Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமண வாழ்த்து!

Featured Replies

ug0d0688pomz9.gif

அன்புடன் அனிதா

இணையத்தில் யாழ்மீட்டி

ரீங்காரம் செய்து - உங்கள்

இதயத்தை பகிர்ந்துகொண்ட

எம்வீட்டு குருவிகளே!

எப்போது ஒன்று சேர்வோம்?

எப்படி ஒன்று சேர்வோம்?

இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள்

இனிமேல் உமக்கு இல்லை!

உணர்வுகளால் நேற்றுவரை

உரையாடிய காதல்ஜோடி

இன்றிலிருந்து என்றென்றும்

உடலாலும் இணைகிறது!

உள்ளத்தில் நீர் சுமந்த

உண்மையான அன்பிற்காய்

திருவிழா செய்கின்றோம்!

திருமணமாம் உமக்கின்று!

இதயத்தின் உரசல்களில்

உருவான ஒளித் தீப்பிழம்பு

விண்வெளியில் பயணித்து

கண்மணிகள் கதைசொல்லும்!

இணையத்தில் சுழியோடி

முத்தான காதல் செய்த

மணி ரசிகை ஓருயிராய்

வாழ்க பல்லாண்டு!

அன்புடன் கலைஞன்

முகமூடிக் கருத்தாடல்..

அகம் தொட்ட நிகழ்வு!

இணைபிரியாப் பிணைவு!

இது கருத்தொத்த இணைவு!

கால்ரனில்(?) பொறியியல்!

மனதெல்லாம் தமிழ் இயல்!

படைப்பாளி 'மணி' காண

மனதிற்குள் ஒரு மின்னல்!

உடலிற்கு லண்டனில் முகவரி!

ஆன்மா யாழ் கள விவாதி!

அம்மணி அலைவரிசை அறிவிக்க

இம்மணி மனதிற்குள் குளிர்காற்று!

பரீட்சையின் முடிவிற்கு மாதங்கள் செல்லும்!

கல்யாணத் தேதி அதன்பின்தான் கூடும்!

பல்லாயிரம் மைல்கள் உடல்களைப் பிரிக்க

யாழ் களம் மனங்களை வருடியே கொடுக்கும்!

வீட்டார் அறிந்தாரா இல்லை யாழ் களம் தான் முந்தியதா?

காதல் துளிர்த்ததனை முதலிலே யாரறிந்தார்?

பெண்வீட்டார் ஒருபக்கம்! ஆண்வீட்டார் மறுபக்கம்!

மணவறையின் நடைமுறையில் யாழ் வீட்டார் புதுப் பழக்கம்!

வாழ்த்துக்கள் உறவுகளே!

வாழ்த்துக்கள் உங்களிற்கு!

வாழ்த்துக்கள் உறவுகளே!

வாழ்த்துக்கள் எங்களது!

அன்புடன் இன்னுமொருவன்

கண்டதும் காதல்!

காவியக் காதல்!

ஒரு தலைக் காதல்!

ஓ.. இந்த வரிசையில்

புதிதாக கருத்தினில்

காதல்கொண்டு இணைந்திட்ட

மாணிக்கவாசகன் இரசிகை...

இந்த முகங்களுள் மறைந்துள்ள

இதயங்கள் இன்றுபோல்

என்றென்றும் இணைந்து

வளமுடன் வாழ்ந்திட

வாழ்த்துகின்றோம் நாங்கள்!

அன்புடன் சாணக்கியன் மற்றும் குடும்பத்தினர்

உள்ளம் இணைந்த இல்லம்

என்றும் இனிக்கும் வெல்லம்!

காதல் கரங்கள் சேர்ந்தால் - வாழ்வே

வசந்தம் வீசும் தென்றல்!

வானும் நிலவும் போல!

இணைந்து வாழ வேண்டும்!

காலச்சுழற்சி கொள்ளும் நிலவு

வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!

இதய இராகம் மீட்டி! எந்த

நிலையின் போதும் மாறா

அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்

வாழ்த்துகின்றோம் நாங்கள்!

தமிழும் சுவையும் போல!

கவியும் இசையும் போல!

யாழ்மீட்டும் இசையின் ஊடே

வாழ்த்துகின்றேன் வாழ்க!

சொர்க்கம் மண்ணில் கொண்டு

சொந்தங்களே நீவீர் வாழ்க!

பெற்றோர் உற்றோர் சுற்றம்

போற்றும் வண்ணம் வாழ்க!

இங்கிருந்து கொண்டே தங்கை

வாழ்த்துகின்றேன் வாழ்க!

இரசனை கொண்ட இரசிகை!

கைப்பிடித்த மணியும் என்றும்..

இணைந்தே வாழ்க! இல்லறத்தை

இ(ணைந்)னிதே வெல்க!!!

அன்புடன் தமிழ்தங்கை

மணிவாசகன் ரசிக்க ரசிகையோ?

மணி வாசிக்க ரசிக்க ரசிகையோ?

ரசிகமணியிணைந்தே மானுடம் ரசிக்க

மணி மணியான எழுத்தில்

ரசிகையும் ரசிக்க கவிதை எழுத

ரகசியம் பேசி கூடி கூழாவி

கூற்றுதைத்த கொற்றவன் ஆசியுடன்

குழந்தை செல்வத்துடன்

குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!

அன்புடன் சிவராசா

எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே!

கொட்டும் மழையும் பூவாய் பொழிய

அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த

உங்கள் திருமண வாழ்க்கை

மகிழ்வாய் அமைய வாழ்த்துகிறோம்!

அன்புடன் கர்ணன் மற்றும் கள உறவுகள்

ஆன்றோர் வாழ்த்துரைக்க

ஆயிரமாய் பூச்சொரிய

மங்கை திருமகளாய்

மணவறையில் காத்திருக்க

நாதசுர மேளங்கள்

நல்லதொரு வாழ்த்திசைக்க

நங்கை திருக்கழுத்தில்

நம்பி அவன் நாண்பூட்ட

கட்டியவன் கட்டழகை

கடைக்கண்கள் அளவெடுக்க

மெட்டியவன் பூட்டிவிட

மெல்லியலாள் முகம் சிவக்க

இவள் பாதியிவன் பாதி

என்றிணைந்திட்ட மணவாழ்வில்

இல்லறத்தின் இலக்கணமாய்

இரு மனமும் வாழியவே!

திருமணத்தின் இன்பங்கள்

திகட்டாது தொடர்ந்து வர

ஓருயிராய் ஆருயிராய்

மணமக்கள் வாழியவே!

அன்புடன் வெற்றிவேல்

வாழ்த்துக்கள் சொல்ல

வார்த்தைகள் தேடி

வாசல்வரை வந்துநின்றேன்!

நீங்கள்

காதல் பேசி

கவிகள் பேசி

வார்த்தைகள் யாவற்றையும்

வசமாக்கி விட்டீரோ?

வார்த்தைப்

பஞ்சத்திலே நான்!

நீவீரோ மஞ்சத்திலே!

வாழ்த்துக்கள் உங்களுக்கு!

வாழ்க பல்லாண்டு!

நிலாவின் கைப்பற்றி

நிறைவிழா காணும்

மணிவாசகனிற்கு வாழ்த்துக்கள்!

தமிழன்னை மடியில்

தவழ்ந்த மைந்தனை

தன்மடி தாங்கும்

ரசிகைக்கும் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை என்பது

வளைவுகள் நிரம்பிய

கரடுமுரடான வசந்தப்பாதை!

இன்பமும் துன்பமும்

இனிதே நிறைந்தது!

பாசிப்பாறைமேல்

வழுக்கியோடும் நீர்த்துளிபோல்

இன்பத்திலேயும்

துன்பத்திலேயும்

இணைந்தே வாழ்க!

தென்றலின் சாமரவீச்சில்

திங்களின் ஒளி ஒத்தடத்தில்

மங்கள நாண் பூண்டு

மகிழ்வுடன் வாழ்க!

ஊடலோடு உறவாடிடுக!

உணர்வினை மதித்து

உரிமைக்கு இடமளித்து

ஜயந்தெளிந்து

அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற

இதயம் கவர்ந்து

இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம்

மன்றத்தில்(யாழ்) வாழ்த்துக்கள்!

மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி

மகிழ்வோடு வாழ்க!

ஓடிவரும் நதியும்

ஓய்ந்துவிடக்கூடும்!

அன்பென்னும் பந்தம்

அழியாதது நிலையானது!

மாங்கல்ய பந்தம்

மாலையிட்ட உறவு

மகத்தானது - அது

மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!

அன்பான உலகம்!

அறிவோடும் அன்போடும்

ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

என்றும் அன்புடன் வாழ்த்தும்

இணையத்தால் இணைந்த

பரணீதரன் - ரஜனி தம்பதிகள்

Edited by கலைஞன்

கவிதைகள் நன்றாக இருக்கிறது. தம்பதிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணையும் என் அக்காவுக்கும் அத்தானுக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று திருமணப்பந்தத்தில் இணையும் மணி ரசிகை தமபதிகளுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மனம் கனிந்த

இனிய வாழத்துக்கள்.இன்று போல் என்றும் வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் இணைந்து

இதயத்தால் இணையும்

மணவாளன் மணிக்கும்

மணவாட்டி ரசிகைக்கும்

புத்தனின் நல்வாழ்த்துகள்

புனிதமான திருமண பந்தத்தால்

புது படைப்புகள் பல

புதுமையுடனே தந்துடுவீர்........

நல்வாழ்த்துகள் மணிவாசகன் மற்றும் ரசிகை அவர்களுக்கு........

மணமக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

கலைஞனின் கவிதைத் தொகுப்பும் அருமை.

வாழ்த்துகள் இருவருக்கும் யார் யார் திருமனத்துக்கு சென்றீர்கள் என்பதையும் இங்கு பதியுங்கள்

களத்தில் கருத்துக்கள் சமைத்து காதலெனும் தீ மூட்டி இன்று திருமணமாய் பரிமாறும் என் அருமைத்தங்கை இரசிகைக்கும் அன்பு மைத்துணர் மணிக்கும் என் குடும்பசார்பான மனமார்ந்த வாழ்த்துக்கள்.

"இன்றுபோல் நீங்களிருவரும் கருத்தொருமித்து என்றும் நல்வாழ்வு வாழுங்கள்"

77242173yi7.jpg

எல்லோருக்கும் திரு மணச்சாப்பாடுள்ளது... சண்டை செய்யாது சாப்பிடவும்... <_<

புரியாணிbiryaniry2.jpg

பலகாரம்

300pxbonda2hq6.jpg

சாப்பிட்டு முடிந்ததும் மறக்காமல் மொய் எழுதவேணும் : :P

Edited by gowrybalan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குக் கவிதை எழுத வராது பிள்ளைகள். இருந்தாலும் என்ர வாழ்த்துக்களை மீண்டும் மணிவாசகன் ரசிகைக்கு யாழ் குடும்பத்தின் சார்பா வாழ்த்துறதில் பெருமகிழ்வடைகிறேன்.

இது மணிவாசகன்-ரசிகைக்கு (நியப்பெயர் இதுதானா)

நீங்கள் எதிர்பார்த்த பொன்நாளும் இதுதானா<_<

இணையத்தில் இணைந்து

இனிக்க இனிக்க

கவிதை பேசி

அரட்டை அடித்து

காதலில் வெடித்து

இதயத்தில் பூத்து

இருமனமும் ஒருமனமாகி

திருமணத்தில்

இணையும் நாளில்

இல்வாழ்க்கை தொடர

வாயைடி வாழையாக

வாழ்ந்து

வையமும் முழுதும்

உலாத்தி

மீண்டும் இணையத்தில்

உலாவரத்தான்...

உள்மனம் கனிந்து

வாழ்த்துகின்றேன்.

வாழ்க வளமுடன்

அன்புடன்

தமிழ்வானம்

பி.குறிப்பு: மோகன் அண்ணா புறோக்கர் காசு வாங்கியாச்சோ...?

இப்ப விட்டால் இவையளைப் பிடிக்கேலாது பாருங்கோ....:lol:

வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள

எல்லோருக்கும் திரு மணச்சாப்பாடுள்ளது... சண்டை செய்யாது சாப்பிடவும்... <_<

புரியாணிbiryaniry2.jpg

பலகாரம்

300pxbonda2hq6.jpg

சாப்பிட்டு முடிந்ததும் மறக்காமல் மொய் எழுதவேணும் : :P

கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்

இந்த கௌரவ பிரசாதம் இதுவே எனக்கு போதும்.

இந்த பாட்டையே மொய்யாக வைத்துக்கொள்ளுங்கள்

:D:D :D

Edited by vettri-vel

மணமக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்

அன்புடன் இனியவள் <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11.07.2007 இன்று யாழ் களம் கண்ட புதிய இணைவு நாள்- நந்நாள்!

இல்லறத்தின் அடிப்படையான

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது. ( 5:5)

எனும் அறவொழுக்கத்துடன் வாழும் நற்குடும்பமாகத் தடம் பதித்திட

இனிய நல் வாழ்த்துகள்!

என்ன நண்பா !

பிரியாணி எல்லாம் போடுறீங்கள். நாங்கள் அது போடுறேல்லை தெரியுமில்லை.

இந்துக்களின் திருமணத்தன்று வாழையிலையில் மரக்கறிகளுடன் அறுசுவை உணவு வழங்கப்படும். ம் போயிருந்தால் ஓரு வெட்டு வெட்டியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மணி மற்றும் இரசிகைக்கு எனது திருமண வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இல்லறத்தில் இணையும் இதயங்களை

இன்சொல்கொண்டு போற்றுமே இணையம்

வள்ளுவன் வாசுகி இல்லறம்போல் - நம்

வானவில் ஜம்மு ஐக்கியம் போல்

தூயவன் வாசகன் சாடல் போல் அல்லால்

ரசிகை மணிவாசகன் இல்லறம் இனித்திட

வாழ்த்துகிறேன் நான் டங்குவார்.. :P

திருமண நல்வாழ்த்துக்கள்...!

Edited by Danguvaar

மணி அத்தானுக்கும் ரசி அக்காவுக்கும் திருமண வாழ்த்துக்கள்!!!!!1

மணிக்கும் இரசிகைக்கும் எனது திருமண வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் வாசகன் சாடல் போல் அல்லால்

ஏனப்பு!

நம்மளைப் போட்டுத் தாக்க வேற இடம் கிடைக்கவில்லையா? :angry: <_< வாசகன் நமக்கிடையே உள்ளது முற்பிறப்பில ஏற்பட்ட சின்னப் பிரச்சனை. அது இப்போ தீர்ந்து போச்சு.

:3d_039:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லற வாழ்வில் இணையும் அன்பு அக்கா ரசிகை, மற்றும் மணி அண்ணா ஃஅத்தான் ஆகியோருக்கும் அன்புத்தம்பியின் இதயத்திலிருந்து இனிய வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்..!

இல்லறம் எனும் நல்லறத்தில் இணைந்திருக்கும் உங்களை வாழ்த்துகின்றேன் வணங்குகின்றேன்

எதிர்பார்ப்புககள்

காத்திருப்புக்கள்

தவிப்புக்கள்

எல்லாவற்றுக்கும் -ஆம்

எல்லாவற்றுக்கும் விடுதலை...

பெற்றவர்கள் மகிழ்ந்திருக்க

சுற்றத்தார் சூழ்ந்திருக்க

மற்றவர்கள் மனதுக்குள் வாழ்தி நிற்க

நீங்கள் வாழ்ந்திடுங்கள்..!

இன்பம் இணைந்திருக்க

இனிமை செழித்திருக்க

இல்லறம் அமைத்து

நீங்கள் வாழ்ந்திடுங்கள்

சொந்தங்கள் கூடி வாழ்த்தட்டும்

பந்தங்கள் வாழ்த்தி நிற்கட்டும்

சிறியோன் தான் பரவாயில்லை...

நானும் வாழ்த்துகின்றேன்..

நீங்கள் வாழ்திடுங்கள்

யாழ் சேர்த்த உறவோ இல்லை

யாழ் அமைந்த கூட்டோ

எதுவாக இருந்தால் என்ன

நீங்கள் வாழ்ந்திடுங்கள்

வார்த்தைகளுக்கு தட்டுப்பாடு

உங்களை வாழ்த்த மட்டும்

உள்ள வார்த்தைகள் கொண்டு

உறவுகள் கவி படைத்ததால்

உணர்வாலே இணைந்து வாழ்த்தி

உறவுகளே நன்றி...

உரிமையோடு வாழ்த்தும்

அன்புத் தம்பி...

நிதர்சன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பு!

நம்மளைப் போட்டுத் தாக்க வேற இடம் கிடைக்கவில்லையா? :angry: <_< வாசகன் நமக்கிடையே உள்ளது முற்பிறப்பில ஏற்பட்ட சின்னப் பிரச்சனை. அது இப்போ தீர்ந்து போச்சு.

:3d_039:

தூயவன்.., சும்மா ஒரு வம்புக்கு எழுதியது.. :D சமாதானம்..!!

பிரச்சினை தீர்ந்து போச்சா? அப்ப மெத்த சந்தோசம்.. :P

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தொருமித்து காதல் செய்து!

நன் மக்கட் செல்வமும் பெற்று!

இனிதான இல்லறத்தில் இனைந்து!

இனிதே வாழ எம் நல்வாழ்த்துக்கள். <_<:D

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புதிய படியில் கால் பதிக்கும் தம்பதியினருக்கு எனது இதயங்கனிந்த திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.