Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Enjoy எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி...

Featured Replies

எவ்வளவு அழகான தமிழ் சொற்கள்! எவ்வளவு அருமையான இசை! இதிலும் பறை தூள் கிளப்புகின்றது!

 

சந்தோஷ் நாராயணின் இசையில் இன்னொரு நல்ல பாடல்

குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி

குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி

அள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஓட்டரே ஓட்டரே சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே

 

சுருக்கு பையம்மா
வெத்தலை மட்டையம்மா
சொமந்த கையம்மா
மத்தளம் கோட்டுயம்மா

தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதியை கூறேண்டி
கண்ணாடியே காணோடி
இந்தர்ரா பேராண்டி

அன்னைக்கிளி அன்னைக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணை கொடுத்தானே பூர்வகுடி

கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆத்திச்சூடி
நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு

குக்கூ குக்கூ
பச்சையை பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குனே கூட்டுக்கு

 

பாடுபட்ட மக்கா
வரப்பு மேட்டுக்காரா
வேர்வத்தண்ணி சொக்கா
மினுக்கும் நாட்டுக்காரா

ஆக்காட்டி கருப்பட்டி
ஊதங்கொழு மண்ணுச்சட்டி
ஆத்தோரம் கூடுகட்டி
ஆரம்பிச்ச நாகரீகம்

ஜன் ஜனே ஜனக்கு
ஜனே மக்களே
உப்புக்கு சப்பு கொட்டி
முட்டைக்குள்ள சத்துக்கொட்டு
அடக்கி ரத்தங்கொட்டு
கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் சேழிச்சாலும்
என் தொண்டை நனையலேயே

என் கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தா சுத்தி வந்தா
சேவ கூவுச்சு
அது போட்டு வச்ச எச்சம் தானே
காட மாறுச்சு
நம்ம நாடா மாறுச்சு
இந்த வீடா மாறுச்சு

என்ன கோரை என்ன கோரை
என் சீனி கரும்புக்கு என்ன கோரை
என்ன கோரை என்ன கோரை
என் செல்ல பேராண்டிக்கு என்ன கோரை

பந்தலுல பாவக்கா
பந்தலுல பாவக்கா
வேதகள்ளு விட்டுருக்கு
அது வேதகள்ளு விட்டுருக்கு
அப்பன் ஆத்தா விட்டதுங்க
அப்பன் ஆத்தா விட்டதுங்க

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

என் கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே
குக்கூ குக்கூ

 

 

Lyrics

https://www.tamilbeatslyrics.com/2021/03/enjoy-enjaami-song-lyrics-in-tamil.html

Edited by நிழலி
தலைப்பு திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

நான் பத்துதடவைக்கு மேல் பார்த்திட்டேன். இனிமை 

  • கருத்துக்கள உறவுகள்

இசை,பாட்டு, நடிப்பு,நளினங்கள் எல்லாமே அளவளவாய் அழகழகாய் கொட்டிக் கிடக்கு.......நன்றி நிழலி ......!  😊

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பாக இருக்குது. இன்னும் Dhee(Dheekshitha Venkadeshan) இலங்கையர் என்பது பெருமையாக இருக்கின்றது. இவரது தாயார் இசையமைப்பாளார் சந்தோஷ் நாராயனை மறுமணம் முடித்துள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை வாழ்க்கையிலை இப்பிடியொரு லூசு பாட்டை இன்னும் கேக்கவேயில்லை. விசர் பாட்டு.பாட்டு உச்சரிப்பும் ஒழுங்காய் இல்லை.

Kotzen GIFs | Tenor

  • நிழலி changed the title to Enjoy எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி...
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

என்ரை வாழ்க்கையிலை இப்பிடியொரு லூசு பாட்டை இன்னும் கேக்கவேயில்லை. விசர் பாட்டு.பாட்டு உச்சரிப்பும் ஒழுங்காய் இல்லை.

Kotzen GIFs | Tenor

ஓ நோ தாத்தா.சத்தி எடுக்க இடம் கிடைக்கவில்லையா..🤭😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, யாயினி said:

ஓ நோ தாத்தா.சத்தி எடுக்க இடம் கிடைக்கவில்லையா..🤭😆

வாந்தி வாற இடத்திலை உடன எடுத்துடனும். 😎

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்பாடலின் பின்புலம் இலங்கை தோட்ட தொழிலாளர்கள் என்பது இன்னும் நெகிழ்சியாய்
இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

இலங்கையர் என்பது பெருமையாக இருக்கின்றது. இவரது தாயார் இசையமைப்பாளார் சந்தோஷ் நாராயனை மறுமணம் முடித்துள்ளார்.

இந்த தகவல்  சரிதானே கமலா கரிஸ்சை சொந்தம் கொண்டாடியது போல் இல்லை தானே :rolleyes:

  • தொடங்கியவர்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இந்த தகவல்  சரிதானே கமலா கரிஸ்சை சொந்தம் கொண்டாடியது போல் இல்லை தானே :rolleyes:

https://en.m.wikipedia.org/wiki/Dhee_(singer)

 

  • தொடங்கியவர்

கனடாவில் -4 C குளிரில் எடுக்கப்பட்ட பாடல்

இதில் நடனமாடியவர்களின் பெயர்கள் மற்றும் மேலதிக விபரங்கள்:

https://fb.watch/4hZ-Ik_7ye/

https://www.facebook.com/k2bstudios/

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அர்த்தம் பொதிந்த, பார்க்க, கேட்க, சிந்திக்க எமக்கு உற்சாகத்தை கொடுக்கும் உருவாக்கம் இது. கண்கள், காதுகளிற்கு இனிமை சேர்க்கும் அழகான ஒரு கலைப்படைப்பு. ஆனால், சிறந்ததொரு தமிழ்ப்பாடல் என்று சொல்வதற்கு இல்லை. இங்கு இதுபற்றி அறிந்தபின்னர் இருபது தடவைகளுக்கு மேல் வீடியோவை கிளிக் செய்தாயிற்று.

பாடலில் அதிகம் பிடித்த, மனதை கவர்ந்த வரி: "நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி".

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Dhee ft. Arivu - Enjoy Enjaami (Prod. Santhosh Narayanan)

50,816,455 views
Premiered Mar 7, 2021
 

பிள்ளைகளுக்கும் பிடித்துவிட்டது இந்த பாட்டு

  • தொடங்கியவர்
5 minutes ago, உடையார் said:

Dhee ft. Arivu - Enjoy Enjaami (Prod. Santhosh Narayanan)

50,816,455 views
Premiered Mar 7, 2021
 

பிள்ளைகளுக்கும் பிடித்துவிட்டது இந்த பாட்டு

ஏ.ஆர். ரஹுமான் ஆரம்பித்த independence music வெளியீட்டு நிறுவனத்தின் முதல் பாடலாக இது வந்துள்ளது என அறிந்தேன். மலையகத்தில் தலைமுறைகளா வாழ்ந்து பின் தமிழகத்துக்கு விரட்டப்பட்ட எளிய மக்களின் வாழ்வை சொல்லும் பாடலை முதலாவதாக வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி தருகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

முல்ல பனைமர வித்தாரமே

திகாரு திகாரு குத்தாலமே

என்ன கொர என்ன கொர

என் சீனி சக்கரைக்கு என்ன கொர'

என்ன கொர என்ன கொர

என் சொடல பேராண்டிக்கு என்ன கொர

ஊழல் செஞ்சி வாழச்சொல்லி

இந்த கட்சி கொடுத்தானே கருணாநிதி

கம்மங்கரை காணியெல்லாம்

புடுங்கி திரிஞ்சானே கழகக்குடி

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தெருக்குரல் அறிவின் (The Castless Collective பாடல்கள்), பெரும்பாலும் இந்தமாதிரிதான் உள்ளது.. அப்படித்தான் Enjoy என் சாமியும்.. 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

தெருக்குரல் அறிவின் (The Castless Collective பாடல்கள்), பெரும்பாலும் இந்தமாதிரிதான் உள்ளது.. அப்படித்தான் Enjoy என் சாமியும்.. 

 

வணக்கம் பிரபா,

கண்டு கனகாலம். சுகம்தானே.

எங்கள் வீட்டில் இப்போ ஒரே “அறிவு”தான். எனது மகனின் விருப்பபாடகராகிவிட்டார்.

எனக்கு பிடித்தபாடல் இது.

 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

வணக்கம் பிரபா,

கண்டு கனகாலம். சுகம்தானே.

எங்கள் வீட்டில் இப்போ ஒரே “அறிவு”தான். எனது மகனின் விருப்பபாடகராகிவிட்டார்.

எனக்கு பிடித்தபாடல் இது.

 

வணக்கம் Goshan..

நல்ல சுகம் கேட்டதிற்கு நன்றி

ஆனால் என்னைவிட நீங்கள்தான் அடிக்கடி காணாமல் போகும் ஆள்.. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

The Castless Collective பாடல்கள் அதிகம் கேட்பது.. இன்றைய இளையோரை கவரும் விதமாகவே பாடல்களின் இசை.. 

ஆனால் இந்த enjoy என் சாமி இளவயதினரை அதிகம் கவர்ந்த ஒன்று.. 6வயதும் பாடுவார்கள் 20வயதும் ஆடுவார்கள்.. 

Dhee குரல் வித்தியாசமான ஒன்று.. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம் Goshan..

நல்ல சுகம் கேட்டதிற்கு நன்றி

ஆனால் என்னைவிட நீங்கள்தான் அடிக்கடி காணாமல் போகும் ஆள்.. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

The Castless Collective பாடல்கள் அதிகம் கேட்பது.. இன்றைய இளையோரை கவரும் விதமாகவே பாடல்களின் இசை.. 

ஆனால் இந்த enjoy என் சாமி இளவயதினரை அதிகம் கவர்ந்த ஒன்று.. 6வயதும் பாடுவார்கள் 20வயதும் ஆடுவார்கள்.. 

Dhee குரல் வித்தியாசமான ஒன்று.. 

நல்ல சுகம். 

காணமல் போவதும் ஒரு தனி சுகம்தான்🤣

உண்மைதான் - பாடலும், இசையும் படமாக்கபட்ட விதமும்.

Dhee உங்கள் நாட்டு பிள்ளை வேறு.

 4 தலைமுறையாக சங்கீத ஈடுபாடு உள்ளோர். எனக்கு அதில் 3ம் தலைமுறை பரிச்சயமானவர்கள்.

நமது பிள்ளை என்றளவில் இரெட்டிப்பு மகிழ்சியும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம் Goshan..

நல்ல சுகம் கேட்டதிற்கு நன்றி

ஆனால் என்னைவிட நீங்கள்தான் அடிக்கடி காணாமல் போகும் ஆள்.. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

The Castless Collective பாடல்கள் அதிகம் கேட்பது.. இன்றைய இளையோரை கவரும் விதமாகவே பாடல்களின் இசை.. 

ஆனால் இந்த enjoy என் சாமி இளவயதினரை அதிகம் கவர்ந்த ஒன்று.. 6வயதும் பாடுவார்கள் 20வயதும் ஆடுவார்கள்.. 

Dhee குரல் வித்தியாசமான ஒன்று.. 

உங்களை கானவில்லை பகுதியில் தேடிக்கொன்டிருக்கினம்.நீங்கள் என்னன்டால் இங்கை வாங்கோ ஒன்னாகி என்டுறுங்கிங்கள்.😁

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2021 at 00:46, goshan_che said:

Dhee உங்கள் நாட்டு பிள்ளை வேறு.

 4 தலைமுறையாக சங்கீத ஈடுபாடு உள்ளோர். எனக்கு அதில் 3ம் தலைமுறை பரிச்சயமானவர்கள்.

உண்மைதான்.. அதீத சங்கீத ஈடுபாடு உடையவர்கள்.. 

அவருடைய உறவினர் ஒரு சிலரை தெரியும்.. அவ்வளவுதான்.. 
 

On 3/6/2021 at 03:16, சுவைப்பிரியன் said:

உங்களை கானவில்லை பகுதியில் தேடிக்கொன்டிருக்கினம்.நீங்கள் என்னன்டால் இங்கை வாங்கோ ஒன்னாகி என்டுறுங்கிங்கள்.😁

ஓ.. அப்படியா!!

காணவில்லை பகுதிக்கு போய் ரிஜிஸ்டர் மார்க் செய்துவிட்டால் போச்சு!!

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வாங்கோ... என ரசிகர்களை இழுக்கும் எஞ்சாய் எஞ்சாமி பாடல்... 25 கோடி முறை பார்த்து சாதனை

வாங்கோ வாங்கோ... என ரசிகர்களை இழுக்கும் எஞ்சாய் எஞ்சாமி பாடல்... 25 கோடி முறை பார்த்து சாதனை

 

சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் இப்பாடலைத் தயாரித்துள்ளது.
பதிவு: ஜூன் 09,  2021 15:22 PM
சென்னை

ரவுடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்தவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணைன் மகளான தீ உசுரு நரம்புல’ இறுதிச்சுற்று, ‘கண்ணம்மா’ (காலா), ’ரவுடி பேபி’ (மாரி 2), ’காட்டுப்பயலே’ (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ, இந்த பாடல் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

காலா படத்தில் ‘உரிமை மீட்போம்’, வட சென்னை படத்தில் ‘மத்திய சிறையிலே’, மாஸ்டர் படத்தில் ‘வாத்தி ரெய்டு’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் ரேப் பாடகர் அறிவு. தற்போது இவர்கள் இருவரும் இணைந்துப் பாடியிருக்கும் ‘எஞ்ஜாய் எஞ்சாமி’ ஆல்பம் பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த எஞ்ஜாய் எஞ்சாமி என்கிற பாடலின் வீடியோ மார்ச் 7 அன்று யூடியூபில் வெளியானது. பாடலை அறிவு எழுதியுள்ளார். சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் இப்பாடலைத் தயாரித்துள்ளது. அமித் கிருஷ்ணன் பாடலைப் படமாக்கியுள்ளார்.

யூடியூப் தளங்களில் வழக்கமாக திரைப்படப் பாடல்களுக்குக் கிடைக்கும் அமோக வரவேற்பை  எஞ்ஜாய் எஞ்சாமி பெற்றுள்ளது. இயற்கை வளத்தையும் கலாசார வேர்களையும் போற்றும் இப்பாடலின் படமாக்கம், ஆங்கிலப் பாடல்களுக்கு இணையாக உள்ளதால் இதற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகி வருகிறது. தற்போது இப்பாடலுக்கு 25 கோடி முரைபார்த்து உள்ளனர்.  ஒரு சுயாதீனப் பாடல், திரைப்பாடலுக்கு இணையாக அல்லது அதைவிடவும் அதிகமான வரவேற்பைப் பெற்றிருப்பது தமிழ்த் திரையிசை வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுயாதீனப் பாடல்களில் எஞ்ஜாய் எஞ்சாமி ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளதாகவே சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/06/09152205/Enjoy-Enjaami-a-welcome-25-crore-viewing-record.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.