Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடன் காசை... திருப்பி கேட்டவர் மீது, கத்திக்குத்து- யாழ்ப்பாணத்தில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடன் காசை திருப்பி கேட்டவர் மீது கத்திக்குத்து- யாழ்ப்பாணத்தில் சம்பவம்

கடன் காசை... திருப்பி கேட்டவர் மீது, கத்திக்குத்து- யாழ்ப்பாணத்தில் சம்பவம்

கடன் காசை திருப்பி கேட்க சென்றவர் மீது தந்தையும் மகனும் சேர்ந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மோகனராஜா ரஜீவன் (வயது 37) என்பவரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளான தந்தையையும் மகனையும் கோப்பாய் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2021/1226888

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணம் இல்லாத நேரம்… உதவியதற்கு, கிடைத்த தண்டனை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பணம் இல்லாத நேரம்… உதவியதற்கு, கிடைத்த தண்டனை. 

தராத, தராத எண்டு சொன்னேன், கேட்டியா, எதுக்குடா கொடுத்தாய்...? என்ன நினைச்சு கொடுத்தாய்?

நாம என்ன, பிச்சக்காரர் என்று கேவலமா நினைச்சு கொடுத்தியா?  😡

1 hour ago, தமிழ் சிறி said:

பணம் இல்லாத நேரம்… உதவியதற்கு, கிடைத்த தண்டனை. 

நாட்டில் இப்ப குடுத்த கடனை வாங்கி எடுக்கிறதுக்குள்ள சீவன் போய்விடும். அவ்வளவு கஷ்டம் திரும்ப வாங்கிறது. 

நான் அபு தாபிக்கு வந்த புதிதில், யாழ்ப்பாணத்தில் உள்ள எனது நண்பனுக்கு ஒரு லட்சம்  ரூபா அவசரத்தேவைக்காக அனுப்பின்னான். இப்ப கிட்டத்தட்ட 2 வருடம் முடியப்போகுது. இன்னும் தரல்ல அந்த காசை. நானும் கனதரம் போன் பண்ணி கேட்டுப்பாத்திட்டன். தாறபிளான் இல்ல. 

இப்ப கொஞ்சநாளா போன் அடிச்சாலும் எடுக்கிறானில்லை.   வராது போல கிடக்குது.

இதால காசு இருந்தாலும் நம்பிக்குடுக்க பயமாக்கிடக்குது.😏

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமான தொகையை மட்டுமே கடனாக வழங்கலாம். தப்பித்தவறி திரும்பி வரவில்லை என்றாலும் கவலை குறையும்.

17 minutes ago, Shanthan_S said:

நாட்டில் இப்ப குடுத்த கடனை வாங்கி எடுக்கிறதுக்குள்ள சீவன் போய்விடும். அவ்வளவு கஷ்டம் திரும்ப வாங்கிறது. 

நான் அபு தாபிக்கு வந்த புதிதில், யாழ்ப்பாணத்தில் உள்ள எனது நண்பனுக்கு ஒரு லட்சம்  ரூபா அவசரத்தேவைக்காக அனுப்பின்னான். இப்ப கிட்டத்தட்ட 2 வருடம் முடியப்போகுது. இன்னும் தரல்ல அந்த காசை. நானும் கனதரம் போன் பண்ணி கேட்டுப்பாத்திட்டன். தாறபிளான் இல்ல. 

இப்ப கொஞ்சநாளா போன் அடிச்சாலும் எடுக்கிறானில்லை.   வராது போல கிடக்குது.

இதால காசு இருந்தாலும் நம்பிக்குடுக்க பயமாக்கிடக்குது.😏

விடாமல் முயலுங்கள், நண்பர்கள் வட்டாரத்தில் தெரியப்படுத்துங்கள். அதனால ஏற்படும் சங்கோஜத்தினால் திருப்பி தருவார். உண்மையிலேயே கஸ்ரப்படுகிறாரா என்பதையும் அறியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடனும் கொடுத்து அடியும் வாங்கியவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Shanthan_S said:

நாட்டில் இப்ப குடுத்த கடனை வாங்கி எடுக்கிறதுக்குள்ள சீவன் போய்விடும். அவ்வளவு கஷ்டம் திரும்ப வாங்கிறது. 

நான் அபு தாபிக்கு வந்த புதிதில், யாழ்ப்பாணத்தில் உள்ள எனது நண்பனுக்கு ஒரு லட்சம்  ரூபா அவசரத்தேவைக்காக அனுப்பின்னான். இப்ப கிட்டத்தட்ட 2 வருடம் முடியப்போகுது. இன்னும் தரல்ல அந்த காசை. நானும் கனதரம் போன் பண்ணி கேட்டுப்பாத்திட்டன். தாறபிளான் இல்ல. 

இப்ப கொஞ்சநாளா போன் அடிச்சாலும் எடுக்கிறானில்லை.   வராது போல கிடக்குது.

இதால காசு இருந்தாலும் நம்பிக்குடுக்க பயமாக்கிடக்குது.😏

எனக்கும் என்னை புரிந்து கொள்ள  இது போன்ற அனுபவம்   தான்  கிடைத்தது

நான் ஒருத்தரிடம்  ஒரு  தரம்  தான்  கேட்பேன்

அத்தோடு  சரி

இனி உங்களுக்கு  தெரியணும்  உங்க பலவீனம்?

அதுக்கெல்லாம் தனித்திறமை  வேண்டும்  காண்😪

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட ஒருவரிடம் ஒரு லட்சம் கொடுத்து 3வருடமாகிறது தம்பி ஒருவனுக்கு வேலை விஷயமாக ஆனால் திருப்பி கொடுக்கிறார் இல்லை இதனால் அவர்கள் குடும்பத்தில் தலையை காட்டுவது மிகவும் சங்கடமாக உள்ளது அது அவர்கள் தந்த பணமே. 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இங்க எல்லாரும் வளைச்சு, வளைச்சு கடன் குடுத்துட்டு அடி வாங்க ரெடியா நிக்கிற ஆக்கள்தான் போல கிடக்கு🤣.

பிகு

டென்சன் ஆக வேண்டாம் - இங்கேயும் சேம் பிளட்தான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை ஒருத்தர் கொஞ்சம் காசு அவசரமா கேட்டார்.

அவர் நிலைமை தெரிந்த படியால், திரும்பி வராது எண்டு தெரிந்தே, கேட்ட காசில், 30% தான் இருக்குது எண்டு ரெண்டு வருடத்துக்கு முன்னம் கொடுத்தேன்.

அதன் பிறகு ஆள் கால் எடுக்கிறதே இல்லை. வெட்டிக் கொண்டு திரிஞ்சார். நானும் எதிர்பார்க்கவில்லை என்பதால், அலட்டிக் கொள்ளவில்லை.

போன வருசம் நத்தாருக்கு, சும்மா இருக்கேலாம, ஆளுக்கு போனை போட்டு, எப்படி கொரோனா விசயங்ககள், பிரச்சனை ஒண்டும் இல்லையோ..... கவனமா இரு எண்டு சொன்னேன்.

அடுத்த கிழமை கோல் வருகுது.... மச்சான்.... கொரோனா லாக் டவுன்.... அந்த கேட்டதிலை மிச்சக்காசு 70% தந்து உதவேலுமா என்று.... 

உதை தான் சொல்லுறது, தடியை கொடுத்து அடியை வாங்குறது எண்டு....

இப்ப, நான் தான் பயந்து திரியிறன்.🥴

****

இன்னோரு மார்க்கமா கேட்பீனம்.... மட்டை ஏதாவது இருக்குதே.... மாதாமாதம் கட்டுறேன்.... 

நான் பெரிசா காட் வச்சிருக்கிறேல்ல....

அப்ப பிறகென்ன.... நல்ல 0% ஒபரோட 2 வருசத்துக்கு குடுக்கினம்.... அப்பிளை பண்ணு.... டபாரெண்டு வரும்...நான் ஒரு 6 மாசத்துக்கிடேல்ல தருவேன்... 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Shanthan_S said:

நாட்டில் இப்ப குடுத்த கடனை வாங்கி எடுக்கிறதுக்குள்ள சீவன் போய்விடும். அவ்வளவு கஷ்டம் திரும்ப வாங்கிறது

நான் சிலோனிலை இருக்கேக்கை பள்ளிக்கூடம் கட்டடிச்சு சட்டம் என் கையில் படம் பாக்க போனனான். அப்ப கூட வந்த ஒருத்தனுக்கு நான் தான் ரிக்கற் எடுத்து  குடுத்தனான். காசு பேந்து தல்லாம் எண்டவன். இண்டு வரைக்கும் ஒரு சதம் திருப்பி தரேல்லை.😁

இப்ப அவர் கனடாவிலை வசந்தமாளிகை மாதிரி வீட்டிலை வாழுறாராம்.😂

எனவே கடன் கொடுக்கப்படாது. அது கிட்டத்தட்ட  one way ticket  மாதிரி🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

பணம் இல்லாத நேரம்… உதவியதற்கு, கிடைத்த தண்டனை. 

உதவிக்கு பணம் கொடுத்தவர்கள் சிலரும் சும்மா இருப்பதில்லை.
நான் இன்னாருக்கு இவ்வளவு கடன் கொடுத்தேன் என்று தற்பெருமையாக சொல்லி ஊர் முழுக்க பரப்பி விடுவார்கள். அங்கிருந்தும் ஒரு சில பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த விடயத்தை கையாள்வது சற்று வித்தியாசமானது.

கடன் என்று எவருக்கும் எதுவும் கொடுப்பது இல்லை. ஆனால்.. உதாரணத்திற்கு..

1000 ரூபா மாறி தரச்சொல்லி கேட்டால் என்னிடம் வசதி காணப்பட்டால் நூறு ரூபாவை கொடுப்பேன், ஆனால் திருப்பி தர தேவை இல்லை என்று கூறுவேன். 

இதற்காக எல்லாருக்கும் இப்படி கொடுப்பேன் என்று அர்த்தம் இல்லை.நெருங்கி பழகும் நண்பர்கள், உறவினர்கள், என்னில் அக்கறை உள்ளவர்களுக்கு இப்படி செய்வது.

எமக்கு சாவு எப்போது என்று தெரியாது. வாழும் காலத்தில் எமக்கு வேண்டியவர்களை எம்மால் முடியுமானபோது ஆதரவு கொடுக்க முடியும் என்றால் அது எமக்கு கிடைத்த ஓர் ஆசீர்வாதமே.

கடன் கொடுத்து வட்டி வாங்கி இலாபம் அடைவது எம்மவர்களின் வழக்கம். இந்த பழக்கம் என்னிடம் இல்லை. 

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

கடன் கொடுப்பதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் ஊழ்வினையுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை பேணி நிற்கின்றதென்ற உண்மையை அறிந்தவர் மனதில் சஞ்சலங்கள் இல்லை ...... 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சாமானியன் said:

கடன் கொடுப்பதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் ஊழ்வினையுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை பேணி நிற்கின்றதென்ற உண்மையை அறிந்தவர் மனதில் சஞ்சலங்கள் இல்லை ...... 😀

அதாவது... நாம், முன்பு கொடுக்காது ஏமாற்றிய கடனை...
இப்போது... ஒருவன் வாங்கி விட்டு, திருப்பி தராமல்... 
கத்திக் குத்து மட்டுமே,  வாங்க வேண்டி உள்ளது என அர்த்தம் கொள்ளலாமா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

அதாவது... நாம், முன்பு கொடுக்காது ஏமாற்றிய கடனை...
இப்போது... ஒருவன் வாங்கி விட்டு, திருப்பி தராமல்... 
கத்திக் குத்து மட்டுமே,  வாங்க வேண்டி உள்ளது என அர்த்தம் கொள்ளலாமா? 🤣

இதில் கவனிக்க வேண்டிய இன்னுமொரு அம்சமும் உண்டு .

ஊழ்வினையில்  பாவங்களும் புண்ணியங்களும் சேர்ந்தே அடங்குகின்றன.

 புண்ணியங்களும் போதிய அளவுக்கு ஸ்டாக் இல் இருந்தால் , கத்திக்குத்து தவிர்க்கப்படும் சந்தர்ப்பங்கள் உண்டு…..

கொடுத்த காசைத் திருப்பிக் கேட்கிறது? இது என்ன புதுசா கெட்ட பழக்கங்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நகரில் வர்த்தகர் மீது கத்திக்குத்து!

யாழ்.நகரில்... வர்த்தகர் மீது கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் மாநகரில் வர்த்தகர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நட்டபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 28 வயதான வர்த்தகர் ஒருவர் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பணக் கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த மோதல் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2021/1227301

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2021 at 03:28, நியாயத்தை கதைப்போம் said:

1000 ரூபா மாறி தரச்சொல்லி கேட்டால் என்னிடம் வசதி காணப்பட்டால் நூறு ரூபாவை கொடுப்பேன், ஆனால் திருப்பி தர தேவை இல்லை என்று கூறுவேன். 

10,000 ரூபா காசு கடன் தந்து உதவேலும?  பேந்து தல்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

10,000 ரூபா காசு கடன் தந்து உதவேலும?  பேந்து தல்லாம்.

இலங்கை ரூபா தானே? உங்கள் வங்கி தகவலை அனுப்புங்கள் 1000 ரூபா அனுப்புகின்றேன். திருப்பி தர தேவை இல்லை. நீங்கள் இணைத்த தளவாடியில் நாய் தன் விம்பத்தை பார்க்கும் வீடியோவை பகிர்ந்தமைக்கு சன்மானம்.

On 7/7/2021 at 05:41, சாமானியன் said:

இதில் கவனிக்க வேண்டிய இன்னுமொரு அம்சமும் உண்டு .

ஊழ்வினையில்  பாவங்களும் புண்ணியங்களும் சேர்ந்தே அடங்குகின்றன.

 புண்ணியங்களும் போதிய அளவுக்கு ஸ்டாக் இல் இருந்தால் , கத்திக்குத்து தவிர்க்கப்படும் சந்தர்ப்பங்கள் உண்டு…..

இலங்கை குற்றவியல் சட்டத்தில் இந்த விடயத்தை சேர்த்தால் பல வழக்குகளுக்கு தீர்ப்பெழுத நீதிபதிகளுக்கு உதவியாக இருக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

இலங்கை குற்றவியல் சட்டத்தில் இந்த விடயத்தை சேர்த்தால் பல வழக்குகளுக்கு தீர்ப்பெழுத நீதிபதிகளுக்கு உதவியாக இருக்கும். 

நீங்கள்,  பெரிய… வக்கீல் போலுள்லது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேலை செய்யுமிடத்தில் ஒருவர் எனக்கு சீனியர், நான் அறியவே 5 வருடங்களுக்கு மேலாக ஏழுநாளும் இரண்டு வேலை செய்பவர், அவர் மனைவியும் ஏழுநாளும் வேலை.

எனக்குமுதல் அவரை தெரிந்தவர்கள் அவர் வந்தநாளிலிருந்து அப்படித்தான் என்பார்கள்.

எங்கள் வேலை தலத்தில் எம் முதலாளியைவிட அவர் பொருளாதார ரீதில் பலமானவர் என்று எல்லோரும் வேடிக்கையாகவோ விவகாரமாகவோ பேசிக்கொள்வார்கள்.

அவரிடம் உள்ள குணம் எதிரே வரும் மனிதரை கண்டால் எப்படி இருக்கிறியள் எண்டு ஆரம்பிப்பார், இருக்கிறம் எண்டு நாங்கள் பதில் சொல்லி முடிக்க முன்னமே, ஐயோ ஒரே கடன் இதில வேற தம்பிக்கு தங்கச்சிக்கு 25000 அனுப்பினன் 30000 அனுப்பினன் ஏன் வெளிநாடு வந்தன் எண்டு கிடக்கு பேசாமல் ஊரில இருக்கபோறன் என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார். கையோடு ஒரு ஐம்பது நூறு எடுக்கலாமோ அடுத்த கிழமை தாறன் எண்டுவார்.

நாங்கள் இல்லையென்று சொன்னாலும் அதைபற்றி வருத்தபடமாட்டார் சிரித்துக்கொண்டே போய்விடுவார்.

இதனால் எவருமே அவரிடம் காசு விசயமோ கடன் விசயமோ பேசுவதோ கேட்பதோ இல்லை.

பின்புதான் தெரிந்தது யாரும் அவரிடம் கடன் கேட்டுவிடகூடாது என்பதற்காக அவர் கையாளும் ‘தொழில் நுட்பம்’ அது என்பது.

ஆனால் அவருக்கு எம்மிடத்தில் எதிரிகளே இல்லை எல்லோருடனும் நட்பாயிருப்பார், ஆனால் அடுத்தவர்களுக்கு கடன் கொடுத்தவர்களுடன் ஆக குறைந்தது மூன்று நாலுபேராவது கதைக்காமல் இருப்பார்கள், எதிரே வந்தால்  முறைத்து கொண்டு போகும் அளவில் நட்பு கெட்டு போயிருக்கும்.

கடன் கொடுக்காதவர்களைவிட கொடுத்தவர்களுக்கே எப்போதும் எதிரிகள் மிகுதியாக இருக்கும். சுயநலம்மிக்கவர்களே தற்பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இருப்பது அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2021 at 22:48, குமாரசாமி said:

நான் சிலோனிலை இருக்கேக்கை பள்ளிக்கூடம் கட்டடிச்சு சட்டம் என் கையில் படம் பாக்க போனனான். அப்ப கூட வந்த ஒருத்தனுக்கு நான் தான் ரிக்கற் எடுத்து  குடுத்தனான். காசு பேந்து தல்லாம் எண்டவன். இண்டு வரைக்கும் ஒரு சதம் திருப்பி தரேல்லை.😁

இப்ப அவர் கனடாவிலை வசந்தமாளிகை மாதிரி வீட்டிலை வாழுறாராம்.😂

எனவே கடன் கொடுக்கப்படாது. அது கிட்டத்தட்ட  one way ticket  மாதிரி🤣

நீங்கள் அந்த டிக்கட் காசு+ ஒரேஞ்பார்லி+ கடலை, சோழன் எல்லாத்தையும் கணக்கு பண்ணி அதுக்கு வட்டி+மீட்டர் வட்டி எல்லாம் போட்டு கொண்டுபோய் அவரிடம் குடுங்கோ  அந்தாள் மனசு வெறுத்துப்போய் அந்த மாளிகையை உங்களுக்கு தந்தாலும் தரலாம்......."போனால் முடி வந்தால் மாளிகை".....!  😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.