Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்: சபையில் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, satan said:

அவர்கள் தங்களுக்குள்ளேயே இன்னும் ஒருங்கிணையவில்லை, ஒருவருக்கொருவர் குழி பறிக்கிறார்கள். இதில நீங்கள் வேற கற்பனையில் ....

இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்தால் புலத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள்  தாமாக ஒன்றிணைவார்கள் என்பது என் கருத்து.

  • Replies 70
  • Views 4.3k
  • Created
  • Last Reply
On 11/2/2021 at 21:59, Kapithan said:

ம்ம்... 😂

நானும் சதா தமிழன்தான். அதில் எனக்கு  வியப்பில்லை.

ஆனால் எதை எங்கு எப்போது கூறவேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். எல்லா இடத்திலும் பழையதைக் கிழற வேண்டிய அவசியமில்லை. 

கபிதன், எதை எப்போது கூறலாம். எப்போது கூறக்கூடாது? புரியவில்லை?

பழையதை கிளறக்கூடாது என்றால் எந்த திகிதிக்கு முன் நடைபெற்ற விடயங்களை மறக்க வேண்டும். தமிழர்கள்  மட்டும் மறக்க வேண்டுமா? அல்லது இந்த உலகமே நீங்கள் குறிப்பிடும் திகதிக்கு முன் நடைபெற்றவற்றை மறக்க வேண்டுமா? 

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றவை  பழையது அது கிளற வேண்டாம் என்று ஶ்ரீலங்கா அரசதரப்பினர் கூறினால் அதற்கும் உங்கள் விதி பொருந்துமா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2021 at 18:53, Justin said:

இல்லை. அவுசில் ரௌடிகள் முகத்தை மூடியபடி ரகளை செய்த பின்னர் அது நியாயமான கோரிக்கை தானே?

அவுசில் யாரும் சுமத்திரனைத் தாக்கவில்லை. சுமத்திரனைக் கேள்வி கேட்டார்கள். பொதுவெளியில் இருப்பவர் அதற்குப் பதில் சொல்லவேண்டும். அல்லது இலண்டனில் நடத்தியதைப்போல் அவர் எதைச்சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு கைதட்டும் கூட்டத்தினரை மட்டும் வைத்து க் கூட்டம் நடத்தவேண்டும். அவரே வவுனியாவில் கேள்விகேட்டவர்களை மிரட்டியதொனியும் எங்கள் பார்வையில் ரெடியிசம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

கபிதன், எதை எப்போது கூறலாம். எப்போது கூறக்கூடாது? புரியவில்லை?

பழையதை கிளறக்கூடாது என்றால் எந்த திகிதிக்கு முன் நடைபெற்ற விடயங்களை மறக்க வேண்டும். தமிழர்கள்  மட்டும் மறக்க வேண்டுமா? அல்லது இந்த உலகமே நீங்கள் குறிப்பிடும் திகதிக்கு முன் நடைபெற்றவற்றை மறக்க வேண்டுமா? 

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றவை  பழையது அது கிளற வேண்டாம் என்று ஶ்ரீலங்கா அரசதரப்பினர் கூறினால் அதற்கும் உங்கள் விதி பொருந்துமா? 

தெளிவாகக் கூறுகிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். 

உங்களைப் போன்ற ஆட்கள்தான் சகல பிரச்சனைகளுகும் மூல காரணமே. 

நீங்கள் எப்போதுமே பிழை கண்டுபிடிப்பதில்தான் முன்னுக்கு நிற்பீர்கள். அதிலும் குறிப்பாக சொந்த ஆட்களிடமே எப்போதும் குறை காண்பீர்கள். ஏனென்றால் உங்கள் வாதத்தை சிங்களத்திடமோ இந்தியாவிடமோ சொல்ல மாட்டிட்டீர்கள். ஏனென்றால் அதற்கு உங்களிடம் துணிவிருக்காது. அதையும் மீறி அவனிடம் போவீர்களானால் அவன் அடித்தே கலைத்துவிடுவான். அது உங்களைப் போன்றோருக்கு மிகத் தெளிவாகவே தெரியும்.  ஆனால் உருப்படியாய் ஒரு காரியமும் செய்ய மாட்டீர்கள் அத்துடன் செய்ய முன்வருவோரையும் விமரிசனம் என்று கூறிக் கிழித்து, ஓட வைத்துவிடுவீர்கள்

அதனால் சொந்த இனத்திடம்தான் உங்கள்  சேட்டைகள். 

நான் உங்களைப் போன்றோரிடம் வாதிடும் போது எனக்குள் இருக்கும் ஒரே நோக்கமும் நம்பிக்கையும், எங்கள் இனத்தின் நலனில் இவர்களுக்கும் எங்களைப் போன்று அக்கறையிருக்கும் என்பதனலாகும். 

ஆனால் இழவு வீட்டிலும் நீங்கள் இறந்தவரின், அவரின் உறவுகளின் பழைய வாழ்கையை ஆதியோடந்தமாய் postmortem செய்யும் மனப்பாங்கு உண்மையில் அருவருப்பானது. 

நீங்கள் என்னதான் சப்பைக் கட்டு கட்டினாலும் தொடர்ச்சியான உங்கள் வாதங்கள் உண்மையான உங்கள் நோக்கத்தை பளிச்சென்று காட்டுகிறது.

 "சொந்த இனத்தின் சாதல் கண்டு சிந்தை இரங்காரடி கிளியே" என்று பாடியது உங்களைப் போன்றோருக்குத்தானோ என்று தோன்றுகிறது.

😢

1 hour ago, Kapithan said:

நன்றி. மிக்க நன்றி. வாழ்க வளமுடன். 🙏🏻

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

கபிதன், எதை எப்போது கூறலாம். எப்போது கூறக்கூடாது? புரியவில்லை?

பழையதை கிளறக்கூடாது என்றால் எந்த திகிதிக்கு முன் நடைபெற்ற விடயங்களை மறக்க வேண்டும். தமிழர்கள்  மட்டும் மறக்க வேண்டுமா? அல்லது இந்த உலகமே நீங்கள் குறிப்பிடும் திகதிக்கு முன் நடைபெற்றவற்றை மறக்க வேண்டுமா? 

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றவை  பழையது அது கிளற வேண்டாம் என்று ஶ்ரீலங்கா அரசதரப்பினர் கூறினால் அதற்கும் உங்கள் விதி பொருந்துமா? 

நீங்கள் எதையும் ,நீங்கள் விரும்பிய எந்த நேரத்திலும் கூறலாம்,எழுதலாம். ஆனல்  நடைமுறைச் சாத்தியாமானவிடையங்களைக்கூறவேண்டும். இந்த உலகத்திலுள்ள எந்த ஒரு மனிதனை எடுத்துக்கொண்டாலும்,எவ்வளவு  பணம். பலம்  மற்றும் எனைய வசதிகள் வாய்ப்புகள் இருந்தாலும். அந்தக் குறிப்பிட்ட நபரினால் தான் நினைத்தபடி வாழ முடியவில்லை. ஒரு தனி மனிதனின் நிலை இப்படி என்றால் ஒரு அமைப்பு எப்படி தங்கள் எண்ணியபடி அல்லது மற்றவர்கள் சொல்லியபடி செய்யமுடியும்?

இந்த உலகத்தில் பிழையில்லாமால் நடந்த போராட்டங்களைப்  பட்டியலிடுங்கள் பார்ப்போம். தமிழர் போராட்டத்தில் பிழை நடந்தது. அவை தவிர்க்க முடியாதவை 

இனி வரும் காலங்களில் நடக்கும் போராட்டங்களிலும் பிழை நடக்கும் அவையும் தவிர்க்க முடியாதவை  நீங்கள் எழுதுவாதால் எதிர்காலத்தில் போராட்டாம் பிழையின்றி நடைபெறாது. போராட்டக்களத்திலுள்ள விதி கொல் அல்லது கொல்லாப்பாடுவாய் என்பது..

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

நன்றி. மிக்க நன்றி. வாழ்க வளமுடன். 🙏🏻

எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. 

உங்களைக் காயப்படுத்தியிருக்கிறேன். வருந்துகிறேன். பெருந்தன்மையுடன் பொறுத்தருளுங்கள். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, புலவர் said:

அவுசில் யாரும் சுமத்திரனைத் தாக்கவில்லை. சுமத்திரனைக் கேள்வி கேட்டார்கள். பொதுவெளியில் இருப்பவர் அதற்குப் பதில் சொல்லவேண்டும். அல்லது இலண்டனில் நடத்தியதைப்போல் அவர் எதைச்சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு கைதட்டும் கூட்டத்தினரை மட்டும் வைத்து க் கூட்டம் நடத்தவேண்டும். அவரே வவுனியாவில் கேள்விகேட்டவர்களை மிரட்டியதொனியும் எங்கள் பார்வையில் ரெடியிசம்தான்.

அதுக்காக இப்படி டபக்கென்று 
உண்மைகளை எழுதக்கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kandiah57 said:

நீங்கள் எதையும் ,நீங்கள் விரும்பிய எந்த நேரத்திலும் கூறலாம்,எழுதலாம். ஆனல்  நடைமுறைச் சாத்தியாமானவிடையங்களைக்கூறவேண்டும். இந்த உலகத்திலுள்ள எந்த ஒரு மனிதனை எடுத்துக்கொண்டாலும்,எவ்வளவு  பணம். பலம்  மற்றும் எனைய வசதிகள் வாய்ப்புகள் இருந்தாலும். அந்தக் குறிப்பிட்ட நபரினால் தான் நினைத்தபடி வாழ முடியவில்லை. ஒரு தனி மனிதனின் நிலை இப்படி என்றால் ஒரு அமைப்பு எப்படி தங்கள் எண்ணியபடி அல்லது மற்றவர்கள் சொல்லியபடி செய்யமுடியும்?

இந்த உலகத்தில் பிழையில்லாமால் நடந்த போராட்டங்களைப்  பட்டியலிடுங்கள் பார்ப்போம். தமிழர் போராட்டத்தில் பிழை நடந்தது. அவை தவிர்க்க முடியாதவை 

இனி வரும் காலங்களில் நடக்கும் போராட்டங்களிலும் பிழை நடக்கும் அவையும் தவிர்க்க முடியாதவை  நீங்கள் எழுதுவாதால் எதிர்காலத்தில் போராட்டாம் பிழையின்றி நடைபெறாது. போராட்டக்களத்திலுள்ள விதி கொல் அல்லது கொல்லாப்பாடுவாய் என்பது..

இலங்கை அரசு சார்பில் போர்க்குற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்று நியாயப்படுத்த இவ்வாறான கருத்துகளையே ஆண்டாண்டு தோறும் முன்வைக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கற்பகதரு said:

இலங்கை அரசு சார்பில் போர்க்குற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்று நியாயப்படுத்த இவ்வாறான கருத்துகளையே ஆண்டாண்டு தோறும் முன்வைக்கிறார்கள். 

மதவாச்சியில் ஏறிய சிங்களவன் ... 💪 இதற்ககு என்ன விளக்கம் அல்லது எப்படி புரிந்து கொள்வது சகோதரம்... 🙂

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Sasi_varnam said:

மதவாச்சியில் ஏறிய சிங்களவன் ...இதற்ககு என்ன விளக்கம் அல்லது எப்படி புரிந்து கொள்வது சகோதரம்... 🙂

ம்..... “மதவாச்சியில் ஏறிய சிங்களவன்” பற்றி அறிய விரும்புபவர்கள் எல்லாரும் கையை தூக்குங்கள். பொருத்தமான திரி துறக்கலாம். 😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கற்பகதரு said:

ம்..... “மதவாச்சியில் ஏறிய சிங்களவன்” பற்றி அறிய விரும்புபவர்கள் எல்லாரும் கையை தூக்குங்கள். பொருத்தமான திரி துறக்கலாம். 😃

திறக்கிறது....😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

ம்..... “மதவாச்சியில் ஏறிய சிங்களவன்” பற்றி அறிய விரும்புபவர்கள் எல்லாரும் கையை தூக்குங்கள். பொருத்தமான திரி துறக்கலாம். 😃

எங்களுக்கு விளப்பம்  பத்தாது என்று சொல்கினம் நீங்க தொடங்கிங்க பாஸ் நாங்க தீ மிதிக்கிறம் .

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2021 at 18:08, கற்பகதரு said:

இலங்கை அரசு சார்பில் போர்க்குற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்று நியாயப்படுத்த இவ்வாறான கருத்துகளையே ஆண்டாண்டு தோறும் முன்வைக்கிறார்கள். 

இலங்கையரசு இந்தப்போரையே தவிர்த்திருக்க முடியும்.  தமிழ்மக்களுக்கு ஒரு நல்ல தீர்வை வழங்கியிருந்தால்..இலங்கையரசின் போர்குற்றம் திட்டமிட்டு செய்யப்பட்டதாகும். கண்டிப்பாக இவை தவிர்க்ககூடியவை..இதே இரண்டு உதாரணம் (1) நவாலி தேவாலயமம் மீது ஆகாயவிமானமுலம் குண்டுத்தாக்குதல்

(2) முல்லைத்தீவு செஞ்சோலைக்கட்டிடம் மீது ஆகாயவிமானக்குண்டுத்தாக்குதல்

இவை தவிர்க்கக்கூடியவை  இப்படி பல நிகழ்வுகள் எழுத முடியும்..ஆனல் தமிழ்புலிகளின் பிழைகள் தற்செயலானவை ..திட்டமிடப்படதவை.  எனவே தவிர்க்கமுடியாது.. நீங்கள் ஒரு சிறந்த கருத்தாளர் இப்படி இலங்கையின் கருத்தைக்கொணடுவந்து பதிவிர்கள் எனறு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இப்படி இலங்கையின் கருத்தைக்கொணடுவந்து  நானாவது பதியாவிட்டால், இதற்கு எப்படி பதிலளிப்பது என்று சிந்திக்கும் சந்தர்ப்பம் எமது வாசகர்களுக்கு எப்படி கிடைக்கும்? சிங்களவர்களை பார்க்க விருப்பமில்லை என்பதால் கண்களை கறுப்புத்துணியால் கட்டிக்கொண்டா சண்டைக்கு போனீர்கள், இல்லையே?😎

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2021 at 23:36, ரதி said:

சும் ,அரசு தான் புலிகளால் தனக்கு ஆபத்து இருக்கு என்று அதிரடிப்படையை பாதுகாப்பாய் போட்டதாக அண்மையில் சொல்லி இருந்தார் ...தன்னை கொல்ல வந்த புலிகள் யாரென்று தனக்கு தெரியாது என்றும் சொல்லியிருந்தார் 

வந்தவர்கள் யாரென்றே தெரியாதபோது  அவர்கள் புலியென்று எப்படி அவருக்கு தெரிந்தது??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

வந்தவர்கள் யாரென்றே தெரியாதபோது  அவர்கள் புலியென்று எப்படி அவருக்கு தெரிந்தது??

இலங்கை அரசாங்கம் புலிகள் கொல்லவந்ததென்று சொல்லி பாதுகாப்பு தந்ததாக சொல்லியிருக்கிறாரே?

புலிகள் இரகசிய நடவடிக்கைக்கு போகும்போது புலி சீருடையும் போட்டு கொடியும் பிடித்துக்கொண்டு, தலைவரின்படத்தையும் காவிக்கொண்டு போகிறார்கள் என்றா நினைத்தீர்கள்? புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் கடதாசி புலிகளை பார்த்து ஏமாந்து போனீர்கள் போலும். உண்மையான புலி கோத்தபாயவின் பரம்பரை சிங்களவனான சமையல்காரனாகவும் இருக்கலாம். அந்த சமையல்காரன் இறந்து மூன்று தலைமுறை போனாலும் புலியென்று எவருக்கும் தெரியாமலே இருந்துவிடும். இதற்குள் போய் சுமந்திரனிடம் கொல்ல வந்தவன் புலியென்று எப்படி தெரியும் என்று கேட்டால்? இப்படி புலிகளை முட்டாள்கள் போல கட்டாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இதுதான் பொல்லுக்குடுத்து அடிவாங்கிறது எண்டுறது. இதுக்காகத்தான் நான் விளக்கமில்லாதவர்களுடன் கருத்தாடுவதில்லை என்று ஒதுங்கி இருக்கிறேன். ரதி கொஞ்சம் விளக்கமான ஆள் என்பதாலேயே அவரது பதிவுக்கு அதுவும் கடைசி வசனத்துக்கு கேள்வி கேட்டேன். அதுக்குப்போய் புலிகளை பற்றி தேவையில்லாத பாடம் எடுக்கிறீர்கள்.
வடிவாக வாசித்து பதில் எழுத பழகுங்கள். அரசு புலிகளால் ஆபத்திருக்கு என்றுதான் கூறியது. இவர்தான் தன்னை கொல்லவந்த புலிகளை தனக்கு தெரியாது என்று சொன்னார் என ரதி எழுதியதற்குத்தான் அந்த கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Eppothum Thamizhan said:

வந்தவர்கள் யாரென்றே தெரியாதபோது  அவர்கள் புலியென்று எப்படி அவருக்கு தெரிந்தது??

உங்களுக்கு நான் எழுதிய தமிழ் விளங்கவில்லை என்று நினைக்கிறேன் ... புலிகள் தான் அவரை கொலை செய்யப் போனவர்கள் என்று சும்முக்கு அரசால் சொல்லப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2021 at 08:36, ரதி said:

தன்னை கொல்ல வந்த புலிகள் யாரென்று தனக்கு தெரியாது என்றும் சொல்லியிருந்தார் 

அரசு, புலிகள் தான் தன்னைக்கொல்ல வந்திருந்தது என்று சொல்லியிருந்தாலும், அரசு சொல்லியிருந்தது ஆனால் அது யாரென்று எனக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கலாம், இவர்: வந்த புலிகள் யாரென்று தெரியாது எனும்போது புலிகள் தான் வந்தார்கள் ஆனால் அவர்களை  அடையாளம் கண்டுபிடிக்க தன்னால் முடியவில்லை என்று ஏற்றுக்கொள்வது போலல்லவா உள்ளது அவர் பேச்சு? இவர் உண்மையானவர் என்றால் புலிகளை அழித்துவிட்டோம் என்று கூறும் அரசு, புலிகளால் எனக்கு ஆபத்து என்று கூறுகிறார்கள் ஆதலால் இவர்களால்த் தான் எனக்கு ஆபத்து உருவாக்கப்படுகிறதோ என சந்தேகிக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம் அல்லது  எனக்கு பாதுகாப்பு தர அரசு நினைத்தால் அது தன் கடமையை செய்யட்டும் ஆனா புலிகளால் ஆபத்து என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றிருக்கலாம். இவர் கேட்காத போது கொடுக்கப்பட்ட பாதுகாப்பு இப்போ இவர் இறஞ்சிகேட்கும் போது மறுக்கப்படுகிறது. இதிலிருந்து யாரால் ஆபத்து என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.  சிங்களம் சுமந்திரனை இழக்க ஒருநாளும் விரும்பாது. எல்லாம் ஒரு நாடகமே. அவர் ஒரு அரசின் ஒற்றனாகக்கூட  அந்தப்பேரணியில் கலந்து கொண்டிருக்கலாம். அவரது செயற்பாடுகள் அப்படியொரு சந்தேகத்தை உருவாக்குகிறது. 

14 hours ago, Eppothum Thamizhan said:

வந்தவர்கள் யாரென்றே தெரியாதபோது  அவர்கள் புலியென்று எப்படி அவருக்கு தெரிந்தது??

செல்லும் செல்லாததையெல்லாம் செட்டியார் தலையில் கட்டிவிட வேண்டியதுதான். அதற்குத்தான் அப்பப்போ புலிகள் நாடகம். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

உங்களுக்கு நான் எழுதிய தமிழ் விளங்கவில்லை என்று நினைக்கிறேன் ... புலிகள் தான் அவரை கொலை செய்யப் போனவர்கள் என்று சும்முக்கு அரசால் சொல்லப்பட்டது

எனக்கு தமிழ் நன்றாக விளங்குகிறது. நீங்கள் எழுதியதை மீண்டும் வாசியுங்கள். அவர் அப்படி சொல்வதென்றால் "தன்னை கொல்லவந்தவர்கள் யாரென்று தனக்கு தெரியாது" என்று சொல்லியிருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.