Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

ரிஷாத்தின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணிபுரிந்த 11 பெண்கள் துஷ்பிரயோகம் – காவல்துறை தகவல்

July 24, 2021
 
Share
 
 72 Views

download 3 3 ரிஷாத்தின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணிபுரிந்த 11 பெண்கள் துஷ்பிரயோகம் - காவல்துறை தகவல்முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணிபுரிந்த 11 பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது என திவயின என்ற சிங்கள  செய்தி இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து மேலும் அந்த செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

இதற்கு முன்னர் மலையக தோட்டப் புறங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 11 யுவதிகள் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணியாற்றிய காலத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக காவல் துறையினர்  மேற்கொண்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும் முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிப்பெண்ணாக அழைத்து வரப்பட்ட யுவதி ஒருவர் பம்பலப்பிட்டி பகுதியில் இரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து  காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சராகக் கடமையாற்றிய போது அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில் யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக  காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்,  தான் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தையும் அந்த அறையையும் காவல் துறையினருக்கு காண்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப் படுகின்றது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து ரிஷாத்தின் மனைவி, மனைவியின் தந்தை, மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

நேற்று காலை கைது செய்யப்பட்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்துக்காக குற்றஞ் சாட்டப்பட்டவர் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு பணிப் பெண்ணாகக் கொண்டு வரப்பட்ட இளம் யுவதிகள் மற்றும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தப் பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக பிரதான காவல் துறை  பரிசோதகர் பெண் அதிகாரி வருணி போகஹவத்தவை  நியமிக்க மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நடவடிக்கை எடுத்துள்ளார் .

அதன்படி, ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பாலியல் துஷ் பிரயோகத்திற்கு உட்பட்ட யுவதிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக வருணி போகஹவத்த  தலைமையிலான விசேட குழு மலையக தோட்டப்புறப் பகுதிகளுக்குச் சென்றுள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சகல யுவதிகளும் மலையக தோட்டப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், நேற்று கைது செய்யப்பட்ட தரகர் மூலமாக அனைவரும் கொழும்பு அழைத்து வரப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டு பணிப் பெண்களான யுவதிகள் மற்றும் சிறுமிகளைக் கொழும்புக்கு அழைத்து வந்த தரகருக்கு இலட்சக் கணக்கான பணத்தைச் செலுத்த அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டின் பின்புறத்தில் தனியாக அமைந்துள்ள சிறிய இருட்டு அறையில் மேற்படி யுவதிகள், சிறுமிகள் விடப்படுவதாகவும் இரவு 10.30 மணியளவில் குறித்த அறையின் கதவை அடைப்பதாகவும் மறுநாள் காலை 5.30 மணிக்கு  திறக்கப் படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், அவர்கள் கழிப்பறைக்குச் செல்லக் கூட அனுமதிக்கப் படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும்  டயகம சிறுமியை வீட்டுப் பணிப் பெண்ணாக அழைத்து வந்த தரகரிடம் நீண்ட நேரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி பல முக்கியமான தகவல்களைக் கேட்டறிந்துள்ளனர்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் 05 காவல்துறை விசேட குழு குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.

நன்றி -தினக்குரல்

https://www.ilakku.org/11women-who-worked-maids-in-rishads-house-were-abused/

இது உண்மையாயின், காசு இருந்தால், 7 கலியாணம் கட்டலாம் எண்டதை, மாறி வேறு விதமாக எடுத்துள்ளனர் என்றே சொல்ல முடியும்....

அற்பனுக்கு காசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்.

இந்த ரிஷாட், அகதியாக புத்தளம் வந்த ஒருவர். அவர் கொழும்பு 7 பகுதியில் வீடு வாங்குமளவுக்கு ஊழலால், பணம் சேர்த்த விதம், வெளிப்படையானது. அவர் அதுகுறித்து ஒருபோதும் கவலைப்படவில்லை.

புத்தம் புதிய ஆடி காரில், மன்னாரில் இருந்து, கடத்திய இந்திய கஞ்சாவை கல்கமுவ என்னும் சிங்கள ஊரில், போலீசார் செக் பண்ணி, அனைவரையும் கைது செய்ய, இவர் போன் போட்டு, போலீசாரை பயமுறுத்தி, அனைவரையும் விடுவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வமாக வந்து, இரகசியமாக, நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில், சாரத்துடன், ஹெல்மெட்டும் போட்டுகொண்டு, சாதாரண, வியாபார நானா போல பொம்மைவெளிப்பக்கம் போய் யாரையோ சந்தித்து இருந்தார்.

இரகிசயமாக ஒரு நிருபர் பின்னாலே போய், என்ன இந்த பக்கம் என்று கேட்க, அசடு வழிந்து.... இவர்கள் எப்படி வாழ்கின்றனர் என்று பார்க்க வந்தேன் என்று சமாளித்து நகர்ந்தார்.

ஆனால் சந்திப்பின் நோக்கம் வேறு என்றார்கள். 

ஈஸ்டர் குண்டு வெடிப்புகளின் பின்னர், கைதான இவரது நண்பரும், குண்டுதாரி ஒருவரின் தந்தையும், தொழிலதிபருமான ஒருவர் குறித்து அப்போதைய ராணுவ தளபதிக்கு, மிடுக்குடன், எங்கே அவர், எப்போது விடுவிப்பீர்கள் என்று கேட்டு அடாவடி பண்ணினார். இன்று அதே குண்டு வெடிப்பு தொடர்பில் அவர் உள்ளே இருக்கிறார்.

இந்த முஸ்லீம் அரசியல் வாதி, 3 அல்லது 4 உறுப்பினர்களை எப்படியாவது எடுத்து பெரும்பான்மையில்லாமல் தவிக்கும் பெரிய கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம், தன்னை எந்த அரசும் கை வைக்க முடியாது என்று இறுமாப்புடன் எல்லா அடாவடிகளையும் செய்து கொண்டிருந்தார்.

வில்பத்து காடழிப்பு, முல்லைத்தீவு காடழிப்பு எல்லாம் இந்த உறுப்பினர்களை பெறும் அரசியல் நோக்கம் கொண்டது. கடந்த தேர்தலில், மன்னாரிலும், புத்தளத்திலும் வாக்காளராக சட்ட விரோதமாக பதித்திருந்த இஸ்லாமியரை, புத்தளத்தில் வாக்களித்த பின்னர், பஸ்களில் ஏத்தி, வாக்களிக்க மன்னாருக்கு, கொரோன மத்தியிலும் கொண்டு போனார் என்ற குற்றசாட்டில் விசாரணை நடக்கிறது.

ஈஸ்டர் குண்டு வெடிப்புகளின் பின்னர் கூட, இவர் மீது போலீசார் கை காட்டிய போதும், ரணிலுக்கு பெரும்பாண்மை பலம் தேவைப்பட்டதால், இவர் தினாவெட்டாக பதில்கள் அளித்துக் கொண்டிருந்தார்.

அவரது போதாத காலம், மகிந்தாவுக்கு இவரது அல்லது இஸ்லாமிய கட்சிகள் ஆதரவே இல்லாமல் 2/3 பெரும்பாண்மை கிடைக்க, இவரது அடாவடிகள், தில்லுமுல்லுகள், குடும்பத்துடன் போட்ட ஆட்டங்கள் எல்லாம் கிழித்து தோரணமாக தொங்க விடப்படுகின்றன.

இந்த முறை மகிந்தா அரசுக்கு, எந்த ஒரு இஸ்லாமிய கட்சிகள் ஆதரவும் தேவை இல்லை என்ற நிலையில், அந்த கட்சிகள் காய்ந்து கொண்டு இருக்கின்றன.

குறிப்பாக, எந்த அரசு பதவிக்கு வந்தாலும், அதில், குபீர் என்று பாயும், முஸ்லீம் காங்கிரசும், அதன் தலைவர் ஹக்கீமும் முகட்டை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

ரவூப் ஹக்கீம் விடயத்தில் கூட, ஒரு விதவை பெண் உடன் தொடர்பில் இருந்து, அந்த பெண், இந்த சிறுமி போலவே, தீயினால் மரணித்து, சந்திரிகா காலத்தில் அமைச்சராக இருந்த காரணத்தினால் தப்பினார் என்ற கதையும் உள்ளது.

இவர்கள், அடித்த கூத்துக்கள், அடாவடிகள், தில்லுமுல்லுகள் வெளியே வந்து தம்மை சிக்க வைக்கும் என்றே அரசுக்கு எதிராக வாயே திறக்காமல் இருப்பதனால், கிழக்கில், இஸ்லாமியர்கள், சாணக்கியனை, சுமந்திரனை அணுகுகிறார்கள்.

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு

  • Replies 99
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
முகுந்தன் என்ற பிரபல எழுத்தாளர் தனது முகப்பக்கத்தில் பகிர்ந்து கொண்ட தகவல்களை அப்படியே தந்துள்ளோம்……
🔴
 
ஒன்றை MD 90 மோட்டச் சைக்கிளில் புத்தளத்திற்கு வந்தவர்
🔴15/16 வருடங்களாக அமைச்சராக இருந்தவர்
🔴பாராளுமன்ற உறுப்பினர்
🔴ஜனநாயக கட்சியின் தலைவர்
🔴குறித்த இனத்தின் மக்கள் பிரநிதி
🔴04 பாராளுமன்ற உறுப்பினரை கொண்ட கட்சியின் தவைவர்
🔴169 பிரதேச சபை உறுப்பினரை கொண்ட கட்சியின் பிரதிநிதி
🔴நாட்டின் முக்கிய செல்வந்தர்
🔴ஆசியாவின் முக்கிய செல்வந்தர் தர வரிசையில் உள்ளவர்
🔴70+ கம்பனிகளின் Chairman, MD/ CEO
🔴2000+ ஏக்கர் காணிகளை அசையா சொத்துகளாக கொண்டவர்.
(இலங்கை காணி உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் வயல் காணி+ மேட்டு நிலம் உள்ளங்களாக ஒரு தனி நபர் 75 ஏக்கர் மட்டுமே சட்ட ரீதியாக வைத்திருக்க முடியும். ஆகவே தான்
🔴தனது
🔻 தாயார்,
🔻சிறிய தாயார்
🔻பெரிய தாயார்
🔻அத்தை
🔻மனைவி
🔻மனைவியின் சகோதர/ சகோதரிகள்
🔻சகோதரன்
🔻சகோதரனின் மனைவி
🔻சகோதரனின் மனைவியின் சகோதர/ சகோதரிகள்
என்று முறையில் பட்டியல் நீளும்
🔴அத்தோடு
🔻தொலைக்காட்சி அலைவரிசை,
🔻வானொலி அலைவரிசை ஆகியவற்றுக்கு சொந்தக்காரன் ஆகியவர் தனது வீட்டில் சிறுமியை வேலைக்கு அமர்த்தியது மட்டுமல்லாது அந்த சிறுமியை துஷ்பிரோகத்திற்கு உள்ளாக்கியதிலும் இந்த மக்கள் பிரதிநிதிக்கும் பங்கு இருக்குமா? சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவரும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து இருப்பாரா என்றே சந்தேகம் எழுகிறது.
உயிர்த்த ஞாயிறு (April-21) குண்டு வெடிப்பில் தொடர்பு என்ற வகையில் தன்னை கைது செய்த போது மனித உரிமை மீறல் அது இது என்று எல்லாம் கதறிய போது ஒரு வேளையில் அரசின் பழிவாங்கல் தானோ என நினைத்தோம்.
இப்போது புரிகிறது. சிறுமியை துஷ்பிரயோகம் செய்யும் நிலைமைக்கு கூட அஞ்சாத இவர்கள் நிச்சயமாக தேவாலயத்திற்கு குண்டு வைப்பதற்கு ஒத்துழைக்க தயங்கி இருக்க மாட்டார்கள் என்றே சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
அத்தோடு சிறுமியை தனது வீட்டில் வைத்து அவரும் துஷ்பிரயோகம் செய்திருக்க கூடலாம்/ அவரும் உடந்தையாக இருந்திருக்கலாம்/ கண்டும் காணாதது போல் கடந்து சென்று இருக்கலாம். இதில் எதுவுவே இல்லை என்று மட்டும் மறுக்க முடியாது.
இங்கு குற்றம் நிருபிக்கபட்டால் உடந்தையாக இருந்தவர் உட்பட குடும்பத்தோடு அதி உச்ச தண்டையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
நீதியின் பிடியில் குற்றத்திற்கு நியாயமான தீர்ப்பு வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் முதற்கொண்டு சம்மந்தப்பட்ட
🔻அவரின் மனைவி
🔻மனைவியின் சகோதரர்
🔻மனைவியின் தந்தை என துஷ்பிரயோகம் செய்தவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் என அனைவருக்கும் அதி உச்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
அத்தோடு சிறுமி என்றும் பாராமல் வேலைக்கு அனுப்பிய பெற்றோர், தரகர் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.
 
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த ஹிஷாலினி மறுநாளே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயதாக டயகம பகுதியினை சேர்ந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் குறித்து விசாரிக்கும் பொலிஸ் குழுவினர், இன்று பிற்பகல் ரிசாத் பதியுதீனின் வீட்டை ஆய்வு செய்துள்ளனர்.
இதன்போது அங்கிருந்து விசாரணை அதிகாரிகள் ஒரு லீட்டர் போத்தலில் மண்ணெண்ணெய் கொண்டு வந்திருப்பதையும் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணையை நடத்திய மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், சிறுமி தன்னை் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு நிராகரிக்கப்படும் என்று கூறியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி தற்கொலை செய்துகொண்டமைக்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரண தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணிக்காக அழைத்து வரப்பட்ட மலையக பெண்கள் 11 பேர் கடுமையான பாலியல் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என திவயின ஊடகம் செய்தி வெளியிட்டிருந்ததுடன்,அவர்களில் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

கொழும்பான் இது பம்பா ஹிந்து பழைய மாணவர், ரேடியோ அறிவிப்பாளர் முகுந்தனா?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் குறித்து தாயிடம் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம்!

16 வயது சிறுமியின் மரணம் – ரிஷாட்டின் மனைவி உள்ளிட்டவர்கள் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவரும் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை நேற்று முன்தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவர்களை 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கமைய, ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அவரின் தந்தை மற்றும் தரகர் ஆகியோரிடம் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் 36 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கொழும்பு தெற்கு குற்றவியல் பிரிவு, கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவு மற்றும் பொரளை பொலிஸார் உட்பட பல்வேறு தரப்பினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, 22 வயதான மற்றுமொரு யுவதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனரும் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 03ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்திருந்தது.

அத்தோடு, சிறுமி தங்கியிருந்த அறையில், எரிந்த பாகங்கள் மீட்கப்பட்டதுடன், அவை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்காக, அரச இரசாயனப் பகுப்பாய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1230642

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட் வீட்டில் முக்கிய சாட்சியங்கள் கண்டுபிடிப்பு!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான பேராசிரியர் முதித்த விதான பத்திரண உள்ளிட்ட அதிகாரிகள், இன்று (25) முதன்முறையாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள், நாளை (26) தினம் நீதிமன்றில் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் மண்ணெண்ணெய் போத்தல் ஒன்றும், லைட்டர் ஒன்றும், எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரு சோடி பாதணி என்பன தொடர்பில், காவல்துறை விசாரணையில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளாகி, சுமார் 20 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதுவரைக் காலமும், அந்த வீட்டில் இருந்த குறித்த வழக்கு பொருட்கள், ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்றிருக்காமை முக்கியமான விடயமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரின் உடலில் 75 சதவீதமான பாகங்கள் எரிந்திருந்ததாகவும், அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய முடியாது போனதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://newuthayan.com/ரிஷாட்-வீட்டில்-முக்கிய/

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஷாலினியின் உடலை மீள தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு..!: 

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனினுடைய இல்லத்தில் பணிக்கமர்க்கப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் உடலை மீள தோண்டியெடுத்து புதிதாக பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேற்படி உத்தரவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அத்தோடு, குறித்த சிறுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அதனடிப்படையில் குறித்த நால்வரையும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

ஹிஷாலினியின் உடலை மீள தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு..!: ரிஷாத்தின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

'மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பாரிய சந்தேகம்': சிறுமியை இருட்டு அறையிஹிஷாலினியின் உடலை மீள தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு..!: 

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனினுடைய இல்லத்தில் பணிக்கமர்க்கப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் உடலை மீள தோண்டியெடுத்து புதிதாக பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேற்படி உத்தரவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அத்தோடு, குறித்த சிறுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அதனடிப்படையில் குறித்த நால்வரையும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

ஹிஷாலினியின் உடலை மீள தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு..!: ரிஷாத்தின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

‘டயகம சிறுமி: 5ஆவது சந்தேகநபர் ரிஷாட்’

தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணத்தில், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனும் சந்தேகநபராக குறிப்பிடப்படலாம் என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு, இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், மேற்கண்டவாறு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

“16 வயதான வீட்டுப் பணியாளரின் மரணம் மற்றும் கடத்தல் தொடர்பாக ரிஷாட் பதியுதீனும் எதிர்காலத்தில் சந்தேக நபராக மாற்றப்படுவார்” என்றும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், நீதிமன்றுக்கு அறிவித்தார்.

இந்த வழக்கில், ரிஷாட் பதியுதீனின் மனைவி,மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரர் சிறுமியை வேலைக்கு சேர்த்த இடைத்தரகர் ஆகிய நால்வரே சந்தேகநபர்களாக  குறிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Tamilmirror Online || ‘டயகம சிறுமி: 5ஆவது சந்தேகநபர் ரிஷாட்’

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமி காயமடைந்து எட்டு நாட்களின் பின் உயிர் இழந்திருக்கிறார். காயம் அசம்பாவிதமானது. ஆனால் வாக்குமூலம் பெற முடியவில்லை என காவற்துறை கூறுகிறது. காவற்துறையினரின் அசமந்தப்போக்கா? அல்லது  வேண்டுமென்றே தவிர்த்தார்களா? ஆனால் மருத்துவர் சிறுமி வாக்குமூலம் கொடுத்ததாக ஒரு தகவல் கொடுத்திருக்கிறார். சிறுமி வாக்குமூலம் கொடுக்கும்போது ஏன் பொலிஸாரை வைத்தியர் அழைக்கவில்லை?  இப்படியான சந்தர்பங்களில் காவற்துறையினர் சிறுமிக்கு  பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டுமே ஏன் அதை செய்யவில்லை? கடைசி றிஷாத்தின் வீட்டாரையாவது விசாரித்திருக்க வேண்டுமே,  ஏன் செய்யவில்லை? சம்பவ இடத்தை ஆராய்ந்திருக்க வேண்டும் ஒன்றும் செய்யாமல் அப்பாவித்தனமாக இல்லையில்லை பொறுப்பில்லாமல் கதை சொல்கிறார்கள். இறந்தது ஏழை வீட்டுப் பெண் ஆயிற்றே. பிரச்சனை ஏதும் வராது மூடி மறைத்து விடலாம் என்று நினைத்தார்களோ என்னவோ? யாரை நம்புவது?  வைத்தியர் ஒரு இஸ்லாமியர் என்பதால் சந்தேகம் எழுவது இயற்கை. தங்கள் மகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய பெற்றவர்களுக்கு உரிமை உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

وَعَنْ أَبِي هُرَيْرَةَ ‏- رضى الله عنه ‏- قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ ‏- صلى الله عليه وسلم ‏-{ مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ اَلدُّنْيَا, نَفَّسَ اَللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ اَلْقِيَامَةِ , وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ, يَسَّرَ اَللَّهُ عَلَيْهِ فِي اَلدُّنْيَا وَالْآخِرَةِ, وَمَنْ سَتَرَ مُسْلِمًا, سَتَرَهُ اَللَّهُ فِي اَلدُّنْيَا وَالْآخِرَةِ, وَاَللَّهُ فِي عَوْنِ اَلْعَبْدِ مَا كَانَ اَلْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ } أَخْرَجَهُ مُسْلِمٌ.‏ 1‏ .‏

“If anyone relieves a Muslim believer from one of the hardships of this worldly life, Allah will relieve him of one of the hardships of the Day of Resurrection. If anyone makes it easy for the one who is indebted to him (while finding it difficult to repay), Allah will make it easy for him in this worldly life and in the Hereafter, and if anyone conceals the faults of a Muslim, Allah will conceal his faults in this world and in the Hereafter. Allah helps His slave as long as he helps his brother.” Related by Muslim.

இந்த உலக வாழ்க்கையின் ஒரு கஷ்டத்திலிருந்து யாராவது ஒரு முஸ்லீம் விசுவாசியை விடுவித்தால், உயிர்த்தெழுதல் நாளின் கஷ்டங்களில் ஒன்றிலிருந்து அல்லாஹ் அவனை விடுவிப்பான். தனக்குக் கடன்பட்டுள்ளவருக்கு யாராவது எளிதாக்கினால் (திருப்பிச் செலுத்துவது கடினம்), அல்லாஹ் இந்த உலக வாழ்க்கையிலும் மறுமையிலும் அவனுக்கு எளிதாக்குவான், மேலும் ஒரு முஸ்லிமின் தவறுகளை யாராவது மறைத்தால், அல்லாஹ் இந்த உலகத்திலும் மறுமையிலும் அவருடைய தவறுகளை மறைக்கவும் செய்வான். அல்லாஹ் தன் சகோதரனுக்கு உதவி செய்யும் வரை தன் அடிமைக்கு உதவுகிறான். ” சஹிஹ்  முஸ்லிம் Book 16, Hadith 1465.

ஆகவே இந்த விவகாரத்தில் முஸ்லிம்களின் குரல்களே உயராது, முடிந்தவரைக்கும் முரட்டுத்தனமாக முட்டுக்கொடுத்தலும் ஆட்,பண,அதிகார பலங்களை பயன்படுத்தி ரிசார்ட்டை காப்பற்றிவிடவுமே முயற்சிப்பார்கள், இந்தியாவில் கொல்லப்பட்ட ஆசிபாவிற்க்காக இலங்கையில் வீதியிலிறங்கிய முஹ்மீன்கள் எல்லோரும் மூடிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதற்கு காரணங்கள்  ஒன்று ஹிஷாலினி ஓர் காபீர் இரண்டு மேலே சொல்லப்பட்ட ஹதீசு  ,
ஆனாலும் இவர்களை விட மகாமுட்டுக்களை புட்டுக்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம், அவர்களுக்கு எப்போதும் தேங்காய்ப்பூக்களிடம் ஒருதலை காதல் அதிகமாகவே உண்டு, ஏன் ரிசார்ட்டுக்கு ஆதரவாக நீதிமன்றில் முன்னிலையானால் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை    

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றில் முன்னிலையாக போய் விடுவார்கள், தாங்கள் யாரென்பதை தாங்களாகவே காட்டிக்கொடுத்ததாகிவிடும். அதனால மூடிக்கொண்டிருக்கினம். இது அரசியல் பழிவாங்கல் என்று  சொல்லி திசை திருப்பி   மூடி மறைப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஷாலினியின் மரணம் – ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த 11 சிறுமிகளிடம் இன்று விசாரணை!

ஹிஷாலினியின் மரணம் – ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த 11 சிறுமிகளிடம் இன்று விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இதற்கு முன்னர் பணிக்கமர்த்தப்பட்ட சிறுமிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் மரணித்த ஹிஷாலினியை ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற தரகரால் முன்னதாக பல சந்தர்ப்பங்களில் 11 சிறுமிகள் பணிக்கு அமர்த்தப்பட்டமை குறித்து நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹிஷாலினியின் மரணம் குறித்து ஆராயும் பொலிஸ் குழு இன்று (செவ்வாய்க்கிழமை) டயகம பகுதியில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இதற்காக அந்த பொலிஸ் குழு நேற்று மாலை கொழும்பில் இருந்து டயகம பகுதிக்கு சென்றுள்ளது.

மேலும் இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த ஏனைய சிறுமிகளிடம் குறித்த குழு வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளது.

https://athavannews.com/2021/1230878

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2021 at 18:42, goshan_che said:

கொழும்பான் இது பம்பா ஹிந்து பழைய மாணவர், ரேடியோ அறிவிப்பாளர் முகுந்தனா?

தெரியவில்லை கோஷன் சிலவேளை இருக்கலாம்.

10 hours ago, அக்னியஷ்த்ரா said:

وَعَنْ أَبِي هُرَيْرَةَ ‏- رضى الله عنه ‏- قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ ‏- صلى الله عليه وسلم ‏-{ مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ اَلدُّنْيَا, نَفَّسَ اَللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ اَلْقِيَامَةِ , وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ, يَسَّرَ اَللَّهُ عَلَيْهِ فِي اَلدُّنْيَا وَالْآخِرَةِ, وَمَنْ سَتَرَ مُسْلِمًا, سَتَرَهُ اَللَّهُ فِي اَلدُّنْيَا وَالْآخِرَةِ, وَاَللَّهُ فِي عَوْنِ اَلْعَبْدِ مَا كَانَ اَلْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ } أَخْرَجَهُ مُسْلِمٌ.‏ 1‏ .‏

“If anyone relieves a Muslim believer from one of the hardships of this worldly life, Allah will relieve him of one of the hardships of the Day of Resurrection. If anyone makes it easy for the one who is indebted to him (while finding it difficult to repay), Allah will make it easy for him in this worldly life and in the Hereafter, and if anyone conceals the faults of a Muslim, Allah will conceal his faults in this world and in the Hereafter. Allah helps His slave as long as he helps his brother.” Related by Muslim.

நீங்க(ள்)(ளும்) சும்மா எல்லாம் தெரியும் என்ற மாதிரி அடிச்சு விடுகின்றீர்களோ என்று செக் பண்ணிப் பார்க்க கூகிள் மூலம் அரபியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துப் பார்த்தால்... நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கின்றது. 

மனோ கணேசனின் முகனூலில் மனோ இந்த சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று எழுதும் எல்லா பதிவுகளுக்கும் முஸ்லிம்களில் பலர் வந்து மிக மோசமாக மனோவை திட்டியும், ரிஷாட்டிற்கு வக்காலத்து வாங்கியும், மலையக தமிழ் மக்களை கேவலமாக விமர்சித்தும் பதில் எழுதி வருகின்றனர். அதற்கான காரணம் நீங்கள் மேலே குறிப்பிட்டதில் தெளிவாக தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2021 at 11:46, goshan_che said:

அவர் இறக்கும் முன் கொடுத்ததாக ஒரு பொய் வாக்குமூலமும் தயார் என்று கேள்வி.

12 hours ago, satan said:

வைத்தியர் ஒரு இஸ்லாமியர் என்பதால் சந்தேகம் எழுவது இயற்கை

நான் அறிந்தவரையில் இதுதான் நடக்கிறது😡.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

وَعَنْ أَبِي هُرَيْرَةَ ‏- رضى الله عنه ‏- قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ ‏- صلى الله عليه وسلم ‏-{ مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ اَلدُّنْيَا, نَفَّسَ اَللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ اَلْقِيَامَةِ , وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ, يَسَّرَ اَللَّهُ عَلَيْهِ فِي اَلدُّنْيَا وَالْآخِرَةِ, وَمَنْ سَتَرَ مُسْلِمًا, سَتَرَهُ اَللَّهُ فِي اَلدُّنْيَا وَالْآخِرَةِ, وَاَللَّهُ فِي عَوْنِ اَلْعَبْدِ مَا كَانَ اَلْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ } أَخْرَجَهُ مُسْلِمٌ.‏ 1‏ .‏

“If anyone relieves a Muslim believer from one of the hardships of this worldly life, Allah will relieve him of one of the hardships of the Day of Resurrection. If anyone makes it easy for the one who is indebted to him (while finding it difficult to repay), Allah will make it easy for him in this worldly life and in the Hereafter, and if anyone conceals the faults of a Muslim, Allah will conceal his faults in this world and in the Hereafter. Allah helps His slave as long as he helps his brother.” Related by Muslim.

இந்த உலக வாழ்க்கையின் ஒரு கஷ்டத்திலிருந்து யாராவது ஒரு முஸ்லீம் விசுவாசியை விடுவித்தால், உயிர்த்தெழுதல் நாளின் கஷ்டங்களில் ஒன்றிலிருந்து அல்லாஹ் அவனை விடுவிப்பான். தனக்குக் கடன்பட்டுள்ளவருக்கு யாராவது எளிதாக்கினால் (திருப்பிச் செலுத்துவது கடினம்), அல்லாஹ் இந்த உலக வாழ்க்கையிலும் மறுமையிலும் அவனுக்கு எளிதாக்குவான், மேலும் ஒரு முஸ்லிமின் தவறுகளை யாராவது மறைத்தால், அல்லாஹ் இந்த உலகத்திலும் மறுமையிலும் அவருடைய தவறுகளை மறைக்கவும் செய்வான். அல்லாஹ் தன் சகோதரனுக்கு உதவி செய்யும் வரை தன் அடிமைக்கு உதவுகிறான். ” சஹிஹ்  முஸ்லிம் Book 16, Hadith 1465.

ஆகவே இந்த விவகாரத்தில் முஸ்லிம்களின் குரல்களே உயராது, முடிந்தவரைக்கும் முரட்டுத்தனமாக முட்டுக்கொடுத்தலும் ஆட்,பண,அதிகார பலங்களை பயன்படுத்தி ரிசார்ட்டை காப்பற்றிவிடவுமே முயற்சிப்பார்கள், இந்தியாவில் கொல்லப்பட்ட ஆசிபாவிற்க்காக இலங்கையில் வீதியிலிறங்கிய முஹ்மீன்கள் எல்லோரும் மூடிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதற்கு காரணங்கள்  ஒன்று ஹிஷாலினி ஓர் காபீர் இரண்டு மேலே சொல்லப்பட்ட ஹதீசு  ,
ஆனாலும் இவர்களை விட மகாமுட்டுக்களை புட்டுக்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம், அவர்களுக்கு எப்போதும் தேங்காய்ப்பூக்களிடம் ஒருதலை காதல் அதிகமாகவே உண்டு, ஏன் ரிசார்ட்டுக்கு ஆதரவாக நீதிமன்றில் முன்னிலையானால் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை    

இந்த வைத்தியர் ஏன் இப்படி காப்பாற்ற முயல்கிறார் என்பதற்கான விளக்கமும், யாழில் ரிசாத்தை குற்றமற்றவர் என நிறுவ குத்தி முறியும் காரணமும் மேலே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

நான் முஸ்லீம்களின் எதிரி அல்ல, அவர்களை வெறுப்பவனும் அல்ல - ஆனால் இந்து சமயத்தில் சாதிய முறைமையை சாடுவது போல, முஸ்லிம்களின் இப்படியான விடயங்களையும் சொல்லியே ஆக வேண்டும்.

எனது மார்க்கதை பழிக்கிறார், இனவாதம் பேசுகிறார் என என்ன சொன்னாலும் - உண்மை உண்மைதான்.

நம்பிக்கை இல்லாதவன் உயிர் முஸ்லிமின் உயிருக்கு சமனானது இல்லை. பாலியல் அடிமைகளை வைத்திருக்கலாம் போன்ற கற்கால கொள்கைகளை மாற்றவே முடியாது என்று அடம்பிடிப்பவர்கள் - இதை ஒரு முஸ்லீம் ஒரு நம்பிக்கை இல்லாத பாலியல் அடிமை மீது செய்த ஏற்கத்தக்க செயல் என்று கருதுவதாலோ என்னமோ அவர்களுக்கு இந்த அபலைச் சிறுமி மீது அனுதாபம் பிறக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரிசாதத்தின் மாமனாரும் , மச்சானும் தான் இதில் நேரடியாய் சம்மந்தப்பட்டு இருப்பினம் ...அவர்கள் வெளியே வந்தால் மகிந்தா சகோதரர்களை விட அப்பாடக்கிகளாய்  இருக்கோணும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

நீங்க(ள்)(ளும்) சும்மா எல்லாம் தெரியும் என்ற மாதிரி அடிச்சு விடுகின்றீர்களோ என்று செக் பண்ணிப் பார்க்க கூகிள் மூலம் அரபியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துப் பார்த்தால்... நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கின்றது.

நீங்களும் முஸ்லிம் மத போதனைகளை கடைபிடித்தால் அன்பும் அமைதியும் பொங்கும் என்று தமிழ் அரசியல்வாதிகள் யாராவது சொன்ன பொய்களை நம்பிக்கொண்டு இருந்திருப்பீர்கள் விளங்க வைத்த அக்னியஷ்த்ராவுக்கு நன்றி.

7 hours ago, goshan_che said:

நம்பிக்கை இல்லாதவன் உயிர் முஸ்லிமின் உயிருக்கு சமனானது இல்லை. பாலியல் அடிமைகளை வைத்திருக்கலாம் போன்ற கற்கால கொள்கைகளை மாற்றவே முடியாது என்று அடம்பிடிப்பவர்கள் - இதை ஒரு முஸ்லீம் ஒரு நம்பிக்கை இல்லாத பாலியல் அடிமை மீது செய்த ஏற்கத்தக்க செயல் என்று கருதுவதாலோ என்னமோ அவர்களுக்கு இந்த அபலைச் சிறுமி மீது அனுதாபம் பிறக்கவில்லை.

நுறுவீதம் உண்மை. மதம் சொல்லிவிட்டதால் அதை கடைசிவரை கடைபிடிக்க வேண்டும் என்ற நிலைபாடு.
ரிஷாட்டை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் அவர் மீது அனுதாபம், பரிவு. குற்றம் சாட்டுபவர்கள் மீது திட்டுதல். அந்த மதபோதனை தான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவர்  அப்படி ஒரு அறிக்கை தயாரித்ததற்கும் அல்லாஹ்வின் போதனைதான் காரணமாய் இருக்குமோ? நானும் இனம், பணம் சார்ந்து செய்திருக்கலாம் என நினைத்தேன். அப்படியெனில் அவர் மருத்துவராக  எப்படி  சேவை செய்ய முடியும்? அவர் அல்லாஹ்வின் மத போதகராக இருக்கவே தகுதியுள்ளவர். தனக்கொரு  நீதி மற்றவருக்கொரு நீதி  சொல்லும் மதம் உண்மையானதா? அப்படியெனில் இஸ்லாம் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளும்கூட  இதே அடிப்படையிலேதானே  இருக்கும் என்றொரு சந்தேகம் எழுகிறதே? 

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு

சிறுமியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டப்படும் – மயானத்தில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு

சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை எதிர்வரும் தினங்களில் தோண்டி எடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டுள்ள பொது மயானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஹிஷாலினியின் பெற்றோர்கள் கொழும்பிலுள்ள மனித உரிமை திணைகளத்தில் நேற்று முறைபாடு ஒன்றினை பதிவு செய்தனர்.

குறித்த முறைப்பாட்டில், தனது மகளுக்கு பல்வேறு அநீதிகள் இடம்பெற்றதாகவும் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்” என வலியுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்தே சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை  மீண்டும் தோண்டி எடுப்பதற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த உத்தரவுக்கமைய இன்றும் சிறுமியின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்களை திரட்டும் பொருட்டு, கொழும்பு வடக்கு பிரதேச குற்ற புலனாய்வு பிரிவு, நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர், டயகம பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழு விசேட விசாரணைகளை மேற்கொண்டன.

இந்நிலையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்ட ஹிஷாலினியின் சடலம், எதிர்வரும் தினங்களில் தோண்டி எடுக்கப்படுமென டயகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1231048

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த ஏனைய 10 பெண்கள் குறித்து பொலிஸ் வெளியிட்ட தகவல்!

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த ஏனைய 10 பெண்கள் குறித்து பொலிஸ் வெளியிட்ட தகவல்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2010ஆம் ஆண்டு முதல் மேலும் 10 பெண்கள் பணியாற்றியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த 10 பேரும் டயகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய 5 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் மரணித்த ஹிஷாலினியை ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற தரகரால் முன்னதாக பல சந்தர்ப்பங்களில் பல சிறுமிகள் பணிக்கு அமர்த்தப்பட்டமை குறித்து நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹிஷாலினியின் மரணம் குறித்து ஆராயும் பொலிஸ் குழு நேற்று முன்தினம் முதல் டயகம பகுதியில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இதன்போது, ஹிஷாலினியின் பெற்றோர் உள்ளிட்டவர்களிடமும் குறித்த குழு வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1231271

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தரகர் பொன்னையர் பண்டாரம் ஏழைப்பிள்ளைகளை விற்று தன் வங்கிக்கணக்கை நிரப்பி கொழுத்திருக்குது. அதுக்கு  போடுற போட்டில் எல்லாம் கக்கவேண்டும்.  அவனுக்கு மரண தண்டனை கொடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, satan said:

அந்த தரகர் பொன்னையர் பண்டாரம் ஏழைப்பிள்ளைகளை விற்று தன் வங்கிக்கணக்கை நிரப்பி கொழுத்திருக்குது. அதுக்கு  போடுற போட்டில் எல்லாம் கக்கவேண்டும்.  அவனுக்கு மரண தண்டனை கொடுக்கவேண்டும்.

அதுகும்…. ரிஷாட் பதியுதீன் வீட்டில் கொண்டு போய் பல சிறுவர்களை சேர்த்திருக்குது. அதில சிலர் மரணமடைந்த சோகத்தை… என்ன செய்வது. 

  • கருத்துக்கள உறவுகள்

'ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 3 இளம்பெண்கள் மரணம், 3 பேர் பாலியல் வன்கொடுமை' - இலங்கை காவல்துறை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ரிஷாட் பதியுதீன்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், மர்மமான முறையில் தீ காயங்களுடன் உயிரிழந்த சிறுமி தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 40 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி போலீஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

இதேவேளை, ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2009ம் ஆண்டு முதல் இதுவரையான காலம் வரை 11 யுவதிகள் பணிப் பெண்களாக கடமையாற்றியுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த அனைத்து பணிப் பெண்களும், ஒரே இடைத்தரகரின் மூலம் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளமையும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக அஜித் ரோஹண கூறுகின்றார்.

இவ்வாறு பணியாற்றிய 11 பேரில், மூவர் வெவ்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், மற்றைய யுவதி புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

காதலனுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக யுவதியொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், மற்றுமொரு பெண் நோய் ஒன்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் ரிஷாட் பதியுதீனின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.ஜே.எம்.பாயிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் மர்மமான முறையில் தீ காயங்களுடன் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் பொய்யான விடயங்களை பரப்பி, குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள சிலர் முயற்சித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

மூன்றாவதாக இறந்த சிறுமி, மர்மமான முறையில் தீ காயங்களுடன் உயிரிழந்துள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய எஞ்சிய 8 பேரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மூன்று யுவதிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

தீ காயங்களுடன் அண்மையில் உயிரிழந்த சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை, முதலாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

அதேபோன்று, ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரனினால், தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட 22 வயதான யுவதியொருவர் தெரிவித்திருந்தார்.

'ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணியாற்றிய 3 இளம்பெண்கள் இதுவரை மரணம்' - இலங்கை காவல்துறை
 
படக்குறிப்பு,

சித்தரிக்கும் படம்

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரன் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 9ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மற்றுமொரு யுவதியிடம் போலீஸார் நேற்று (01) வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

கொழும்பு - பொரள்ளை - பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள ரிஷாட் பதியுதீனின் வீpட்டில் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் தானும், முன்னாள் அமைச்சரின் மனைவியின் சகோதரனினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக நேற்யை தினம் வாக்குமூலம் வழங்கிய யுவதி தெரிவித்துள்ளார்.

இந்த யுவதியினால் குற்றஞ்சுமத்தப்படும் சந்தேகநபர், இதேபோன்றதொரு மற்றுமொரு குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், மூன்று யுவதிகள் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மூன்று யுவதிகள் உயிரிழந்துள்ளதுடன், மூன்று யுவதிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில், கடந்த 3ம் தேதி தீ காயங்களுடன் மர்மமான முறையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, கடந்த 15ம் தேதி உயிரிழந்திருநதார்.

இவ்வாறான நிலையில், சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்து, சடலம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலம் கடந்த 30ம் தேதி தோண்டி எடுக்கப்பட்டது.

தோண்டி எடுக்கப்பட்ட சடலம் பேராதனை போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மூவர் அடங்கிய விசேட மருதுத்துவ குழாமினால் 31ம் தேதி இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

இலங்கை முன்னாள் அமைச்சர் வீட்டில் இறந்த சிறுமி: தோண்டி எடுக்கப்பட்ட உடல்

பட மூலாதாரம்,KRISHANTHAN

முதற்கட்டமாக சடலம் மீது சி.டி ஸ்கேன் நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

உடலில் உள்ளக காயங்கள் அல்லது எலும்பு முறிவு காணப்படுகின்றனவா என்பதை கண்டறிவதற்காகவே, சி.டி ஸ்கேன் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்தும், சந்தேகிக்கப்படும் சிறுமியின் உடல் பாகங்களின் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவை ஆய்வு கூட பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

ஆய்வு கூட அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து, சடலம் மீதான இரண்டாம் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தயாரிக்கபபட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

ரிஷாட் பதியுதீனின் கட்சி அறிக்கை

ரிஷாட் பதியூதீன் தொடர்பில் வெளிவரும் தகவல்களை தெளிவூட்டும் வகையில் ரிஷாட் பதியுதீனின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.ஜே.எம். பாயிஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

டயகம பகுதியிலிருந்து 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி இறந்த சிறுமி தரகரொருவரின் மூலம் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், அவரை அனைவரும் இசானி என்றே அழைத்துள்ளதாகவும்தாக்க அவர் கூறியுள்ளார்.

18 வயது பூர்த்தியாகியதாக தெரிவித்தே, அவர் வேலைக்கு சேர்க்கப்பட்டதாக கூறியுள்ள அவர், தீ காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதன் பின்னரே, அவரது பிறந்த தேதி உறுதிப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.

இவர் வேலைக்கு அமர்த்தப்படும் போது, அவருக்கு 16 வருடங்களும், 6 நாட்களும் என்பது உறுதியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அவரை இன்றும் சிலர் சிறுமி என அடையாளப்படுத்தி, குற்றஞ்சுமத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு வருகைத் தரும் போது, ரிஷாட் பதியுதீன் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும், தீ காயங்கள் ஏற்பட்ட தருணத்திலும் ரிஷாட் பதியுதீன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுப்பு காவலில் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், தமது வீட்டு உறவினர்களுடன் உரையாடுவதற்கு அனைத்து தருணங்களிலும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக கூறியுள்ள ஏ.ஜே.எம்.பாயிஸ், அது தொலைபேசி அறிக்கையின் ஊடாக உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, அந்த சிறுமி தங்குவதற்கு, ரிஷாட் பதியுதீனின் மனைவியினால் அனைத்து வசதிகளும், எந்தவித குறைபாடுகளும் இன்றி செய்துக்கொடுக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய இளம்பெண்களின் மரணம்: இலங்கை காவல்துறை தகவல்

பட மூலாதாரம்,KRISHANTHAN

மேலும், ஹிஷாலினி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு வருகை தருவதற்கு முன்னரே, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை, பிரேத பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளதாக பாயிஸ் குறிப்பிடுகின்றார்.

குறித்த வீட்டில், சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதற்கான எந்தவொரு பின்புலமும் இருக்கவில்லை என கூறியுள்ள அவர், அவ்வாறு இடம்பெற்றிருப்பின் அது தொடர்பில் மரபணு பரிசோதனை மூலம் தகவல் வெளியாகி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வீட்டில் ஏற்கனவே இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக போலீஸார் வெளியிட்ட தகவல் குறித்தும், பாயிஸ் தனது அறிக்கையில் தெளிவூட்டியுள்ளார்.

காதலனுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக யுவதியொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும், மற்றுமொரு பெண் நோய் ஒன்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அரசியல் பயணத்தை தடுப்பதற்கும், அவரது நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்துவதற்கும் சதியொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.ஜே.எம்.பாயிஸ் தெரிவித்துள்ளார்.

யுவதிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் விசாரணை

சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் அதேவேளை, ரிஷாட் பதியுதீனின் வீட்டில் யுவதிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரனும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கோரி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

https://www.bbc.com/tamil/sri-lanka-58059331

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

இவர் வேலைக்கு அமர்த்தப்படும் போது, அவருக்கு 16 வருடங்களும், 6 நாட்களும் என்பது உறுதியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அவரை இன்றும் சிலர் சிறுமி என அடையாளப்படுத்தி, குற்றஞ்சுமத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

என்னதான் இவரது பிரச்சனை? அந்தப்பெண்ணை சிறுமி என்று கூறுவதுதான் இவரது பிரச்சனையா?  றிஷாட்டின் மைத்துனர் ஏற்கெனவே பெண் பாலியல் குற்றசாட்டில் தண்டனை அனுபவித்தவர் என்று காவற்துறை தெரிவித்துள்ளது.

17 hours ago, ஏராளன் said:

சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரனும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் அறிக்கை விடுவதற்கு பதிலாக காவற்துறைக்கு எதிராக நீதிமன்றம் போகலாமே?

17 hours ago, ஏராளன் said:

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அரசியல் பயணத்தை தடுப்பதற்கும், அவரது நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்துவதற்கும் சதியொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.ஜே.எம்.பாயிஸ் தெரிவித்துள்ளார்.

ஐயோ பாவமே ஐயோ பாவமே ஏ.ஜே.எம்.பாயிஸ்! நாட்டில என்ன நடக்குது என்றே தெரியாமல் இருக்கிறார். இதை அரசாங்கத்திடம் அழைப்பெடுத்து கேட்கலாமே? ஏற்கெனவே அவருக்கு நல்ல பெயர் அதனாற்தான் அடிக்கடி சிறை செல்கிறார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.