Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலில் பேருந்துகளை போடும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக... தமிழக மீனவர்கள் போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் பேருந்துகளை போடும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக... தமிழக மீனவர்கள் போராட்டம்!

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தமிழகத்தில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று(திங்கட்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தை  பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகுகளை மராமத்தி பணி செய்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் இந்தாண்டு  கொரோனா ஊரடங்கு காரணமாக மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தில் தங்களது படகுகளை மராமத்துப் பணி செய்யாததால் மேலும் 15 நாட்கள் மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை மராமத்தது பணி செய்து விட்டு எதிர்வரும் 30ஆம் திகதிக்கு மேல் மீன் பிடி கடலுக்கு செல்லாம் என முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி டோக்கன் அலுவலக வளாகத்தில் விசைப்படகு மீனவர்கள்  அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

மீனவர்கள் நடத்திய கூட்டத்தில் தொடர்ந்து தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை அளிக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லையில் இருந்து அருகே இந்திய, இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் இடங்களான கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து துறைக்கு  சொந்தமான பேருந்துகளை கடல் பரப்பில் இறக்கி வருகின்றனர்.

பேருந்துகளின் கூடுகளை கடலில் இருக்கும் போது கடல் மாசு படுவதுடன் தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும் அவர்கள் விரிக்கும் மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும், கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை கடற்பகுதிக்கும் செல்லகூடும் இதனால் படகுகள் மற்றும் வலைகள் சேதமடைந்து நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனடியாக இலங்கை மீன்வளத்துறை இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுத்தியுள்ளதுடன், நாளைய தினம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1222691

  • கருத்துக்கள உறவுகள்

"இரும்பு  அடிபுண்ட சட்டி, பித்தளை இருக்கா" என்று கூவி வரும் பழைய உலோகப் பொருட்களை வாங்கும் வியாபாரிகள் இலங்கையில் தற்போது இல்லையா..... ? இந்தப் பேரூந்துகளையும் விற்றுக் காசாக்காமல்.... கடலில் எறிகிறார்களே.....?? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

"இரும்பு  அடிபுண்ட சட்டி, பித்தளை இருக்கா" என்று கூவி வரும் பழைய உலோகப் பொருட்களை வாங்கும் வியாபாரிகள் இலங்கையில் தற்போது இல்லையா..... ? இந்தப் பேரூந்துகளையும் விற்றுக் காசாக்காமல்.... கடலில் எறிகிறார்களே.....?? 🤔

எல்லோரும் புலம் பெயர்ந்து விட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் பல்வேறு உள்நோக்கங்களோட தான் பழைய பஸ்ஸை கடலுக்க இறக்கியிருக்கிறார்! வட பகுதி மீனவர்களிடம் இழுவை படகுகள் குறைவு போல, தமிழ்நாட்டு மீனவர்களிற்குத்தான் பாதிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஏராளன் said:

அமைச்சர் பல்வேறு உள்நோக்கங்களோட தான் பழைய பஸ்ஸை கடலுக்க இறக்கியிருக்கிறார்! வட பகுதி மீனவர்களிடம் இழுவை படகுகள் குறைவு போல, தமிழ்நாட்டு மீனவர்களிற்குத்தான் பாதிப்பு.

இது முதல்ல செய்தி வந்த போது நாங்கள் யாரும் யோசிக்காத கோணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

இது முதல்ல செய்தி வந்த போது நாங்கள் யாரும் யோசிக்காத கோணம்.

எனவே தாடியர் விசயகாரர் 😎

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

எனவே தாடியர் விசயகாரர் 😎

தாடியர் விசயகாரரோ இல்லையோ - என்பதை விட, எமது கடல் வளங்களை தமிழக மீன் முதலாளிகள் சூறை ஆடக்கூடாது என்பதுதான் என் கரிசனை.

ஏராளனும் முன்பு இதை பற்றி கரிசனை கொண்டு எழுதியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

எனவே தாடியர் விசயகாரர் 😎

கோஷான் தாடியர சப்போர்ட் பண்ணுறார் என்று எழுந்த சந்தேகம் ஏன், அதை முதலில் சுட்டி காட்டிய ஏராளன் மீது எழவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

தாடியர் விசயகாரரோ இல்லையோ - என்பதை விட, எமது கடல் வளங்களை தமிழக மீன் முதலாளிகள் சூறை ஆடக்கூடாது என்பதுதான் என் கரிசனை.

ஏராளனும் முன்பு இதை பற்றி கரிசனை கொண்டு எழுதியுள்ளார்.

ஆமாம் என்ன கரிசனை... புல்லரிக்கிறது.!!

தமிழக மீன் முதலாளிகள் மீனைத்தான் சூறையாடுகிறார்கள். சிங்கள மீன் முதலாளிகளோ... தமிழரின் கடலையே சூறையாடுகிறார்கள்.

என் இனமே, என் சனமே பாடியவரைப் பொல்லால் அடிக்கவேண்டும் போல் தோன்றவில்லையா...

  • கருத்துக்கள உறவுகள்

கிரிமினல் மூளை, தாடி விசயத்தோடை அலுவல் பார்த்திருக்குது.இப்ப விசயம் என்னடா, ரோலரில வந்து அடிமட்டத்துக்கு வலை போட்டு, இழுக்கிற கோஸ்ட்டியல், மீன் பிடியாயினம்...

பஸ் பிடிக்கப்போகினம்.... யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 760 பஸ் பிடிக்க, அந்த பக்கமா வாங்கோ. 

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பஸ் பிடிக்க, இந்த பக்கமா வாங்கோ. 😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

ஆமாம் என்ன கரிசனை... புல்லரிக்கிறது.!!

தமிழக மீன் முதலாளிகள் மீனைத்தான் சூறையாடுகிறார்கள். சிங்கள மீன் முதலாளிகளோ... தமிழரின் கடலையே சூறையாடுகிறார்கள்.

என் இனமே, என் சனமே பாடியவரைப் பொல்லால் அடிக்கவேண்டும் போல் தோன்றவில்லையா...

ஐயா,

உங்கள் வயதுக்கு மரியாதை தந்து பதிந்த என் கருத்தை நீக்கி விட்டு போகிறேன். இல்லை கோதாவில் இறங்குவது எண்டால் ஓகே.

5 minutes ago, Nathamuni said:

கிரிமினல் மூளை, தாடி விசயத்தோடை அலுவல் பார்த்திருக்குது.இப்ப விசயம் என்னடா, ரோலரில வந்து அடிமட்டத்துக்கு வலை போட்டு, இழுக்கிற கோஸ்ட்டியல், மீன் பிடியாயினம்...

பஸ் பிடிக்கப்போகினம்.... யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 760 பஸ் பிடிக்க, அந்த பக்கமா வாங்கோ. 

யாழ்ப்பாணம் - சாவகசேரி பஸ் பிடிக்க, இந்த பக்கமா வாங்கோ. 😜
 
ஆனைகோட்டை, மானிப்பாய், சங்கானை, சித்தங்கேணி, பண்டதரிப்பு, மாதகல்…

சில்லாலை ஏறுங்கோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இது முதல்ல செய்தி வந்த போது நாங்கள் யாரும் யோசிக்காத கோணம்.

சிலர் கதைத்தவை தான் இப்படியும் இருக்கலாம் என்டு.அதை இங்கு எழுதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

ஐயா,

உங்கள் வயதுக்கு மரியாதை தந்து பதிந்த என் கருத்தை நீக்கி விட்டு போகிறேன். இல்லை கோதாவில் இறங்குவது எண்டால் ஓகே.

வேண்டாம் மகனே! எனக்குத் தெளிவு பிறந்துவிட்டது.!!🧐

Father-And-Son.jpg

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சுவைப்பிரியன் said:

சிலர் கதைத்தவை தான் இப்படியும் இருக்கலாம் என்டு.அதை இங்கு எழுதவில்லை.

தாடியர்ர ஆள் எண்டு கும்மிபோடுவங்கள் எண்ட முன் எச்சரிக்கையாக்கும்🤣.

நான் தான் விபரம் தெரியாமல் வார்த்தைய விட்டுட்டன்🤣.

கிட்னிய எடுக்காமல் விடமாட்டினம் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கடல் எல்லைக்கு சென்று ஆழமாக சூறையாடி மீன் பிடிக்க முடியாதபடி கடலில் பஸ்களை தாடிவைத்த தமிழ் அமைச்சர் போடுகிறார் என்ற அநீதியை ஐரோப்பா யூனியன், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஐநா என்பவற்றின் கவனத்திற்கு தமிழக மீனவர்கள் உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட இது நன்னா ருக்கே...😂😂

பழைய இரும்பு பித்தழைகளை இந்திய இலங்கைக் கடல் எல்லையில் போட்டால் அத்து மீறிய மீன்பிடியை நிறுத்தலாமோ ன்னோ.👍

பேஸ் பேஸ். இது ரொம்ப நன்னாருக்கே....👍👍👍👍

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே இந்த செய்தி வந்த திரியில் நான் ஒரு கருத்தும் எழுதவில்லை.

காரணம் இப்படி artificial reefs ஐ உருவாக்குவது பற்றி உலகெங்கும் இரு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. 

எல்லா முன்னெடுப்புகள் போல இதிலும் cost and benefit இருக்கும். ஆகவே இப்படி ஒரு விசயத்தை செய்வதால் cost அதிகமா, benefit அதிகமா என்று தேடிப்பார்த்தேன்.

இலங்கை கடல்வள சூழல் பாதுகாப்பு அமைப்பு உட்பட பல இடங்களில் தேடியும், இப்படி ஆய்வு செய்த தரவுகள் இருப்பதாக தெரியவில்லை.

ஆகவே இவ்வாறு செய்வது நல்லதா கெட்டதா என என்னால் ஒரு நிலைபாட்டுக்கு வர முடியவில்லை

ஆனால் அந்த திரி பல பக்கம் ஓடியும் இந்த கோணத்தில் யாரும் சிந்திக்கவில்லை என்பது இந்த செய்தியை வாசித்ததும் உறைத்தது.

இதனால் இந்திய முதளாலிகளின் பெரு வலைகளுக்கு மட்டும் அல்ல அண்மையில் @Maruthankerny எழுதிய எமது மீனவர்களின் தடை செய்யபட்ட கடல்வளத்தை அழிக்கும் மீன் பிடி முறைகளுக்கும் ஒரு கடிவாளம் போட்டது போல இருக்கும் என நினைக்கிறேன் (சரியாக தெரியவில்லை). 

எமது கடல்வளத்தின் மீதான கரிசனை நம் எல்லாருக்கும் இருக்கும். இருக்க வேண்டும். ஒருவன் அடிக்கும் கொள்ளையை தடுக்க முடியாது இருக்கிறோம் என்பதற்காக இன்னொருவன் அடிக்கும் கொள்ளையை ஆதரிக்க வேண்டியதில்லை.

இந்த புரிதல் இல்லாமல் - பேரினவாதிகள் எமது கடலை, மண்ணை கொள்ளை அடிப்பதை பற்றி நான் பக்கம் பக்கமாக எழுதும் போதெல்லாம் நிஸ்டையில் இருந்துவிட்டு - இப்போ எழும்பி வந்து புல்லரிக்கிறது…(சுய தணிக்கை).

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை மீனவரும் இருவர் மூவராக சிறிய படகுகளில் சென்று வலையை விரித்துவிட்டு இயந்திரத்தை அணைத்துவிட்டு தூங்கிவிடுவர், கடல் நீரோட்டத்தில் மாதகலில் வலையை விரித்தால் காரைநகர் தாண்டி எழுவை தீவு வரை சென்றுவிடுவார்கள். இவர்களின் வலையளும் பாதிக்கப்படுமோ தெரியவில்லை. 

3 hours ago, Paanch said:

"இரும்பு  அடிபுண்ட சட்டி, பித்தளை இருக்கா" என்று கூவி வரும் பழைய உலோகப் பொருட்களை வாங்கும் வியாபாரிகள் இலங்கையில் தற்போது இல்லையா..... ? இந்தப் பேரூந்துகளையும் விற்றுக் காசாக்காமல்.... கடலில் எறிகிறார்களே.....?? 🤔

அடிவிண்ட சட்டி என்று வரும் என நினைக்கிறேன், செந்தமிழாசன்கள் நீங்கள் கூறுவது போல் கதைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

எங்கடை மீனவரும் இருவர் மூவராக சிறிய படகுகளில் சென்று வலையை விரித்துவிட்டு இயந்திரத்தை அணைத்துவிட்டு தூங்கிவிடுவர், கடல் நீரோட்டத்தில் மாதகலில் வலையை விரித்தால் காரைநகர் தாண்டி எழுவை தீவு வரை சென்றுவிடுவார்கள். இவர்களின் வலையளும் பாதிக்கப்படுமோ தெரியவில்லை. 

அடிவிண்ட சட்டி என்று வரும் என நினைக்கிறேன், செந்தமிழாசன்கள் நீங்கள் கூறுவது போல் கதைப்பார்கள்.

கட்டுப்பாடற்ற Trawler மீன்பிடி கண்டமேடைய அண்மித்த கடற்பகுதிக்குப் பொருத்தமற்றது. அது யார் மீன் பிடிக்கிறார்கள் என்பதல்ல பிரச்சனை.எப்படி பிடிக்கிறார்கள், எதனைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் கரிசனைக்கு உட்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

அமைச்சர் பல்வேறு உள்நோக்கங்களோட தான் பழைய பஸ்ஸை கடலுக்க இறக்கியிருக்கிறார்! வட பகுதி மீனவர்களிடம் இழுவை படகுகள் குறைவு போல, தமிழ்நாட்டு மீனவர்களிற்குத்தான் பாதிப்பு.

நான் நினைத்ததை நீங்கள் எழுதி உள்ளீர்கள்  ஓரள்வுக்கேனும் நமது கடல்வளம் பாதுகாக்கப்படும் இழுவைப்படகுகளால்  இதற்க்காகவே தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளார்கள் 

6 hours ago, goshan_che said:

இது முதல்ல செய்தி வந்த போது நாங்கள் யாரும் யோசிக்காத கோணம்.

மாற்று சிந்தனை நேற்றைய நாள்  இந்திய மீனவர் கடலில் பஸ்களை போடுவதால் மீன்பிடி குறைவடையும் என வீடியோ வெளியீடு செய்திருந்தார் நம்மவர்களின் பதில் அநேகமாக ஏராளன் சொன்ன பதிலே எங்களை மீன்வளம் ஓரளவேனும் சூறையாடப்படாமல் இருக்கும் சகோதரா நீங்கள் உங்கள் பகுதியில் மீன் பிடித்தாலே போதுமென எழுதி இருந்தார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அடிவிண்ட சட்டி என்று வரும் என நினைக்கிறேன், செந்தமிழாசன்கள் நீங்கள் கூறுவது போல் கதைப்பார்கள்.

அடிப்பிடிச்ச சட்டி என்று எழுதினால் கன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கை தவிர்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு இழுவைப்படகு முதலாளிகள் அரசியல்வாதிகளாமே? அவர்களின் அழுத்தங்களால் தான் எல்லை தாண்டிய மீன்பிடிக்க வருகிறார்கள் போல.
ஆழக்கடலில் தான் இழுவைப்படகு மீன்மீடி வசதி, ஆழங்குறைந்த பாக்கு நீரிணையில் தடை செய்யப்பட்ட வலைகளையும் இழுவைப்படகையும் பாவிக்க தமிழ்நாடு மீன்வளம் அழிக்கப்பட எல்லை தாண்டல் மீன்வளத்தை நோக்கி.

3 minutes ago, goshan_che said:

அடிப்பிடிச்ச சட்டி என்று எழுதினால் கன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கை தவிர்கலாம்.

அடிப்பிடிச்சதை ஊறவைச்சு கழுவி எடுக்கலாம், அடி விட்டது பயன்படுத்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

.

அடிப்பிடிச்சதை ஊறவைச்சு கழுவி எடுக்கலாம், அடி விட்டது பயன்படுத்த முடியாது.

ஓ… அடி உடைந்த என்ற அர்தத்திலா? நான் இந்த சொல்லை இன்றுதான் கேள்வி படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

கட்டுப்பாடற்ற Trawler மீன்பிடி கண்டமேடைய அண்மித்த கடற்பகுதிக்குப் பொருத்தமற்றது. அது யார் மீன் பிடிக்கிறார்கள் என்பதல்ல பிரச்சனை.எப்படி பிடிக்கிறார்கள், எதனைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் கரிசனைக்கு உட்பட்டது.

உண்மை தான். பல நாட்கள் மீன் பிடிபடவில்லை, இயந்திரத்திற்கான எண்ணெய்ச் செலவிற்கும் ஆட்களிற்கான சம்பளத்திற்கும் போதவில்லை என்று சொல்லுவாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

கிரிமினல் மூளை, தாடி விசயத்தோடை அலுவல் பார்த்திருக்குது.இப்ப விசயம் என்னடா, ரோலரில வந்து அடிமட்டத்துக்கு வலை போட்டு, இழுக்கிற கோஸ்ட்டியல், மீன் பிடியாயினம்...

அங்கு இது புதிது அல்ல ஏற்கனவே திருகோணமலை பக்கம் இப்படி பழைய வாகனம்களை கடலில் அமிழ்த்தியவர்கள்  தூண்டில் மீனவர்கள் பழைய ஒன்றுக்கும் உதவாத மரங்களை தறித்து  போடுவது உண்டு மீன்  வளத்துக்கு  என்று அதை கருப்பு போடுவது என்று சொல்வார்கள் .

தாடியர்  புகழ் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களால்  பரவுகிறது அதே நேரம் இங்கும் ரோலர்கள் உண்டு யுத்தம் முடிந்தபின் அவசரப்பட்டு ரோலர்களில் முதலிட்டு உள்ளார்கள் தாடியரின் இந்த வேலையால்  நம்ம ஆட்களும் பாதிக்க படுவினம் ஏனென்றால் கடல் நீரோட்டம் விசித்திரமானது இன்று ஓரிடத்தில் இருக்கும் பழைய பஸ் நீரோட்டத்தால் எல்லைதாண்டி இந்திய பகுதிகளிலும் கொண்டு போய்  விட்டு விடும் ஆனால் மீன்வளம் உருவாகும் பருத்திதுறைக்கு மேல் உள்ள கண்ட மேடை அவ்வாறானதல்ல தாடியர் இங்கு பழைய வாகனம்களை இறக்கிய இடம்கள்  நீரோட்டம் அதிகமுள்ள பகுதி  ஆனால் எப்படி பார்த்தாலும்  மீன் வளம்  அதிகரிக்கும்  சிறு தொழில் மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.