Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம்

இலங்கை வரலாற்றில் அண்மைக்காலமாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 202.04 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 197.62 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம் – Athavan News

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!

1-251.jpg
 29 Views

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி  மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று மத்திய வங்கி  தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி இன்று ரூபா 202.04. ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூபா 197.62 ஆக உள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் திகதி முதல் மார்ச் 12ஆம் திகதி  இலங்கை வரலாற்றில் டுதன் முறையாக அமெரிக்க டொலரின் பெறுமதி 200ஆக அதிகரித்தது.

இந்நிலையில், 2021ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக் டொலர் பெறுமதியுடன் ஒப்பீட்டளவில் இலங்கை நாணயத்தின் பெறுமதி நுாற்றுக்கு 5.2 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/?p=46058

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீழ்ச்சியை... தட்டி நிமிர்த்த, ஏதாவது வழி இருக்கா... 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, தமிழ் சிறி said:

இந்த வீழ்ச்சியை... தட்டி நிமிர்த்த, ஏதாவது வழி இருக்கா... 😎

ஈழத்தமிழர்களுக்கு  நல்ல தீர்வு வரும் வரைக்கும்  வழி இல்லை.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஈழத்தமிழர்களுக்கு  நல்ல தீர்வு வரும் வரைக்கும்  வழி இல்லை.:cool:

நல்ல தீர்வு... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.

அப்ப ரூபாய்... படு பாதாளத்திலை விழுவது நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

இந்த வீழ்ச்சியை... தட்டி நிமிர்த்த, ஏதாவது வழி இருக்கா... 😎

3 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல தீர்வு... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.

அப்ப ரூபாய்... படு பாதாளத்திலை விழுவது நிச்சயம்.

அண்ணை ஊரில இருக்கும் எங்கட நிலைமைய யோசியுங்க, எங்களை பாக்க பாவமா இல்லையா?

போன வருசம்  10ஆம் மாதம் 140 ரூபா வித்த சீரக சம்பா இப்ப 190 ரூபா. விலைவாசி பயங்கரமா ஏறுது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அண்ணை ஊரில இருக்கும் எங்கட நிலைமைய யோசியுங்க, எங்களை பாக்க பாவமா இல்லையா?

போன வருசம்  10ஆம் மாதம் 140 ரூபா வித்த சீரக சம்பா இப்ப 190 ரூபா. விலைவாசி பயங்கரமா ஏறுது.

ஏராளன்...  எனது கருத்து, 
உங்கள் மனதை,  புண் படுத்தி இருந்தமைக்கு  மன்னிக்கவும்.  🙏 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஏராளன் said:

அண்ணை ஊரில இருக்கும் எங்கட நிலைமைய யோசியுங்க, எங்களை பாக்க பாவமா இல்லையா?

போன வருசம்  10ஆம் மாதம் 140 ரூபா வித்த சீரக சம்பா இப்ப 190 ரூபா. விலைவாசி பயங்கரமா ஏறுது.

நாங்கள் புலம்பெயர் தமிழர்கள் தான். பல கருத்துக்கள் உங்களை போன்றவர்களை புண்படுத்தியிருக்கும். மன வேதனைப்படுத்தியிருக்கலாம். அதற்கு சிரம் சாய்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.
நானும் என்னைப்போன்றவர்களும் ஒரு சில எழுத்துக்களை எழுத காரணம் ஆதங்கம் மட்டுமே. நாம் வாழும் நாடுகளில் உள்ள  சர்வ சாதாரண ஜனநாயக உரிமைகளை கூட சிங்கள அரசு தமிழர்களுக்கு தரவில்லை என்பதே. தரமான அரசியல் நிலைகளும் இல்லை என்பதே. இந்த நவநாகரீக உலகில் இன்னும் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகள் இருப்பதையிட்டு மன வருத்தமடைகின்றேன். :(

பொருளாதார ரீதியில் புண்படுத்தும் நோக்கம் எள்ளளவும் இல்லை என்பதை மனதார சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

அண்ணை ஊரில இருக்கும் எங்கட நிலைமைய யோசியுங்க, எங்களை பாக்க பாவமா இல்லையா?

போன வருசம்  10ஆம் மாதம் 140 ரூபா வித்த சீரக சம்பா இப்ப 190 ரூபா. விலைவாசி பயங்கரமா ஏறுது.

இன்றைய தமிழினத்தின் இரண்டும் கெட்ட நிலை இது தான்.

எம்மீது கொட்டப்பட்ட ஆயுதங்களுக்கும் கடன்களுக்கும் நாமே பலியாகிக்கொண்டுள்ளோம்.

அதேநேரம் அதை சொல்வதினூடாக அல்லது வரவேற்பதினூடாக கூட எம்மவரையே பகைக்க வேண்டிய நிலை?😭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, விசுகு said:

இன்றைய தமிழினத்தின் இரண்டும் கெட்ட நிலை இது தான்.

எம்மீது கொட்டப்பட்ட ஆயுதங்களுக்கும் கடன்களுக்கும் நாமே பலியாகிக்கொண்டுள்ளோம்.

அதேநேரம் அதை சொல்வதினூடாக அல்லது வரவேற்பதினூடாக கூட எம்மவரையே பகைக்க வேண்டிய நிலை?😭

தமிழினத்தின் அழிவுகளை  வைத்து, சர்வதேசத்தின் பரிதாப அலைகளையும்,இயற்கை அனர்த்தங்களால் வரும் சர்வதேச உதவிகளையும் வைத்து தங்களை தக்க வைத்துக்கொள்கின்றது சிங்கள இனவாத அரசு.

 வெளிநாடு....இங்குள்ள அரசியல் விரிவுகளையும் சம அரசியல்களையும் நேரடியாக காண்கின்றோம். இதே அரசியல், எல்லோருக்குமான ஒரே சம உரிமை ஏன் இலங்கையில் இருக்கக்கூடாது என கேட்கின்றோம். இந்த கேள்வி எம்மவரையே நோகடிக்கின்றது. ஏன் என்று தெரியவில்லை?  இதே கேள்விக்கு ஆசிய அரசியல் வேறு பட்டது என ஒரு யாழ்கள உறவு சென்ற வருடம் பதிலளித்து இருந்தார்.

இராணுவம் இல்லாத சமுதாயமும், ஒவ்வொரு பொது மனிதனுக்கும் சம உரிமை உள்ள நாடு மட்டுமே உலகில் அமைதியாக வாழ முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இப்படியான திரிகளில் உண்மையை எழுதினால் முட்டாள்கருத்துக்களை வைப்பதுக்கு என்றே கொஞ்சம் அனாமத்தாய் திரிகினம் முன்பு எழுதியதே காணும் .

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் கோவம் இல்லை, எங்கட சனத்தின்ர கடின நிலையைச் சொன்னேன். முன்னாள் பிரதமர் சிறிமா காலம் போல கொண்டுவர அரசு நினைக்குது போல. எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்று தெரியேல.

  • கருத்துக்கள உறவுகள்
On 01/04/2021 at 06:48, ஏராளன் said:

அண்ணை ஊரில இருக்கும் எங்கட நிலைமைய யோசியுங்க, எங்களை பாக்க பாவமா இல்லையா?

போன வருசம்  10ஆம் மாதம் 140 ரூபா வித்த சீரக சம்பா இப்ப 190 ரூபா. விலைவாசி பயங்கரமா ஏறுது.

இவ்வளவு நாளும் நீங்களும் ஏதோ ஒரு வெளி நாட்டில் தான் இருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.. 

சத்தியாமா நான் தாயகத்தில தான் இருக்கிறேன், நம்பாவிடில் உடையார் அண்ணையை கேளுங்கோ.

6 minutes ago, யாயினி said:

இவ்வளவு நாளும் நீங்களும் ஏதோ ஒரு வெளி நாட்டில் தான் இருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரச்சனையும் இல்லை..இதுக்கு எல்லாம் போய் சத்தியம் செய்வதா...இல்லக்கா நான் ஊரில் தான் இருக்கிறன் என்றாலே சரி.அவ்வப்போது இப்படி அங்குள்ள நிலைமையை உங்களைப் போன்றவர்கள் சொன்னால் மட்டுமே நம்பிக்கையாக அறியக் கூடிதாக இருக்கிறது ஏராளன்.

Anti Sri Lankan forex was started in secrecy in the year of 1956 by Tamil diaspora in London. 
It spread globally and grown to $US6.7 Billion betting against Sri Lankan rupee(LKR) to today.
இலங்கை எதிர்ப்பு அந்நிய செலாவணி 1956 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோரால் ரகசியமாக தொடங்கப்பட்டது. 
இது உலகளவில் பரவியது மற்றும் இலங்கை ரூபிக்கு (எல்.கே.ஆர்) எதிராக இன்று வரை 6.7 பில்லியன் அமெரிக்க டாலர் பந்தயமாக வளர்ந்தது.
Anti Sri Lanka Rupee (LKR) forex will end after Tamil Eelam creation.
தமிழீழம் உருவாக்கிய பின்னர் இலங்கை எதிர்ப்பு ரூபே அந்நிய செலாவணி முடிவடையும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அண்ணைமார் கோவம் இல்லை, எங்கட சனத்தின்ர கடின நிலையைச் சொன்னேன். முன்னாள் பிரதமர் சிறிமா காலம் போல கொண்டுவர அரசு நினைக்குது போல. எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்று தெரியேல.

என்ன செய்யலாம் ?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

என்ன செய்யலாம் ?

சீரகச் சம்பா அரிசியை விட்டுவிட்டு நாட்டரிசியைப் பாவிக்கலாம். வயல் நிலங்களில் வீடுகளையும், கட்டடங்களையும் கட்டுவதை விட்டு எல்லோரும் விவசாயிகாக உழவுத் தொழிலில் ஈடுபடலாம். நெல்லை விற்பதை விட்டு அதை அரிசியாக்கி விற்கமுனையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

என்ன செய்யலாம் ?

இறக்குமதியைக்கட்டுப்படுத்தி..உள்ஊர் உற்பத்தியைக்கூட்டி...எற்றுமதியை  அதிகரிக்கலாம்...எமது வளங்களக்கொண்டு. உற்பத்தி செய்து  ஏற்றுமதி செய்யும்  வெளிநாட்டுத்தொழில்சாலைகளை  நிறுவ அனுமதி வழங்கலாம்/ஊக்கிவிக்கலாம் 

அமெரிக்காப்பொருளை வேண்டுவது=அமெரிக்காடொலரைவேண்டுவது  எனவே அமெரிக்காப் பொருளைத்தவிர்தல்  டொலர் வேண்டுவது தவிர்க்கப்படும்...சில நேரம்

இது பிழையாகயிருக்கலாம்...தெரிந்தவர்கள் அறியத்தரவும்.

2 minutes ago, Kandiah57 said:

கிருபன்  சொனனாதும். சரி. தயவு. செய்து. ஜேரமனிப்பொருள்களை  வேண்டுவதைத் தவிர்க்கவேண்டாம்....😜😜😜

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கிருபன் said:

சீரகச் சம்பா அரிசியை விட்டுவிட்டு நாட்டரிசியைப் பாவிக்கலாம். வயல் நிலங்களில் வீடுகளையும், கட்டடங்களையும் கட்டுவதை விட்டு எல்லோரும் விவசாயிகாக உழவுத் தொழிலில் ஈடுபடலாம். நெல்லை விற்பதை விட்டு அதை அரிசியாக்கி விற்கமுனையலாம்.

நீங்க சொன்னதை நம்ம வழியில் எழுதினேன் மிளகாய் உறைப்பு கூடிப்போயிட்டுது இன்று வேறு வெள்ளிக்கிழமை தாரை தப்பட்டையுடன் ஒரு கூட்டமே குத்தி  முறியும் நல்லபிள்ளைக்கு "என்ன செய்யலாம்?" 🤔என்று ஒரு கேள்வியுடன் ஒதுங்க வேண்டி வந்தது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றுமதியை அதிகரிக்க உள்ளூரில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கும். நெல்லை அரிசியாக்கி விற்க விவசாயிகளால் முடியுமா? அதற்கான களஞ்சிய, இயந்திர வசதிகள் சாதாரண விவசாயிகளிடம் இருக்குமா?

விதை நெலில் இருந்து கிருமிநாசினி வரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி.

சிறீலங்கா அரசின் ஏற்றுமதி இறக்குமதி எல்லாம் US $ இல்.

நிலந்தடி நீரை நம்பி நெல் விளைச்சல் செய்ய முடியாது. குளங்களை ஆழப்படுத்தி தேக்கி வைக்கும் நீரின் கொள்ளளவை கூட்ட வேண்டும்.

இறக்குமதியை படிப்படியாகக் கட்டுப்படுத்தி உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

ஆனால் சீறீலங்கா அரசோ ( சீனா தவிரத்து) இறக்குமதியை தடை செய்துள்ளமையால் விலை அதிகரித்து உள்ளூர் மக்கள் பாடு திண்டாட்டம்.

உ+ம்= மஞ்சள், உழுந்து, மோட்டார் வாகனங்கள்.

இறக்குமதி செய்யும் பொருட்களின் உள்ளூர் உற்பத்திக்கு அரசு ஆதரவாக செயற்பட வேண்டும். 

உ+ம்= மானியத்தில் அடிப்படை வசதி வழங்கல்கள், வட்டியில்லா கடன்கள்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

ஆனால் சீறீலங்கா அரசோ ( சீனா தவிரத்து) இறக்குமதியை தடை செய்துள்ளமையால் விலை அதிகரித்து உள்ளூர் மக்கள் பாடு திண்டாட்டம்.

உ+ம்= மஞ்சள், உழுந்து, மோட்டார் வாகனங்கள்.

யப்பன்.   ஜேர்மனி. கார்களை.  இலங்கையில். பார்த்துள்ளேன்.  அவை எப்படி வந்தன.  சீனாக்கு ஊடகவா? அல்லது  முன்னைய ஆட்ச்சியில்  இறக்குமதி செயயப்பட்டதா?உள்ஊர் உற்பத்திக்கு தடைபோடுவதால்...மக்கள் உற்பத்தியைப்பெருக்குவார்கள். உதாரணம்  சிறிமா ஆட்ச்சியில். சிவப்பு செத்தல் மிளகாய்  நல்ல விலை போனாது  வடக்கு மக்கள் சந்தோசமாக இருந்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kandiah57 said:

அவை முன்னய ஆட்சியில் இறக்குமதி செய்யப்பட்டவை. மின்சாரத்தில் ஓடும் மோட்டார் வாகனங்கள் கூட தற்போது தடை. பாவித்த மோட்டார் சைக்கிள் 200,000/= மேல்.

இறக்குமதி தடையால் பாதிக்கப்பட்டது மக்களே, மஞ்சள் 6,000/= வரை போனது.

வட பகுதி மக்களில் எத்தனை வீதமானவர்கள் விவசாயிகளாக உன்ளனர்? 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kandiah57 said:

சிறிமா ஆட்ச்சியில். சிவப்பு செத்தல் மிளகாய்  நல்ல விலை போனாது  வடக்கு மக்கள் சந்தோசமாக இருந்தார்கள்

சிவப்பு செத்தல் மிளகாய் வித்துவந்த சந்தோசம்தான் உங்களை இத்தனை அதி காரமாக கருத்துக்களும் எழுத வைத்துள்ளதுபோல் தெரிகிறது.🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

அவை முன்னய ஆட்சியில் இறக்குமதி செய்யப்பட்டவை. மின்சாரத்தில் ஓடும் மோட்டார் வாகனங்கள் கூட தற்போது தடை. பாவித்த மோட்டார் சைக்கிள் 200,000/= மேல்.

இறக்குமதி தடையால் பாதிக்கப்பட்டது மக்களே, மஞ்சள் 6,000/= வரை போனது.

வட பகுதி மக்களில் எத்தனை வீதமானவர்கள் விவசாயிகளாக உன்ளனர்? 

நீங்கள் இறக்குமதியை. வரவேற்கிறீர்களா? ஒர் கடையில்  பொருள்கள். விற்றால்  தான் அந்தக்கடைக்கு  வருமானம்  கிடைக்கும்.  அதேபோல். ஒரு நாட்டிலிருந்து  எற்றுமதி  அதிகரிக்கும்போதுதான். அந்த நாடு வளர்ச்சியடையும். சீனா ஏற்றுமதியை அதிகரிப்பாதாற்க்காக. தனது  பணத்தின் பெறுமதியை  வலுயிழக்கச்செய்ததாய். ஒர். பதிவு  வாசித்துள்ளேன் .இது சரியா?  மற்றும் முன்னாள் அமெரிக்கா அதிபர்  

ரெனல்ட் டிரம்ட். தனது நாட்டுப்பொருக்களை  வேண்டுமாறு. இந்தியாவுடன். சண்டை   போட்டார்.

வடபகுதியில்  1984ஆம் ஆண்டு  கிட்டத்தட்ட. 70/80%விவசாயிகள்  உத்தியோகம்  பார்த்வர்கள் கூட பகுதிநேரமாக விவசாயம் செய்தார்கள்...இப்ப அப்படியில்லை  .எத்தனை. வீதம் என்றும் தெரியாது. விளை பொருக்களை  விற்க முடிவதில்லை அல்லது செலவு மிக அதிகம்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.