Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களுக்கானதா சீமானின் அரசியல்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களுக்கானதா சீமானின் அரசியல்?

புருஜோத்தமன் தங்கமயில்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கின்றது. கலைஞர் மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், தி.மு.கவின் தலைவராக மு.க. ஸ்டாலின் எதிர்கொண்ட, முதலாவது சட்டமன்றத் தேர்தலிலேயே அவர், அறுதிப் பெரும்பான்மையுள்ள வெற்றியைப் பெற்றிருக்கின்றார்.   

தொடர்ச்சியாக இரண்டு தடவைகள், ஆட்சியில் அமர்ந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இம்முறை ஆட்சியை இழந்திருக்கின்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்கள், பிளவுகளைத் தாண்டி, அ.தி.மு.க தன்னுடைய வாக்கு வங்கியை, பாரிய வீழ்ச்சிகள் ஏதுமின்றித் தக்க வைத்துள்ளது.    

இதன்மூலம், தமிழக அரசியல் களம் என்பது, மீண்டும் தி.மு.க எதிர் அ.தி.மு.க என்கிற நிலைக்குள் பேணப்பட்டு இருக்கின்றது. ஏனெனில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க பல துண்டுகளாக உடைந்துவிடும், ஆளும் பாரதிய ஜனதாக் கட்சிக்குள் கரைந்துவிடும் என்கிற எதிர்பார்ப்புகள் எல்லாம் வெளியிடப்பட்டன.  

தமிழக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் பத்தியில், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளினதும் வெற்றி, தோல்விகளுக்கான காரணங்களை ஆராயும் எண்ணம் இல்லை. மாறாக, தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளையும் தாண்டி, புலம்பெயர் தமிழர்களிடம் தலையை நீட்டிக் கொண்டிருக்கும் ‘நாம் தமிழர் இயக்கம்’ பற்றிப் பேசவே விளைகின்றது.   

நாம் தமிழர் இயக்கத்தை சீமான் ஆரம்பித்த காலம் முதல், தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை முன்னிறுத்திய, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதான காட்சிகளை அவர் அரங்கேற்றி வருகிறார். அதுதான், ஆரம்ப நாள்களில் அவருக்கான அத்திவாரத்தைப் போடுவதற்கும் உதவியது. 

குறிப்பாக, புலம்பெயர் தேசங்களில் இருந்து, நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கு உதவியது. நாம் தமிழருக்கும், சீமானுக்கும் நிதியளிக்கும் மூலங்களில், இன்றைக்கும் புலம்பெயர் தமிழர்களே முதலிடத்தில் இருக்கிறார்கள்.  

நடந்து முடிந்த தேர்தலில் சுமார் 30 இலட்சம் வாக்குகளை, நாம் தமிழர் இயக்கம் பெற்றிருக்கின்றது. அது, மொத்த வாக்குகளில் 6.6 சதவீதமாகும். இதன்மூலம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக, நாம் தமிழர் அமைப்பு தன்னை முன்னிறுத்துகின்றது.   

இலங்கையில் உள்ளது போல விகிதாசாரத் தேர்தல் முறைமை இந்தியாவில் இருந்திருந்தால், பத்து, பன்னிரண்டு ஆசனங்களை வெற்றிகொள்வதற்கான வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்தியாவில் நடைமுறையில் உள்ளது, தொகுதிவாரித் தேர்தல் முறை ஆகும். அங்கு, கூட்டணிகளில் பங்களிக்காமல் நாம் தமிழர் வெல்ல வேண்டுமானால், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 35 சதவீதத்துக்கும் குறையாத வாக்குளைப் பெற்றாக வேண்டும்.   

மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட்டிருக்கின்ற ‘நாம் தமிழர்,’ ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 12,800 வாக்குகளைப் பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் பருமட்டாக 275,000 வாக்குகள் காணப்படும் நிலையில், பல முனைப் போட்டி காணப்பட்டாலும், வெற்றிக்கான வாக்குகள் என்பது கிட்டத்தட்ட 80,000க்கு அண்மித்தாக இருக்க வேண்டியிருக்கும்.   

பிரதான இரு கட்சிகளும் 85 சதவீதமான வாக்குகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட பின்னர், மீதமுள்ள 15 சதவீத வாக்குகளில், 6.6 சதவீதத்தைப் பெற்றுக்கொண்டு, மூன்றாவது இடம் என்கிற நிலை குறித்துப் பெருமிதம் கொள்வது, அவ்வளவு முக்கியமான ஒரு காரியமல்ல.  

சீமானுக்கும் நாம் தமிழர் இயக்கத்துக்கும் அரசியலில் என்ன நிலை எடுப்பது, எப்படி இயக்குவது என்றெல்லாம் போதிப்பது இந்தப் பத்தியின் நோக்கமில்லை. ஆனால், சீமானும் நாம் தமிழர் இயக்கமும் முன்னெடுக்கும் அரசியலால், இலங்கை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இராஜதந்திரப் பின்னடைவுகள் குறித்து அவதானம் கொள்வது தவிர்க்க முடியாதது.  

இலங்கை தமிழர்களைப் பொறுத்தவரையில், விரும்பியோ விரும்பாமலோ, இந்திய மத்திய அரசாங்கத்தோடும், தமிழக அரசாங்கத்தோடும் இணக்கமாகச் செயற்பட வேண்டியிருக்கும். மத்தியிலும் மாநிலத்திலும் எந்தக் கட்சி ஆண்டாலும், அவர்களோடு அந்த உறவைப் பேணியாக வேண்டும்.   

ஆனால், அவ்வாறான நிலை சுமூகமாகப் பேணப்படுவதை, இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, அக - புற சக்திகள் பெரியளவில் அனுமதிப்பதில்லை. அதனால், தொடர்ச்சியாகப் பின்னடைவை இலங்கை தமிழர்கள் சந்தித்து வந்திருக்கிறார்கள்.   

தனிப்பட்ட அரசியல், கொள்கை நிலைப்பாடுகள் சார்ந்து, இந்தியாவை ஆளும் கட்சிகள் மீது ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது. மத்தியை நரேந்திர மோடி ஆண்டாலும், நாளை ராகுல் காந்தி ஆண்டாலும், அவர்களுடனான உறவைப் பேணியாக வேண்டும். அதுபோலவே, தமிழகத்திலும் ஆட்சியில் தி.மு.க இருந்தாலும் அ.தி.மு.க இருந்தாலும், அந்த உறவைப் பேணியாக வேண்டும்.  

மாறாக, ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இந்தியாவில் பயிற்சி பெற்ற காலங்களில், ஒரு கட்சிக்கு இணக்கமாகச் செயற்பட்ட இயக்கமொன்று, இன்னொரு கட்சியைத்  தூர நிறுத்திப் பயணித்த வரலாற்றை, இலங்கை தமிழர்கள் மீண்டும் தொடர முடியாது.   

ஏனெனில், அவ்வாறான நிலை, ஆயுதப் போராட்ட இயக்கங்களின் வளர்ச்சிக்கு உதவியதைக் காட்டிலும், வீழ்ச்சிக்கே துணை போயின. அத்தோடு, இப்போது இலங்கை தமிழர்கள் போராட்டத்தை, அஹிம்சை வழிக்குள் மட்டுப்படுத்திக் கொண்ட பின்னர், கட்சிகள் ரீதியாகப் பிரிவதோ, ஆட்சிகள் ரீதியாகத் துருவ மயப்படுவதோ நிகழ முடியாது. அது, இராஜதந்திர ரீதியில் பாரிய பின்னடைவுகளைத் தரும்.  

தி.மு.க அணியினருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையிலான உறவு என்பது, என்றைக்கும் இல்லாதளவுக்கு படுமோசமாகவே கடந்த பத்து ஆண்டுகளில் இருந்திருக்கின்றது. அதற்கு, சீமானை முன்னிறுத்திய புலம்பெயர் தரப்புகளின், தூர நோக்கற்ற நடவடிக்கைகள் காரணமாகும்.   

முள்ளிவாய்க்கால் இறுதி நாள்களில், தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் பெரும் விமர்சனங்கள் உண்டு. அந்த உண்ணாவிரதப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்ட போது, கலைஞரால் வெளிப்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் பற்றிய அறிவித்தல் எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை.   

ஆனால், அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்வினையாற்றுகிறோம் என்கிற நிலையை எடுத்து, எதிர்காலங்களைப் பற்றிச் சிந்திக்காது, படுவீழ்ச்சியான கட்டத்தை நோக்கி, இலங்கை தமிழர்களின் ஒரு பகுதியினர் நகர்ந்தார்கள். அவர்களைத் தான், சீமான் தனக்கான கொடையாளர்கள் ஆக்கினார்.  

சீமான் முன்வைக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும், இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. தலைவர் பிரபாகரன், எந்தவொரு தருணத்திலும் இன்னொரு சமூகத்தை எதிரிகளாகக் கருதியதில்லை. மாறாக, பேரினவாத சிந்தனையையும் அதன் இயந்திரத்தையும் எதிர்த்துப் போரிட்டார்.   

ஆனால், பிரபாகரனைத் தன்னுடைய முன்னோடியாக ஒரு கட்டம் வரையில் முன்னிறுத்திய சீமான், “நான் ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை நடத்தியிருந்தால், சிங்களப் பெண்களை வன்புணர உத்தரவிட்டிருப்பேன்” என்று பல்லாயிரம் மக்கள் கூடியிருக்கும் மேடையில் பேசியிருக்கிறார்.   

அடிப்படையில் சீமானின் முன்னோடி ஹிட்லர், முசோலினி போன்றவர்கள். அவர்கள், தங்களது காலத்தில், மனித குலத்துக்கு எதிரான அடிப்படைவாதத்தை விதைத்தவர்கள். அவர்களை ஒத்த சிந்தனைகளை விதைப்பதை, சீமான் தொடர்ந்துவருகிறார். 

ஒரு ஜனநாயகக் கட்டமைப்புள்ள அரசியல் கட்சியோ, இயக்கமோ அடிப்படையில் தொண்டர்கள், ஆதரவாளர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் தன்மையோடு இருக்க வேண்டும். ஆனால், சீமானிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது. கட்சியின் முடிவுகள் அனைத்தும் தன்னுடைய ஏக அதிகாரம் சம்பந்தப்பட்டது என்பதுதான் சீமானின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டோடு, ஓர் அமைப்பு மேலெழுவது என்பது சர்வாதிகார தோரணையிலானது. அங்கு கேள்விகளுக்கு இடமில்லை; கேள்விகள் இல்லாத அமைப்பு, ஜனநாயகத்துக்கு விரோதமானது.  

அத்தோடு, ஒரு கட்டம் வரையில் தலைவர் பிரபாகரனைத் தன்னுடைய வளர்ச்சிக்காக முன்னிறுத்திய சீமான், இன்றைக்கு பிரபாகரனைத் தாண்டிய ஒருவராகத் தன்னை முன்னிறுத்த முனைகிறார்.   

புலம்பெயர் தமிழர்கள், முதலில் தங்களது ஆதரவையும் நிதிப்பங்களிப்பையும் எங்கு கொட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால், ஏற்படும் நன்மைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். நன்மைகள் ஏற்படவில்லை என்றாலும் பரவாயில்லை, தீமைகள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.   

ஆனால், சீமானைக் கொண்டு சுமப்பவர்களோ விஷச்செடிக்கு தண்ணீருற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் செடி வீசிய விஷத்தின் எதிர்வினைகளை, ஈழத் தமிழ் அரசியல் எதிர்கொண்டிருக்கின்றது. இனியாவது, சீமான் போன்றவர்களைக் கடந்து நின்று, தூரநோக்கோடு அண்டை நாட்டு அரசியலை அணுகத் தொடங்க வேண்டும்.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கை-தமிழர்களுக்கானதா-சீமானின்-அரசியல்/91-271186

  • Replies 72
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் புருஜோத்தமன் தங்கமயில் ஒர் இந்திய வம்சாவளி தமிழர் போல் தெரிகின்றது. இலங்கை தமிழர் என்று குறிப்பிட்டு எழுதிகின்றார். 

நல்லதொரு கட்டுரை. மாயண்டி குடும்ப ஆதரவாளர்களுக்கு இது பிடிக்காது இங்கு வந்து குத்தி முறியப் போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

கட்டுரையாளர் புருஜோத்தமன் தங்கமயில் ஒர் இந்திய வம்சாவளி தமிழர் போல் தெரிகின்றது. இலங்கை தமிழர் என்று குறிப்பிட்டு எழுதிகின்றார். 

நல்லதொரு கட்டுரை. மாயண்டி குடும்ப ஆதரவாளர்களுக்கு இது பிடிக்காது இங்கு வந்து குத்தி முறியப் போகின்றார்கள்.

இது சீமானை நோண்டும் ஆயிரத்து மூன்றாவது கட்டுரை யாக இருக்கிறதே தவிர 
என்னை பொறுத்தவரை யாழ்களத்தில் சீமான் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதைவிட 
சில விடயங்களை நன்றாக எழுதி இருக்கிறார்கள்.

அதே வெங்காயம் 
அதே மிளகாய் 
அதே மா 
அதே கொத்துரொட்டி 

என்ன நல்ல விஷயம் இருக்கு என்று சொன்னால் 
நாங்களும் புரிந்து கொள்ளலாம்.  

(இந்த ராஜதந்திரம் இராஜதந்திரம் என்பதை வாசிக்கும்போதுதான் சிரிப்பை அடக்க முடிவதில்லை 
யார் எங்கு செய்கிறார்கள் என்று எழுதினாலாவது ஓரளவுக்கு கட்டுரை எப்படி எழுதுவது என்றாவது எழுதிப்பழக அவர்களுக்கு உதவும்) 

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக ஒரு பொது வேலையை செய்பவர்கள் எந்த அரசியலையும் சாராமல் இருப்பது மிகச் சாதாரணமான பொது விதி.

ஆனால் இங்கே நன்றாக திட்டமிட்டு உறவுகளிடையே ஒற்றுமையை குலைக்க கூடிய விடயங்களை தேடிப்பிடித்து இங்கே கொண்டு வந்து கொட்டுவது தொடர்கிறது ☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இது சீமானை நோண்டும் ஆயிரத்து மூன்றாவது கட்டுரை யாக இருக்கிறதே தவிர 
என்னை பொறுத்தவரை யாழ்களத்தில் சீமான் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதைவிட 
சில விடயங்களை நன்றாக எழுதி இருக்கிறார்கள்.

அதே வெங்காயம் 
அதே மிளகாய் 
அதே மா 
அதே கொத்துரொட்டி 

தேசிக்காயை விட்டு விட்டீர்கள்   🤣

1 hour ago, Maruthankerny said:

என்ன நல்ல விஷயம் இருக்கு என்று சொன்னால் 
நாங்களும் புரிந்து கொள்ளலாம்.  

(இந்த ராஜதந்திரம் இராஜதந்திரம் என்பதை வாசிக்கும்போதுதான் சிரிப்பை அடக்க முடிவதில்லை 
யார் எங்கு செய்கிறார்கள் என்று எழுதினாலாவது ஓரளவுக்கு கட்டுரை எப்படி எழுதுவது என்றாவது எழுதிப்பழக அவர்களுக்கு உதவும்) 

மருதங்கேணி seeman syndrome எனக்கும் பிடித்து விட்டதையா 🤣

  • கருத்துக்கள உறவுகள்

""சீமானுக்குக் காசு குடுக்காதேயுங்கோ""

இந்தக் கட்டுரையின் சாராம்சம் இதுதான்.(கட்டுரையின் முரண்பாடுகளை ஒரு புறம் ஒதுக்குவோம்)

தண்ணியில தாழ்கிறவன் கையில தட்டுப்படுகிற எல்லாத்தையுமே பிடிப்பான். அது தடியாயிருந்தாலென்ன பாம்பாயிருந்தாலென்ன. அவனுக்கு அந்தக் கணத்தில எல்லாமே ஒண்டுதான். 

தண்ணிக்கு வெளியில நிக்கிறவன் ஐயோ பாவம், ஐயோ பாவம் எண்டு கத்திறதால ஒண்டுமே நடக்கப் போறதில்ல.

இலங்கையில காசு குடுக்கிறதுக்கு வசதியான ஒரு அமைப்பிருந்தா நாங்களேன் சீமானுக்குக் காசு குடுக்கப்போறோம்..?

☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

""சீமானுக்குக் காசு குடுக்காதேயுங்கோ""

இந்தக் கட்டுரையின் சாராம்சம் இதுதான்.(கட்டுரையின் முரண்பாடுகளை ஒரு புறம் ஒதுக்குவோம்)

தண்ணியில தாழ்கிறவன் கையில தட்டுப்படுகிற எல்லாத்தையுமே பிடிப்பான். அது தடியாயிருந்தாலென்ன பாம்பாயிருந்தாலென்ன. அவனுக்கு அந்தக் கணத்தில எல்லாமே ஒண்டுதான். 

தண்ணிக்கு வெளியில நிக்கிறவன் ஐயோ பாவம், ஐயோ பாவம் எண்டு கத்திறதால ஒண்டுமே நடக்கப் போறதில்ல.

இலங்கையில காசு குடுக்கிறதுக்கு வசதியான ஒரு அமைப்பிருந்தா நாங்களேன் சீமானுக்குக் காசு குடுக்கப்போறோம்..?

☹️

எனது அனுபவத்தில் இயக்கத்திற்கு 5சதம் கொடுக்காதவன் தான் பங்களிப்பு செய்பவர் பற்றி அதிகம் கூவுகின்றனர்.

தாங்கள் புத்திசாலியாம் 

கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை தங்கள் விருப்பப்படி கொஞ்சம் பொது விடயங்களுக்கும் கொடுப்பவர்கள் லூசுகளாம்

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

தேசிக்காயை விட்டு விட்டீர்கள்   🤣

மருதங்கேணி seeman syndrome எனக்கும் பிடித்து விட்டதையா 🤣

அவர் தேசிக்காயை பாவிக்கவில்லை 
இறுதியில் புழிந்து விட போகிறார் என்றுதான் ஒரே மூச்சாக 
வாசித்துவந்தேன் 

இறுதியில் ஏமாற்றிவிட்டார் ...
கொஞ்சம் வித்தியாசமாக .... சீமானுக்கு காசு கொடுக்காதீர்கள் 
என்று ஒரு புது புளியை புழிந்து விட்டுள்ளார்.

சீமானுக்கு காசுகொடுப்பவர்கள் வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாட்டு இளைஞர்கள் 
ஈழத்தமிழர்கள் யாரும்  பெரிதாக கொடுப்பது இல்லை.
இங்கு அமெரிக்காவில் அநேக தமிழ்நாட்டு இளைஞர்கள் நா த க விற்கு 
காசு கொடுக்கிறார்கள். அங்கு பல ப்ரொஜெக்ட்டுக்களை இங்கிருந்தே தயாரிக்கிறார்கள் 
குளங்களை தூர்வாருவது  குழாய் கிணறு அடிப்பது போன்றவை 

நல்லவேளையாக இந்த இராஜதந்திர கட்டுரைகள் அவர்களை சென்றடையாது 
கிருபன் அவர்கள் யாழ்களத்தில் தேடி இணைக்கும் விடயம் அவர்களுக்கும் தெரியாது 
கிருபன் அவர்களின் புண்ணியத்தில் நாங்கள் பெருத்த இராஜதந்திரிகளாக்கிக்கொண்டு 
இருக்கிறோம் என்பதே புல்லரிக்கக்கூடிய விடயம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

ஆனால் இங்கே நன்றாக திட்டமிட்டு உறவுகளிடையே ஒற்றுமையை குலைக்க கூடிய விடயங்களை தேடிப்பிடித்து இங்கே கொண்டு வந்து கொட்டுவது தொடர்கிறது ☹️

கட்டுரையில் சொன்னதை உள்வாங்கியிருந்தால் இப்படியான கருத்து வராது விசுகு ஐயா.

6 minutes ago, Maruthankerny said:

நல்லவேளையாக இந்த இராஜதந்திர கட்டுரைகள் அவர்களை சென்றடையாது 
கிருபன் அவர்கள் யாழ்களத்தில் தேடி இணைக்கும் விடயம் அவர்களுக்கும் தெரியாது 
கிருபன் அவர்களின் புண்ணியத்தில் நாங்கள் பெருத்த இராஜதந்திரிகளாக்கிக்கொண்டு 
இருக்கிறோம் என்பதே புல்லரிக்கக்கூடிய விடயம். 

புருஜோத்தமன் தங்கமயில் தமிழ் மிரரில் வாராவாரம் கட்டுரை வனைகின்றார்😃

நானும் வாசித்த பின்னர் ஒட்டிவிடுகின்றேன். இந்த வாரம் சீமான் பற்றி எழுதியதால் அது உங்கள் கண்ணுக்கு பட்டது. ஆனால் அவர் அதிகமாக தாயக அரசியலைப் பற்றித்தான் எழுதுவார். கஜேன்ஸுக்கு அதிகம் ஆதரவும் கொடுப்பதில்லை!

ஆசான் சொன்னது:

“நம்பிக்கையை மறுபரிசீலனை செய்ய நம்பிக்கையாளர்கள் முயல்வதே இல்லை—கூடுமானவரை அதைப் பேணிக்கொள்ளவே முயல்வார்கள். பொதுவாக நம்பிக்கையின் வழி அது.

நம்பிக்கையின் மறுபக்கம் வெறுப்பு. தன் தரப்பை ஆழமாக பற்றியிருக்கும் பொருட்டே தன் தரப்பு அல்லாதவற்றின்மேல் வெறுப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ‘நான் இதை நம்புகிறேன்’ என நம்பிக்கையாளர் திரும்பத் திரும்ப தன்னிடமே சொல்லிக்கொள்கிறார். கூடவே ‘நான் இதல்லாத எல்லாவற்றையும் வெறுக்கிறேன்’ என்றும் சொல்லிக்கொண்டிருப்பார்”

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

கட்டுரையாளர் புருஜோத்தமன் தங்கமயில் ஒர் இந்திய வம்சாவளி தமிழர் போல் தெரிகின்றது. இலங்கை தமிழர் என்று குறிப்பிட்டு எழுதிகின்றார். 

நல்லதொரு கட்டுரை. மாயண்டி குடும்ப ஆதரவாளர்களுக்கு இது பிடிக்காது இங்கு வந்து குத்தி முறியப் போகின்றார்கள்.

அவர் இலங்கை பத்திரிகைகளில் நிறைய கட்டுரைகள் எழுதி வருபவர் இந்த கட்டுரை இலங்கை மக்களுக்கு அதாவது இலங்கை வாழ் மக்கள் பத்திரிகை வாசிப்பவர்கள் விளங்க்கிக்கொள்ள நல்ல சந்தர்ப்பம் இந்திய அரசின் தமிழ்நாட்டு அரசியலை 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

கட்டுரையில் சொன்னதை உள்வாங்கியிருந்தால் இப்படியான கருத்து வராது விசுகு ஐயா.

புருஜோத்தமன் தங்கமயில் தமிழ் மிரரில் வாராவாரம் கட்டுரை வனைகின்றார்😃

நானும் வாசித்த பின்னர் ஒட்டிவிடுகின்றேன். இந்த வாரம் சீமான் பற்றி எழுதியதால் அது உங்கள் கண்ணுக்கு பட்டது. ஆனால் அவர் அதிகமாக தாயக அரசியலைப் பற்றித்தான் எழுதுவார். கஜேன்ஸுக்கு அதிகம் ஆதரவும் கொடுப்பதில்லை!

ஆசான் சொன்னது:

“நம்பிக்கையை மறுபரிசீலனை செய்ய நம்பிக்கையாளர்கள் முயல்வதே இல்லை—கூடுமானவரை அதைப் பேணிக்கொள்ளவே முயல்வார்கள். பொதுவாக நம்பிக்கையின் வழி அது.

நம்பிக்கையின் மறுபக்கம் வெறுப்பு. தன் தரப்பை ஆழமாக பற்றியிருக்கும் பொருட்டே தன் தரப்பு அல்லாதவற்றின்மேல் வெறுப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ‘நான் இதை நம்புகிறேன்’ என நம்பிக்கையாளர் திரும்பத் திரும்ப தன்னிடமே சொல்லிக்கொள்கிறார். கூடவே ‘நான் இதல்லாத எல்லாவற்றையும் வெறுக்கிறேன்’ என்றும் சொல்லிக்கொண்டிருப்பார்”

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 
நல்ல வேளை மிகுதியை வாசித்து நேரத்தை வீணடிக்காது விட்டோம் 

சீமானின் வளர்ச்சி அல்ல 
உலகில் எந்த மனிதனின் வளர்ச்சியும் 
உங்கள் சொந்த வளர்ச்சி கூட மறைமுகமாக இன்னொரு மனிதனை 
பாதித்துக்கொண்டே இருக்கும். நீங்கள் எதை நம்புகிறீர்கள் நம்பவில்லை 
என்பதை கடந்து உங்கள் பாதிப்புகள் உங்களால் உங்களுக்கு வருவதில்லை.
என்பது நிதர்சனமாக இருக்கும்போது நம்புவதும்/வெறுப்பதும் புற காரணிகளை 
தடுக்க போவதில்லை. 

25-30 வருடம் முன்பு சுவிஸ் நாட்டு நெஸ்டல் Nestle கொம்பனி இலவசமாக இருக்கும் தண்ணீரை 
எப்படி மனிதனுக்கு விற்று காசு பார்ப்பது என்று சிந்தித்தது .. அதன் பிரதிபலன் இன்று 
அமெரிக்காவில் இருந்து ஆப்ரிக்கா வரை சொந்த நாடுகள் தங்கள் தண்ணீர் தேக்கங்களை 
பிரைவேட் நிறுவனங்களிடம் இழந்துகொண்டு இருக்கிறார்கள். உண்மையான பிரச்சனை 
இன்னமும் ஆரம்ப நிலையில் கூட இல்லை. உண்மையான நீர் பிரச்சனை உலகில் தொடங்கும்போது 
தனக்கு வரும் வருமானத்தில் வெறும் 5 வீதத்தை நெஸ்ட்டல் ... மக்களுக்கு தானமாக கொடுப்பதுபோலவும் 
மக்களுக்கு தண்ணீர் உருவாக்குவதுபோலவும் பாசாங்கு செய்தாலே போதும். இதன் பிதாவே நெஸ்ட்டல் தான் என்பதை யாரும்  அறியப்போவதில்லை. காரணம் நீங்கள் இப்போது கடைகளில் வாங்கும் 95 வீதமான குடிநீர்  போத்தல்களில்  நீங்கள் அந்த பெயரை காண்பதே இல்லை. ஆனால் அனைத்து குடிநீர் போத்தலின்  கொக்க கோலாவின்  ஆம்னா போத்தலில் இருந்து ஒரு வீதம் நெஸ்ட்டலுக்கு போகிறது என்பது யாருக்கும் தெரியாது. 

நானோ நீங்களோ நெஸ்ட்டலின் ஒரு உதிரி கொம்பனி ஒன்றில் அதிக சம்பளத்துக்காக இணைந்து 
அவர்களுக்கு மறைமுகமாக உழைத்துக்கொண்டு ...... இங்கு தண்ணீர் பிரட்ச்சனை வறட்ச்சி போன்றவற்றை பற்றி வாதிட்டுக்கொண்டு இருப்போம். 

இந்த புரோஜோத்தமன் ரகம் 
கொக்க கோலாவையும்  பெப்ஸியையும் எதிர்க்காதீர்கள் .... இப்படித்தான் 80 களில் கலைஞரையும் எம்ஜி யாரையும் சிநேகித்து/ எதிர்த்து  பல பிரச்சனை வந்தது என்று எழுதிக்கொண்டு இருப்பார்கள். 
இந்த அரைவேக்காடுகள் ஒன்றரை எழுத முன்பு எந்தை பற்றி எழுதப்போகிறோம் என்பதை கூட கொஞ்சமும் சிந்திப்பது இல்லை ......... அன்று காலையும் மதியமும் எதை உண்டார்களோ அதை மாலை வாந்தியாக எடுத்துவிடுகிறார்கள்  என்பதுக்கு முதல் காரணம் ....... இப்படி நாம் காவிக்கொண்டு திரிவதால்தான். 

சிங்கள இனவாதம்தான் ஈழத்தமிழர்களை ஆயுதம் வரை கொண்டுபோனதே தவிர 
எந்த ஈழ தமிழனும் ஆயுதத்தை  விரும்பி எடுக்கவில்லை ... 
மேலே அருமையாக கபிதன் கூறியதுபோல் ஆயுதம் தூக்கியபின்பு தடியோ பாம்போ கையில் 
தட்டியதை கெட்டி பிடித்தார்களே தவிர .. கலைஞர் எம்ஜி ஆர் என்று தேர்வு செய்ய கூடிய எந்த சூழலும் அன்றிருக்கவில்லை ஒருவரே தந்தாலும் வேணும் ... இருவரும் தந்தாலும் வேணும் என்ற ஒரே சூழ்நிலைதான். 

நானும் நீங்களும் நேருக்கு நேர் நின்று பேசிக்கொண்டு இருக்கிறோம் 
திடீரென நான் உங்கள் முகத்தில் ஓங்கி குத்திவிடுகிறேன் ... இப்போதும் தொடர்ந்தும் குத்து வாங்குவது 
அல்லது ஓடுவது .. அல்லது என்னை திருப்பி தாக்குவது என்ற மூன்றில் ஒன்றைத்தான் நீங்கள் தேர்வு செய்வீர்கள் என்பது  குத்தும்போதே எனக்கு தெரிந்த ஒன்று. நீங்கள் எதை தேர்வு செய்தாலும் நான் குத்திய குத்தில்  வந்த வலியை நீங்களே தாங்கிக்கொள்ள வேண்டும். அதில் எந்த அடிப்படை இராஜதந்திரமும் இல்லை  வலி நிவாரணிகள் ... பல்லு கட்டுவது போன்றவை பின்னாளில் உங்கள் வசதியை பொறுத்தது. 

--------------------------------------------------------------------------------------------------------- 
தலைப்பு: 

இலங்கை தமிழர்களுக்கானதா சீமானின் அரசியல்?

உள்ளே: 

சீமானுக்கும் நாம் தமிழர் இயக்கத்துக்கும் அரசியலில் என்ன நிலை எடுப்பது, எப்படி இயக்குவது என்றெல்லாம் போதிப்பது இந்தப் பத்தியின் நோக்கமில்லை. ஆனால், சீமானும் நாம் தமிழர் இயக்கமும் முன்னெடுக்கும் அரசியலால், இலங்கை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இராஜதந்திரப் பின்னடைவுகள் குறித்து அவதானம் கொள்வது தவிர்க்க முடியாதது.  

இலங்கை தமிழர்களைப் பொறுத்தவரையில், விரும்பியோ விரும்பாமலோ, இந்திய மத்திய அரசாங்கத்தோடும், தமிழக அரசாங்கத்தோடும் இணக்கமாகச் செயற்பட வேண்டியிருக்கும்.

ஆனால், அவ்வாறான நிலை சுமூகமாகப் பேணப்படுவதை, இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, அக - புற சக்திகள் பெரியளவில் அனுமதிப்பதில்லை. ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது

ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது
மாறாக, ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இந்தியாவில் பயிற்சி பெற்ற காலங்களில், ஒரு கட்சிக்கு இணக்கமாகச் செயற்பட்ட இயக்கமொன்று, இன்னொரு கட்சியைத்  தூர நிறுத்திப் பயணித்த வரலாற்றை, இலங்கை தமிழர்கள் மீண்டும் தொடர முடியாது.

ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது
தி.மு.க அணியினருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையிலான உறவு என்பது, என்றைக்கும் இல்லாதளவுக்கு படுமோசமாகவே கடந்த பத்து ஆண்டுகளில் இருந்திருக்கின்றது. அதற்கு, சீமானை முன்னிறுத்திய புலம்பெயர் தரப்புகளின், தூர நோக்கற்ற நடவடிக்கைகள் காரணமாகும்.  

ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது
முள்ளிவாய்க்கால் இறுதி நாள்களில், தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் பெரும் விமர்சனங்கள் உண்டு. அந்த உண்ணாவிரதப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்ட போது, கலைஞரால் வெளிப்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் பற்றிய அறிவித்தல் எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை.  

ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது
சீமான் முன்வைக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும், இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. 

அடிப்படையில் சீமானின் முன்னோடி ஹிட்லர், முசோலினி போன்றவர்கள். அவர்கள், தங்களது காலத்தில், மனித குலத்துக்கு எதிரான அடிப்படைவாதத்தை விதைத்தவர்கள்.

ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது
புலம்பெயர் தமிழர்கள், முதலில் தங்களது ஆதரவையும் நிதிப்பங்களிப்பையும் எங்கு கொட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால், ஏற்படும் நன்மைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். நன்மைகள் ஏற்படவில்லை என்றாலும் பரவாயில்லை, தீமைகள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.   

ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது

ஆனால், அவ்வாறான நிலை சுமூகமாகப் பேணப்படுவதை, இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, அக - புற சக்திகள் பெரியளவில் அனுமதிப்பதில்லை. 

ஆனால், சீமானைக் கொண்டு சுமப்பவர்களோ விஷச்செடிக்கு தண்ணீருற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் செடி வீசிய விஷத்தின் எதிர்வினைகளை, ஈழத் தமிழ் அரசியல் எதிர்கொண்டிருக்கின்றது. இனியாவது, சீமான் போன்றவர்களைக் கடந்து நின்று, தூரநோக்கோடு அண்டை நாட்டு அரசியலை அணுகத் தொடங்க வேண்டும். 

-----------------------------------------------------------------------------------------------------------

இந்த கொத்துரொட்டியில் என்ன இருக்கிறது?
சீமானை பற்றிய காழ்ப்புணர்வை எடுத்துவிட்டால் .. ஒரு ஈழத்தமிழன் வாசித்து அறிய தெரிய என்ன இருக்கிறது? 
ஏன் ஒரு ஈழ தமிழன் சீமானை ஆதரிக்க/ எதிர்க்க வேண்டும்? 

"பிரதான இரு கட்சிகளும் 85 சதவீதமான வாக்குகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட பின்னர், மீதமுள்ள 15 சதவீத வாக்குகளில், 6.6 சதவீதத்தைப் பெற்றுக்கொண்டு, மூன்றாவது இடம் என்கிற நிலை குறித்துப் பெருமிதம் கொள்வது, அவ்வளவு முக்கியமான ஒரு காரியமல்ல." 

தமிழ் நாட்டில் ஒரு கட்சி 6.6வீதம் வாக்கு  பெற்றதை பற்றி ஒரு ஈழ தமிழன் அலட்ட என்ன இருக்கிறது?
இதிலும் விட அதிகமாக பெற்று எதிர்க்கட்ச்சியாக கூட விஜயகாந்த் இருந்து இருக்கிறார் .. ஏன் அவரை பற்றி நீங்கள் யாரும் அப்போது ஈழத்தமிழருக்கு கட்டுரை எழுதவில்லை? விஜயகாந்தின் இப்போதைய நிலை பற்றியாவது  ஏதாவது எழுதுகிறீர்களா? 

சீமான் ஹிட்லர் முசோலினி போன்றவர்களை ....... இல்லை அவர்களின் மறுபிறவிதான் சீமான் என்றே வைத்துக்கொள்வோம் ....... ஏன் ஒரு ஈழ தமிழன் ஹிட்லரை அல்லது மோசலோனியை இன்று பின்தொடர வேண்டும்? அதற்கான ஏதாவது ஒரு இராஜதந்திர  அக/ புற நிலை காரணி என்ன? 

 ஹிட்லர் முசோலினி 
அவர்கள், தங்களது காலத்தில், மனித குலத்துக்கு எதிரான அடிப்படைவாதத்தை விதைத்தவர்கள்.

அவர்களின் மறுபிறவியான சீமானை ஏன் மனித குலத்துக்காக மக்களுக்காக வாழும் அதிமுக. திமுக  
இந்திய மத்திய அரசு தூக்கி சிறையில் போடவில்லை? 

இன்று 30 லட்ஷம் தமிழக மக்கள் மனித குலத்துக்கு எதிராக வாக்கு போட்டு இருக்கிறார்களே 
30 லட்ஷம் மக்கள் தமிழகத்தில் இந்த மனித குலத்துக்கு எதிராக திரும்பியதன் அக/புற சூழ்நிலை என்ன? 

இந்த மனித குலம் தமிழகத்தில் 30 லட்ஷம் மக்களுக்கு எதிராக ஏதாவது செய்து இருக்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடம் முன்பு இந்தியாகவே இருந்த பாகிஸ்தான் 
இன்று இந்திய எல்லையில் ஒட்டி  இருக்கும் பாகிஸ்தானில் 
6 வீதம் 7 வீதம் வாக்கு வாங்கும் உதிரி அரசியல் கட்சிகளோ 
அல்லது பிரதான கடசிகளோ .... இந்திய மத்திய  மாநில அரசுகளுடன் 
உறவை பேணிக்கொண்டா வருகின்றன? 

இந்தியாவில் இருந்து எங்கோ தீவாக இருக்கும் நாம் 
எதற்கு இந்தியாவை பிடித்து தொங்கவேண்டும்?

(இதற்கு வேண்டும்/ வேண்டாம் என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல அதுக்கு இந்த இராஜதந்திரிகள் 
என்ன இராஜ தந்திரம் கூறுகிறார்கள்?. இன்று சிங்கள அரசு சீனாவின் வலையில் சிக்கியதும் என்னையும் வப்பாட்டியாக என்றாலும் வைத்துக்கொள் என்பதை தாண்டி இந்தியா என்ன பெரிதாக கிழிக்கிறது?)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Maruthankerny said:

இந்த கொத்துரொட்டியில் என்ன இருக்கிறது?

கொஞ்சம் காரம் அதிகம் போலிருக்கே😂

ஒரு மாதிரி ஓராளை ஆய்வுக்கட்டுரையை படிக்க வைத்தாயிற்று😉

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

கொஞ்சம் காரம் அதிகம் போலிருக்கே😂

ஒரு மாதிரி ஓராளை ஆய்வுக்கட்டுரையை படிக்க வைத்தாயிற்று😉

இது சீமானை நோண்டும் ஆயிரத்து மூன்றாவது கட்டுரை யாக இருக்கிறதே தவிர 
என்னை பொறுத்தவரை யாழ்களத்தில் சீமான் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதைவிட 
சில விடயங்களை நன்றாக எழுதி இருக்கிறார்கள்.

(இதை ஏற்கனவே மேலே எழுதி இருக்கிறேன்)  

என்னை கேட்டால் ...
நீங்கள் இதைவிட கொஞ்சம் காரமாகவும் சுவையாகவும் 
சீமான் கொத்துபோடுவீர்கள் என்பதே நான் வாசித்து அறிந்தது 

நான் ஏன் சீமானை எதிர்க்கவேண்டும்? என்பதை தொடர்ந்தும் வாசித்து வருகிறேன் 
எந்த கடையிலும் ஒரு தரமான கொத்துரொட்டி இன்னமும் கிடைக்கவில்லை.

அதுக்கான காரணம்  மாவை திராவிட சங்கம்தான் எல்லோருக்கும் மொத்தமாக 
விநியோகிக்கிறது என்று எண்ணுகிறேன் ஆதலால் எல்லா சில்லறை பெட்டிக்கடை 
கொத்துரொட்டிகளும் ஒரே சுவையில் இருக்கின்றன.

கொத்துரொட்டி கடைக்காரர்கள் மாவை வெளிநாடு ஒன்றில் இருந்து அல்லது சொந்தமாக பயிரிடுவதன் மூலம் பெற்றுக்கொண்டால் கொத்துரொட்டி சுவை மாறலாம்  என்று எண்ணுகிறேன்.

வெறும் தனிமனித தாக்குதலாகவோ ... அல்லது ஒரு கட்டுரை ஆசிரியர் சீமானை எதிர்த்தார் என்பதால் அவர் மீது  உமிழும் காழ்ப்புணர்வாகவோ இருக்க கூடாது என்பதால் விரிவாக எழுதினேன்.
எதை எழுதினாலும் நேரம் வீண் என்பது தெரிந்ததே. கொத்துரொட்டி பிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள். 
ஆதலால் இந்த கொத்துரொட்டி வியாபாரம் தொடரும் என்பது தெரிந்ததுதான் 

இப்போதும் சீமானை எதிர்க்க ஒரு நல்ல காரணம் வேண்டும் என்று தேடுகிறேன்...  

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை குறித்து, புலம்பெயந்தவர்களை விட தாயாக மக்களும், அரசியல்வாதிகளும், அரசியல்  விமர்சகர்களும், பத்திரிகையாளரும் தெளிவாக இருப்பது மன மகிழ்ச்யை கொடுக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 
நல்ல வேளை மிகுதியை வாசித்து நேரத்தை வீணடிக்காது விட்டோம் 

சீமானின் வளர்ச்சி அல்ல 
உலகில் எந்த மனிதனின் வளர்ச்சியும் 
உங்கள் சொந்த வளர்ச்சி கூட மறைமுகமாக இன்னொரு மனிதனை 
பாதித்துக்கொண்டே இருக்கும். நீங்கள் எதை நம்புகிறீர்கள் நம்பவில்லை 
என்பதை கடந்து உங்கள் பாதிப்புகள் உங்களால் உங்களுக்கு வருவதில்லை.
என்பது நிதர்சனமாக இருக்கும்போது நம்புவதும்/வெறுப்பதும் புற காரணிகளை 
தடுக்க போவதில்லை. 

25-30 வருடம் முன்பு சுவிஸ் நாட்டு நெஸ்டல் Nestle கொம்பனி இலவசமாக இருக்கும் தண்ணீரை 
எப்படி மனிதனுக்கு விற்று காசு பார்ப்பது என்று சிந்தித்தது .. அதன் பிரதிபலன் இன்று 
அமெரிக்காவில் இருந்து ஆப்ரிக்கா வரை சொந்த நாடுகள் தங்கள் தண்ணீர் தேக்கங்களை 
பிரைவேட் நிறுவனங்களிடம் இழந்துகொண்டு இருக்கிறார்கள். உண்மையான பிரச்சனை 
இன்னமும் ஆரம்ப நிலையில் கூட இல்லை. உண்மையான நீர் பிரச்சனை உலகில் தொடங்கும்போது 
தனக்கு வரும் வருமானத்தில் வெறும் 5 வீதத்தை நெஸ்ட்டல் ... மக்களுக்கு தானமாக கொடுப்பதுபோலவும் 
மக்களுக்கு தண்ணீர் உருவாக்குவதுபோலவும் பாசாங்கு செய்தாலே போதும். இதன் பிதாவே நெஸ்ட்டல் தான் என்பதை யாரும்  அறியப்போவதில்லை. காரணம் நீங்கள் இப்போது கடைகளில் வாங்கும் 95 வீதமான குடிநீர்  போத்தல்களில்  நீங்கள் அந்த பெயரை காண்பதே இல்லை. ஆனால் அனைத்து குடிநீர் போத்தலின்  கொக்க கோலாவின்  ஆம்னா போத்தலில் இருந்து ஒரு வீதம் நெஸ்ட்டலுக்கு போகிறது என்பது யாருக்கும் தெரியாது. 

நானோ நீங்களோ நெஸ்ட்டலின் ஒரு உதிரி கொம்பனி ஒன்றில் அதிக சம்பளத்துக்காக இணைந்து 
அவர்களுக்கு மறைமுகமாக உழைத்துக்கொண்டு ...... இங்கு தண்ணீர் பிரட்ச்சனை வறட்ச்சி போன்றவற்றை பற்றி வாதிட்டுக்கொண்டு இருப்போம். 

இந்த புரோஜோத்தமன் ரகம் 
கொக்க கோலாவையும்  பெப்ஸியையும் எதிர்க்காதீர்கள் .... இப்படித்தான் 80 களில் கலைஞரையும் எம்ஜி யாரையும் சிநேகித்து/ எதிர்த்து  பல பிரச்சனை வந்தது என்று எழுதிக்கொண்டு இருப்பார்கள். 
இந்த அரைவேக்காடுகள் ஒன்றரை எழுத முன்பு எந்தை பற்றி எழுதப்போகிறோம் என்பதை கூட கொஞ்சமும் சிந்திப்பது இல்லை ......... அன்று காலையும் மதியமும் எதை உண்டார்களோ அதை மாலை வாந்தியாக எடுத்துவிடுகிறார்கள்  என்பதுக்கு முதல் காரணம் ....... இப்படி நாம் காவிக்கொண்டு திரிவதால்தான். 

சிங்கள இனவாதம்தான் ஈழத்தமிழர்களை ஆயுதம் வரை கொண்டுபோனதே தவிர 
எந்த ஈழ தமிழனும் ஆயுதத்தை  விரும்பி எடுக்கவில்லை ... 
மேலே அருமையாக கபிதன் கூறியதுபோல் ஆயுதம் தூக்கியபின்பு தடியோ பாம்போ கையில் 
தட்டியதை கெட்டி பிடித்தார்களே தவிர .. கலைஞர் எம்ஜி ஆர் என்று தேர்வு செய்ய கூடிய எந்த சூழலும் அன்றிருக்கவில்லை ஒருவரே தந்தாலும் வேணும் ... இருவரும் தந்தாலும் வேணும் என்ற ஒரே சூழ்நிலைதான். 

நானும் நீங்களும் நேருக்கு நேர் நின்று பேசிக்கொண்டு இருக்கிறோம் 
திடீரென நான் உங்கள் முகத்தில் ஓங்கி குத்திவிடுகிறேன் ... இப்போதும் தொடர்ந்தும் குத்து வாங்குவது 
அல்லது ஓடுவது .. அல்லது என்னை திருப்பி தாக்குவது என்ற மூன்றில் ஒன்றைத்தான் நீங்கள் தேர்வு செய்வீர்கள் என்பது  குத்தும்போதே எனக்கு தெரிந்த ஒன்று. நீங்கள் எதை தேர்வு செய்தாலும் நான் குத்திய குத்தில்  வந்த வலியை நீங்களே தாங்கிக்கொள்ள வேண்டும். அதில் எந்த அடிப்படை இராஜதந்திரமும் இல்லை  வலி நிவாரணிகள் ... பல்லு கட்டுவது போன்றவை பின்னாளில் உங்கள் வசதியை பொறுத்தது. 

--------------------------------------------------------------------------------------------------------- 
தலைப்பு: 

இலங்கை தமிழர்களுக்கானதா சீமானின் அரசியல்?

உள்ளே: 

சீமானுக்கும் நாம் தமிழர் இயக்கத்துக்கும் அரசியலில் என்ன நிலை எடுப்பது, எப்படி இயக்குவது என்றெல்லாம் போதிப்பது இந்தப் பத்தியின் நோக்கமில்லை. ஆனால், சீமானும் நாம் தமிழர் இயக்கமும் முன்னெடுக்கும் அரசியலால், இலங்கை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இராஜதந்திரப் பின்னடைவுகள் குறித்து அவதானம் கொள்வது தவிர்க்க முடியாதது.  

இலங்கை தமிழர்களைப் பொறுத்தவரையில், விரும்பியோ விரும்பாமலோ, இந்திய மத்திய அரசாங்கத்தோடும், தமிழக அரசாங்கத்தோடும் இணக்கமாகச் செயற்பட வேண்டியிருக்கும்.

ஆனால், அவ்வாறான நிலை சுமூகமாகப் பேணப்படுவதை, இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, அக - புற சக்திகள் பெரியளவில் அனுமதிப்பதில்லை. ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது

ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது
மாறாக, ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இந்தியாவில் பயிற்சி பெற்ற காலங்களில், ஒரு கட்சிக்கு இணக்கமாகச் செயற்பட்ட இயக்கமொன்று, இன்னொரு கட்சியைத்  தூர நிறுத்திப் பயணித்த வரலாற்றை, இலங்கை தமிழர்கள் மீண்டும் தொடர முடியாது.

ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது
தி.மு.க அணியினருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையிலான உறவு என்பது, என்றைக்கும் இல்லாதளவுக்கு படுமோசமாகவே கடந்த பத்து ஆண்டுகளில் இருந்திருக்கின்றது. அதற்கு, சீமானை முன்னிறுத்திய புலம்பெயர் தரப்புகளின், தூர நோக்கற்ற நடவடிக்கைகள் காரணமாகும்.  

ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது
முள்ளிவாய்க்கால் இறுதி நாள்களில், தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் பெரும் விமர்சனங்கள் உண்டு. அந்த உண்ணாவிரதப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்ட போது, கலைஞரால் வெளிப்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் பற்றிய அறிவித்தல் எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை.  

ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது
சீமான் முன்வைக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும், இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. 

ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது
அடிப்படையில் சீமானின் முன்னோடி ஹிட்லர், முசோலினி போன்றவர்கள். அவர்கள், தங்களது காலத்தில், மனித குலத்துக்கு எதிரான அடிப்படைவாதத்தை விதைத்தவர்கள்.

ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது
புலம்பெயர் தமிழர்கள், முதலில் தங்களது ஆதரவையும் நிதிப்பங்களிப்பையும் எங்கு கொட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால், ஏற்படும் நன்மைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். நன்மைகள் ஏற்படவில்லை என்றாலும் பரவாயில்லை, தீமைகள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.   

ஆதரவு, எதிர்ப்பு மனநிலை இருக்கலாம். ஆனால், அதனை ஓர் இராஜதந்திக் கட்டத்தில் முன்னிறுத்தி செயற்பட முடியாது

ஆனால், அவ்வாறான நிலை சுமூகமாகப் பேணப்படுவதை, இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, அக - புற சக்திகள் பெரியளவில் அனுமதிப்பதில்லை. 

ஆனால், சீமானைக் கொண்டு சுமப்பவர்களோ விஷச்செடிக்கு தண்ணீருற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் செடி வீசிய விஷத்தின் எதிர்வினைகளை, ஈழத் தமிழ் அரசியல் எதிர்கொண்டிருக்கின்றது. இனியாவது, சீமான் போன்றவர்களைக் கடந்து நின்று, தூரநோக்கோடு அண்டை நாட்டு அரசியலை அணுகத் தொடங்க வேண்டும். 

-----------------------------------------------------------------------------------------------------------

இந்த கொத்துரொட்டியில் என்ன இருக்கிறது?
சீமானை பற்றிய காழ்ப்புணர்வை எடுத்துவிட்டால் .. ஒரு ஈழத்தமிழன் வாசித்து அறிய தெரிய என்ன இருக்கிறது? 
ஏன் ஒரு ஈழ தமிழன் சீமானை ஆதரிக்க/ எதிர்க்க வேண்டும்? 

"பிரதான இரு கட்சிகளும் 85 சதவீதமான வாக்குகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட பின்னர், மீதமுள்ள 15 சதவீத வாக்குகளில், 6.6 சதவீதத்தைப் பெற்றுக்கொண்டு, மூன்றாவது இடம் என்கிற நிலை குறித்துப் பெருமிதம் கொள்வது, அவ்வளவு முக்கியமான ஒரு காரியமல்ல." 

தமிழ் நாட்டில் ஒரு கட்சி 6.6வீதம் வாக்கு  பெற்றதை பற்றி ஒரு ஈழ தமிழன் அலட்ட என்ன இருக்கிறது?
இதிலும் விட அதிகமாக பெற்று எதிர்க்கட்ச்சியாக கூட விஜயகாந்த் இருந்து இருக்கிறார் .. ஏன் அவரை பற்றி நீங்கள் யாரும் அப்போது ஈழத்தமிழருக்கு கட்டுரை எழுதவில்லை? விஜயகாந்தின் இப்போதைய நிலை பற்றியாவது  ஏதாவது எழுதுகிறீர்களா? 

சீமான் ஹிட்லர் முசோலினி போன்றவர்களை ....... இல்லை அவர்களின் மறுபிறவிதான் சீமான் என்றே வைத்துக்கொள்வோம் ....... ஏன் ஒரு ஈழ தமிழன் ஹிட்லரை அல்லது மோசலோனியை இன்று பின்தொடர வேண்டும்? அதற்கான ஏதாவது ஒரு இராஜதந்திர  அக/ புற நிலை காரணி என்ன? 

 ஹிட்லர் முசோலினி 
அவர்கள், தங்களது காலத்தில், மனித குலத்துக்கு எதிரான அடிப்படைவாதத்தை விதைத்தவர்கள்.

அவர்களின் மறுபிறவியான சீமானை ஏன் மனித குலத்துக்காக மக்களுக்காக வாழும் அதிமுக. திமுக  
இந்திய மத்திய அரசு தூக்கி சிறையில் போடவில்லை? 

இன்று 30 லட்ஷம் தமிழக மக்கள் மனித குலத்துக்கு எதிராக வாக்கு போட்டு இருக்கிறார்களே 
30 லட்ஷம் மக்கள் தமிழகத்தில் இந்த மனித குலத்துக்கு எதிராக திரும்பியதன் அக/புற சூழ்நிலை என்ன? 

இந்த மனித குலம் தமிழகத்தில் 30 லட்ஷம் மக்களுக்கு எதிராக ஏதாவது செய்து இருக்கிறதா? 

மருதர்,

உண்மையில் இந்தக் கட்டுரையில் உள்ள முரண்பாடுகளை தனித்தனியே விமர்சிக்க விரும்பினேன். ஆனால் அது வீண் என்று புரிந்ததால் சுருக்கமாக கூறினேன்.

1) சீமானை தலைவராகக் கொள்வதாக புலம்பெயர்ந்தவர்கள் / அமைப்புக்கள்  எப்போதாவது கூறினார்களா ? 

2) புலம்பெயர் தமிழரை ஒன்றிணைத்து தாயகத்துடன் தொடர்பிலிருத்த இலங்கையிலிருந்து ஏதாவது தமிழ்த் தரப்புக்கள் ஆக்க பூர்வமான ஏதாவது ஒரு முயற்சியாவது செய்தார்களா ?

இப்படி கேள்விகளை அடிக்கிக் கொண்டே போகலாம். ஆனால் ஒன்றுக்குமே பதில் இல்லை என்பது எம் எல்லொருக்குமே தெரியும். 

சீமானின் உண்மை, முகம் அது போலியென்றால் வெளியே தெரிய வரத்தான் போகிறது. 

சீமான் போலியென்று கூறுபவர்கள், சரியான வழிகாட்டுதல் இங்கே கிடைக்கும் என்று யாரை குறி காட்டுகிறார்கள்/காட்டப் போகிறார்கள்.....?

 இதற்கும் பதில் ஒருவருக்கும் தெரியாது

☹️

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

இதில் இன்னமும் வேடிக்கையானது 
சீமான் ஒன்றுமே இல்லை என்று அவர் கத்தி ஏதும் ஆகப்போவதும் இல்லை 
என்றும் தெளிவாக தமது கைகளாலேயே எழுதுகிறார்கள்.

தமிழ் நாட்டில் 6 கோடி பேர்கள் இருக்கும்போது ஏன் சீமானை பற்றி மட்டும் 
எழுதுகிறார்கள் என்பதே முதலில் அவர்களுக்கு புரியவில்லை 

இதில் தெளிவு .. புரிவு என்றும் 
சிலர் இங்கு பட்டாசு கொளுத்திக்கொண்டு இருக்கிறார்கள் 

ஒரு கொத்துரொட்டி கடை ஓரமா ஒதுங்கி 
வானவேடிக்கை பார்ப்பது ஒரு தனி சுகம்.

E0sqbrzVgAIaxhg?format=jpg&name=medium

இங்கு பலருக்கும் புரியாதது 
சீமானை வளர்ப்பவர்கள் இவர்கள் என்பதே 
பைப்பை திறந்தால் தண்ணீர் வரும் வீடுகளில் வாழ்பவர்களுக்கு 
இவர்களின் வலிகள் புரிய வாய்ப்பில்லை.

அவர்களுக்கு மாலையானால் ஒரு கொத்துரொட்டி போதும் 
இரவு வயிற்றுக்குள் வைத்து கலக்கி காலையில் வாந்தி எடுக்க 
அதுவே அவர்களுக்கு போதுமாக இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

கட்டுரையாளர் புருஜோத்தமன் தங்கமயில் ஒர் இந்திய வம்சாவளி தமிழர் போல் தெரிகின்றது. இலங்கை தமிழர் என்று குறிப்பிட்டு எழுதிகின்றார். 

கட்டுரையாளர்  இந்திய வம்சாவளி தமிழராக இருந்தால் கூட அவர் இலங்கை தமிழர் தானே. வெளிநாட்டில் வாழும்  மாயண்டியின்   இலங்கை ஆதரவாளர்கள் பச்சை தேசிக்காய் Lime.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, zuma said:

சீமானை குறித்து, புலம்பெயந்தவர்களை விட தாயாக மக்களும், அரசியல்வாதிகளும், அரசியல்  விமர்சகர்களும், பத்திரிகையாளரும் தெளிவாக இருப்பது மன மகிழ்ச்யை கொடுக்கின்றது. 

உங்களுக்கு ஒன்று தெரியுமா??

தாயக மக்கள் இன்று எவரையும் நம்புவதில்லை 

தெளிவாக இருக்கிறார்கள்.

அவர்களது நம்பிக்கை வேறு

அதை எவராலும் கொடுக்கவோ ஈடுசெய்யவோ முடியாது

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் அரசியல் தமிழகத்தை மையமாகக் கொண்டிருப்பினும்.. தமிழ் தேசிய உணர்வால்.. நாம் தமிழராக உலகத்தமிழினத்தை ஒன்று சேர்க்கும் சக்தியாக அமையும்.

சீமானின் வளர்ச்சி.. இலங்கையிலும் பலருக்கு பிரச்சனை. குறிப்பாக.. 2009 மே க்குப் பின் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும்.. கூட்டமைப்பு உட்பட்ட போலித் தமிழ் தேசியக் கட்சிகளின் குட்டு வெளிப்பட்டிருமோ என்ற கவலை அவர்களுக்கு அதிகம்.

கொடும் இனப்படுகொலை.. ராஜபக்ச குடும்பத்தை பாதுகாத்ததை தவிர.. இலங்கையில் தமிழ் தேசியக் கட்சிகளும் சரி சிங்கள அரச எடுபிடி கட்சிகளும் சரி.. தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தது எதுவுமில்லை. ஆக்கிரமிப்பு சிங்களப் படை மத்தியில் தமிழ் மக்களை பணயம் வைத்துவிட்டு.. சுயலாப அரசியல் செய்கிறது சம் சும் மாவை கும்பல்.. உட்பட எல்லா தமிழ் தேசியக் கட்சிகளும். எவருமே உருப்படியான படை விலகலுக்கு இதுவரை குரல் கொடுத்ததில்லை. சர்வதேச மட்டத்திலும் சரி.. உள்ளூரிலும் சரி.

சீமானின் வளர்ச்சி.. தமிழகத்தில் இருந்தான.. தமிழீழத்து மக்களுக்கான தார்மீக ஆதரவு அதிகரிப்பது கூட.. முற்றிலுமான சிங்கள பெளத்த பேரினவாதத்தினதும்.. இஸ்லாமிய அடிப்படை வாதத்தினதும் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித் தவிக்கும்.. ஈழத்தமிழருக்கு பாதுகாப்பே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

உங்களுக்கு ஒன்று தெரியுமா??

தாயக மக்கள் இன்று எவரையும் நம்புவதில்லை 

தெளிவாக தெரிகிறார்கள்.

அவர்களது நம்பிக்கை வேறு

அதை எவராலும் கொடுக்கவோ ஈடுசெய்யவோ முடியாது

சரியாக சொன்னீர்கள் நீங்கள். நாம் யாரையும் நம்பி நடக்க கூடாது. ஊரிலை சொல்லுவார்கள் நம்ப நட நம்பி நடவதே என்று. இந்தியா அரசியலே எமக்கு யாரும் எதிரிகள் அல்ல. அப்படி யாரும் ஒருசாரார் எதிரி என்று எமக்கு சொன்னால்,  சொல்லுகிறவன் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பசு தோல் போர்த்திய ஓநாய்கள் ஆகும். 

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

மருதர்,

உண்மையில் இந்தக் கட்டுரையில் உள்ள முரண்பாடுகளை தனித்தனியே விமர்சிக்க விரும்பினேன். ஆனால் அது வீண் என்று புரிந்ததால் சுருக்கமாக கூறினேன்.

1) சீமானை தலைவராகக் கொள்வதாக புலம்பெயர்ந்தவர்கள் / அமைப்புக்கள்  எப்போதாவது கூறினார்களா ? 

2) புலம்பெயர் தமிழரை ஒன்றிணைத்து தாயகத்துடன் தொடர்பிலிருத்த இலங்கையிலிருந்து ஏதாவது தமிழ்த் தரப்புக்கள் ஆக்க பூர்வமான ஏதாவது ஒரு முயற்சியாவது செய்தார்களா ?

இப்படி கேள்விகளை அடிக்கிக் கொண்டே போகலாம். ஆனால் ஒன்றுக்குமே பதில் இல்லை என்பது எம் எல்லொருக்குமே தெரியும். 

சீமானின் உண்மை, முகம் அது போலியென்றால் வெளியே தெரிய வரத்தான் போகிறது. 

சீமான் போலியென்று கூறுபவர்கள், சரியான வழிகாட்டுதல் இங்கே கிடைக்கும் என்று யாரை குறி காட்டுகிறார்கள்/காட்டப் போகிறார்கள்.....?

 இதற்கும் பதில் ஒருவருக்கும் தெரியாது

☹️

உங்கள் கேள்விகளுக்கு என் சார்ந்த பதில்

1 -  இதுவரை அப்படி யாரும் சொன்னதில்லை. பிரான்சில் நாம் தமிழர் கட்சியின் கூட்டங்களுக்கோ அல்லது பிரச்சாரங்களுக்கோ ஈழத்தமிழர் செல்வதில்லை. தமிழக பாண்டிச்சேரி இளைஞர்களே அதை செய்கிறார்கள்.

2 - கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. அந்த வக்கற்ற நிலையே வேறு எங்காவது எவராவது வளர்ந்து விடக்கூடாது என்ற வக்கிரமான முட்டுக்கட்டை.

9 minutes ago, zuma said:

சரியாக சொன்னீர்கள் நீங்கள். நாம் யாரையும் நம்பி நடக்க கூடாது. ஊரிலை சொல்லுவார்கள் நம்ப நட நம்பி நடவதே என்று. இந்தியா அரசியலே எமக்கு யாரும் எதிரிகள் அல்ல. அப்படி யாரும் ஒருசாரார் எதிரி என்று எமக்கு சொன்னால்,  சொல்லுகிறவன் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பசு தோல் போர்த்திய ஓநாய்கள் ஆகும். 

தமிழர்களுக்கு போதுமான பட்டறிவுண்டு 

அது போதும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

தமிழ் நாட்டில் ஒரு கட்சி 6.6வீதம் வாக்கு  பெற்றதை பற்றி ஒரு ஈழ தமிழன் அலட்ட என்ன இருக்கிறது?

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது தான் ! தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம்!

இதுவும் சீமானின் கொள்கைகளில் ஒன்று

ஆகவே ஈழத்து தமிழர்கள் இவரைப்பற்றி அலசலாம்

சீமான் ஹிட்லர் முசோலினி போன்றவர்களை ....... இல்லை அவர்களின் மறுபிறவிதான் சீமான் என்றே வைத்துக்கொள்வோம் ....... ஏன் ஒரு ஈழ தமிழன் ஹிட்லரை அல்லது மோசலோனியை இன்று பின்தொடர வேண்டும்? அதற்கான ஏதாவது ஒரு இராஜதந்திர  அக/ புற நிலை காரணி என்ன? 

அவர் தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத்து தமிழர்களின் நலன் விரும்பிகளின் வாக்குக்களை வைத்து அரசியலில் தன்னைத் தக்க வைக்க விழைகின்றார்

2 hours ago, Maruthankerny said:

 ஹிட்லர் முசோலினி 
அவர்கள், தங்களது காலத்தில், மனித குலத்துக்கு எதிரான அடிப்படைவாதத்தை விதைத்தவர்கள்.

அவர்களின் மறுபிறவியான சீமானை ஏன் மனித குலத்துக்காக மக்களுக்காக வாழும் அதிமுக. திமுக  
இந்திய மத்திய அரசு தூக்கி சிறையில் போடவில்லை? 

இது தான் திராவிடக் கொள்கை அவர்களுக்குத் தெரியும் சீமானின் வளர்ச்சி எதுவரை என்று
காத்திருக்கின்றார்கள்
மத்திய அரசான   பாஜ க சீமானின் மூலம்
வாக்குகளை பிரித்து தனது கால்களைத் தமிழகத்தில் நிலைத்து வைக்க காத்திருக்கின்றது

இன்று 30 லட்ஷம் தமிழக மக்கள் மனித குலத்துக்கு எதிராக வாக்கு போட்டு இருக்கிறார்களே 
30 லட்ஷம் மக்கள் தமிழகத்தில் இந்த மனித குலத்துக்கு எதிராக திரும்பியதன் அக/புற சூழ்நிலை என்ன?

 தமிழ் தேசிய அரசியல்

இந்த மனித குலம் தமிழகத்தில் 30 லட்ஷம் மக்களுக்கு எதிராக ஏதாவது செய்து இருக்கிறதா? 

ஆம் ஏமாற்று அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் திமுக பினாமிகள், ஆறுமுகம் தொண்டைமான், பின்னர், அவர் மகன், ஜீவன் தொண்டைமான் ஊடாக இயங்குகிறார்கள். இவர்கள் தமிழகத்தில் பெரும் முதலீடு செய்துள்ளனர். முத்தையா முரளீதரன் அங்கே பெரும் முதலாளி. அவரது பேச்சிலும் விசம் கண்டோமே.

ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுத கதை தான். கொத்துகொத்தா இறந்து விழும்போது, இவர்கள் கைகள், தலை சொறிந்து கொண்டு இருந்ததா? 

திமுகவுக்கும், கலைஞருக்கும் அறிவுரை சொல்லி இருக்கலாமே.

சீமான் 7% என்று வளர்ச்சி கண்டவுடன், டயஸ்போறாக்களுக்கு அறிவுரை கொடுக்கிறாராம். அறிவுரை கொடுக்க சொன்னவர்கள், யாரோ?

சீமானுக்கு வாக்களித்தவர்கள், புலம் பெயர் ஈழத்தமிழ் மக்கள் அல்ல, தமிழக வாக்காளர்கள். இந்த இழவு புரியாமல், என்ன எழுதுறார் தங்கமயில். 

சரி, ஸ்டாலினுக்கு... ஈழ தமிழர் பிரச்சனை தொடர்பில் ஏதாவது கோரிக்கையாவது வைத்தாரா என்றால், இல்லை. கிளம்பி வரார், நம்ம கிருபன் டயஸ்போறாவுக்கு அறிவுரை சொல்ல. கிருபன் அய்யாவுக்கு சொந்த மூளை, இருக்கு, இரவல் மூளை தேவை இல்லையே. 😏

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

கிருபனிட்டயும் துல்பனிட்டயும் ஒருக்காச் சொல்லச் சொல்லுங்கோ இலங்கை புலம் பெயரிகளுக்கு சரியான வழிகாட்டலாக யாரைக் கை காட்டுவீர்கள் எண்டு. 

அதை ஒருக்கா சொல்லச் சொல்லுங்கோ பார்ப்போம்.

(துண்டைக் காணோம் துணியைக் காணோம் எண்டு ஓடிவிடுவினம்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.