக முடிவெடுக்கவேண்டிய தலைகளும் தொடர்ந்து பயிலத்தான் வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எந்தத் துறையானாலும் கற்றல் எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும். மாறும் தொழில்நுட்பங்களை பயிலாமால் வேலையில் நீடிப்பது இலகு இல்லை. மேலாளாராக, நிறுவனராக வந்தாலும் கீழே உள்ளவர் சொல்வதைப் புரிந்து விரைவாக முடிவெடுக்கவேண்டிய தலைகளும் தொடர்ந்து பயிலத்தான் வேண்டும்!

ஆல்வின்_டொஃப்லர்_ எதிர்கால அதிர்ச்சி_கோட்_இல்லிடரேட்_இகோர்_பியூகர்

 நாம் நேற்று கற்றது இன்றைக்கு உண்மையில்லை.
இன்றைக்கு விழுந்து விழுந்து கற்றுக்கொள்வது நாளைக்கு மாறிவிடும்.
ஏறக்குறைய எல்லாத்துறைகளிலுமே இந்த நிலைதான் பாஸ் 
நின்றால் விழுந்துவிடுவோம்  தினமும் ஓட வேண்டும் இதுதான் இந்த 21 நூறாண்டின் பெரும் சோகம் என்கிறார் ஆல்வின் தாத்தா .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

இதுக்கை எனக்கு ஒன்டும் இல்லை.அங்கால போய் பாப்பம் ஆடு மாடு ஏதாவது நிக்குதோ என்டு.🤣

கொஞ்சம் திரும்பி பாருங்க பின்னாலதான் நான் நிற்கிறன்  பற்றைக்குள்ளால மறையக்க ஒரு சவுண்ட் தாங்க இல்லாட்டால் பாதை மாறிடும் 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சம் திரும்பி பாருங்க பின்னாலதான் நான் நிற்கிறன்  பற்றைக்குள்ளால மறையக்க ஒரு சவுண்ட் தாங்க இல்லாட்டால் பாதை மாறிடும் 😀

இந்த மாதிரி நினைத்துக் கொண்டு பயந்து தான் பலர் வெளியே, இருக்கிறார்கள். நானும் கூட, ஆரம்பத்தில் பயந்தேன்.

பாய்ந்த பின்னர் தான் புரியும், அட, இவ்வளவு தானா என்று...

ஒரு அரைமணிநேரம், அக்கினியோட பேசி, என்ன செய்கிறார், என்ன விளையாட்டு என்று கேளுங்கள். அதன் பின்பு, தெளிவும், பாதையும் பிறக்கும்.

இங்கே, நானும், கிருபனும் பகிர்ந்து கொண்ட python  ப்ரோக்ராமிங் language  இல்லை IT. சாதாரணமான இணைய தள  அமைப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் கூட IT  வகை தான். அவைகளை புரிந்து செய்ய, 10ம் வகுப்பறிவே  கூடிப்போச்சு.

தமிழ்சிறியர், கெட்ட கோபம் வந்தாலும், 70 வயதுக்காரர், இணையத்தளம் அமைக்க அண்மையில் படித்து, தனது வித்தையினை காட்டினார். அசந்து போனேன்.   

துணிந்தால், முடியாதது எதுவுமே இல்லை.

*****
database படிக்கும் போது, columns, raws படிப்பிக்கும் போது, விளங்கிக் கொள்ள, கஷ்ட்டப்படும் மாணவருக்கு, அருமையாக ஒரு தமிழக குரு சொல்லி கொடுத்தார், YT ல்:

ஏம்பா  புரியலையா, இத பாரு...: நின்னா column, படுத்தா raw. புரியுதா?

சிரித்துக் கொண்டே தலை ஆட்டினார் மாணவர்.

விளையாட்டாக, சிரித்துக் கொண்டே படிக்கலாம்.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சம் திரும்பி பாருங்க பின்னாலதான் நான் நிற்கிறன்  பற்றைக்குள்ளால மறையக்க ஒரு சவுண்ட் தாங்க இல்லாட்டால் பாதை மாறிடும் 😀

என்ரை மனதில் நீங்கள் எப்பவும் இரக்கிறீகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இணைவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதம் இப்படி ஒரு திரியை தொடங்கியதற்கு.

Robotic Process Automation(RPA)

Digital Proccess Automation (DPA)

Business Process Management (BPM) போன்ற துறைகளும் நல்லா வளர்ந்து வருகின்றன.

இலவச /கட்டண  இணையவழி கல்வி சான்றிதழ்களும் அந்த துறைசார் நிறுவனங்களால் வழங்கபடுவதும் சிறப்பம்சம்.

இங்கிலாந்தில் Blue Prism

ஐரோப்பா மற்றைய நாடுகளில் UiPath

அமெரிக்கா மற்றும் சுவிசில் Automation Anywhere 

இதைவிட Softmotive இனை அண்மையில் வாங்கிய Microsoft இன் Power Automate போன்ற Tools முதன்மையானவை. அதிக வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருகின்றன.

Pegas 

IBM

Bizagi (UK Based Tool) போன்ற Tools BPM DPM போன்ற துறைகளுக்கு முன்னணியில் இருக்கின்றன.

மேலே சொன்ன Tools இனை Google இல் தேடினாலே அதே நிறுவங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இலவச / கட்டண ஒழுங்கமைக்கப்பட்ட பாடத்திட்டங்களை காணலாம்.

வேலை வாய்ப்புக்கு RPA Developer அல்லது Intelligent Automation Developer அல்லது RPA Architect இப்படி தேடி பாருங்கள் எண்ணற்ற வேலைகள் கொட்டி கிடக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு Robot இது தான் அவர்களின் தாரக மந்திரம்.

வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் நாதம் நான் என் ஓய்வு நேரங்களில் உதவ தயார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2021 at 00:07, Nathamuni said:

இந்த மாதிரி நினைத்துக் கொண்டு பயந்து தான் பலர் வெளியே, இருக்கிறார்கள். நானும் கூட, ஆரம்பத்தில் பயந்தேன்.

பாய்ந்த பின்னர் தான் புரியும், அட, இவ்வளவு தானா என்று...

ஒரு அரைமணிநேரம், அக்கினியோட பேசி, என்ன செய்கிறார், என்ன விளையாட்டு என்று கேளுங்கள். அதன் பின்பு, தெளிவும், பாதையும் பிறக்கும்.

இங்கே, நானும், கிருபனும் பகிர்ந்து கொண்ட python  ப்ரோக்ராமிங் language  இல்லை IT. சாதாரணமான இணைய தள  அமைப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் கூட IT  வகை தான். அவைகளை புரிந்து செய்ய, 10ம் வகுப்பறிவே  கூடிப்போச்சு.

தமிழ்சிறியர், கெட்ட கோபம் வந்தாலும், 70 வயதுக்காரர், இணையத்தளம் அமைக்க அண்மையில் படித்து, தனது வித்தையினை காட்டினார். அசந்து போனேன்.   

துணிந்தால், முடியாதது எதுவுமே இல்லை.

*****
database படிக்கும் போது, columns, raws படிப்பிக்கும் போது, விளங்கிக் கொள்ள, கஷ்ட்டப்படும் மாணவருக்கு, அருமையாக ஒரு தமிழக குரு சொல்லி கொடுத்தார், YT ல்:

ஏம்பா  புரியலையா, இத பாரு...: நின்னா column, படுத்தா raw. புரியுதா?

சிரித்துக் கொண்டே தலை ஆட்டினார் மாணவர்.

விளையாட்டாக, சிரித்துக் கொண்டே படிக்கலாம்.  

நான் கணனியை கற்றுக்கொண்டதே இணையத்தில்தான் நாதா கணனி பற்றி 3 கால படிப்பு அது டைப்பிங் , எக்ஸ்செல் அப்படி இப்படியென தற்போது கூகிள் , யூ டியுப்பால் கொஞ்சம் கொஞ்சமாக என்னை வளர்த்து வருகிறேன் இப்பவரைக்கும் நீங்கள் சொன்னத்திற்கு செல்ல காலம் எடுக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2021 at 01:35, சுவைப்பிரியன் said:

என்ரை மனதில் நீங்கள் எப்பவும் இரக்கிறீகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இணைவோம்.

 நன்றி வாய்ப்புக்கள் கிடைத்தால் சந்திப்போம் .

யாழ்ப்பாணம் வந்த போது உங்களை விசாரித்தேன் நீங்கள் அந்த் அந்நேரம் கொழும்பில் என ஜீவன் அண்ண  சொன்னது ஞாபகம்.  

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு பணம் தேவை?
இந்த கேள்விக்கு தெளிவான பதில் தெரியாதவனிடம் 
நீங்கள் ஒரு மில்லியன் டொலரை கொடுத்தாலும். அவனது வாழ்க்கை 
நீங்கள் காசு கொடுக்கும் முன்பு இருந்ததை விட கீழாகவே நிச்சயம் இருக்கும்.
இதுக்கு புலம்பெயர்ந்த 90 வீதமான தமிழர்கள் சாட்சி.

80 களில் இலங்கையில் லட்ச்சாதிபதி என்று கேள்வி பட்டு இருக்கிறோம் 
யாரும் லட்ஷ ரூபாவை பார்த்ததில்லை. இன்று புலம்பெயர்ந்த அனைவரது 
மாதாந்த வருமானம் 2 லட்ஷங்களுக்கும் மேல். ஆனாலும் வாழ்க்கை தராதரம் என்பது 
கீழாகவே இருக்கிறது. 

பணம் பார்க்கலாம் என்பதுக்காக படிக்கிறவன் படிக்க்காமலே இருக்கலாம்.
இலடசியங்கள் குறிகோளுக்களை அடைய வழி தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கே 
இதுமாதிரியான யுத்திகள் உதவும் என்பதைவிட முதலில் புரியும். 

உலக ஜனாதிபதிகள்  கோடீஸ்வரர்கள்  விஞ்ஞானிகள்  விளையாட்டு வீரர்கள் 
விபச்சாரிகள் பூசாரிகள்  பிச்சைக்காரர்கள்  கூலி தொழிலாளர்கள் எல்லோருக்குமே 
எந்த பாகுபாடும் இன்றி ஓவருவருக்கும் ஒவ்வரு நாளும் 24 மணித்தியாலங்கள் 
வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த மணி நேரங்களில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே 
உங்களின் அடுத்த வருட வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. 

அடுத்த வருடம் 
ஆரோக்கியமாக வாழ விரும்புகிறீர்களா? 
அதிக பணம் சம்பாதித்து வாழ்க்கை தராதரத்தை உயர்த்த விரும்புகிறீர்களா? 
உலக ஊர்களை எல்லாம் சுற்றி பார்க்க விரும்புகிறீர்களா? 

இன்றைய உங்கள் 24 மணி நேரத்தில் அதற்க்காக எத்தனை மணியை 
முதலீடு செய்கிறீர்கள் என்பதில்தான் அது தங்கி இருக்கிறது. 

நாதமுனி கிருபன் போனற்வர்களால் உங்களுக்கு வழிகளைத்தான் சொல்ல முடியும் 
உங்களுக்காக அவர்களால் படிக்கவோ உடற்பயிற்சி செய்யவோ முடியாத ஒரு 
இக்கட்டான நிலை உலகில் இருப்பதை புரிந்துகொள்ளுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள தகவல்கள் நாதமுனி, மற்றும் கருத்தாளர்களுக்கு நன்றி . அடுத்த 15 வருடத்தில் வளர்ச்சி காணவிருக்கும் சில தொழில் நுட்பங்கள்:
1. மாற்று எரிபொருள் (eg Hydrogen energy)
2. 5G, 6G
3. AI
4. Nano technology etc

இன்றைய இளம் தலைமுறையினர் இந்த துறைகள் சார்ந்தும் படிக்கலாம்.நீண்ட கால வளர்ச்சிக்கு  உறுதுணையாக இருக்கும். இவை அனைத்திற்கும் மென் பொருளின் பாவனைகள்  மிக மிக அவசியம்.

 90 இல்  இலத்திரனியல் படித்தேன், Power Electronics இல் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வேலை செய்கின்றேன். 90 இல் இருந்த தொழில் நுட்பம் இப்போ நன்றாக மாறி விட்டது. உதாரணமாக இந்த மாற்றங்களில் சிலவற்றை கற்றதால் (medical LASER (Ruby, YAG ), IPL, SMPS, Power factor correction, LABVIEW etc) மேலும் அடுத்த 10 வருடங்களுக்கு இந்த துறையில் நீடிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வளவு உடலை வருத்த தேவையில்லை.

மேலே பலர் சொன்னது போல், உங்கள் வேலை அன்றாட தேவைகளுக்கு பயன்படும்  பயிட்சிகளை பெறுங்கள் , உதாரணம் கணக்கியல் XERO , நீங்கள் சிறு நிறுவனம் வைத்திருந்தால் அதன் கணக்கு வழக்குகளை நீங்களே பார்க்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.