Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வீதி அமைக்கும் பணியில்... சீன பிரஜை: சுமந்திரன் அதிருப்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை: சுமந்திரன் அதிருப்தி

யாழில் வீதி அமைக்கும் பணியில்... சீன பிரஜை: சுமந்திரன் அதிருப்தி

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக புகைப்படம் ஒன்றுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிவிட்டுள்ளார்.

அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://athavannews.com/2021/1225580

  • கருத்துக்கள உறவுகள்

வீதியில், கடலில், அட்டை வளர்ப்பில்- எங்கும், எதிலும் சீனா!

June 29, 2021
spacer.png

தமிழர்களின் கடல் வளம் வெளிமாவட்ட மீனவர்களால் சுரண்டப்படும் நிலையில் இருந்து, இப்போது வெளிநாட்டவர்களைக் கொண்டு சுரண்டும் நிலைக்கு மாறியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பூநகரி – கௌதாரிமுனை பகுதியில். சீன நிறுவனமொன்றால் முன்னெடுக்கப்பட்டு வரும் அட்டை வளர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியோர் குறித்த பகுதிக்கு, நேற்று (28.06.21) சென்றிருந்தனர்.

இதன்போது, மக்களின் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர்கள், குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து முடிவு எடுப்பதாக, மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், தொடர்ந்துரைத்த சுமந்திரன், குறித்த அமைவிடம் மக்களுக்கு தெரியாத வகையில் மறைவிடமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனத்தினர், அரியாலையில் அவர்களது அலுவலகத்தை வைத்துள்ளனர் என்றும் தெரிவித்த அவர், கடல் தொழில் அமைச்சால், இந்த நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சட்டவிரோதமாக இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு, ஒருவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு அப்பால், இந்த நாட்டில், சீன ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சியாகவே, இந்தச் செயற்பாட்டை தாங்கள் பார்ப்பதாகவும், சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் குடத்தனையில் உள்ள எனது வீட்டுக்கு சென்று திரும்புகின்றபோது வீதி அபிவிருத்தி பணிகளில் சீனர்கள் நின்றார்கள். நான் படம் எடுத்து வைத்துள்ளேன். வீதி வேலை செய்வதற்கு தொழிலாளிகள்கூட எங்கள் ஊரில் எடுக்காமல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து உபயோகிக்கின்றார்கள்.

‘வெளி மாவட்டங்களிலிருந்து ஆட்களை கொண்டுவந்து தமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தார்கள். இப்பொழுது வெளிநாடுகளிலிருந்து இதற்கென்று ஆட்கள் வருவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பின்னணிகளை வெகு விரைவிலே நாங்கள் வெளிப்படுத்துவோம்’ என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

https://globaltamilnews.net/2021/162866

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் சீனாக்காரர் இல்லையாம்.அக்கரைப்பற்று முஸ்தபாவாம்..

Bild Bild 

Bild Bild

3 hours ago, தமிழ் சிறி said:

யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை: சுமந்திரன் அதிருப்தி

யாழில் வீதி அமைக்கும் பணியில்... சீன பிரஜை: சுமந்திரன் அதிருப்தி

 

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கை பார்த்தால் படுக்கையறையிலும் சீனாக்காரி  எங்களுக்கு தெரியாமல் வந்திடுவாளோ ?எதற்கும் உசாராக இருக்க வேண்டும்

3 hours ago, கிருபன் said:

வீதியில், கடலில், அட்டை வளர்ப்பில்- எங்கும், எதிலும் சீனா!

June 29, 2021
 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, putthan said:

போற போக்கை பார்த்தால் படுக்கையறையிலும் சீனாக்காரி  எங்களுக்கு தெரியாமல் வந்திடுவாளோ ?எதற்கும் உசாராக இருக்க வேண்டும்

தைரியம் இருந்தால் வந்து பாக்கட்டுமன் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

அவர் சீனாக்காரர் இல்லையாம்.அக்கரைப்பற்று முஸ்தபாவாம்..

Bild Bild 

Bild Bild

 

தமிழ், சிங்களம் படித்து வருகிறார்கள். கோத்தா, லைசென்ஸ், பாஸ்போர்ட் எல்லாம் கொடுப்பார்....

இலங்கையின் சனத்தொகைக்கு ஈடாக அல்லது அதிகமாக, சீனாவில், சிறையில் மக்கள் இருக்கிறார்கள். சீன சிறைத்துறை, கட்டுமான பணிகளுக்கு டெண்டர் போட்டு காண்ட்ராக்ட் எடுக்கிறது.

சாதாரண நிறுவனங்கள், 1000 பேர், 6 மாதம் என்று பட்ஜெட் போட்டால், சிறைத்துறையோ, 10,000 பேர், ஒரு மாதம் என்று சொல்கிறது. ஆகவே பெரும்பாலும், சர்வதேச கான்ட்ராக்ட்டுகளுக்கு சீன சிறைதுறையே ஆட்களை அனுப்புகிறது.

அவர்களுக்கு, 'கடூழிய சிறைத்தண்டனை' என்பதை மிக சரியாக சீன அரசு பயன்படுத்துகிறது. அனைவருமே, இடுப்பில், அருணாற்கொடி போல, tag கட்டிக்கொண்டு, சுதந்திரமாக திரிந்து வேலை செய்வதால், சந்தோசமாக வெளிநாடுகள் வருகிறார்கள்.

மேலை நாடுகள், மனித உரிமைகள் என்று போதிக்க வெளிக்கிட, உங்கள் நாட்டு சிறைகளிலேயே 'கடூழிய சிறைத்தண்டனை' உள்ளதே. இதில் என்ன தப்பு என்று கேட்டு, வாயை மூட வைத்துள்ளார்கள்.

ஒரு பிரிட்டிஷ்காரி சீனாவில், ஏதோ காரணமாக சிறையில் உள்ளார். அங்கே, பெண்களின், கிரெடிட் கார்ட் வைத்திருக்கும், சிறிய தோல் பை தயாரிக்கும் வேலை.

அதனுள், ஒரு துண்டை வைத்து, தான் குறித்த சிறையில் இருப்பதாகவும், அபராதம் செலுத்த பணம் இல்லாததால், தனக்கு உதவி செய்து மீட்க்குமாறும் கோரி இருந்தார்.

அந்த துண்டு சீட்டு, ஜேர்மன் நாட்டில், சிக்கி.... பெரிய மீடியா வெளிச்சம் பாய்ந்தது. சீனா அலட்டிக்கொள்ளவில்லை.

பெண் அபராதம் கொடுத்து வந்திருக்கலாம். (நான் பின்னர் என்ன நடந்தது என்று வாசிக்கவில்லை) 

உசார் மக்களே..

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

தைரியம் இருந்தால் வந்து பாக்கட்டுமன் :cool:

பிறகு தெரியும் பனங்காட்டு நரிகளின்ட குணம்....😀

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

தைரியம் இருந்தால் வந்து பாக்கட்டுமன் :cool:

வீட்டுக்கு பின்னால, பாம்பு, பூச்சி, நாய், நரி எல்லாம் இல்லாமல் போயிடும். அப்படி பிரச்சனை இருந்தால், வந்தால் நல்லது. 😬

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவர் சீனாக்காரர் இல்லையாம்.அக்கரைப்பற்று முஸ்தபாவாம்..

Bild Bild 

Bild Bild

 

அது பிழையான படமாம்.  விரைவில் சீனாகாரரின் படம் போடப்படுமாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவர் சீனாக்காரர் இல்லையாம்.அக்கரைப்பற்று முஸ்தபாவாம்..

Bild Bild 

Bild Bild

 

கண்ணை பார்க்க, அக்கரைப்பற்று முஸ்தபா மாதிரி தெரியேல்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பாவி மக்கா சும்,

உலக அளவில் அரசியல் செய்ய போய் அக்கரைபற்று முஸ்தபா வீட்டில குண்ட தூக்கி போட்டுடிரே ஐயா🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

பாவி மக்கா சும்,

உலக அளவில் அரசியல் செய்ய போய் அக்கரைபற்று முஸ்தபா வீட்டில குண்ட தூக்கி போட்டுடிரே ஐயா🤣

சும்மை,  யாரோ… வம்பில மாட்டி விட்டுட்டு, கூத்து பார்த்திருக்கிறாங்கள். 😂🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் கடுமையாய் யோசிக்கிறார் என்று தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

P2P பேரணியில் வச்சு  வீட்டில் பிக்கல் பிடுங்கல் தாங்கமுடியல்ல எங்கடையாக்களும்  மூடிக்கட்டிவிட்டு வெளியில வந்திட்டினம் , பார்த்து எதாவது செய்ங்க சேர் வால் பிடிக்கிறன் என்று கெஞ்சிய முஸ்தபாவிற்கு  
ஓவர் நயிட்டில் உம்மை ஒபாமாவாக்கி காட்டுறன்  என்று வாக்கு கொடுத்த குற்றத்திற்கு இந்த வேலையா பார்ப்பீர் மிஸ்டர் சும், அக்கரைப்பத்தானை சீனாக்காரனாக்கி வைத்திருக்கிறீர்😂😂😂.... கொஞ்சம் பொறும் ...ஓ ..ஓ.... இது அது இல்ல ...அதுதான் ...
உம்மடை ஏக்கிய ராஜ்ய....இப்படியொரு  சிங்கள அக்கரைப்பற்று உக்கிய ராஜ்யவை தானே தமிழ் சீனாக்கார ஏக்கிய ராஜ்ஜியமாக்க முக்கு முக்கு என்று முக்கினனீங்க, நீங்கள்செய்யக்கூடிய  ஆள் தான்  கடும் எமகாதகன் எலுவா 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அக்னியஷ்த்ரா said:

...ஓ ..ஓ.... இது அது இல்ல ...அதுதான் ...

மாத்தியடிக்கிறது சுமந்திரனுக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால் அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் சுரேன் ராகவன் இவரைப்பார்த்து ஊளையிடப்போறார். யாரோ வேண்டுமென்றே மாட்டிவிட்டிருக்கானுகள். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை; பிழைக்கு வருந்துகிறேன் என்கிறார் சுமந்திரன்

தனது டுவிட்டர் பதிவில் பதிவிடப்பட்ட நபரின் படம் சீன நாட்டவர் அல்ல என்றும் குறித்த பிழையான தகவலுக்கு வருந்துவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீள் டுவிட்டர் பதிவொன்றை செய்துள்ளார்.

அந்த மீள் டுவிட்டர் பதிவில்,

“ குறித்த நபர் சீன நாட்டவர் அல்ல எனவும் அவர் இலங்கையர் எனவும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிழைக்கு வருந்துகிறேன். வடக்கில் பணிபுரியும் உண்மையான சீனர்களின் படங்கள் எதிர்காலத்தில் பதிவேற்றப்படும்” என குறிப்பிட்டு மீள் பதிவொன்றை செய்துள்ளார்.

இதேவேளை, முன்னதாக 

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பான  புகைப்படம் ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதிவேற்றியுள்ளார்.

அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், குறித்த படத்தில் சாட்டப்பட்டவர் அக்கரைப்பற்றை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதுடன் சமூக ஊடகங்களிலும் தகவல் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

204571787_339174127764033_40428252548324
 

 

https://www.virakesari.lk/article/108427

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

குறித்த நபர் சீன நாட்டவர் அல்ல எனவும் அவர் இலங்கையர் எனவும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிழைக்கு வருந்துகிறேன். வடக்கில் பணிபுரியும் உண்மையான சீனர்களின் படங்கள் எதிர்காலத்தில் பதிவேற்றப்படும்” என குறிப்பிட்டு மீள் பதிவொன்றை செய்துள்ளார்.

வடகிழக்கு தமிழர்களுக்கு என்னதேவை உண்மையான அரசியல் பிரச்சனை என்ன என்பது அறியாமல்வந்தவர்தானே ? 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

வடகிழக்கு தமிழர்களுக்கு என்னதேவை உண்மையான அரசியல் பிரச்சனை என்ன என்பது அறியாமல்வந்தவர்தானே ? 

 

அவருக்கு வாக்குப் போட்ட மக்களுக்கும் தங்களுக்கு என்ன தேவையென்று தெரியவில்லையென்பது பெரிய அதிசயம் தான்!

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பின் கதவால் வந்தவர் என்பது தெரியாதவர்களிடமும்  மற்றையவரின் விருப்பு வாக்குகளை தனக்கு  குத்தி கொண்டு பித்தலாட்டம் செய்த விடயத்தை பற்றி மீண்டும் மீண்டும் இங்கு கதைப்பதால் எந்த பிரயோசனமும் கிடையாது எனக்கும் உன்களுக்கும்தான்  நேர விரயம் சுமத்திரனின் விசிறிகளே சுமத்திரனை  திட்டிக்கொண்டு இருக்கையில் இங்கு யாழில் சுமத்திரனை கிளீன் காண்ட்  என்று நிரூபிக்க படும் பாடு வெற்றியடைய வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

அவர் பின் கதவால் வந்தவர் என்பது தெரியாதவர்களிடமும்  மற்றையவரின் விருப்பு வாக்குகளை தனக்கு  குத்தி கொண்டு பித்தலாட்டம் செய்த விடயத்தை பற்றி மீண்டும் மீண்டும் இங்கு கதைப்பதால் எந்த பிரயோசனமும் கிடையாது எனக்கும் உன்களுக்கும்தான்  நேர விரயம் சுமத்திரனின் விசிறிகளே சுமத்திரனை  திட்டிக்கொண்டு இருக்கையில் இங்கு யாழில் சுமத்திரனை கிளீன் காண்ட்  என்று நிரூபிக்க படும் பாடு வெற்றியடைய வாழ்த்துக்கள் .

பெருமாளுக்கு "நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்" பிரச்சினை😎! முதலில் தேசியப் பட்டியல் (பின் கதவு), பின்னர் இரு தேர்தல்களில் வாக்குகள் மூலம் தேர்வு.

இவ்வளவு பாடுபட்ட கஜேந்திரனும் பின் கதவு (தேசியப் பட்டியல்) என்பதும் நடுவில காணாமல் போன பக்கங்களில் மிஸ்ஸிங்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

போற போக்கை பார்த்தால் படுக்கையறையிலும் சீனாக்காரி  எங்களுக்கு தெரியாமல் வந்திடுவாளோ ?எதற்கும் உசாராக இருக்க வேண்டும்

 

 

10 hours ago, குமாரசாமி said:

தைரியம் இருந்தால் வந்து பாக்கட்டுமன் :cool:

றோட்டு திருத்தவேலையே மருதங்கேணியில்தான் நடக்கிறது 
ஆகஸ்ட் மதம் நான் போகிறேன் ...
வீட்டு கேற்றையும் திறந்து விடுகிறேன் 

முடிந்தால் வந்து பார்க்கட்டும். 

(உங்களால் முடிந்தால் அனுப்பி பாருங்கள்) 

  • கருத்துக்கள உறவுகள்

தான் சொன்னது பிழை என்று அந்தாளே சொல்லிப்போட்டுது. அவற்ர கருத்துக்கு சீனாக்காரனும் நக்கலடிச்சு இருக்கிறான். நாங்கள் இங்க குத்து முறியிறோம்..😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

கண்ணை பார்க்க, அக்கரைப்பற்று முஸ்தபா மாதிரி தெரியேல்லை. 🤣

 சுமந்திரன் காட்டின  ஆள் அக்கரைப்பற்று முஸ்தபா எண்டு அங்கஜன் இராமநாதன் தான் சொன்னவர் 😁

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

(உங்களால் முடிந்தால் அனுப்பி பாருங்கள்) 

அடைப்புக்குறிக்குள் போட்டபடியால் அனுப்பிவைக்கும்படி கேட்பது போல் தெரிகிறது. அப்போ ஹருணிக்காவின் நிலை? அவ இப்போ சரியான சோகத்தில் இருக்கிறா. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

 

றோட்டு திருத்தவேலையே மருதங்கேணியில்தான் நடக்கிறது 
ஆகஸ்ட் மதம் நான் போகிறேன் ...
வீட்டு கேற்றையும் திறந்து விடுகிறேன் 

முடிந்தால் வந்து பார்க்கட்டும். 

(உங்களால் முடிந்தால் அனுப்பி பாருங்கள்) 

அவசர உதவிகள் தேவை என்றால் உடனடியாக  தொடர்பு கொள்ளவும் .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.