Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி ! 🚫

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, இணையவன் said:

சரியான வழி சோறு குறைவாகவும் மரக்கறி வகைகளைத் தாராளமாகவும், பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்வதே.

ஒன்றை குறைத்து மற்றதை கூட்டினாலும்  கதை கந்தல் பருப்பு ஒரு நேரம் தேசிய உணவு போல் இருந்தது யூரிக் அசிட் நோர்மலை விட 13க்கு மேல் என்று குத்திப்பார்த்து தெரிந்துகொண்டேன் அன்றுமுதல்  கிழமையில் ஒருநாள்தான் பருப்புவகைகள். 

  • Replies 156
  • Views 14.5k
  • Created
  • Last Reply
46 minutes ago, Justin said:

 சரியான தகவல்கள் இணையவன் - இதை வேறு இடங்களில் நான் எழுதியிருப்பதால் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் 3 வழிகளில் தீட்டாத அரிசி நீரிழிவு போன்ற நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைக்கும்:

1. இயற்கையாகவே ஒருவர் உள்ளெடுக்கும் அளவு தீட்டாத அரிசி சாப்பிடும் போது குறையும் - வயிறு நிறைந்து விடுவதால் -இங்கே உள்ளெடுக்கும் கலோரி குறையும். வெள்ளை அரிசி போன்ற அளவில் சாப்பிட்டால் இந்த வழி வேலை செய்யாது.

ஜஸ்ரின்,

தீட்டாத அரிசி நல்லதெனில், பச்சை அரிசியை இடிச்சு செய்யப்படும் அரிசி மாவும் அதில் செய்யப்படும் இடியப்பம் புட்டு (தேங்காய்ப்பூ நீங்கலாக) உடலுக்கு நல்லதா? நான் சிகப்பு அரிசி மா இடியப்பத்தினதும் புட்டினதும் தீவிர பக்தன் என்பதால் இந்தக் கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

ஜஸ்ரின்,

தீட்டாத அரிசி நல்லதெனில், பச்சை அரிசியை இடிச்சு செய்யப்படும் அரிசி மாவும் அதில் செய்யப்படும் இடியப்பம் புட்டு (தேங்காய்ப்பூ நீங்கலாக) உடலுக்கு நல்லதா? நான் சிகப்பு அரிசி மா இடியப்பத்தினதும் புட்டினதும் தீவிர பக்தன் என்பதால் இந்தக் கேள்வி

ஓம், வெள்ளை மாவை விட சிவப்பு மா இடியப்பம், பிட்டு என்பன ஆரோக்கியம். ஆனால்: அரிசியை இடித்து மாவாகச் சாப்பிடும் போது நீங்கள் உள்ளெடுக்கும் அளவு அதிகமாக இருக்கும் என ஊகிக்கிறேன் (சுவை அல்லது palatability கூட என்பதால்). எனவே, அளவாகச் சாப்பிடலாம்!   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

 யாயினி சாப்பிட முதல் ஒரு   shot எடுத்திட்டு சாப்பிட்டு பாருங்கோ. சிவனே எண்டு சமிச்சிடும். 🤣🤣🤣

வாறன் இப்ப..🤮ஒரு பெடிக்கும் பயம் இல்லாமல் போச்சு.🙆

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கறுப்பு பிறவுண் சிவப்பு அரிசிகளில் உள்ள பிரச்சனை கறியுடன் சாப்பிடும் போது பஸ்மதியும் கறியும் மாதிரி சுவையாக இருக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

ஜேர்மனி வாசிகள் முடிந்தால் உறுதிப்படுத்தவும். அங்கே இப்போ டயபிடிஸ் என உறுதி செய்தால் அதன் பின் மாத்திரைகள் கொடுப்பதில்லையாம்? நேரே ஊசிதானாம். உள்ளதில் பக்கவிளைவு குறைவான விடயம் என்பதாலாம். 

அண்மையில் எனது நண்பனுக்கு நடந்தது...
அவனுக்கு டயபிடிஸ் என வைத்தியர்கள் உறுதி செய்த பின்...

தினசரி வயிற்றில் ஊசி.

107696-800-0

சுகர் அளவை கண்காணிக்க நவீன தொழில்  நுட்பம்.

Insulin: Ein Meilenstein der Medizin wird 100 Jahre alt | aponet.de

கைத்தொலைபேசியில் எப்போதும் உங்கள் சுகர் அளவை கண்காணித்து கொள்ளலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்த கறுப்பு பிறவுண் சிவப்பு அரிசிகளில் உள்ள பிரச்சனை கறியுடன் சாப்பிடும் போது பஸ்மதியும் கறியும் மாதிரி சுவையாக இருக்காது.

எல்லாம் நாக்கு செய்யிற வேலை.....நாக்கு மட்டும் தான் கேக்குது சுவை சுவையாக.......எந்த சாப்பாடும் நாக்கை கடந்து தொண்டை குழிக்குள் சென்று விட்டால் களிமண்ணும் ஆட்டுறைச்சியும் ஒண்டுதான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் நாக்கு செய்யிற வேலை.....நாக்கு மட்டும் தான் கேக்குது சுவை சுவையாக.......எந்த சாப்பாடும் நாக்கை கடந்து தொண்டை குழிக்குள் சென்று விட்டால் களிமண்ணும் ஆட்டுறைச்சியும் ஒண்டுதான் 🤣

உண்மை தான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அண்மையில் எனது நண்பனுக்கு நடந்தது...
அவனுக்கு டயபிடிஸ் என வைத்தியர்கள் உறுதி செய்த பின்...

தினசரி வயிற்றில் ஊசி.

107696-800-0

சுகர் அளவை கண்காணிக்க நவீன தொழில்  நுட்பம்.

Insulin: Ein Meilenstein der Medizin wird 100 Jahre alt | aponet.de

கைத்தொலைபேசியில் எப்போதும் உங்கள் சுகர் அளவை கண்காணித்து கொள்ளலாம்.

தகவலுக்கு நன்றி. இந்த நவீன தொழில் நுட்ப விசயம் இப்போ இங்கேயும் roll out ஆக தொடங்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Justin said:

ஓம், வெள்ளை மாவை விட சிவப்பு மா இடியப்பம், பிட்டு என்பன ஆரோக்கியம். ஆனால்: அரிசியை இடித்து மாவாகச் சாப்பிடும் போது நீங்கள் உள்ளெடுக்கும் அளவு அதிகமாக இருக்கும் என ஊகிக்கிறேன் (சுவை அல்லது palatability கூட என்பதால்). எனவே, அளவாகச் சாப்பிடலாம்!   

தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை அதனால் தான் உங்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது. அதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் தான் ஒரேவழி என்பது விஞ்ஞான மருத்துவத்தின் கண்ணோட்டம்.

நான் பிறந்தது முதல் இத்தனை வருடங்கள் சுரக்கப்பட்ட இன்சுலின் இப்போது மட்டும் ஏன் சுரக்கவில்லை? காரணம் தெரியாது. காரணம் தெரியாமல் ஒரு நோய்க்கு சிகிச்சையளிப்பது விஞ்ஞானமாகுமா? தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்பது மட்டும் தெரிந்துந்துவிட்டது.

பின்னர் அதை சுரக்க வைப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுவது தானே அறிவியல் மருத்துவமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நான் அறிந்த வரையில் type 2 வினர்கு உடலில் உள்ள கொழுப்பு படிவால் இது சுரக்காமல் போகிறதி. இங்கிலாந்தின் முண்ணணி அரசியல்வாதியாய் இருந்த Tom Watson உட்பட பலர் சடுதியான, எடை குறைப்பு மூலம் டைப்2 வை remission (நோயை மாற்றல்) செய்துள்ளனர். ஆனால் எல்லா டைப்2 வையும் இப்படி மாத்த முடியாது.

இது முதலில் நியூகாசல் யூனிவர்சிட்டியில் பரீட்சிக்க பட்டது.

டைப் 1 பிறக்கும் போதே பன்கிரியஸ் இன்சுலீனை சுரப்பதில்லை (தெரேசா மே). இப்போ இது auto immune தாக்கத்தால் என நினைகிறார்கள். ஆட்டோ இமூயூன் தாக்கம் என்றால் எங்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியே, தவறாக எங்கள் உடலில் ஒரு பாகத்தை வெளிச்சக்தி ( foreign body) என பிழையாக இனம் கண்டு, மேலதிகமாக செயல்பட்டு செயலிழக்க செய்வது. அப்படி பன்கிரியாசின் இன்சுலீன் சுரக்கும் இயல்பு பாதிக்கபடும். 

இப்போ டைப் 1.5 என ஒன்றை இனம் கான்கிறார்கள். இது டைப் 1 போலத்தான். ஆனால் பிறப்பில் ஏற்படாமல் 18-28 வயதில் ஏற்படுகிறது( பாகிஸ்தான் கிரிகெட் வீரர் வாசிம் அக்ரம்). 

ஆகவே டைப் 2 - உடல் உழைக்காமல் உண்ணுபவத்களுக்கு வரும் life style சம்பந்த பட்ட நோயாகினும். டைப்1, 1.5 அப்படி அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

நந்து,

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து ஒவ்வொரு நாளும் சாப்பிடுவது ஆம்பிளைகளுக்கு கூடாது என்று சொல்லியினம். 'முக்கியமான' விடயத்தில் நாட்டமும் இல்லாமல்  'கெதி'யன முடிஞ்சு விடுமாம் என்றினம்.. உண்மையோ இது?

பயத்த காட்டிட்டியே பரமா 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎10‎-‎2021 at 14:25, நிழலி said:

நந்து,

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து ஒவ்வொரு நாளும் சாப்பிடுவது ஆம்பிளைகளுக்கு கூடாது என்று சொல்லியினம். 'முக்கியமான' விடயத்தில் நாட்டமும் இல்லாமல்  'கெதி'யன முடிஞ்சு விடுமாம் என்றினம்.. உண்மையோ இது?

இதெல்லாம் யாரோ கிளப்பி விட்ட கதை ...வெந்தயத்தில் பைபர் அதிகம் உள்ளது ...ஒரு மனிதனுக்கு இனிப்பு , காரம் எவ்வளவு முக்கியமோ அதை போல கசப்பும் அவசியம் 
 
On ‎25‎-‎10‎-‎2021 at 13:11, பெருமாள் said:

தெரிந்த நண்பர் ஒருத்தர் விடிகாலையில் வெந்தயம் தானும் உண்டு எங்களையும் சாப்பிட சொல்லி வற்புறுத்துவார் நமக்கு தான் கோப்பியின்றி விடியாதே .

எனக்கும் முன்பு காலமை வெறும் வயிற்றில் கோப்பி குடிக்காமல் இருக்க முடியாது ...இப்ப அப்படி இல்லை ...எல்லாம் பழக்கம் தான் ..வெந்தயத்தை சப்பி சாப்பிட்டுட்டு  கோப்பி குடிக்க போங்கோ ...எல்லாம் செமிச்சிடும்

On ‎25‎-‎10‎-‎2021 at 16:30, குமாரசாமி said:

உப்பிடியான ஆக்கள் கன பேர் திரியினம்.
கோபுரத்தின் அழகு கிட்ட நிண்டு பார்த்தால் தெரியாதாம்

அந்த வயசு விபரம் தெரியாத வயசு 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று லண்டனில் கருப்பு அரிசி தேடிக் களைத்துவிட்டேன். கடைசியில் ஒரு சைனீஸ்  கடையில் கிடைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை அதனால் தான் உங்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது. அதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் தான் ஒரேவழி என்பது விஞ்ஞான மருத்துவத்தின் கண்ணோட்டம்.

நான் பிறந்தது முதல் இத்தனை வருடங்கள் சுரக்கப்பட்ட இன்சுலின் இப்போது மட்டும் ஏன் சுரக்கவில்லை? காரணம் தெரியாது. காரணம் தெரியாமல் ஒரு நோய்க்கு சிகிச்சையளிப்பது விஞ்ஞானமாகுமா? தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்பது மட்டும் தெரிந்துந்துவிட்டது.

பின்னர் அதை சுரக்க வைப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுவது தானே அறிவியல் மருத்துவமாகும். 

கீழே இருக்கும் படத்தை அன்புடன் நானே தயாரித்திருக்கிறேன்😂. விடயம் இதை விட சிக்கல் என்றாலும், உங்கள் கேள்விக்கு இது பதில் தருமென நினைக்கிறேன்: இன்சுலின் போய் அதன் கதவை எங்கள் உறுப்புகளில் திறந்தால் தான், உடல் கலங்கள் சீனிக்கு கதவைத் திறக்கும்! 

அனேகமாக வயது போன பின்னர் வருவது, இன்சுலின் சுரக்கும், ஆனால் போய் அதன் கதவைத் திறக்க இயலாத நிலை - எனவே சீனியும் கலங்களுக்குள் வர முடியாமல் இரத்தத்தில் தேங்கும். இது வேறு பிரச்சினைகளையும் கொண்டு வரும். 

Picture1.jpg

Edited by Justin
படம் சேர்க்கப் பட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, நந்தன் said:

பயத்த காட்டிட்டியே பரமா 

பயத்திலையே கனவிசயம் தடைப்பட்டுப் போகும் நந்தா....🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

அந்த வயசு விபரம் தெரியாத வயசு 

இல்லை.....60,70 களில் லோஞ்சு போட்ட மேட்டுக்குடிகள். அவையள் ஒன்லி ஃபொறின் வெஜிடபிள் மட்டும் தான் சாப்பிடுவினமாம்.

அதே ஆக்கள் வெளிநாட்டுக்கு வந்தாப்பிறகு வாடல் முருக்கம் இலைக்கு தவண்டடிச்சவையள் 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று லண்டனில் கருப்பு அரிசி தேடிக் களைத்துவிட்டேன். கடைசியில் ஒரு சைனீஸ்  கடையில் கிடைத்தது.

கறுப்பு அரிசி வாங்கியதற்கான ஆதாரத்தை சமையலுடன் காட்டவும்...😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பயத்திலையே கனவிசயம் தடைப்பட்டுப் போகும் நந்தா....🤣

அது இயல்பாக நடப்பதால், எனக்கு இந்த சந்தேகம் வரல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 26/10/2021 at 22:24, Justin said:

கீழே இருக்கும் படத்தை அன்புடன் நானே தயாரித்திருக்கிறேன்😂. விடயம் இதை விட சிக்கல் என்றாலும், உங்கள் கேள்விக்கு இது பதில் தருமென நினைக்கிறேன்: இன்சுலின் போய் அதன் கதவை எங்கள் உறுப்புகளில் திறந்தால் தான், உடல் கலங்கள் சீனிக்கு கதவைத் திறக்கும்! 

அனேகமாக வயது போன பின்னர் வருவது, இன்சுலின் சுரக்கும், ஆனால் போய் அதன் கதவைத் திறக்க இயலாத நிலை - எனவே சீனியும் கலங்களுக்குள் வர முடியாமல் இரத்தத்தில் தேங்கும். இது வேறு பிரச்சினைகளையும் கொண்டு வரும். 

Picture1.jpg

நேரம் எடுத்து வரைபடங்களுடன் விளக்கம் தந்ததிற்கு முதற்கண் நன்றி.

முதியவர்களுக்கு நோய்கள் வருவது இயல்பான ஒன்றுதான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளையவர்களையே இந்த இன்சுலின் பிரச்சனை  பிடிக்கின்றது. உடலில் உள்ள எல்லா அவயங்களுக்கும் மாற்று சிகிச்சை இருக்கும் போது இங்கே இதற்குரிய உறுப்பு மட்டும் ஏன் வேறுபட்டு நிற்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

சர்க்கரை வியாதிக்கு பாகற்காய் நல்லதென்கிறார்களே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/10/2021 at 18:38, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை...  அனுப்பிய, கவுனி அரிசி...

வணக்கம் சிறித்தம்பி! நான் இப்ப ஒரு உண்மையை சொல்லப்போறன். உந்த கவுனி அரிசி என்னெண்டு என்ரை கண்ணிலை பட்டது எண்டதை சொல்லுறன். என்ரை வீட்டுக்கு கிட்டடியிலை  தமிழ் நண்பர் ஒராள் இருக்கிறார். எப்பாலும் இருந்திட்டு சந்திச்சு கதைப்பம். இஞ்சை யாழிலை ஆரைப்போல இருப்பார் எண்டால் ம்....ம்.....ம்.....ம் கிட்டத்தட்ட எங்கடை கட்டதுரை மாதிரியெண்டு  சும்மா வைப்பமே. 🤣

இப்ப பிரச்சனைக்கு வாறன்....😎

என்னெண்டால் அந்த தமிழ் நண்பரை கிட்டடியிலை சந்திச்ச முட்டம் கேட்டார் தம்பி உங்கினேக்கை எங்கேயும் மாப்பிளை சம்பா அரிசி வாங்கலாமோ எண்டார்.நானெண்டால் உந்த அரிசியை இப்பதான் கேள்விப்படுறன். ஏன் என்ன விசயம் உந்த அரிசியிலை என்ன இருக்கெண்டு கேட்டன்....நரம்பு தளர்ச்சிக்கு நல்லதாம் எண்டு கேள்விப்பட்டனடாப்பா.அதுதான் நானும் ஒருக்கால் சாப்பிட்டு பாப்பம் எண்டிருக்கிறன் எண்டார்...🥰

நானும் வீட்டை வந்து  கூகிள்ளை தேடினால் கன அரிசி அயிட்டங்கள் சாரமாரியாய் வந்து விழுந்துது. அதிலை அம்பிட்டதுதான் கவுனி அரிசி....

சரி இப்ப மாப்பிளை சம்பா அரிசிக்கு வருவம்..... என்ரை ஜேர்மன் கட்டதுரை  மாப்பிளை சம்பா என்னத்துக்கு தேடினவர் எண்டு ஆராயஞ்சு பாத்தால் எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சுது....அதை என்ரை வாயாலை என்னெண்டு சொல்லுவன் மாப்பிளை சம்பா  எதுக்கு விசேசம் எண்டதை நீங்களே போய் பாருங்கோ...😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உடலில் உள்ள எல்லா அவயங்களுக்கும் மாற்று சிகிச்சை இருக்கும் போது இங்கே இதற்குரிய உறுப்பு மட்டும் ஏன் வேறுபட்டு நிற்கின்றது?

கெதியில வரக்கூடும் என நினைக்கிறன்.

https://www.diabetes.co.uk/artificial-pancreas.html

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

சர்க்கரை வியாதிக்கு பாகற்காய் நல்லதென்கிறார்களே?

கெதியில ஒரு முடிவுக்கு வாங்கப்பா 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வணக்கம் சிறித்தம்பி! நான் இப்ப ஒரு உண்மையை சொல்லப்போறன். உந்த கவுனி அரிசி என்னெண்டு என்ரை கண்ணிலை பட்டது எண்டதை சொல்லுறன். என்ரை வீட்டுக்கு கிட்டடியிலை  தமிழ் நண்பர் ஒராள் இருக்கிறார். எப்பாலும் இருந்திட்டு சந்திச்சு கதைப்பம். இஞ்சை யாழிலை ஆரைப்போல இருப்பார் எண்டால் ம்....ம்.....ம்.....ம் கிட்டத்தட்ட எங்கடை கட்டதுரை மாதிரியெண்டு  சும்மா வைப்பமே. 🤣

குமாரசாமி அண்ணை... நீங்கள் யாழ்  கட்டதுரை, என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டீர்கள்.
அது யாரென்று... யோசிக்க, பல முகங்கள் கண் முன்னே வந்து போனது. 
அதனை உறுதிப்  படுத்த, நீங்கள் அவரின் பெயரை...
"பப்ளிக்கில"...  சொல்ல விருப்பம் இல்லாவிட்டால்,   ப்ளீஸ்... தனி மடலில், ரெல் மீ. 😂

மற்றது இந்த அரிசி விசயத்தைப் பற்றி... கனக்க  கதைக்க வேண்டி உள்ளதால்,
இன்று, பின்னேரம்... விலாவரியாக கதைப்போம். 🤣

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.