Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மதுரை அருகே பிரமாண்ட கோவில்.. முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மதுரை அருகே பிரமாண்ட கோவில்.. முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்.!

jayalalitha-mgr-statue-1611983301.jpg

மதுரை: மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சிலைகள் அமைக்கப்பட்டு, அவர்களுக்காகவே ஒரு கோவில் மதுரை அருகே அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.

தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இப்படி ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளதாம்

வெண்கல சிலைகள்

இந்த கோவிலில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆருக்கு சிலைகள் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் சுமார் 400 கிலோ எடை கொண்டது. முழு உருவ வெண்கல சிலையாக நிறுவப்பட்டு உள்ளன. இந்த கோவிலை அமைக்க ரூ.50 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 

கோவில் திறப்பு விழா

இந்த கோவில் திறப்பு விழா இன்று காலை நடக்கிறது. அதற்காக யாக சாலை பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை 10.30 மணிக்கு இந்த கோவிலை திறந்து வைக்கின்றனர்.

சாதனை விளக்கம்

இதன்பிறகு நடைபெறும் கோ பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். தொடர்ந்து அவர், கட்சியி்ன் மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குகி பாராட்டுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில் முதல்வர், தமிழக அரசின் சாதனை திட்டங்கள் குறித்து விளக்கி பேச உள்ளார். பின்னர் விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

தியாகத்திற்கு பரிசு

வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறதா ? என்று நிருபர்கள் கேட்டதற்கு, 'எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் நிறைய தியாகம் செய்துள்ளனர், நாங்கள் அவர்களை கடவுள் என்று கருதுகிறோம்' என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

பாசக்காரங்க

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா கடந்த 27ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க ஒரு ரயில் நிறைய ஆட்களை அழைத்துச் சென்றார் அமைச்சர் செல்லூர் ராஜு. மதுரைக்காரங்க பாசக்காரங்க என்று அதற்கு விளக்கமும் கொடுத்தார். இப்போது அதே மதுரை பக்கம், ஜெயலலிதாவுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தாய் பாசத்தில் எங்கேயோ போய்விட்டார்கள் மதுரை கட்சி பிரபலங்கள் என்கிறார்கள் தொண்டர்கள்.

https://tamil.oneindia.com/news/madurai/temple-dedicated-to-jayalalithaa-mgr-to-be-inaugurated-today-410418.html

டிஸ்கி:

இந்த நாடு முன்னேறும் என்டு நான் நினைக்கல.. நீங்க.? 👍

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்த நாடு முன்னேறும் என்டு நான் நினைக்கல.. நீங்க.? 👍

சிந்திக்கும் அறிவு இன்றி தனி மனிதனை தூக்கி கொண்டாடிய எந்ந இனமும் முன்னேறியதில்லை என்பதற்கு தமிழ் இனமே உதாரணம். அதை விட வேறு உதாரணம் தேவையில்லை. அது தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலும் அது தான் நிலமை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சிந்திக்கும் அறிவு இன்றி தனி மனிதனை தூக்கி கொண்டாடிய எந்ந இனமும் முன்னேறியதில்லை என்பதற்கு தமிழ் இனமே உதாரணம். அதை விட வேறு உதாரணம் தேவையில்லை. அது தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலும் அது தான் நிலமை.

அப்போ எப்படி உருசியா முன்னேறியது? சீனா எப்படி முன்னேறியது லெனினும் மாசேதுங்கும் தனி மனிதர்கள் இல்லையா? உங்கள் அறிவுக்கு எட்டிய இன்றுவரைக்கும், தமினத்திற்குச் சிந்திக்கும் அறிவாற்றல் இல்லையா?? 🤔

Quellbild anzeigen

Quellbild anzeigen

7 minutes ago, Paanch said:

அப்போ எப்படி உருசியா முன்னேறியது? சீனா எப்படி முன்னேறியது லெனினும் மாசேதுங்கும் தனி மனிதர்கள் இல்லையா? உங்கள் அறிவுக்கு எட்டிய இன்றுவரைக்கும், தமினத்திற்குச் சிந்திக்கும் அறிவாற்றல் இல்லையா?? 🤔

Quellbild anzeigen

Quellbild anzeigen

பாஞ்ச்,

இந்த மனிதர்களின் பின்னால் சீனாவோ ரஷ்யாவோ தொங்கிகொண்டிருக்கவில்லை. லெனின் உருவாக்கிய சோவியத் யூனியன் தனது தவறுகளால் உடைந்து சின்னாபின்னமாகிவிட்டது. ரஷ்யா இன்று முதலாளித்துவ நாடாகவே உள்ளது. சீனா இன்று கம்யூனிச கொள்கைகளை விட்டு பல்தேசிய கம்பனிகளை உருவாக்கி ஐரோப்பாவில் சந்தைகளை உருவாக்க எப்பவோ தொடங்கிவிட்டது. 

சீனாவின் இன்றைய கொள்கை முழுக்க முழுக்க வர்த்தகமே.  அதற்கு காரணம் ஒரு அமைப்பின் இத்து போன கொள்கைகளில் தொங்கி கொண்டு இருக்காமல் தம்மை முன்னேற்றியதே. சீனாவின் பொருளாதரார கொள்கைகளில் முழு உடன்பாடு இல்லாவிடினும் அதுவே உண்மை. 

Edited by tulpen
பிற்சேர்க்கை

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

பாஞ்ச்,

இந்த மனிதர்களின் பின்னால் சீனாவோ ரஷ்யாவோ தொங்கிகொண்டிருக்கவில்லை. லெனின் உருவாக்கிய சோவியத் யூனியன் தனது தவறுகளால் உடைந்து சின்னாபின்னமாகிவிட்டது. ரஷ்யா இன்று முதலாளித்துவ நாடாகவே உள்ளது. சீனா இன்று கம்யூனிச கொள்கைகளை விட்டு பல்தேசிய கம்பனிகளை உருவாக்கி ஐரோப்பாவில் சந்தைகளை உருவாக்க எப்பவோ தொடங்கிவிட்டது. 

உடைந்தாலும், சிதறினாலும் அந்த இரண்டு நாடுகளும், இன்றும் உலக வல்லரசுகளாகத் திகழ்கின்றனவே!! 

2 minutes ago, Paanch said:

உடைந்தாலும், சிதறினாலும் அந்த இரண்டு நாடுகளும், இன்றும் உலக வல்லரசுகளாகத் திகழ்கின்றனவே!! 

அதற்கு காரணம் நிச்சயமாக அந்த தனி மனிதர்கள் அல்ல.  அவர்கள் அந்த தனி மனிதரிலு தொங்கி கொண்டிருந்தால் முன்னேறியிருக்க மாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

உடைந்தாலும், சிதறினாலும் அந்த இரண்டு நாடுகளும், இன்றும் உலக வல்லரசுகளாகத் திகழ்கின்றனவே!! 

பெருமளவு அணுவாயுதங்களை அந்த நாடுகள் வைத்திருக்கின்றன. இந்தியாவிடமும் அணுவாயுங்கள் உள்ளன. இந்தியாவும் வல்லரசு, ஆனால் அதை காட்டிக்கொள்வதில்லை. அதற்கு காரணம் இந்தியாவின் எதிரிகளிடம் அதிகளவு அணுவாயுதங்கள் இருப்பதே. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ். அது தனது இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று இணையான கூறுகளுடன், இன்று பட்டி மன்றத்தையும் இணைக்கலாம்போல் தெரிகிறது. பட்டி மன்றத்தில்  தாய்ப்பால் பிள்ளைக்கு விடமா? இல்லையா? என்ற தலைப்பிட்டுப் பேசவிட்டால்...! விடம்தான் என்று ஆணித்தரமாக  அனைவரும் நம்பும்படி பேசுவதற்குரிய சொற்களையும் தமிழ் கொண்டுள்ளது.!!

  • கருத்துக்கள உறவுகள்

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மதுரை அருகே பிரமாண்ட கோவில்.. முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்.!

தமிழ்நாட்டு ஆன்மிகவாதிகள் எல்லாம் தங்களது கடவுளை இந்த தரத்தில் தான் வைத்திருந்து வணங்கி வந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Paanch said:

உடைந்தாலும், சிதறினாலும் அந்த இரண்டு நாடுகளும், இன்றும் உலக வல்லரசுகளாகத் திகழ்கின்றனவே!! 

ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்திலும் ஒரு தனிநபர் பின்னணி/ வழிகாட்டிகள் இருந்தே தீரும்.
ஆனால் இந்தியாவில் தனி மனித அதிகப்பிரசங்கித்தனம் எக்கச்சக்கம்.உதாரணத்துக்கு பெரியாரை தலையில் வைத்து கொண்டாடுவது.😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கற்பகதரு said:

பெருமளவு அணுவாயுதங்களை அந்த நாடுகள் வைத்திருக்கின்றன. இந்தியாவிடமும் அணுவாயுங்கள் உள்ளன. இந்தியாவும் வல்லரசு, ஆனால் அதை காட்டிக்கொள்வதில்லை. அதற்கு காரணம் இந்தியாவின் எதிரிகளிடம் அதிகளவு அணுவாயுதங்கள் இருப்பதே. 

இந்தியாவிட்டை அணு ஆயுதம் இருக்கு ஓகே...
இந்தியாவும் வல்லரசு ஓகே…ஆனால்
இந்தியாவிலை எல்லார் வீடுகளிலும் கக்கூஸ் இருக்கா? எல்லா மக்களும் மூன்று வேளை சாப்பிட உணவு இருக்கா? ஒழுங்கான குடி தண்ணீர் இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

சிந்திக்கும் அறிவு இன்றி தனி மனிதனை தூக்கி கொண்டாடிய எந்ந இனமும் முன்னேறியதில்லை என்பதற்கு தமிழ் இனமே உதாரணம். அதை விட வேறு உதாரணம் தேவையில்லை. அது தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலும் அது தான் நிலமை.

நீங்க இப்ப என்ன சொல்ல வாறீங்க... 

நீங்க யதார்ர்த்தவாதி என்று சொல்லுறீங்களா

அல்லது

பிரபாகரன் முட்டாள் என்று சொல்ல வாறீங்களா..

புரியலீயே.. 🤥

3 minutes ago, Kapithan said:

நீங்க இப்ப என்ன சொல்ல வாறீங்க... 

நீங்க யதார்ர்த்தவாதி என்று சொல்லுறீங்களா

அல்லது

பிரபாகரன் முட்டாள் என்று சொல்ல வாறீங்களா..

புரியலீயே.. 🤥

நான் யாரையும் அப்படி குறிப்பிடவில்லை. எனது கருத்து தனி மனிதரில் இருக்கும் மரியாதை என்பது வேறு. விமர்சனமின்றி கண்மூடித்தனமாக ஒருவரை தூக்கி கொண்டாடும் மனநிலை தவறானது என்பதேயாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவிட்டை அணு ஆயுதம் இருக்கு ஓகே...
இந்தியாவும் வல்லரசு ஓகே…ஆனால்
இந்தியாவிலை எல்லார் வீடுகளிலும் கக்கூஸ் இருக்கா? எல்லா மக்களும் மூன்று வேளை சாப்பிட உணவு இருக்கா? ஒழுங்கான குடி தண்ணீர் இருக்கா?

பெரியவா..

யாம் இப்படி போட்டுடைப்பது சரியாமோ...

எதற்கெடுத்தாலும் புலிகளில் பிழை பிடிக்கும் அளவுக்கு துல்பனுக்கு அவர் குறூப்புக்கும் புலிகளின் மீதான வெறுப்பு அவர்களின் இரத்தத்தில் ஊறிவிட்டது. 

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு மிக முக்கிய காரணம்  இந்தியாதான் என்று சிங்களம் கூறினாலும் சிங்களம் கூறியதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புறந்தள்ளிவிட்டு புலிகளின் அழிவுக்கு புலிகள்தான் காரணம் என கூறும் மனனிலையை என்ன சொல்வது...🤥

1 hour ago, tulpen said:

நான் யாரையும் அப்படி குறிப்பிடவில்லை. எனது கருத்து தனி மனிதரில் இருக்கும் மரியாதை என்பது வேறு. விமர்சனமின்றி கண்மூடித்தனமாக ஒருவரை தூக்கி கொண்டாடும் மனநிலை தவறானது என்பதேயாகும். 

அதாகப்பட்டது..

நீங்கள் யதார்த்தவாதி.. 

பிரபாகரன் முட்டாள்.. ம்ம்ம்ம்ம்

எப்போது பிரபாகரனை துரோகியென்று கூறுவதாக உத்தேசம்... 🤥

வெகு விரைவில் அதும் நிகழும். 

😏

11 minutes ago, Kapithan said:

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு மிக முக்கிய காரணம்  இந்தியாதான் என்று சிங்களம் கூறினாலும் சிங்களம் கூறியதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புறந்தள்ளிவிட்டு புலிகளின் அழிவுக்கு புலிகள்தான் காரணம் என கூறும் மனனிலையை என்ன சொல்வது...🤥

விடுதலைப்புலிகளின் அழிவுக்கு புலிகள் எதிரிக்கு மிக அதிகமாக உதவிகளை செய்தார்கள் என்று தான் குறிப்பிட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

சிந்திக்கும் அறிவு இன்றி தனி மனிதனை தூக்கி கொண்டாடிய எந்ந இனமும் முன்னேறியதில்லை என்பதற்கு தமிழ் இனமே உதாரணம். அதை விட வேறு உதாரணம் தேவையில்லை. அது தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலும் அது தான் நிலமை.

டூல்பான் உங்கள் கருத்து சிலவேளை சரியாக இருந்தாலும், முழுதாக கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே.

ஒருவரிலேயே தொங்கிக் கொண்டிருக்க, தனிமனித வாழ்வு நிரந்தரமானதல்ல. அதேவேளை தனிமனிதன் கருத்து தான் உலகமெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

புத்தராகட்டும், நபிகள் நாயகம் ஆகட்டும், ஜீசஸ் ஆகட்டும், அவர்கள் சொன்னவை தனி மனித கருத்துக்கள்.

நீங்கள் எழுதும் ஹிட்லரும், லெனினும், மாவோவும் உருவாக்கிய கருத்தலைகள் அவர்கள் காலத்தில், மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

பின்னர், அவை தவறான கருத்துக்கள் என்று நிரூபணமானாலும், ஹிட்லரும், லெனினும், தமது நாடுகளில் சர்வாதிகார மன்னர் ஆட்சிக்கு முடிவுரை எழுதியவர்கள் என்பதை மறுக்க முடியாது. 

இன்னோருவகையில்  பார்த்தீர்களானால், சர்வதேச பார்வையில், புலிகள் தமிழர்களுக்கு எவ்வளவு சுமையாக இருந்தார்களோ, அதுபோல, சிங்கள மக்கள் ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்த ராஜபக்சே சகோதரர்கள், இன்று அவர்களின் பெரும் சுமையாக உருவாகி உள்ளனர். இந்த வகையில் உங்கள் கருத்து சரியானது.

இன்னோரு அப்பாவித்தனமான கேள்வி.... அதெப்படி, உங்கள் கருத்துக்கள் அனைத்துமே, கேள்விகள் இல்லாமல், விளங்கிகொண்டு, 'விளங்க நினைப்பவன்' ஓடியாந்து, லைக் அடிக்கிறார். 🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எம்ஜியாரீஸ்வரர்  ஜெயலலிதாம்பாள் சமேதரராக காட்சியளிகின்றார்.  

நன்றாக இருக்கின்றது. 

கோ பூஜை நடாத்தி பாஜகவை மகிழ்விக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முனைவது சிறப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்த நாடு முன்னேறும் என்டு நான் நினைக்கல.. நீங்க.? 👍

எம.ஜி.ஆர் .போன்ற..தலைவரை உருவாக்குங்கள் ..நிச்சயம்..தமிழ்நாடு மட்டுமல்ல..இந்தியாவே முன்னேறும்..எம்.ஜி.ஆர்..இறந்திருக்கலாம்..ஆனால்..அவரது  சிந்தனைகளும்..செயற்ப்பாடுகளும்..வாழ்ந்துகொண்டிருக்கிறது..அது என்றும் வாழும்..அவருக்கு. சிலை எழுப்பவேண்டிய அவசியமில்லை. அதுவும் ஒரு மாநிலயரசு...இதைவிட..அவர் சிந்தனைகளை..செயற்படுத்தியிருக்கலாம்...இப்படிச். செய்து..அவரது. சிந்தனைகளையும்..செயற்ப்பாடுகளையும்..கேவலப்படுத்திவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

சிந்திக்கும் அறிவு இன்றி தனி மனிதனை தூக்கி கொண்டாடிய எந்ந இனமும் முன்னேறியதில்லை என்பதற்கு தமிழ் இனமே உதாரணம். அதை விட வேறு உதாரணம் தேவையில்லை. அது தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலும் அது தான் நிலமை.

ஈழத்தில் யாரை தனிமனித வழிபாட்டில் கொண்டாடினார்கள் ?

6 hours ago, tulpen said:

நான் யாரையும் அப்படி குறிப்பிடவில்லை. எனது கருத்து தனி மனிதரில் இருக்கும் மரியாதை என்பது வேறு. விமர்சனமின்றி கண்மூடித்தனமாக ஒருவரை தூக்கி கொண்டாடும் மனநிலை தவறானது என்பதேயாகும். 

இரண்டாவது பதிலில் யாரையும் குறிப்பிடாமல் முதலாவதை யாரை நோக்கி குறிப்பிடப்பட்டது ?

4 hours ago, tulpen said:

விடுதலைப்புலிகளின் அழிவுக்கு புலிகள் எதிரிக்கு மிக அதிகமாக உதவிகளை செய்தார்கள் என்று தான் குறிப்பிட்டேன். 

முதல் இரண்டு பதிலுக்கும் சம்பந்தம் இல்லாமல் புலிகள் .

இந்த உலகு தோன்றிய காலம் தொட்டு தனிமனிதர்களே  மக்கள் கூட்டம்களை வழி  நடத்தியது உண்டு பல நூறு உதாரணம்கள் உண்டு .

4 minutes ago, பெருமாள் said:

ஈழத்தில் யாரை தனிமனித வழிபாட்டில் கொண்டாடினார்கள் ?

இரண்டாவது பதிலில் யாரையும் குறிப்பிடாமல் முதலாவதை யாரை நோக்கி குறிப்பிடப்பட்டது ?

முதல் இரண்டு பதிலுக்கும் சம்பந்தம் இல்லாமல் புலிகள் .

முதலாவது பதில் புரட்சிகர தமிழ் தேசியனுக்கு கொடுக்கப்பட்டது. 

இரண்டாவதும் மூன்றாவதும் கபிதன் கேட்ட கேள்விக்கு கொடுக்கபட்ட பதில். 

கேட்கப்பட்ட கேள்விக்கு தான் பதில் எழுத முடியும். கேள்விகளை  வாசிக்காமல்  பதிலை மட்டும் வாசிப்பீர்களா?

ஆனால், வாசிக்கும் வாசகர்கள் புத்திசாலிகள். அப்படி செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் ஒரே வகையே என்பதை அறிந்துகொள்ள முடியவில்லையா  உங்களால் ?

4 minutes ago, பெருமாள் said:

உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் ஒரே வகையே என்பதை அறிந்துகொள்ள முடியவில்லையா  உங்களால் ?

கேள்விக்கான பதில்கள் அந்த கள உறவுகளுக்கு எழுதப்பட்டுவிட்டது. அது உங்களுக்கு வாசித்து புரியவில்லை என்றால்  கடந்து சென்றுவிடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

கேள்விக்கான பதில்கள் அந்த கள உறவுகளுக்கு எழுதப்பட்டுவிட்டது. அது உங்களுக்கு வாசித்து புரியவில்லை என்றால்  கடந்து சென்றுவிடுங்கள். 

இதையே நீங்கள்  செய்து இருக்கலாம் .

அங்கு எழுதப்பட்டது உங்களுக்கு மாத்திரம்  அல்ல மற்றைய கருத்தாளர்களுக்கானது உங்கள் பதில்கள்  எப்படி போகின்றன என்பதையே சுட்டிக்காட்டினேன் . உங்களுக்கு பிடிக்கவில்லையா பராவாயில்லை விட்டு விடுங்கள் .

முதலில் தலைவரை சொல்லி பின்பு இல்லை இல்லை  அதன்பின் அமைப்பின் தவறை சொல்லி நழுவும் உங்கள் போக்கையே சுட்டி காட்டியது பிழையென்றால் மன்னித்துக்கொள்ளுங்கள் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இந்தியாவிட்டை அணு ஆயுதம் இருக்கு ஓகே...
இந்தியாவும் வல்லரசு ஓகே…ஆனால்
இந்தியாவிலை எல்லார் வீடுகளிலும் கக்கூஸ் இருக்கா? எல்லா மக்களும் மூன்று வேளை சாப்பிட உணவு இருக்கா? ஒழுங்கான குடி தண்ணீர் இருக்கா?

இங்கே    அமெரிக்காவிலும் கூட மூன்று வேளை உணவில்லாமலும், கழிப்பிடம் மட்டுமல்ல வீடு கூட இல்லாமலும் குறிப்பிடத்தக்களவு மக்கள் வாழ்கிறார்கள்.

12 minutes ago, பெருமாள் said:

இதையே நீங்கள்  செய்து இருக்கலாம் .

அங்கு எழுதப்பட்டது உங்களுக்கு மாத்திரம்  அல்ல மற்றைய கருத்தாளர்களுக்கானது உங்கள் பதில்கள்  எப்படி போகின்றன என்பதையே சுட்டிக்காட்டினேன் . உங்களுக்கு பிடிக்கவில்லையா பராவாயில்லை விட்டு விடுங்கள் .

முதலில் தலைவரை சொல்லி பின்பு இல்லை இல்லை  அதன்பின் அமைப்பின் தவறை சொல்லி நழுவும் உங்கள் போக்கையே சுட்டி காட்டியது பிழையென்றால் மன்னித்துக்கொள்ளுங்கள் .

நீங்கள் மேற்கோள் காட்டிய மூன்றுமே எனது பதில்கள். எனது பதிலை மேற்கோள் காட்டி என்னிடம் கேள்வி கேட்டுவிட்டு உடனடியாவே அதை மறுத்து அது மற்றயை கருத்தாளருக்கானது என்று படுபொய்யை கூறுவது நியாயமாகாது.   உடனடியாக 10 நிமிடத்துக்குள் பொய் கூறும் அளவுக்கு மோசமான அரசியல்வாதியாகிவிட்டீர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.