Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்மயி - வைரமுத்து விவகாரம் என்னாகும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக ஆட்சி காலத்தில் வைரமுத்து ஆண்டாள் குறித்து சொல்லப்போக, எழுந்த சர்ச்சையினால், பிராமணர்கள் கிளர்ந்து எழுந்தனர்.

எச் ராஜா மிக கேவலமாக வைரமுத்துவை திட்டினார்.

பாடகி சின்மயி ஒரு பிராமணர். அவரும் தான் பங்குக்கு, வைரமுத்து மேலே பாலியல் குற்றம் சுமத்தினர்.

ஆனாலும் போலீசாரிடம் முறைப்பாடு செய்யவில்லை. சமூக வலைத்தளங்களில் மட்டுமே தனது குற்றசாட்டினை தொடர்ந்து வைத்து வந்தார்.

இப்போது பத்ம சேஷாத்திரி பாடசாலை விவகாரம் விசுவரூபம் எடுத்ததும், வைரமுத்து மீதான தனது குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று அதே பிராமண சமுகத்தினை காக்கும் வகையில் கருத்து சொல்லி உள்ளார்.

சின்மயி ட்வீட் காரணமாக சென்னையில் அவருக்கு கிடைக்க இருந்த மத்திய அரசு விருது வழங்குதல் தடைபட்டது. 

மறுப்புறம், கலைஞரின் தோழர், வைரமுத்து ஒரு திமுக அனுதாபி.

ஆகவே, அவர் இனி கொஞ்சம் தென்பாக எதிர் நடவடிக்கை எடுக்கக்கூடும். மான நஷ்ட வழக்கு போட்டாலும் ஆச்சரியமில்லை.

முறைப்பாடு கொடுக்காமல், சமூக வலைத்தளங்களில் மட்டும் அவதூறு பரப்பும் நோக்கம், சாட்சியம் இல்லாததால், வைரமுத்து முறைப்பாடு செய்தால், தான் அதுக்கு விளக்கம் கொடுத்தால் மட்டும் போதும் என்ற எண்ணமாக இருக்கலாம்.  

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து PK என்பது ஊரறிந்த பரம ரகசியம். பெண்கள் மீதும், சிறுவர்கள் மீதும் பாலியல் குற்றம் செய்கிறவர்கள் மீது குலம், கோத்திரம், ஜாதி என்பன பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Edited by zuma

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, zuma said:

வைரமுத்து PK என்பது ஊரறிந்த பரம ரகசியம். பெண்கள் மீதும், சிறுவர்கள் மீதும் பாலியல் குற்றம் செய்கிறவர்கள் மீது குலம், கோத்திரம், ஜாதி என்பன பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

PK  எண்டால் என்ன?

சொல்ல கஷ்டம் எண்டால் தனி மடலில் போடுங்கோ. சின்னப்பெடியன் ப்ரொபைல் வைத்துக்கொண்டு கிருபன் தம்பி திரியுறார்... 😜

****

டபெக்கெண்டு இங்க ஒருத்தர் சொல்லிப்போட்டார். அட, நான் தான் விளக்கெண்ணெய் மாதிரி கேட்க்கிறேன்....

நீங்கள் ஆள், பழம் திண்டு கொட் டை போட்ட கில்லாடி ஆள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, zuma said:

வைரமுத்து PK என்பது ஊரறிந்த பரம ரகசியம். பெண்கள் மீதும், சிறுவர்கள் மீதும் பாலியல் குற்றம் செய்கிறவர்கள் மீது குலம், கோத்திரம், ஜாதி என்பன பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11 minutes ago, Nathamuni said:

PK  எண்டால் என்ன?

ஐ... திங்க், PK என்றால்... பொம்பிளை கேஸ். 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

ஐ... திங்க், PK என்றால்... பொம்பிளை கேஸ். 😜

பொம்பிளைகள்ளனாம் 😁

***

சுமோ,

அதென்ன.... கவியரசு கண்ணதாசன் தனது சுஜசரிதையில் நடந்ததை பொம்பிளை கள்வனாக இருந்ததை சொன்னால், ஒகே.

கவிப்பேரரசு வைரமுத்தர் சொல்லாவிட்டால் ஒகே இல்லை, PK யோ? 

எந்த ஊரு நியாயமையா 😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

பொம்பிளைகள்ளனாம் 😁

சும்மா... குத்து மதிப்பாக எழுதினேன்.
கிட்டத் தட்ட... சரி வந்துட்டுது.
பூ.. என்றாலும், புஷ்பம் என்றாலும்... ஒன்று தானே. 😂

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, zuma said:

வைரமுத்து PK என்பது ஊரறிந்த பரம ரகசியம். பெண்கள் மீதும், சிறுவர்கள் மீதும் பாலியல் குற்றம் செய்கிறவர்கள் மீது குலம், கோத்திரம், ஜாதி என்பன பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Zuma வின் கருத்தைப் பார்க்கும் போது,

 Joe Biden இரஸ்ய அதிபர் Putin ஐ "I Think Putin is a killer"~ எண்டு சொன்னதற்கு, Putin "It takes one to know one" என்று கூறியதுதான் நினைவிற்கு வருகிறது.

எழுந்தமானமாக எல்லோரின் மீதும் சேற்றை வாரித் தூற்றுவது சரியான நடைமுறைதானா..?

சின்மயி தனது கூற்றில் நம்பிக்கை உள்ளவராக இருந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதிதான் சரியான செயலாக இருக்கும். 

இல்லாவிட்டால் அவரின் கூற்றில் உள் நோக்கம் இருப்பதாகவே கொள்ளப்படும்.

☹️

  • கருத்துக்கள உறவுகள்

PK ஐ விட இன்னொரு இரண்டெழுத்து நாங்கள் பாவிக்கிறது.. ஆனால் அதை இங்கை எழுதமுடியாது🙃

அபிலாஷ் இப்படிச் சொல்லியிருக்கின்றார்..

ஒரு பெண்ணின் மார்புகளை, பின்புறத்தை உற்றுப் பார்ப்பதும் குற்றமே. இதை செய்யாத ஆண்கள் எத்தனை பேர் உண்டா? ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு பெண்ணிடம் பாலியல் முயற்சி செய்யாத ஆண்கள் இங்குண்டா? ஒருவர் இங்கு வந்து நான் அப்படி ஒரு தடவை கூடப் பண்ணினதில்லை என சொல்வார்களா?”

பெண்ணிய போர்க்கொடி தூக்கும், வைரமுத்து சாகும் வரை அடிப்போம் என குமுறும் இந்த ஆண்களைத் தான் தாங்க முடியவில்லை. இதற்குப் பதிலாக “நான் உத்தமன்” என நெற்றியில் எழுதி ஒட்டிக் கொள்ளுங்களேன்!”

49 minutes ago, Nathamuni said:

சின்னப்பெடியன் ப்ரொபைல் வைத்துக்கொண்டு கிருபன் தம்பி திரியுறார்.

இந்த விசயங்களில் என்னுடைய எழுத்துப் புலமையை நாதம்ஸ் காணவில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, zuma said:

வைரமுத்து PK என்பது ஊரறிந்த பரம ரகசியம்.

உங்களுக்கு பிடித்தவர்களை  PK என்று சொல்ல மாட்டீர்களா? அந்த துறையிலை வகை தொகையாக இருக்கின்றார்கள் எல்லோ?

55 minutes ago, Nathamuni said:

பொம்பிளைகள்ளனாம் 😁

நானும் அதைத்தான் ஊகிச்சனான்.ஏதோ சொல்ல வாயெடுத்தது... ஏன் சோலி எண்டுபோட்டு கிச்சின் கிளீன் பண்ண போட்டன். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, கிருபன் said:

ஒரு பெண்ணின் மார்புகளை, பின்புறத்தை உற்றுப் பார்ப்பதும் குற்றமே. இதை செய்யாத ஆண்கள் எத்தனை பேர் உண்டா? ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு பெண்ணிடம் பாலியல் முயற்சி செய்யாத ஆண்கள் இங்குண்டா? ஒருவர் இங்கு வந்து நான் அப்படி ஒரு தடவை கூடப் பண்ணினதில்லை என சொல்வார்களா?”

உள்ளேன் ஐயா...😔

Senthil GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

உள்ளேன் ஐயா...😔

Senthil GIFs | Tenor

கு.சா. ஐயா ஆசாரவாதி என்பது தெரிந்ததுதானே😜

  • கருத்துக்கள உறவுகள்

ஆல் என்றால் விழுதுகள்

ஆண் என்றால் உணர்வுகள் இருக்கும்..

இனம் என்றால் பெருக்கம் இருக்கும்

பெருக்கம் என்றால் பெண்ணிருக்கும்..

ஆனால்.. விருதுக்கு

வேண்டும் திறமை

வேண்டாத வம்புக்கு அல்ல.

கவிஞனின் கவி பாடிப்

பிழைக்கும் காரிகைகளே

உங்கள் மனதில் இருக்கும் கறுப்பை

அகற்றி

கற்பை விலை பேசாமல்

கண்ணியமாய் நடவுங்கள்

உணர்வுள்ள ஆணும்

அடங்கி கைதொழுவான்.. உங்களை..!

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஓர் செய்தி வாசித்த நினைவு.

 சுயஇன்பத்தை விரும்பி அனுபவியுங்கள் என்று சின்மயி பகிரங்கமாக சொன்னதாக. 

உண்மையா?  

எவர் கூறினாலும் கருத்தில் தவறு இல்லை, ஏற்ற மருத்துவ  ஆலோசனையை வழிபற்றி அனுபவித்தால்.

ஆனால் இப்படியான கருத்துக்கள் இன்னமும் தெற்காசிய கலாசாரத்தில் சமூக விலக்குத் (taboo)  தானே.  

1 hour ago, கிருபன் said:

ஒரு பெண்ணின் மார்புகளை, பின்புறத்தை உற்றுப் பார்ப்பதும் குற்றமே. இதை செய்யாத ஆண்கள் எத்தனை பேர் உண்டா? ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு பெண்ணிடம் பாலியல் முயற்சி செய்யாத ஆண்கள் இங்குண்டா? ஒருவர் இங்கு வந்து நான் அப்படி ஒரு தடவை கூடப் பண்ணினதில்லை என சொல்வார்களா?”

இனி camel toe (effect) pants உம் வருகிறது பேஷன் ஆக. பெடியள், ஆண்கள் பாடு திண்டாட்டம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அபிலாஷ் இப்படிச் சொல்லியிருக்கின்றார்..

ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு பெண்ணிடம் பாலியல் முயற்சி செய்யாத ஆண்கள் இங்குண்டா? ஒருவர் இங்கு வந்து நான் அப்படி ஒரு தடவை கூடப் பண்ணினதில்லை என சொல்வார்களா?”

கற்பழித்தவனை திருமணம் செய்யும்படி நீதிமன்றமே சொன்ன நாட்டை சேர்ந்த இவர் அபிலாஷ் இப்படி மோசமா தான் சிந்திப்பார்.

சின்மயி தனது கூற்றில் நம்பிக்கை உள்ளவராக இருந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதிதான் சரியான செயலாக இருக்கும்.💯

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு மகள் இருந்து,

அவள் தொழில் செய்ய போன இடத்தில், தந்திரமாக, ஆதாரம் ஏதும் அற்ற முறையில் பாலியல் சுரண்டலுக்கு ஆளானால் யாழில் வந்து நான் என்ன கருத்து எழுதக்கூடும்?

நான் ஒரு பிரபல்யமானவனாய் இருந்து,

அரசியல் காரணங்களுக்காய் என் மகள் வயதை ஒத்த பெண், என் மீது வீண் பாலியல் பழி சொன்னால் யாழில் வந்து நான் என்ன கருத்து எழுதக்கூடும்?

இவ்வாறு பலவாறு சிந்தித்து நான் எழுதிய கருத்தை கீழே காண்க:

🙏🏾

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சின்மயி தனது கூற்றில் நம்பிக்கை உள்ளவராக இருந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதிதான் சரியான செயலாக இருக்கும்.💯

சுசி லீக்ஸ் பிரச்சனையில், சின்மயி பெயரும் வந்ததாக ஞாபகம்.... 

***

தேடினேன் கிடைத்தது. சுசிக்கு மனநிலை சரியில்லை என்று சொல்லி, அனைவரும் தப்பிக்க முனைந்தார்கள். நெருப்பில்லாமல் புகை இல்லை.

ஆக, சின்மயி ஒழுக்கமானவர் கிடையாது என்பது அவரது இந்த பதிவில் இருந்தே தெரிகிறது 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

சுசி லீக்ஸ் பிரச்சனையில், சின்மயி பெயரும் வந்ததாக ஞாபகம்.... 

சுசி லீக்ஸ் இதுவரை தெரியாது பின்பு படிக்கிறேன் 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, விளங்க நினைப்பவன் said:

சுசி லீக்ஸ் இதுவரை தெரியாது பின்பு படிக்கிறேன் 😄

வீடியோ இணைத்துள்ளேன். மேலே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனுசின் பார்ட்டிகளுக்கு, இளம் நடிகைகள் போவார்கள், அங்கே பெரும் பொறுக்கியாக தனுசும், அனிருத்தும் இருப்பார்கள். இசை அமைப்பாளர் என்கிற வகையில் சான்ஸ் வாங்க, பாடகிகள் சுசி(த்திரா), சின்மயியும் அங்கே போவார்கள். தண்ணி அடித்ததும், போதை மருந்து எடுத்ததும், மங்கிய வெளிச்சத்தில் தாறுமாறாக நடப்பார்கள்.

சுசி, மது குடிப்பதில்லை என்றும், அவர் குடித்த கூல் ட்ரிங்கில் ஏதோ கலந்து விட்டிருக்கிறார்கள் போலும். மயக்கத்தில்  இருந்த போது, தனுஷ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக அடுத்த நாள் ட்வீட் போட்டார்.

ஒவ்வொரு நாளுக்கு ஒன்றாக, பரபரப்பாக படங்கள் வந்து கொண்டிருந்தன. அதாவது, சுசி, அதுக்கு முன்னர் நிகழ்ந்த பார்ட்டிகளில், மது அருந்தததால் ரகசியமாக படங்களை எடுத்து இருக்கிறார். மிகவும் நெருக்கமாக, சில வீடியோக்கள் அனிருத், ஒரு நடிகையுடன் படுக்கையில் இயங்கிக்கொண்டிருந்த வீடியோக்கள் கூட யூடியூபில் வந்தன.

இவர் படம் எடுக்கிறார் என்ற சந்தேகம் வர அது குறித்து கேள்வி எழுப்ப இல்லை என்று சொல்லி இருக்கிறார். இருந்தாலும் இவரையும் அப்படி ஒரு நிலையில் படம் எடுத்து வைத்து  விட்டால், அம்மணி பின்னர் கப்பம், அது இது என்று பிரச்சனை தர மாட்டார் என்று நினைத்திருக்க கூடும்.

ஆகவே drugged rape நடந்திருக்கின்றது. ஆனால் அது அந்த பெண்ணை பெருமளவில் பாதித்து இருக்கவேண்டும். ஆகவே. கோபத்தில் தான் எடுத்த படங்களை ஒவ்வொன்றாக விட, அதிர்ந்து போன தனுஷ் கோஸ்ட்டி, கணவரை மடக்கி, பணத்தை கொடுத்தோ என்னவோ, அவரும் தனது மனைவிக்கு மனநிலை பாதிப்பு, அவரது கணக்கினை யாரோ ஹேக் பண்ணி, மார்பிங் செய்யப்பட்ட படங்களை விடுகின்ற்னர் என்று கதை விட்டார். இந்த கணவர், கார்த்திக்குமார் தனுசுடன் படங்களில் நடித்தவர்.

Suchitra opens up about divorce with husband Karthik Kumar, denies leaking  pictures and videos - Bollywood News & Gossip, Movie Reviews, Trailers &  Videos at Bollywoodlife.com

கடைசி வரை அந்த பெண் மனநிலை சரியாகவில்லை. தனக்கு நடந்த அநியாயத்தினை மறக்க முடியாமல் மனநிலை பாதிப்புக்கு உள்ளானார்.

மனநிலை சரியில்லை என்பதை சொல்லி (அல்லது காட்டி தனுசுக்கும், அனிரூத்துக்கும் உதவ) கணவரும் விவாகரத்து செய்ய, அந்த பெண் இங்கிலாந்து வந்து, அண்மையில் தான் தமிழகம் திரும்பினார். இப்போது தனது வாழ்வினை மெதுவாக கட்டி எழுப்ப முனைகிறார். பாவம் அந்த பெண்.

அவர் குறித்தே சின்மயியும் இந்த வீடியோவில் சொல்லி தப்ப முனைகிறார்

RJ Suchitra wishes ex-husband Karthik Kumar spoke about things 'in a more  dignified way'

அநேகமாக, தனுசின் நன்றாக ஓடிக்கொண்டிருந்த ஒன்டேர்பார் என்ற சினிமா கொம்பனி, திவாலாகும் அளவுக்கு  பல கோடி இவர்களை வாயை மூட வைக்க கைமாறி இருக்கும்.

கொம்பனியின் கணக்காளர் பணத்தினை சுருட்டிக்கொண்டு ஓடி விட்டார் என்று புது கதை உருட்டினார்கள்.

ஆக, ஒல்லி பாச்சான் நடிகர், ஒரு PK. அதனாலேயே பணத்தினை இழந்தார். இன்னும் சொல்லப்போனால், சுசி விசயம் உண்மையானால், கம்பி என்ன வேண்டியவர்.

ஒருவிதத்தில் பணம் வந்தால், வேறு விதத்தில் போகணுமே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எனக்கு ஒரு மகள் இருந்து,

அவள் தொழில் செய்ய போன இடத்தில், தந்திரமாக, ஆதாரம் ஏதும் அற்ற முறையில் பாலியல் சுரண்டலுக்கு ஆளானால் யாழில் வந்து நான் என்ன கருத்து எழுதக்கூடும்?

நான் ஒரு பிரபல்யமானவனாய் இருந்து,

அரசியல் காரணங்களுக்காய் என் மகள் வயதை ஒத்த பெண், என் மீது வீண் பாலியல் பழி சொன்னால் யாழில் வந்து நான் என்ன கருத்து எழுதக்கூடும்?

இவ்வாறு பலவாறு சிந்தித்து நான் எழுதிய கருத்தை கீழே காண்க:

🙏🏾

உங்கள் உறவினருக்கு இதே நிலை ஏற்பட்டிருந்தால் நீங்கள் இவ்வாறுதானா கும்பிடு போடுவீர்கள்.. ?

நம்பமுடியவில்லை.

(கவனிக்க: Diamondpearl ஐ ஒருவரும் சுத்தமானவர் என்று கூறவில்லலை என்பது என் கருத்து)

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

உங்கள் உறவினருக்கு இதே நிலை ஏற்பட்டிருந்தால் நீங்கள் இவ்வாறுதானா கும்பிடு போடுவீர்கள்.. ?

நம்பமுடியவில்லை.

(கவனிக்க: Diamondpearl ஐ ஒருவரும் சுத்தமானவர் என்று கூறவில்லலை என்பது என் கருத்து)

இதில் உண்மையில் யாரை நம்புவது என்பது எனக்கு தெரியவில்லை கற்பிதன்.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி அதை நிறுவ முடியாமல் தவித்தவர்களையும்,

பொய்யான பாலியல் குற்றசாட்டுக்கு இலக்காகி, குற்றம் தீர்க்க படாமலே தொழில், வாழ்க்கை, குழந்தைகளை இழந்து நடுதெருவில் நின்றவர்களையும் எனக்கு தெரியும்.

எங்களால் ஆதாரங்களை ஆராய முடியும் என்றால் ஒரு முடிவு எடுக்கலாம்.

இங்கே கருத்து எழுதும் எத்தனை பேர் சின்மயியை, வைரமுத்தை நேரில் கண்டாவது இருக்கிறோம்?

அப்படி இருக்க வெறும் செய்திகளையும் வதந்திகளையும் வைத்து ஒரு முடிவு காண முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

அபிலாஷ் இப்படிச் சொல்லியிருக்கின்றார்..

ஒரு பெண்ணின் மார்புகளை, பின்புறத்தை உற்றுப் பார்ப்பதும் குற்றமே. இதை செய்யாத ஆண்கள் எத்தனை பேர் உண்டா? ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு பெண்ணிடம் பாலியல் முயற்சி செய்யாத ஆண்கள் இங்குண்டா? ஒருவர் இங்கு வந்து நான் அப்படி ஒரு தடவை கூடப் பண்ணினதில்லை என சொல்வார்களா?”

பல ஆண்கள் இப்படி இருக்கிறார்கள். இவர்களை தன்னின சேர்க்கையாளர் என்பர். ஆப்பிள் நிறுவன தலைவரும் இவர்களில் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

பல ஆண்கள் இப்படி இருக்கிறார்கள். இவர்களை தன்னின சேர்க்கையாளர் என்பர். ஆப்பிள் நிறுவன தலைவரும் இவர்களில் ஒருவர்.

என்னா......து 

ஒரு பெண்ணை உற்றுப் பார்ப்பது குற்றமா ?

அடப் பாவிகளா..? நான் ஒரு பெண்ணை உற்றுப் பார்த்து, காதலித்து, கண்ணாளமும் கட்டி நாலு குலந்த வேற..😳

நான் கம்பியல்லோ எண்ண வேண்டும்

🤦🏼‍♂️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திமுக ஆட்சியில் சின்மயிக்கு இனி அலுப்பு இருக்கும்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.