Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்

Featured Replies

12 minutes ago, விசுகு said:

அது முதலிலேயே எழுதியிருந்தேன்

யாழ் களம் அதற்கானதல்ல உங்கள் ஜாலிக்கதைகளை வேறு எங்காவது விடுங்கள் என்று.

நீங்கள் வந்து இங்கு ஜாலியா கதைக்கலாம் என்றால் நாங்களும் கதைக்கலாம். 

  • Replies 145
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

நீங்கள் வந்து இங்கு ஜாலியா கதைக்கலாம் என்றால் நாங்களும் கதைக்கலாம். 

இது தான் நான் நித்திரை மாதிரி நடிப்பவர்களை எழுப்ப நேரத்தை வீணடிப்பதில்லை 

5 hours ago, tulpen said:

 சொந்த நாட்டில்  ஒரு சிறிய அதிகார அலகை கூட  பெற வக்கில்லத  கூட்டம் பக்கத்து நாட்டில் போய்  எதோ  புடுங்கப் போகிறார்களாம்.   நாடு பிடிக்கிறோம் என்று ஏமாற்றி  சொந்த மக்களிடம் ஐரோப்பாவில்  திருடிக்கொண்டு ஓடிய கூட்டம் பக்கது நாட்டில் திருட்டை தடுக்க வேண்டுமாம். 😂😂😂😂😂😂

நல்லாய் வாயில் வருது  ஆனால் எங்கள் எதிரிக்கு நல்ல இதயம், உடன் நல்ல மனது இருக்க வேண்டும் ,இல்லாதவர்களிடம் விவாதித்து நேரத்தை வீண் அடிக்க வேண்டாம் ,(நாய் வாலை நிமித்த முடியாது )

Edited by appan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

சொந்த நாட்டில சிங்களவன் ஆட்சியின் கீழ் சேர்ந்து வாழ ஏலாத, ஐரோப்பா ஓடின கூட்டம், பக்கத்து நாட்டில, இனவாதம் பேசாம தெலுங்கர்களின் கீழ் வாழ வேண்டுமாம் என்று போதிக்குமாம். 😂😂😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

சொந்த நாட்டில்  ஒரு சிறிய அதிகார அலகை கூட  பெற வக்கில்லத  கூட்டம் பக்கத்து நாட்டில் போய்  எதோ  புடுங்கப் போகிறார்களாம்.   நாடு பிடிக்கிறோம் என்று ஏமாற்றி  சொந்த மக்களிடம் ஐரோப்பாவில்  திருடிக்கொண்டு ஓடிய கூட்டம் பக்கது நாட்டில் திருட்டை தடுக்க வேண்டுமாம். 😂😂😂😂😂😂

நீங்கள் தமிழன் தன்மானத்தை குழி தோண்டி புதைக்க பார்க்கிறீர்கள். எத்தனை ஆண்டு போராட்டங்களின் பின்பும் தமிழர்கள் தங்களது திமிரோடு வாழ்கிறார்கள்.

அவர்கள் அதிகாரம் பரவலாக்கலை செய்தாலும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் தமிழர்கள் விழுந்து போகமாட்டார்கள். திரும்பத் திரும்ப அடி எடுத்து வைப்பார்கள். ஒருபொழுதும் குனிய மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் திமிருக்கு ஒரு குட்டி கதை ,நடந்த கதை.

தமிழர்களின் ஆரம்பகால சொற்களின் கோவை பாடல் வடிவில் இருந்தது அது நிகண்டு நிகண்டு என அழைக்கப்படும்.
நிகண்டு பிற்காலத்தில் அகராதியாக தொகுக்கப்பட்டது.

அதனை முதன்மையாக உருவாக்கியவர் கதிரைவேலனார். தமிழகத்திலோ அல்லது இலங்கையிலோ அகராதி இருக்கவில்லை. இவரை முதல் அகராதியைத் தொகுத்த ஈழத்து தமிழ்  பேரறிஞர்.

இவர் தமிழகத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொள்கின்றார். தமிழ் வளர்ப்பதற்கான ஒரு சொற்பொழிவு. ஈழத்திலிருந்து செல்வது வழக்கம்.

அந்தக் காலத்தில் திராவிட செம்மல் தமிழர் எதிர்ப்பு பீரங்கி பெரியாரின் காலகட்டம். மரியாதையின் நிமித்தம் இவர் பெரியாரை சந்திப்பதற்காக சென்றார். பெரியாரின் மரியாதை தமிழகமெங்கும் ஒரு ஆளும், தமிழ் பேராசான் ஆக அறியப்பட்டிருந்தார்.

ஆனால் பெரியாருக்கு உள்ளூர இந்த மனிதனை; தமிழ் பேரறிஞர் என்ற காரணத்தினால் பிடிக்கவில்லை. வந்தாரை வரவேற்கும் பால் தேநீர் கொடுக்கின்றார். அதனை குடித்து குடித்து விட்டு இருவருக்குமான உரையாடல் தொடர்கின்றது. 

ஒருகட்டத்தில் தமிழ் மீது இருந்த காழ்ப்புணர்ச்சி, ஏற்கனவே இவர் மீது இருந்த வெறுப்பு பெரியார் இவரைப் பார்த்து தமிழ் பேரறிஞர்கள் வரும் வெறுமனே புளுகு கூட்டம் ,காட்டுமிராண்டி தமிழ் மொழிக்கு சொந்தக்காரர், பிழைப்புக்காக உரை நிகழ்த்தும் மூடர்கள் என சொல்லி இருக்கின்றார்.

கதிரைவேலனாருக்கு பெரும் சினம் வந்துவிட்டது. இவர் கபடம் தெரிந்தவுடன், "உன்னிடம் வந்தது கதைத்தது எல்லாமே தவறு, உன்னோடு இருந்த இந்த நேரத்தையும் நான் மறந்துவிடுவேன், அதுபோல் நீர் எனக்கு தந்த தேநீரும் என்னுள் வேண்டாம்" எனச் சொல்லிவிட்டு வாய்க்குள் விரல் விட்டு அவர் கொடுத்த பால் தேநீர் சத்தியாக கொண்டு வந்தார்.

இதுதான் அன்றைய தமிழகத்தின் தமிழ் சீர்திருத்தமும், ஈழத்து தமிழ் பேரன்பும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, இசைக்கலைஞன் said:

பணம் எங்கிருந்து வரும் என கேட்டார் கிருபன்.

நிலையான உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர் பெறச்செய்ய கூட்டிணைவு நிறுவனங்களை உருவாக்கி தமிழ் தேசிய முதலாளிகளை உருவாக்கும் திட்டத்தை கொடுத்துள்ளார்கள். இதை போன்றதொரு நடவடிக்கை கனேடிய நடுவண் அரசினாலும் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக Cameco Corporation யுரேனிய அகழ்வில் ஈடுபட்டுள்ளது. மேலும் உலக வங்கி போன்றவற்றின் கடன்களும் பெற்றுக் கொள்ளப்படும்.

அதையெல்லாம் சீரியஸாக எடுத்து நீங்கள் பதில் வேறு எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் 
ஜெயலலிதா ஆட்ச்சியில் முட்டையில் செய்த மோசடியே 300 கோடி ரூபா.

தமிழ் நாடு மக்கள் தொகை 6.5 கோடி 
ஒரு நாளைக்கு உண்ணும் முட்டையின் எண்ணிக்கையே 55 லட்ஷத்துக்கு மேல்.

சாணி அடிக்க என்று இறங்கி சேறு கலக்கும் கூட்டத்தினரை அப்படியே விட்டு விடுவதுதான் 
ஆரோக்கியமான கருத்தாடல். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

ஜேர்மனியில் ஒரு தொழிலைப் பெறுவதற்க்கு அந்த குறிப்பிட்ட நபர்  நான் தான்  இந்தத்தொழிலுக்கு சரியான நபரென்று  நிருபிக்கவேண்டும்...சீமான் நான் தான் தமிழ்நாட்டின்  முதலமைச்சராக வரத்தகுதியுடையவனென்று  எந்தக்கட்டத்திலும் நிருபிக்கவில்லை அவரது பேச்சுகள் கேட்ப்பதற்கு நரம்பு மண்டலத்தைத்துண்டுவதாயும் ..அழகு...இனிமையுடனிருக்கிறது..

அமெசன். நிருவனர். தமிழ்நாட்டில் பலாயிரம பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துளளார். சீமானும். திறமையிருத்தால். நீங்கள் மேற் சொன்னமுறையில் பணத்தைப்பெற்று பல நிருவனங்களை. உருவாக்கியிருக்க முடியும் அரசியலுக்கு வர வேண்டியதில்லை..உலகவங்கிசரி. ..தனிநபர்கள் சரி. இலாபம் தரும்  தொழிலகளில்தான் மூதலிடுவார்கள்.. இவருக்கு வாக்குப்போடவே. மக்கள் பின் நின்றால். எப்படி மூதலிடு செய்ய முன் வாருவர்கள்?😍😍😍😍

நீங்கள் ஜெர்மனி போனதுக்கு பதிலாக மாத்தறையிலயே இருந்திருக்கலாம் 🚶🏻‍♂️🚶🏻‍♂️

தொழில் முனைவோருக்கும் (entrepreneurs), சட்டம் இயற்றுவோருக்கும் (lawmakers) வேறுபாடுகள் உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MullaiNilavan said:

தமிழர்களின் திமிருக்கு ஒரு குட்டி கதை ,நடந்த கதை.

இவர் தமிழகத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொள்கின்றார். தமிழ் வளர்ப்பதற்கான ஒரு சொற்பொழிவு. ஈழத்திலிருந்து செல்வது வழக்கம்.

அந்தக் காலத்தில் திராவிட செம்மல் தமிழர் எதிர்ப்பு பீரங்கி பெரியாரின் காலகட்டம். மரியாதையின் நிமித்தம் இவர் பெரியாரை சந்திப்பதற்காக சென்றார். பெரியாரின் மரியாதை தமிழகமெங்கும் ஒரு ஆளும், தமிழ் பேராசான் ஆக அறியப்பட்டிருந்தார்.

இதில் நீங்கள் கதிரைவேலனார் என்பவர் தென்புலோலியோர் சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள்.  ஒரு குறுகிய பயணத்தின்போது பெரியாரை மரியாதை நிமித்தம் சென்று சந்தித்தார் என்று “கதை” போகின்றது. இதனை நீங்கள் பெரியாரை அவதூறு செய்யும் முகநூல் பதிவுகளில் அல்லது “தமிழ் சிந்தனையாளர் பேரவை” என்று யூடியூப் சனல் வைத்து “வந்தேறி”களை விரட்டும் பிரச்சார வீடியோக்களில் இருந்து எடுத்துள்ளீர்கள். நீங்கள் சொன்ன “கதை” எங்கேயிருந்து வந்தது என்ற யூடியூப் இணைப்பையும் என்னால் தரமுடியும்!

வடமராட்சி மண்ணின் பெருமைக்குரிய சதாவதானி கதிரைவேற்பிள்ளை தமிழகத்தில் பலகாலம் இருந்தவர். குறுகிய பயணம் போனவர் இல்லை.  1897 இல் சென்னை உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி ஏற்ற்வர்.

நா. கதிரைவேற்பிள்ளை இலங்கைத் தமிழறிஞர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர். சதாவதானி எனப் போற்றப் பெற்றவர்.

http://worldtamilforum.com/historical_facts/na-kathiraiverpillai/

மேலும், பெரியார் நூலில் இருந்து சிறு பகுதியை எடுத்து, அதற்கு தங்களின் பிரச்சாரத்தை கற்பனையில் அடித்துவிட்டுள்ளார்கள்.  அதைப் பார்த்து உங்கள் வியாக்கியானம் “இதுதான் அன்றைய தமிழகத்தின் தமிழ் சீர்திருத்தமும், ஈழத்து தமிழ் பேரன்பும்” என்று இருக்கின்றது😁

நூலில் இருப்பது..

“புலவர் என்றால் சொந்த புத்தி இல்லாதவன். புளுகன்” என்றுதான் உரை கூறுவேன்.

நா. கதிரைவேற்பிள்ளை என்கிற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப் பகுத்தறிவுக் கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடம் கண்டேன் என்று சொன்னதற்கு, உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி, என்னிடம் வாங்கிக் குடித்தப் பாலை விரலைவிட்டு வாந்தி எடுத்துவிட்டார்.

இதுவரை நாட்டுக்கு மனித சமுதாயத்திற்கு இந்தநாட்டில் எந்தப் புலவனாலும் வளர்ச்சி அபிவிருத்தி காரியம் ஆனது கிடையாது. அதற்கு தகுதியான புலவன் இங்கு யாரும் இல்லை.

சாதிக்கட்டமைப்பை இலக்கியங்கள் உயர்த்திப் பேசியதாலும், பார்ப்பனியத்தை உயர்த்தியதாலும் கடவுள், மதம், மொழி, இலக்கியங்கள் எல்லாமே காட்டுமிராண்டி என்று கடுஞ்சினத்துடன் கூறியிருந்தார்.  அதனைத் திரித்து பெரியாரை தமிழர் வெறுப்பாளர் என்று “வந்தேறி”களை விரட்டுபவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள். அவ்வளவுதான்.

Edited by கிருபன்
தகவல் திருத்த

கருத்து முரண்பாட்டை சகிக்க முடியாமல் குடித்த பாலை கை வைத்து வாந்தியெடுத்து அநாகரிக செயலை  செய்த தமிழ் புலவரை விட  தமிழுக்கு எழுத்து சீர்திருத்தம் வேண்டும் என்ற கருத்தியலை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்துமுகமாக 1935 ம் ஆண்டிலேயே தான் நடத்திய பத்திரிகையில் அதை நடைமுறைப்படுத்தி தமிழ் எழுத்து சீர்திருத்த‍த்தை ஊக்கிவித்த  பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு மேலானது.  1977 ல் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தமிழ் நாட்டில் அதை நடைமுறைப்படுத்தினார். இலங்கையில் 1985 க்கு பிற்பட்ட காலத்திலேயே அது நடைமுறைப்படுத்தப்பட்டது. 

தமிழில் எழுத்து சீர்திருத்தம் இன்னும் பூரணமாவில்லை என்றாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட எழுத்து சீர்திருத்தம் தான் கண‍ணி தமிழுக்கு உதவியாக உள்ளது. 

குடித்த பாலை கைவைத்து வாந்தியெடுத்த விடயம் நாகரீக சமுதாயத்தின் பார்வையில் காட்டுமிராண்டிதனம் தான்.  உண்மையில் இதில் பெருமை இல்லை. வெட்கப்பட்டவேண்டிய விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இதில் நீங்கள் கதிரைவேலனார் என்பவர் தென்புலோலியோர் சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள். யாழ்-பருத்தித்துறை வீதியில் மந்திகையில் அவருக்கு ஒரு சிலையிருக்கின்றது.  ஒரு குறுகிய பயணத்தின்போது பெரியாரை மரியாதை நிமித்தம் சென்று சந்தித்தார் என்று “கதை” போகின்றது. இதனை நீங்கள் பெரியாரை அவதூறு செய்யும் முகநூல் பதிவுகளில் அல்லது “தமிழ் சிந்தனையாளர் பேரவை” என்று யூடியூப் சனல் வைத்து “வந்தேறி”களை விரட்டும் பிரச்சார வீடியோக்களில் இருந்து எடுத்துள்ளீர்கள். நீங்கள் சொன்ன “கதை” எங்கேயிருந்து வந்தது என்ற யூடியூப் இணைப்பையும் என்னால் தரமுடியும்!

வடமராட்சி மண்ணின் பெருமைக்குரிய சதாவதானி கதிரைவேற்பிள்ளை தமிழகத்தில் பலகாலம் இருந்தவர். குறுகிய பயணம் போனவர் இல்லை.  1897 இல் சென்னை உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி ஏற்ற்வர்.

நா. கதிரைவேற்பிள்ளை இலங்கைத் தமிழறிஞர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர். சதாவதானி எனப் போற்றப் பெற்றவர்.

http://worldtamilforum.com/historical_facts/na-kathiraiverpillai/

மேலும், பெரியார் நூலில் இருந்து சிறு பகுதியை எடுத்து, அதற்கு தங்களின் பிரச்சாரத்தை கற்பனையில் அடித்துவிட்டுள்ளார்கள்.  அதைப் பார்த்து உங்கள் வியாக்கியானம் “இதுதான் அன்றைய தமிழகத்தின் தமிழ் சீர்திருத்தமும், ஈழத்து தமிழ் பேரன்பும்” என்று இருக்கின்றது😁

நூலில் இருப்பது..

“புலவர் என்றால் சொந்த புத்தி இல்லாதவன். புளுகன்” என்றுதான் உரை கூறுவேன்.

நா. கதிரைவேற்பிள்ளை என்கிற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப் பகுத்தறிவுக் கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடம் கண்டேன் என்று சொன்னதற்கு, உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி, என்னிடம் வாங்கிக் குடித்தப் பாலை விரலைவிட்டு வாந்தி எடுத்துவிட்டார்.

இதுவரை நாட்டுக்கு மனித சமுதாயத்திற்கு இந்தநாட்டில் எந்தப் புலவனாலும் வளர்ச்சி அபிவிருத்தி காரியம் ஆனது கிடையாது. அதற்கு தகுதியான புலவன் இங்கு யாரும் இல்லை.

சாதிக்கட்டமைப்பை இலக்கியங்கள் உயர்த்திப் பேசியதாலும், பார்ப்பனியத்தை உயர்த்தியதாலும் கடவுள், மதம், மொழி, இலக்கியங்கள் எல்லாமே காட்டுமிராண்டி என்று கடுஞ்சினத்துடன் கூறியிருந்தார்.  அதனைத் திரித்து பெரியாரை தமிழர் வெறுப்பாளர் என்று “வந்தேறி”களை விரட்டுபவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள். அவ்வளவுதான்.

ஐயா உங்களுடைய நான் உங்களுடைய பதிவு பார்த்தேன்,

நீங்கள் ஒரு கண்ணோட்டத்திற்கு முதலில் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழர் தங்களுக்கான ஒரு நீண்ட உன்னதமான ஒரு விடுதலைப் பயணத்தை தொடங்கினார்கள். அப்போது இலங்கையில் இருக்கின்ற எல்லாவிதமான அறிஞர்கள், பேரறிஞர்கள் வரலாறுகள் சிறு காகிதத் துண்டுகள் எல்லாம்  சேகரித்தார்கள்.

அதுக்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கள் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் திறனை வெளிப்படுத்துவதற்காக அயராது உழைத்தார். அதன் விளைவு நாங்கள் ஒருவருமே எதிர்பாராத வாய்வழி கதைகளும் அறிஞர்களின் அல்லது சிந்தனையாளர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன.

வாழ்ந்து போன அவர்களின் சொந்தங்கள் அல்லது அவர்களுடைய அவர்களின் வாரிசுகள் அடையாளம் காணப்பட்டார்கள். அதன் விரிவு இலங்கையின் நமது நிலப்பரப்பு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் நீண்டது.படிமுறை வளர்ச்சியில் இலங்கையில் சந்து பொந்துகள் எல்லாம் சேகரித்தார்கள்.

எப்பொழுதுமே கடல் வழி பயணத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சியில் முனைப்பகுதி, அதாவது நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பகுதி இந்தியாவில் தமிழ்நாட்டோடு அதிக பிணைப்பும் தமிழும் தமிழ் சார்ந்த தொடர்புகளும் சற்று அதிகமாகவே இருந்தது.

அதன் பொருட்டு இங்கு இருப்பவர்கள், இப்போ இருக்கின்ற நடைமுறைகளை பயண நடைமுறைகளை பின்பற்றி இருக்கவில்லை.
சில தமிழ் வரலாறுகளை இங்கிருந்து சென்றவர்கள் அங்கு போதித்தார்கள். அது  பெரும் ஒரு குடைச்சலை அவர்களுக்கு உண்டு பண்ணிற்று.
அந்த காலத்தில் தமிழர்கள் ஒரு  நிழல் சுதந்திரமான ஒரு போக்குவரத்தினை தொடர்புகளையும் தமிழகத்தோடு கொண்டிருந்தார்கள்.

நான் உங்களின் அறிவு தேடலுக்காக ஒன்றை குறிப்பிடுகின்றேன். இலங்கையில் புத்த மதத்தின் எழுச்சிக்கு ஒரு தமிழ் அறிஞர் எவ்வளவு முக்கியத்துவமும், அவரே ஒரு பெரும் பங்கு வகித்த வகித்தார் என்பதற்கு ஒரு சான்று சொல்கிறது ஒரு சான்று கூறுகின்றேன். 

சில வேளைகளில் உங்களுக்கு சுயமாக  தெரிந்திருக்கக் கூடும்.

அவர் திரு கே கோவிந்தசாமி பிள்ளை. அவரோடு சமகாலத்தில் இன்னுமொரு அறிஞர் உறுதுணையாக  அவர் இன்னொரு துறையிலும் தமிழை தமிழை வளர்த்தார்கள் அவர் பெயர் திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
என்னைப் பொருத்தவரையில் உலகத் தமிழர் பேரவையின் நீங்கள் குறிப்பிட்ட அந்தச் செய்தியை முழுவதுமாக ஏற்றுக் கொள்பவன் அல்ல.

நான் எப்பொழுதும் தர்க்கரீதியான ஒரு ஆய்வுக்கு என்னை தயார் செய்து, அதற்குள் அதன்பால் கிடைக்கின்ற தரவுகளை எனது கருத்துக்களை அதில் என்னுடைய பதிவு செய்தேன்.

You are in UK and we learnt  a lot of things , How to critically assess each references and found to determine truth behind and evaluate the fact.

We all have huge responsibility now to be systematic and focused in order to trigger the scholar in different direction, don’t be copy cat. 

சேகரித்த அந்த தொகுப்புகளுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை சரியாக தெரியவில்லை. ஆனால் சில சில பாகங்கள் ஆங்காங்கே இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இருப்பதாக ஒரு செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இசைக்கலைஞன் said:

நீங்கள் ஜெர்மனி போனதுக்கு பதிலாக மாத்தறையிலயே இருந்திருக்கலாம்

இது  ஒரு கருத்தா?தலைப்பு கந்தையன் எங்கு இருகக வேண்டுமென்பதில்லை. நான் எங்கு இருககவேண்டுமென்பது எனது தனிபபட்ட விடயமாகும்...இங்கு பேசப்படுவது சீமானுக்கு முதலமைச்சராக வர என்ன தகுதியுண்டு ?நாம் தமிழரென்பது  தகுதியாகுமா? அப்ப. மற்றவர்கள். தமிழரில்லையா? இதுவரை எனன செய்துள்ளார்?பிரபாகரன். பற்றி பேசுவது  ..கதைப்பதில் பிரச்சனையிலலை.  ஆனால். தேர்த்தலில் அதனைப்பயன்படுத்துவது. சீமான்  தான் தகுதியான. வேட்பாளரில்லை என்று சீமானே  சொல்வது போன்றதாகும்.தமிழகத்தை. தமிழன் ஆள வேணடுமென்கிறார். ஆம். ஆனால். எந்தக்கட்டத்திலும்  இந்தச்சீமான் ஆளவேண்டுமென்று சொன்னதில்லை. கனடா...பிரித்தானியா...அவுஸ்ரேலியா.. அமெரிக்கா...போன்ற நாடுகளில். நாம் ஆங்கிலேயர் என்று  அரசியல். செய்தால் மற்ற மொழி பேசும் மக்களின் நிலையென்னவாகும்..அவர்கள். மேற்படி நாடுகளில்  வாழ முடியுமா?

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி  இந்தியச்சட்டம் தமிழ்நாட்டைக்கட்டுப்படுத்தும் அதை மீறி சீமானால்  ஒரு சட்டம் இயற்றமாடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இசைக்கலைஞன் said:

தொழில் முனைவோருக்கும் (entrepreneurs), சட்டம் இயற்றுவோருக்கும் (lawmakers) வேறுபாடுகள் உண்டு.

இது எனக்கும் தெரியும்.ஜேர்மனில்  சட்டமியற்றும்போது தொழில் முனைவோரின்  கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும். ஆனால் இயற்றப்படும்  சட்டம் தான். தொழில் முனைவோரின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கிறது ..

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2021 at 10:27, Kandiah57 said:
 
நான். கருணநிதி பற்றி கதைக்க விரும்பவில்லை. ஆனால்  கருணநாதியின் தமிழ் பற்றி கதைக்க விரும்புகிறேன்.  கருணநிதி  தமிழை நன்றாக வளைத்தார்..தமிழும் நன்றாக  அவருக்கு  வளைத்து கொடுத்து. அவர் செய்த  சரி..பிழை....அனைத்துக்கும் சுத்தத்தமிழ் கொண்டு சாயம் பூசினார்...அவர்  தமிழைப் பயன்படுத்தியாதால் தமிழ்.  நனறு  வளர்த்தது..தமிழ்நாட்டில் தமிழ் வளர்த்ததிற்க்கு  கருணநிதியும் ஒர் காரணம்.  தமிழ் வளர வேணடுமென்று சொன்னால். தமிழ்பேசும்...தெலுக்கன்.   கன்னடன்...மளையாளி....பஞ்சாபி..சிங்களவன்....ஆங்கிலேயன்.   இப்படியானவர்களை. ஆதரியுங்கள்.   இப்படியானவர்களால் தமிழ் வளர்கிறது...

Fachbook இல்.  ஒருவருக்கு. இனிய. பிறந்தநாள் வாழ்த்துக்கள். என  எழுதினேன்..மேலும் தொடர்ந்து பார்த்தபோது....

Happy  Birthday to you. என. பல.  பல.  தமிழர்கள்.  பதிவு. செய்திருத்தார்கள்..இவர்களால். தமிழ் வளருமா? அல்லது அழியுமா? இந்தத்தமிழர்களுடன். ஓப்பிடும்போது.  தெலுங்கன்.  கருணநிதி. பல.  பல.  மடங்கு  உயர்தவன்..அந்தக் கருணநிதிக்கு. தமிழை எழுதிக் கொடுத்து காசு. வேண்டியது  என்பது  தான்  உலகிலே. மிகச்சிறந்த பொய்யாகும்..எதிருங்கள் பிற மொழிகளில் எழுதும்...பெசும். தமிழர்களை.  (தமிழர்களுடன்)😍😍😍😍😝

வீரமா முனிவர் ஒரு இத்தாலியர் அல்லவா? அவர் தமிழுக்கு அளப்பரிய சேவைகள் செய்துள்ளார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, colomban said:

வீரமா முனிவர் ஒரு இத்தாலியர் அல்லவா? அவர் தமிழுக்கு அளப்பரிய சேவைகள் செய்துள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

இது தான் நான் நித்திரை மாதிரி நடிப்பவர்களை எழுப்ப நேரத்தை வீணடிப்பதில்லை 

நடிப்பவர்களை எழுப்புவது கஷ்டம், இவர்கள் வீண் பேச்சில் வின்னார்கள்😎

2 hours ago, Kandiah57 said:

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி  இந்தியச்சட்டம் தமிழ்நாட்டைக்கட்டுப்படுத்தும் அதை மீறி சீமானால்  ஒரு சட்டம் இயற்றமாடியாது. 

இருக்கட்டுமே, தமிழ்நாட்டு மக்கள் நினைத்தால் மாற்ற முடியும், ஆந்திர இரண்டா பிளவு படவில்லையா?

3 hours ago, tulpen said:

கருத்து முரண்பாட்டை சகிக்க முடியாமல் குடித்த பாலை கை வைத்து வாந்தியெடுத்து அநாகரிக செயலை  செய்த தமிழ் புலவரை விட  தமிழுக்கு எழுத்து சீர்திருத்தம் வேண்டும் என்ற கருத்தியலை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்துமுகமாக 1935 ம் ஆண்டிலேயே தான் நடத்திய பத்திரிகையில் அதை நடைமுறைப்படுத்தி தமிழ் எழுத்து சீர்திருத்த‍த்தை ஊக்கிவித்த  பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு மேலானது.  1977 ல் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தமிழ் நாட்டில் அதை நடைமுறைப்படுத்தினார். இலங்கையில் 1985 க்கு பிற்பட்ட காலத்திலேயே அது நடைமுறைப்படுத்தப்பட்டது. 

தமிழில் எழுத்து சீர்திருத்தம் இன்னும் பூரணமாவில்லை என்றாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட எழுத்து சீர்திருத்தம் தான் கண‍ணி தமிழுக்கு உதவியாக உள்ளது. 

குடித்த பாலை கைவைத்து வாந்தியெடுத்த விடயம் நாகரீக சமுதாயத்தின் பார்வையில் காட்டுமிராண்டிதனம் தான்.  உண்மையில் இதில் பெருமை இல்லை. வெட்கப்பட்டவேண்டிய விடயம். 

தமிழனை இழிவாக பேசியவன் வீட்டில் குடித்த பாலை வாந்தியெடுத்தது பெருமையே தமிழனாக இருப்பவனுக்கு, தமிழை வெறுப்பவனுக்கு இது காட்டு மிராண்டிதனமாகதான் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, உடையார் said:
2 hours ago, Kandiah57 said:

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி  இந்தியச்சட்டம் தமிழ்நாட்டைக்கட்டுப்படுத்தும் அதை மீறி சீமானால்  ஒரு சட்டம் இயற்றமாடியாது. 

இருக்கட்டுமே, தமிழ்நாட்டு மக்கள் நினைத்தால் மாற்ற முடியும், ஆந்திர இரண்டா பிளவு படவில்லையா?

தமிழ்நாட்டை இரண்டாக பிளக்கவா சீமான் முயற்ச்சி செய்கிறார் அதுவா திட்டம் 😂 அவர் அப்படி செய்ய தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆந்திர இரண்டா பிளவு பட்டாலும் தொடர்ந்தும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்.

கருத்து முரண்பாட்டை சகிக்க முடியாமல் குடித்த பாலை வாய்க்குள் கை விட்டு வாந்தியெடுப்பவர் அருவெருப்பான மனிதன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:

இருக்கட்டுமே, தமிழ்நாட்டு மக்கள் நினைத்தால் மாற்ற முடியும், ஆந்திர இரண்டா பிளவு படவில்லையா?

ஆம் சரியான கருத்து ..ஆனால். மாற்றம் வரபபோவதில்லை. காரணம். போராடவில்லை..மாறாக. எங்கள போராட்டத்தைப் பயனபடுததி தேர்த்தல் பிராசாரம் செய்கிறார்கள். இப்படிசசெயவதால். எங்கள் மீது மத்தியரசின் கெடுபிடி. மேலும் கூடும்...ஆந்தரமக்கள் போராடினார்கள் பலனைப்பெற்றாரகள்.  மத்தியரசு. ஆந்தரவையும். தமிழ்நாட்டையும் ஒரேமாதிரிப் பார்ப்பதில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

கருத்து முரண்பாட்டை சகிக்க முடியாமல் குடித்த பாலை கை வைத்து வாந்தியெடுத்து அநாகரிக செயலை  செய்த தமிழ் புலவரை விட  தமிழுக்கு எழுத்து சீர்திருத்தம் வேண்டும் என்ற கருத்தியலை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்துமுகமாக 1935 ம் ஆண்டிலேயே தான் நடத்திய பத்திரிகையில் அதை நடைமுறைப்படுத்தி தமிழ் எழுத்து சீர்திருத்த‍த்தை ஊக்கிவித்த  பெரியார் தமிழுக்கு செய்த தொண்டு மேலானது.  1977 ல் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தமிழ் நாட்டில் அதை நடைமுறைப்படுத்தினார். இலங்கையில் 1985 க்கு பிற்பட்ட காலத்திலேயே அது நடைமுறைப்படுத்தப்பட்டது. 

தமிழில் எழுத்து சீர்திருத்தம் இன்னும் பூரணமாவில்லை என்றாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட எழுத்து சீர்திருத்தம் தான் கண‍ணி தமிழுக்கு உதவியாக உள்ளது. 

குடித்த பாலை கைவைத்து வாந்தியெடுத்த விடயம் நாகரீக சமுதாயத்தின் பார்வையில் காட்டுமிராண்டிதனம் தான்.  உண்மையில் இதில் பெருமை இல்லை. வெட்கப்பட்டவேண்டிய விடயம். 

பெரியாரின் அந்தக் காட்டுமிராண்டி என்ற சிந்தனை, ஒரு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்ற நிற்பந்தம் அவர் உள்ளாகி இருக்கலாம். இப்போது இருக்கின்ற அந்த நாகரீகமான முறையில் எதிர்ப்பை தெரிவிப்பது சிலவேளைகளில் கிடையாமல் இருந்திருக்கக்கூடும்.

ஏனெனில் கார்மேக புலவர் படைப்புகள் பார்க்கும் பொழுது கொஞ்சம் வில்லங்கமான சொற்பொழிவுகள் காணலாம்.

அதனால் அவர்கள் சிந்தித்ததை எங்களுக்கு இலகுவாக மாத்தி பொருள் பட கூடாது என்று நினைக்கின்றேன். அதனால்தான் நான் அவ்வாறு குறிப்பிட்டேன், அது கடந்து அவர் நடந்து கொண்ட முறை சரி என நான் கூறவில்லை.

சீர்திருத்தம் பொதுவாக ஒரு பரிணாம வளர்ச்சி என்றால் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் இதற்கு பெரியார் மட்டும் காரணம் அல்ல என்பதே எனது நிலைப்பாடு,

உண்மையான காரணங்களாக நான் கருதுபவை,

1.தமிழகத்து சமகாலத்தில் வாழ்ந்த தமிழ் பேரறிஞர்களின் செல்வாக்கு மறுக்கப்பட்டமை அல்லது அவர்களின் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணியினை கண்டுகொள்ளாமல் விட்டது.

2.சீர்திருத்தம் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்ற அளவுகோல் தெரியவில்லை

3.இன்னும் அந்த அவல நிலை தமிழகத்தில் நடந்து கொண்டே இருக்கின்றது.

இலங்கையை தமிழகத்தோடு ஒப்பிடுவது அவ்வளவு சரியானதாக இருக்கும் என நான் நம்பவில்லை.

தமிழகத்தில் தமிழ் அயல்மொழி களினால் மிக மிக வேகமாக அதன் தாக்கம் பரவிக் கொண்டே இருக்கின்றது. ஒருபுறம் கேரளத்தில் சேர்க்கை, மறுபுறம் கன்னடத்தில் சேர்க்கை, ஒருபுறம் தெலுங்கு சேர்க்கை ,ஒரு மாறுபட்ட அளவில் வடநாட்டு சேர்க்க.

உதாரணம்

Come on naughty- கம்முனாட்டி

Filthy-புளுத்தி

அண்மைக்காலமாக மாறி வரும் ஒரு சொல்,

நேரம்-Time,

இப்பொழுது அது ரயத்துக்கு என மாறிவிட்டது.

இதே பெரியாரின் வழிவந்த அந்த பெரும் செல்வந்தர்களின் தொலைக்காட்சிகளில் நாடகங்களில் அந்தச் சொல் இப்போது சாதரணமாக பாவிக்கப் படுகிறது.

பாவம் தமிழக மக்களும் அதை தமிழ்ச்சொற்கள் என நம்பி ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

ஆனால் இங்கே இலங்கையில் இலகுவில் அது உள் வாங்க மாட்டார்கள். அதனாலேயே நீங்கள் குறிப்பிட்ட அந்த எழுத்து சீர்திருத்த கால இடைவெளி.

சொல்லின் பொருள் கெடாமல் ஒரு மாறுபட்ட இசையோடு உரையாடுதல், எழுத்தையே மாற்றி உச்சரித்து பொருள் படுவது வித்தியாசம் உண்டு.

மொழி பிறழ்வு எவ்வாறு தமிழகத்தில் உருவாகி கொண்டிருக்கிறது என்பதற்கு தற்காலத்து தொலைக்காட்சி பார்த்தீர்களானால் உங்களால் விலகிக்கொள்ள முடியும் .அவர்களுக்கு தமிழ் எழுத்துக்களின் ஒலி உச்சரிப்பு முறை அடியோடு இல்லாமல் போய்விட்டது. ஒரு தலைமுறையினர் தமிழகத்தில் இல்லாமல் போன பின்பு இன்னுமொரு எழுத்துச் சீர்திருத்தம் தேவைப்படும்.

உதாரணம்: "ர", "ற"

நீங்கள் அவர்களின் பிரதான செய்தி அறிக்கையினை கேட்டீர்களானால் மொழியின் சிதைவு எப்படி இருக்கின்றது என்பதை பார்ப்பீர்கள்.

நீங்களாகவே ஒரு முடிவுக்கு வருவீர்கள், இதன் மூலம் யார் அவர்களுடைய ஆட்சியின் மகிமை புலப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

இது  ஒரு கருத்தா?தலைப்பு கந்தையன் எங்கு இருகக வேண்டுமென்பதில்லை. நான் எங்கு இருககவேண்டுமென்பது எனது தனிபபட்ட விடயமாகும்...இங்கு பேசப்படுவது சீமானுக்கு முதலமைச்சராக வர என்ன தகுதியுண்டு ?நாம் தமிழரென்பது  தகுதியாகுமா? அப்ப. மற்றவர்கள். தமிழரில்லையா? இதுவரை எனன செய்துள்ளார்?பிரபாகரன். பற்றி பேசுவது  ..கதைப்பதில் பிரச்சனையிலலை.  ஆனால். தேர்த்தலில் அதனைப்பயன்படுத்துவது. சீமான்  தான் தகுதியான. வேட்பாளரில்லை என்று சீமானே  சொல்வது போன்றதாகும்.தமிழகத்தை. தமிழன் ஆள வேணடுமென்கிறார். ஆம். ஆனால். எந்தக்கட்டத்திலும்  இந்தச்சீமான் ஆளவேண்டுமென்று சொன்னதில்லை. கனடா...பிரித்தானியா...அவுஸ்ரேலியா.. அமெரிக்கா...போன்ற நாடுகளில். நாம் ஆங்கிலேயர் என்று  அரசியல். செய்தால் மற்ற மொழி பேசும் மக்களின் நிலையென்னவாகும்..அவர்கள். மேற்படி நாடுகளில்  வாழ முடியுமா?

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி  இந்தியச்சட்டம் தமிழ்நாட்டைக்கட்டுப்படுத்தும் அதை மீறி சீமானால்  ஒரு சட்டம் இயற்றமாடியாது. 

2 hours ago, உடையார் said:

இருக்கட்டுமே, தமிழ்நாட்டு மக்கள் நினைத்தால் மாற்ற முடியும், ஆந்திர இரண்டா பிளவு படவில்லையா?

இது தவிர மற்றைய விடயங்களில்  உஙகள் பதிலென்ன?(மேலே நான் எழுதிய பகுதியில)

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2021 at 23:27, appan said:

நல்லாய் வாயில் வருது  ஆனால் எங்கள் எதிரிக்கு நல்ல இதயம், உடன் நல்ல மனது இருக்க வேண்டும் ,இல்லாதவர்களிடம் விவாதித்து நேரத்தை வீண் அடிக்க வேண்டாம் ,(நாய் வாலை நிமித்த முடியாது )

க‌ட‌ந்து செல்லுங்க‌ள் உற‌வே
2009ம் ஆண்டுக்கு பிற‌க்கும் ப‌ட்டும் திருந்த‌வில்லை என்றால் இதுக‌ள் என்ன‌ ஜென்ம‌ங்க‌ள் ?

ப‌ழ‌சை நினைவு ப‌டுத்த‌ விரும்புகிறேன் 2008 அந்த‌ கால‌ப் ப‌குதியில் என‌க்கு யாழில் த‌மிழ் பெரிசா எழுத‌ தெரியாது நிறைய‌ எழுத்து பிழைக‌ள் விடுவேன் 

2008ம் ஆண்டு நான் ஒரு திரியில் த‌மிழின‌ துரோகி க‌ருணாநிதியை ந‌ம்ப‌ வேண்டாம்  என்று அரைகுறை த‌மிழில் எழுதினேன்........ அப்ப‌  யாழ்க‌ள‌த்தில் ஒரு உற‌வு வ‌ந்து எழுதினார் த‌ம்பி நீங்க‌ள் நேற்று பெய்த‌ ம‌ழைக்கு இண்டைக்கு முளைத்த‌ காளான் க‌லைஞ‌ரின் அர‌சிய‌ல் த‌ந்திர‌ம் எல்லாம் உங்க‌ளுக்கு எங்கை தெரிய‌ப் போகுது என்று மிக‌வும் கேலியும் கிண்ட‌லுமாக‌ என்னை பார்த்து எழுதினார்............பிற‌க்கு பார்த்தோம் தானே கொலைஞ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌ நாட‌க‌ங்க‌ளை எல்லாம் அர‌ங் ஏற்றி ம‌க்க‌ளை ஏமாற்றி எம் இன‌ம் அழிய‌ துணை போனார் என்று  , த‌மிழ‌க‌த்தில் ம‌க்க‌ள் புர‌ட்சி வெடிச்சிட‌ கூடாது என்று பாட‌சாலை இழுத்து மூட‌ப் ப‌ட்ட‌து  த‌மிழ‌க‌ ஏவ‌ல்துறையை வைத்து  அடி த‌டி ந‌ட‌த்தி ப‌ல‌ரின் ம‌ண்டையை உடைத்து ம‌க்க‌ள் வீதியில் இற‌ங்கி போராடாத‌ அள‌வுக்கு அட‌க்குமுறைய‌ ஏவீனார் கொலைஞ‌ர் .......... அப்போது தான் அண்ண‌ன் சீமான் ப‌ல‌ த‌ட‌வை க‌ருணாநிதி என்ற‌ அர‌க்க‌னால் சிறை ப‌டுத்த‌ப் ப‌ட்டார்...........எம‌க்காக‌ அண்ண‌ன் சீமான் கிட்ட‌ த‌ட்ட‌ 18மாத‌ம் சிறை வாழ்கையை அனுப‌வித்தார்........இப்ப‌டி சொல்லிட்டே போக‌லாம்

இதை எல்லாம் க‌ண்ணால் பார்த்த‌ பிற‌க்கும் திருட்டு கும்ப‌லுக்கு முட்டுகொடுக்கும் எம்ம‌வ‌ர் சில‌ரை பார்க்க‌ கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ருது ?

எம் இல‌க்கை அடிய‌ விரும்புவ‌ர்க‌ள் ஒரு கொள்கையோடு தொட‌ர்ந்து ப‌ய‌ணிப்பின‌ம் , எம் போராட்ட‌த்தை த‌லிபான் தீவிர‌வாத‌‌ கும்ப‌லோடு ஒப்பிட்டு எழுதும் புரித‌ல் இல்லா அடி முட்டாளோடு நாம் விவாத‌ம் செய்வ‌தும் பார்க்க‌ எம‌து அடுத்த‌ க‌ட்ட‌ இல‌க்கை நோக்கி ப‌ய‌ணிப்ப‌து சிற‌ப்பு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.