Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய... செயலியினை, உருவாக்கினார் யாழ். இந்துக் கல்லூரி மாணவன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய செயலியினை உருவாக்கினார் யாழ். இந்துக் கல்லூரி மாணவன்!

புதிய... செயலியினை, உருவாக்கினார் யாழ். இந்துக் கல்லூரி மாணவன்!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகிழினியன் என்ற 15 வயது மாணவன் வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

mSquard என்ற செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு முக்கியமான செயலியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுவயதிலிருந்தே மென்பொருள் விஞ்ஞானியாக வரவேண்டும் என்று தனது கல்வியைத் தொடர்ந்த இந்த மாணவன் கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத் தடையினை சிறந்த முறையில் பயன்படுத்தி வீட்டிலிருந்து இந்த புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார்.

மிகத்துல்லியமான முறையில் படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் தரவுகளை இதனூடாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதுடன் இந்த செயலி மிகவும் அதிவிரைவு தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றது.

60 MB அளவு கெபாசிட்டி கொண்ட இந்த மென்பொருளினை இணைய உலாவிகள் மூலம், பிளேஸ்ரோர் மூலமும் தரவேற்றம் செய்து கொள்ள முடியும்.

https://athavannews.com/2021/1226060

https://play.google.com/store/apps/details?id=com.wSQUAD_13939957

AATXAJySvxQkMcKiHKzkxfThMNAypVPau5NmMyLxE6J5=w48-h48-n-rw-mo
Yogarajah Kishananth
June 30, 2021
Hi! Brother , please don't copy the signal source codes, it's not creativity. You can use some source of coding. Not the whole coding. It will be a copycat. You added some ad sources for your income. Nevertheless be unique. It may hurt you. But try your own version.
 
Titus Senthilkumaran
July 1, 2021
Totally waste of time And owner's stupidity Haha nice work You just copied an app and you become a developer Nice to hear but I aren't.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இறக்கி வைச்சிருக்கிறன்....பாப்பம் நாளை நாளைண்டைக்கு... 😁

  • கருத்துக்கள உறவுகள்

மகிழினியனுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இறக்கியிருக்கு பாப்பம் 

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி Signal App இன் Open Source Code இனை மொத்தமாக உருவி , கட்டிங் ஷேவிங் பண்ணி 
Google Ad-Sense ஐயும் இணைத்து வெளியிட்டிருக்காப்பல. தம்பியோட வயசுக்கு இது பிரமாதம் 
ஆனால் இன்னொரு வகையில் Coding இல் ஒரு வரியை, இரு வரியை உருவுவது, module ஐ உருவுவது ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் ஒட்டு மொத்த Source Code இனை உருவி அதற்கு வேறு பெயர் வைப்பது திருட்டுத்தனம்  
 
  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு: (சுகாஷ் அண்ணைக்கு தெரியப்படுத்தவும்)

யாழ் இந்து மாணவனின் சாதனை.. வாட்ஸ் அப்பிற்கு இணையாக புதிய அன்றாய்டு செயலி உருவாக்கி உள்ளார் என்று பரவலாக நேற்று ஊடகங்களில் செய்திகள் வந்தன..

இன்று திடீரெண்டு அது fake என்றும் அம்மாணவன் உருவாக்கவில்லை என்றும் சில ஊடகங்கள் வந்திருக்கிறார்கள்..

கணனி விஞ்ஞான மாணவன் என்ற வகையில் சில விடயங்களை தெளிவு படுத்தலாம் என்று இருக்கிறேன்..

அன்றொயிட் ஆப்ஸ்கள் உருவாக்க இப்போது பல வழிகள் இருக்கின்றன. ஒன்று முழுமையாக அப்பினை உருவாக்குதல்.. இதற்கு முழுமையான programming அறிவும், பல மனித உழைப்பும், அனுபவமும் தேவை.

அடுத்தபடியாக பல ஆப்ஸ்கள் open source ஆக யாராலும் எடுத்து மாற்றக்கூடியதாக github போன்ற வலைத்தளங்களில் இலவசமாக பதிவிட்டிருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அதனை எடுத்து modify பண்ண முடியும். இதற்கும் programming பற்றிய அறிவு நிச்சயமாக தேவை அத்துடன் ஓரளவான மனித உழைப்புடன் உருவாக்கலாம்.

இதற்கும் அடுத்த படியாக programming பற்றிய எந்தவித அறிவுமே தேவையில்லாத ஒரு முறை இருக்கிறது. சில இணையதளங்கள் மிக சொற்பமான template களை தருகின்றன.  அதாவது ஏற்கனவே அந்த template இல் app  இனை உருவாக்கி வைத்திருப்பார்கள்.  

நாம் நமக்கு பிடித்த போல அந்த app நிறம், பெயர், ஐகான் வடிவம், போன்றவற்றை நாம் படிவத்தில் நிரப்பினாலே போதும் எமக்காக அந்த template customize செய்யப்பட்டு app இனை தரவிறக்கம் செய்ய லிங்க் வந்துவிடும்.

இதற்கு எந்தவிதமான கணனி அறிவும் தேவையில்லை.. சாதாரணமாக form ஒன்றை நிரப்பும் அறிவு இருந்தாலே போதுமானது. ( உதாரணமாக blogger ஐ பயன்படுத்தி வலைத்தளம் உருவாக்குவது போன்றது.. இது அதனை விட இலகுவானது)

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் பல app generator தளங்கள் போலியானவை. ஆப் எனும் பெயரில் நமக்கு  "ஆப்பு" வைப்பவை. அவர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள அப்பில் எமது பெயர், ஐகான் ஐ போட்டு மட்டுமே தருவதால் அவர்கள் என்ன உருவாக்கி வைத்துள்ளார்கள் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. பல கொடிய வைரஸ்களை கூட இதன் மூலம் பரவ விட வாய்ப்புகள் இருக்கின்றன. எமது தொலைபேசியில் permissions ஐ நாம் accept பண்ணுவதால் நமது தகவல்களை புகைப்படங்களை திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இதனால் இதனிடமிருந்து முடிந்த அளவு விலகி இருப்பது நமது privacy கு பாதுகாப்பானது.

முதலாவதாக நான் இந்த துறையில் இந்த அளவு ஈடுபாடு காட்டியதற்காக அந்த மாணவனை பாராட்டிகிறேன். நிச்சயமாக பெரும்பாலான சிறுவர்கள் இதனை முயற்சி செய்து பாத்திருக்கவே மாட்டார்கள்.

நேற்றுத்தான் நான் இந்த செயலியை பரிசோதனை நோக்கத்திற்காக எனது தற்காலிக போனில் நிறுவி பார்த்தேன்.  பிளே ஸ்டோரில் description ஆக அவர் பேசி விட்டுள்ள  வீடியோவில் அவர் கதைத்திருப்பார் அதனை பார்த்தவுடனே எனக்கு சில விடயங்கள் பட்டது.

பத்தாம் தர மாணவன் என்ற வகையில் இந்த app generating  தளங்களின் சாதக பாதகங்களை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  முழுமையாக ஒரு அப்பினை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்ன என்ன மென் பொருட்கள் பாவிக்க வேண்டும், front end - back end development, server side programming குறித்த அறிவு இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது.

உண்மையாகவே எல்லா app உம் இப்படித்தான் உருவாக்குகிறார்கள் எனக்கூட நினைத்திருக்க கூடும். இவை பத்தாம் தர மாணவன் என்ற வகையில் சாதாரண விடயம் தான். 

ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் ஊடகங்கள் அந்த அப்பினை சரியாக பரிசீலிக்காது, அந்த துறை சார் வல்லுனர்களின் ஆலோசனையை பெறாது, அந்த செயலியை புரொமோட் பண்ணி விட்டார்கள்.

அந்த மாணவனை பேட்டி எடுத்த எந்த ஊடகமும் என்ன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கினார்,  என்ன programming language ஐ பயன்படுத்தினார், என்ன என்ன மென்பொருட்களை பாவித்தார் போன்ற துறை சார்ந்த தொழில்னுட்ப கேள்விகளையும் வினவவில்லை. இதெல்லாம் கேட்டிருந்தாலே இன்று நடைபெறும் இந்த சர்ச்சை நேற்றுடன் முடிந்திருக்கும்.

தங்களுடைய TRP இற்காகவும், Views இற்காகவும் என்ன என்று சரியான புரிதலே இல்லாமல் புரோமோட் பண்ணி இருக்கிறார்கள். அடுத்த நாளே சில மாற்று ஊடகங்கள் அதன் போலித்தன்மையை வெளிச்சம் போட்டு காட்டி விட்டன. ஊடகங்கள் எவ்வளவு பொறுப்பாக செயல்பட வேண்டும். கண்மூடித்தனமாக எல்லா செய்திகளையும் போட்டுவிட முடியாதே.

 ( போலி என்று வெளிச்சம் போட்டு காட்டிய ஊடகங்கள் கூட ஊடக ஒழுக்கத்தை பின்பற்றவில்லை.. அந்த மாணவன் வேணும் என்று ஏமாற்றிவிட்டார் என்ற ரேஞ்சில செய்தி போட்டார்கள். மாணவனின் அறியாமையை சாதகமாக்கி viral content உருவாக்கி விட்டார்கள்)

எல்லா ஊடகமும் தங்கள் சுய இலாபத்திற்காக ஒரு மாணவனை பப்பா மரத்தில் ஏற்றி அடுத்த நாளே தள்ளி விட்டு இருக்கிறார்கள்.  ஊடக ஒழுக்கம் என்று ஒரு விடயம் இருக்கிறது. இவர்கள் செய்த வேலையால் அந்த மாணவன் நிச்சயமாக மன உளைச்சலுக்கு ஆளாக கூடும்.

உண்மையில் நல்ல விடயங்களை ஊக்குவியுங்கள். ஆனால் உண்மைத்தன்மையை ஆராய்ந்து ஊக்குவியுங்கள். அது தான் ஊடக ஒழுக்கம்.

அத்துடன் பொது நலத்துடன் சொல்கிறேன் முடிந்த அளவு இப்படியான தளங்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஆப்களில் இருந்து விலகி இருங்கள். இதனுள் கொடிய வைரசுகள் கூட சாதரணமாக உலாவ கூடும் 

பிற்குறிப்பு: பாடசாலை அரசியலை வைத்து உருட்டுபவர்கள் ஓரமாக சென்று விளையாடவும். இது அறிவுக்காக எழுதிய பதிவு மட்டுமே.

:-வோல்ட்டா ஜெபபிரசாந்த்
கணனி விஞ்ஞான பீடம்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்.
Volta Jebaprashanth

https://www.facebook.com/100002361010963/posts/4071277749627552/?d=n

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நந்தன் said:

இறக்கியிருக்கு பாப்பம் 

ஹலோ நந்தன் நான் கதைக்கிறது கேக்குதா 😁

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ஹலோ நந்தன் நான் கதைக்கிறது கேக்குதா 😁

ஹலோ நான் சுவி பேசுகிறேன் அங்கு யார் சிறியரா .......!   😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தம்பியை போல் App செய்து விளையாடவிரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பிற்கு 
சென்று App செய்து கால் பண்ணி கதைக்கலாம் ,  நாளைக்கு போனிலிருந்த கடனட்டை தகவல்களோ, மின்னஞ்சல் தகவல்களோ, வேறு பல முக்கிய தகவல்கள்  அபேஸ் பண்ணப்பட்டு ஆப்பு வைக்கப்பட்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது 
https://appsgeyser.com/create-messenger-app/

இப்படியான  சில  விடயங்களை  உருவாக்கினால் என்ன  என  எனது  மக்களுடன்  ஏற்கனவே  உரையாடிய அனுபவத்தின்படி  தான் இங்கே எந்த  பதிவையும் இடவில்லை.

இந்த  விடயத்தில் உள்  நுளைவதோ ஏன் நின்று  பிடிப்பதோ  கூட சாதாரண விடயமில்ல

அதிலும் தனி  நபர்களால் கடினம்...

அதிலும் எதிரிகளை 

ஏற்கனவே  குந்தியுள்ளோரை சமாளிப்பது?????

முயற்ச்சிக்கு  வாழ்த்துகள்

இத  அவருக்கு  ஒரு  பாடமாகவும் இந்த  அசிங்கப்படுத்தல்  ஒரு ஊக்குவிப்பாகவும் எடுத்து அடுத்த கட்டங்களுக்கு  நகரட்டும்  (உண்மையில்  அவரும் இதை விளையாட்டாகவோ  அல்லது பேக்காட்டலாகவோ  செய்யாமல் இருந்திருந்தால்)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஹலோ நந்தன் நான் கதைக்கிறது கேக்குதா 😁

Video calls மட்டும் ஏற்கப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்

அப் 

கொஞ்சம்

பிழைத்தாலும்

ஆப்பு

#சப்பை ஹைகூ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

ஹலோ நான் சுவி பேசுகிறேன் அங்கு யார் சிறியரா .......!   😎

ஹலோ… சுவி, மத்தியானம் சாப்பிட்டு விட்டீர்களா? 😁

என்ன… கறி, இன்று சமைத்தீர்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

ஹலோ நான் சுவி பேசுகிறேன் அங்கு யார் சிறியரா .......!

ம்ஹ்ஹ்ம்ஹ்ம்ம் (நம்பியார் சிரிப்பு)  ....நான் ரசியாவில் இருந்து Vasily , suvy என்று ஒரு ஆடு அப்பை இன்ஸ்டால் பண்ணி சிக்கியிருக்கு முதலில் போன் பிரைமரி மெமரியை அலசுவோம், ஆள் எமகாதகன் நிறைய சமாச்சாரம் வைத்திருக்கிறார் , ஆளோட google pay wallet ஐயும் samsung  Pay  இருந்தால் அதனையும்  தூக்கினால் இந்த மாசம் ஒட்டிரலாம், அப்படியே செகண்டரி மெமரியில்  ஒரு back door ஐயும் போட்டுவிட்டால் தேவைப்படும் போதெல்லாம் ஆளோட திறன் பேசிக்குள் எட்டிப்பார்த்து தேவையானவற்றை லவட்ட இலகுவாக இருக்கும், ஆள் வேற கேமரா access allow கொடுத்திருக்கிறார் மனிசி பிள்ளைகள், சொந்தங்களோட   வீடியோ சட் பண்ணினால்  அத்தனையும் Automatic Bot recording மூலம் சேர்வர் போக அங்கே இருக்கும் AI மென்பொருள் முழுதாக அலசி ஆராய்ந்து அழைப்புக்களை தரம்பிரித்து அதற்குரிய சேமிப்பகங்களில் சேமித்த பிறகு நமது குழு அழைப்புகளின் வகையை வைத்து என்ன செய்வது என்று முடிவு செய்யும், பகிரப்படும் படங்களையும் reverse image mapping மூலம் தரம் பிரித்து விற்பனை செய்யலாம், ஆள் முக்கிய கடவுச்சொற்களை அப் மூலம்  பரிமாறியிருந்தால் டபுள் தமாக்கா 

அங்கால யாரு ...ஓ  சிறியரா ...? ஓய் Igor இந்த ஆட்டை நீ கவனி ...செம் செட் ஒப் ஆப்பு பார்சல்    

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எல்லா ஊடகமும் தங்கள் சுய இலாபத்திற்காக ஒரு மாணவனை பப்பா மரத்தில் ஏற்றி அடுத்த நாளே தள்ளி விட்டு இருக்கிறார்கள்.  ஊடக ஒழுக்கம் என்று ஒரு விடயம் இருக்கிறது. இவர்கள் செய்த வேலையால் அந்த மாணவன் நிச்சயமாக மன உளைச்சலுக்கு ஆளாக கூடும்.

கொப்பி  பண்ணுவதெண்டாலும் அதுக்கும் ஒரு திறமை வேண்டும் இந்தியர்கள் சீனர்கள் செய்யாத திருட்டுத்தனமா ?

இணையம் மென்பொருள்கள் பற்றி அரிவரி  தெரியாத பித்தலாட்ட தமிழ் மீடியா  கூட்டத்தால் அந்த பிஞ்சுவின் கனவு உடைக்கப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

கணனி விஞ்ஞான மாணவன் என்ற வகையில் சில விடயங்களை தெளிவு படுத்தலாம் என்று இருக்கிறேன்..

அடபாவி
இது கிருபன் தான் எழுதியிருக்கு என்று வாசித்துக் கொண்டு போனால் கீழே முகப்புத்தகத்திலிருந்து எடுத்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..👍..💐

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நந்தன் said:

Video calls மட்டும் ஏற்கப்படும். 

என்ன இது இப்பவே லைன் கரகரக்குது :gutenmorgen: 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அடபாவி
இது கிருபன் தான் எழுதியிருக்கு என்று வாசித்துக் கொண்டு போனால் கீழே முகப்புத்தகத்திலிருந்து எடுத்திருக்கு.

சரியான பதிலடியைத்தான் இணைத்து இருக்கிறார் இந்த திரிக்கு முக்கியமானது அந்த தரவுகள் ஆனால் ஒவொருவரின் பார்வைகளும் கோணம்களும் பிழையாக உள்ளனவே ? எங்களுக்கு சரியெண்டு பட்ட எத்தனை முகநூல் பதிவுகளை இங்குள்ள நிழலி  எனும் மட்டு உருத்தினர் நீக்கி உள்ளார் ஏன் இப்பவும் நாதமுனியின்  என்னுடைய ஆக்கங்களை நீக்குகிறார் ? அதற்குரிய விளக்கங்களையாவது தருவாரா ? 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அடபாவி
இது கிருபன் தான் எழுதியிருக்கு என்று வாசித்துக் கொண்டு போனால் கீழே முகப்புத்தகத்திலிருந்து எடுத்திருக்கு.

நான் Apps Development இல் வேலை செய்யவில்லை ஆனால் apps development இன் சிக்கல்கள் நன்றாகத் தெரியும்.😀 

மேலே இணைத்தது வாட்ஸப்பில் வந்திருந்தது. முகப்புத்தகத்தில் தேடி source உடன் இணைத்தேன்.

பையன் சவாலாக எடுத்து பெரிய ஒரு நிபுணனாக வரவேண்டும். Apple, Dell, Facebook  போன்ற பெரும் நிறுவனங்கள் எல்லாம் computer geeks ஆல்தான் ஆரம்பிக்கப்பட்டன. எனவே, ஐடியாக்கள் இருக்கும்வரை தனித்துவமாக முன்னேறலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

கொப்பி  பண்ணுவதெண்டாலும் அதுக்கும் ஒரு திறமை வேண்டும் இந்தியர்கள் சீனர்கள் செய்யாத திருட்டுத்தனமா ?

இணையம் மென்பொருள்கள் பற்றி அரிவரி  தெரியாத பித்தலாட்ட தமிழ் மீடியா  கூட்டத்தால் அந்த பிஞ்சுவின் கனவு உடைக்கப்பட்டுள்ளது. 

புதிய செயலியினை உருவாக்கினார் யாழ். இந்துக் கல்லூரி மாணவன்!

சரியாக... சொன்னீர்கள், பெருமாள். 
அந்தப் பிள்ளையின் மனம் எவ்வளவு கஸ்ரப் பட்டிருக்கும், என்று நினைக்க வேதனையாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நந்தன் said:

Video calls மட்டும் ஏற்கப்படும். 

2 hours ago, குமாரசாமி said:

என்ன இது இப்பவே லைன் கரகரக்குது :gutenmorgen: 😁

வெள்ளிக்கிழமை... "வீடியோ கோல்" மட்டுமல்ல, 
"ஓடியோ கோல்" எடுத்தாலும் ,  குரல் கரகரக்கத்தான் செய்யும். 🤣

அதுக்கு...  "லைனில்" குறை சொல்லக் கூடாது அண்ணே...  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

வெள்ளிக்கிழமை... "வீடியோ கோல்" மட்டுமல்ல, 
"ஓடியோ கோல்" எடுத்தாலும் ,  குரல் கரகரக்கத்தான் செய்யும். 🤣

அதுக்கு...  "லைனில்" குறை சொல்லக் கூடாது அண்ணே...  

கதை இப்பிடி போகுது 😁

  • கருத்துக்கள உறவுகள்

மகிழினியனுக்கு பாராட்டுக்கள், இது ஒரு தொடக்க புள்ளி மட்டுமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.