Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார் வளைகுடாவில் விடப்பட்ட 19,000 ஆமைக் குஞ்சுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • பிரபுராவ் ஆனந்தன்
  • பிபிசி தமிழுக்காக
3 மணி நேரங்களுக்கு முன்னர்
FUNDAOPRNCIPE_FFI

பட மூலாதாரம்,FUNDAOPRNCIPE_FFI

கொரோனா ஊரடங்கு காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மாசு குறைந்ததால் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு 19 ஆயிரம் ஆமை முட்டைகள் மண்டபம் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டன. இவை பொரிப்பகத்தில் வைக்கப்பட்ட பின் பிறந்த ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

உலகில் உள்ள ஏழு வகை கடல் ஆமைகளில் சித்தாமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, பச்சை ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய ஐந்து வகை கடல் ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.

ஆண் ஆமையோடு இனப் பெருக்கம் செய்த பெண் ஆமையானது முட்டையிடுவதற்காக மணல்பாங்கான கடற்கரையை நோக்கி வரும். பெண் ஆமை கடற்கரையில் சுமார் மூன்று அடி ஆழம் வரையிலும் குழி தோண்டி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் இடும்.

பின்னர் முட்டையை பாதுகாக்கும் பொருட்டு மணலால் குழியை மூடி விட்டு மீண்டும் கடலுக்கே சென்று விடும். முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவர 45 முதல் 55 நாட்கள் வரை ஆகும்.

முட்டையிலிருந்து வெளி வரும் ஆமை குஞ்சுகளானது தானாகவே கடற்கரை வழியாக ஊர்ந்து கடல் நீரில் நீந்தி ஆழ்கடலை நோக்கி சென்று விடும். அதனால் கடல் ஆமைகள் கடற்கரை பகுதியில் முட்டையிட்டு சென்று விடுகின்றன.

ஆனால் கடற்கரை ஓரங்களில் ஆமைகள் இட்டு செல்லும் முட்டைகளை காகம், நாய், பெருச்சாளி உள்ளிட்டவைகள் சேதப்படுத்துவதால் கடந்த சில ஆண்டுகளாக கடல் ஆமைகள் வேகமாக அழிந்து வருகின்றன.

அவற்றை அழிவில் இருந்து பாதுகாக்க கடற்கரை ஓரங்களில் குழி தோண்டி ஆமைகள் இட்டு செல்லும் முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து செயற்கை பொரிப்பகத்தில் வைத்து, முட்டையில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளி வந்த உடன் அதனை கடலில் விட்டு விடுகின்றனர். கடல் ஆமைகளை பொறுத்தவரை டிசம்பர் முதல் மே மாதம் வரை முட்டையிட கடற்கரைக்கு வரும்.

ஆமைக் குஞ்சுகள்

பட மூலாதாரம்,ASIT KUMAR/AFP/GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப்படம்

தற்போது மீனவர்கள் மத்தியில் கடல் ஆமைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வனத்துறையினரால் தொடர்ந்து ஏற்படுத்தப்படுவதால், கடலில் மீன் பிடிக்கும் போது வலைகளில் கடல் ஆமைகள் சிக்கினால் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுவித்து விடுகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் குறைந்தது கடல் மாசு

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடற்கரை பகுதி ஆமைகள் முட்டையிடுவதற்கு ஏற்ற பகுதி. அங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தொடங்கி மே மாதம் வரை வனத்துறையினர் ஆமை முட்டைகளை சேகரிக்கின்றனர்.

இந்தாண்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளை எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள செயற்கை குஞ்சு பொரிப்பகத்தில் மணலில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டன. 45 முதல் 55 நாட்களுக்கு பின் குஞ்சுகள் பொரிக்கப்பட்டு கடற்கரை மணல் பரப்பில் விடப்பட்டன.

கடற்கரையில் விடப்படும் அனைத்து ஆமை குஞ்சுகளும் மணல் பரப்பில் மெதுவாக ஊர்ந்தபடி தனுஷ்கோடி கடலை நோக்கி சென்று கடல் நீரில் நீந்திய படி ஆழமான கடல் பகுதியை நோக்கி சென்றன.

கொரோனா ஊரடங்கு காரணமாக மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்தலும், கடற்கரைகளில் மக்கள் நடமாட்டமும் இல்லாததால் கடலில் மாசு, குறிப்பாக பிளாஸ்டிக் மாசு குறைந்துள்ளது.

ஆமைக் குஞ்சுகள்

இதனால் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு 19 ஆயிரத்தி 748 ஆமை முட்டைகள் சேகரிக்கபட்டு அதில் இருந்து 19 ஆயிரத்தி 200 ஆமை குஞ்சுகள் கடலில் விட்டு வனத்துறையினர் சாதனை படைத்துள்ளதாக கூறினார் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ்.

மீனவர்களுக்கு வனத்துறையினரால் விழிப்புணர்வு

தொடர்ந்து பேசிய வெங்கடேஷ் மண்டபம் வனத்துறையினரால் வாரம்தோறும் மீனவ கிராமங்களுக்கு சென்று அழிந்து வரும் ஆமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

இந்த ஆண்டு மீனவ கிராமங்களில் மீனவர்கள் அதிகளவு இந்த எண்ணிக்கையில் முட்டைகள் கிடைப்பதற்கு வனத்துறைக்கு உதவினர். சில நேரங்களில் வனத்துறையால் பணியமர்த்தப்பட்டுள்ள காப்பாளர்கள் முட்டைகளை சேகரிக்க தவறினாலும் மீனவர்கள் உடனடியாக ஆமை முட்டைகள் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் என்று அவர் தெரிவித்தார்.

கடல் காப்பான் சான்றிதழ்

மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அவர்களின் மீன்பிடி வலைகளில் சிக்கி அரிய வகை ஆமைகள் இறந்து விடுகின்றன.

இதனை தடுப்பதற்காக பாம்பன் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கடல் ஓசை சமுதாய வானொலி மூலம் மீனவர்களின் வலைகளில் சிக்கும் அரியவகை மீன் இனங்களை உடனடியாக வலையில் இருந்து விடுவித்து கடலில் உயிருடன் விட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அப்படி வலைகளில் இருந்து ஆமைகளை விடும் காட்சியை செல்போன்களில் படம் பிடித்து வாட்ஸ்அப் மூலம் வானொலியுடன் பகிர்ந்து கொண்டால் அவர்களுக்கு கடல் காப்பான் என்கின்ற சான்றிதழ் மற்றும் பரிசு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

மீனவர்களுக்கு பணப்பரிசு

இது குறித்து பாம்பன் கடல் ஓசை சமுதாய வானொலியில் பணியாற்றி வரும் லெனின் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்களுக்கு எந்த பகுதியில் மீன்கள் அதிகமாக உள்ளது என்பதனை செயற்கைகோள் உதவியுடன் வானொலியில் அறிவிப்பது, கடலில் ஏற்படும் புயல் குறித்தான முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குவது உள்ளிட்ட மீனவர்களின் நலன் சார்ந்த செயல்களை தொடர்ச்சியாக செய்து வருகிறோம் என்றார்.

இதன் ஒரு பகுதியாக அழிந்துவரும் அரியவகை கடல் வாழ் உயிரினங்களை காப்பதற்காக கடல் ஓசை சமுதாய வானொலி வழியாக மீனவர்கள் வலையில் தவறுதலாக சிக்கும் ஆமைகள், டால்பின், கடல் பசு உள்ளிட்ட அரிய வகை மீன்களை வலையில் இருந்து உயிருடன் மீட்டு கடலில் விடும் வீடியோக்களை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்தால் அவர்களுக்கு 'கடல் காப்பான்' என்கின்ற சான்றிதல், டி-ஷர்ட் மற்றும் 1000 ரூபாய் ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது.

இதனை கடந்த உலக மீனவர் தினத்தில் இருந்து துவங்கி இன்று வரை ஆறு மீனவர்கள் தங்களது படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் போது வழியில் சிக்கிய ஆமைகளை விடுவித்த வீடியோவை அனுப்பி இந்த பரிசை பெற்றுச் சென்றுள்ளதாக கூறினார் லெனின் .

ஜெல்லி மீன்களை உண்ணும் ஆமைகள்

தொடர்ந்து பேசிய லெனின் பொதுவாக கடல் ஆமைகள் மீன் வளம் பெருக்க அதிக பங்காற்றி வருகிறது. உதாரணமாக கடலில் ஜெல்லி மீன்கள் அதிகமாக இருக்கும். ஜெல்லி மீன்கள் கடல் மீன்களை உண்டு வாழ்ந்து வருவதால் மீன் வளம் குறைகிறது. அதே வேளை ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உண்பதால் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து மீனவர்களுக்கு வருவாய் உயரும்.

ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை மற்றும் வனத்துறையினர் உதவியுடன் தொடர்ச்சியாக இந்த செயலை செய்து வருகிறோம். இது மீனவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார் லெனின்.

மீனவர்களின் நண்பன் கடல் ஆமைகள்

கடல் ஆமைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது குறித்து மீனவர் ஜிம்மி காட்டர் பிபிசி தமிழிடம் பேசுகையில், நான் கடந்த 35 ஆண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். பெரும்பாலும் நாங்கள் பயன்படுத்தும் மீன்பிடி வலைகளில் மீன்களுடன் ஆமைகளும் சேர்ந்து வருவதுண்டு சில நேரங்களில் ஆமைகள் புகுந்த வலைகளில் மீன் வராது என்ற கோபத்தில் வலையில் சிக்கும் ஆமைகளை கொன்று விடுவோம்.

தற்போது கடல் ஆமைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வுகளை அவ்வப்போது வனத்துறை மற்றும் மீன் வளத்துறையினர் தெரிவித்து வருவதால் வலைகளில் சிக்கும் ஆமைகளை உயிருடன் கடலில் விட்டு விடுகிறோம்.

எங்கள் மீனவர்கள் சிலர் கடல் உணவாக ஆமை கறிகளை சமைத்து சாப்பிட்டு வந்தனர். இதனால் ஆமைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதாக மீனவர்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வால் கடல் ஆமைகளை சாப்பிடுவதை மீனவர்கள் தவிர்த்து விட்டனர்.

மேலும் கடற்கரை ஓரங்களில் பல இடங்களில் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடலில் மீனவர்கள் வலையில் சிக்கும் ஆமைகளை உயிருடன் கடலில் விடுவதால் ஆமைகள் இறந்து ஒதுங்குவது அதிகளவு குறைந்துள்ளது. இது மீனவர்களாகிய எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதாக கூறுகிறார் மீனவர் ஜிம்மி காட்டர்.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடலில் நிகழ்ந்த மாற்றம்: மன்னார் வளைகுடாவில் விடப்பட்ட 19,000 ஆமைக் குஞ்சுகள் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமைகளுக்கும் கூட கடலும் கரையும் சொந்தம்.......எஞ்யோய் எஞ்சாமி........நல்ல செயல் பாராட்டுக்கள்......!  👍 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். 

ஆமைகள் தமிழர் வாழ்வோடு ஒன்றிய உயிரினங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நல்ல விடயம். 

ஆமைகள் தமிழர் வாழ்வோடு ஒன்றிய உயிரினங்கள்.

ஆமைக்குஞ்சுகள் வளர்ந்து வரட்டும் கறி சமைக்கலாம் 🤭

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

ஆமைக்குஞ்சுகள் வளர்ந்து வரட்டும் கறி சமைக்கலாம் 🤭

இதுல ஏதோ டபுள் மீனிங் இருக்கிறமாதிரித் தெரியுதே?! சும்மா, பொது அறிவுக்கு!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

ஆமைக்குஞ்சுகள் வளர்ந்து வரட்டும் கறி சமைக்கலாம் 🤭

ஏன், "படகு கூட விடலாம்"...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மியாவ் said:

ஏன், "படகு கூட விடலாம்"...

ஓம் மறந்திட்டேன் 🤣

1 hour ago, ரஞ்சித் said:

இதுல ஏதோ டபுள் மீனிங் இருக்கிறமாதிரித் தெரியுதே?! சும்மா, பொது அறிவுக்கு!!!

இல்லை இல்லை ஒரு மீனிங் தான். 😊

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

ஓம் மறந்திட்டேன் 🤣

"The Croods" என்ற ஆங்கில அனிமேஷன் திரைப்படம் பார்த்ததுண்டா... அதில் ஆமை ஓட்டில் ஒரு ஏரியை கடந்து பயணம் செய்வது போல் காட்சி அமைத்திருப்பார்கள்... அதிலிருந்து கூட இந்த சிந்தனை பெறபட்டிருக்கலாம்...

Edited by மியாவ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, shanthy said:

ஆமைக்குஞ்சுகள் வளர்ந்து வரட்டும் கறி சமைக்கலாம் 🤭

ஓம் ஆமை இறைச்சி நல்லதெண்டு சொல்லீனம். நானும் ஊரிலை இருக்கேக்கை ஆமை இறைச்சி உடும்பு இறைச்சி எல்லாம் சாப்பிட்டு இருக்கிறன்.

சாந்தி அக்கா! நீங்கள்???? 🐢 😷

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஓம் ஆமை இறைச்சி நல்லதெண்டு சொல்லீனம். நானும் ஊரிலை இருக்கேக்கை ஆமை இறைச்சி உடும்பு இறைச்சி எல்லாம் சாப்பிட்டு இருக்கிறன்.

சாந்தி அக்கா! நீங்கள்???? 🐢 😷

ஆமை சாப்பிட்டால் ஆறுமாதம் கோவில் பக்கம் அண்ட விடார் . உடம்பு நன்றாய் இறுகும்  என்பார்கள் .உண்மை பொய் தெரியாது .🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, பெருமாள் said:

ஆமை சாப்பிட்டால் ஆறுமாதம் கோவில் பக்கம் அண்ட விடார் . உடம்பு நன்றாய் இறுகும்  என்பார்கள் .உண்மை பொய் தெரியாது .🤣

ஆமை இறைச்சி உடம்புக்கு நல்லது. 🐢 💪🏽
இருந்தாலும் ஆமை🐢 அசையாமல் ஆயிரம் முட்டையிடும். ஆனால் கோழி 🐔ஒரு முட்டையை போட்டுட்டு படுற பாடு இருக்கே...???? ஸ்.....சப்பா சொல்லி வேலையில்லை 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஆமை இறைச்சி உடம்புக்கு நல்லது. 🐢 💪🏽
இருந்தாலும் ஆமை🐢 அசையாமல் ஆயிரம் முட்டையிடும். ஆனால் கோழி 🐔ஒரு முட்டையை போட்டுட்டு படுற பாடு இருக்கே...???? ஸ்.....சப்பா சொல்லி வேலையில்லை 😂

நான் வரேல்லை இந்த விளையாட்டுக்கு 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, பெருமாள் said:

நான் வரேல்லை இந்த விளையாட்டுக்கு 🤣

எனக்கும் இந்த விளையாட்டு மனதார/துண்டற விருப்பமில்லை 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஓம் ஆமை இறைச்சி நல்லதெண்டு சொல்லீனம். நானும் ஊரிலை இருக்கேக்கை ஆமை இறைச்சி உடும்பு இறைச்சி எல்லாம் சாப்பிட்டு இருக்கிறன்.

சாந்தி அக்கா! நீங்கள்???? 🐢 😷

இன்னும் ஆமைக்கறி சாப்பிடேல்ல. இப்ப தானே கடலில விட்டிருக்கு வளரட்டும் சாப்பிட்டு பாப்போம். 🤣

5 hours ago, பெருமாள் said:

நான் வரேல்லை இந்த விளையாட்டுக்கு 🤣

பெருமாள் நீங்கள் சாமியாகீட்டியள். 😀

4 hours ago, குமாரசாமி said:

எனக்கும் இந்த விளையாட்டு மனதார/துண்டற விருப்பமில்லை 😂

🐢புகுந்த இடம் உருப்படாதெண்டு சொல்லும் வார்த்தைகள் உண்மை போல இருக்கு. 🤣

எனக்கும் துண்டற விருப்பம் இல்லை 🐢 பற்றி யோசிக்க. 😂

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மியாவ் said:

"The Croods" என்ற ஆங்கில அனிமேஷன் திரைப்படம் பார்த்ததுண்டா... அதில் ஆமை ஓட்டில் ஒரு ஏரியை கடந்து பயணம் செய்வது போல் காட்சி அமைத்திருப்பார்கள்... அதிலிருந்து கூட இந்த சிந்தனை பெறபட்டிருக்கலாம்...

இன்னும் "The Croods" பார்க்கவில்லை. நீங்கள் சொல்றபோல அந்த ஆமையோடு சிலவேளை இந்த சீ🐢 சிந்தனையை கொள்ளையடிச்ச படமோ தெரியாது. 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

இன்னும் "The Croods" பார்க்கவில்லை. நீங்கள் சொல்றபோல அந்த ஆமையோடு சிலவேளை இந்த சீ🐢 சிந்தனையை கொள்ளையடிச்ச படமோ தெரியாது. 😂

 

படம் சிந்தனையை கொள்ளை அடிச்சது என்று முரணுக்கு முரணாக சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்...

எப்படியோ யாரோ யாரையோ கொள்ளை அடித்திருக்கிறார்கள்...

அப்படியே, "தங்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்"...🎂🎂🎂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மியாவ் said:

படம் சிந்தனையை கொள்ளை அடிச்சது என்று முரணுக்கு முரணாக சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்...

எப்படியோ யாரோ யாரையோ கொள்ளை அடித்திருக்கிறார்கள்...

அப்படியே, "தங்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்"...🎂🎂🎂

ரெண்டும் சினிமா தானே 😀 

அன்பு நிறைந்த வாழ்த்துக்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆமைகளை கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் இலகுவில சமிபாடடையாது

சீமான் எனும் அரசில்வாதி சிலவருடங்களுக்கு முன் இவ்வாறு ஆமைகறி சாப்ப்ட்டு செரிமானம் அடையாமல் பிரச்சினைப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2021 at 06:38, shanthy said:

ஆமைக்குஞ்சுகள் வளர்ந்து வரட்டும் கறி சமைக்கலாம் 🤭

நேசக்கரம்  இதை ஒரு வியாபாரமாக தொடங்கி செய்யலாமே!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

நேசக்கரம்  இதை ஒரு வியாபாரமாக தொடங்கி செய்யலாமே!!

வியாபாரம் நமக்கு சரிப்பட்டு வராது கண்டியளோ 🙃

1 hour ago, colomban said:

இலங்கையில் ஆமைகளை கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் இலகுவில சமிபாடடையாது

சீமான் எனும் அரசில்வாதி சிலவருடங்களுக்கு முன் இவ்வாறு ஆமைகறி சாப்ப்ட்டு செரிமானம் அடையாமல் பிரச்சினைப்பட்டார்.

🙈🙉🙊💣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, shanthy said:

🐢புகுந்த இடம் உருப்படாதெண்டு சொல்லும் வார்த்தைகள் உண்மை போல இருக்கு. 🤣

எனக்கும் துண்டற விருப்பம் இல்லை 🐢 பற்றி யோசிக்க. 😂

2 hours ago, colomban said:

இலங்கையில் ஆமைகளை கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் இலகுவில சமிபாடடையாது

சீமான் எனும் அரசில்வாதி சிலவருடங்களுக்கு முன் இவ்வாறு ஆமைகறி சாப்ப்ட்டு செரிமானம் அடையாமல் பிரச்சினைப்பட்டார்.

 

உண்மையில் ஆமை,ஆமைக்கறி விடயத்தில் எமது தலைவர் பிரபாகரனைத்தான் கேலி பண்ணிக்கொண்டு திரிந்தார்கள். அதை இன்று வேறொரு கோணத்தில்  காவிக்கொண்டு திரிகின்றார்கள்.

தற்போது இருக்கும் பிரச்சனைகளை பற்றி சிந்திக்காமல் முகநூல்,டிவிட்டர் போன்றவற்றில் இருக்கும் மூன்றாம் தர விண்ணர்களின் கருத்துக்களை போல் இங்கேயும் பகிர்வது உங்களுக்குத்தான் அவமானம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.