Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த தமிழ் யுவதி; பெற்றோரின் அதிரடி நடவடிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் பெரும்பான்மை இன இளைஞனை காதல் திருமணம் செய்த மல்லாவியைச் சேர்ந்த 18 வயது இளம் யுவதியை பெற்றோர் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த 19 வயதான குறித்த இளைஞனும், மல்லாவியைச் சேர்ந்த 18 வயதான தமிழ் யுவதியும் காதலித்து, கடந்த யூலை மாதம் வவுனியாவில் பதிவுத் திருமணம் செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் திருமணத்தின் பின் தேக்கவத்தையிலுள்ள கணவன் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (22) வாகனமொன்றில் அங்கு சென்ற பெண்ணின் பெற்றோர்கள், யுவதியை பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகின்றது.

அதன்போது யுவதியை கூட்டிச்செல்வதை தடுக்க முயன்ற கணவனின் தந்தையையும் அவர்கள் தாக்கியுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் மல்லாவிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மல்லாவி பொலிஸார் பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

https://www.tamilarul.net/2021/10/Wedding _0287054434.html

மல்லாவியை சேர்ந்த காதல் மனைவியை மீட்டுத் தாருங்கள்: வவுனியாவில் 200 அடி கோபுரத்தில் ஏறி காதலன் போராட்டம்; வவுனியா தேக்கவத்தை பகுதியில் 200 அடி உயரமான தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.தான் காதலித்த பெண்ணை பதிவு திருமணம் செய்த நிலையில், யுவதியின் பெற்றோர் அவரை கடத்தில் சென்று விட்டதாகவும், காதல் மனைவியை மீட்டுத்தரக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு்ள்ளார்.

தேக்கவத்தையை சேர்ந்த 19 வயதான உபாலி வீரசேகரகே நிசாந்த வீரசேகர என்ற  இளைஞர் மல்லாவி பகுதியை சேர்ந்த 18 வயதான சதுஜா என்பவரை காதலித்து பதிவுத்திருமணம் செய்துள்ளார்.பின்னர் அவரை அழைத்துக்கொண்டு வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சிலகாலம் வாழ்ந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி பெண்ணின் உறவினர்கள் குறித்த வீட்டிற்கு வந்து பெண்ணை வாகனம் ஒன்றில் ஏற்றி அவர்களது வீட்டிற்கு ஏற்றிச் சென்றனர்.

தன்னை தாக்கிவிட்டு தனது மனைவியை அவர்கள் கடத்திச்சென்றதாக குறித்த இளைஞர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.எனினும் பொலிசார் குறித்த விடயத்தில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் குறித்த இளைஞர் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதுடன்,கூரிய ஆயுதத்தால் தனது கையினையும் அறுத்திருந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகைதந்திருந்தனர். எனினும் பொலிசார் குறித்த விடயத்தில் உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை என கோபுரத்தில் ஏறிய இளைஞரின் உறவினர்கள் பொலிசாருடன் முரண்பட்டதுடன் நீண்டநேரமாகியும், இளைஞரை மீட்பதற்கான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

காதலியை அழைத்து வருவதாக தீயணைப்பு துறையினர் கூறியதையடுத்து கீழே இறங்கிய இளைஞன், பின்னர் மீண்டும் ஏறிக் கொண்டு விட்டார். 200 அடி உயரத்தில் அவர் ஏறி நிற்கிறார்.இளைஞனிற்கு துணையாக மைத்துனனும் கோபுரத்தில் ஏறினார். பின்னர் அவர் கீழே இறக்கப்பட்டார்.

காதலனை மீட்பதற்காக மற்றும் இரு இளைஞர்கள் கோபுரத்தின் மீது ஏறியநிலையில் அவர்களது முயற்சியும் பலனிளிக்கவில்லை.பொலிசார் உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென கூறி, காதலனின் உறவினர்கள் வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக ஏ9வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.ujirppu.com/breaking-news/மல்லாவியை-சேர்ந்த-காதல்/

  • கருத்துக்கள உறவுகள்

பெடிக்கு 19, பெட்டைககு 18!!!

மகளை கடத்தியவர்கள் என்று, பெற்றோர் செய்தது சரியானது தானே. இதில் என்ன, சிங்களம், தமிழ்?

கிறுக்குக் பயல் போலுல்லது. கையை வேற அறுத்திருக்கிறாப்போல...

🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

லவ் ஜிகாத்...😂

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

பெடிக்கு 19, பெட்டைககு 18!!!

மகளை கடத்தியவர்கள் என்று, பெற்றோர் செய்தது சரியானது தானே. இதில் என்ன, சிங்களம், தமிழ்?

கிறுக்குக் பயல் போலுல்லது. கையை வேற அறுத்திருக்கிறாப்போல...

🤔

18 வயதுக்கு மேல் என்றால் மேஜர். இலங்கையில் சட்டபடி திருமணம் செய்ய, தன் வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க முடியும். வவுனியா திருமண பதிவாளர் சட்டபடி திருமணமும் செய்து வைத்தபின் கணவனிடம் இருந்து மனைவியை குண்டுகட்டா தூக்கி போகும் பெற்றார்தான் மகளை கடத்தியதாக கருதப்படும்.

13 minutes ago, Kapithan said:

லவ் ஜிகாத்...😂

ஐயோ இப்பதான் எல்லாரும் ஒரு மாதிரி மறந்திருக்க….மறுபடியும் அங்கயே இழுத்துட்டு போறீங்களே…..🤣

  • கருத்துக்கள உறவுகள்

கொரானா வைரஸ் இடம் மாறி இதயத்துக்க பூந்திட்டு பிள்ளைகளுக்கு. ஒன்று ஒன்றரை வருடமாக சனங்கள் முகமூடியோட. வெளியில் திரியவும் ஏலாது. கில்லாடிகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பழகிவிட்டு கழட்டிவிடவில்லை. சட்டப்படி பதிவு திருமணம் செய்திருக்கிறார். காதலி கையை விட்டு போனதும் உயிரையே மாய்த்துக்கொள்ள தயாராகிவிட்டார்.

கொஞ்சம் சீரியசான காதல்போல்தான் தெரிகிறது, எனது இனம் கலப்பினமாவதை நிச்சயமாக மனசு ஏற்காது  அதே நேரம் ஒரு உள் நோக்கமில்லாத உண்மை காதலாக  அது இருந்து  காதலர்கள் பிரிக்கப்பட்டு அவர்களை அழ வைத்தால்  அது மனசுக்கு கவலையான ஒன்றுதான்.

பாதிக்கப்பட்ட சிங்கள குடும்பம் ஏழை அல்லது பெரும் அந்தஸ்து செல்வாக்கு இல்லாத குடும்பம் போலிருக்கும் என்று நினைக்கிறேன், இல்லையெனின்  வடபகுதியில் ராணுவ ஆட்சி அதிகாரம் உள்ள நிலையில் கடத்தி சென்றவர்களை யாழ்ப்பாணம் வரை பின்னால் கலைச்சுகொண்டு போய் பொலிஸ் ஆதரவுடன் அவர்களை தாக்கி பெண்ணை இழுத்துக்கொண்டு வந்திருப்பார்கள்.

இப்படி ரெலிபோன் கம்பத்தில் ஏறி நின்று ஒப்பாரி வைத்திருக்கமாட்டார்கள்.

பெண்ணின் பெற்றோர் பணம், செல்வாக்கு உள்ளவர்களாயிருக்கவேண்டும், இல்லையெனில் ஒரு சிங்களவனை வவுனியாவில் வைச்சு தாக்கி  பெண்ணை மீட்டு செல்வது அத்தனை சுலபமான ஒன்றல்ல.

எல்லாம் ஒரு அனுமானம்தான், எது எப்படியோ வேறு இனத்தவனை காதலிப்பது என்று முடிவெடுத்தாகிவிட்டது அது அவர்கள் பிரச்சனை, 

காதலிச்சதுதான் காதலிச்சீர்கள், ஒரு முஸ்லீமை காதலிக்காது சிங்களவனை காதலிச்சது மனசுக்கு சிறு ஆறுதல்.

இஸ்லாமியர்களை காதலித்தால் மறுகணம் முட்டாக்கு போட்டுக்கொண்டு குரான் ஓதி முழு இஸ்லாமியராக மாறியே ஆகவேண்டும், அது ஒரு உள்நோக்கம் கொண்ட காதல்.

ஒரு சிங்களவனை காதலித்தால் திருமணம் செய்தால் எந்தகாலமும் இனமாற்றம் நிகழபோவதில்லை, அவர்களது சந்ததிகூட அப்பா சிங்களம், அம்மா தமிழ் என்றே சொல்லி வாழும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

18 வயதுக்கு மேல் என்றால் மேஜர். இலங்கையில் சட்டபடி திருமணம் செய்ய, தன் வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க முடியும். வவுனியா திருமண பதிவாளர் சட்டபடி திருமணமும் செய்து வைத்தபின் கணவனிடம் இருந்து மனைவியை குண்டுகட்டா தூக்கி போகும் பெற்றார்தான் மகளை கடத்தியதாக கருதப்படும்.

நன்றி.

பெட்டைக்கு 18 வயது இல்லையாம் எண்டு வேற எங்கையோ வாசிச்ச நிணைவு. சரி விடுங்க....

இந்தியாவி்ல் ஆணுக்கு 21 , பெண்ணுக்கு 18

எனக்கெண்டா, 18 முடியவேணுமா, 17 முடியவேணுமா எண்டதை ஒருக்கா விளக்கேலுமே. 😁

நான் பிழை விடப்படாது, கண்டியளே.... 😜

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, valavan said:

பழகிவிட்டு கழட்டிவிடவில்லை. சட்டப்படி பதிவு திருமணம் செய்திருக்கிறார். காதலி கையை விட்டு போனதும் உயிரையே மாய்த்துக்கொள்ள தயாராகிவிட்டார்.

கொஞ்சம் சீரியசான காதல்போல்தான் தெரிகிறது, எனது இனம் கலப்பினமாவதை நிச்சயமாக மனசு ஏற்காது  அதே நேரம் ஒரு உள் நோக்கமில்லாத உண்மை காதலாக  அது இருந்து  காதலர்கள் பிரிக்கப்பட்டு அவர்களை அழ வைத்தால்  அது மனசுக்கு கவலையான ஒன்றுதான்.

பாதிக்கப்பட்ட சிங்கள குடும்பம் ஏழை அல்லது பெரும் அந்தஸ்து செல்வாக்கு இல்லாத குடும்பம் போலிருக்கும் என்று நினைக்கிறேன், இல்லையெனின்  வடபகுதியில் ராணுவ ஆட்சி அதிகாரம் உள்ள நிலையில் கடத்தி சென்றவர்களை யாழ்ப்பாணம் வரை பின்னால் கலைச்சுகொண்டு போய் பொலிஸ் ஆதரவுடன் அவர்களை தாக்கி பெண்ணை இழுத்துக்கொண்டு வந்திருப்பார்கள்.

இப்படி ரெலிபோன் கம்பத்தில் ஏறி நின்று ஒப்பாரி வைத்திருக்கமாட்டார்கள்.

பெண்ணின் பெற்றோர் பணம், செல்வாக்கு உள்ளவர்களாயிருக்கவேண்டும், இல்லையெனில் ஒரு சிங்களவனை வவுனியாவில் வைச்சு தாக்கி  பெண்ணை மீட்டு செல்வது அத்தனை சுலபமான ஒன்றல்ல.

எல்லாம் ஒரு அனுமானம்தான், எது எப்படியோ வேறு இனத்தவனை காதலிப்பது என்று முடிவெடுத்தாகிவிட்டது அது அவர்கள் பிரச்சனை, 

காதலிச்சதுதான் காதலிச்சீர்கள், ஒரு முஸ்லீமை காதலிக்காது சிங்களவனை காதலிச்சது மனசுக்கு சிறு ஆறுதல்.

இஸ்லாமியர்களை காதலித்தால் மறுகணம் முட்டாக்கு போட்டுக்கொண்டு குரான் ஓதி முழு இஸ்லாமியராக மாறியே ஆகவேண்டும், அது ஒரு உள்நோக்கம் கொண்ட காதல்.

ஒரு சிங்களவனை காதலித்தால் திருமணம் செய்தால் எந்தகாலமும் இனமாற்றம் நிகழபோவதில்லை, அவர்களது சந்ததிகூட அப்பா சிங்களம், அம்மா தமிழ் என்றே சொல்லி வாழும்.

உண்மைதான் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்பில் நாம் “இனம் பெருக்கிறம் பேர்வழி” எண்டு தலையிட முடியாது.

இல்லாவிட்டால் தனது சாதி வெறியை மறைக்க “நாடக காதல்” என்று ஒன்றை கற்பித்து, அதன் வழி ஆணவ கொலைகளை ஊக்குவிக்கும் இராமதாஸ் போல நாமும் ஆகிவிடுவோம்.

நடந்ததை பார்க்க உண்மை காதல் போலவே தெரிகிறது.

31 minutes ago, valavan said:

ஒரு சிங்களவனை காதலித்தால் திருமணம் செய்தால் எந்தகாலமும் இனமாற்றம் நிகழபோவதில்லை, அவர்களது சந்ததிகூட அப்பா சிங்களம், அம்மா தமிழ் என்றே சொல்லி வாழும்.

இது எவ்வளவுதூரம் சரி என தெரியவில்லை. வவுனியா தெற்கில் வளரும் இவர்களின் குழந்தையும், தாயும் சிங்களவர்களாகவே மாறிவிடுவார்கள். இரெண்டு சந்ததிக்குள், அம்மாம்மாவின் பெற்றோர் தமிழர் என்ற நிலை வரும். 

இதுதான் சிங்கள இனத்தின் வட்டத்தை பெருபிக்கும் உத்தி.

எம்மை விட காலத்தால் மிக இளைய இனம், அருகில் தமிழ்நாடு போல ஒரு நிலப்பரப்பு இல்லை. ஆனாலும் இலங்கையில் 75% எப்படி சிங்களவர்கள்?

இந்த அணுகுமுறைதான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

பெட்டைக்கு 18 வயது இல்லையாம் எண்டு வேற எங்கையோ வாசிச்ச நிணைவு. சரி விடுங்க....

சரி விடுவம், எங்கயோ வாசிச்சதுதானே? 🤣.

14 minutes ago, Nathamuni said:

இந்தியாவி்ல் ஆணுக்கு 21 , பெண்ணுக்கு 18

ஓம் ஆனால் வவுனியா சிறிலங்காவிலதானே இருக்கு🤣.

16 minutes ago, Nathamuni said:

எனக்கெண்டா, 18 முடியவேணுமா, 17 முடியவேணுமா எண்டதை ஒருக்கா விளக்கேலுமே. 😁

இது பழைய போத்துகீசர் இலங்கைக்கு எந்த நூற்றாண்டு வந்தனர் என்ற பிரச்சனையின் தொடர்சியோ?🤣. பகிடிதான்.

உங்களுக்கு உங்கட 1st birthday முடிஞ்ச அடுத்த நாள் எத்தனை வயசு எண்டு யோசிச்சா….பதில் டபக்கெண்டு வந்திடும்.

19 minutes ago, Nathamuni said:

நான் பிழை விடப்படாது, கண்டியளே.... 😜

லேட்டாகவேணும் இந்த நிலைப்பாட்டுக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள். இனி ஏறுமுகம்தான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

உண்மைதான் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்பில் நாம் “இனம் பெருக்கிறம் பேர்வழி” எண்டு தலையிட முடியாது.

இல்லாவிட்டால் தனது சாதி வெறியை மறைக்க “நாடக காதல்” என்று ஒன்றை கற்பித்து, அதன் வழி ஆணவ கொலைகளை ஊக்குவிக்கும் இராமதாஸ் போல நாமும் ஆகிவிடுவோம்.

நடந்ததை பார்க்க உண்மை காதல் போலவே தெரிகிறது.

இது எவ்வளவுதூரம் சரி என தெரியவில்லை. வவுனியா தெற்கில் வளரும் இவர்களின் குழந்தையும், தாயும் சிங்களவர்களாகவே மாறிவிடுவார்கள். இரெண்டு சந்ததிக்குள், அம்மாம்மாவின் பெற்றோர் தமிழர் என்ற நிலை வரும். 

இதுதான் சிங்கள இனத்தின் வட்டத்தை பெருபிக்கும் உத்தி.

எம்மை விட காலத்தால் மிக இளைய இனம், அருகில் தமிழ்நாடு போல ஒரு நிலப்பரப்பு இல்லை. ஆனாலும் இலங்கையில் 75% எப்படி சிங்களவர்கள்?

இந்த அணுகுமுறைதான் காரணம்.

இதனால் தான் தமிழர்கள் இனத்தூய்மை என்ற மாயமானைத் தலையில் தூக்கி வைத்து, இருக்கும் சனத்தொகையையும் குறைத்துக் கொள்ளக் கூடாது என நினைக்கிறேன்.

சிங்களவர்கள் இப்படி ஒதுக்காமல் உள்வாங்கி 75% ஆகி விட்டார்கள் - நாம் ஒதுக்கி, வெட்டி, பொலிஷ் போட்டு 10% இற்குக் கீழ் போய் விடுவோம்! 😂

21 minutes ago, Nathamuni said:

நன்றி.

பெட்டைக்கு 18 வயது இல்லையாம் எண்டு வேற எங்கையோ வாசிச்ச நிணைவு. சரி விடுங்க....

இந்தியாவி்ல் ஆணுக்கு 21 , பெண்ணுக்கு 18

எனக்கெண்டா, 18 முடியவேணுமா, 17 முடியவேணுமா எண்டதை ஒருக்கா விளக்கேலுமே. 😁

நான் பிழை விடப்படாது, கண்டியளே.... 😜

17.9 இற்கும் 18.0 இற்கும் வேறுபாடு தெரியாமல் கத்தி முனையில நடந்திருக்கிறீங்கள் போலிருக்கே? கவனம் நாதம், இருப்பது யு.கே!😄

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இது எவ்வளவுதூரம் சரி என தெரியவில்லை. வவுனியா தெற்கில் வளரும் இவர்களின் குழந்தையும், தாயும் சிங்களவர்களாகவே மாறிவிடுவார்கள். இரெண்டு சந்ததிக்குள், அம்மாம்மாவின் பெற்றோர் தமிழர் என்ற நிலை வரும். 

எனக்கு தெரிந்த நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த தமிழர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு தமிழ் பேச தெரியும் ஆனால் எழுத வராது, சிங்களத்தில் சரளமாக பேசவும் எழுதவும் அவரால் முடியும்.

அவர் சொன்னார் தமது பகுதியில் பல தமிழ் குடும்பங்கள் சில தலைமுறைக்கு முன்னரே சிங்கள வழி கல்வி என்றும் பெளத்த மதத்திற்கு மாறியும் கலப்பு திருமணங்கள் செய்தும் முழு சிங்களவர்களாகவே மாறிவிட்ட பின்பும் பெரும்பான்மை கடும்போக்கு சிங்கள வாதிகள் அவர்களை இன்றும் சிங்களவர்கள் என்றே ஏற்றுக்கொள்ளவில்லை என்று.

தமிழர் தரப்பிலும் சரி சிங்களவர்கள் தரப்பிலும் சரி கலப்பு ரீதியாக குடும்பமானவர்களை காலம் காலமாக முழுமையாக  எமது இனம் என்று ஏற்றுகொள்பவர்கள் குறைவு, எப்போதும் ஒரு தூர பார்வையுடனேயே இருபக்கமும் பார்க்கும் என்பதை இலங்கையில் வாழ்ந்த காலங்களில்  சில இடங்களில் இரு பக்கமும் அவதானித்திருக்கிறேன்.

நாங்கள் மனதளவில் மலையக தமிழர்களை எமது தமிழ் மக்கள் என்று இன்றும் ஏற்றுக்கொள்ளாததுபோல்தான் இந்த கலப்பு திருமண தம்பதிகள் தலைமுறைகளின் வாழ்வும் தொடரும் என்றே நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

லேட்டாகவேணும் இந்த நிலைப்பாட்டுக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள். இனி ஏறுமுகம்தான்🤣.

ஆறுமுகத்தாரை நம்பிறதால, ஏறுமுகம் தான்.

அந்த கிரிப்டோ கரண்சி விசயம் தான், கோசன் அண்ணரை நம்பேலுமா எண்டு யோசணை.... 😁

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, valavan said:

எனக்கு தெரிந்த நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த தமிழர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு தமிழ் பேச தெரியும் ஆனால் எழுத வராது, சிங்களத்தில் சரளமாக பேசவும் எழுதவும் அவரால் முடியும்.

அவர் சொன்னார் தமது பகுதியில் பல தமிழ் குடும்பங்கள் சில தலைமுறைக்கு முன்னரே சிங்கள வழி கல்வி என்றும் பெளத்த மதத்திற்கு மாறியும் கலப்பு திருமணங்கள் செய்தும் முழு சிங்களவர்களாகவே மாறிவிட்ட பின்பும் பெரும்பான்மை கடும்போக்கு சிங்கள வாதிகள் அவர்களை இன்றும் சிங்களவர்கள் என்றே ஏற்றுக்கொள்ளவில்லை என்று.

தமிழர் தரப்பிலும் சரி சிங்களவர்கள் தரப்பிலும் சரி கலப்பு ரீதியாக குடும்பமானவர்களை காலம் காலமாக முழுமையாக  எமது இனம் என்று ஏற்றுகொள்பவர்கள் குறைவு, எப்போதும் ஒரு தூர பார்வையுடனேயே இருபக்கமும் பார்க்கும் என்பதை இலங்கையில் வாழ்ந்த காலங்களில்  சில இடங்களில் இரு பக்கமும் அவதானித்திருக்கிறேன்.

நாங்கள் மனதளவில் மலையக தமிழர்களை எமது தமிழ் மக்கள் என்று இன்றும் ஏற்றுக்கொள்ளாததுபோல்தான் இந்த கலப்பு திருமண தம்பதிகள் தலைமுறைகளின் வாழ்வும் தொடரும் என்றே நினைக்கிறேன்.

மேலோட்டமாக இப்படி தெரிந்தாலும்  இதில் சில நுணுக்கமான வேறுபாடுகள் உள்ளன.

நீர்கொழும்பு சிங்களவர்களை மேல் நாட்டு சிங்களவர்கள் தமக்கு சமமாக ஏற்காவிடினும், அவர்களும் சிங்களவரே என அடையாளப்படுத்துவதில் மிக தீவிரமாக இருப்பார்கள்.

அதே போல் அவர்களுக்கு இன வெறியை திணிப்பதிலும் முன்னுக்கு நிற்பார்கள்.

அவர்களும் தமது “சிங்களதன்மையை நிரூபிக்க” முடிந்தளவு இனவாதத்தை கக்குவார்கள்.

கிட்டதட்ட ஐந்தாம் வேததுக்கு மாறியவர்கள் போல.

பண்டாரநாயக்க, ஜே ஆர், இப்படி பல இனவாதிகள் தமது “அடி” கேள்விக்கு உள்ளாகும் என பயந்தமையும் அவர்கள் இனவாதத்தை இறுக்கி பிடிக்க ஒரு காரணம். 

ஆகவே இது வட்டத்தை பெருபிக்கும் உத்திதான். 

நீ ஒரு போதும் மலைநாட்டு சிங்களவன் ஆக முடியாது ஆனால் நீ கீழ்நாட்டு சிங்களவன் என்பதை நாம் தொடர்ந்தும் ஏற்க நீ உனது “சிங்களதுவத்தை” தொடர்ந்தும் (தமிழனை அடிப்பதன் மூலம்) நிருபிக்க வேண்டும்.

ஆனால் குடிசன மதிபீட்டில், கலவரத்துக்கு ஆள் சேர்க்க, ஆமியில் சேர, நவீன துட்டு காமினியே நாட்டை காக்க வா என்று உசுப்பேத்த உன்னை சிங்களவனாக ஏற்றுகொள்வோம். 

இந்த ஜோடிக்கு பிறக்கும் பிள்ளை தனது பதிவுகளில் தன்னை சிங்களம் என்றே அடையாளம்படுத்தும். குடும்ப, சமூக, வாய்ப்பு என ஒவ்வொரு மட்டத்திலும் அப்படி செய்வதே இலாபம் என அழுத்தம் கொடுத்து, அப்படி செய்ய வைக்கும் தந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. 

30 minutes ago, Nathamuni said:

கோசான்  அண்ணரை நம்பேலுமா எண்டு யோசணை.... 😁

யோசனை வேண்டாம். ஜெயலலிதா கடாட்சம் கிட்டும். தளரவிடாதேங்கோ ,மனசை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒரு இளம் குடும்பம் வன்னியில் உள்ளது.கணவன் சிங்களம் மனைவி தமிழ்.இருவரும் இரன்டு மொழியும் கதைப்பார்கள்.ஆனால் இருவரும் மற்ற மொழி எழுத மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, சுவைப்பிரியன் said:

எனக்கு தெரிந்த ஒரு இளம் குடும்பம் வன்னியில் உள்ளது.கணவன் சிங்களம் மனைவி தமிழ்.இருவரும் இரன்டு மொழியும் கதைப்பார்கள்.ஆனால் இருவரும் மற்ற மொழி எழுத மாட்டார்கள்.

அவர்களுக்கு பிள்ளை உண்டா? இருந்தால் என்ன மொழியில் (போதனை மொழி) படிக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அவர்களுக்கு பிள்ளை உண்டா? இருந்தால் என்ன மொழியில் (போதனை மொழி) படிக்கிறது?

இது ஒருவர் வேதத்திலும் மற்ரவர் சைவத்திலும் திருமணம் முடிக்கும்போது வரும் பரிதாப நிலை கண்டியளோ.. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

இது ஒருவர் வேதத்திலும் மற்ரவர் சைவத்திலும் திருமணம் முடிக்கும்போது வரும் பரிதாப நிலை கண்டியளோ.. 🤣

ஆனால் இருவரும் தமிழாக இருந்தால் - பொதுவாக மீனாட்சி எந்த மதமோ அந்த மதத்தில் பிள்ளை வளரும் என்பது சம்பிரதாயம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அவர்களுக்கு பிள்ளை உண்டா? இருந்தால் என்ன மொழியில் (போதனை மொழி) படிக்கிறது?

3 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு தெரிந்த ஒரு இளம் குடும்பம் வன்னியில் உள்ளது.கணவன் சிங்களம் மனைவி தமிழ்.இருவரும் இரன்டு மொழியும் கதைப்பார்கள்.ஆனால் இருவரும் மற்ற மொழி எழுத மாட்டார்கள்.

நீங்கள் இதுக்கே கனக்க யோசிக்கிறியள்.. இங்க வெளிநாட்டில தாய்தேப்பன் தமிழ் தாய்மொழி பிள்ளையள் இன்னொரு மொழி தாய்மொழி.. இரெண்டுபேரும் ரெண்டுபேரிண்ட தாய்மொழியும் கதைப்பினம் ஆனால் ரெண்டு பேரும் மற்றவையின்ர தாய்மொழிய எழுதமாட்டினம்.. ஜரோப்பா வாழ் தமிழர்குடும்பங்களில் இது இன்னும் மோசம்.. பிள்ளையள் தாய்தேப்பன்ர தாய்மொழி கதைப்பினம் ஆனால் தாய்தேப்பன் பிள்ளையளின்ர தாய்மொழி கதைக்கமாட்டினம்.. இந்த மொழி சம்பந்தமா அண்மையில் ஒரு திரி ஓடினது..

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இல்லை நான் கேட்ட காரணம். எனக்கு தெரிய பெற்றாரில் ஒருவர் சிங்களம், ஒருவர் தமிழர் என்றால் பிள்ளைகள் தமிழ் மொழி மூலம் படிப்பது வெகு அரிது. சிலநேரம் வன்னியில் என்றபடியால் மாறி நடந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இல்லை நான் கேட்ட காரணம். எனக்கு தெரிய பெற்றாரில் ஒருவர் சிங்களம், ஒருவர் தமிழர் என்றால் பிள்ளைகள் தமிழ் மொழி மூலம் படிப்பது வெகு அரிது. சிலநேரம் வன்னியில் என்றபடியால் மாறி நடந்திருக்கலாம்.

சென்னைக்கு அனுப்புங்கோ - புள்ளைகள் எல்லாம் இங்கிலிசை தாய்மொழி ஆக்கிடும் - பிரச்சினை தீர்ந்துது. 😃

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

ஆனால் இருவரும் தமிழாக இருந்தால் - பொதுவாக மீனாட்சி எந்த மதமோ அந்த மதத்தில் பிள்ளை வளரும் என்பது சம்பிரதாயம்🤣.

என்னுடைய உறவினர்களிருவர் மணந்தது சைவ சமயத்தில். ஆண் பிள்ளைகள் சைவம், பெண் பிள்ளைகள் கிறீஸ்தவம். 

காரணம், தகப்பனுக்கு இறுதிச் சடங்கு(கொள்ளி வைக்க) செய்ய ஆண் வாரிசு வேண்டும். 

இதுவும் லவ் ஜிகாத் தானோ ..🤣

13 minutes ago, கற்பகதரு said:

சென்னைக்கு அனுப்புங்கோ - புள்ளைகள் எல்லாம் இங்கிலிசை தாய்மொழி ஆக்கிடும் - பிரச்சினை தீர்ந்துது. 😃

இது எப்பிடி இருக்கு 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

இது எப்பிடி இருக்கு 🤣🤣

57 minutes ago, கற்பகதரு said:

சென்னைக்கு அனுப்புங்கோ - புள்ளைகள் எல்லாம் இங்கிலிசை தாய்மொழி ஆக்கிடும் - பிரச்சினை தீர்ந்துது. 

🤣 ஜூட் அண்ணா ஆகவும் பெட்டிக்கு வெளியால திங்க் பண்ண வேண்டாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

இது இரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட விடயம் அதே நேரம் உண்மையில் இந்த பெற்றோரைத்தான் கைது செய்திருக்கவேண்டும்..ஆனால் ஒரு ஆதங்கம்.  ஏற்கனவே குறைந்து கொண்டு வருகிறோம்(அதற்காக  தன் பொருளாதார நிலையை மீறி பல பிள்ளைகளை பெறவேண்டும் என கூறமாட்டேன்).. ஆனால் இவை அதிகரிப்பதற்கான காரணங்கள்? 

- சீதனம்?

- சாதி?

- தமிழ் இளைஞர்களின் பழக்கவழக்கங்கள்?

- வேலைவாய்ப்பு, கல்வியறிவு வீதத்தில் ஆண்களை விட பெண்கள் படித்து முன்னேறி வருவதும், அவர்களுக்கு சம மான ஆண்கள் இல்லாமை? 

- ஊர், பிரதேச பிரிவினைகள்? 

- இல்லை ஓரிரண்டு சம்பவங்களை ஊடகங்கள் பெரிதுபடுத்தி ஒரு trend உருவாக்கி திட்டமிட்ட முறையில் ஊக்குவிக்கப்படுகிறதா? 

ஒன்றில் இனம் மாறி திருமணம் செய்கிறார்கள் இல்லை திருமணம் செய்யாமல் தனித்து வாழ்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மையில் இந்த பெற்றோரைத்தான் கைது செய்திருக்கவேண்டும்.

💯

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கற்பகதரு said:

சென்னைக்கு அனுப்புங்கோ - புள்ளைகள் எல்லாம் இங்கிலிசை தாய்மொழி ஆக்கிடும் - பிரச்சினை தீர்ந்துது. 😃

சென்னையிலும் இனி ஹிந்தி தானாக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.