Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் நுழைந்தது புதிய கொரோனா வைரஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் சில மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!

ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் நுழைந்தது புதிய  கொரோனா வைரஸ்

ஜேர்மனியிலும் முதல் முறையாக ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸானது பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது.  டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வடிவங்களுடன் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்துள்ள புதிய வைரஸிற்கு ஒமிக்ரோன் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்திலும் ஒமிக்ரோன் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவரே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஜேர்மனியிலும் முதல் முறையாக 2 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://athavannews.com/2021/1252798

  • கருத்துக்கள உறவுகள்

‘ஒமிக்ரோன்’ வைரஸ்: நோய் அறிகுறிகள் என்ன?

தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அடையாளம் காணப்பட்டு வரும் ஒமிக்ரோன் புதிய கொவிட் பிறழ்வு தொற்றியவர்களிடம் சிறியளவு நோய் அறிகுறி மாத்திரமே தென்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை கண்டறியப்பட்ட நோயாளர்களிடம் சுவை இழப்பு மற்றும் வாசனைகளை உணர முடியாமை போன்ற நோய் அறிகுறிகள் தென்படவில்லை என தென் ஆபிரிக்க மருத்துவ சம்மேளனத்தின் தலைமை அதிகாரி, வைத்தியர் எஞ்சலிக் கொட்சி கூறியுள்ளார்.

புதிய பிறழ்வு தொற்றியவர்களிடம் தசை வலி, சோர்வுத் தன்மை சுமார் இரு நாட்கள் காணப்படும் எனவும் சிறிதளவு இருமல் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு ஒமிக்ரோன் பிறழ்வு எத்தகையை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை மதிப்பீடு செய்வதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் தேவை என்பதே அவரது நிலைப்பாடாகும்.

எவ்வாறாயினும் தற்போதைய தகவல்களுக்கு அமை இந்த தொற்று பரவுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக தென் ஆபிரிக்க மருத்துவ சம்மேளனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
http://www.samakalam.com/ஒமிக்ரோன்-வைரஸ்-நோய்-அறி/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்கள் வெள்ளை ஜேர்மன்காரர் பெரிய நாடகம் போடுறாங்கள்....என்ன கோதாரிக்கு எண்டு தெரியேல்லை....உண்மை பொய்யும் தெரியேல்லை 😷

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

இவங்கள் வெள்ளை ஜேர்மன்காரர் பெரிய நாடகம் போடுறாங்கள்....என்ன கோதாரிக்கு எண்டு தெரியேல்லை....உண்மை பொய்யும் தெரியேல்லை 😷

large.Loyality.jpg.cddbe6d611e01bb96aeacc0bb8538458.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி ஜேர்மனியிலை போற வாற இடங்களுக்கெல்லாம் ஊசிக்காட்டு காட்ட வேணுமாம் 😎

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இனி ஜேர்மனியிலை போற வாற இடங்களுக்கெல்லாம் ஊசிக்காட்டு காட்ட வேணுமாம் 😎

இண்டைக்கு ஊரில அம்மாவும் அப்பாவும் மூணாவது டோஸ் போட்டவை.. எனக்கு அதுகூட அதிசயமில்லை யாழ்ப்பாணத்தில பைசர் ஊசி மூண்டாவது ஊசியா கிடைச்சிருக்கு அவைக்கு.. என்னால நம்ப முடியேல்ல இன்னும்.. முதல் ரெண்டும் சினோபாம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இண்டைக்கு ஊரில அம்மாவும் அப்பாவும் மூணாவது டோஸ் போட்டவை.. எனக்கு அதுகூட அதிசயமில்லை யாழ்ப்பாணத்தில பைசர் ஊசி மூண்டாவது ஊசியா கிடைச்சிருக்கு அவைக்கு.. என்னால நம்ப முடியேல்ல இன்னும்.. முதல் ரெண்டும் சினோபாம்..

எனக்கு வாற கிழமை மூண்டாவது குத்து விழப்போகுது

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

எனக்கு வாற கிழமை மூண்டாவது குத்து விழப்போகுது

அய்யோ இனி மூண்டாவது ஊசிகுத்தோணும் எண்டத நினைச்சா எனக்கு சீவன்போகுது.. இப்பிடியே ஊசியும்கையுமா எங்கட காலம் முடியப்போகுது போல கிடக்கு..😢😢

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அய்யோ இனி மூண்டாவது ஊசிகுத்தோணும் எண்டத நினைச்சா எனக்கு சீவன்போகுது.. இப்பிடியே ஊசியும்கையுமா எங்கட காலம் முடியப்போகுது போல கிடக்கு..😢😢

கொஞ்சமாவது நடவுங்க அல்லது சைக்கிள் ஒடுங்க அது பத்து நிமிடமாக கூட இருந்தால் பரவாயில்லை .மனதில் உடம்புக்கு வலிமை தர ஏதோ செய்கிறோம் என்று நினைத்து கொள்ளுங்க அது காணும் .

கொல்லர் பட்டறையில் வேலை செய்பவரை  உங்கள் அனைவருக்கும் தெரியும் பத்து கிலோ மடத்தலால் போட்டு மாதம் முழுதும்  தாக்குவார் அவரின் உடலமைப்பு சாதரண மனிதர்கள் போல் இருக்கும் ஆனால் ஜிம் போன்றவற்றில் எடை தூக்குபவர் மல்லாதி மல்லன் போல் இருப்பார் காரணம் மனதில் உள்ள நினைப்பே .இங்கு வெளிநாடுகளில் உள்ள ஜிம் அநேக இடங்கள் கண்ணாடியால் இருக்கும் காரணம் அதுதான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, பெருமாள் said:

சைக்கிள் ஒடுங்க அது பத்து நிமிடமாக கூட இருந்தால் பரவாயில்லை

சயிக்கிள் ஓடினால் கையுறை எல்லே அடிக்கடி துலைஞ்சு போகுதாம்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

சயிக்கிள் ஓடினால் கையுறை எல்லே அடிக்கடி துலைஞ்சு போகுதாம்

கையுரையை சைக்கிளில் பெர்மேனன்ட் ஆக கட்டி போட  சொல்லுங்க துளையாது லண்டன் அதை விட மோசம் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

எனக்கு வாற கிழமை மூண்டாவது குத்து விழப்போகுது

நான் நாலாவது எப்ப வருமென்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இனிமேல் இதுதான் வாழ்க்கை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இரண்டு சினோபார்ம் இரண்டு பைசர் டோஸ் போட்டாச்சுது, இனி நான் ஐந்தாவது தடுப்பூசியும் போட வேணுமா..?

10 நாட்களுக்கு முன் தான் ரஷீத் வைத்தியசாலைக்கு சென்று விசாரித்தபோது, "ஒண்டும் இனி பிரச்சினை இல்லை.. ஒங்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவைப்படாது" என்றார்கள்..

கணணிக்கு, வைரசை சிலர் உருவாக்கி பரவவிட்டு, பின்னர் அவர்களே ஆன்டி-வைரஸ் மென்பொருளை தயாரித்து சந்தையில் விற்று காசு பார்ப்பது போல, கொரானா திரிபுகளும் ஆகிவிடும்போல தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சயிக்கிள் ஓடினால் கையுறை எல்லே அடிக்கடி துலைஞ்சு போகுதாம்

தம்பி வேற ஒரு  உறைய கனக்க  கவனமாக  வைத்திருக்கிறதால  தான் 

இது  துலைய  வாய்ப்பு  அதிகமாக  இருக்குமோ  அண்ணை???😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, பெருமாள் said:

கையுரையை சைக்கிளில் பெர்மேனன்ட் ஆக கட்டி போட  சொல்லுங்க துளையாது லண்டன் அதை விட மோசம் .

பேசாமல் இப்பிடியொண்டை வாங்கி கொழுவி விட்டால் கையுறை துலைக்கிறவைக்கும் பிரச்சனை இல்லை.கறுத்த குடை துலைக்கிறவைக்கும் பிரச்சனை இல்லை கண்டியளோ...😎

Schals & Handschuhe für Babys | Alle Marken, günstig im Preisvergleich

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சமாவது பயிற்சிகள் செய்துகொள்வது  கொஞ்சமாவது நன்மையை  தர ஆரம்பிக்கிறதாம்.

6 hours ago, ராசவன்னியன் said:

10 நாட்களுக்கு முன் தான் ரஷீத் வைத்தியசாலைக்கு சென்று விசாரித்தபோது, "ஒண்டும் இனி பிரச்சினை இல்லை.. ஒங்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவைப்படாது" என்றார்கள்..

அவர்கள் சொன்னது சரி தானே. உங்களுக்கு முதலே ரொக்கெட் பூஸ்டர் போட்டாச்சு கொரோனா உங்களுக்கு வந்ததை சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

தம்பி வேற ஒரு  உறைய கனக்க  கவனமாக  வைத்திருக்கிறதால  தான் 

இது  துலைய  வாய்ப்பு  அதிகமாக  இருக்குமோ  அண்ணை???😜

அப்படியென்ன உறை? 😲  துண்டற விளங்கேல்ல..!

உள்ளே பொன்னான பொக்கிசம் ஏதும் இருக்குமோ? 🙃

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

ஏற்கனவே இரண்டு சினோபார்ம் இரண்டு பைசர் டோஸ் போட்டாச்சுது, இனி நான் ஐந்தாவது தடுப்பூசியும் போட வேணுமா..?

10 நாட்களுக்கு முன் தான் ரஷீத் வைத்தியசாலைக்கு சென்று விசாரித்தபோது, "ஒண்டும் இனி பிரச்சினை இல்லை.. ஒங்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவைப்படாது" என்றார்கள்..

கணணிக்கு, வைரசை சிலர் உருவாக்கி பரவவிட்டு, பின்னர் அவர்களே ஆன்டி-வைரஸ் மென்பொருளை தயாரித்து சந்தையில் விற்று காசு பார்ப்பது போல, கொரானா திரிபுகளும் ஆகிவிடும்போல தெரியுது.

இனிமேல் கொஞ்ச காலம் வருடம் ஒரு பூஸ்டர்.

இன்னும் 100 மில்லியனுக்கும் மேலான டோசை பைசரிடம் வாங்கியுள்ளது யூகே.

https://www.dailymail.co.uk/news/article-10266893/Pfizer-boss-says-annual-jabs-needed-maintain-high-protection.html

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இனிமேல் கொஞ்ச காலம் வருடம் ஒரு பூஸ்டர்.

இன்னும் 100 மில்லியனுக்கும் மேலான டோசை பைசரிடம் வாங்கியுள்ளது யூகே.

https://www.dailymail.co.uk/news/article-10266893/Pfizer-boss-says-annual-jabs-needed-maintain-high-protection.html

இது ஒரு பேராசையான கொள்ளையடிக்கும் வியாபார தந்திரம்.

கார்களாகட்டும், கணணிகளாகட்டும், கைப்பேசிகளாகட்டும், கண்டுபிடித்த செயல்திறன் அம்சங்களை முழுமையாக விற்பனை சந்தைக்கு தரமாட்டாட்ர்கள். சில முக்கிய அம்சங்களில் பாதியை மட்டும் கொடுத்துவிட்டு, மீதமுள்ளவற்றை 'அடுத்த வெர்சனில்' என சொல்லி மறைத்துவிடுவார்கள். மக்களை நிரந்தரமாக அவர்கள் கொடுக்கும் பொருளை தொடர்ந்து வாங்கவே அடிமைபடுத்தி வைத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ராசவன்னியன் said:

உண்மைதான். 

புதிய விகாரிகளை தடுக்கும் தன்மையையும் முதல் டோசிலேயே புகுத்தி இருக்கலாம் என்றே நானும் நினைகிறேன்.

விகாரிகள் எப்படி உருவாகும் என எதிர்வு கூறுவது அவ்வளவு கடினமா?

ஆனால் உண்மையிலேயே விகாரிகள் உருவாகிய பின்னர்தான் தடுப்பை கண்டு பிடிக்க முடியுமோம் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ராசவன்னியன் said:

இது ஒரு பேராசையான கொள்ளையடிக்கும் வியாபார தந்திரம்.

கார்களாகட்டும், கணணிகளாகட்டும், கைப்பேசிகளாகட்டும், கண்டுபிடித்த செயல்திறன் அம்சங்களை முழுமையாக விற்பனை சந்தைக்கு தரமாட்டாட்ர்கள். சில முக்கிய அம்சங்களில் பாதியை மட்டும் கொடுத்துவிட்டு, மீதமுள்ளவற்றை 'அடுத்த வெர்சனில்' என சொல்லி மறைத்துவிடுவார்கள். மக்களை நிரந்தரமாக அவர்கள் கொடுக்கும் பொருளை தொடர்ந்து வாங்கவே அடிமைபடுத்தி வைத்திருப்பார்கள்.

எல்லாம் வியாபார மயம்.

ஜேர்மனியில் தற்போது கோரோனா கூடிவிட்டது என பதறுகிறார்கள் அலறுகிறார்கள். ஒரு சில இடங்களில் விசாரித்தால் வேறு காரணங்களை சொல்கின்றார்கள்.நான் சொல்ல விளைவது என்னவெனில் கொரோனா எனும் பிரச்சனை இருக்கின்றது.ஆனால்  ஜேர்மனியில்...?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ராசவன்னியன் said:

அப்படியென்ன உறை? 😲  துண்டற விளங்கேல்ல..!

உள்ளே பொன்னான பொக்கிசம் ஏதும் இருக்குமோ? 🙃

செல்லக் குஞ்சுகளாம் உறையினிலே...
செவ்வந்தி பூக்களாம் உறையினிலே...

பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை உண்டு அங்கே...
நாளைய உலகை ஆளும் சிங்கங்கள் உண்டு அங்கே....:cool:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

Graphic explaining how blood clots form

https://www.bbc.co.uk/news/health-59418123

சரியான கால அவகாசத்தோடு செய்யப்படாத தடுப்பூசிகளின் நீண்ட கால விளைவு ஆபத்தாக அமையுமோ என்ற கேள்விக்கள் பலமாக ஆரம்பித்துள்ளன.

நோய் பரவலை.. கடும் பாதிப்புக்கள் ஏற்படுவதை குறைக்க வேண்டிய அவசியத்தில் தடுப்பூசிகள் அவசியமானாலும்.. தனிநபர்.. மற்றும் பொது சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஊக்குவிக்காமல்.. மாஸ்கை கழட்டு.. போடு என்று அரைகுறை தனமாக அறிவுறுத்துவது மேற்கு நாடுகளில்.. கொரோனாவின் தாக்கம் அது உருவாகிய நாடாக கருதப்படும் சீனாவை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.

சீனாவில் தடுப்பூசிக்கு மேலதிகமாக கடும் தனிநபர்.. பொதுச் சுகாதார மட்டங்களை கொண்டிருப்பதால்.. அங்கு நோய் தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

செல்லக் குஞ்சுகளாம் உறையினிலே...
செவ்வந்தி பூக்களாம் உறையிலே...

பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை உண்டு அங்கே...
நாளைய உலகை ஆளும் சிங்கங்கள் உண்டு அங்கே....:cool:

சாமிகளே, இதைத்தான் "கிழட்டு குசும்பு" என எங்கள் கிராமத்தில் சொல்வார்கள்..! 🤣

இருந்தாலும் இது ஓவர்..

4 minutes ago, nedukkalapoovan said:

...சரியான கால அவகாசத்தோடு செய்யப்படாத தடுப்பூசிகளின் நீண்ட கால விளைவு ஆபத்தாக அமையுமோ என்ற கேள்விக்கள் பலமாக ஆரம்பித்துள்ளன.

நோய் பரவலை.. கடும் பாதிப்புக்கள் ஏற்படுவதை குறைக்க வேண்டிய அவசியத்தில் தடுப்பூசிகள் அவசியமானாலும்.. தனிநபர்.. மற்றும் பொது சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஊக்குவிக்காமல்.. மாஸ்கை கழட்டு.. போடு என்று அரைகுறை தனமாக அறிவுறுத்துவது மேற்கு நாடுகளில்.. கொரோனாவின் தாக்கம் அது உருவாகிய நாடாக கருதப்படும் சீனாவை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.

சீனாவில் தடுப்பூசிக்கு மேலதிகமாக கடும் தனிநபர்.. பொதுச் சுகாதார மட்டங்களை கொண்டிருப்பதால்.. அங்கு நோய் தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 

நான் சுவிஸ் வந்தபொழுது சாலையில் மாஸ்க் அணிந்தவாறு நடந்தேன். எல்லா வெள்ளைகளும் என்னை சற்றே விநோதமாக பார்த்தார்கள்.

சூரிட்சில் யாரும் மாஸ்க் அணிவதில்லை போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

நான் சுவிஸ் வந்தபொழுது சாலையில் மாஸ்க் அணிந்தவாறு நடந்தேன். எல்லா வெள்ளைகளும் என்னை சற்றே விநோதமாக பார்த்தார்கள்.

சூரிட்சில் யாரும் மாஸ்க் அணிவதில்லை போலும்.

மேற்கு நாடுகளில் அரசாங்க அறிவிப்புக்கள் மக்களின் சுகாதார நலனைக் காட்டிலும்.. நாட்டின் பொருளாதார நலனை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றன. உண்மையான நடைமுறை என்றால்.. அந்தந்த நாடுகளில் வைத்தியசாலைகள்.. மட்டத்தில் இருக்கும் நடைமுறையை மக்கள் பின்பற்றினால் (இலங்கை.. ஹிந்தியாவில் நிலைமை எப்படி என்று தெரியவில்லை.. இலங்கையில் பல தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது)... தொற்றை வெகுவாகக் குறைக்கலாம். வைத்தியசாலைகளில் உள்ளகத் தொற்று வெகு சில வீதங்களாக இருக்க.. வெளியில் மக்கள் மத்தியில் அது பல மடங்காக உள்ளது. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.