Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மாணவர்களால் தமிழ் மொழியிலும் தமிழ் மாணவர்களால் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் பாடி வவுனியாவில் சுதந்திரதினம் அனுஷ்டிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மாணவர்களால் தமிழ் மொழியிலும் தமிழ் மாணவர்களால் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் பாடி வவுனியாவில் சுதந்திரதினம் அனுஷ்டிப்பு

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2021) காலை 7.30 மணியளவில் இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இடம்பெற்றது.

spacer.png

இதன்போது தேசியகீதம் சிங்கள மாணவர்களால் தமிழ் மொழியிலும், தமிழ் மாணவர்களால் சிங்கள மொழியிலும் பாடப்பட்டதுடன் தேசிய கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்தார். 

spacer.png

 

spacer.png

இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு.திலீபன் கலந்துகொண்டதுடன், வன்னி பிராந்திய படைகளின் பிரதானி, விமானப்படை, சிவில் பாதுகாப்புப்படைகளின் பிரதானிகள், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரி.திரேஸ்குமார், வவுனியா, செட்டிகுளம், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

spacer.png

 

spacer.png

அணிவகுப்பு கொரோனா அச்சம் காரணமாக இடம்பெற்றிருக்கவில்லை.

spacer.png

நிகழ்வின் இறுதியில் பிரதம விருந்தினரால் மரநடுகையும் இடம்பெற்றிருந்தது.
 

 

https://www.virakesari.lk/article/99780

 

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு தேவை இந்த சொறிலங்கனின்  தேசிய கீதம் ? இன்று கோத்தா விட்ட  அறிக்கையை பார்க்க மேல் உள்ளவாறுதான் சொல்ல தோணும் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேசிய கீதத்துக்கு கொடுக்கப்படுகின்ற மரியாதையை பார்க்கத் தெரியேல்லை?  கீதம் பாடும் பொழுது அத்தனைபேரும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கிறார்கள், மொட்டையள் கொடுக்கிற மரியாதையே அந்த கீதத்துக்கு இருக்கிற வலிமை எவ்வளவு என்று  தெரியுது. அவங்களே மதிக்காத தேசிய கீதம்  இதில சிங்களத்தில தான் பாடுவோம் என்று சவால் வேற.   

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் - சாமான்ய தமிழனின் வாழ்வை மாற்றப் போவதில்லையென்றாலும் இவை போன்ற ஏற்பாடுகள் பாராட்டப் பட வேண்டியவை!

மேல் மட்டமும், ஒலி வாங்கி கையில் கிடைத்தோரும் எதைப் பேசினாலும் கீழ் மட்டங்களில் இது போன்ற ஒற்றுமை சமிக்ஞைகள் எதிர்காலத்திற்கு நல்லது!   

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

இது ஒவ்வொரு விடயங்களிலும் ஒவ்வொரு தளங்களிலும் வரணும்.

இலங்கையில் அமைதி வேண்டுமானால் இது வரவேற்கப்படவேண்டிய விடயமே. 

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, பெருமாள் said:

யாருக்கு தேவை இந்த சொறிலங்கனின்  தேசிய கீதம் ? இன்று கோத்தா விட்ட  அறிக்கையை பார்க்க மேல் உள்ளவாறுதான் சொல்ல தோணும் .

13 hours ago, satan said:

இந்த தேசிய கீதத்துக்கு கொடுக்கப்படுகின்ற மரியாதையை பார்க்கத் தெரியேல்லை?  கீதம் பாடும் பொழுது அத்தனைபேரும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கிறார்கள், மொட்டையள் கொடுக்கிற மரியாதையே அந்த கீதத்துக்கு இருக்கிற வலிமை எவ்வளவு என்று  தெரியுது. அவங்களே மதிக்காத தேசிய கீதம்  இதில சிங்களத்தில தான் பாடுவோம் என்று சவால் வேற.   

தமிழ் பகுதிகளில் மட்டும் சிங்களத்துக்கும் தமிழுக்கும் இடம்  அல்லது சம உரிமை. ஆனால் சிங்கள பகுதிகளில்......?
முன்னுதாரணங்கள் இனவாத கொழும்பில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

தமிழ் பகுதிகளில் மட்டும் சிங்களத்துக்கும் தமிழுக்கும் இடம்  அல்லது சம உரிமை. ஆனால் சிங்கள பகுதிகளில்......?
முன்னுதாரணங்கள் இனவாத கொழும்பில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

 

தமிழர்கள் எப்போதுமே விட்டுக்கொடுத்து, அனுசரித்துப் போகவேணும், சிங்களவருக்கு அந்தத் தேவையில்லை. இதுதான் நியதி. 

தமிழன் செய்யவேண்டியது கட்டாயம், சிங்களவன் வேண்டுமானால் மனமிரங்கி, எம்மீது இரக்கப்பட்டு, போனால் போகுது பிழைத்துப்போ என்று தரலாம், தராதும் விடலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

IMG20210204080852_01.jpg

பிக்குகளுக்கு நாடு தேசியகீதம் அதுகள் ஒன்றும் இல்லையோ? 

இந்த புறம்போக்குத்தனம் இருக்கும்போது எல்லா நன்மைகளையும் 
அது அள்ளி போகும் 

9 hours ago, விசுகு said:

நல்ல விடயம்

இது ஒவ்வொரு விடயங்களிலும் ஒவ்வொரு தளங்களிலும் வரணும்.

இலங்கையில் அமைதி வேண்டுமானால் இது வரவேற்கப்படவேண்டிய விடயமே. 

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

இலங்கையில் சிங்களவருக்கு தமிழருக்கும் என்ன பிரச்சனை?
இனவாதிகளாலும் புறம்போக்கு பௌத்த ஆதிக்கமும்தான் எல்லோருக்குமே 
பிரச்சனை. அவர்கள் கையில் அரசாட்ச்சியும் ஊடகமும் இருக்குவரை 
அதுக்கு இரையான சிங்களவர்கள்தான் அதிகம். 

யுத்தத்தில் இறந்த ஆமியை யாரோ மீட்டு கொடுக்க போகிறார்களா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாடு! ஒரே தேசிய கீதம் ! சிங்கள, தமிழ் மொழிக்கலப்பில் தேசிய கீதம் உருவாக்கப்பட வேண்டும் !- அதா உல்லா

 

atha.jpg

(நூருல் ஹுதா உமர்)
இலங்கைக்கு இரண்டு தேசிய கீதம் எவ்வாறு அறிமுகம் செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது. ஒரே நாடு ஒரே கீதம். இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள், பல இனத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு தேசிய கீதமே. அன்று பிரித்தானியர்கள் வழங்கிய அனுமதிக்கு இன்றும் நாம் தீர்க்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். 

 

தமிழ் ஒரு கீதமும், சிங்களத்தில் ஒரு கீதமும் இசைத்தல் இரு நாடு என்ற உணர்வை கொடுக்க முடியும். கடந்த வருடமும் கூறினேன் இரு மொழிகளும் இணைந்ததாக ஒரே கீதம் உருவாக்கப்படல் வேண்டும் என தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதா உல்லா அகமட் சக்கி தலைமையில் நீர்ப்பூங்காவில் நேற்று நடைபெற்ற 73வது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

நான்கு மதங்களும் கொண்டாடும் சிவனொளி பாதமலையை கொண்ட இந்த நாடு புனித பூமி. உலகின் மத்தியில் அமைந்துள்ள முக்கிய நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. திரும்பும் திசையெல்லாம் அழகு நிறைந்த செல்வச் செழிப்பு நிறைந்த நாடே எம் நாடு. கடந்த காலங்களில் வெள்ளையர்களினாலும், வல்லரசுகளினாலும் எமது நாடு சுரண்டப்படுகின்ற போது செய்வதறியாது இருந்த நாம் எம்மால் முடியுமான போராட்டங்களை ஒற்றுமையாக முன்னெடுத்துவந்த காலகட்டங்களில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டிய நிலை வந்தமையால் திருகோணமலை துறைமுக பகுதியை தவிர ஏனைய நிலங்களுக்கு விடுதலை கிடைத்தாலும் கால ஓட்டத்தில் அதனையும் நாங்கள் பெற்றுக்கொண்டோம்.

சுதந்திரத்தின் பின்னர் கூட எமது நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கவும் எமது நாட்டின் துறைமுகங்களை பயன்படுத்தி ஏனைய யுத்தங்களை செய்யவும் காலனித்துவ நாடுகள் பல்வேறு குழப்பங்களை செய்து வருகிறார்கள். எமது காலத்தில் நாங்கள் பலவற்றையும் கண்டுள்ளோம். 

 

1915 லையே எமது நாட்டில் இனக்கலவரம் ஆரம்பித்து வைக்கப்பட்டு விட்டது. அது இன்னும் முடிந்த பாடில்லை. அதன் விளைவாக பாதுகாப்பு படை வீரர்கள் பலரும் உயிர்த்தியாகம் செய்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அங்கவீனம் அடைந்தும் இருக்கிறார்கள். தமிழ் மக்களின் சார்பில் உயிர்கள், உடமைகள், சொத்துக்கள் என பலதையும் இழந்து இருக்கிறார்கள். 

 

இன்னும் தமது உறவுகளை தேடி மூத்த தாய்மார்கள் அழுது கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினைகளை முடிக்க கூடாது என்பதற்காக கடந்த காலங்களில் குரங்கு அப்பம் பிய்ப்பது போல பிரச்சினைகளை கையாண்டுள்ளார்கள். இதனால் நாடு மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

பெயர்தாங்கிய சிலர் செய்த மனிதாபிமானமற்ற ஈஸ்டர் தாக்குதலினால் இனவாத முகங்களினுள் பேசமுடியாதவர்களாக இருக்கிறோம். இந்த சிறிய அழகிய நாட்டில் சுதந்திரத்தின் பின்னர் யாரும் குடியேறவில்லை. இங்கே வாழும் சிங்களவர்கள், தமிழர், முஸ்லிங்கள், கிறிஸ்தவர்கள் எல்லோரும் இலங்கையர்களே. நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து நாம் எல்லோரும் நிம்மதியாக வாழக்கூடிய அரசியலமைப்பை வரையவேண்டிய தேவையுடைய நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரே நாடு ஒரே சட்டத்தை பற்றி அதன் அர்த்தங்களை புரிந்துகொள்ளாமல் பலரும் பேசுகிறார்கள். மதம் என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டுப்படுத்தும் விடயமல்ல. எல்லைகள் கடந்த விடயம் அது. ஒரே நாடு ஒரே சட்டம் என்பது பிரித்தானியர்கள் விட்ட தவறை திருத்தி எமது நாட்டை வழிநடத்த நாங்கள் எல்லோரும் இணைந்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதையே குறிக்கிறது. அதற்கு பிழையான அர்த்தங்களை கற்பிக்க சிலர் முனைகிறார்கள் என்றார்.

 

http://www.battinews.com/2021/02/blog-post_51.html

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

இலங்கைக்கு இரண்டு தேசிய கீதம் எவ்வாறு அறிமுகம் செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது. ஒரே நாடு ஒரே கீதம். இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள், பல இனத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு தேசிய கீதமே. அன்று பிரித்தானியர்கள் வழங்கிய அனுமதிக்கு இன்றும் நாம் தீர்க்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். 

The anthem, "Advance Australia Fair," has been tweaked to recognize the country's Indigenous history and communities, Prime Minister Scott Morrison announced late Thursday, hours before 2021.
The first line, "Australians all let us rejoice, for we are young and free," will now end with "one and free.
 

ஒரு நாட்டின் தேசிய கீதமானது....அந்த நாட்டு மக்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும் பிரதி பலிக்க வேண்டும்..!

இந்திய தேசீய கீதம் ஒரு வங்காளியால் பாடப்பட்டது..! அது இந்துக்கள், முஸ்லிம்கள் என எல்லா மதங்களையும் பிரதி பலிக்கின்றது..!

பார்வதி...அல்லா தேரெ நாம்..!

இந்திய அரசியல் வாதிகள் இந்து தத்துவா கொள்கைகளை அனுசரிக்கும் போதும்...தேசீய கீதத்தில் இன்னும் கை வைக்கவில்லை!

அவுஸ்திரேலிய தேசீய கீதத்தை...இந்த ஜனவரி முதலாம் திகதியிலிருந்து மாற்றியுள்ளார்கள்! 

we are young and free,"

என்ற வரிகள்...இருநூறு வருடங்கள் வரலாறு கொண்ட வெள்ளையர்களை மட்டுமே பிரதி பலித்தன..!

அவுஸ்திரேலிய பூர்விக குடிகளின் வரலாறு..ஐம்பதினாயிரம் வருடங்களுக்கும் அதிகமானது..!

அதனைப் பிரதி பலிக்கும் விதமாக

We are one and free

என்று மாற்றியுள்ளார்கள்..!

இவ்வளவுக்கும் அவர்களின் தேசீய சனத் தொகை...மூன்று வீதங்கள் மட்டுமே..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.