Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாமும் நம் பழக்க வழக்கங்களும்..

அனேகமாக நான் ஏதாவது எழுதினால் அது அப்படியே தேடுவார் இல்லாமல் கிடப்பதை பல முறை அவதானித்த படியால் தனித்து  எழுத மனம் எழுவதில்லை.. ஆனாலும் சில சங்கடங்களை சந்திக்கும் போது எழுத வேண்டும் போலவும் இருக்கிறது.. எழுதுகிறேன்..

ஆண்டவன் படைப்பில் ஆண், பெண் என படைப்பில் அவை அவைக்கு ஏற்ப அவயவங்களையும் சேர்த்தே படைத்திருக்கிறார்.அதை நாம் இடம் பொருள் ஏவல் அறியாது நாகரீகமற்ற முறையில் பேபசிக்கொள்வது அவர்கள் மேல் உள்ள மதிப்பை எப்படியும் குறைத்து விடும்.

அதுவம் நாம் போகும் கடை தெருக்களில் பேசும் போது மிகவும் கவனமாக ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்து பேச வேண்டும்.. சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் வேண்டும்,மாற வேண்டும்..

நேற்று நான் ஒரு தமிழ் கடைக்கு போயிருந்தேன்.அங்கு மூன்று வாடிக்கையாளர்கள் நின்றோம்.இருவர் பெண்கள் ஒருவர ஆண்.அந்ந ஆண் முக கவசத்தை சரியாக அணியாமல் வநீதிருந்திருந்தார்.எனக்கு சற்று தள்ளி நின்ற பெண் பிள்ளை கவனித்து விட்டார் போலும்.மாஸ்க்கை சரியாக பார்த்து போடுங்கள் என்றார்.

சொன்னது தான் தாமதம் அந்த ஆண் நீங்கள் விட்டால் கால் சட்டைக்குள்  போடடு இருப்பதையும் கழட்டி மாத்தி போடச் சொல்லுவீங்க போலிருக்கே என்று சத்தம் போட்டார்..

கொரோனாவோடு எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.அவ்வப்போது குடுத்தால் தான் அடங்குவார்களாம்.

அது உங்கள் வீட்டுப் பெண் பிள்ளையாக கூட இருக்கலாம், இல்லாமலும் போகலாம் கொஞ்சம் அனுசரிப்பு வேண்டாமா.வெளியில் கேட்பவர்களுக்கு எவ்வளவு அசௌகரியம் புரிகிறதா.

கடைக்காரருக்கு எப்படி சமாளிப்பது பேச்சை என்ற மாதிரி நின்றார்.ஏன் தமிழ் மக்களே போகும் இடத்திலுமா நாம் இப்படித் தான் என்பதை காட்ட வேண்டுமா...எப்போ மாறப் போகிறோம்..???

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி... கொரோனா நேரத்தில், மிகப் பொருத்தமான பதிவை பதிந்தமை சிறப்பு.
இங்கு, மாஸ்க் சரியாக  போடாமல் ... கடைக்கு உள்ளே அனுமதித்தாலே...
கடைக்காரருக்கு... 500 ஐரோ தண்டம் அறவிடுவார்கள்.
அதனால்...  கடைக்காரர், பயந்து போய்...
வாடிக்கையாளரை... வற்புறுத்தினால்,  அவர் திரும்ப வரமாட்டாரோ...
என்ற, இக்கட்டான,  நிலைமையில் உள்ளார்கள்.

இங்கு... இந்த, மாஸ்க் அணிவதை கண்காணிக்காத,
600 பேருக்கு மேல் வேலை செய்யும், பெரிய தொழில் நிறுவனங்களையே... 
தண்டமும் போட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு  பூட்டி விட்டார்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் நாட்டு  அரசாங்கம் சொல்லுகிற படி....
நாம் தான்.... அந்த நடைமுறையை... பின் பற்ற வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி...காலத்துக்கு ஏற்ற பதிவு...அதே நேரம் உங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகின்றது....!

எமது மனம் சோகமான நிலையில் இருக்கும் போது ...அழுவதற்கு ஒரு தோள் கிடைக்காதா எனத் தேடும் நிலை வரும்போது, உண்மையான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது அந்தச் சோகங்கள் கொஞ்சம் குறைவது எனது அனுபவத்தில் நான் படித்தது! 

மனிதர்களின்  செயல்கள்...அவர்களது அப்போதைய மன நிலையையே வெளிப்படுத்தும்!  அவர் அப்போது என்ன கொதி மனநிலையில் இருந்தாரோ தெரியாது! மற்றது....மனிதர்கள் எல்லோரும் சமூக விலங்குகளும் இல்லைத் தானே! விதி விலக்குகளும் உண்டு தானே! ஒரு வேளை....மரத்திலிருந்து...நேரே மகிழுந்துக்குள் விழுந்தவராகவும்...அவர் இருக்கக் கூடும்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, யாயினி said:

சொன்னது தான் தாமதம் அந்த ஆண் நீங்கள் விட்டால் கால் சட்டைக்குள்  போடடு இருப்பதையும் கழட்டி மாத்தி போடச் சொல்லுவீங்க போலிருக்கே என்று சத்தம் போட்டார்..

இது ஒரு வில்லங்கமான சமாச்சாரம். கோயில்/விழாக்கள் போன்ற  இடங்களிலையும் இப்படியான வார்த்தைகள் வந்து போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

அனேகமாக நான் ஏதாவது எழுதினால் அது அப்படியே தேடுவார் இல்லாமல் கிடப்பதை பல முறை அவதானித்த படியால் தனித்து  எழுத மனம் எழுவதில்லை.. ஆனாலும் சில சங்கடங்களை சந்திக்கும் போது எழுத வேண்டும் போலவும் இருக்கிறது.. எழுதுகிறேன்..

எவருக்கும் எப்போதும் தாழ்வு மனப்பாங்கு வரவே கூடாது.

7 hours ago, யாயினி said:

அது உங்கள் வீட்டுப் பெண் பிள்ளையாக கூட இருக்கலாம், இல்லாமலும் போகலாம் கொஞ்சம் அனுசரிப்பு வேண்டாமா.வெளியில் கேட்பவர்களுக்கு எவ்வளவு அசௌகரியம் புரிகிறதா.

படிப்பறிவும் மனப்பக்குவமும் இல்லை என்றால் அவர்கள் ஒரு மிருகத்துக்கு சரி.

***

Edited by நியானி
திருத்தப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் இடம் பொருள் பார்க்காமல் ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டி விடுவார்கள்.  என்ன செய்வது சில விதி விலக்குகளை வைத்து எல்லோரையும் மதிப்பிட முடியாது. இந்த காலக்கட்டத்தில் அநேகர் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள் வருகின்றன. யாயினி இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் ஆதங்கம் பொருத்தமானதே. சமூக அக்கறையற்றவர்களை அடுத்திருப்போரால் மாற்ற முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் வசிக்கும்...
புங்கையூரானுக்கு இப்ப சனிக்கிழமை என்றால்..

அமெரிக்காவில் வசிக்கும்...
ஈழப்பிரியனுக்கு.... இப்ப வெள்ளிக்கிழமை.

குமாரசாமி அண்ணை... வசிக்கும் நாட்டில், 
இப்ப... என்ன கிழமை என்று, அறிய ஆவலாக உள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அவுஸ்திரேலியாவில் வசிக்கும்...
புங்கையூரானுக்கு இப்ப சனிக்கிழமை என்றால்..

அமெரிக்காவில் வசிக்கும்...
ஈழப்பிரியனுக்கு.... இப்ப வெள்ளிக்கிழமை.

குமாரசாமி அண்ணை... வசிக்கும் நாட்டில், 
இப்ப... என்ன கிழமை என்று, அறிய ஆவலாக உள்ளது.  

இரண்டும் கெட்டான் கிழமை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இரண்டும் கெட்டான் கிழமை.

ரேக்...  இற்  ஈசி... ஈழப் பிரியன்ஸ். 🙏
சென்ற... வெள்ளிக்கிழமை,  நடந்த பகிடிகள் போல் இதனையும்.   
கடந்து போக வேண்டும் ஐயா.  :)

வார விடுமுறையில்...  மகிழ்ச்சி மிக முக்கியம். 🥰
அது... தவறினால், வாரம் முழுக்க, மாடு மாதிரி வேலை செய்வதில் அர்த்தம் இல்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

அவரவராய் பார்த்து திருந்தினால்தான் உண்டு.

கொரனா ஆட்டத்தில் இவ்வளவுபட்ட பின்பும் ஆபத்து புரிய இல்லை, சமூக பொறுப்பு இல்லை என்றால் நாம் என்ன செய்யமுடியும்?

முககவசம் அணியாமல் அருகில் வருபவர்கள் உள்ளார்கள். முகக்கவசத்தை மூக்கின் கீழ், நாடியின் கீழ் இறக்கிவிட்டு பாசாங்கு செய்பவர்கள் உள்ளார்கள்.

சமூக இடைவெளியை பேணாதவர்கள், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காதவர்களில் நாங்கள்தான் ஆறு அடி தள்ளி நின்று ஏதோ முடியுமான அளவு எங்களை காப்பாற்றி கொள்ளவேண்டும். பொது இடங்களில் இவர்களுடன் வாயை திறந்தால் தேவை இல்லாத பிரச்சனைகளே வரலாம். அவர்கள் ஏற்கனவே தெரிந்துகொண்டுதான் சுகாதார வழிகாட்டுதல்களை உதாசீனம் செய்கின்றார்கள். தெரிந்துகொண்டு தவறு செய்பவர்களிடத்தில் வாயை கொடுத்து ஏன் நாம் ஏன் நமது அமைதியை, மரியாதையை இழக்க வேண்டும்?

கொரனா காலத்தில் கடந்த வருடம் ஓர் தமிழ் கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

பொது இடத்தில் செந்தமிழ் பேசுபவர்களையும் பாத்திருக்கிறேன்.எந்த வயதானாலும் தாங்காளக திருந்தினால் தான் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக சொல்லப்படுகிறது என்பதை புரியாதவர்களுக்கு அவர்களின் பாசையிலேயே பதில் தரவேண்டும். ஆனால் அது எம்மால் முடியாது என அவர்கள் அறிந்தே தாக்குதல் செய்வர். 

நன்றி யாயினி 

உங்கள் அனுபவங்களையும் எமக்கு தந்து படிப்பினையை நாமும் அறிய தந்ததற்காக.

தொடர்ந்து எழுதுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2021 at 18:43, தமிழ் சிறி said:

யாயினி... கொரோனா நேரத்தில், மிகப் பொருத்தமான பதிவை பதிந்தமை சிறப்பு.
இங்கு, மாஸ்க் சரியாக  போடாமல் ... கடைக்கு உள்ளே அனுமதித்தாலே...
கடைக்காரருக்கு... 500 ஐரோ தண்டம் அறவிடுவார்கள்.
அதனால்...  கடைக்காரர், பயந்து போய்...
வாடிக்கையாளரை... வற்புறுத்தினால்,  அவர் திரும்ப வரமாட்டாரோ...
என்ற, இக்கட்டான,  நிலைமையில் உள்ளார்கள்.

இங்கு... இந்த, மாஸ்க் அணிவதை கண்காணிக்காத,
600 பேருக்கு மேல் வேலை செய்யும், பெரிய தொழில் நிறுவனங்களையே... 
தண்டமும் போட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு  பூட்டி விட்டார்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் நாட்டு  அரசாங்கம் சொல்லுகிற படி....
நாம் தான்.... அந்த நடைமுறையை... பின் பற்ற வேண்டும். 

On 5/3/2021 at 19:56, புங்கையூரன் said:

யாயினி...காலத்துக்கு ஏற்ற பதிவு...அதே நேரம் உங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகின்றது....!

எமது மனம் சோகமான நிலையில் இருக்கும் போது ...அழுவதற்கு ஒரு தோள் கிடைக்காதா எனத் தேடும் நிலை வரும்போது, உண்மையான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது அந்தச் சோகங்கள் கொஞ்சம் குறைவது எனது அனுபவத்தில் நான் படித்தது! 

மனிதர்களின்  செயல்கள்...அவர்களது அப்போதைய மன நிலையையே வெளிப்படுத்தும்!  அவர் அப்போது என்ன கொதி மனநிலையில் இருந்தாரோ தெரியாது! மற்றது....மனிதர்கள் எல்லோரும் சமூக விலங்குகளும் இல்லைத் தானே! விதி விலக்குகளும் உண்டு தானே! ஒரு வேளை....மரத்திலிருந்து...நேரே மகிழுந்துக்குள் விழுந்தவராகவும்...அவர் இருக்கக் கூடும்!

On 5/3/2021 at 20:16, குமாரசாமி said:

இது ஒரு வில்லங்கமான சமாச்சாரம். கோயில்/விழாக்கள் போன்ற  இடங்களிலையும் இப்படியான வார்த்தைகள் வந்து போகும்.

On 5/3/2021 at 20:31, ஈழப்பிரியன் said:

எவருக்கும் எப்போதும் தாழ்வு மனப்பாங்கு வரவே கூடாது.

படிப்பறிவும் மனப்பக்குவமும் இல்லை என்றால் அவர்கள் ஒரு மிருகத்துக்கு சரி.

***

On 5/3/2021 at 21:10, Kavallur Kanmani said:

சிலர் இடம் பொருள் பார்க்காமல் ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டி விடுவார்கள்.  என்ன செய்வது சில விதி விலக்குகளை வைத்து எல்லோரையும் மதிப்பிட முடியாது. இந்த காலக்கட்டத்தில் அநேகர் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள் வருகின்றன. யாயினி இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் ஆதங்கம் பொருத்தமானதே. சமூக அக்கறையற்றவர்களை அடுத்திருப்போரால் மாற்ற முடியாது.

On 5/3/2021 at 21:44, தமிழ் சிறி said:

அவுஸ்திரேலியாவில் வசிக்கும்...
புங்கையூரானுக்கு இப்ப சனிக்கிழமை என்றால்..

அமெரிக்காவில் வசிக்கும்...
ஈழப்பிரியனுக்கு.... இப்ப வெள்ளிக்கிழமை.

குமாரசாமி அண்ணை... வசிக்கும் நாட்டில், 
இப்ப... என்ன கிழமை என்று, அறிய ஆவலாக உள்ளது.  

On 5/3/2021 at 23:16, நியாயத்தை கதைப்போம் said:

அவரவராய் பார்த்து திருந்தினால்தான் உண்டு.

கொரனா ஆட்டத்தில் இவ்வளவுபட்ட பின்பும் ஆபத்து புரிய இல்லை, சமூக பொறுப்பு இல்லை என்றால் நாம் என்ன செய்யமுடியும்?

முககவசம் அணியாமல் அருகில் வருபவர்கள் உள்ளார்கள். முகக்கவசத்தை மூக்கின் கீழ், நாடியின் கீழ் இறக்கிவிட்டு பாசாங்கு செய்பவர்கள் உள்ளார்கள்.

சமூக இடைவெளியை பேணாதவர்கள், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காதவர்களில் நாங்கள்தான் ஆறு அடி தள்ளி நின்று ஏதோ முடியுமான அளவு எங்களை காப்பாற்றி கொள்ளவேண்டும். பொது இடங்களில் இவர்களுடன் வாயை திறந்தால் தேவை இல்லாத பிரச்சனைகளே வரலாம். அவர்கள் ஏற்கனவே தெரிந்துகொண்டுதான் சுகாதார வழிகாட்டுதல்களை உதாசீனம் செய்கின்றார்கள். தெரிந்துகொண்டு தவறு செய்பவர்களிடத்தில் வாயை கொடுத்து ஏன் நாம் ஏன் நமது அமைதியை, மரியாதையை இழக்க வேண்டும்?

கொரனா காலத்தில் கடந்த வருடம் ஓர் தமிழ் கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது.

On 7/3/2021 at 05:20, சுவைப்பிரியன் said:

பொது இடத்தில் செந்தமிழ் பேசுபவர்களையும் பாத்திருக்கிறேன்.எந்த வயதானாலும் தாங்காளக திருந்தினால் தான் உண்டு.

On 7/3/2021 at 06:44, விசுகு said:

எதற்காக சொல்லப்படுகிறது என்பதை புரியாதவர்களுக்கு அவர்களின் பாசையிலேயே பதில் தரவேண்டும். ஆனால் அது எம்மால் முடியாது என அவர்கள் அறிந்தே தாக்குதல் செய்வர். 

நன்றி யாயினி 

உங்கள் அனுபவங்களையும் எமக்கு தந்து படிப்பினையை நாமும் அறிய தந்ததற்காக.

தொடர்ந்து எழுதுங்கள்

கருத்துக்கள் மற்றும் புள்ளிகளை இட்ட அனைத்து உறவுகளுககும் நன்றிகள்!😁🤭

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அப்படி பேசினதும், எதுவுமே சொல்லாமல் பாலியல் வார்த்தைகள் பேசி மிரட்டுகிறார் என்று  பொலிசுக்கு அடிச்சிருக்கலாம்.

காவல்துறை வந்ததும் மாஸ்க் சரியாக அணிய சொன்னேன் அதற்காகதான் அப்படி மிரட்டும் தொனியில் பாலியல் வார்த்தைகள் பிரயோகித்தார் என்று அவர்களுக்கு சொல்லியிருக்கலாம்.

இரண்டு குற்றங்கள் அவர்மேல் பதிவாகியிருக்கலாம், அதற்கு பிறகு இனி போகும் இடங்களிலாவது கொஞ்சம் கண்ணியமாக நடக்க பார்ப்பார்.

நம்மவர்கள் சிலருக்கு வெளிநாடுகள் வந்ததால் பாஸ்போர்ட்தான் மாறியிருக்கு பழக்க வழக்கங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கு ஏற்ற சிறந்த பதிவு சகோதரி.மற்றவர்கள் தங்களைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் அப்படி நடந்து கொள்கிறார்கள்.......விட்டுத்தள்ளுங்கள்......நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 09/03/2021 at 15:06, valavan said:

கருத்து பகிர்வுக்கு மிகவும் நன்றி.. கடந்த எட்டு மாதங்களாக வேலை விடயமாக போகும் இடங்களில் இப்படி நிறைய மன சங்கடங்களை கஸ்ரஙகளை எதிர் கொள்கிறேன்.அனைவரும் நம்மவர்களே அதனால் கூடுதலாக அமைதி ஒன்றை மட்டுமே கடைப் பிடிக்கிறேன்.பிரச்சனைக்குரிய இடம் எதுவோ அதிலிருந்து விரைவில் அகன்று விடுவேன்.

On 09/03/2021 at 15:08, suvy said:

காலத்துக்கு ஏற்ற சிறந்த பதிவு சகோதரி.மற்றவர்கள் தங்களைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் அப்படி நடந்து கொள்கிறார்கள்.......விட்டுத்தள்ளுங்கள்......நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்......!   😁

வருகைகக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாயினி வெள்ளைகள் இதைவிட அசிங்கமாக பேசுவார்களே ?? நம்மவர்கள் நாலைஞ்சு பேர் நிண்டால் கொஞ்சம் மூச்சாகத்தான் பேசுவார்கள் சண்டை பிடிக்கான் எண்டு வையுங்கோ நாலு பேர் விலக்க நிண்டால் சண்டை கொஞ்சம் சத்தமா இருக்கும்  சட்டை கிழியும் வரைக்கும் அதுதான் நம்மவர்கள் சண்டித்தனம் கண்டுக்கதீங்க நம்ம வேலை எதுவோ போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அந்த இடத்தில் நான் இல்லாமல் போயிட்டனே யாயினி 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த இடத்தில் நான் இல்லாமல் போயிட்டனே யாயினி 😂

விடுங்கள் சகோதரி.......எங்களுக்குத்தான் கொடுப்பினை இல்லை......அதையும் யாயினி எழுதி நாங்கள் தெரிந்து கொள்ள.........!   🤔

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த இடத்தில் நான் இல்லாமல் போயிட்டனே யாயினி 😂

என்ன செய்திருப்பியள் அக்கா....?

ஒரு தண்ணிப் பார்ட்டி ஏதோ சொல்கிறது எண்டு கடந்து போவீர்களா அல்லது, மல்லுக்கட்டிட நிப்பீர்களா?

துட்டனை கண்டால் தூர விலகு என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

பெண்கள் இருக்குமிடத்தில் என்ன பேசுவது என்று தெரியாத, ஒரு ஜென்மத்திடம், வாயை கொடுப்பதிலும், நகர்வதே புத்திசாலித்தனம்.

சமூகத்தில் பலரையும் பார்க்கிறோம். இதுகள் எல்லாம், எதுக்கு வந்து சேர்ந்தார்கள் என்று நினைத்துக் கொண்டே நகர வேண்டியது தான்.

அவர்கள் வளர்ப்பு அப்படி.

போலீசாரை அழைத்து, மாஸ்க் போட மறுக்கிறார் என்று சொல்லி இருந்தால், அவருக்கும் தண்டம், கடைக்காரருக்கும் தண்டம். அதைத்தானே செய்திருக்க வேண்டும்.

****

அதுசரி, என்ன உங்களுக்கு ஒரே வருத்த கண்டமா இருக்குது?

சனி, கண்ணா, பின்னா எண்டு திரியுது போலை கிடக்குது.

ஆரோக்கியம் முக்கியம். கவனித்துக் கொள்ளுங்கள்.
 
Edited by Nathamuni

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.