Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனி உட்பட மேற்கு ஐரோப்பாவில் கடும் வெள்ளம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

கால நிலை அறிவிப்பாளர்,  தெரிவிக்கும் கருத்துக்களின் படி...
பூமியின் மேல் ....10 கிலோ மீற்றருக்கு மேல் பறக்கும், நவீன  விமானங்கள்... 
மேக மூட்டத்தை.. கலைத்து விடுவதால், அதற்குரிய சரியான முன்னறிவித்தல்களை...
கணித்து.. சொல்வது, கடினம் என்று சொன்னார். 

😳

என்னது.... நம் ஊர் லெவலிலை பதில் சொல்லுகினம்...

அவருக்கு, பச்சை மட்டையாலை நாலு  சத்து சாத்தனும் போலை கிடக்குது....  😄

  • Replies 89
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

😳

என்னது.... நம் ஊர் லெவலிலை பதில் சொல்லுகினம்...

அவருக்கு, பச்சை மட்டையாலை நாலு  சத்து சாத்தனும் போலை கிடக்குது....  😄

நாதம்ஸ்.... :)
ஜேர்மன்காரர்  சொல்லும் கணிப்புகள் என்றும் சரியாகவே இருக்கும். 👍 

அத்துடன்...  கூடுதல் மழை பெய்தால்,
நிலத்திற்கு... அந்த, நீரை உறிஞ்சி உள்வாங்கும் தன்மை இல்லாமல் போய் விட்டதும் , 
காரணங்களில்...  ஒன்றாக குறிப்பிடுகின்றார்கள்.

"கன ரக"  இயந்திரங்கள், அந்தப் பூமியின் மேல் பரப்பை மட்டுமே உழுது,
கீழ் பரப்பை... மிகவும் கடினமாக்கி விட்டதும் ஒரு காரணமாம்.  

விஞ்ஞனம் மனிதனின்  வாழ்வை கேள்விக் குறியாக்கி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நலமாக இருக்கின்றேன்.தேடிய உறவுகளுக்கு மிகவும் நன்றி.......நான் இருப்பது பிரான்ஸ்.......கு.சா நலமாக இருப்பார் என்று நம்புகின்றேன்.....! 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்.... :)
ஜேர்மன்காரர்  சொல்லும் கணிப்புகள் என்றும் சரியாகவே இருக்கும். 👍 

அத்துடன்...  கூடுதல் மழை பெய்தால்,
நிலத்திற்கு... அந்த, நீரை உறிஞ்சி உள்வாங்கும் தன்மை இல்லாமல் போய் விட்டதும் , 
காரணங்களில்...  ஒன்றாக குறிப்பிடுகின்றார்கள்.

நான் சொல்ல வந்தது என்னவெனில், கடும் மழை பெய்யப்போகுது எண்டு சொல்லி, உந்த கோதாரி விழுந்த புது பிளேனுகள் பூந்து, மேகத்தை கலைச்சிரிச்சு ... அதாலை மழை பெய்யும் எண்டு நாங்கள் சொன்னது பிழைச்சு போட்டுது எண்டு சொன்னால், சரி, சரி... ஓகே எண்டு சொல்லலாம்.

இது மழை கொட்டொ , கொட்டு எண்டு கொட்டி, வெள்ளம் வந்து சனமும் செத்து போனதால.... பிளேன் கதை பிழைக்குதே... எண்டுதான் சொல்ல வந்தனான்... 😇

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

நாதமுனி,  இப்ப... உங்கள், கருத்தின் ஆழத்தை புரிந்து கொண்டேன். 👍 :)
தவறாக... நான், விளக்கம் கொண்டமைக்கு,  வருந்துகின்றேன். 🥰

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

நாதமுனி,  இப்ப... உங்கள், கருத்தின் ஆழத்தை புரிந்து கொண்டேன். 👍 :)
தவறாக... நான், விளக்கம் கொண்டமைக்கு,  வருந்துகின்றேன். 🥰

சும்மா, பகிடிக்கு இல்லை.... எங்களுக்கு இந்த மாதிரி ஆழமா எழுதப் பழக்க, நம்ம தல பட்ட பாடு, அவருக்கு தான் தெரியும்.... பத்தி, பத்தியா... நம்பர் போட்டு... எழுதி.... எவ்வளவு பாடு பட்டிருப்பார்.....

நீங்கள் எழுதினதை பார்த்து, மனிதர் சந்தோசப்படுவார்.... சரிதானே நான் சொல்லுறது?   😁

vadivelu | Explore Tumblr Posts and Blogs | Tumgir

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

காலநிலை அறிவித்தலுக்கு சிறித்தம்பி கூற்றுப்படி விமானங்கள் ஒரு காரணம்போல் தெரிகிறது. பறக்கும் விமானங்களில் இருந்து வரும் சமிக்கைகளைக் கொண்டு, மேகநிலை பற்றிச் சந்தேகமின்றி அறிந்துகொள்வதாக ரிவியில் வந்த செய்தி உண்மைதான். கொரோனா ஆக்கிரமிப்பிற்கு முன்பாக, ஆயிரக்கணக்கில் விமானங்கள் வானில் பறந்தபோது, யேர்மனியிலிருந்து வரும் வானிலை அறிவித்தலின் பிரகாரம் அனைத்தும் இம்மி பிசகாது நடக்கும். கொரோனா வந்து விமானங்கள் பறப்பை வீழ்த்தியபின்பு, அறிவித்தல் ஒன்றாக இருக்கிறது, நடப்பது வேறாகவே இருக்கிறது.🤔  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Paanch said:

காலநிலையை கணிக்க செய்மதிகளை தானே பயன்படுத்துகிறார்கள்?!

  • கருத்துக்கள உறவுகள்

இயற்க்கை எந்த நாடு எந்த இனம் என்று பாக்காமல் தான் தனது விளையாட்டை காட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

குசா அண்ணர் சுகமாய் இருப்பார் என்று நம்புகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Paanch said:

காலநிலை அறிவித்தலுக்கு சிறித்தம்பி கூற்றுப்படி விமானங்கள் ஒரு காரணம்போல் தெரிகிறது. பறக்கும் விமானங்களில் இருந்து வரும் சமிக்கைகளைக் கொண்டு, மேகநிலை பற்றிச் சந்தேகமின்றி அறிந்துகொள்வதாக ரிவியில் வந்த செய்தி உண்மைதான். கொரோனா ஆக்கிரமிப்பிற்கு முன்பாக, ஆயிரக்கணக்கில் விமானங்கள் வானில் பறந்தபோது, யேர்மனியிலிருந்து வரும் வானிலை அறிவித்தலின் பிரகாரம் அனைத்தும் இம்மி பிசகாது நடக்கும். கொரோனா வந்து விமானங்கள் பறப்பை வீழ்த்தியபின்பு, அறிவித்தல் ஒன்றாக இருக்கிறது, நடப்பது வேறாகவே இருக்கிறது.🤔  

31 minutes ago, ஏராளன் said:

காலநிலையை கணிக்க செய்மதிகளை தானே பயன்படுத்துகிறார்கள்?!

உங்கள்... இரண்டு பேருக்கும், விளக்கம் குடுக்குறதை விட....
நான்.. இண்டைக்கு,  "ஆடிக்  கூழ்" குடித்து விட்டு, கம்மென்று இருக்கலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

உங்கள்... இரண்டு பேருக்கும், விளக்கம் குடுக்குறதை விட....
நான்.. இண்டைக்கு,  "ஆடிக்  கூழ்" குடித்து விட்டு, கம்மென்று இருக்கலாம்.  

வெள்ளிக்கிழமை வேறை 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

வெள்ளிக்கிழமை வேறை 😜

tenor.gif?t=AAW-KYLIcQMKrTQJVwONRg&itemid=13347383&fbclid=IwAR29jyompzE4JCJ7N4GkqTI_buErpbSn5q_pZz3mm_rJb5IYXQB5dmDPwD4

ஓம்... முனி,   நாங்கள் தான், ஜாக்கிரதையா... இருக்க வேணும். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

சும்மா, பகிடிக்கு இல்லை.... எங்களுக்கு இந்த மாதிரி ஆழமா எழுதப் பழக்க, நம்ம தல பட்ட பாடு, அவருக்கு தான் தெரியும்.... பத்தி, பத்தியா... நம்பர் போட்டு... எழுதி.... எவ்வளவு பாடு பட்டிருப்பார்.....

நீங்கள் எழுதினதை பார்த்து, மனிதர் சந்தோசப்படுவார்.... சரிதானே நான் சொல்லுறது?   😁

vadivelu | Explore Tumblr Posts and Blogs | Tumgir

என்னத்த கஸ்டபட்டு…என்னத்த….இன்னமும் ஒரு கருத்து எழுதிப்போட்டு…அதை விளக்க இன்னொரு கருத்து எழுதுற நிலைதான்🤣.

சடுதி வெள்ளம் (அட தான் flash floods) ஏன் உருவாகுது என்ற சிறு விளக்கம் கீழே.

https://www.metoffice.gov.uk/weather/learn-about/weather/types-of-weather/rain/flash-floods

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணாவின், 
கைத் தொலை பேசிக்கும், வீட்டு தொலை பேசிக்கும்...
தற்போது (21:45) எடுத்துப்  பார்த்தேன், பதில் இல்லை.
மிகவும், மிகவும், மிகவும். கவலையாக... உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணாவின், 
கைத் தொலை பேசிக்கும், வீட்டு தொலை பேசிக்கும்...
தற்போது (21:45) எடுத்துப்  பார்த்தேன், பதில் இல்லை.
மிகவும், மிகவும், மிகவும். கவலையாக... உள்ளது. 

உண்மைதான். 

இரு மணி நேரத்துக்குமுன் பார்த்தேன். தற்போதும் பார்த்தேன் குமாரசாமியண்ணர் பதிவிடவில்லையென்றதுமே எழுதிக்கேட்போமென்று வந்தேன். பல இடங்களில் தொலைபேசி மற்றும் கைபேசிகள் கூட செயலிழந்துவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அவரது தொடர்பாடல் இணைப்புகள் பாதிக்கப்பட்டுமிருக்கலாம் என்றே நினைக்கின்றேன். அதனால் கூட யாழிலே எழுதமுடியாமல் இருக்கிறாரோ தெரியவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nochchi said:

நன்றி... நொச்சி. 🙏  
எனது... நண்பனை, மீண்டும் இங்கு... காண வேண்டும்.  💓

  • கருத்துக்கள உறவுகள்

https://www.swrfernsehen.de/swr-extra/hochwasser-im-suedwesten-100.html இது ஒரு இணைப்பொன்று வெள்ளப்பாதிப்புத் தொடர்பான SWR னுடைய செய்தி

1 minute ago, தமிழ் சிறி said:

நன்றி... நொச்சி. 🙏  
எனது... நண்பனை, மீண்டும் இங்கு... காண வேண்டும்.  💓

யோசிக்க வேண்டாம் வருவார். தொலைத்தொடர்புத்தடையென்றே நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

இயற்க்கை எந்த நாடு எந்த இனம் என்று பாக்காமல் தான் தனது விளையாட்டை காட்டுது.

சரியாகச் சொன்னீர்கள். நாங்கள் தான் அந்த இனம் செய்த  பாவங்களுக்கு இப்போது அவர்களுக்கு தண்டணை கிடைக்கிறது என்று சொல்லி எங்களை நாங்களே ஏமாற்றி கொள்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேடியவர்களுக்கு நன்றி. நலமாக உள்ளேன். வெள்ளத்தில் காரில் நீந்திய அனுபவம் இதுவரை சந்தித்த இயற்கை அனர்த்தங்களில் இருந்து வேறுபட்டது. இன்னும் அந்த நினைவு கண்ணுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, shanthy said:

காரில் நீந்திய அனுபவம்

கோவிட் வந்த பின்பு அடுத்த சோதனை உங்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, shanthy said:

தேடியவர்களுக்கு நன்றி. நலமாக உள்ளேன். வெள்ளத்தில் காரில் நீந்திய அனுபவம் இதுவரை சந்தித்த இயற்கை அனர்த்தங்களில் இருந்து வேறுபட்டது. இன்னும் அந்த நினைவு கண்ணுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. 

சாந்தி... நீங்கள், வசிக்கும் ... நகரத்துக்கு அருகில், 
பல  வருடங்களுக்கு, முன்பு வந்திருக்கின்றேன்.

சாதாரணமாக... நாட்களில், ஓடும்... அருவி ஓசையே...
காதை, கிழிப்பதாக இருக்கும்.
பார்க்க... பயமாக, இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணாவின், 
கைத் தொலை பேசிக்கும், வீட்டு தொலை பேசிக்கும்...
தற்போது (21:45) எடுத்துப்  பார்த்தேன், பதில் இல்லை.
மிகவும், மிகவும், மிகவும். கவலையாக... உள்ளது. 

கு சா அண்ணையின் வீட்டுத் தொலைபேசி இலக்கத்தை வைத்து அவர் வாழும் நகரைக் கண்டு பிடிக்கலாம் சிறி அண்ணை.
அந்த ஊரில் வெள்ளத்தால் பாதிப்பு உண்டா என அறிந்து கொள்ளுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை...  தப்பி, வந்து... கொண்டு இருக்கிறார். 🙏 🥰

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை...  தப்பி, வந்து... கொண்டு இருக்கிறார். 🙏 🥰

நன்று தமிழ்சிறி. 

தகவலை அறிந்து மகிழ்வாக இருக்கிறது. 

வெள்ள அபாயத்துள் சிக்கி மீண்ட சாந்தியவர்களுக்கும்  ஒரு அச்சுறுத்தலைக் கடந்திருக்கிறார். அனைத்தையும் கடந்து நலமாக இருப்பதே இன்றையதேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.