Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்கள் சுற்றி வளைப்பு – 21 தமிழக மீனவர்கள் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் சுற்றி வளைப்பு – 21 தமிழக மீனவர்கள் கைது!

February 1, 2022

spacer.png

பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகு உள்ளூர் மீனவர்களினால் முற்றுகையிட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டது.

உள்ளூர் மீனவர்களினால் தடுத்து வைக்கப்பட்ட இந்திய இழுவைப் படகு இலங்கை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் அதிலிருந்த இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (31.01.22) நள்ளிரவு இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தில் சமரச முயற்சியில் ஈடுபட்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை ஏற்க பருத்தித்துறை மீனவர்கள் மறுத்ததுடன் அவரை இந்த விடயத்தில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

spacer.png

இந்திய இழுவைப் படகு நேற்று பின்னிரவு பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை அவதானித்த சுப்பர்மடம் மீனவர்கள் பருத்தித்துறை மீனவர்களுடன் இணைந்து 9 படகுகளில் சென்று முற்றுகையிட்டனர்.

இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்திய உள்ளூர் மீனவர்கள் அந்தப் படகிலிருந்த வலைகள் மற்றும் மீன்களை கைப்பற்றினர்.

சம்பவத்தையறிந்து அங்கு விரைந்த இலங்கை கடற்படை இந்திய இழுவைப் படகை கையகப்படுத்தியதுடன் அதிலிருந்த மீனவர்களைக் கைது செய்து காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் சென்றனர். கரை திரும்பிய பருத்தித்துறை மீனவர்கள் இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

spacer.png

 

இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை நாகை மாவட்டம் வேதாரண்யம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.

அவர்களில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியி்ல் ஈடுபட்டதாக இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்து மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதேவேளை கடந்த 27ம் திகதி யாழ்ப்பாணம் – வடமராட்சியில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகின் மீது தமிழக மீனவர்களின் மீன்பிடி விசைப்படகு மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கி படகில் இருந்த மீனவர்கள் காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் படகு மூழ்கி மாயமான இரண்டு மீனவர்களில் ஒருவர் நேற்று மாலை சடலமாக கரை ஒதுங்கினார்.

spacer.png

 

அதேவேளை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை காலை முதல் வீதிகளில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து நேற்று இரவு யாழ்ப்பாண மீனவர்கள், எல்லை தாண்டி வந்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து சிறை பிடிக்க படகுகளுடன் கடலுக்குள் சென்றனர்.

நடுக்கடலில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த தமிழக படகை சுற்றிவளைக்கும் போது படகில் இருந்த தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாகவும் மீனவர்கள் குற்றசாட்டியுள்ளனர்.

 

 

https://globaltamilnews.net/2022/172556

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் இலங்கை கடற்கொள்ளையர் கொடுமை! - தமிழக மீனவர்களைத் தாக்கி கடலில் தள்ளிவிட்ட கொடூரம்

மு.இராகவன்News

தமிழக மீனவர்கள்

படகிலிருந்த டீசலையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதால், கரைக்கு வர முடியாமல் தத்தளித்த மீனவர்கள், அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் 2 லிட்டர் டீசல் வாங்கிக்கொண்டு வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

வேதாரண்யம் மீனவர்களைத் தாக்கிய இலங்கை கடல் கொள்ளையர்கள், சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றதோடு, மூன்று மீனவர்களைக் கடுமையாகத் தாக்கி கடலில் வீசிய சம்பவம் மீனவ மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த நாகமணி என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த நாகமுத்து, பன்னீர்செல்வம், ராஜேந்திரன் ஆகிய மூன்று பேரும் நேற்று (24.01.2022) அதிகாலை கோடிக்கரைக்குத் தென் கிழக்கே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் மூன்று பேர் வந்து, புஷ்பவனம் மீனவர்களின் படகில் ஏறி மீனவர்களை கம்பு, இரும்புக்கம்பிகொண்டு தாக்கி அவர்களைத் தண்ணீரில் தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. பின்பு படகில் இருந்த 200 கிலோ வலை, ஜி.பி.எஸ் கருவி, வாக்கி - டாக்கி செல்போன் உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளையடித்து சென்றனர்.

படகிலிருந்த டீசலையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதால் கரைக்கு வர முடியாமல் தத்தளித்த மீனவர்கள், அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த  மீனவர்களிடம் 2 லிட்டர் டீசல் வாங்கிக்கொண்டு அவசரம் அவசரமாக வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

ஆறுகாட்டுத்துறையிலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு  சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது பற்றி வேதாரண்யம் கடலோரக் காவல் குழும போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

தமிழக மீனவர்கள்

அப்படியும் நடக்கிறது. இப்படியும் நடக்கிறது. ஏன்? எதற்காக??

இதன் பின்னணியில் இருப்பது யார்.???

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Paanch said:

 

அப்படியும் நடக்கிறது. இப்படியும் நடக்கிறது. ஏன்? எதற்காக??

இதன் பின்னணியில் இருப்பது யார்.???

ஏதோ  நடக்கப்போகிறது???

சிங்களம் விபரீதத்தை ஆரம்பிக்கிறது?

ஆனால் இழப்பும் நட்டமும்  தமிழருக்குத்தான்......................😭

  • கருத்துக்கள உறவுகள்

"2 லீற்றர் எரிபொருள் கடனாகப் பெற்று கரை திரும்பினர்"

2 லீற்றறில இந்தியாவுக்குத் திரும்பக்கூடிய இயந்திரம் ???????

சந்திராயனுக்கு அனுப்பின ரொக்கற்றாக இருக்குமோ..

😆

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்!

999 Views
Subscriber
 
 
 

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு நீதிகோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருதங்கேணி பிரதேச செயலகத்தின் இரண்டு வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருக்கும் மீனவர்கள்,எமது கடற்பரப்பு இந்தியாவுக்கு விற்க்கப்பட்டதா, உயிரை குடிக்கும் இந்திய படகை தடுத்து நிறுத்து, இந்திய படகுகளுக்கு நாங்கள் இரையா,வலை வீச உயிர் பயம் என்ன செய்வோம்,எமது கடல் எமக்கு வேண்டும்,கடற்றொழில் அமைச்சே திரும்பிப்பார், மீனவர்களை கொல்லாதே போன்ற கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

அப்பகுதியில்  பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றனர்.

https://athavannews.com/2022/1264849

இலங்கை தமிழ் மீனவர்களின் கடல் வளத்தை கொள்ளையிட வருவது, வந்த பின் கைது செய்யப்பட்டால் குய்யோ முய்யோ என்று கதற வேண்டியது.

கடந்த ஆண்டு (2020 - 2021) இந்தியாவில் மீன்பிடி மூலம் அதிக வருவாயை அரசுக்கு பெற்றுக் கொடுத்த மாநிலமாக தமிழகம் வந்துள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது. இங்குதான் இலங்கையில் மீன்வள கொள்ளையில் ஈடுபடும் மீனவர்கள் வாழும் இராமேஸ்வரம் உட்பட பல பேரூராட்சிகள் உள்ளன. இந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மட்டும் 2.64 லட்சம் டன் அளவு மீன்களை பிடித்துள்ளனர். 

இந்தளவுக்கு இவர்கள் பிடித்த மீன்களில் கண்டிப்பாக எல்லை தாண்டி வந்து ஈழத்தமிழனின் வளத்தை அடித்த கொள்ளையும் அடங்கும். 

என்றுமே தமிழர் விரோத அரசியல் செய்யும் இந்தியாவுக்கு எம் வளத்தினை அடிக்கும் கொள்ளை மூலமும் வருமானம் கிடைக்கின்றது.

உசாத்துணை:

https://www.dinamalar.com/news_detail.asp?id=2923958

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இந்தச் சம்பவத்தில் சமரச முயற்சியில் ஈடுபட்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை ஏற்க பருத்தித்துறை மீனவர்கள் மறுத்ததுடன் அவரை இந்த விடயத்தில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

ஒன்றுக்கும் உபயோகமில்லாத பழைய வாகனம் களை  இந்திய ரோலர்கள்  அடிக்கடி வரும் பகுதிகளில் அமிழ்த்தி விடுவதே இதற்கான தற்போதைக்கும் உள்ள சிறந்த தீர்வு இந்த ,முறையில் உலக நாடுகள்  மீன் வளத்தை பெருக செய்வதில் முன்னேற்றம் கண்டுள்ளன அதே நேரம் ரோலர் போன்றவைக்கு தலையிடியை கொடுக்கும் விடயமும் . டக்லஸ் இந்த விளையாட்டு செய்தவர் உடனே தமிழக முக்கிய கட்சி அரசியல்வாதி அதற்கு எதிராக கூப்பாடு போட்டவர் அவரின் பெயரில் 20 க்கு மேற்பட்ட ரோலர்கள்  உள்ளன .ஆரம்பத்தில் வாகனம்களை தாட்டவர்   தமிழக அரசியல் பக்கம் இருந்து பெட்டிகள் கிடைத்த பின் அமைதியாகி விட்டார் போல் பலரும் சந்தேகப்பட்டவர்கள்  தற்போதும் இந்த பிரச்சனையின் போது  பிடிபட்டவர்களுக்கு ஆதரவாக பேசியது பெட்டி  வாங்கியதை உறுதிப்படுத்துகிறார் அவராகவே .

28 minutes ago, நிழலி said:

இலங்கை தமிழ் மீனவர்களின் கடல் வளத்தை கொள்ளையிட வருவது, வந்த பின் கைது செய்யப்பட்டால் குய்யோ முய்யோ என்று கதற வேண்டியது.

கடந்த ஆண்டு (2020 - 2021) இந்தியாவில் மீன்பிடி மூலம் அதிக வருவாயை அரசுக்கு பெற்றுக் கொடுத்த மாநிலமாக தமிழகம் வந்துள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது. இங்குதான் இலங்கையில் மீன்வள கொள்ளையில் ஈடுபடும் மீனவர்கள் வாழும் இராமேஸ்வரம் உட்பட பல பேரூராட்சிகள் உள்ளன. இந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மட்டும் 2.64 லட்சம் டன் அளவு மீன்களை பிடித்துள்ளனர். 

இந்தளவுக்கு இவர்கள் பிடித்த மீன்களில் கண்டிப்பாக எல்லை தாண்டி வந்து ஈழத்தமிழனின் வளத்தை அடித்த கொள்ளையும் அடங்கும். 

என்றுமே தமிழர் விரோத அரசியல் செய்யும் இந்தியாவுக்கு எம் வளத்தினை அடிக்கும் கொள்ளை மூலமும் வருமானம் கிடைக்கின்றது.

தமிழக மீனவரை  நொந்து என்ன பயன் முதலாளி யார் என்பது உங்களுக்கு தெரியாதா நிழலி ? இதே தமிழக மீனவர்கள்  கேரளா பக்கமும் அதிராம் பட்டினமும் போய்  மீன்பிடிக்க முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

"2 லீற்றர் எரிபொருள் கடனாகப் பெற்று கரை திரும்பினர்"

2 லீற்றறில இந்தியாவுக்குத் திரும்பக்கூடிய இயந்திரம் ???????

சந்திராயனுக்கு அனுப்பின ரொக்கற்றாக இருக்குமோ..

இந்த செய்தியின் மூலம் தமிழக செய்தித்தாள் போல் உள்ளது 2 லீற்றர் என்று  செய்தி  போடவேண்டிய கட்டாயம் அதன் அர்த்தம் தமிழக கடல் எல்லைக்குள் தான் இவ்வளவும் நடந்துள்ளது எனும் செய்தி மறைந்து  உள்ளது .

3 hours ago, விசுகு said:

ஏதோ  நடக்கப்போகிறது???

சிங்களம் விபரீதத்தை ஆரம்பிக்கிறது?

ஆனால் இழப்பும் நட்டமும்  தமிழருக்குத்தான்......................😭

36 மைல்களுக்கு இடையே பிரிக்கப்பட்ட தமிழர்கள் தங்களுக்குள் அடிபட்டால் சிங்களத்துக்கு கொண்டாட்டமே அதுவும் ஆட்சி அதிகாரத்தில்  உள்ள பினாமிகளின்  வள்ளம் களில் வேலை ஆட்கள் பிடிபடுவதை சிங்கள,ம்  கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும் .

14 minutes ago, பெருமாள் said:

 

தமிழக மீனவரை  நொந்து என்ன பயன் முதலாளி யார் என்பது உங்களுக்கு தெரியாதா நிழலி ? இதே தமிழக மீனவர்கள்  கேரளா பக்கமும் அதிராம் பட்டினமும் போய்  மீன்பிடிக்க முடியுமா ?

திமுக முக்கியஸ்தர் டி.ஆர்.பாலு உட்பட பலர் இதன் முதலாளிகளாக உள்ளனர். அதே நேரம் சொந்த படகுகளை வைத்து மீன்பிடிக்கும் மீனவர்களும் உள்ளனர்.

கைப்பற்றப்படும் படகுகளை மீள கையளிக்காமல் தொடர்ந்து கையகப்படுத்தி வைப்பதே இப்போதைக்கு சிறந்த மருந்து இதற்கு.
 

கேரளா பக்கம் போக மாட்டார்கள். சில தடவை போய், கடுமையாக வாங்கிக் கட்டியவர்கள். அத்துடன் கேரள அரசியல்வாதிகளின் ஆதரவும் கேரள மீனவ சமூகத்து உண்டு என்பதால் அவர்களுடன் முண்டுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, எம்மையே கடற்கொள்ளையர்கள் என்று அழைக்கும் இந்தக் கைங்கரியம் தடுத்து நிறுத்தப்படவேண்டும். இதுவரை காலமும் செய்தது போதும். இனிமேலும் வேண்டாம்.

நீங்கள் உங்கள் பகுதிக்குள் உங்களின் ஆழ்கடல் இழுவைப்படகுகளை வைத்து தேவையானளவிற்கு மீனைப் பிடித்துக்கொள்ளுங்கள், எவருமே ஏனென்று கேட்கப்போவதில்லை. ஒருபக்கம் சிங்கள மிருகங்களின் ஆக்கிரமிப்பினாலும், தடைகளினாலும் அல்லற்பட்டு நிற்கும் எமது மீனவர்களை நீங்களும் சுரண்டவேண்டாம்.

எமது மீன்வளத்தைக் கொள்ளையடித்து, எமது வலைகளை அறுத்தெறிந்து, எமது சிறிய படகுகளை மோதி உடைத்து, மீனவர்களைக் காணாமலாக்கி நீங்கள் செய்துவரும் அட்டூழியம் நிறுத்தப்படவேண்டும்.

இதுவரை காலமும் எமது சகோதரர்கள்தானே என்று பேசாமலிருந்தோம், ஆனால் அண்ணன் தம்பியென்றாலும்கூட வாயும் வயிறும் வேறல்லவா? ஆகவே, எங்களையும் வாழவிடுங்கள். உங்களுக்கு லாபம், ஆனால் எங்களுக்கு இதுதான் வாழ்வாதரமே. 

உங்களின் கடந்தகால உதவிகளுக்கு நாங்கள் விசுவாசமாக இருப்போம், ஆனால் எங்களின் வாழ்வை அதற்கு விலையாகக் கேட்காதீர்கள் !

Edited by ரஞ்சித்
எழுத்துப்பிழைகள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - சுப்பர்மடம் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் மீனவர்கள் போராட்டம்

Published by T. Saranya on 2022-02-01 13:06:00

 
 

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

VideoCapture_20220201-114447.jpg

VideoCapture_20220201-114425.jpg

வீதியில் கூடாரங்களை அமைத்து படகுகள் மற்றும் வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

VideoCapture_20220201-114452.jpg

VideoCapture_20220201-114431.jpg

இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

VideoCapture_20220201-114402.jpg

போராட்டம் இடம்பெறும் இடத்தில் அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture_20220201-114456.jpg

 
  • கருத்துக்கள உறவுகள்

Karunanidhi_Has2780.jpg

Jayalalitha-pens-two-letter-1.jpg

1614072919_902293-mk-stalin.jpg

இந்தா ஆரம்பித்து விட்டார்கள் அல்லோ..

எல்லை தாண்டினால் தூக்கி ஒரு வருடம் இல்லை இரண்டு வருடம் உள்ளே வைத்தால் எவனும் தலை வைத்து படுக்க மாட்டான் ..👍

டிஸ்கி

அதற்கும் மேலே இலங்கை அரசு கிந்தியனிடம் கை " ஏந்தாமல் " இருக்க வேண்டும் 👌

  • கருத்துக்கள உறவுகள்

 

மீனவர்களை சந்திக்க வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிக்கு மீனவர்கள் "கூ " காட்டியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, zuma said:

 

மீனவர்களை சந்திக்க வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிக்கு மீனவர்கள் "கூ " காட்டியுள்ளார்கள்.

நம்பாட்டி  போங்க??

ஒரு தலைவன் மாதிரியா  பேசுகிறார்???😡

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மணற்கொள்ளைக்காரன், மீனவர்களின் தலைவன்! யார் நம்புவது இவரை?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக முதல்வர் அழைப்பு – சிவாஜிலிங்கம்

spacer.png

எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சுப்பர்மடம் பகுதியில் இடம்பெற்ற மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக இலட்சக்கணக்கான கடற்றொழில் உபகரணங்களை மாத்திரமன்றி உயிரிழப்புக்களும் ஏற்படுவதாக எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

இலங்கை கடற்படையினரது படகுகளாலும், விபத்தினாலும் கொல்லப்பட்டு கரை ஒதுங்குகின்ற கடற்றொழிலாளர்களது சடலங்களால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது என கூறினார்.

இருப்பினும் இலங்கை அரசாங்கம் இதை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய சிவாஜிலிங்கம் இரு தரப்பும் கடலில் மோதுவதை இல்லாமல் செய்ய இலங்கை இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 

 

https://athavannews.com/2022/1264939

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்கு நஸ்டஈடுகளை வழங்க நடவடிக்கை!

spacer.png

அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்ட விரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்கும் உயிரிழந்த இரண்டு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் நஸ்டஈடுகளை வழங்குவதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் மருதங்கேணி பிரதேச செயலகத்தை வழி மறித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், குறித்த இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “உங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு – இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகள் தீர்கப்பட வேண்டும் என்ற விருப்பதுடன் உங்கள் முன்னால் வந்திருக்கின்றேன். என்னுடைய கருத்துக்களில் இருக்கின்ற உண்மையைப் புரிந்து கொண்டு அணி திரள்வீர்களாயின் உங்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைுவற்றித் தருவேன்” என்று தெரிவித்தார்.

அதேவேளை, பருத்தித்துறை முனை கடற்கரை பகுதியில் நேற்று அத்துமீறி நுழைந்து சட்ட விரோத தொழில் முறையைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய இழுவைவலைப் படகுகளை பிடிப்பதற்கு பிரதேசக் கடற்றொழிலாளர் முயற்சித்தமையினால் ஏற்பட்ட பதற்றம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டினால் கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டது.

பருத்தித்துறை முனை கடல் பிரதேசத்தில் சுமார் ஒரு கடல் மைல் தொலைவில் நேற்று இரவு இந்திய இழுவைவலைப் படகுகள் அவதனித்ததும் பொறுமை இழந்த பிரதேச கடற்றொழிலாளர்கள், அவற்றை துரத்திச் சென்று கைப்பற்ற முயற்சித்தமையினால் இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.

குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், உரிய இடத்திற்கு சென்ற கடற்றொழில் அமைச்சர், சம்பவ இடத்திற்கு கடற் படையினரை அனுப்பி வைத்ததுடன், கடற்றொழிலாளர்களையும் ஆறுதல்படுத்தி கரைக்கு திருப்பி அழைத்தார்.

இந்நிலையில் கடற்படையினரால் இரண்டு இந்தியப் மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டதுடன் அதிலிருந்த 21 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே, கடந்த 27ஆம் திகதி வத்திராயனில் இருந்து தொழிலுக்கு சென்ற இரண்டு கடற்றொழிலாளர்களின் சடலங்கள் நேற்று கரையொதுங்கிய நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் சுமூகமாக தீர்க்கப்படாது விட்டால் இரண்டு நாட்டு கடற்றொழிலார்களும் நடுக் கடலில் மோதும் நிலை ஏற்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக தெரிவித்து வந்ததுடன் பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
 

 

https://athavannews.com/2022/1265000

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.