Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே படித்தவன் முற்போக்குவாதி என்பதை காட்டிக்கொள்வதை விட சக மனிதர்களாக அவர்களையும் பார்க்கும் பக்குவம் உள்ளது..காலம் மாற மாற அவர்களை பார்க்கும் சமூகத்தின் கண்ணோட்டமும் மாறுகிறது.. அவர்களும் எங்களைப்போன்ற மனிதர்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது.. நாங்கள் குடும்பம், உறவுகள், காதல், நட்பு இத்யாதிகள் என்பவற்றை எவ்வளவு தூரம் அனுபவிக்க உரிமை உள்ளதோ அதேயளவு உரிமை அவர்களுக்கும் உண்டு.. அவர்கள் என்ன வேற்றுகிரகவாசிகளா? இல்லையே அவர்களும் மனிதர்கள் தான்.. 

இரண்டாவது- நாங்கள் இதை காணாத மாதிரி இருந்தால் அவர்கள் இல்லாமல் போய்விடுவார்களா? ஏன் அவர்களுக்கான வாழ்க்கையை சட்டரீதியாகவும் தங்களுக்கு பிடித்த சமயரீதியாகவும் வாழமுடியாதா? இது என்ன வகையான நியாயம்? 

மூன்றாவது- இங்கே வாழ்த்து தெரிவித்தவர்களோ சரி, திருமணத்திற்கு போனவர்களும் சரி அவர்களும் எங்களைப்போன்ற சக மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மையுடனும் போயிருக்க கூடும் அல்லது உண்மையிலே வாழ்த்திகூட இருக்கலாம்..அங்கே போனவர்கள் எந்த மனநிலையில் போனார்கள் என்பதை விட போயிருக்கிறார்கள்.. 

என்னைப்பொறுத்தவரை, அவர்கள் தங்கள் வாழ்க்கையை திருப்தியுடன் வாழ்வார்கள்.. பெற்றோரின் திருப்திக்காக, சமூகம் ஏதாவது சொல்லும் என்று பயத்தில், கோழையாக, பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து நான்கு பேரின் வாழ்க்கையை பாழாக்குவதைவிட, இவர்கள் தங்கள் வாழ்க்கையை திருப்தியுடன்தான் வாழ்வார்கள்.. 

பிரபா , அவர்களுக்கு விரும்பிதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்று நான் ஏற்கனவே எழுதி விட்டேன்..அவர்களை எதிர்க்க வேண்டும் என்றோ ,ஒதுக்கி வையுங்கள் என்றோ எங்கும் எழுதவில்லை 
திரும்பவும் எழுதுகிறேன் நான் அவர்கள் செய்தது சரி, பிழை என்று சொல்ல வரவில்லை...அது அவர்களது பேர்சனல்.
இயற்கைக்கு எதிரானதை நாம் ஆதரிக்க தேவையில்லை...நாம் ஆதரிக்கா விட்டால் இவர்கள் காணாமற் போக மாட்டார்கள் .. ஆனால் அவர்களிடம் ஒரு வித தயக்கமும்,பயமும் இருக்கும்.  
நான்  உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் உங்கள் பிள்ளை இதை செய்திட கூடாது என்று வேண்டிக் கொண்டு எப்படி உங்களால் அடுத்தவர் பிள்ளையை வாழ்த்த முடியுது?
வெள்ளைகளை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் அவர்களது பிள்ளைகள் ஓரின சேர்க்கையாளராய் இருந்தால் பகிரங்காய் மற்றவர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்துவார்கள் ...உங்களால் அது முடியுமா?
ஐயரிடம் நான் நாயை திருமணம் செய்யப் போறேன் [ஜஸ்டின் மன்னிக்கவும்.] என்றுசொன்னால்  கூட வந்து செய்விப்பார்....அவருக்கு அது தொழில் .
என்னை இந்த கல்யாணத்திற்கு கூப்பிட்டு இருந்தால் கூட நான் போயிருப்பேன் ...போய் விடுப்பு பார்த்து ,மற்றவர் என்ன கொசிப் கதைக்கிறார்கள் என்று கேட்டு சாப்பிட்டுட்டு வந்திருப்பேன்.
பிள்ளைகள் தன் பாலிலனத்தை தேர்ந்தெடுக்க காரணமே பெற்றோர் தான்...பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்பதில்லை , அடுத்த பாலினத்தை சேர்ந்தவரோடு பழக விடுவதில்லை, கூடுதல் கண்காணிப்பு அல்லது அறவே இல்லை . போன்ற பல காரணங்கள் இருக்கு ....பெற்றோர்கள் கவனமாய் இருந்தால் பிள்ளைகள் இப்படி இயற்கைக்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள்.
ஏதாவது புதிசாய் எழுதினால் ,பதில் சொல்ல வாறேன்...இல்லாட்டி நன்றி ...வணக்கம் 

  • Replies 386
  • Views 27.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

ரதியின் கருத்தைப் பார்த்து ..வெடிச்சிரிப்பைத் தவிர வேறெதுவும் வரவில்லை!-மன்னிக்கவும். 😂

"நாம் பேசாமல் இருந்தால், அவர்களும் பேசாமல் இருந்து விடுவர் , எனவே இது இருப்பதே தெரியாமல் போய் விடும்!".. 

இந்த அணுகுமுறை , சாதி விடயத்தில், சீதன விடயத்தில், திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்ளும் ஊர்ப் பெரியவாள் விடயத்தில் என்று பல தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களில் கடைப் பிடிக்கப் படும் ஒன்று தான் - sweeping under the carpet! அவையெல்லாம் வெளியே தெரியாமல், எங்கள் சமூகத்தை மறைத்தன்மையான விதத்தில் பாதிக்காமல் போய் விட்டனவா? இல்லையல்லவா? 

எனவே, பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டென்ற அணுகுமுறை தான் இது!

மறுபக்கம், என் குழந்தை இதைச் செய்தால் என்ன ரியாக்ஷன் எனும் கேள்வி! இந்தக் கேள்விக்கு பதிலே அவசியமில்லை.பெற்றோர்  தன் குழந்தை மேல் உண்மையான அன்பு கொண்டிருந்தால், பெற்றோர் விரும்பும் இணையையா கட்டி வைப்பர்? 

அனேகமான எங்கள் சமூகத்தின் வயசாளிகள், பெரியோர், தங்கள் வாழ்க்கையை ஊருக்காக வாழ்வர்! தங்களுக்காக தங்கள் பிள்ளைகளை வாழச் சொல்லி எதிர்பார்ப்பர்! வாழக் கிடைக்கிற அதிக பட்ச 75 ஆண்டுகளில் தனக்கென்று வாழ நினைக்காத "வாழா வெட்டிகள்" தான் எங்கட ஆட்கள்!   

சாதி விடயம் , சீதன விடயம் போன்றவை மனிதர் செய்யும் குற்றங்கள் ...இது அப்படியல்ல ...இயற்கைக்கு மாறானது என்று எனக்கும் தெரியும் . உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் .
உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் சில பேர் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுடன் உடல் உறவு கொள்வார்கள் ...மிருகங்களுக்கு கதைக்க தெரியாது ...மிருக வதை என்று சொல்வீர்கள்...அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணியின் பாஷை அவர்களுக்கு புரியாதா ?
இன்னும் சில வருடங்களில் இதையும் சட்ட பூர்வமாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

...அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணியின் பாஷை அவர்களுக்கு புரியாதா ?
இன்னும் சில வருடங்களில் இதையும் சட்ட பூர்வமாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா  

பிரான்சில் ஆட்டை புணர்ந்த ஒரு தமிழர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளார். இன்னும் கொஞ்ச நாளில் ஆடு கத்தவில்லை எதிர்க்கவில்லை என்றும்  அவர்கள் இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழலாம் என்றும் வாதிட தயாராகுங்கள்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

பிரான்சில் ஆட்டை புணர்ந்த ஒரு தமிழர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளார். இன்னும் கொஞ்ச நாளில் ஆடு கத்தவில்லை எதிர்க்கவில்லை என்று அவர்கள் இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழலாம் என்று வாதிட தயாராகுங்கள்.

இன்னும் கொஞ்ச காலத்தில் இதுக்கும் சப்போட் பண்ணி கொண்டு வருமார்களோ என்று பயமாய் உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Eppothum Thamizhan said:

ஜஸ்டின் அட்வைஸ் சொல்வது மிக சுலபமான வேலை. அது தனக்கென்று வரும்போதுதான் தெரியும் அதன் வலி!

இதில் அட்வைஸ் எங்கே இருக்கிறது? எனக்கு இந்த அனுபவம் வந்தால் அது தான் என் சிந்தனைப் போக்காக இருக்கும் என்பதைத் தான் சொல்லியிருக்கிறேன். 

"உன் பெற்றோர் , சக பிறப்புகளின் மானம் காக்க, நீ உன் விருப்பத்தை மாற்றிக் கொள்!" என்று சொல்வதன் இன்னொரு வடிவம், "நாம் எல்லாரும் ஷோவுக்காக வாழ்வோம்!" என்பது தான்! -இப்படி சொல்வோர் வாழாவெட்டிகள் தானே?

10 minutes ago, ரதி said:

சாதி விடயம் , சீதன விடயம் போன்றவை மனிதர் செய்யும் குற்றங்கள் ...இது அப்படியல்ல ...இயற்கைக்கு மாறானது என்று எனக்கும் தெரியும் . உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் .
உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் சில பேர் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுடன் உடல் உறவு கொள்வார்கள் ...மிருகங்களுக்கு கதைக்க தெரியாது ...மிருக வதை என்று சொல்வீர்கள்...அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணியின் பாஷை அவர்களுக்கு புரியாதா ?
இன்னும் சில வருடங்களில் இதையும் சட்ட பூர்வமாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா  

ரதி: இதற்கான பதிலை மேலே எழுதி விட்டேன் ஏற்கனவே! CONSENT

ஒரு பாலுறவு பரஸ்பர சம்மதம் கொன்டு நடப்பது, இருவரின் படுக்கையறை விவகாரம், அதில் அரசுக்கோ , வேறு மனிதர்களுக்கோ மூக்கை நுழைக்க அதிகாரமில்லை!

குழந்தைகள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது - எனவே குழந்தைகளுடனான உறவு சட்ட விரோத வல்லுறவு!

மிருகங்கள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது- எனவே மிருகங்களுடனான உறவு சட்ட விரோத மிருக வதை!

இப்ப கேள்வி: இந்த இரு பெண்களிடையேயான ஒரு பாலுறவில் யார் வதைக்கப் பட்டனர்?

(கலாச்சாரக் காவலர்களின் நீதியுணர்வைத் தவிர எதுவும் பாதிக்கப் படவில்லை!)

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Sasi_varnam said:

கோஷன் நீங்க பெரிய மனுஷன்யா... 
இவ்வளவு பொறுமையா எல்லா விதண்டாவாதத்துக்கும் அழகாக கருத்து வைத்ததுக்கு.
நீங்கள் யாரும் ஏன் வாழ்த்தவில்லை  என்று நாங்கள் கேள்வி கேட்க இல்லை, மாறாக  கொஞ்ச பேர்  எதுக்கு வாழ்த்துகிறீர்கள்? ஏன் ஊக்கப்படுத்துகிறீர்கள்? உங்கள் பிள்ளைகள் இப்படி செய்தால் என்ன செய்வீர்கள் என்ற எக்ஸ்ட்ரா பிட்டிங் கேள்விகளோடு எழுதுவது தான் சிக்கலே.
எனக்கு மூன்று ஆண் குழந்தைகள் மூவரும் 17 வயதுக்குள்ளே தான்,  அவர்களுக்கு பள்ளிக்கூடத்திலே இது பற்றி ஓரளவு சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. (கத்தோலிக்க பாடசாலை). பிள்ளைகள்  எங்கள் சமூக எல்லா சாத்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளோடு கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். திருமணம், காது குத்து, கருமாதி, பூப்புனித நீராட்டு. ஓரளவுக்கு எங்கள் வாழ்க்கை வட்டம் புரிகிறது. 
விதிவசத்தில் பிள்ளைகள் இப்படியான உணர்வை வெளிப்படுத்தினால், அதை உணர்ந்து கொள்ள முயல்வேன், பிரத்யோகமாக எமக்குள் இருக்கும் சமூக சிக்கல்களை சொல்லித்தருவேன்.
 உதாரணம் --> விசுகு மாமா, தமிழ்சிறி மாமா, குசா தாத்தா உன்னை ஆசீர்வதிக்க மாட்டார்கள், சிலநேரம் எங்களோடு கூட இனிமேல்  பேச மாட்டார்கள். 
அவர்களின் இந்த உணர்வை அவர்களாகவே மீழ்ஆய்வு செய்ய நேரம் கொடுத்தது, ஈற்றில் இதுதான் அவர்களின் வாழ்க்கை துணை தேடல், மார்க்கம் என்றால் அவர்களுக்கு நிச்சயம் பக்கபலமாக இருப்பேன். இதில் நானும் எனது மனைவியும்  உறுதியாக இருப்போம். 
இதனால் வரும் சமூக அவதூறுகளை ஏற்று ஒதுங்கி வாழ வேண்டிய நிர்பந்தம் வந்தால் அதையும் செய்வோம்.
என்பிள்ளைகள் ஏதாவது தவறான பாதையில் சென்று 2 பேரை சுட்டுக்கொண்டான், லாரியில் அடித்துக்கொண்டான், குத்திக்கொண்டான்  போன்ற அவப்பெயரை விட இதை சந்தோசமாக ஏற்று அவர்களோடு நாமும் சந்தோசமாக வாழ்வோம்.
மற்றும்படி இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நான் மெத்தப் படித்தவனும் இல்லை, பாமரனும் இல்லை.
இன்னும் ஒரு உயிரின் உணர்வுக்கும், இந்த நாட்டின் சட்டத்திட்கும் மதிப்பளிக்கிறேன் அவ்வளவே.

சசிவர்ணம், அவர்களே...
இயற்கைக்கு மாறானதை, எதிர்ப்பதில்... தவறு இல்லை, 
என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

பிரான்சில் ஆட்டை புணர்ந்த ஒரு தமிழர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளார். இன்னும் கொஞ்ச நாளில் ஆடு கத்தவில்லை எதிர்க்கவில்லை என்றும்  அவர்கள் இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழலாம் என்றும் வாதிட தயாராகுங்கள்.

விசுகர், ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்தாலும், உங்களுக்கு சாதாரண உடலுறவு, வல்லுறவு, பலாத்காரம் இவை பற்றிய எந்த விளக்கமும் இல்லையென்பதைச் சுட்டிக் காட்டும் கருத்து இது!

நல்ல காலம் சட்டத்துடன் இன்னும் முட்டுப் படாமல் தப்பியிருக்கிறீர்கள் - குருட்டதிர்ஷ்டம் தான்! 😂

கீழே பதில்👇

21 hours ago, Justin said:

குடும்பத்திற்குள் நடக்கும் பாலுறவான incest ஐ சட்டம் தடுக்கப் பல நியாயமான காரணங்கள் உண்டு. குறைபாடுள்ள பிள்ளை பிறப்பதைத் தடுப்பது அதிலொன்றாக இருக்கலாம்! ஆனால், சிறுவர்களை/சிறுமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யாமல் தடுப்பதே மிகப் பெரிய காரணமாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். Incest ஐ சட்டம் போட்டுத் தடுக்கா விட்டால், தங்கள் மகளையே புணர முயலும் மிருகத் தனமான தந்தையர் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள்!

ஒரு பாலுறவு என்பது இரு வளர்ந்தோர் பரஸ்பர சம்மதத்தோடு உருவாக்கும் உறவு. இங்கெ சம்மதம் (consent) என்பது முக்கியமான சொல்! ஒருவர் குழந்தையைப் பாலியல் ரீதியில் தொட்டால், அங்கே சம்மதம் கிடையாது! ஒரு மிருகத்தைப் புணர்ந்தால் அங்கே சம்மதம் கிடையாது! எனவே consent இல்லாத உறவு வல்லுறவு - சட்ட விரோதம்!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

ரதி: இதற்கான பதிலை மேலே எழுதி விட்டேன் ஏற்கனவே! CONSENT

ஒரு பாலுறவு பரஸ்பர சம்மதம் கொன்டு நடப்பது, இருவரின் படுக்கையறை விவகாரம், அதில் அரசுக்கோ , வேறு மனிதர்களுக்கோ மூக்கை நுழைக்க அதிகாரமில்லை!

குழந்தைகள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது - எனவே குழந்தைகளுடனான உறவு சட்ட விரோத வல்லுறவு!

மிருகங்கள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது- எனவே மிருகங்களுடனான உறவு சட்ட விரோத மிருக வதை!

இப்ப கேள்வி: இந்த இரு பெண்களிடையேயான ஒரு பாலுறவில் யார் வதைக்கப் பட்டனர்?

(கலாச்சாரக் காவலர்களின் நீதியுணர்வைத் தவிர எதுவும் பாதிக்கப் படவில்லை!)

நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லையே 
ஒரு பால் உறவால் பாதிக்கப்படுவார்கள் பெற்றோர், சகோதர ,சகோதரிகள் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லையே 
ஒரு பால் உறவால் பாதிக்கப்படுவார்கள் பெற்றோர், சகோதர ,சகோதரிகள் 

சசி இதற்குப் பதில் சொல்லியாகி விட்டது!

அவர்களது பாலுறவால் பெற்றோர் சகோதர்களுக்குப் பாதிப்பில்லை! ஆனால், அவர்களது சொந்த விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாத கலாச்சாரக் காவலர்களால் தான் பெற்றோர் சகோதரருக்குப் பாதிப்பு! 

எனவே, சிகிச்சை தேவையாக இருப்பது ஒரு பாலுறவைத் தேர்வோருக்கல்ல! கலாச்சாரக் காவலர்களுக்குத் தான்!  

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

விசுகர், ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்தாலும், உங்களுக்கு சாதாரண உடலுறவு, வல்லுறவு, பலாத்காரம் இவை பற்றிய எந்த விளக்கமும் இல்லையென்பதைச் சுட்டிக் காட்டும் கருத்து இது!

நல்ல காலம் சட்டத்துடன் இன்னும் முட்டுப் படாமல் தப்பியிருக்கிறீர்கள் - குருட்டதிர்ஷ்டம் தான்! 😂

கீழே பதில்👇

சட்டம் சொல்வதை எல்லாம் என் முதுகில் ஏற்றி சுமக்கணும் என்று எந்த விதியும் கிடையாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நான் கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லையே 
ஒரு பால் உறவால் பாதிக்கப்படுவார்கள் பெற்றோர், சகோதர ,சகோதரிகள் 

ரதி, சில மேலைநாடுகளில் ஒருபால் திருமணத்தை அங்கீகரித்திருப்பதால் நவீன புரட்சியாளர்கள் நன்றாக கதைவிடுகிறார்கள். 0.001% கூட இல்லாத இப்படியான நிகழ்வுகளை ஊக்குவிக்காமல் கண்டும் காணாமல் செல்வதே எம்போன்றவர்களுக்கு சரி. புரட்சியாளர்கள் கருத்தெழுதும்போதே இப்படியான நிகழ்வுகள் தமது குடும்பத்தில் வரவேகூடாது என்று வேண்டிக்கொண்டே எழுதியிருப்பார்கள் என்பது யாவரும் அறிந்ததே. இதில ஆஸ்திரேலியாவில் இருந்து ஒருவ பாடம்வேற எடுக்கிறா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

சசி இதற்குப் பதில் சொல்லியாகி விட்டது!

அவர்களது பாலுறவால் பெற்றோர் சகோதர்களுக்குப் பாதிப்பில்லை! ஆனால், அவர்களது சொந்த விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாத கலாச்சாரக் காவலர்களால் தான் பெற்றோர் சகோதரருக்குப் பாதிப்பு! 

எனவே, சிகிச்சை தேவையாக இருப்பது ஒரு பாலுறவைத் தேர்வோருக்கல்ல! கலாச்சாரக் காவலர்களுக்குத் தான்!  

நான் இங்கு தமிழர்களை பற்றி கதைக்கவில்லை ...மனிதர்களை பற்றி மட்டுமே கதைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2021 at 17:57, கிருபன் said:

மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.💐💐💐

அத்துடன் தோழனாக நிற்கும் தோழிக்கும் (அப்படித்தான் வீடியோவில் தெரிகின்றது) பாராட்டுக்கள்👍🏾

கவலை வேண்டாம். விந்து வங்கி ஆண்களுக்கு திறந்தே உள்ளது😜

On 28/9/2021 at 17:07, valavan said:

 தன்பாலின சேர்க்கை என்பது அவரவர் உரிமை , அதை பிறர் விமர்சிக்கவோ அவர்களை தொந்தரவு செய்யவோ சட்டத்திலும் தர்மத்திலும் இடம் கிடையாது என்ற கொள்கைகளை கொண்ட நாடுகளில் வாழ்வதால் இது அவர்களின் தனிப்பட்ட விசயம் .

திருமண வாழ்த்துக்கள்.

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

அதைதான் ஐயரின் கை  சிம்பாலிக்கா சொல்லுதாக்கும்.

Bild

அதாவது கையை கட்டிக்கொண்டு அமைதியா போகவேண்டியதுதான் எண்டு சொல்ல வாறன்.

பொத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான்

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

இதில் அட்வைஸ் எங்கே இருக்கிறது? எனக்கு இந்த அனுபவம் வந்தால் அது தான் என் சிந்தனைப் போக்காக இருக்கும் என்பதைத் தான் சொல்லியிருக்கிறேன். 

"உன் பெற்றோர் , சக பிறப்புகளின் மானம் காக்க, நீ உன் விருப்பத்தை மாற்றிக் கொள்!" என்று சொல்வதன் இன்னொரு வடிவம், "நாம் எல்லாரும் ஷோவுக்காக வாழ்வோம்!" என்பது தான்! -இப்படி சொல்வோர் வாழாவெட்டிகள் தானே?

ரதி: இதற்கான பதிலை மேலே எழுதி விட்டேன் ஏற்கனவே! CONSENT

ஒரு பாலுறவு பரஸ்பர சம்மதம் கொன்டு நடப்பது, இருவரின் படுக்கையறை விவகாரம், அதில் அரசுக்கோ , வேறு மனிதர்களுக்கோ மூக்கை நுழைக்க அதிகாரமில்லை!

குழந்தைகள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது - எனவே குழந்தைகளுடனான உறவு சட்ட விரோத வல்லுறவு!

மிருகங்கள் பாலுறவுக்கு சம்மதம் தர முடியாது- எனவே மிருகங்களுடனான உறவு சட்ட விரோத மிருக வதை!

இப்ப கேள்வி: இந்த இரு பெண்களிடையேயான ஒரு பாலுறவில் யார் வதைக்கப் பட்டனர்?

(கலாச்சாரக் காவலர்களின் நீதியுணர்வைத் தவிர எதுவும் பாதிக்கப் படவில்லை!)

மேலே நான் உங்களிடம் கேட்டது மிருகங்களோடு பாலியல் உறவு கொள்ளலாம் என்று சட்டம் வந்தால் அதை ஆதரிப்பீர்களா என்று தான் ...அதற்கு இன்னும் பதில் வரவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, karu said:

பொத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான்

எதையும் ஒரு நாசூக்கா சொல்ல விட மாட்டீர்களா  ‘கரு’ ?😜 

  • கருத்துக்கள உறவுகள்

மனித வர்க்கம் தனது தேவையை ஈடுசெய்ய அல்லது பூர்த்தி செய்யவே சகல காரியங்களில் ஈடுபடுகிறது. 
ஓடி வரும் நதியை குறுக்கே மறித்து, அணைகட்டி அனுபவிப்பது முதல் பல விடயங்கள் இப்படி இயற்கைக்கு முரணானது தான். மனிதர்களில் சில பகுதியினருக்கு  இப்படியான ஒரு உறவு, உணர்வு வேண்டி  இருக்கிறது.
அவர்கள் அதை ஞாயமாக, சட்ட ரீதியாக பூர்த்தி செய்துகொள்கிறார்கள் அவ்வளவே. நீங்கள் வாழ்த்துவதும், தூற்றுவதும், எதிர்ப்பதும் இங்கே ஒரு பொருட்டே அல்ல. இது உங்களின் மனநிலை மட்டுமே.
 
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலருக்கு தாம் என்ன கதைக்கிறோம் என்பதே புரிவதில்லை. இங்கு பேசுபொருள் ஒருபாலின சேர்க்கையல்ல. அதை அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி செய்திருந்தால் இதில் சொல்ல ஏதுமில்லை. ஆனால் அதை ஏன் எமது கலாச்சார முறைப்படி செய்தார்கள் என்பதே கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ராமா ....8 பக்கம் தாண்டியுமா இன்னும் புரியல 😴

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:

ஐயோ ராமா ....8 பக்கம் தாண்டியுமா இன்னும் புரியல 😴

8 பக்கமில்லை 80 பக்கம் தாண்டினாலும் சிலருக்கு புரியாது அல்லது புரியாதமாதிரியே நடித்துக்கொண்டிருப்பார்கள்! இது ஒன்றும் யாழில் புதிதல்லவே!!

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினை வீட்டுக்குள்ள அய்யரை கூப்பிட்டு செய்யாமல், அடர்ந்த காட்டில் அய்யரை கூப்பிட்டு செய்தது தானோ?

இல்லை ஒரு கிறீஸ்தவ பாதிரியை வைத்து செய்திருந்தால் எல்லாரும் வரிசையில் வந்து வாழ்த்தி இருப்பார்களோ?  எனக்கு தலை சுத்துது.  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Sasi_varnam said:

அவர்கள் அதை ஞாயமாக, சட்ட ரீதியாக பூர்த்தி செய்துகொள்கிறார்கள் அவ்வளவே. நீங்கள் வாழ்த்துவதும், தூற்றுவதும், எதிர்ப்பதும் இங்கே ஒரு பொருட்டே அல்ல. இது உங்களின் மனநிலை மட்டுமே.
 
அதை அவர்கள் சட்டரீதியாக மட்டுமே செய்து முடித்திருந்தால் அது பேசுபொருளாகியிருக்காது. அதை எமது கலாச்சார முறைப்படி செய்ததே நகைப்புக்கிடமானது!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Sasi_varnam said:

மனித வர்க்கம் தனது தேவையை ஈடுசெய்ய அல்லது பூர்த்தி செய்யவே சகல காரியங்களில் ஈடுபடுகிறது. 
ஓடி வரும் நதியை குறுக்கே மறித்து, அணைகட்டி அனுபவிப்பது முதல் பல விடயங்கள் இப்படி இயற்கைக்கு முரணானது தான். மனிதர்களில் சில பகுதியினருக்கு  இப்படியான ஒரு உறவு, உணர்வு வேண்டி  இருக்கிறது.
அவர்கள் அதை ஞாயமாக, சட்ட ரீதியாக பூர்த்தி செய்துகொள்கிறார்கள் அவ்வளவே. நீங்கள் வாழ்த்துவதும், தூற்றுவதும், எதிர்ப்பதும் இங்கே ஒரு பொருட்டே அல்ல. இது உங்களின் மனநிலை மட்டுமே.
 
சசி வர்ணம் அதில் இன்னும் முக்கியமாக கவனிக்கபடவேண்டியது ஒன்று  , 

பாலியல் சேர்க்கையில் மட்டுமே பொங்கியெழுந்து கருத்து சொல்லுவதும், நேர்த்தியான வழிமுறைகள்பற்றி வகுப்பு எடுப்பதுமாக இருக்கும் எம்மினம், அதே கொள்கைகளை எல்லா விசயத்திலும் கடைபிடிக்குதா? / கடை பிடித்திருக்கிறதா?

வேறு விசயங்களில் எவன் செத்தா எமக்கு என்ன என்று வாழும் எம் சமூகம் இந்த விசயங்களில் மட்டும் சமூக விழிப்புணர்வுபற்றி கொதித்தெழுவது முரண்பாடான ஒன்று.

பாலியல் என்பது கலாச்சாரமல்ல, அது உடல் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விசயம்.

நான் ஒரு ஓரின சேர்க்கையாளனாக ஒருபோதும் இருக்க மாட்டேன்,

அது என் தனிப்பட்ட முடிவு.

ஆனால் அடுத்தவன் ஓரின சேர்க்கையாளனாக இருக்ககூடாது என்று ஒரு போதும் குரல் எழுப்ப மாட்டேன், அது அவனது தனிப்பட்ட வாழ்க்கை.

அவன் செக்ஸ் வாழ்க்கை முறை தவறு என்று நான் குரல் எழுப்ப தகுதி உள்ளவன் என்றால், அவனது வாழ்க்கை முறை அனைத்துக்குமே சார்பாகவோ எதிராகவோ நான் குரல் எழுப்பியே ஆகவேண்டும்.

அது என்னாலோ பிறராலோ முடியாத ஒன்று...

ஏனென்றால் செக்ஸ் மட்டுமா வாழ்க்கை? அதை கடந்து வாழ்க்கையில் இன்னும் பல இருக்கு, அதுக்கு போர்கொடி தூக்கிவிட்டு இதுக்கும் போர்கொடி தூக்குவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

இங்கு பலருக்கு தாம் என்ன கதைக்கிறோம் என்பதே புரிவதில்லை. இங்கு பேசுபொருள் ஒருபாலின சேர்க்கையல்ல. அதை அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி செய்திருந்தால் இதில் சொல்ல ஏதுமில்லை. ஆனால் அதை ஏன் எமது கலாச்சார முறைப்படி செய்தார்கள் என்பதே கேள்வி.

ஒருபாலினத்தவர். இந்துக்களா இருக்க முடியாத?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அவர்கள் வாழ்வது ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கனடா சமுகத்தில். ஆனால் அவர்களின் தார்மீக உணர்வு காபூலில்🤣

ஆகவே தாம் வாழும் நாட்டின் சமூதாய தார்மீக உணர்வையும், சட்டத்தையும் ஏற்கமுடியாமல் அல்லாடுகிறார்கள்.

ஐரோப்பாவில் வசிக்கவும் வேண்டும், ஷரியா சட்டமும் வேண்டும் என்று கேட்போரின் மனநிலையே.

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

அவர்கள் இருவரும் இந்து மதகுரு மந்திம் சொல்லி தேவர்களை அழைத்து தாலிககட்டி ஆடம்பரமாக திருமணம் செய்கிறார்கள் இங்கே அதை ஒரு முற்போக்கு திருமணம் என்று சொல்லியும் எதிர்கிறார்கள் 😭

கடந்த ஞாயிற்று கிழமை தான் சுவிட்சலண் ஒரு பாலினத்தவர் திருமணம் செய்வதை பொது வாக்கெடுப்பு நடத்தி ஓம் என்று முடிவு எடுக்கபட்டது. இந்த செய்தி தமிழ் பெண்கள் பார்த்தால் தாங்களும் அப்படி செய்ய ஊக்கம் பெற்று விடுவார்கள் என்று என்று பயந்து யாழ்களத்தில் செய்தி வராமல் கலாச்சார காவலர்கள் மறைத்து விட்டனர் போலும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.