Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சின்னங்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை - மூத்த பேராசிரியர் சி.பத்மநாதன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சின்னங்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை - மூத்த பேராசிரியர் சி.பத்மநாதன்.

Screenshot-2021-02-20-20-03-35-839-org-m

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட சின்னம் 2ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சின்னத்தில் உள்ள தமிழ் வரிவடிவ எழுத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன என்று யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் மூத்த வரலாற்றுத்துறை பேராசியருமான சி.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

அருவி இணையத்துக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்தமை வருமாறு,

குருந்தூர் மலையில் உள்ள இப்பொழுது பேசப்படுகின்ற சின்னங்கள் சிலர் பல்லவர் காலத்துக்கு உரியன என்று சொல்கின்றனர். பல்லவர் காலத்துக்கும் இந்தச் சின்னங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இவை அந்தக் காலத்துக்கு மிக முற்பட்டனவாகும்.

அங்கு செங்கட்டிகளால் அமைக்கப்பட்ட ஒரு சிறிய கட்டிடத்தின் இடிபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. பார்ப்பவர்கள் எவருக்கும் இது புலனாகும். அந்தக் கட்டடத்தினுள் சற்று முன்புறமாக ஒரு வெள்ளைக் கல்லில் அமைந்த ஒரு உருவம் தெரிகிறது. அதில் பௌத்த படிமம் போல எதுவும் காணப்படவில்லை. ஆதி காலத்து தொல்பொருள் சின்னங்களில் அனேகமானவை நாகர்களோடு தொடர்புடையவையாகும்.

நாகர்கள் வழிபட்ட சிவலிங்க வடிவங்கள் பனங்காமம் தொடக்கம் ஓமந்தை போன்ற இடங்களிலே பெருமளவிலே காணப்படுகின்றன.

இங்கே காணப்படுவது சிவலிங்க வடிவம் என்று கொள்வது சாலவும் பொருந்தும். இதைத்தான் வேறு ஆய்வாளர்களும் சொல்லியுள்ளார்கள். அது சிறிய கட்டிடத்தில் அமைந்திருப்பது இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது.

அதில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. நாகர்களுடைய கடவுள் பெயர் அதிலே காணப்படுகின்றது.

அந்த லிங்கத்திலே மணி நாகன் என்ற பெயர் தெளிவாகத் தெரிகின்றது. அது மட்டுமன்றி வேள் நாகன் என்ற பெயரும் அதிலே காணப்படுகின்றது. வழமையாக கடவுள் சின்னங்களிலும் கடவுள் பெயரை எழுதுவதோடு அதை தாபனம் பண்ணியவர்கள் அல்லது நன்கொடை செய்பவர்களுடைய பெயரை எழுதுவது வழமை நாகர்களுடைய வழமைப்படி வேள் நாகன் என்று தான் அது எழுதப்பட்டிருக்கிறது.

வழிபாட்டிச் சின்னங்கள் எல்லாவற்றிலும் அவர்கள், கடவுள் பெயர்களை தமிழ்ப் பிராமி வடிவங்களிலே பொறித்தார்கள். சிவலிங்கம், புத்தர் படிமம், நந்தி, மயூரம், பூசகம் முதலிய எல்லாவற்றிலும் இந்தக் கடவுள்ப் பெயர் காணப்படும்.

சின்னத்தின் அடிப்படையிலே தான் அது எந்த வழிபாட்டு மரபுக்கு உரியது என்பது நிர்ணயிக்கப்படும்.

இங்கு காணப்படுவது சிவலிங்கம். அதிலே காணப்படுகின்ற எழுத்துக்களைக் கொண்டு பார்க்குமிடத்து இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கொள்ளத் தக்கது. சில சமயங்களில் இலங்கையில் வட்டெழுத்து மரபு பரவியிருக்காததனாலே தமிழ்ப் பிராமி வரி வடிவங்கள் தொடர்ந்தும் சில நூற்றாண்டுகளாக நிலைபெற்றிருந்திருக்கின்றன.

ஆனால் இந்த வடிவத்தைப் பொறுத்தவரையில் இது சர்ச்சைக்குரிய வடிவமன்று. உறுதியாகச் சொல்லக்கூடியது என்னவென்றால் இது ஒரு பழங்காலத்து லிங்க உருவம். லிங்க உருவத்தின் ஆரம்பகால வடிவமைப்பினை பிரதிபலிக்கின்ற வடிவம். நாகர்களின் கடவுள் பெயர் எழுதப்பட்டுள்ள வடிவம், சைவ சமய சின்னமாக அது அமைகின்றது.

http://aruvi.com/article/tam/2021/02/20/22858/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரச்சனையின் முக்கிய காரணம், தமிழரே தமிழருக்கு வரலாற்றை மறைத்தது.

அதாவது, பல்லவரின் வரலாற்றை, சேர, சோழ, பாண்டியரின் வரலாறு போல இல்லாமல், இலை மறைகாயாக வைத்திருப்பது.

பல்லவரின் வரலாற்றை இல்லை மறை காயாக வைத்து இருப்பதை, எவராலும் மறுக்க முடியுமா?

சார் பல்லவர் முழுமையாக தமிழ் மண் மற்றும் கிண்டியில் இருந்து வராவிட்டாலும், பல்லவரின் தமிலீகுக்குமான பங்களிப்பையும், தொண்டையும் அதை செய்த புலவரின் ஆட்சியை போற்றி கொண்டாட வேண்டும்.   

Just now, Kadancha said:

சார் பல்லவர் முழுமையாக தமிழ் மண் மற்றும் கிண்டியில் இருந்து வராவிட்டாலும், பல்லவரின் தமிலீகுக்குமான பங்களிப்பையும், தொண்டையும் அதை செய்த புலவரின் ஆட்சியை போற்றி கொண்டாட வேண்டும்.   

சரி பல்லவர் முழுமையாக தமிழ் மண் மற்றும் குடியில்   இருந்து வராவிட்டாலும், பல்லவரின் தமிழுக்குமான பங்களிப்பையும், தொண்டையும், அதை செய்த பல்லவரின் ஆட்சியை போற்றி கொண்டாட வேண்டும்.   

8 minutes ago, Kadancha said:

இந்த பிரச்சனையின் முக்கிய காரணம், தமிழரே தமிழருக்கு வரலாற்றை மறைத்தது.

அதாவது, பல்லவரின் வரலாற்றை, சேர, சோழ, பாண்டியரின் வரலாறு போல இல்லாமல், இலை மறைகாயாக வைத்திருப்பது.

பல்லவரின் வரலாற்றை இல்லை மறை காயாக வைத்து இருப்பதை, எவராலும் மறுக்க முடியுமா?

சரி பல்லவர் முழுமையாக தமிழ் மண் மற்றும் குடியில்   இருந்து வராவிட்டாலும், பல்லவரின் தமிழுக்குமான பங்களிப்பையும், தொண்டையும், அதை செய்த பல்லவரின் ஆட்சியை போற்றி கொண்டாட வேண்டும்.   

நாம் பல்லவரின், சோழரின், சேரர்கள் போன்ற தென்னிந்திய அரசர்களின் காலத்தை ஒட்டிய சின்னங்கள் என்று குறிப்பிடும் போது, இலங்கை தமிழர்கள் ஒரு தனி இனம் அல்ல, அவர்கள் தென்இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்றும், வடக்கு கிழக்கு அவர்களின் தாயகம் இல்லை என்றும் சிங்களம் கூறுவதை ஏற்றுக் கொள்வது ஆகிவிடும்.

இப் பேராசிரியர் குறிப்பிடுவது போன்று இது நாகர் காலத்து சின்னங்களாக இருப்பின் அது எம்மை மேலும் வரலாற்று ரீதியில் வலுப்படுத்தும்.

இதிலும் எனக்கு ஒரு கேள்வி இருக்கின்றது... நாகர் காலத்தில் சிவ  வழிபாடு இருந்திருக்க சந்தர்ப்பம் உண்டா? 2500 வருடங்களுக்கு முன்னர் எப்படி ஈழத்தில் சிவ வழிபாடு ஏற்பட்டு இருக்கும்?

திருமூலர் ஈழத்து சிவபூமி என்று தான் கூறுகின்றார்

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சின்னங்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை - மூத்த பேராசிரியர் சி.பத்மநாதன்.

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட சின்னம் 2ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சின்னத்தில் உள்ள தமிழ் வரிவடிவ எழுத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன என்று யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் மூத்த வரலாற்றுத்துறை பேராசியருமான சி.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

2300 வருடங்களுக்கு முன் தமிழ் எழுத்துக்கள் இருந்தனவா ? 🙁

2700 வருடங்களுக்கு முற்பட்ட ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வுகளிலேயே சைவக் கடவுள்களின் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஊகங்களின் அடிப்படையில் சரித்திரத்தை நிறுவாமல் விஞ்ஞான சரித்திர ஆதாரங்களை முன்வைத்து இங்கு வாழ்ந்தவர்களைப் பற்றிக் கூற வேண்டும். இந்த வசதிகள் எம்மிடம் தற்போது இல்லை. ஆதாரங்களை அழியாமல் பாதுகாப்பதே தற்போது சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களே இப்போது அங்கு இல்லை.பிறகு எப்படி..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சின்னங்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை - மூத்த பேராசிரியர் சி.பத்மநாதன்.

Screenshot-2021-02-20-20-03-35-839-org-m

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட சின்னம் 2ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சின்னத்தில் உள்ள தமிழ் வரிவடிவ எழுத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன என்று யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் மூத்த வரலாற்றுத்துறை பேராசியருமான சி.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

அருவி இணையத்துக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்தமை வருமாறு,

குருந்தூர் மலையில் உள்ள இப்பொழுது பேசப்படுகின்ற சின்னங்கள் சிலர் பல்லவர் காலத்துக்கு உரியன என்று சொல்கின்றனர். பல்லவர் காலத்துக்கும் இந்தச் சின்னங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இவை அந்தக் காலத்துக்கு மிக முற்பட்டனவாகும்.

அங்கு செங்கட்டிகளால் அமைக்கப்பட்ட ஒரு சிறிய கட்டிடத்தின் இடிபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. பார்ப்பவர்கள் எவருக்கும் இது புலனாகும். அந்தக் கட்டடத்தினுள் சற்று முன்புறமாக ஒரு வெள்ளைக் கல்லில் அமைந்த ஒரு உருவம் தெரிகிறது. அதில் பௌத்த படிமம் போல எதுவும் காணப்படவில்லை. ஆதி காலத்து தொல்பொருள் சின்னங்களில் அனேகமானவை நாகர்களோடு தொடர்புடையவையாகும்.

நாகர்கள் வழிபட்ட சிவலிங்க வடிவங்கள் பனங்காமம் தொடக்கம் ஓமந்தை போன்ற இடங்களிலே பெருமளவிலே காணப்படுகின்றன.

இங்கே காணப்படுவது சிவலிங்க வடிவம் என்று கொள்வது சாலவும் பொருந்தும். இதைத்தான் வேறு ஆய்வாளர்களும் சொல்லியுள்ளார்கள். அது சிறிய கட்டிடத்தில் அமைந்திருப்பது இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது.

அதில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. நாகர்களுடைய கடவுள் பெயர் அதிலே காணப்படுகின்றது.

அந்த லிங்கத்திலே மணி நாகன் என்ற பெயர் தெளிவாகத் தெரிகின்றது. அது மட்டுமன்றி வேள் நாகன் என்ற பெயரும் அதிலே காணப்படுகின்றது. வழமையாக கடவுள் சின்னங்களிலும் கடவுள் பெயரை எழுதுவதோடு அதை தாபனம் பண்ணியவர்கள் அல்லது நன்கொடை செய்பவர்களுடைய பெயரை எழுதுவது வழமை நாகர்களுடைய வழமைப்படி வேள் நாகன் என்று தான் அது எழுதப்பட்டிருக்கிறது.

வழிபாட்டிச் சின்னங்கள் எல்லாவற்றிலும் அவர்கள், கடவுள் பெயர்களை தமிழ்ப் பிராமி வடிவங்களிலே பொறித்தார்கள். சிவலிங்கம், புத்தர் படிமம், நந்தி, மயூரம், பூசகம் முதலிய எல்லாவற்றிலும் இந்தக் கடவுள்ப் பெயர் காணப்படும்.

சின்னத்தின் அடிப்படையிலே தான் அது எந்த வழிபாட்டு மரபுக்கு உரியது என்பது நிர்ணயிக்கப்படும்.

இங்கு காணப்படுவது சிவலிங்கம். அதிலே காணப்படுகின்ற எழுத்துக்களைக் கொண்டு பார்க்குமிடத்து இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கொள்ளத் தக்கது. சில சமயங்களில் இலங்கையில் வட்டெழுத்து மரபு பரவியிருக்காததனாலே தமிழ்ப் பிராமி வரி வடிவங்கள் தொடர்ந்தும் சில நூற்றாண்டுகளாக நிலைபெற்றிருந்திருக்கின்றன.

ஆனால் இந்த வடிவத்தைப் பொறுத்தவரையில் இது சர்ச்சைக்குரிய வடிவமன்று. உறுதியாகச் சொல்லக்கூடியது என்னவென்றால் இது ஒரு பழங்காலத்து லிங்க உருவம். லிங்க உருவத்தின் ஆரம்பகால வடிவமைப்பினை பிரதிபலிக்கின்ற வடிவம். நாகர்களின் கடவுள் பெயர் எழுதப்பட்டுள்ள வடிவம், சைவ சமய சின்னமாக அது அமைகின்றது.

http://aruvi.com/article/tam/2021/02/20/22858/

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பது
எண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாரா
லிங்கம்  ஆகும். காஞ்சி கைலாசநாதர்
கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன் எட்டுப் பட்டைகளும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகியவற்றைக் குறிக்கும் என்பர்.

மேலும் எட்டு பைரவ சக்திகளையும்,
இறைவனின் அஷ்ட வீரச்செயல்களையு
ம் குறிப்பன என்பர். சிதம்பரம் நவலிங்க
சந்நிதியிலும் எட்டு திசை லிங்கங்கள்
உள்ளன. இவை அஷ்டதாரா
லிங்கங்களாகும்.

அதென்ன தாராலிங்கம்????
சிவலிங்கங்களில் அகரலிங்கம் முதல் சுப லிங்கம் ஈறாக மொத்தம் 1008 வகை உள்ளது. ( இப் பந்தியின் இறுதியில் இணைத்துள்ளேன் )

தாராலிங்கம்..!
சிவலிங்கங்களில் பலவிதங்கள்
உள்ளதுபோல், பாணப்பகுதியில்
பட்டைகள் அமைந்துள்ள
சிவலிங்கங்களையும் சில
திருத்தலங்களில் தரிசிக்கலாம். அவை
"தாராலிங்கம்' என்று கூறப்படுகின்றன.
காஞ்சி கைலாசநாதர் கோவில்,
மாமல்லபுரத்தில் உள்ள கற்கோவில்கள்,
தென்னாற்காடு மாவட்டம்
பனைமலையில் உள்ள சிவன் கோவில்,
பொன்பரப்பி சிவன் கோவில்,
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்
போன்ற ஆலயங்களின் வளாகத்திலும்
தாராலிங்கங்கள் உள்ளன.

தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும்
என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. 4, 8,
16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள்
அதாவது தாரைகள் அமைத்திருப்பார்
கள்.

நான்கு பட்டைகள் கொண்ட
லிங்கங்களை "வேதலிங்கம்' என்று
போற்றுவர். சக்கரப்பள்ளி என்ற பாடல்
பெற்ற திருத்தலத்தில் மூலவர் நான்கு
பட்டை லிங்கமாகத் திகழ்கிறார். கோவை
காரமடை ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில்
நாற்பட்டை லிங்கமாகத் திகழ்கிறார்.
பொதுவாக, நான்கு பட்டைகள் கொண்ட
லிங்கத்தை சர்வதோபத்ரதாரா லிங்கம்
என்பர்.

பதினாறு பட்டைகள் உடைய லிங்கம்
சோடச தாராலிங்கம் எனப்படும். இந்த
லிங்கத்தை சந்திரகலா லிங்கம் என்றும்
சொல்வர். இவ்வகை லிங்கங்கள்
குளிர்ச்சியான கல்லில்
உருவானவையாகும். பெரும்பாலும்
சந்திரக்காந்தக் கல்லில் உருவானதாக
இருக்கும். சிதம்பரம் நவலிங்க
சந்நிதியின் மையத்திலும், பழையாறை
மேற்றளியிலும், பொன்பரப்பி
தலத்திலும், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ
வரர் கோவில் வளாகத்தில் உள்ள
கோவிலிலும் சோடச தாராலிங்கம்
உள்ளது.

முப்பத்திரண்டு பட்டைகளுடன் காட்சி தரும் லிங்கத்தை தர்மதாரா லிங்கம்
என்பர். காஞ்சியம்பதியில 32 பட்டைகள்
கொண்ட லிங்கத்தை தரிசிக்கலாம்.

64 பட்டைகளுடன் திகழும் அபூர்வ
லிங்கத் திருவுரு- கலைகள்,
சிவபெருமானின் 64 லீலா விநோதங்கள்,
64 யோகியர்களைக் குறிக்கும் என்பர்.
இவ்வகை லிங்கத்தை
காஞ்சியம்பதியில் தரிசிக்கலாம்.
மேலும், அறுபத்து நான்கு பட்டைகள்
கொண்ட லிங்கம் பைரவரையும்
குறிப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன.

பொதுவாக தாராலிங்கங்களை
வழிபடுவதால், இறைவனின் பூரண
அருள் கிட்டுவதுடன் சிவபதம் கிட்டும்
என்றும் சொல்வர். எனவே இதை
சாயுஜ்ய லிங்கம் என்றும் போற்றுவர்.
இந்தத் தாராலிங்கத்தின் மேல்
தாராபாத்திரம் மூலமாக அபிஷேகம்
செய்யும்போது, அபிஷேக நீர்
தாரைகளின் வழியே பிரிந்து செல்லும்
காட்சியை தரிசிப்பதால் பரம்பொருளின்
முழுமையான அருளைப் பெற்று
வளமுடன் வாழலாம் என்பர்.

1008 லிங்கம்

1 அகர லிங்கம்
2 அக லிங்கம் 
3 அகண்ட லிங்கம் 
4 அகதி லிங்கம் 
5 அகத்திய லிங்கம் 
6 அகழ் லிங்கம் 
7 அகில லிங்கம் 
8 அகிம்சை லிங்கம்
9 அக்னி லிங்கம் 
10 அங்கி லிங்கம் 
11 அங்கு லிங்கம் 
12 அசரிய லிங்கம் 
13 அசுர லிங்கம் 
14 அசை லிங்கம் 
15 அசோக லிங்கம் 
16 அச்சு லிங்கம் 
17 அஞ்சா லிங்கம் 
18 அட்ட லிங்கம் 
19 அட்ச லிங்கம் 
20 அட்சதை லிங்கம் 
21 அட்டோ லிங்கம் 
22 அடிமுடி லிங்கம் 
23 அடி லிங்கம் 
24 அணணா லிங்கம் 
25 அண்ட லிங்கம் 
26 அணி லிங்கம் 
27 அணு லிங்கம் 
28 அத்தி லிங்கம் 
29 அதழ் லிங்கம் 
30 அதிபதி லிங்கம் 
31 அதிர்ஷ்ட லிங்கம் 
32 அதிய லிங்கம் 
33 அதிசய லிங்கம் 
34 அதீத லிங்கம் 
35 அந்தார லிங்கம் 
36 அந்தி லிங்கம் 
37 அநந்தசாயி லிங்கம் 
38 அநலி லிங்கம் 
39 அநேக லிங்கம் 
40 அப்ப லிங்கம் 
41 அப்பு லிங்கம் 
42 அபய லிங்கம் 
43 அபி லிங்கம் 
44 அபிநய லிங்கம் 
45 அபிஷேக லிங்கம் 
46 அம்பல லிங்கம் 
47 அம்பி லிங்கம் 
48 அம்புசி லிங்கம் 
49 அம்ம லிங்கம் 
50 அமல லிங்கம் 
51 அமர லிங்கம் 
52 அமராவதி லிங்கம் 
53 அமிர்த லிங்கம் 
54 அர்ச்சனை லிங்கம் 
55 அர்ச்சுண லிங்கம் 
56 அர்த்த லிங்கம் 
57அரச லிங்கம் 
58 அரவ லிங்கம் 
59 அரங்க லிங்கம் 
60 அரம்பை லிங்கம் 
61 அரளி லிங்கம் 
62 அரி லிங்கம் 
63 அரிணி லிங்கம் 
64 அரிமா லிங்கம் 
65 அருக லிங்கம் 
66 அருணை லிங்கம் 
67 அருமணி லிங்கம் 
68 அரும்பு லிங்கம் 
69 அருளி லிங்கம் 
70 அரூப லிங்கம் 
71 அல்லி லிங்கம் 
72 அலை லிங்கம் 
73 அவைய லிங்கம் 
74 அழகு லிங்கம் 
75 அளத்தி லிங்கம் 
76 அற லிங்கம் 
77 அறிவு லிங்கம் 
78 அன்பு லிங்கம் 
79 அன்புரு லிங்கம் 
80 அன்ன லிங்கம் 
81 அனுதாபி லிங்கம் 
82 அனுபூதி லிங்கம் 
83 அஷ்ட லிங்கம் 
84 ஆக்கை லிங்கம் 
85 ஆகம லிங்கம் 
86ஆகாய லிங்கம் 
87 ஆசான லிங்கம் 
88 ஆசிரிய லிங்கம் 
89 ஆசி லிங்கம் 
90 ஆட லிங்கம் 
91 ஆடரி லிங்கம் 
92 ஆண் லிங்கம் 
93 ஆண்டி லிங்கம் 
94 ஆணுரு லிங்கம் 
95 ஆத்ம லிங்கம் 
96 ஆதார லிங்கம் 
97 ஆதி லிங்கம் 
98 ஆதிரி லிங்கம் 
99 ஆதிசேவி லிங்கம் 
100 ஆதிரை லிங்கம் 
101 ஆதினா லிங்கம் 
102 ஆபேரி லிங்கம் 
103 ஆமிர லிங்கம் 
104 ஆமை லிங்கம் 
105 ஆய லிங்கம் 
106 ஆயதி லிங்கம் 
107 ஆர்த்தி லிங்கம் 
108 ஆரண்ய லிங்கம் 
109 ஆரண லிங்கம் 
110 ஆராதனை லிங்கம் 
111 ஆராபி லிங்கம் 
112 ஆரூர லிங்கம் 
113 ஆரோக்ய லிங்கம் 
114 ஆலகால லிங்கம் 
115 ஆலவாய் லிங்கம் 
116 ஆலால லிங்கம் 
117 ஆலி லிங்கம் 
118 ஆவார லிங்கம் 
119 ஆவி லிங்கம் 
120 ஆவே லிங்கம் 
121 ஆவுடை லிங்கம் 
122 ஆழி லிங்கம் 
123 ஆனந்த லிங்கம் 
124 இக்கு லிங்கம் 
125 இசை லிங்கம் 
126 இடப லிங்கம் 
127 இணை லிங்கம் 
128 இதய லிங்கம் 
129 இந்திர லிங்கம் 
130 இமய லிங்கம் 
131 இமை லிங்கம் 
132 இரட்டை லிங்கம் 
133 இராம லிங்கம் 
134 இலக்கிய லிங்கம் 
135 இலாப லிங்கம் 
136 இளைய லிங்கம் 
137 இறவா லிங்கம் 
138 இறை லிங்கம் 
139 இனிமை லிங்கம் 
140 ஈகை லிங்கம் 
141 ஈசான்ய லிங்கம் 
142 ஈட லிங்கம் 
143 ஈடண லிங்கம் 
144 ஈடித லிங்கம் 
145 ஈடிலி லிங்கம் 
146 ஈர்ப்பு லிங்கம் 
147 ஈழ லிங்கம் 
148 ஈஸ்வர லிங்கம் 
149 ஈஸ்வரி லிங்கம் 
150 உக்ர லிங்கம் 
151 உச்சி லிங்கம் 
152 உசித லிங்கம் 
153 உடம்பி லிங்கம் 
154 உடுக்கை லிங்கம் 
155 உணர் லிங்கம் 
156 உத்தம லிங்கம் 
157 உத்ராட்ச லிங்கம் 
158 உதய லிங்கம் 
159 உதிர லிங்கம் 
160 உப்பிலி லிங்கம் 
161 உப்பு லிங்கம் 
162 உப லிங்கம் 
163 உபதேச லிங்கம் 
164 உபய லிங்கம் 
165 உமா லிங்கம் 
166 உமை லிங்கம் 
167 உயிர் லிங்கம்
168 உரி லிங்கம் 
169 உரு லிங்கம் 
170 உருணி லிங்கம் 
171 உருமணி லிங்கம் 
172 உவப்பு லிங்கம் 
173 உழவு லிங்கம் 
174 உழுவை லிங்கம் 
175 உற்சவ லிங்கம் 
176 உன்னி லிங்கம் 
177 ஊக்க லிங்கம் 
178 ஊசி லிங்கம் 
179 ஊதா லிங்கம் 
180 ஊருணி லிங்கம் 
181 ஊழி லிங்கம் 
182 ஊற்று லிங்கம் 
183 எட்டி லிங்கம் 
184 எட்டு லிங்கம் 
185 எதனா லிங்கம் 
186 எந்தை லிங்கம் 
187 எம லிங்கம் 
188 எருது லிங்கம் 
189 எல்லை லிங்கம் 
190 எளிய லிங்கம் 
191 எழிலி லிங்கம் 
192 எழுத்தறி லிங்கம் 
193 என்குரு லிங்கம் 
194 ஏக லிங்கம் 
195 ஏகம லிங்கம் 
196 ஏகா லிங்கம் 
197 ஏகாம்பர லிங்கம் 
198 ஏகாந்த லிங்கம் 
199 ஏடக லிங்கம் 
200 ஏந்திழை லிங்கம் 
201 ஏம லிங்கம் 
202 ஏர் லிங்கம் 
203 ஏரி லிங்கம் 
204 ஏவச லிங்கம் 
205 ஏழிசை லிங்கம் 
206 ஏறு லிங்கம் 
207 ஏனாதி லிங்கம் 
208 ஐங்கர லிங்கம் 
209 ஐய லிங்கம் 
210 ஐராவத லிங்கம் 
211 ஒப்பிலா லிங்கம் 
212 ஒப்பிலி லிங்கம் 
213 ஒருமை லிங்கம் 
214 ஒளி லிங்கம் 
215 ஓசை லிங்கம் 
216 ஓடேந்தி லிங்கம் 
217 ஓம் லிங்கம் 
218 ஓம்கார லிங்கம் 
219 ஓவிய லிங்கம் 
220 ஔடத லிங்கம் 
221 ஔவை லிங்கம் 
222 கங்கா லிங்கம் 
223 கச்ச லிங்கம் 
224 கண்ட லிங்கம் 
225 கடம்ப லிங்கம் 
226 கடார லிங்கம் 
227 கடிகை லிங்கம் 
228 கடை லிங்கம் 
229 கதிர் லிங்கம் 
230 கதலி லிங்கம் 
231 கந்த லிங்கம் 
232 கபால லிங்கம் 
233 கபில லிங்கம் 
234 கமல லிங்கம் 
235 கயா லிங்கம் 
236 கயிலை லிங்கம் 
237 கர்ண லிங்கம் 
238 கர்ப்ப லிங்கம் 
239 கரண லிங்கம் 
240 கரு லிங்கம் 
241 கருட லிங்கம் 
242 கருமை லிங்கம்

——————————————-

Some one sent in WhatsApp....

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் சிங்களவன் நமக்கு நன்மைதான் செய்துள்ளான். மாண்டு, மறைந்துபோன நமது வரலாறுகளை புதுப்பித்து, இளம் தலைமுறை அறிய வைத்துள்ளான். இதை நிறுவ வேண்டியது  சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு, அவர்களுக்கு உறுதுணையாய் இருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

2300 ஆண்டுகளுக்கு மற்பட்டது என்பதற்கான ஆதாரமாக கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பு (காபன் டேட்டிங்) செய்யப்பட்டதா?  நிழலி கூறியது போல் 2300 ஆண்டுகளுக்கு முன் சிவலிங்க வழிபாடு இருந்ததா? 

ஏனென்றால் தமிழகத்தில்  கீழடி ஆய்வில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல  நூறு பொருட்கள எடுக்கப்பட்டு காபன் டேட்டிங் மூலம் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் மதம் சம்பந்தமான எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

நாம் பல்லவரின், சோழரின், சேரர்கள் போன்ற தென்னிந்திய அரசர்களின் காலத்தை ஒட்டிய சின்னங்கள் என்று குறிப்பிடும் போது

பல்லவர் இலங்கை தீவில் ஆட்சி செய்தர்களா என்பதாய் பற்றி அல்ல.
 
தமிழ் நாட்டில் பல்லவரின் ஆட்சியை இலை மறை காயாக வைத்து இருப்பது.  

இலங்கை தீவின் முதல் குடி வேடர், தொடர்ந்து திராவிடர் (திராவிட எனும் சொல்லால்  வரலாற்று ஆசிரியர்காலால் அடையாளப்படுத்தப்படும் மக்கள்) 

  • கருத்துக்கள உறவுகள்

சைவத்துக்குப்பின் தோன்றியதே பவுத்தம். ஆகவே இது புத்தனுடையதாக இருக்க வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, satan said:

மொத்தத்தில் சிங்களவன் நமக்கு நன்மைதான் செய்துள்ளான். மாண்டு, மறைந்துபோன நமது வரலாறுகளை புதுப்பித்து, இளம் தலைமுறை அறிய வைத்துள்ளான். இதை நிறுவ வேண்டியது  சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு, அவர்களுக்கு உறுதுணையாய் இருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

தூங்கிக்கொண்டிருந்த தமிழனை தட்டி எழுப்பியவன் யார்?

3 hours ago, நிழலி said:

இப் பேராசிரியர் குறிப்பிடுவது போன்று இது நாகர் காலத்து சின்னங்களாக இருப்பின் அது எம்மை மேலும் வரலாற்று ரீதியில் வலுப்படுத்தும்.

நாம் நாகர்கள் வழி வந்தவர்கள் என்றும், நாகர்கள் தமிழர்களே என்றும் இன்னமும் நிறுவப்படவில்லையே?

3 hours ago, நிழலி said:

இதிலும் எனக்கு ஒரு கேள்வி இருக்கின்றது... நாகர் காலத்தில் சிவ  வழிபாடு இருந்திருக்க சந்தர்ப்பம் உண்டா? 2500 வருடங்களுக்கு முன்னர் எப்படி ஈழத்தில் சிவ வழிபாடு ஏற்பட்டு இருக்கும்?

இராவணன் சிவ பக்தன் என்பது நிறுவப்பட்டுள்ளது, இல்லையா? இராவணன் காலம் எது?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இராவணன் சிவ பக்தன் என்பது நிறுவப்பட்டுள்ளது, இல்லையா? இராவணன் காலம் எது

இராமர் காலம், எது என்று சொல்லுங்கள், கற்பகதரு!
இராவணன் காலத்தை நான் சொல்லுகின்றேன்..!😄😄

  • கருத்துக்கள உறவுகள்

திருஞான சம்பந்தர் காலம் கி.பி.  ஏழாம் நூற்றாண்டு என்று நிறுவப்பட்டுள்ளது..!
சமணர்களுக்கு எதிராக அவர் பாடியிருப்பதால்.....சைவம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் தென்னிந்தியாவில் வேரூன்றியிருக்க வேண்டும் எனக் கருதலாம்!

சைவம் பற்றிய குறிப்புகள் பின் வருமாறு கூறுகின்றன..!

முந்துவரலாறு
உடலில் சாம்பலைப் பூசிக்கொள்ளுதல் (விபூதி), கற்களை (இலிங்கம்) வழிபடல், விலங்காடை புனைதலும் மாமிசம் புசித்தலும் (இன்றைய அகோரிகளிடம் தொடர்வது) என்று பழங்குடிப் பண்புகள் பலவற்றை இன்றும் சைவத்தில் காணமுடிவதிலிருந்து, அதன் தொன்மையை ஊகித்துக் கொள்ளமுடியும்.

சிந்து நாகரிகம் (பொ.மு 2500-2000) நிலவிய மொகஞ்சதாரோ கரப்பா மற்றும் வடமேற்கு இந்தியாவின் தொல்லியல் பகுதிகளில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு, அங்கெல்லாம் சைவம் நிலவியிருக்கலாம் எனும் ஒரு கருதுகோள் உண்டு.[2] இதற்கு ஆதாரமாக, அங்கு கிடைத்த சான்றுகளுள், "முந்துசிவன்" என ஆய்வாளர் கூறும் பசுபதி முத்திரையும்[3], இலிங்கத்தையொத்த கற்களும் சுட்டிக்காட்டப்படுகிறது.

துங்கபத்திரை ஆற்றங்கரையோரம் கல்லிற் செதுக்கிய 1008 இலிங்கங்கள், ஹம்பி, இந்தியா
வேதகால உருத்திரன்
தமிழிற் சிவந்தவன், செம்மையானவன் எனப் பொருள் தரும் "சிவன்" எனும் சொல், வடமொழியில் பண்டுதொட்டு அன்பானவன், மங்களவடிவினன் போன்ற பொருள்களிலேயே ஆளப்பட்டு வந்திருக்கிறது.[4][5] மங்களம் எனப் பொருள் தரும் உருத்திரன் எனும் பெயரில் ஈசன் சிலவேளைகளில் குறிப்பிடப்படுவதுடன், வேதத்தில் "திருவுருத்திரம்" (ஸ்ரீருத்ரம்) பகுதியில் போற்றப்படுபவன் ஈசனே என்ற நம்பிக்கையும் சைவர் மத்தியிலுண்டு.

இருக்கு வேதத்தில் அஞ்சத்தகுந்தவனாக சித்தரிக்கப்படும் உருத்திரன், யசுர் மற்றும் சாமவேதங்களில் கொண்டுள்ள பெரும் இடம், உருத்திர வழிபாடு மெல்ல மெல்ல சிவவழிபாடாக மாறியதை, அல்லது இருவேறு வழிபாடுகளும் ஒன்றாக இணைந்ததற்கு ஆதாரமாக விளங்குகின்றது. புகழ்பெற்ற இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் என்பனவற்றில் பல சிவவழிபாடு தொடர்பான சுவாரசியமான கதைகளும், சைவ தத்துவக் கோட்பாடுகளும் உண்டு.[6][7] பொ.மு நான்காம் இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதாகக் கணிக்கப்படும்[8] சுவேதாசுவதர உபநிடதம், முழுக்க முழுக்க சிவவழிபாடு பற்றிய மிகப்பழைய ஆவணமாகக் கொள்ளப்படுகிறது. பொ.மு இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பதஞ்சலியின் சங்கத இலக்கண நூலான மாபாடியம், விலங்குத்தோலாடை அணிந்து இரும்பு ஈட்டியொன்றைக் காவித் திரியும் ஈசனின் அடியவன் ஒருவன் பற்றி வர்ணிக்கின்றது.[9][10]

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் பத்மநாதன் சொல்லும் எழுத்து உள்ள குருந்தூர் படங்கள்எங்காவது இருக்கிறதா? 

அதாவது தமிழ் பிராமி எழுந்துள்ள படங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே எழுதப்பட்ட கருத்துக்களைப் பார்த்தால் ..

கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதைதான்.

சிங்களவன் நிலைதான் பரிதாபத்திற்குரியது........ 😂

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லைகொடுத்து அடிவாங்கப்போறான் சிங்களவன்.  இனி தமிழர் சர்வதேசத்தின் உதவியுடன் தொல்பொருள் ஆராய்ச்சியை தொடரணும், வந்தேறு குடிகள் யார் என்று நிரூபிக்கணும். உண்மைகளை குழி தோண்டி புதைக்க முடியாது, எங்கு குழி தோண்டினாலும் உண்மைகள் வெளிவரணும், குழி பறிக்கிறவை அதை பாத்து  முழிக்கணும்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.