Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கௌதாரிமுனை மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் - அமைச்சர் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கௌதாரிமுனை காணி பகிர்ந்தளிப்பில் மக்கள் வெற்றி பெற்றுள்ளதாக  தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் போலி அரசியலை மக்கள் புரிந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No description available.

அண்மையில் கௌதாரிமுனை கிராமத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியிட்ட கருத்துக்களை பொருட்படுத்தாமல், நூற்றுக்கு மேற்பட்ட கௌதாரிமுனை மக்கள் இன்று(28-07-2021) ஆர்வத்துடன் வயல்காணிகளுக்கு விண்ணப்பம் செய்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கடந்த திங்கட்கிழமை மண்ணித்தலை சிவன்கோவில் முன்னால் இறங்குதுறையடியில் மக்கள் சந்திப்பை நடத்தி, கடலட்டைப் பண்ணைகளையோ வயல்காணிகளையோ பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கௌதாரி முனை மக்களை மிரட்டியிருந்தார். 

எனினும், அவரது எதிர்ப்புக்கூட்டம் நடைபெற்ற அன்றே, அவரது கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், கடலட்டைப் பண்ணைகளுக்காக முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள், நக்டா நிறுவன அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் பிரதிநிதிகளுடன் கடலுக்குச் சென்று கடலட்டைப் பண்ணைகளை அளவிட்டு எல்லையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

எல்லை அளவீட்டுப் பணிகள் நிறைவடைந்தவுடனேயே, பயனாளிகளுக்கான ஒரு தொகுதி வலைகளையும் கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, கௌதாரிமுனை கிராமசேவையாளர் அலுவலகத்தில் இன்று பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன், அமைச்சரின் மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர் இராசலிங்கம் ஆகியோருடன், காணி அதிகாரி, கிராமசேவையாளர் உள்ளிட்ட குழுவினர் வயல்காணிகளுக்கான பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

வயல் காணிகளைப் பெற்றுத் தருமாறு ஏற்கனவே சுமா் 91 பயனாளிகள் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்றையதினம் மேலும் பல பயனாளிகள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்களைச் சமர்ப்பித்ததால், 114 பேர் வயல்காணிகளுக்கான விண்ணப்பங்களைச் செய்திருந்தனர். 

No description available.

இவர்களுடைய விபரங்களைத் திரட்டிய கௌதாரிமுனை கிராம சேவையாளர் மற்றும் பூநகரி பிரதேச செயலக அலுவலர்கள் விரைவில் பட்டியலை ஆய்வு செய்து வயல்காணி வழங்குவதற்கு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் விபரத்தை வெளியிடுவர். 

ஏற்கனவே, கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா,  இதற்கான ஆலோசனைகளை மாவட்டச் செயலாளருக்கும் வழங்கியிருப்பதால், விரைவில் காணிப் பயன்பாட்டுக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்று பயனாளிகளுக்குரிய காணிகள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு, காலபோகச் செய்கையில் ஈடுபட வகைசெய்துகொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை,  வயல் செய்கைக்கென கமநலசேவைத் திணைக்களத்தின் ஊடாக இரண்டு உழவு இயந்திரங்களை வழங்கவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கௌதாரிமுனை மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் - அமைச்சர் டக்ளஸ் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2021 at 06:17, putthan said:

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்🤣

அண்ணை வடக்கில டக்கிளஸக் கொண்டும், கிழக்கில கருணாவைக் கொண்டும் தமிழரின்ர இருப்பை வேதறுக்கிறது எண்டது மகிந்த சகோதரர்களின்ர போஸ்ட் வோர் அஜெண்டா. கருணாவும் டக்கிளஸும் இது தெரிஞ்சும் தங்கட வயிறும் பொக்கெட்டும் நிறைஞ்சால் காணும் எண்டு செய்யிறாங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு மக்களின் வெற்றி, அபிவிருத்தி, விடியல் எண்டு நிறைய அவியல் வைச்சிருக்கிறாங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

அண்ணை வடக்கில டக்கிளஸக் கொண்டும், கிழக்கில கருணாவைக் கொண்டும் தமிழரின்ர இருப்பை வேதறுக்கிறது எண்டது மகிந்த சகோதரர்களின்ர போஸ்ட் வோர் அஜெண்டா. கருணாவும் டக்கிளஸும் இது தெரிஞ்சும் தங்கட வயிறும் பொக்கெட்டும் நிறைஞ்சால் காணும் எண்டு செய்யிறாங்கள். 

தமிழ் மக்களுக்கு ஒரு புது தலமை வரப்போகுதாம் என்று சிலர் கனவு காண்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, putthan said:

தமிழ் மக்களுக்கு ஒரு புது தலமை வரப்போகுதாம் என்று சிலர் கனவு காண்கிறார்கள்

நீங்கள் பிள்ளையானை வைச்சு காமெடீ கீமெடி ஒண்டும் பண்ணேல்லைத்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

நீங்கள் பிள்ளையானை வைச்சு காமெடீ கீமெடி ஒண்டும் பண்ணேல்லைத்தானே?

அந்த கோஸ்டி தலைவருக்கு ஆயுதம் மட்டும் தான் தெரியுமாம் .......

இந்த புதுதலமை முன்னாள் புரட்சி முத்து ...ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று சொன்ன புரட்சிவாதியின் விசிறி .....அதையும் நம்பும் எம்மவர்கள் 

5 hours ago, ரஞ்சித் said:

அதுக்கு மக்களின் வெற்றி, அபிவிருத்தி, விடியல் எண்டு நிறைய அவியல் வைச்சிருக்கிறாங்கள். 

அப்ப தமிழ் அமைச்சர்கள் மக்களுக்கு எந்த நல்ல அபிவிருத்தி திட்டங்களையும் கொண்டு வரக்கூடாது என்று சொல்கின்றீர்களா ரஞ்சித் + புத்தன்? அல்லது நிரந்தர தீர்வு வரும் வரைக்கும் எந்த சிறு அபிவிருத்தி திட்டங்களையும் நடைமுறைப்படுத்தக் கூடாதா?

வடக்கு மாகாண சபையும், ரணிலுக்கு 5 வருடங்கள் முண்டு கொடுத்துக் கொண்டு இருந்த கூத்தமைப்பும் எதுவுமே உருப்படியாக செய்யாமல் டக்கிளசுக்கும் பிள்ளையானுக்கும் அரசியல் நடத்தக் கூடிய வெளிய ஏற்படுத்தி மக்களை அவர்கள் பால் தள்ளி விட்டனர். மக்களும் தமக்கு எவர் குத்தியாவது கொஞ்சமே கொஞ்சமாக அரிசி வந்தால் கூட காணும், அதை வைத்து முன்னேறலாம் என்று முயல்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

மக்களுக்கு சிறிய ஒரு நண்மையாவது கிடைக்குமென்றால் அதை நான் தவறென்று நினைக்கவில்லை. ஆனால் நான் சொல்ல வந்தது, டக்கிளஸும் கருணாவும் செய்யும் அரசியலைத்தான். அதாவது போரின்பின்னரான சிங்கள ஆக்கிரமிப்புத் திட்டத்தினை தமிழர் தாயகத்தில் சிங்களம் இவர்கள் மூலமாகத்தான் முன்னெடுக்கிறது என்பதையே சொல்லவந்தேன்.

வடக்கில் மக்களுக்கு சிங்கள அரசின் முகவர்கள் மூலம் உதவிகள்சில கிடைக்கிறதென்பதும், கிழக்கில் அதே முகவர்களினால் சில அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதும் ஒரே திட்டத்தினால் நடத்தப்படுபவைதான்.

நீங்கள் கூறும் அரசியல்த் தீர்வென்பது ஒருநாளும் கிடைக்கப்போவதில்லை. அதனை எவருமே தரப்போவதுமில்லை. சிங்களம் செய்வதெல்லாம் தமிழர்களை தொடர்ச்சியாக தம்மிடம் கையேந்தி நிற்கும் நிலையினை உருவாக்குவதுதான். இதன் ஒரு அங்கம்தான் இந்த சிறு உதவிகள். இவை ஒருநாளுமே மக்களின் அன்றாடத் தேவைகளை முற்றாகப் பூர்த்திசெய்யப்போவதில்லை. யானைப்பசிக்குச் சோளப்பொறிபோல சில பிச்சைகளை போட்டுக்கொண்டு எம்மை தம்மில் முற்றாகத் தங்கியிருக்கும் நிலைக்கு மாற்றுகிறார்கள்.

வடக்கில் எமது நிலங்களும் கடல்வலமும் அபகரிக்கப்படுவதும், கிழக்கில் மேய்ச்சல் தரைகள் ஆக்கிரமிக்கப்படுவதும் இந்த சிறிய "உதவிகள்" ஊடாக மறைக்கப்பட்டுவிடும். மக்களுக்கு சிறிய ஒரூதவியினைக் காட்டிக்கொண்டு பின்னால் அவர்கள் அறியாமலேயே அவர்களின் தாயகம் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது

இந்தச் சிறிய உதவிகள் மக்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்திசெய்யப்போவதில்லை. மாகாண சபைகளை முடக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தனது முகவர்கள் மூலம் பிச்சைபோடும் ஒரு ஆக்கிரமிப்பு அரசு மக்களின் நலனிலும் இருப்பிலும் அக்கறை கொள்ளும் என்பதை நான் நம்பவில்லை நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம்.. சீனாவுக்கு கடலட்டை கம்பனி அமைக்க ஏக்கர் கணக்கில் அள்ளி வழங்கினது மக்களே அமோக வெற்றி தான்.

ஏலவே உள்ளூர் முதலீட்டாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு.. போரால் சிதைவடைந்த இத்தொழிலை உள்ளூர் மக்களை கொண்டே ஆரம்பித்திருந்தால்.. அது வெற்றி.. காணி இழப்பும் இல்லை அந்நிய ஊடுருவலும் இல்லை.

எவ்வளவோ இடர் வந்த போதும்.. சுனாமியின் போதும் கூட அமெரிக்கனை சொந்த மண்ணுக்குள் அனுமதிக்காத தலைமை எங்க.. இந்த எலும்பு பொறுக்கிகள் எங்க. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

அப்ப தமிழ் அமைச்சர்கள் மக்களுக்கு எந்த நல்ல அபிவிருத்தி திட்டங்களையும் கொண்டு வரக்கூடாது என்று சொல்கின்றீர்களா ரஞ்சித் + புத்தன்? அல்லது நிரந்தர தீர்வு வரும் வரைக்கும் எந்த சிறு அபிவிருத்தி திட்டங்களையும் நடைமுறைப்படுத்தக் கூடாதா?

வடக்கு மாகாண சபையும், ரணிலுக்கு 5 வருடங்கள் முண்டு கொடுத்துக் கொண்டு இருந்த கூத்தமைப்பும் எதுவுமே உருப்படியாக செய்யாமல் டக்கிளசுக்கும் பிள்ளையானுக்கும் அரசியல் நடத்தக் கூடிய வெளிய ஏற்படுத்தி மக்களை அவர்கள் பால் தள்ளி விட்டனர். மக்களும் தமக்கு எவர் குத்தியாவது கொஞ்சமே கொஞ்சமாக அரிசி வந்தால் கூட காணும், அதை வைத்து முன்னேறலாம் என்று முயல்கின்றனர்.

மறுக்க முடியாத உண்மைதான் நிழலி அவர்களே! "கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொள்ளும்". எங்கள் தமிழ் மண்ணில் பாம்பு குடிகொள்ளுது, குடிகொள்வதை எந்தக் கண்ணாடி கண்ணில்படாது மறைக்கிறது.?? 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

அப்ப தமிழ் அமைச்சர்கள் மக்களுக்கு எந்த நல்ல அபிவிருத்தி திட்டங்களையும் கொண்டு வரக்கூடாது என்று சொல்கின்றீர்களா ரஞ்சித் + புத்தன்? அல்லது நிரந்தர தீர்வு வரும் வரைக்கும் எந்த சிறு அபிவிருத்தி திட்டங்களையும் நடைமுறைப்படுத்தக் கூடாதா?

வடக்கு மாகாண சபையும், ரணிலுக்கு 5 வருடங்கள் முண்டு கொடுத்துக் கொண்டு இருந்த கூத்தமைப்பும் எதுவுமே உருப்படியாக செய்யாமல் டக்கிளசுக்கும் பிள்ளையானுக்கும் அரசியல் நடத்தக் கூடிய வெளிய ஏற்படுத்தி மக்களை அவர்கள் பால் தள்ளி விட்டனர். மக்களும் தமக்கு எவர் குத்தியாவது கொஞ்சமே கொஞ்சமாக அரிசி வந்தால் கூட காணும், அதை வைத்து முன்னேறலாம் என்று முயல்கின்றனர்.

மிகவும்  கடினமான  கேள்வி??

பதில் சொல்வதும்  கடினம்??

தோல்வி  கண்ட  ஒரு  இனத்திடம்

அதிலும்  முடிந்ததற்கும் மேலாக  அனைத்தையும்  கொடுத்து எதிர்த்துபோராடி  தோல்வி  கண்ட ஒரு  இனத்திடம்????

13 hours ago, ரஞ்சித் said:

இந்தச் சிறிய உதவிகள் மக்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்திசெய்யப்போவதில்லை. மாகாண சபைகளை முடக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தனது முகவர்கள் மூலம் பிச்சைபோடும் ஒரு ஆக்கிரமிப்பு அரசு மக்களின் நலனிலும் இருப்பிலும் அக்கறை கொள்ளும் என்பதை நான் நம்பவில்லை நிழலி.

நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை ரஞ்சித்.

மக்களுக்கு ஆசுவாசப்படுவதுக்கும் முற்றாகச் சிதைந்து போயிருக்கும் பொருளாதார பலத்தை கொஞ்சமேனும் உயர்த்திடவும் கிடைக்கும் வாய்ப்புகள் இவை. இது ஒரு போதும் பொருளாதார தன்னிறைவைத் தராது. ஆயினும் கடுமையான உழைப்பாளிகளான என் மக்கள் ஓரளவுக்கேனும் மேலே உயர இது உதவலாம்.

சிங்களம் டக்கி, கருணா, பிள்ளையான் போன்றவர்களை தம் ஏஜெண்ட்டுகளாக அமர்த்தி காரியம் சாதித்ததன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டது. தமிழ் அறவே கதைக்கத்தெரியாத ஒரு சிங்களவரை வடக்கின் செயலாளராக நியமித்து தன் அடுத்த கட்டத்தை ஆரம்பித்து இருக்கு. இனி யாழ் அரச அதிபராக ஒரு சிங்களவரை நியமிக்கும் நிலைக்கு போகும். சிங்களம் தன் அஜெண்டாவில் சரியாக இருக்கு. அதை முறியடிக்கும் அரசியல் பலமோ, சர்வதேச சக்திகளின் ஆதரவோ எம் மக்களுக்கு கொஞ்சம் கூட இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரஞ்சித் said:

இந்தச் சிறிய உதவிகள் மக்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்திசெய்யப்போவதில்லை. மாகாண சபைகளை முடக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தனது முகவர்கள் மூலம் பிச்சைபோடும் ஒரு ஆக்கிரமிப்பு அரசு மக்களின் நலனிலும் இருப்பிலும் அக்கறை கொள்ளும் என்பதை நான் நம்பவில்லை

ரஞ்சித்தின்  இந்த கருத்து 100% உண்மையானதுதான் அதேவேளை எந்த வளங்களும்  போய் வர தெருகூட இல்லாத அந்த பிரதேசத்து வறிய  மக்கள் நிச்சயமாக தமக்கு கிடைக்கும் வாய்ப்புக்களையெல்லாம் அரசியலை பற்றி சிந்திக்காமல் பயன்படுத்தவே பார்ப்பார்கள்.

 அவர்கள் தமது பொருளாதாரத்தை ஓரளவாவது மேம்படுத்த இது உதவும் என்று நம்பினால் அதனை பெற்றுக்கொள்ளட்டும், தேர்தல்களின்போது டக்ளசுக்கு வாக்களிக்காமல் விட்டால் போதும்.

அவர்கள் அரசியல் செய்தால் அவர்கள் பாணியிலேயே இவர்களும் அரசியல் செய்யலாம் தப்பில்லை.

எமது பிரதேசத்தில் டக்ளஸ் போன்ற அரச முகவர்களால் சும்மா ஒப்புக்காவது காண்பிக்கப்படும் சிறு சிறு திட்டங்களை புறக்கணித்தால் காலபோக்கில்  சிங்களவர்களின் ஒரேநாடு ஒரே சட்டம் என்ற ஆக்கிரமிப்பு கொள்கையின்படி அப்பிரதேசங்களை முஸ்லீம்கள், சிங்களவர்கள் அரச தொழில் முயற்சி என்ற பெயரில் அபகரிக்ககூடும், அதுக்கப்புறம் எந்த காலமும் அந்த பிரதேசங்கள் எம் கைக்கு வராது.

வடபகுதியில் வாழ்ந்திருந்தாலும் நம்மில் பலர் கெளதாரிமுனை பக்கம் போயிருக்கமாட்டோம், யுத்ததின்போது மட்டுமே கேள்வி பட்டிருக்கிறோம்,  கெளதாரிமுனை என்பது எப்படியிருக்கிறது என்பதை ஜெசி காண்பிக்கிறார்.. 

எமது தமிழ் அரசியல்வாதிகள் பட்டினியாய் இருக்கும் எம் மக்களின் உணர்வுகளை வைத்து அவர்களின் பழங்கால அரசியல் செய்கிறார்கள், சிங்கள அரசும் அதன் தமிழ் முகவர்களும் இப்போது எதை காட்டினால் அவர்களை தம் வழிக்கு கொண்டுவரலாம் என்று சிந்தித்து ஒரு பிடி உணவினை அளித்து அவர்களை தமக்குள் உள் வாங்க நினைக்கிறார்கள்,

இருபக்கமும் நடப்பது அரசியல்தான்  இடையில் உள்ள மக்கள் தமக்கு சரியென்று எது தோன்றுதோ இப்போது அதை செய்துவிட்டு தேர்தல்களின்போது தமக்கு சரியெனும் அரசியலை செய்திட்டு போகட்டும்.

இந்த இனவாதிகளின் எடுபிடிகளுக்கு எதிர்காலத்தில்  செஞ்சோற்றுக்கடன் தீர்க்காமல் இருப்பதும், நன்றிமறந்துபோய் இருப்பதும்கூட ஒருவகை தாயக கடமைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, valavan said:

தவறு சகோ

எனது  ஊர்  கடந்த 31 வருடங்களாக  இவரிடமிருந்து மீளமுடியவில்லை

இன்னும் இன்னும்  ஆதரவு அதிகரித்து  செல்கிறதே  தவிர?????

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

தவறு சகோ

எனது  ஊர்  கடந்த 31 வருடங்களாக  இவரிடமிருந்து மீளமுடியவில்லை

இன்னும் இன்னும்  ஆதரவு அதிகரித்து  செல்கிறதே  தவிர?????

அந்த பிரதேசத்தையும் அங்குள்ள மக்களின் வாழ்வு தரத்தையும் ஒருதரம் பாருங்கள்.

அவர்களுக்கு யாழ்நகரமே அமெரிக்கா ஜப்பான் போலதான் இருக்கும்.

வாழவழியின்றி போராடிய பலருக்கு உங்கள் சக்திக்கு உட்பட்டு ஓடி ஓடி உதவிய உங்களிடமிருந்தா இப்படியான வார்த்தைகள் விசுகு அண்ணா?

சரி வறுமையை தவிர வேறு எதையுமே பார்த்திராத அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு நீங்கள் காட்ட நினைக்கும் வழிதான் என்ன?

ஒருகாலம் முழுக்க முழுக்க இயக்கத்தின் கட்டுப்பாட்டு நிலப்பரப்பில்  வாழ்ந்தவர்கள் அவர்கள், கண்டிப்பாக அவர்களில் ஒரு சில மாவீரர் குடும்பங்களும் இருக்ககூடும், அவர்களுக்கு தெரியாதா டக்ளசிடம் கையேந்துவது கேவலம் என்று? ஆனால் அவர்கள் பிழைப்பு அதைவிட கேவலமாயிருக்குதே.

மீண்டும் சொன்னதைதான் சொல்கிறேன், உதவியை அவர்களிடம் பெறுங்கள் ஆனால் விசுவாசத்தை இனத்துக்கு காட்டுங்கள்.

உதவி பெறுவதால் சிங்கள எடுபிடிகளுக்கு ஆதரவு அதிகரிக்குமென்றால்,வடகிழக்கில்  இத்தனை ராணுவ முற்றுகை அச்சுறுத்தலுக்கு நடுவிலும் மாவீரர் தினத்தையும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும் அங்குள்ள மக்கள் நினைவுகூர முயற்சி எடுத்திருக்கமாட்டார்கள்.

சிங்களவன் ஏற்படுத்திக்கொடுத்த வசதிகளையும், யுத்த காலத்திலிருந்ததவிட பலமடங்கு மேம்பட்ட வாழ்க்கைதரத்துக்கும் விசுவாசம் காண்பிக்க ஒரு தமிழ் அரசியல் வாதியைகூட வெல்லவிடாமல் சிங்கள ஆட்சியாளர்களையே வடகிழக்கில் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

என்னை பொறுத்தவரை என்னால் அந்த மக்களின் ஏழ்மையை போக்க மிகபெரிதாக எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் உள்ளபோது , கண்டிப்பாக அந்த மக்கள் ஏதோ ஒரு வழியில் பெறும் உதவிகளை தவறென்று சொல்லமாட்டேன்.

ஆனால் அந்த மக்கள் பிழைக்கவழியுள்ள வேறு பிரதேசத்திலிருந்து அங்குபோய் டக்ளசின் உதவிக்காக கையேந்தி நிற்பவர்களாயிருந்தால் கண்டிப்பாக உங்கள் கருத்துடன்தான் நானும் நிற்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, valavan said:

நீங்கள் வாங்குவதை வாங்கிக்கொண்டு டக்லசுக்கு வாக்கை மட்டும் போடாதீர்கள் என்பதற்கு தான் அவ்வாறு எழுதினேன். ஆனால் வரலாற்றில் மிகவும் சங்கடமான இடங்களில் எல்லாம் எம் மக்கள் தெளிவாக வாக்களித்திருக்கின்றனர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அபிவிருத்தி நிச்சயம் வேண்டும்.

எனினும் அபிவிருத்தி எனும் போர்வையில் தமிழின உணர்வுகளை நிச்சயம் அழித்து விடுவார்கள்.மலிவான ஆடம்பரங்களை புகுத்தி தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கி விடுவார்கள். அது திறம்படவே நடக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

அவர்கள் தமது பொருளாதாரத்தை ஓரளவாவது மேம்படுத்த இது உதவும் என்று நம்பினால் அதனை பெற்றுக்கொள்ளட்டும், தேர்தல்களின்போது டக்ளசுக்கு வாக்களிக்காமல் விட்டால் போதும்.

  அது ...!. இதுதான் எனது கொள்கையும்.  உதவி அல்ல அது அவர்களின் உரிமை. அதை பாவித்தே அரசியல் வாதிகள் பிழைப்பு நடத்துகின்றனர். ஆனால் தாடியருக்கு தெரியும் மக்களின் மனநிலை. அதனாற்தான் நம்பிக்கைகளும், வாக்குறுதிகளும் தேர்தலுக்கு முன்னால், செயற்பாடு பின்னால், வரும் ஆனால் வராது. பணம் கொடுப்பவர்களுக்கும் அவருக்கு சேவகம் செய்த அடியாட்களுக்கும். பலன் பெற்றவர் அவரது அடிச்சுவடியை பின்பற்றி பலுகிப் பெருகிப்போய் கிடக்கு. ஆனால் தேவையுடையோர்  இன்னும் தேவையுடன் உதவிக்காக காத்திருக்கிறார்கள். இவர் இதய சுத்தியுடன் நடந்திருந்தால் இன்று நாட்டில் தமிழர் நிறைவுடன் வாழணுமே?

  • கருத்துக்கள உறவுகள்
On ‎31‎-‎07‎-‎2021 at 16:25, விசுகு said:

தவறு சகோ

எனது  ஊர்  கடந்த 31 வருடங்களாக  இவரிடமிருந்து மீளமுடியவில்லை

இன்னும் இன்னும்  ஆதரவு அதிகரித்து  செல்கிறதே  தவிர?????

22 hours ago, விசுகு said:

நீங்கள் வாங்குவதை வாங்கிக்கொண்டு டக்லசுக்கு வாக்கை மட்டும் போடாதீர்கள் என்பதற்கு தான் அவ்வாறு எழுதினேன். ஆனால் வரலாற்றில் மிகவும் சங்கடமான இடங்களில் எல்லாம் எம் மக்கள் தெளிவாக வாக்களித்திருக்கின்றனர். 

அண்ணா , இது உங்களுக்கே ஓவராய் தெரியவில்லை🤣 ....அந்த மக்களுக்கு உதவி தேவை ...அதை பயன் படுத்தி  தனது வோட்டுக்காய் அவரும் ஏதோ செய்கிறார் ...உதவியை பெருங்கோ ஆனால் வோட் போடாதீங்கோ என்றால் அவர் எப்படி அந்த மக்களுக்கு திரும்பவும் உதவி செய்வார்...அவர்  செய்கிற படியால் தான் அவருக்கு ஆதரவு கூடிக் கொண்டு போகுது  
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

அண்ணா , இது உங்களுக்கே ஓவராய் தெரியவில்லை🤣 ....அந்த மக்களுக்கு உதவி தேவை ...அதை பயன் படுத்தி  தனது வோட்டுக்காய் அவரும் ஏதோ செய்கிறார் ...உதவியை பெருங்கோ ஆனால் வோட் போடாதீங்கோ என்றால் அவர் எப்படி அந்த மக்களுக்கு திரும்பவும் உதவி செய்வார்...அவர்  செய்கிற படியால் தான் அவருக்கு ஆதரவு கூடிக் கொண்டு போகுது  

அங்காலை அபிவிருத்தி அரசியல்
இஞ்சாலை உதவி அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2021 at 00:26, நிழலி said:

அப்ப தமிழ் அமைச்சர்கள் மக்களுக்கு எந்த நல்ல அபிவிருத்தி திட்டங்களையும் கொண்டு வரக்கூடாது என்று சொல்கின்றீர்களா ரஞ்சித் + புத்தன்? அல்லது நிரந்தர தீர்வு வரும் வரைக்கும் எந்த சிறு அபிவிருத்தி திட்டங்களையும் நடைமுறைப்படுத்தக் கூடாதா?

வடக்கு மாகாண சபையும், ரணிலுக்கு 5 வருடங்கள் முண்டு கொடுத்துக் கொண்டு இருந்த கூத்தமைப்பும் எதுவுமே உருப்படியாக செய்யாமல் டக்கிளசுக்கும் பிள்ளையானுக்கும் அரசியல் நடத்தக் கூடிய வெளிய ஏற்படுத்தி மக்களை அவர்கள் பால் தள்ளி விட்டனர். மக்களும் தமக்கு எவர் குத்தியாவது கொஞ்சமே கொஞ்சமாக அரிசி வந்தால் கூட காணும், அதை வைத்து முன்னேறலாம் என்று முயல்கின்றனர்.

எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து அரசுடன் சேர்ந்து அரசியல் செய்த எவரும் அபிவிருத்தி  பெரிதாக செய்யவில்லை ...தமிழ் தேசியம் செய்ததா? என்ற கேள்வியை  கேட்காதீர்கள் அவர்களும் ஒன்றும் செய்யவில்லை தான்.....

70 ஆம் ஆண்டு தபால் தந்தி அமைச்சர் குமார சூரியர் என்ன செய்தார் ..
77 நீதி அமைச்சர் தேவநாயகம் என்ன செய்தார்.
 அதன்பின்பும் பல அரைகுறை அமைச்சர்கள் வந்தார்கள் ஒன்றும் செய்யவில்லை ..
டக்கிளஸின்  மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயயாட்சி என்ற கொள்கையை இல்லாமல் செய்யவே அவருக்கு அமைச்சு பதவி கொடுத்து சில அபிவிருத்தி திட்டங்களை செய்கிறார்கள் .....

தொடர்ந்து இந்த அரசியல்கட்சிதான் ஆட்சி செய்யும் என்று நாங்கள் நம்பி கொண்டும் இருக்க முடியாது ராஜாபக்சாவின் ஆட்சி தொடர்ந்து நிலைக்காவிடில் ....அபிவிருத்திக்கு என்ன நடக்கும் ?அடுத்த அரசியல் கட்சி வந்து எல்லாவற்றையும் மாற்றும் ....மீண்டும் தமிழர் பிரதேசம் அபிவிருத்திக்கு ஏங்க வேண்டும் ...
ஓர் நிரந்தர அரசியல் தீர்வுடன் அபிவிருத்தி செய்தால் நிலைத்து நிற்க்கும் எந்த ஆட்சி மத்தியில் நடந்தாலும்  மாகாண அபிவிருத்தி தொடர்ந்து நடை பெறலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இஞ்சாலை உதவி அரசியல்

இவர் அரசியலுக்குள் வந்து எவ்வளவு காலம்? அப்படி அவர் உதவியிருந்தால் இன்று உதவி தேடி வருவோர் எல்லாம் எப்பவோ தன்நிறைவு அடைந்திருக்க வேண்டுமே? ஏன் அது இன்னும் நிறைவேறவில்லை? உதவி என்ன அவர் சொத்திலிருந்தா செய்கிறார்? உதவி என்று மக்களை ஏமாற்றி, பதாதைகளை கையில் திணித்து, சிங்களத்துக்கு படம் காட்ட ஊர்வலமாய் அழைத்து வருவதும், பேருந்துகளில் ஏற்றி இறக்குவதும் இவரது உதவி அபிவிருத்தி. புலிகளை வைத்து பதவி அனுபவிக்கிறார். இவருக்கு ஏதாவது தகுதியிருந்தா சிங்களவன் அழைத்து பதவி கொடுத்தான்? அதனால தான் அடிக்கடி புலிகளை அழைத்து ஊளையிடுகிறார். எங்கே சிங்களவன் தன்ர காட்டிக்கொடுப்பை மறந்து உதறித்தள்ளிவிடுவானோ என்கிற பயத்தில் அடிக்கடி புலிகளை  கூப்பிட்டு சிங்களவனுக்கு தான் செய்த உபகாரத்தை நினைவூட்டுகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.