Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துரியன் பழத்தை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் தீரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துரியன் பழத்தை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் தீரும்

துரியன் பழத்தை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் தீரும்

பலாப் பழம் போலவே தோற்றமளிக்கும் இது, துரியன் பழமாகும். மலேசியாவை பிறப்பிடமாக கொண்டது. பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம், உள்ளே இனிப்பு சுவை கொண்ட பழம் என துரியன் பழம் சுவைக்க தூண்டுகிறது. சுவை மட்டுமல்ல, சத்து பொருட்களும் துரியன் பழத்தை பிரபலமாக்கி உள்ளன. இதில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

துரியன் பழம், மஞ்சள் காமாலை மற்றும் நகங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கு நல்ல மருந்தாகிறது. துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது. முகத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்குவதால் இளமையான தோற்றத்தை கொடுக்கும். இப்பழத்தில் காணப்படும் பைரிடாக்சின் மன அழுத்தத்தை போக்குவதோடு தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கிறது. ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த நிவாரணி.

துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம், இனிப்புச் சுவை உடையது. பழம் மட்டுமின்றி, இதன் இலைகளும், பல மருத்துவப் பண்புகளை கொண்டுள்ளன. மது, புகை, போதை போன்ற தீய பழக்கங்களால், உடல் வலுவிழந்தவர்களுக்கு இந்த பழம், நல்ல மருந்து.

இவர்கள், வாரம் இருமுறை, துரியன் பழம் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலுவடையும். கொழுப்பு சத்தை கரைத்து, கலோரிகளாக மாற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். எரிச்சல், கோபம், மன அழுத்தம், மன உளைச்சல், போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால், நரம்புகள் எளிதில் பலவீனமடைகின்றன. இந்த குறையை போக்க, துரியன் பழம் பயன்படுகிறது.

மலச்சிக்கலை நீக்கும் குணம் இந்த பழத்துக்கு உண்டு. செரிமான சக்தியை தூண்டி, நன்கு பசியை ஏற்படுத்தும். விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வல்லது. இந்த பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் வாழைப்பழத்தை விட, 10 மடங்கு அதிகமான இரும்புச்சத்து, பாஸ்பரஸ் இந்த பழத்தில் நிறைந்துள்ளன.

வைட்டமின்கள் பி, பொட்டாசியம், கால்சியம் ஆகியவை, மூட்டுகளையும், எலும்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கின்றன. நகங்களில் பிரச்சினை இருக்கும் போது, இந்த பழத்தின் வேர்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். மாங்கனீசு அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும். இரும்பு, போலிக் ஆசிட் அதிக அளவு இருப்பதால் ரத்தச் சோகையை குணமாக்கலாம்.

இளமையிலேயே முதுமைத் தோற்றத்தில் காணப்படுபவர்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதிலுள்ள வைட்டமின் சி சத்தால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம். மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரியன் பழம் மிகவும் சிறந்தது. ஏனெனில், இதில் பைரிடாக்ஸின் எனும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பி சீராக இயங்கும்.

https://www.maalaimalar.com/health/generalmedicine/2021/04/10133739/2525369/durian-fruit-benefits.vpf

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் இந்தப்பழத்தின் வாசனை எனக்கு பிடிக்காது ஆனால் முஸ்லீம் மக்கள் விழுந்தடிச்சு வாங்கி சாப்பிடுவார்கள் ஏன் என்று கேட்டேன் அந்த மாதிரிவிசயத்துக்கு இந்தப்பழம் சூப்பராம் அதனால் தான் என்னமோ  இனப்பெருக்கம்  இந்தப்பழம் போல நல்ல விளைச்ச்லை கொடுக்குது 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உடையார் இந்தப்பழத்தின் வாசனை எனக்கு பிடிக்காது ஆனால் முஸ்லீம் மக்கள் விழுந்தடிச்சு வாங்கி சாப்பிடுவார்கள் ஏன் என்று கேட்டேன் அந்த மாதிரிவிசயத்துக்கு இந்தப்பழம் சூப்பராம் அதனால் தான் என்னமோ  இனப்பெருக்கம்  இந்தப்பழம் போல நல்ல விளைச்ச்லை கொடுக்குது 

நீங்க வழமைபோல் வத்தல் போடவும்

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உடையார் இந்தப்பழத்தின் வாசனை எனக்கு பிடிக்காது ஆனால் முஸ்லீம் மக்கள் விழுந்தடிச்சு வாங்கி சாப்பிடுவார்கள் ஏன் என்று கேட்டேன் அந்த மாதிரிவிசயத்துக்கு இந்தப்பழம் சூப்பராம் அதனால் தான் என்னமோ  இனப்பெருக்கம்  இந்தப்பழம் போல நல்ல விளைச்ச்லை கொடுக்குது 

நானும் வாங்கி திண்டு பாக்கத் தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

மாதக்கணக்கில் குளிக்காத மனித உடம்பு மனம்  போலவும் சிலசமயம் ஒப்ரேசன்  லிபிரேசன் போது சிலோன்  ஆமி சுட்ட அப்பாவி  தமிழ் சனத்தின்  உடல் நல்ல தார் ரோட்டில் கிடந்து  இரண்டு நாள் வெயிலின் பின் வரும் வாடையை ஞாபக படுத்தும் இந்த பழம் .

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நந்தன் said:

நீங்க வழமைபோல் வத்தல் போடவும்

ம்ம் இங்குள்ள நிலமை புரிய வாய்ப்பில்லை ராஜா உங்களுக்கு 

22 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் வாங்கி திண்டு பாக்கத் தான் இருக்கு.

ரெண்டு மூணு நாள் உடம்பு முழுவதும் மணக்கும் இந்த பழத்தின் வாசனை பயன் கிடைத்தால் தனிமடலில் அறியத்தரவும் நன்றி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/4/2021 at 20:06, ஈழப்பிரியன் said:

நானும் வாங்கி திண்டு பாக்கத் தான் இருக்கு.

வேண்டாம் தல வேண்டாம். அது ஒரு வயதுக்காரருக்குத்தான் வேலை செய்யுமாம்.ஏற்கனவே பிலா மரத்திலை ஏறி சறுக்கு விழுந்த உடம்பு தல.....பேராசை வேண்டாம் தல..😁

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ரெண்டு மூணு நாள் உடம்பு முழுவதும் மணக்கும் இந்த பழத்தின் வாசனை பயன் கிடைத்தால் தனிமடலில் அறியத்தரவும் நன்றி 

என்ன ராசன்! இப்பவே சோர்ந்து போனியள்? 😜

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

வேண்டாம் தல வேண்டாம். அது ஒரு வயதுக்காரருக்குத்தான் வேலை செய்யுமாம்.ஏற்கனவே பிலா மரத்திலை ஏறி சறுக்கு விழுந்த உடம்பு தல.....பேராசை வேண்டாம் தல..😁

ஏதாவது பலனிருந்தா உங்களுக்குத் தான் முதல்ல சொல்லுவம் என்று இருந்தேன்.
எல்லாம் குழப்பியடிக்கிறீங்களே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏதாவது பலனிருந்தா உங்களுக்குத் தான் முதல்ல சொல்லுவம் என்று இருந்தேன்.
எல்லாம் குழப்பியடிக்கிறீங்களே?

இல்லை..... இப்ப நான் சொல்ல வந்தது  என்னெண்டால்...அதாவது....அதுதான்...அது வந்து....😷

🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞

அது சரி உங்கை  துரியன் பழம் மார்க்கட்டுக்கு வந்துட்டுதோ...??   😎

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தில்... இந்தப்  பழத்தை  கொண்டு செல்ல தடை.
ஏனென்றால்....  குடலைப் புடுங்கி எடுக்கும், "நாத்தம்"  தாங்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதை இன்னொரு பெயரில் அழைப்பார்கள். pee   நாறிப் பழம் என்று .😀

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

என்ன ராசன்! இப்பவே சோர்ந்து போனியள்? 😜

நான் எங்க சவுத்துப்போனன் சாமியார் நாமெல்லாம் பழம் திண்டு கொட்டை போட்ட் ஆட்கள் 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, தமிழ் சிறி said:

விமானத்தில்... இந்தப்  பழத்தை  கொண்டு செல்ல தடை.
ஏனென்றால்....  குடலைப் புடுங்கி எடுக்கும், "நாத்தம்"  தாங்க முடியாது.

ஓம் சிறித்தம்பி! எங்களுக்கு கருவாட்டு வாசம் சொர்க்க வாசம் அது போலை துரியன் பழம் சாப்பிடுறவைக்கு அது சொர்க்கமாய் தெரியும். உடம்புக்கு நல்லதெண்டால் எங்கடை சனம் பொலிடோலும் குடிக்க ரெடி.  இஞ்சை பாக்கேல்லையே ஈ பேர்வளி சிங்கம்  துரியன் பழத்துக்கு ஓடித்திரியிறதை.....😁

சிங்களச்சனத்துக்கும் துரியன் பழம் எண்டால் காணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவாய் என்ன சொல்லுறியள் எல்லாரும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுவைப்பிரியன் said:

இப்ப முடிவாய் என்ன சொல்லுறியள் எல்லாரும்.

மூக்கை பிடிச்சுக் கொண்டு.... சாப்பிடட்டாம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, சுவைப்பிரியன் said:

இப்ப முடிவாய் என்ன சொல்லுறியள் எல்லாரும்.

பெரியவர் குமாரசாமி களத்தில் இறங்கிவிட்டார்.

விரைவில் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

பெரியவர் குமாரசாமி களத்தில் இறங்கிவிட்டார்.

விரைவில் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வார்.

துரியன் பழம் கட்டாயம் தின்னுற அளவுக்கு என்ரை உடம்பிலை என்ன குறைச்சல்? இன்னும் தெரியேல்லை நான் ஆரெண்டு...! :wink:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

துரியன் பழம் கட்டாயம் தின்னுற அளவுக்கு என்ரை உடம்பிலை என்ன குறைச்சல்? இன்னும் தெரியேல்லை நான் ஆரெண்டு...! :wink:

எனக்கு மனசுக்க ஒன்று தோன்று சொன்னால் தூரியன் பழத்தை  போல என்னையும் வெட்டி தின்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

துரியன் பழம் சாப்பிட்டவுடன்.... 
பால், கோலா போன்றவற்றை குடிக்கப் படாது என்று... 
மலேசிய இணையத்தளம் ஒன்றில் பார்த்தேன். 
எவ்வளவு தூரம், உண்மை என்று தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் துரியன் பழ ice cream உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

மலேசியாவில் துரியன் பழ ice cream உள்ளது.

ஐஸ்கிறீமுக்கு... வனிலா, சொக்லேட், ஸ்ரொபெறி... ஓகே.
மலேசியன்...  அதற்குள் துரியன் பழத்தை போட்டு,    
ஐஸ் கிறீமை... அவமானப் படுத்தி விட்டான்.    🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2021 at 19:28, தமிழ் சிறி said:

விமானத்தில்... இந்தப்  பழத்தை  கொண்டு செல்ல தடை.
ஏனென்றால்....  குடலைப் புடுங்கி எடுக்கும், "நாத்தம்"  தாங்க முடியாது.

 "நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம்" இதைப் பார்த்தவுடன் நானும் இதைத்தான் நினைத்தேன்.  மலேசிய கம்போடியா பக்கம் ஹோட்டல் வாசலில் எழுதியிருப்பார்கள் துரியன் பழம் இந்த பக்கம் வர கூடாது என்று...

ஆனாலும் சாப்பிட்டு பார்க்க வேண்டுமென்று தெருவோர கடையில் வாங்கி அதிலேயே சாப்பிட்டோம்... சொல்லிக் கொள்ளுற அளவுக்கு சுவை இல்லை.  எங்கள் பலாப்பழத்திற்கு கிட்டவும் வராது .

Edited by Sabesh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Sabesh said:

ஆனாலும் சாப்பிட்டு பார்க்க வேண்டுமென்று தெருவோர கடையில் வாங்கி அதிலேயே சாப்பிட்டோம்... சொல்லிக் கொள்ளுற அளவுக்கு சுவை இல்லை.  எங்கள் பலாப்பழத்திற்கு கிட்டவும் வராது .

இந்தா ஒராள் மாட்டி!!!!! 😁

சுவையை பற்றி எவன் கேட்டான்? 😎
உடம்புக்கு நல்லதெண்டால் பொலிடோல் குடிக்கவும் ரெடி எண்ட ரேஞ்சிலை இஞ்ச இரண்டு மூண்டு பேர் ஒற்றைக்காலிலை நிக்கினம் கண்டியளோ. :grin:

இப்ப கேள்வி என்னெண்டால் துரியன் பழம்  திண்டாப்பிறகு என்னென்ன பலாபலன்களை உடல் ரீதியாக கண்டீர்கள்? அல்லது அனுபவித்தீர்கள்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2021 at 06:47, குமாரசாமி said:

ஓம் சிறித்தம்பி! எங்களுக்கு கருவாட்டு வாசம் சொர்க்க வாசம் அது போலை துரியன் பழம் சாப்பிடுறவைக்கு அது சொர்க்கமாய் தெரியும். உடம்புக்கு நல்லதெண்டால் எங்கடை சனம் பொலிடோலும் குடிக்க ரெடி.  இஞ்சை பாக்கேல்லையே ஈ பேர்வளி சிங்கம்  துரியன் பழத்துக்கு ஓடித்திரியிறதை.....😁

சிங்களச்சனத்துக்கும் துரியன் பழம் எண்டால் காணும்.

அண்ணை...நீங்கள் ஈரப்பிலாக்காயை  மாறி நினைக்கிறீங்கள் போல கிடக்குது...!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, புங்கையூரன் said:

அண்ணை...நீங்கள் ஈரப்பிலாக்காயை  மாறி நினைக்கிறீங்கள் போல கிடக்குது...!

துரியன்பழம் சிலோன்லை இல்லையோ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.