Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவில் ஈழத்து பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரும் கெளரவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவில் ஈழத்து பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரும் கெளரவம்

யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G.சாதனா (G. Sadhana) தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் Tamil Diaspora Alliance சார்பாக உரையாற்றுகிறார்.

Tamil Diaspora Alliance என்ற அமைப்பை புலம் பெயர் சமூகங்களின் இளைய தலைமைத்துவ அமைப்பாக இந்த சர்வதேச மாநாட்டுக்கு அழைப்பு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) விடுத்திருக்கிறது.

மேலும், இந்த சர்வதேச மாநாட்டில் பிரதிநிதியாக அமைப்பின் செயல் திட்டக்குழு பிரதி இயக்குனர் G.சாதனா (G. Sadhana) கலந்துகொள்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் உட்பட ஐ. நா சபையின் பல அங்கத்துவ அமைப்பின் இயக்குனர்களும் உரையாற்றவுள்ளனர்.

இதேவேளை, புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்று சிறந்த தலைமைத்துவத்திற்காக சர்வதேச மாநாட்டிற்காக கலந்து கொள்ள அழைக்கப்படுவது இதுவே முதல்முறை என்று தெரியவந்துள்ளது.

மேலும், வெவ்வேறு அமர்வுகளாக நடக்கும் இந்த மாநாட்டில் வரும் 7ஆம் திகதி G.சாதனா உரையாற்றுகிறார் என்று யுனிசெஃப் இன் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 
https://www.thaarakam.com/news/191b5e2c-0096-4d83-a0fd-4a2953565e24

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G.சாதனா (G. Sadhana) தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் Tamil Diaspora Alliance சார்பாக உரையாற்றுகிறார்.

'சிறுபான்மையினர்', 'சிறுபான்மை இனக்குழு' என்று இலங்கையிலுள்ள தமிழர்களைக் குறிப்பிட்டு அவர்களை ஒரு தேசிய இனமாக போராடத் தகுதியற்றவர்களாக்கிப் பெரும்பான்மை இனத்துக்கு அடிபணிந்து வாழவைக்க, சிறீலங்க, இந்திய அரசுகளும், அவர்களின் நட்புநாடுகளும் முயன்றுவரும் வேளையில், இலங்கைத் தமிழரையும் ஒரு தேசிய இனமாகக் கருதக்கூடியவாறு, "சிறுபான்மைத் தமிழர்" என்று உலகப் பெரும் வல்லரசான அமெரிக்காவையே அழைக்க வைத்தவர்கள்தான் இந்த தமிழ் டயசுபோறா அலையன்சு இளைஞர்கள். வாழ்த்துவோம்.🙌 🙏

  • கருத்துக்கள உறவுகள்

எங்க இருக்குன்னே தெரியாதா கைலாசா நாட்டுக்கு நித்தியானந்தா கைலாசா சார்பா தன்னோட நாட்டோட பிரதிநிதியையே அனுப்பிட்டாரு.. இயக்க காசை அடிச்ச அமைப்புகளை சேந்த கள்ளனுவள் என்ன செய்யுரானுவள் இவ்வளவு நாளும்..? 15 வருசத்தும் ஆகுது.. மூணாவது தலைமுறைதான் இது ஆவது  செய்யுது..

  • கருத்துக்கள உறவுகள்

Tamil Diaspora Alliance க்கு பாராட்டுக்கள்.
தவல்களை இணைத்த கிருபனுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குள் புளுகி புளுகி உசுப்பேத்துவதும், பப்பாவில் ஏற்றி அழகு பார்ப்பதும் பலருக்கு வாய்வந்த, கைவந்த கலை. கடந்த இரு தசாப்தங்களில் இப்படி பல இளையவர்கள் வந்து போய்விட்டார்கள்.

இவர்களின் தமிழ் தேசிய செயற்பாடுகள் எல்லாம் பசையான வேலை ஒன்று எடுக்கவும், தமது ரெசுமி/சிவியை அலங்கரிக்கவும், நல்ல வாழ்க்கை துணையை தேடவும், தமது சொந்த இருப்புக்களை வளப்படுத்தவும் விஸ்தாரணம் செய்யவும் உதவும்.

நிற்க...

அங்காள ஆனந்தி அக்கா கோபிக்க போறா தன்னை கேட்காமல் யாரோ நேற்று முளைச்ச இளசுகள் கையில் மைக்கை எடுத்துவிட்டுதுகள் என்று. எதற்கும் அக்காவையும் வணங்கி ஆசீர்வாதம் வாங்கினால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

Edited by நியாயத்தை கதைப்போம்
எ.பி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளையோர் அமைப்பு 2021 இல் (சில மாதங்கள் முன்பு) தான் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. இதன் அறிமுகம் மாதாந்த சங்கம் குளோபல் நவம்பர் மாத நிகழ்ச்சியில் வழங்கப் பட்டதைப் பார்த்தேன். பல நிகழ்ச்சித் திட்டங்கள் செய்கிறார்கள் - தற்போது தாயகத்திலும் பொருளாதார உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன் அர்த்தம் அங்கே இந்த அமைப்பை அல்லது கிளையை பதிவு செய்ய வேண்டிய ஒரு நிலை வரும் - இதன் போது சில விட்டுக் கொடுப்புகள் , சமாளிப்புகள் அரச அமைப்புடன் செய்ய வேண்டியும் வரலாம். அந்தக் கணத்தில் இந்த அமைப்பை சிலர் எப்படி விமர்சிப்பார்கள் என்று காண நான் ஆவலுடன் இருக்கின்றேன்.

நான் அறிந்த வரையில், இவர்கள் செயற்பாட்டு ரீதியான வழியில் செல்ல முனையும் நபர்களாக தெரிகிறார்கள் - இது இப்போது புகழ்மாலை சூட்டும் சிலருக்கு புளிப்பாக மாறும் என்பது என் கணிப்பு!  

  • கருத்துக்கள உறவுகள்

17 hours ago, கிருபன் said:

ஐ.நாவில் ஈழத்து பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரும் கெளரவம்

ஒரு தமிழ் பெண்மணி ஐ.நா வில் உரையாற்றுவதை தனி நபர் ஒருவருக்கு கிடைத்த பெருமையாக இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை எங்களில் சிலர் சிறிய கண்ணோட்டத்தில் பார்ப்பது மிக துரதிஷ்டம்.

நிறுவனத்தின் இணையதளத்தில் இவர்கள் பல வெவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் இஸ்தாபனங்களின் ஒன்றியமாகவும்  தாய் நாட்டில் பாதிக்கப்பட்டோருக்கு சேவையாற்றும் அதேவேளை அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்  நீண்டகால செயற்திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படிருப்பதுடன் அங்கத்துவ மட்டத்திலோ நிர்வாகிகளின் வரிசையிலோ தமிழ் இளயோரை மட்டும் உள்ளடக்கியதாக இல்லை என்பதும் தெளிவாகிறது.

ஐ.நா(UNICEF) வை தங்களின் முக்கிய அனுசரணையாளர் என்றும் காட்டியிருக்கிறார்கள். முக்கிய அம்சங்களாக கூட்டுறவு, மனித உரிமை என்பவற்றை தங்கள் பிரதான நோக்கம் என்று கோடிட்டு சொல்லப்பட்டிருப்பதுடன் இந்த இஸ்தாபனம் சீரான முறையிலும் மிக நேர்த்தியாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள விதம் மிகப் பாராட்டுக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2021 at 05:54, vanangaamudi said:

நன்றி. சரியானதொரு புரிதல்.முதலில் வாழ்த்துவோம். அவர்களது முயற்சிகளை அவதானித்து எம்மாலான பங்களிப்பை செய்வதும் கலந்துரையாடுதல். ஆலோசனை கூறுதல்.(ஏற்பது, ஏற்காதது அவர்களின் விடயம்)புலத்திலே தனித்துவமாக  இருந்த அமைப்புகள்(எ-டு நா.க.த.அ...) இதுவரை பெரிதாக என்ன செய்தார்கள். முதலில் இளையோரைச் செயற்பட விடவேண்டும். தவழ முன் நடக்க ஆசைப்படமுடியாது. இளையோரை குறைத்து மதிப்பிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்+

https://tamildiasporaalliance.org/

"எங்கள் சந்ததி தன்னது

பங்கினைச் செய்தது

என்றது மகிழ்ந்திடும் பார்..."

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் டயஸ்போரா அலையன்ஸ் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. 

அவர்களின் நோக்கம் என பின்வருமாறு கூறுகிறார்கள்.

ஒருங்கிணைதல் ஒத்துழைத்தல் ஒன்றியமாதல் எனும் அடிப்படையில் இயங்குவது தமிழ் புலம்பெயர் கூட்டமைப்பு. (Tamil Diaspora Alliance) தமிழ் தேசத்தின் அங்கமான  புலம்பெயர் மக்களை சமூகமாக இயங்க வழி செய்வதே இதன் நோக்கம். உரிமை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி இவையே இதன் குறிக்கோள்.

எங்களை நாங்களே உருவாக்கி கொள்ளுதல் என்ற புதுமையான கருத்தியல் வடிவத்தை அரசியல் செயல் நெறியாக கொண்டு அதற்காக ஒன்று படுதல் (united) ஒற்றுமையடைதல் (unity) கூட்டுறவை வளர்த்தல் (co-operative) அதன் மூலம் தமிழ் தேசம் என்ற கூட்டுணர்வால் (collective sense) தேச கட்டுமானத்தை உருவாக்கி அதிகாரம் அளித்து (empowerment) பாதுகாத்து வளர்ப்பது எமது நோக்கம்.

பரஸ்பர புரிந்துணர்வு பரஸ்பர உதவி, பரஸ்பர ஒத்துழைப்பு என்பதன் மூலம் தனி மனித மேம்பாட்டையும் கூட்டுணர்வினால் கூட்டு அமைப்பு, கூட்டு முயற்சி, கூட்டு வெற்றி என்பதை அடைவதன் மூலம் தமிழ் தேச மேம்பாட்டையும் உருவாக்கி எம்மை நாமே கட்டமைத்துக் கொள்வது.

தேசிய கட்டமைப்பு அதன் பலம், கௌரவம், மேம்பாடு (Enhancement) என்பவற்றின் மூலம் தனி நபர் பாதுகாப்பு, கௌரவம், மேம்பாடு என்பவற்றை அடைய வேண்டும் என்பதே எமது கருத்தியல் அடிப்படை.

தமிழ்தேச கட்டுமானத்தின் அங்கமாகவும் பலமாகவும் துணையாகவும் TAMIL DIASPORA என்பதை ஒரு சமூக சக்தியாக உருவாக்கிக் கொள்வதே எமது அமைப்பின் நோக்கம்.

இதில் எங்கேயும் தமிழ் தேசிய அரசியல், தாயகத்தில் மக்களுக்கான தீர்வுக்கு முனைதல், என்பன பற்றி எதுவும் சொல்லபடவில்லை.

நாம் டயஸ்போராவில் ஒன்றிணைய வேண்டிய தேவை இருப்பதே தாயக மக்களுக்காத்தான். அதை தவிர வெளிநாட்டில் நாம் ஒன்றிணைந்து தீர்க்கும் அளவுக்கு இங்கே எமக்கு பிரச்சனைகள் இல்லை.

அப்படி இருக்க அவர்களை பற்றி இலக்கு பிரகடனத்தில் கூட எதுவும் இல்லை என்றால்? 

அடுத்த விசயம், இவர்களாக செய்கிறார்களா அல்லது சுமந்திரனுக்கு பெயர் போக கூடாது என்பதால் ஏனையவர்கள் செய்லிறார்களா தெரியவில்லை - அமெரிகாவின் “சிறுபான்மை குழு” என்ற சொற்பிரயோகம் மாற்றபட்டது இவர்களால்தான் என்பதற்கு என்னால் ஒரு ஆதாரத்தையும் காண முடியவில்லை. 

எந்த அமெரிக்க அதிகாரியிடம் எங்கே கோரிக்கை வைத்தார்கள்?

எப்போது சந்தித்து இந்த மாற்றத்தை வலியுறுத்தினார்கள்?

நேற்று முளைத்த ஒரு அமைப்பின் அறிக்கையால் அமெரிக்கா நிலைபாட்டை மாற்றும் என நான் நினக்கவில்லை.

தம்மால்தான் இது சாதிக்கபட்டதாக இந்த அமைப்பு உரிமை கோரியதாயும் தெரியவில்லை. ஆனால் தமது பெயரை இலங்கை தமிழ் அரசியலில் பக்கசார்ப்பாக பயன்படுத்துவதை மறுப்பதாயும் தெரியவில்லை. இது ஒரு நல்ல சகுனம், தலைமைத்துவ பண்பு அல்ல.

நிச்சயமாக இந்த அமைப்பை பலர் கொம்பு சீவி விடுகிறார்கள். இந்த செய்தியையே பாருங்கள் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் நடத்தும் மாநாட்டிற்க்கு அழைப்பு என்பதை ஏதோ “ஐநாவில் பொதுசபையில் பேச்சு” என்ற அளவுக்கு பில்டப் கொடுத்து எழுதியுள்ளார்கள்.

அடுத்து மேலே வணங்காமுடி சொல்வது போல் - அவர்களின் அனுசரணையாளராக யுனிசெப் யு எஸ் ஏ இருக்கிறது. யுனிசெப் அனுசரணையுடன் செயல்படும் அமைப்பு, உறுப்பு நாடான இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிட முடியுமா?

ஆகவே இது ஒரு அரசியல் சாரா அமைப்பா?

மேலும் இங்கே இந்த பெண்மணி எதை பற்றி பேசுகிறார் -தலைமைதுவத்தை பற்றி. எமது இனப்பிரச்சனையை பற்றி அல்ல. இதனால் இவருக்கும் அமைப்புக்கும் கெளரவம்தான். வாழ்த்துக்கள்.

ஆனால் இனத்துக்கு?

எல்லாவற்றிலும் விட முக்கியமாக, டயஸ்போரா ஒன்றுபடவேண்டும், இளையோர் தலைமை கொள்ள வேண்டும் என்பதில் இரு கருத்து இல்லை, ஆனால் இதன் அடிப்படை நோக்கம் தாயக்கதில் தமிழ் தேசிய அடிப்படையில் ஒரு தீர்வை அடைவதாக இருக்க வேண்டும். 

இந்த அடிப்படையை அடிப்படை நோக்கமாக இவர்கள் ஏன் கொள்ளவில்லை என்பது - பல வினாக்களை எழுப்புகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தமிழ் டயஸ்போரா அலையன்ஸ் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. 

கோசான், உங்களுக்கு மட்டுமல்ல- யாருக்கும் இந்த அமைப்புப் பற்றி அதிகம் தெரியாது - ஏனெனில் உத்தியோகபூர்வமாக உருவாகி ஒரு மாதம் இருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால், தலைமையில் இருக்கும் சில இளையோரின் குடும்பப் பெயர்கள் அமெரிக்க வாழ் ஈழத்தமிழர்களிடையே பழக்கமான பெயர்கள். உருவாகியிருக்கும் காரணம் என்னவென்று எனக்கும் தெரியவில்லை:

ஊகங்கள்: நூறாய் உடைந்து போய் இருக்கும் எங்கள்/முன்னைய தலைமுறையினரின் அமைப்புகளால் சலிப்படைந்து தாங்களே இரண்டாம் தலைமுறை ஆரம்பித்திருக்கிறது?. அல்லது தமிழக அரசியல் பாரம்பரியம் போல, தங்கள் பிள்ளைகளை அடுத்த தலைமுறைத் தலைமையாக முன்னுக்கு விட பழசுகளே ஆரம்பித்திருக்கலாம்?

ஆனால், நான் திறந்த மனத்துடன் இவர்கள் பற்றிய முடிவெதுவும் அற்று அவதானிக்கிறேன். 

NB: அமெரிக்காவுடன் இவர்கள் என்ன பேசி, எப்படி அந்த சொற் சிலம்பம் விளையாடினார்கள் என்று எனக்கும் தெரியவில்லை - அப்படி ஒன்றும் ஆவணமாகவும் இல்லை! இது வெறும் பப்பா ஏத்தலாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

மேலதிக தகவல்களுக்கு நன்றி அண்ணா.

உங்களை போலவே நானும் திறந்த மனத்துத்துடந்தான் இவர்களை அணுகுகிறேன்.

அடுத்த தலைமுறையை தட்டி விட கூடாது என்ற பொறுப்பும் உள்ளது.

பார்க்கலாம்.

எனக்கு எவரையும் தெரியவில்லை. அமெரிக்க தமிழ் சங்கம் என்ற பெயர் மட்டும் பரிச்சயமாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

யுனிசெப்பில் பேசுவது மிகப்பெரிய கெளரவம் என்றால்.. யூஎன்னில் ஆடுவது பற்றி உங்கள் கருத்து என்ன? 🙃

இந்த விடயத்தில் எனது கருத்து,  தாயகத்திலோ அல்லது புலம் பெயர் நாடுகளிலோ வாழும் இளைய தலைமுறையினர்,  தமிழர் போராட்டம் தொடர்பான விடயங்களை கூடிய அளவுக்கு சுயாதீனமான பலவேறு தரப்புகளின் தகவல்களை பெற்று அதனை ஆய்வு செய்து தமக்கான கொள்கையினையும் செயற்திட்டத்தினையும் வகுத்து கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு போராட்ட அறிவூட்டுகின்றோம், வரலாறு கூறுகிறோம்  என்ற போர்வையில் பழைய அரசியல் சித்தாந்தங்களையும் வழிமுறைகளையும் ஒற்றைத்தன்மையுடன் அவர்களின் தலைக்குள் திணித்து, அவர்களை மூளைச்சலவை செய்வது எந்த பயனையும் தரப்போவதில்லை என்பதோடு எதிமறையான விளைவுகளையே ஏற்படுத்தும். 

ஒருகாலத்தில் இளைஞர்கள் ஆயுத போரை தொடங்கிய போது, இதே போல் மாபெரும் நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் உருவானது. அந்த நம்பிக்கை பொய்த்துக் கானல் நீரானதற்கு முக்கிய காரணம் போரட்டத்தை தொடங்கிய இளைஞர்கள் அனைவரும் பழைய அரசியல் தலைமைகளின் உரைகளையும் அறிவூட்டல்களையும் மட்டுமே உள்வாங்கி தமது போராட்ட கொள்கையை வகுத்து கொண்டதாலே ஆகும். காலப்போக்கில் உலக அரசியல் மாற்றங்களை கூட கிரகித்து கொள்ளாத/ கொள்ள விரும்பாத கோட்பாட்டு ரீதியாக ஒரு இடத்தில் ஸதம்பித்து நின்ற போராட்ட முறையாலேயே இன்று அடுத்த தலைமுறை இன்னும் அதிகளவு பாரத்தை சுமக்க வேண்டிய துர்ப்பாக்கிய  நிலையை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. 

ஆகவே இளையோர் தமக்கான தகவல்கள், அறிவூட்டல்கள் ஆகியவற்றை சுயாதீனமாக பலவேறு வித்தியாசமான sources இலிருந்து தேடி சுய ஆய்வுக்குட்படுத்தி தமது கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் வகுத்து கொண்டு காத்திரமான அரசியல் தீர்வை நோக்கி பயணிப்பதே நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, tulpen said:

ஆகவே இளையோர் தமக்கான தகவல்கள், அறிவூட்டல்கள் ஆகியவற்றை சுயாதீனமாக பலவேறு வித்தியாசமான sources இலிருந்து தேடி சுய ஆய்வுக்குட்படுத்தி தமது கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் வகுத்து கொண்டு காத்திரமான அரசியல் தீர்வை நோக்கி பயணிப்பதே நல்லது. 

அதென்ன அந்த வித்தியாசமான sources நேரடியாக சொன்னால் நல்லதல்லதல்லவா ?

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2021 at 16:15, நியாயத்தை கதைப்போம் said:

நிற்க...

அங்காள ஆனந்தி அக்கா கோபிக்க போறா தன்னை கேட்காமல் யாரோ நேற்று முளைச்ச இளசுகள் கையில் மைக்கை எடுத்துவிட்டுதுகள் என்று. எதற்கும் அக்காவையும் வணங்கி ஆசீர்வாதம் வாங்கினால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

ஏன் அவாவை  தேவையற்று இங்கு இழுக்கிறீங்கள் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.