Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு பெயர் சொல்லுங்க - [உதவி]

Featured Replies

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் ரதன்.

மலையாள உணவு என்பதால்

ஷகீலா சுவையகம்
ரேஷ்மா ருசியகம்

என்றும் வைக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

செம்மீன் என்று வையுங்கள்..!

மலையாள வார்த்தை தான்…தமிழருக்கும் விளங்கும்..!

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2021 at 15:06, sivarathan1 said:

எல்லா பெயரும் நல்லா இருக்கு, நண்பரோட கதைச்சு என்ன பெயர் வைக்கிறன் எண்டு சொல்லுறன்,  தொடங்கினா பிறகு கட்டாயமா எல்லாரும் வாங்க, வந்து சாப்பிட்டு எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க,   

வந்து சாப்பிடுவதில் பிரச்சனையில்லை   யாழ் கள உறுப்பினர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா.  ?ஒரு நாள் இல்லை மாதக்கணக்கில் நிற்போம்  ஒவ்வொரு நாளும் நல்லாயிருக்கு...நல்லாயிருக்கு.....எனச்சொல்வோம்...😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

தனி சந்தர்ப்பம் கிடைத்தால் ஒன்றாக போய்ச் சாப்பிடுவம்.இப்ப நான் இலங்கையில் இல்லை.வந்தவுடன் தொடர்பு கொள்கிறேன்.இதெல்லாம் பாத்த பின்பும் அந்த மனுசன் கடை தொடங்குவார் என்று நம்புறீங்களா.😀

நான் சும்மா பகிடிக்காக போட்டது ஓ நாட்டை விட்டு போயாச்சா நல்லது சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

மலையாள உணவு என்பதால்

ஷகீலா சுவையகம்
ரேஷ்மா ருசியகம்

என்றும் வைக்கலாம்

ஊசிப்போன பணியாரம் விக்கும் இடம் என்றல்லவா நினைக்கப்போகின்றார்கள்🙀

8 hours ago, புங்கையூரன் said:

செம்மீன் என்று வையுங்கள்..!

மலையாள வார்த்தை தான்…தமிழருக்கும் விளங்கும்..!

ஒன்லி 70ஸ் கிட்ஸுக்குத்தான் விளங்கும்😂

நமக்கு கடலின் அக்கரை போனோரே என்பதற்கு அங்கால் எதுவும் தெரியாது!

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

@sivarathan1  திறந்தாச்சா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
48 minutes ago, MEERA said:

@sivarathan1  திறந்தாச்சா???

உருசிச்சட்டி...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்து யூருப்பர்சுக்கு ஏன் இப்படி ஒரு பழக்கம்..நிறைய சாப்பாட்டை வாங்கி ஒருவரே உரிசி பார்த்துட்டு வைச்சால் மிகுதி எல்லாம் வீணாக போவதா..ஊரிலயே இன்னும் ஒருவேளை கூட உண்ண இயலாது இருக்கும் மக்களையும் யோசிங்கோ...தவறாக சொல்ல வர இல்லை.அவதானித்த விடையம்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உருசிச்சட்டி...

காணொளியில் அடிக்கடி…. நாச்சியார் வீடு என்று சொல்கிறார். அது தவறு.
முற்றத்தில் நான்கு கூரைகளும் சார்ந்து இருப்பதை, நாற்சார் வீடு என்பார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த "வேறை லெவெல்.. வேறை லெவெல்.." அப்படீனு சொல்றீங்களே..? 😲

அப்படீனா எந்த "லெவெல்"..? 🤔

ஒரு இருபது அடி 'லெவெல்' இருக்குமா?

சரியாக விளக்கினால், நாங்களும் அந்த "லெவெல்"லை அறிந்துகொள்வோம், ப்ளீஸ்..! 🙏

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, யாயினி said:

யாழ்பாணத்து யூருப்பர்சுக்கு ஏன் இப்படி ஒரு பழக்கம்..நிறைய சாப்பாட்டை வாங்கி ஒருவரே உரிசி பார்த்துட்டு வைச்சால் மிகுதி எல்லாம் வீணாக போவதா..ஊரிலயே இன்னும் ஒருவேளை கூட உண்ண இயலாது இருக்கும் மக்களையும் யோசிங்கோ...தவறாக சொல்ல வர இல்லை.அவதானித்த விடையம்....

 எனக்கு அந்த யூரியூப்பர் சாப்பிடும் முறையை பார்க்க,
அருவருப்பாக உள்ளதால் காணொளி பார்ப்பதை… இடையில் நிறுத்தி விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

 எனக்கு அந்த யூரியூப்பர் சாப்பிடும் முறையை பார்க்க,
அருவருப்பாக உள்ளதால் காணொளி பார்ப்பதை… இடையில் நிறுத்தி விட்டேன்.

திரிக்கு சம்பந்தமில்லையென்றாலும் ஒரு விடயத்தை இங்கே சொல்ல விழைகிறேன்.

பெரும்பாலும் சரியாக முகச்சவரம் செய்யாமல், இந்த தாடி வைத்த ஆட்களை பார்த்தாலே ஒரு அருவருப்பு உண்டு. 😂

எனது அலுவலகத்திற்கு வேலை தேடி வரும் 'சுய விவரணை'களில்(CVs) இம்மாதிரி தாடி வைத்த அல்லது எந்த ஸ்டைலில் தாடி(eg: French Beard etc) வைத்திருந்தாலும், முதல் சோதனையிலேயே கழித்து கட்டி ஒதுக்கிவிடுவோம் (உள்ளூர் இஸ்லாமியர்களை தவிர்த்து). சுயவிவரணைகள் அடுத்த கட்டத்திற்கே செல்லாது. 🤗

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

இந்த "வேறை லெவெல்.. வேறை லெவெல்.." அப்படீனு சொல்றீங்களே..? 😲

அப்படீனா எந்த "லெவெல்"..? 🤔

ஒரு இருபது அடி 'லெவெல்' இருக்குமா?

சரியாக விளக்கினால், நாங்களும் அந்த "லெவெல்"லை அறிந்துகொள்வோம், ப்ளீஸ்..! 🙏

ராஜ வன்னியன்…. வேறை லெவல் என்றால்,
எதிர் பார்த்து போன சுவையை விட… அதிக சுவையாக உள்ளது என அர்த்தம்.
இருக்கிற லெவலை விட…. ஒரு ப(அ)டி மேலே… 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ராஜ வன்னியன்…. வேறை லெவல் என்றால்,
எதிர் பார்த்து போன சுவையை விட… அதிக சுவையாக உள்ளது என அர்த்தம்.
இருக்கிற லெவலை விட…. ஒரு ப(அ)டி மேலே… 🤣

அதற்கு "சுவை ரொம்ப நன்றாக இருக்கு..!" என சொல்லிவிட்டு செல்லலாமே! அதென்ன "வேறை லெவெல், புண்ணாக்கு லெவெல்"னு..? 😡 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

திரிக்கு சம்பந்தமில்லையென்றாலும் ஒரு விடயத்தை இங்கே சொல்ல விழைகிறேன்.

பெரும்பாலும் சரியாக முகச்சவரம் செய்யாமல், இந்த தாடி வைத்த ஆட்களை பார்த்தாலே ஒரு அருவருப்பு உண்டு. 😂

எனது அலுவலகத்திற்கு வேலை தேடி வரும் 'சுய விவரணை'களில்(CVs) இம்மாதிரி தாடி வைத்த அல்லது எந்த ஸ்டைலில் தாடி(eg: French Beard etc) வைத்திருந்தாலும், முதல் சோதனையிலேயே கழித்து கட்டி ஒதுக்கிவிடுவோம் (உள்ளூர் இஸ்லாமியர்களை தவிர்த்து). சுயவிவரணைகள் அடுத்த கட்டத்திற்கே செல்லாது. 🤗

அவர் சாப்பிடும் போது…. தாடியிலும், சில உணவுப் பண்டங்கள் தொங்கிக் கொண்டிருந்தது அருவருப்பின் உச்சம்.
இப்படியான வேலைகளுக்கு, தாடியை… ஷேவ் எடுத்து விட்டுப் போவது,
பார்ப்பவர்களுக்கு  சந்தோசமாக இருக்கும். 
முக்கியமாக உணவு விடயங்களில்…. தாடிக்காரரை தூர வைத்திருப்பது நல்லது.  😊

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை முதல்முறையாக பார்க்கும்போதே தோற்றத்தால் அல்லது ஏதோ ஒருவகையில் நம்மளை கவர்ந்துவிட வேண்டும். (First Impression is the best impression)

காணொளியில் வருபவரை தவிர்த்து, சுட்டியினால் காணொளியை தள்ளி சிலநொடிகள்தான் பார்த்தேன்.. இந்த "வேறை லெவெல்" என்றதுமே காணொளியை மூடிவிட்டேன்..!😊

  • கருத்துக்கள உறவுகள்

சிவரதன் பெயர் கெடுமாக இருந்தால் கரிச்சட்டி என பெயர மாத்திடுவாங்கள் 

மேலே கள உறவுகள் சொன்ன விடயங்களை கவனத்தில் கொள்ளவும் .  வியாபாரம் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

3 minutes ago, ராசவன்னியன் said:

ஒருவரை முதல்முறையாக பார்க்கும்போதே தோற்றத்தால் அல்லது ஏதோ ஒருவகையில் நம்மளை கவர்ந்துவிட வேண்டும். (First Impression is the best impression)

காணொளியில் வருபவரை தவிர்த்து, சுட்டியினால் காணொளியை தள்ளி சிலநொடிகள்தான் பார்த்தேன்.. இந்த "வேறை லெவெல்" என்றதுமே காணொளியை மூடிவிட்டேன்..!😊

கோபம் வேண்டாம் இப்ப வந்து இங்க மெட்றாஸ் தமிழ் பேச தொடங்கிட்டாங்கள் அதனால் மன்னித்து அருள்க ராச வன்னியர் ஐயா 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

ஒருவரை முதல்முறையாக பார்க்கும்போதே தோற்றத்தால் அல்லது ஏதோ ஒருவகையில் நம்மளை கவர்ந்துவிட வேண்டும். (First Impression is the best impression)

காணொளியில் வருபவரை தவிர்த்து, சுட்டியினால் காணொளியை தள்ளி சிலநொடிகள்தான் பார்த்தேன்.. இந்த "வேறை லெவெல்" என்றதுமே காணொளியை மூடிவிட்டேன்..!😊

நாங்கள் ஊரில் இருந்த காலங்களில்… “வேறை லெவல்” என்ற சொல் பாவனையில் இல்லை.
இப்போ அங்குள்ள இளையவர்கள் இதனை பொதுவாக பல இடங்களில் பாவிக்கின்றார்கள்.

எமது காலத்தில்…. அந்த மாதிரி இருக்கு, என்று சொல்வோம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

..கோபம் வேண்டாம் இப்ப வந்து இங்க மெட்றாஸ் தமிழ் பேச தொடங்கிட்டாங்கள் அதனால் மன்னித்து அருள்க ராச வன்னியர் ஐயா 

நாங்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு தமிழை சுத்தமாக, அதிலும் வெகு சரளமாக பேசுபவர்கள் ஈழத்தமிழர்கள்..!

அதில் கலப்படம் செய்து ஈழத்தவர்கள் பேசுவது, சுத்தமாக சகிக்கவில்லை, மனம் பொறுக்கவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

நாங்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு தமிழை சுத்தமாக, அதிலும் வெகு சரளமாக பேசுபவர்கள் ஈழத்தமிழர்கள்..!

அதில் கலப்படம் செய்து ஈழத்தவர்கள் பேசுவது, சுத்தமாக சகிக்கவில்லை, மனம் பொறுக்கவும் இல்லை.

தற்போது அதிகமானவர்கள் இங்கு பேசும் ஆங்கிலத்தை சேர்த்து  பேசத்தொடங்கி விட்டார்கள் இனி வரும் காலங்களில் நீங்கள் சொன்ன சுத்த தமிழை கேட் க முடியாது அவை அனைத்தும் பெரியவர்கள் , முதியவர்களுடன்  சென்றுவிடும் 

ஆனாலும் எங்கள் பகுதிகளிலும் இளம் தலைமுறை சினிமா பேச்சையே பேசிக்கொள்கிறார்கள் அது முகநூலிலும் , வட்ஸ் அப்களிலும்  என்ன மச்சான் என்று கூப்பிட்டது கூட இப்ப என்ன bro  என்றே கூப்பிடுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

நாங்கள் ஊரில் இருந்த காலங்களில்… “வேறை லெவல்” என்ற சொல் பாவனையில் இல்லை.
இப்போ அங்குள்ள இளையவர்கள் இதனை பொதுவாக பல இடங்களில் பாவிக்கின்றார்கள்.

எமது காலத்தில்…. அந்த மாதிரி இருக்கு, என்று சொல்வோம். 😁

இந்த சொல்லாடல்கள் எல்லாம் 90களின் பிற் பகுதயில் பிறந்தவர்களாலயே பேசப்படும் வார்த்தைகளாக காணப்படுகிற்து..'சட்டப்படி' இருக்கிறது என்றும் பேச்சு வழக்கில் இப்போ சொல்கிறார்கள்...இந்த வார்த்தையும் நாம் ஊரில் இருந்த காலத்தில் பேசப்பட வில்லைதானே அண்ண..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 எனக்கு அந்த யூரியூப்பர் சாப்பிடும் முறையை பார்க்க,
அருவருப்பாக உள்ளதால் காணொளி பார்ப்பதை… இடையில் நிறுத்தி விட்டேன்.

எனக்கென்னாவோ அவர்   சாப்பிடுவதை பார்க்க நானும் சாப்பிட வேண்டும் போல இருக்கின்றது
ம்ம்ம்( lecker)  (நாவுறுகின்றது ) 

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் உருசிசட்டி உணவகத்திற்கு சென்று உணவு உட்கொண்டேன். 

சிவரதன் தனது உணவகம் என்று குறிப்பிட்டமையால் அத்துடன் குத்து மதிப்பாக அதன் அமைவிடம் தெரிந்தமையால் ஒரு ஊகத்தில் அங்கு சென்றேன் வேறோர் இடம் செல்லும் வழியில். 

முன்னேற்றத்துக்கு நிறைய இடம் உண்டு. குறிப்பாக சுத்தம், நல்லதொரு சூழலை உருவாக்க்குதலில் கவனம் தேவை. உணவு பிழை இல்லை. மண் கோப்பையில் சாப்பிட்டோம். மண் சட்டியில் பரிமாறினார்கள். அதிகம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பிரசன்னம் காணப்பட்டது. 

நான் சென்ற தினம் சிவரதனின் தந்தை 31ம் நாள் நினைவு என்று கடையில் நின்ற ஒருவர் சொன்னார். இதனால் சிவரதன் கடையில் இல்லை. சிவரதனின் தந்தை இழப்பை பற்றி அறிய துயரம் ஏற்பட்டது. 

தொடர்ந்து முயற்சி செய்து முன்னேற எனது வாழ்த்துக்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.