Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இனமா? மொழியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 65
  • Views 6.8k
  • Created
  • Last Reply

இவரது மதப்பிரசங்கத்தை நான் ஏற்று கொள்ளவில்லை. வெறுக்கத்தக்க பல விடயங்களை மதப் பிரசங்கங்களில் இவர் செய்துள்ளார். 

ஆனால் மொழி, இனம் தொடர்பான இவரது இந்த  வாதத்தில் நியாயம் உள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

இவரது மதப்பிரசங்கத்தை நான் ஏற்று கொள்ளவில்லை. வெறுக்கத்தக்க பல விடயங்களை மதப் பிரசங்கங்களில் இவர் செய்துள்ளார். 

ஆனால் மொழி, இனம் தொடர்பான இவரது இந்த  வாதத்தில் நியாயம் உள்ளது. 

நான் ஜேர்மனியிலை இருந்து நல்லாய் டொச் கதைக்கிறன்....அப்ப நான் ஜேர்மன்காரனா?

1 hour ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனியிலை இருந்து நல்லாய் டொச் கதைக்கிறன்....அப்ப நான் ஜேர்மன்காரனா?

உங்கள் ஜேர்மன் மொழி accent ஐ வைத்து நீங்கள் ஜேர்மனை தாய் மொழியாக கொண்டவரல்ல என்பதை எவரும் மிக இலகுவில் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் இங்கு argument அதுவல்ல.

மொழி இன தூய்மை பற்றியது. மொழியையும் இனத்தையும் இணைப்பது பற்றியது. 

உங்களது அல்லது எனது வருங்கால தலைமுறைகள் முழுக்க முழுக்க இந்நாடுகளின் மொழியில் வளர்ந்து தமிழ் மொழி மொழி  தெரியாமல் முழுக்க முழுக்க ஜேர்மன் நாட்டவரைப் போல் வாழும்  நிலையில் அவர்களை எப்படி தமிழ் இனம் என்று கூறுவது? விரிவாக விவாதிக்கப் படவேண்டிய விடயம் என்பதையே கூறினேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, tulpen said:

உங்களைப்போன்ற விதண்டாவதிகளுக்காகத்தான்  படைத்தவன் மனித பிறப்புகளுக்கு  நிறத்தையும் மொழியையும் குணங்களையும் வெவ்வேறாக படைத்துள்ளான்.
தண்ணியில் கூட வேகுபாடு உண்டு
வித்தியாசம் தெரிய கற்றுக்கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் முஸ்லிமாக இருந்தாலும் மத கோட்பாட்டை தவிர்த்து அவரது மொழி இனம் தொடர்பான நல்ல கருத்துக்கள்.

35 minutes ago, tulpen said:

இந்நாடுகளின் மொழியில் வளர்ந்து தமிழ் மொழி மொழி  தெரியாமல் முழுக்க முழுக்க ஜேர்மன் நாட்டவரைப் போல் வாழும்  நிலையில் அவர்களை எப்படி தமிழ் இனம் என்று கூறுவது?

சும்மா பெருமைக்காக அவர்களும் தமிழர்கள் என்று கூறிக் கொள்வோம் 😂

3 hours ago, tulpen said:

வெறுக்கத்தக்க பல விடயங்களை மதப் பிரசங்கங்களில் இவர் செய்துள்ளார். 

எங்கே இலங்கையிலா கேட்டீர்கள்? இவர் இலங்கையரா

10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எங்கே இலங்கையிலா கேட்டீர்கள்? இவர் இலங்கையரா

இல்லை இவர் தமிழ் நாட்டவர். படு மோசமான மதவாதி. 

42 minutes ago, குமாரசாமி said:

உங்களைப்போன்ற விதண்டாவதிகளுக்காகத்தான்  படைத்தவன் மனித பிறப்புகளுக்கு  நிறத்தையும் மொழியையும் குணங்களையும் வெவ்வேறாக படைத்துள்ளான்.
தண்ணியில் கூட வேகுபாடு உண்டு
வித்தியாசம் தெரிய கற்றுக்கொள்ளுங்கள்

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றியும் ஹோமோ சேப்பியன்ஸ் மனித இன தோற்றம் பற்றியும் அதன் உலக பரவல் குறித்தும்  பல விரிவான விளகங்கங்கள் ஆதாரங்களுடன் வந்த பின்பும் இவ்வாறு படைத்தவன் விளக்கம் கூறும் இந்த மதவாதியின் மத பிரசங்கங்கள் பற்றியதல்ல எனது கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

உங்கள் ஜேர்மன் மொழி accent ஐ வைத்து நீங்கள் ஜேர்மனை தாய் மொழியாக கொண்டவரல்ல என்பதை எவரும் மிக இலகுவில் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் இங்கு argument அதுவல்ல.

மொழி இன தூய்மை பற்றியது. மொழியையும் இனத்தையும் இணைப்பது பற்றியது. 

உங்களது அல்லது எனது வருங்கால தலைமுறைகள் முழுக்க முழுக்க இந்நாடுகளின் மொழியில் வளர்ந்து தமிழ் மொழி மொழி  தெரியாமல் முழுக்க முழுக்க ஜேர்மன் நாட்டவரைப் போல் வாழும்  நிலையில் அவர்களை எப்படி தமிழ் இனம் என்று கூறுவது? விரிவாக விவாதிக்கப் படவேண்டிய விடயம் என்பதையே கூறினேன். 

அவுஸ்திரேலிய  குடியுரிமை  பெற்ற  என்  மனைவி  ஆசிரியராக  புரூனேயில்   ஆசிரியராக  தொழில்  புரிந்த  சமயம்  மாணவன்  ஒருவன்  அவரிடம்  கேட்டான்  "நீங்க  எந்த  நாட்டவர்"  என்று. 

அந்த  நேரம்  மனைவியிடம்  இரட்டை  பிரசாவுரிமை  கூட  இருக்கவில்லை .

"நான்  ஓர்  அவுஸ்திரேலிய  பிரசை"  என்று  அவர்  சொல்ல  அவன்  , அவன்  சற்றே  கேலியாக  "நான்  அதை  கேட்கவில்லை  , நீங்கள்  எந்த  நாட்டை  சேர்ந்தவர்"  என்று  தான்  கேட்டேன்  என்கிறான் .

பிறந்ததில்  இருந்து  வத்தளையில்  வசித்து    வந்த  எனது  தம்பி  முறையானனவன்  அவனுக்கு  தமிழ்  சரியாக  பேசவும்  வராது  83இல்  அடிவாங்கி  ஊர்  வந்து  , பின்  இயக்கத்தில்  சேர்ந்து  உயர்ந்து  உள்வீட்டு  சண்டையில்  காணாமல்  ஆக்கப்பட்டு  அவனின்  தாயார்  இன்றும்  கண்ணீருடன்  அவன்  வருவான்  என்று  பார்த்துக்  கொண்டிருக்கும்  ஒரு    நிலைமை  என்  மனமுருக்கும் .

நிலவரங்களின்    நிர்வாணத்தன்மையை  உணர்ந்து  கொள்ளுதலே  இங்கே  முக்கியம்;   மேலே  சுற்றியிருப்பது பட்டு  சேலையா , நைலோன்  உடுப்பா   என்பது  இரண்டாம்  பட்சமே

2 hours ago, சாமானியன் said:

சாமான்யன்,

 அவ்வாறு அடையாளப்படுத்தப்படுவது தவறானது என்பது தான் இங்குள்ள விவாதப் பொருள். மனித இனம் உலகில் பல்வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்து பல ஆயிரக்கணக்கான மொழிகளை உருவாக்கியது என்பது,  இனம் சார்ந்ததல்ல. அவர்கள் வாழும் இடம், பிரதேசம் சார்ந்தது. அவை மாற்றமடையும் தன்மை கொண்டவை என்பதே இங்கு விவாதம். தமிழர் கல்தோன்றி  மண்தோன்றாக்காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டால்,  அது ஏன் இன்று பல மொழிகளாக பிரிந்துவிட்டது என்ற கேள்வி வருமல்லவா? அது இனம், பிறப்பு சார்ந்தது என்றால் ஏன் வேறு மொழிகளாக மாற்றம் அடைந்து புதிய மொழிகளை உருவாக்கவேண்டும்? ஆகவே மொழிகள் என்பது மனிதன் தனது சூழலுக்கு ஏற்ப காலப்போக்கில் உருவாக்கி கொள்பவையே தவிர பிறப்பு சார்தது அல்ல என்பதே இங்கு முக்கிய விவாதப் பொருள். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனமா. ?  மொழியா?. இது தான் தலைப்பு மட்டுமல்ல கேள்வியும் கூட 

பதில......தமிழ் என்பது  மொழி ஆகும்.    தமிழர் [கவனிக்கவும் தமிழ் அல்ல தமிழர்]என்பது  இனம். ஆகும் தமிழ் பேசுவோர் தமிழர் இனம் தான் முஸ்லிம் இனம் இந்து இனம் கிறித்தவ இனம............இப்படி சொல்ல முடியாது அவை மதம் ஆகும்

சிங்களம...மொழி.      சிங்களவர்.....இனம்

ஆங்கிலம்....மொழி.     ஆங்கிலேயர்.....இனம்.  

தமிழ்.....மொழி.     தமிழர்.....இனம்     

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த ஜேர்மனியர்கள் தங்களை  ஜேர்மனியர்கள் என அறிமுகப்படுத்த தவறுவதில்லை.
ஆனால் நான் தமிழன் எனது மொழி தமிழ் என்றால் பலருக்கு வயிற்றில் புளியை கரைக்கின்றது..இதற்குள் திராவிட இலக்கணம் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

இல்லை இவர் தமிழ் நாட்டவர். படு மோசமான மதவாதி. 

தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம்கள் மாதிரி இல்லை தமிழர்களாக உள்ளனர்  என்றார்கள்   முஸ்லிம் மதம் அங்கேயும் தனது பாதிப்பை  செய்கிறது.

****

[நான்  ஓர்  அவுஸ்திரேலிய  பிரசை"  என்று  அவர்  சொல்ல  அவன்  , அவன்  சற்றே  கேலியாக  "நான்  அதை  கேட்கவில்லை  , நீங்கள்  எந்த  நாட்டை  சேர்ந்தவர்"  என்று  தான்  கேட்டேன்  என்கிறான் .]

திருமதி சாமானியன் அவர்களிடம் இப்படி கேள்வி கேட்டவர் இந்தியரா, பாக்கிஸ்தானா அல்லது இலங்கையரா என்று யோசிக்கிறேன். இப்போது இப்படியான கேள்வி கேட்பவர்கள் அரிது.எதிர்காலத்தில் இப்படியான கேள்வி கேட்பவர்கள் மறைந்து காணாமல் போய்விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

சிங்களம...மொழி.      சிங்களவர்.....இனம்

ஆங்கிலம்....மொழி.     ஆங்கிலேயர்.....இனம்.  

சிங்கள இனம் எந்த மரபணுவைக் கொண்டது சிங்கள இனத்தையா....

ஆங்கில இனம் எந்த மரபணுவைக் கொண்டது ஆங்கில இனத்தையா......

தமிழினம் தமிழினத்தின் மரபணுவைக் கொண்டது. தமிழினத்தின் மொழியே தமிழ்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

சிங்கள இனம் எந்த மரபணுவைக் கொண்டது சிங்கள இனத்தையா....

ஆங்கில இனம் எந்த மரபணுவைக் கொண்டது ஆங்கில இனத்தையா......

தமிழினம் தமிழினத்தின் மரபணுவைக் கொண்டது. தமிழினத்தின் மொழியே தமிழ்தான்.

தமிழ்...தமிழா....தமிழர்....தமிழினம்.  ...என்பன  வெவ்வேறு சொற்கள் கருத்தும் அப்படியே  மற்றும் தலைப்பு சரியா?.        ஒரு தமிழன். தமிழ் சிறந்த மொழி என்று தான் கூறுவன்.  நானும் தமிழ் சிறந்தது என்றே கூறுகிறேன் ஆனால் மற்ற மொழிகளைப் பற்றி கூற விருப்பமில்லை காரணம் தெரியாது பல மொழி அறிஞர்கள் கூடி கலந்துரையாடல் மூலம் தமிழ் தான் சிறந்த மொழி என்று அறிவித்தல் சிறப்பு அபபடி ஒரு செயதியை இதுவரை பார்த்ததுமில்லை.  கேட்டதுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மன் tourist சந்தித்து இருக்கிறேன்.   தான் யேர்மன் நாட்டில் இருந்து வந்ததாக தான் சொன்னார். நான் யேர்மனியன் நாங்கள் அல்ப்ஸ் மலையின் கொடி நட்டவர்கள் என்று சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனமா? மொழியா?

தமிழ் - மொழி
தமிழர் - இனம்

தமிழ் மொழியை பேசுபவர்கள் தமிழர்களாக இருக்க தேவை இல்லை.

டிஸ்கி: 864,000 பேர் இங்கிலாந்து, வேல்சில் ஆங்கிலம் மிக சிறிய அளவில் அல்லது முற்றாக ஆங்கிலம் பேசாதவர்கள்.
 
https://en.wikipedia.org/wiki/Languages_of_the_United_Kingdom#:~:text=The de facto official language,speaking little or no English.)

14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

யேர்மன் tourist சந்தித்து இருக்கிறேன்.   தான் யேர்மன் நாட்டில் இருந்து வந்ததாக தான் சொன்னார். நான் யேர்மனியன் நாங்கள் அல்ப்ஸ் மலையின் கொடி நட்டவர்கள் என்று சொல்லவில்லை.

யூதர்களை கொன்றவர்கள் நாங்கள் தான் என சொன்னாரா??

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2021 at 11:57, விளங்க நினைப்பவன் said:

தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம்கள் மாதிரி இல்லை தமிழர்களாக உள்ளனர்  என்றார்கள்   முஸ்லிம் மதம் அங்கேயும் தனது பாதிப்பை  செய்கிறது.

****

[நான்  ஓர்  அவுஸ்திரேலிய  பிரசை"  என்று  அவர்  சொல்ல  அவன்  , அவன்  சற்றே  கேலியாக  "நான்  அதை  கேட்கவில்லை  , நீங்கள்  எந்த  நாட்டை  சேர்ந்தவர்"  என்று  தான்  கேட்டேன்  என்கிறான் .]

திருமதி சாமானியன் அவர்களிடம் இப்படி கேள்வி கேட்டவர் இந்தியரா, பாக்கிஸ்தானா அல்லது இலங்கையரா என்று யோசிக்கிறேன். இப்போது இப்படியான கேள்வி கேட்பவர்கள் அரிது.எதிர்காலத்தில் இப்படியான கேள்வி கேட்பவர்கள் மறைந்து காணாமல் போய்விடுவார்கள்.

அப்படிக்  கேட்டவன்  ஒரு  சீனப்  பயல்...  

// இப்பிடியான  கேள்விகள்  அரிது  ?? //
நான்  அவுஸ்திரேலியாவில்  சிவில்  கட்டுமானத்துறையில்  18 வருடமாக  வேலை   செய்கிறேன்.

நான்  சேரும்  பொது  ஏறக்குறைய  300 வேலையாட்கள்  , நான்  தான்  முதலாவது  இலங்கையன்.

இடையில்  ஒரு  சமயம்   ஒரு  மூத்த  அலுவலர்  என்னிடம்    எனது  பூர்விக்க  இடம்  எது  என்று  கேட்டார்  , ஸ்ரீலங்கா  என்று  சொன்னேன்.

உடனேயேயும்  அவர்  நீ  தமிழனா  அல்லது  சிங்களவனா    என்று  கேட்டார்.

நான்  சொன்னேன்  அதை  அறிந்து  உங்களுக்கு  ஆகப்  போவது  என்ன  என்று.

10 வருடங்கள்  கழித்து  அவர்  இளைப்பாறும்  வரை  அவருடன்  எனக்கு  சுமூகமான  உறவு  இருக்கவில்லை. .. 

  • கருத்துக்கள உறவுகள்+

இந்திய அரசியலில் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. ஆனால் இந்த ஆலமரத்து அரசியல் எம்மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதால் இதுபற்றி ஈழத் தமிழனாக நான் அறிந்து தெளிந்திருப்பதை இங்கே எழுதுகிறேன். நாம் இவற்றில் சரியான தெளிவோடு இருத்தல் வேண்டும். தளம்பவோ குழம்பவோ கூடாது. எமது இனவிருத்தியை எமது நாட்டில் அதிகரிக்க வேண்டும்!

  • தமிழ் - மொழி

  • தமிழன் - அம்மொழியினை தனது தாய்மொழியாக(தாய்வழி அ தந்தைவழி தாய் மொழியாகவோ அ பெற்றோர் தாய் மொழியாகவோ) கொண்ட ஒரு மாந்தன்.
    • தமிழர் - அங்ஙனம் பல மாந்தர்கள் கூட்டமாகியதால் உருவான இனம்

  • தமிழகம் - பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதி (தற்போதைய தமிழ்நாடு, கேரளம், ஈழத்தீவின் பெரும்பான்மையிடங்கள் - அதிலும் பெருமமாக தற்போதைய தமிழீழம்)
    • தமிழீழர் அ தமிழீழத்தார் அ தமிழீழக்காரர் - தமிழீழத்தில் வாழும் தமிழர், சிங்களவர், சோனகர்
      • ஈழத் தமிழன் அ தமிழீழத் தமிழன் - தமிழீழத்தைச் சேர்ந்த நாட்டினத்(nation) தமிழன் (நாட்டினத் தமிழர் என்பதினுள் மலையகத் தமிழரும் உள்ளடங்குவர், அங்கு வாழ்ந்தால், விடிந்தபின்!)
      • மலையகத் தமிழன் - ஈழத்தீவினில் வாழும் தமிழ்நாட்டு நாட்டினத் தமிழன்
      • சிறீலங்காத் தமிழன் அ சிலோன் தமிழன் - ஈழத்தீவெங்கும் வாழும், தம்மை ஈழத் தமிழனகவோ மலையகத் தமிழனகவோ அடையாளப்படுத்த விரும்பாத தமிழன் பயன்படுத்தும் பொதுச்சொற்கள்.
    • தமிழ்நாட்டார் அ தமிழ்நாட்டுக்காரர் - தமிழ்நாட்டில் வாழும் பல்லின மக்கள் (தமிழனோ மலையாளியோ வடுகனோ காப்பிலியோ)
      • தமிழ்நாட்டுத் தமிழன் - தமிழ்நாட்டில் வாழும் நாட்டினத் தமிழன்

------------------------------------------------

  • தமிழ்நாட்டுச் சிக்கல்:

பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் (600+) வடுகர் என்னும் இனத்தவர் தமிழ்நாட்டிற்கு வந்தனர் (படையெடுப்பு அ வணிகம் போன்ற காரணிகள்).   அப்படி வந்தவர்களை வைத்தே இச்சிக்கல் ஏற்படுத்தப்படுகிறது.

அஃது வந்தோர் காலத்தால் தம் தாய்மொழியாகிய தெலுங்கு (வெகுசிலர் கன்னடமும் கதைத்திருக்கக் கூடும்; வாய்ப்புண்டு) என்னும் மொழியினை இழந்து காலத்தால் தாம் வாழ்ந்த வட்டத்தில் இருந்த பெரும்பான்மையான (அவ்வட்டத்தின் அ நிலப்பரப்பின் ஆதி மொழியெனவும் கொள்ளலாம்) மொழியான தமிழ் என்ற மொழியினை பேசலாயினர். அத்தகையோர் கால நீரோட்டத்தில் தமிழராகினர். அவர்களை நாமும் எவ்வகையிலும் பிரித்தல் ஆகாது. இனவட்டத்தை பெருப்பித்தல் வேண்டும். பிரித்தல் மண்ணாங்கட்டிச் செயல் ஆகும். (அடோய் தமிழீழா, உன்ர ஊரிலையும் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதாண்டா நடந்தது!)

ஆயினும், நூற்றாண்டுகள் கடந்தும் மரபுவழி தாயகத்துடன் தொடர்பில்லால்விடிலும் தன் இனத்தின் அடையாளத்தை இழக்காமல் (வெளிநாடுவாழ் எனக்கு டமில் தெரியாது😛 வகையறா அன்று) தன் இனத்தின் (வடுகு) மன்ன அரச தெய்வங்கள் மற்றும் இன்னபிற கலைபண்பாடுகளை போற்றிக் காத்து அவற்றை இன்னமும் பின்பற்றிவருபவர்களில் தெலுங்கு கதைக்கத் தெரிந்தோரும் உளர், தெரியாதோரும் உளர். இவர்கள் தமிழ் கலாச்சாரத்தினை பின்பற்றுவது அருகு; தமக்கென சங்கங்கள் சம்மேளனங்கள் கொண்டுள்ளோர். இவ்விதத்தோரை 'தமிழர்' என்று சொல்வது அ அதன் கீழடக்குவது பொருத்தமற்றது. இவர்கள் நான் மேற்கூறிய 'தமிழ்நாட்டுக்காரர் அ தமிழ்நாட்டோ'ர் என்ற வகையின் கீழ் அடங்குவர். இப்படிப்பட்டோரை 'தமிழர்' என குறிப்பது இன வரையறை கொள்கைக்கு முரணானது.

ஆக இவ்வளவுதான் தமிழ்நாட்டுச் சிக்கல். எம்மவரே, இங்கு எங்கெல்லாம் வடுகு அ தெலுங்கு என வருகிறது அங்கெல்லாம் எங்கள் இனப்பெயரைப் போட்டு அவர்கள் சென்ற ஐரோப்பிய அமெரிக்க நாடுகள், மொரீசியசு, மலேசியா, மற்றும் இன்னபிற நாடுகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். தெளிவாக விளங்கும்.

இதுதான் இந்த சிக்கலுக்கு நான்கூறும் தீர்வு. இது எமது தீவின் இனப்பரம்பலின் அடிப்படையில் எழுதப்பட்டது. 

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டுள்ளன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யூதர்கள் சந்ததி சந்ததியாக எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தங்களை யூதர்களாகவே இனம் காட்டிக்கொள்வர். இங்கு மொழி இரண்டாம் பட்சமே.

47 minutes ago, குமாரசாமி said:

யூதர்கள் சந்ததி சந்ததியாக எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தங்களை யூதர்களாகவே இனம் காட்டிக்கொள்வர். இங்கு மொழி இரண்டாம் பட்சமே.

யூதர்கள் தமது மதத்தல் தம்மை அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் பேசும் ஹிபுறு மொழியால் அல்ல என்பது இங்கு முக்கியமானது.  அவர்களுள் ஜாதி பாகுபாடு இல்லை என்பது நல்ல விடயம் 

ஆனால் அவர்கள்  உலகின் முன்மாதிரிகள் இல்லை. அவர்களது  சியோனிச கொள்கைகள் மிக மோசமானது.  

அவர்களை தமிழர்களின் எதிரிகள் என்று போலியாக கட்டமைக்கும் ஒரு கூட்டமும் உள்ளது. 

தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டு அதை பேசுவொர் தமிழர் என்ற இனத்தில் சேர்வர். ஆகவே இந்த தலைப்பில் உள்ள ஒற்றைக் கேள்வி குழப்பம் தருவது. ஆனால் தமிழரின் அடையாளம் தமிழ மொழியே. அதை பேசாத தலைமுறை தமிழரில் இருந்து விலகி விடுவர். 

அதே வேளை தமிழ் பூர்வீகத்தை கொண்ட ஒருவர் ஒரு காலத்தில் தமிழை கற்று அதனை தாய் மொழியாக ஏற்று கொண்டு வாழும்  போது மீண்டும் அவர்கள் தமிழராக அடையாளப்படுத்தப்படுவர். 

Edited by tulpen
மேலதிக சேர்க்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

யூதர்கள் தமது மதத்தல் தம்மை அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் பேசும் ஹிபுறு மொழியால் அல்ல என்பது இங்கு முக்கியமானது.  அவர்களுள் ஜாதி பாகுபாடு இல்லை என்பது நல்ல விடயம் 

 புலம்பெயர் வாழ் யூதர்கள் எல்லா இடங்களிலும்  மதத்தையோ மொழியையோ அடையாளப்படுத்துவதில்லை.
தாம் யூத இனத்தை சார்ந்தவர்கள் என்பதை மிக தெளிவாக கூறுவர்.

1 hour ago, குமாரசாமி said:

 புலம்பெயர் வாழ் யூதர்கள் எல்லா இடங்களிலும்  மதத்தையோ மொழியையோ அடையாளப்படுத்துவதில்லை.
தாம் யூத இனத்தை சார்ந்தவர்கள் என்பதை மிக தெளிவாக கூறுவர்.

ஆனால் தமிழர்கள் அவ்வாறில்லை. தமிழரின் அடையாளம் என்பது,  அவர்களது மொழி.  மொழியைத் தொலைத்தால் தமிழர் என்ற அடையாளமும் தொலைந்து போகும் என்பதே ஜதார்ததம். 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் தந்தையும் தாயும் ஜேர்மனியில் இருந்து வந்த ஜேர்மன் மொழி பேசும் பரம்பரையை சேர்ந்தவர்கள். ரம்ப் பேசும் மொழி ஆங்கிலம்:

1. ஆங்கிலம் பேசும் ரம்ப் ஆங்கிலேயரா?

2. ஜேர்மானிய பெற்றோருக்கு பிறந்ததால் ரம்ப் ஜேர்மானியரா?

ஒபாமாவின் தந்தை கென்யா நாட்டை சேர்ந்த முஸ்லிம், தாய் அயர்லாந்து நாட்டை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர். ஓபாமாவுக்கு கென்ய மொழியோ அயர்லாந்தவர்களின் பூர்விக மொழியான கேலிக் மொழியோ தெரியாது. அவர் பேசுவது ஆங்கிலம்.
1. ஒபாமா ஆங்கிலம் பேசுவதால் ஆங்கிலேயரா?

2.  ஒபாமாவின் தந்தை கென்ய நாட்டவர் என்பதால் ஒபாமா கென்யரா?

3. தாய் வழி காரணமாக ஒபாமா, ஐரிஷ் காரனா?

கனேடிய பிரதமர் ரூடோவின் பெற்றோர் பிரெஞ்சு மொழி பேசினார்கள்.

1. ரூடோ பிரான்சியரா?

2. அல்லது ரூடோ ஆங்கிலிம் பேசுவதால், அவர் ஆங்கிலேயரா?

உலக மக்கள் ஒபாமாவையும் ரம்பையும் அமெரிக்கர் என்கிறார்கள், அது பொய்யா? ரூடோவை எல்லோரும் கனேடியர் என்கிறார்கள், அது தவறா?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை ஐரோப்பிய ஐபிசி வானொலியில் விடுதலைபுலிகளுக்கும் தமிழர் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கும் தென்னாப்பிரிக்க தமிழர்கள் இருவர் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேட்டி கண்டது தாசீசியஸ்.

அந்த தென்னாப்பிரிக்க தமிழர்களுக்கு பெயர் மட்டுமே தமிழில் இருந்தது மற்றும்படி தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாது.

வழமைபோலவே வானொலி நேயர் ஒருவர் அவர்களை கேட்டார் , தமிழே உங்களுக்கு தெரியவில்லையே அப்புறம் எப்படி தமிழர்களுக்காக குரல் கொடுப்பீர்கள் என்று, அதற்கு அவர்கள் சொன்ன பதில்

முதலில் இனம் அப்புறம்தான் மொழி.

புலம்பெயர் நாடுகளில் பல பெற்றோர்களுக்கு தமிழைதவிர வேறு மொழி தெரியாது, ஆனால் அவர்களின் பிள்ளைகளுக்கு தமிழை தவிர வேறு மொழிகள்தான் சரளமாக வரும், அதனால் அவர்கள் தமிழர்களின் பிள்ளைகள் இல்லையென்று ஆகிவிடுமா?

மொழியை தொலைத்தாலும் இனத்தை ஒருபோதும் தொலைக்க முடியாது, வேறு இனங்களுடன் கலந்துபோய் வாரிசுகள் உருவாகி கலப்பின மக்களாகும்போது மட்டுமே இனம் தொலைந்து போகும்.

ஒவ்வொரு இனத்திற்கும் தாய்மொழி ஒன்று உண்டு அதுபோல் தமிழர்களின் தாய்மொழி தமிழ் , இன்று வேற்று மதத்தினராக இருந்துகொண்டு தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அனைவரும் மதம் மாறிய முன்னாள் தமிழர்களே.

46 minutes ago, valavan said:

உங்கள் கருத்துக்கு நன்றி வல்லவன். 

 நான் பேசுவது ஜதார்ததத்தை பற்றி. நீங்கள் கூறுவது அங்கொன்றும் இங்கொன்றும் உள்ள விதிவிலக்குகளை பற்றி. 

புலம் பெயர்ந்து தமிழை தாய் மொழியாக கொண்டவர்களின் பிள்ளைகள் தமிழர்கள் தான். அதில் மாற்றமில்லை. 

ஆனால் இங்கு பேசப்படுவது தமிழை முற்றாக மறந்த சந்ததியை பற்றியது. முதலாம், இரண்டாம் தலைமுறையை பற்றியது அல்ல.

 மதம் மாறினால் அவர்கள் முன்னாள் தமிழர்கள் என்றீர்கள். அது எனக்குப் புரியவில்லை. அப்படியானால் தந்தை செல்வா முன்னாள் தமிழரா?  அன்ரன்  பாலசிங்கம் முன்னாள் தமிழரா? அப்படியல்லவே! 

ஆனால் மொழி மாறினால் அவர்களின் வழித்தோன்றல்கள் இனம் மாறுவர். உதாரணம்:  சேர மன்னன் தமிழ் மன்னன். அவர்களின் வழித்தோன்றல்கள் மலையாளிகள். ஏனென்றால் மொழி மாறியபடியால். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.