Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவுடமை மற்றும் முதலாளித்துவம் என்பது மனித உரிமைகள் அல்ல என நான் நினைக்கிறேன்.

பொதுவுடமை மற்றும் முதலாளித்துவம், நாடுகளது  இரண்டு இரு வேறு வகையான பொருளாதார முகாமைத்துவம், பொருளாதாரத்தில் வளங்களை 4 வகைப்படுத்துவர் இந்த வளங்களை பயன்படுத்தி என்ன பொருளை யாருக்காக உற்பத்தி செய்வது என்பதனை தீர்மானிப்பதுதான் பொதுவுடமை மற்றும் முதலாளித்துவ முறமையாகும்.

பொதுவாக முதலாளித்துவ அமைப்பில் இலாப நோக்கில் சிறந்த முகாமைத்துவத்துடன் (மிக குறைவான விரயத்துடன்) உற்பத்தியும் அதே வேளை பொதுவுடமையில் மக்கள் தேவைக்கு முதன்மை வழங்கப்பட்டு மோசமான முகாமைத்துவத்துடன் ( விரயங்களுடன்) உற்பத்திகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது உலகில் எங்கும் இரண்டும் கலந்த பொருளாதார முறமையே காணப்படுகிறது அது இரஸ்சியாவாக இருந்தாலும் சரி அல்லது அமெரிக்காவாக இருந்தாலும். 

ஒரு நாட்டை ஆளுதல் என்பது சட்ட சார்பானது அதற்கும் பொருளாதார முகாமைத்துவமான பொதுவுடமை மற்றும் முதலாளித்துவத்திற்கு சம்பந்தமில்லை என கருதுகிறேன், நாட்டின் தலைவர் நியமிக்கப்படுவது தொடக்கம் சட்டம் இயற்றல் பின் அதனை நடைமுறைப்படுத்துவது என்பது அந்த நாட்டின் சட்டம் தீர்மானிக்கின்றது, நாடுகளுக்கிடையே சட்டம் வேறுபடும்.

இரஸ்சிய முதலாளி தனது வர்த்தக நலஙளுக்காக உக்கிரேனை ஆக்கிரமிக்க அதே வர்த்தக நலனை இரஸ்சிய முதலாளியிடமிருந்து தட்டி பறிக்க மேற்கு முதலாளிகள் முயற்சிக்கிறார்கள் என கருதுகிறேன் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

நாங்கள் சாதாரண மக்கள் எமக்கு எம்மை போன்ற மக்களின் அமைதியான, சுதந்த்திரமான, சுபீட்சமான வாழ்வில்தான் அக்கறையுண்டு இதில் இரஸ்சிய முதலாளியும் மேற்கு முதலாளியும் எமக்கு தேவையற்றவர்கள்.

பனிப்போரின் பின் நாடுகளில் நுழைந்து அவர்களது வளங்கலை கோள்ளையடிப்பது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மட்டும்தான் (அலிபாபவும் 40 திருடர்களும்). இப்போது போட்டியாக இரஸ்சியா வந்ததை முளையிலேயே கிள்ளி வைக்க நினக்கிறார்கள்.

Edited by vasee

  • Replies 477
  • Views 30.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

 சசி வர்ணம்! தகவலுக்கு மிக்க நன்றி 🙏

இவற்றையெல்லாம் நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டேயிருக்க வேண்டும்.

கு.சா அண்ணா,
இது என்னுடைய தமிழக நண்பர் / தம்பி  சிவராவணன் வெகு சிரத்தையோடு தமிழீழ போராட்டம் சார்ந்த உண்மைகளை அப்போதிருந்த பதிவுகள், புத்தகங்கள், குறிப்புகள், போராளிகளுடனான உரையாடல் போன்ற தகவல்களை எல்லாம் ஒன்று திரட்டி அவரின் குரல் வடிவத்தோடு YouTube, Spotify பகுதி பகுதியாக வெளியிட்டு வருகிறார். இவை காணக்கூடியவாறு தற்போதைக்கு இருக்கின்றது.  எப்போது தூக்கப்படுமோ தெரியாது.
தம்பி சிவராவணன் ராஜீவ் கொலை வழக்கில் இப்பொழுதும் சிறையில் வாடும் சகோதரர்களோடு தொடர்பில் இருக்கிறார். அவர்களின் சாட்சியங்களாக நிறைய விடயங்களும் இங்கே பகிரப்பட்டுள்ளது.
நேரம் இருக்கும் பொழுது இதை கேளுங்கள். நானும் இன்னும் ஒரு திரி திறந்து இதை பிரத்தியேகமாக பகிர எண்ணியுள்ளேன். 

நான் வாகனத்தில் நெடுநேர பயணங்களின் போதும், இரவு நித்திரைக்கு செல்லும் முதலும் அநேகமாக கேட்ட பதிவுகள் இவை. இவற்றை ஆங்கிலத்தில் பதிவு செய்யும் செயல் பாடு பற்றி அவரோடு பேசிக்கொண்டும் இருக்கிறேன். அடுத்த சந்ததிக்கு கொண்டு போகும் இந்த பதிவுகள் கூடிய சீக்கிரம் நிறைவேறும். 

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் சொந்த நலன்களைத் தவிர, யாரையும் காப்பாற்றுவதில் யாருக்கும் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை...  ஆனால் அவர்கள் முதலாளியாக இருக்க முடியாது என்பதை அமெரிக்காவை உணர வைப்பது உலகை காப்பாற்ற மிகவும் முக்கியமானது, குறிப்பாக எதிர்கால அமெரிக்க படையெடுப்பில் இருந்து ஏழை நாடுகளை….  உலகம் அமெரிக்கா மற்றும் நேட்டோ அல்ல…

அதற்கு முதல் அடி எடுத்து கொடுத்த ரஷ்யாவுக்கு வாழ்த்துக்கள்.. சீனாவும் அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளயும் துணிந்து எதிர்க்க முன்வரவேண்டும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் எழுதிய கருத்தை வைத்து இப்படி 👇🏼நன்றாகவே செய்கிறார்கள்..

நீங்கள் தயாரித்த கொண்டை கடலை சலாட் சத்து உணவை கலக்கி கொத்து ரொட்டி செய்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
54 minutes ago, vasee said:

பனிப்போரின் பின் நாடுகளில் நுழைந்து அவர்களது வளங்கலை கோள்ளையடிப்பது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மட்டும்தான் (அலிபாபவும் 40 திருடர்களும்). இப்போது போட்டியாக இரஸ்சியா வந்ததை முளையிலேயே கிள்ளி வைக்க நினக்கிறார்கள்.

இது ரஷ்ய சனாதிபதி புட்டின் 2001ம் ஆண்டு ஜேர்மனிக்கு விஜயம் செய்த போது பாராளுமன்றத்தில்  உரையாற்றிய உரை இது. புட்டின் உரையாற்றும் போது பல இடங்களில் ஒட்டு மொத்த பாரளுமன்றமே கட்சி பேதமில்லாமல்  கொள்கை பேதமில்லாமல் எழுந்து கரகோஷம் செய்தார்கள்.

பனிப்போர் முடிவடைந்து விட்டதெனவும் இனி ஐரோப்பாவும் அகில உலகும் சுதந்திரமாக இருக்க வேண்டுமெனவும் உரையாற்றிய உரை இது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுடன் நட்புடன் உறவாடிய காலம் இது/அது.

Diskussion um „Killer” Putin - Moskau reagiert mit Schärfe

Libyen-Konferenz 2018: Bundeskanzlerin Angela Merkel empfängt Wladimir Putin, Präsident von Russland, vor dem Bundeskanzleramt.

Wladimir Putin: Vom KGB-Agenten zum russischen Präsidenten

Mann des Jahres" 2007: Wladimir Putin - n-tv.de

Vom Premier zum Langzeitpräsidenten: Russland seit 20 Jahren in Putins Hand  - news.ORF.at

Ukraine-Krise: Bei Macron stößt Putin immer auf ein offenes Ohr

Bei persönlichem Treffen: So stichelte Queen Elizabeth gegen Wladimir Putin  | Abendzeitung München

பல விட்டுக்கொடுப்புகளை செய்த கொம்யூனிச நாட்டை கிறுக்கனாக மாற்றியது யார்?

  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாம் கொரியா மற்றும் ஜப்பானில் 2 அணுகுண்டுகள் போட்டது வரக்கூட செல்லவேண்டாம்... இப்ப அண்மைக்காலங்களில் சிரியா, ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மெகாலோமேனியாக்கள் என்ன செய்தார்கள் என்பதை நாங்கள் கருத்தில் கொண்டாலே எல்லாம் புரியும்...  ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் மேலும் கிழக்கே பரவியிருக்கும் இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவதே ரஷ்யா இப்போது செய்து கொண்டிருக்கிறது...  ரஷ்ய இராணுவம் காகிதப்புலி என்றால், இந்த உக்ரேன் குழந்தை ஏன் அழுகிறது மற்றும் நேட்டோ உதவிக்கு செல்லவில்லை...  அவர்கள் போரில் ஈடுபட்டுள்ளனர், மேலும் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், பொதுமக்கள் மருத்துவமனைகள் மற்றும் மகப்பேறு வார்டுகள் மீது குண்டு வீசுவதைத் தவிர்த்திருக்கலாம்….  காலி செய்ய போதுமான அவகாசம் வழங்கப்பட்டது...  நகைச்சுவை நடிகர் நேட்டோவை நம்பினார், இப்போது தனது பிழைப்புக்காக அப்பாவி பொதுமக்களை வேண்டுமென்றே யுத்தத்தில் சிக்கவைக்கிறார்...  நேட்டோவினால் வேறு இடங்களில் நாம் பார்த்ததை ஒப்பிடுகையில் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு ஒன்றும் இல்லை…  ஒபாமா உட்பட அனைவரும் போர்க் குற்றங்களுக்காக விசாரிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்...
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இது ரஷ்ய சனாதிபதி புட்டின் 2001ம் ஆண்டு ஜேர்மனிக்கு விஜயம் செய்த போது பாராளுமன்றத்தில்  உரையாற்றிய உரை இது. புட்டின் உரையாற்றும் போது பல இடங்களில் ஒட்டு மொத்த பாரளுமன்றமே கட்சி பேதமில்லாமல்  கொள்கை பேதமில்லாமல் எழுந்து கரகோஷம் செய்தார்கள்.

பனிப்போர் முடிவடைந்து விட்டதெனவும் இனி ஐரோப்பாவும் அகில உலகும் சுதந்திரமாக இருக்க வேண்டுமெனவும் உரையாற்றிய உரை இது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுடன் நட்புடன் உறவாடிய காலம் இது/அது.

Diskussion um „Killer” Putin - Moskau reagiert mit Schärfe

Libyen-Konferenz 2018: Bundeskanzlerin Angela Merkel empfängt Wladimir Putin, Präsident von Russland, vor dem Bundeskanzleramt.

Wladimir Putin: Vom KGB-Agenten zum russischen Präsidenten

Mann des Jahres" 2007: Wladimir Putin - n-tv.de

Vom Premier zum Langzeitpräsidenten: Russland seit 20 Jahren in Putins Hand  - news.ORF.at

Ukraine-Krise: Bei Macron stößt Putin immer auf ein offenes Ohr

Bei persönlichem Treffen: So stichelte Queen Elizabeth gegen Wladimir Putin  | Abendzeitung München

பல விட்டுக்கொடுப்புகளை செய்த கொம்யூனிச நாட்டை கிறுக்கனாக மாற்றியது யார்?

ராணியையும் மக்ரோனையும் புட்டினையும் தவிர மற்றவர்கள் அதிகாரத்தில் இல்லை மக்ரோனும்  இடையில் வந்தவர் இந்த கோணத்தில் பார்க்கும்போது வேறு செய்தி  சாமியார் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ராணியையும் மக்ரோனையும் புட்டினையும் தவிர மற்றவர்கள் அதிகாரத்தில் இல்லை மக்ரோனும்  இடையில் வந்தவர் இந்த கோணத்தில் பார்க்கும்போது வேறு செய்தி

இதில் சர்வாதிகாரி புரினையும் ராணியையும் தவிர மற்றவர்கள் ஜனநாயக நாடுகளில் தலைவர்களாக இருந்தவர்கள்
யுக்கிரேனை அதன் மக்களை அழித்துக் கொண்டிருக்கும் சர்வாதிகாரி புரினின் படங்கள் போடுவது யாழ்களத்தின் பக்கங்கள் waste

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இதில் சர்வாதிகாரி புரினையும் ராணியையும் தவிர மற்றவர்கள் ஜனநாயக நாடுகளில் தலைவர்களாக இருந்தவர்கள்
யுக்கிரேனை அதன் மக்களை அழித்துக் கொண்டிருக்கும் சர்வாதிகாரி புரினின் படங்கள் போடுவது யாழ்களத்தின் பக்கங்கள் waste

உங்கள் அகராதியின்படி, புடினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயத் தலைவர்தானே...😆

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நீர்வேலியான் said:

நீங்கள் சொல்லுவது எனக்கு புரியவில்லை. எமது யாழ்கள மக்களின் மனமாற்றத்துக்கு அப்பிடி என்ன காரணம் வந்துவிட்டது? உக்கிரேன் மேற்கு சார்பாக தமது நிலையை எடுத்ததுக்கு காரணம் எல்லோருக்கும்  தெரியும். ரஷ்யா அவர்களை காலம் காலமா நிம்மதியாக வாழவிட்டிருந்தால் இந்த பிரச்னை இவ்வளுவு தீவிரமடைந்து இருக்காது. இங்கு ரஷ்யா சார்பு நிலை எடுப்பவர்கள் வாதங்கள்:

1. உக்கிரேன் பேசித்தீர்த்திருக்க வேண்டும் 
2. ரஷ்யாவை கோபப்படுத்தி இருக்கக்கூடாது
3.  ரஷ்யாவிற்கு பக்கத்தில் இருப்பதால் மேற்குலகுடம் உறவை பலப்படுத்தியது தவறு, அதாவது அவர்கள் விரும்பிய முடிவை எடுக்கக்கூடாது. கியூபாவும் இதைத்தான் செய்தது. 
4. அவர்கள் எங்களுக்கு குண்டு போட்டார்கள் 

நான் இப்ப விளங்கிக்கொண்டிருப்பது:
1. நாங்கள் ஆயுதம் எடுத்து தவறு, பேசியிருக்க வேண்டும், ஆரம்பத்தில் இருந்தே பேசிக்கொண்டே இருந்திருக்க வேண்டும்,  நாங்கள் மாத்திரம்தான் பேச்சுவார்த்தையை குழப்பியது என்று மொத்த உலகமும் சொன்னது சரியானது.    
2. இந்தியா சொன்னதை மாத்திரம் நாங்கள் செய்திருக்க வேண்டும். ஆயுதங்கள்  தந்தபோது அடித்துக்கொண்டும், இந்திய ராணுவம் வந்த பொது, அவர்களிடம் ஆயுதத்தை ஒப்படைத்து இருக்க வேண்டும், திருப்பி அடித்தது தவறு.
3. இந்தியாவைத் தவிர்த்து நாங்களும் எக்காரணம் கொண்டும் வேறு நாட்டிடம் போகக்கூடாது, அவர்கள் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு அவர்களிடமே தீர்வுக்கு போக வேண்டும்.
4. இருவரும் எங்களுக்கு எதிராக இருந்தார்கள் அதனால் வேடிக்கை மட்டும் பார்ப்பம், என்று சொன்ன எல்லோருமே, ரஷ்ய ஆதரவு நிலையை அப்பிடியே வெளிக்காட்டுகிறார்கள், உக்கிரேனில் குண்டு விழுந்து சாவதை ரசிக்கிறோம்.

நான் அமெரிக்க வந்த ஆரம்ப காலங்களில், சில இந்தியர்களை சந்தித்தபோது உரையாடியதுண்டு, எங்கள் பிரச்சனையை உணர்ந்த ஓரிரு தீவிர தமிழர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும், தமிழர்கள் உட்பட சொன்னது. குண்டுகள் வைக்கும் விடுதலைப்புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம்,  எங்களுக்கு தீர்வு தர வந்த இந்திய படையை தாக்கியது தவறு, முக்கியமாக ராஜிவ் காந்திய கொன்றதை இந்தியா மறக்காது. அப்பொழுது கோபம் வரும், பிறகு இப்படியான உரையாடல்களை வைப்பதில்லை. இப்பொழுது பார்க்கும் பொழுது அவர்கள் சொன்னது சரிபோல் படுகிறது   

1) தற்போது உலகமெங்கும் நடைபெறும் போர்கள் எத்தனை ? அதில் எந்த எந்தப் போர்களுக்கு நீங்கள் கருத்துக் கூறியுள்ளீர்கள்? 

2) போர் என்பது குண்டு வெடிப்பதும் துப்பாக்கிச் சூடு மட்டும்தான..?

3) உக்ரேன் ரஸ்ய யுத்தத்தில் யார் யாருக்குப் பங்கொருக்கிறது..? மேற்குலகு ஏன் உக்ரேனுக்கு ஆயுதங்களை வளங்குகிறது. பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கவில்லை..? 

விடையைத் தேடுங்கள். பதில் கிடைக்கும். ஆனால் விடையை சோவியத் யூனியன் தோன்றுவதற்கு முன்னரிலிருந்து தேடுங்கள்.

எமது போராட்டத்தில் நாங்கள் நீதியின் பக்கம் நிற்கும்போதும் ஏன் அழிக்கப்பட்டோம் ஏன் அழிக்கப்பட்டோம் என்று எப்போதாவது யோசித்ததுண்டா..? 

இறுதியாக 

எங்கள் போராட்டத்தை உக்ரேனுடன் ஒப்பிடுவது எந்த அளவு சரியான செயல..?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

சிந்தனை பூர்வமாக எழுதுகின்றேன் என எழுதிவிட்டு அருவருடிகள் என விளித்த பக்கசார்பு கருத்தாளருக்கு விருப்பு வாக்களித்ததின் மூலம் இந்ததிரியில் இன்னும் கருத்தெழுத தகுதியுடையவராகின்றீர்கள். 😁
 
வணக்கம் குமாரசாமி அண்ணா!!

எனது பதிவு இந்த திரி 15/16 பக்கம் திரும்ப திரும்ப ஒரே விடயத்தை கூறியதால் ஏற்பட்ட சலிப்பு விரக்தியிலும் எழுதியது.. அதே சலிப்பை த்தான் சசியும் கூறியுள்ளார். ஒரே கருத்து ஒரே மாதிரியான சொல்லாடல் என்பதால் நன்றியை கூறினேன். அத்துடன் அவர் “ சகோதரி” என்று விளித்து எழுத்திய விதத்திலேயே இங்கே எழுதப்பட்ட கருத்துக்களின்  மீதான சலிப்பை உணர்ந்தேன்.. 

நீங்கள் வயதில் பெரியவர் என்பதால் மட்டுமே உங்களுக்கு பதிலை எழதுகிறேன் மற்றப்படி இங்கே எழுத எனக்கு ஒன்றுமில்லை.. 

நன்றி

இனிய இரவு வணக்கம்!!

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரஞ்சித் said:

மாறாக ஏதாவது இன்றுவரை செய்துவருகிற பேசிவருகிற மேற்குலகின் மீது கோபம் வருவது ஏன்? 

மேற்குலகின் மீதான எமது கோபம் போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்று எங்களை முட்டாளாக்கிவிட்டு சிங்களவனின் ஆயுத வலிமையை பலப்படுத்தி எம்மை அழிக்க உதவியதே!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம் குமாரசாமி அண்ணா!!

எனது பதிவு இந்த திரி 15/16 பக்கம் திரும்ப திரும்ப ஒரே விடயத்தை கூறியதால் ஏற்பட்ட சலிப்பு விரக்தியிலும் எழுதியது.. அதே சலிப்பை த்தான் சசியும் கூறியுள்ளார். ஒரே கருத்து ஒரே மாதிரியான சொல்லாடல் என்பதால் நன்றியை கூறினேன். அத்துடன் அவர் “ சகோதரி” என்று விளித்து எழுத்திய விதத்திலேயே இங்கே எழுதப்பட்ட கருத்துக்களின்  மீதான சலிப்பை உணர்ந்தேன்.. 

நீங்கள் வயதில் பெரியவர் என்பதால் மட்டுமே உங்களுக்கு பதிலை எழதுகிறேன் மற்றப்படி இங்கே எழுத எனக்கு ஒன்றுமில்லை.. 

நன்றி

இனிய இரவு வணக்கம்!!

ரஷ்யா உக்ரேனை தாக்கி அழிக்கிறது இனப்படுகொலை/அஜாரகம் என்றால் 2009ல் தன் நாட்டவனே மற்ற நாடுகளின் துணையுடன் உதவியுடன் அப்பாவி மக்களான ஆயுதம் இல்லாத மக்களான ஈழத்தமிழர்களை  அழித்ததில் எவ்விதத்தில் நியாயம்? நடுநிலை உலகம் என்ன செய்தது?

இந்த ஆதங்கமும் விரக்தியும் தான் தான் இந்த திரி தொடரூந்து போல் தொடர காரணம். மற்றும் படி நாம் அழிவுகளை ரசிக்கும் மூக்கர்கள் அல்ல . 

நன்றி
வணக்கம்

14 hours ago, பெருமாள் said:

ராணியையும் மக்ரோனையும் புட்டினையும் தவிர மற்றவர்கள் அதிகாரத்தில் இல்லை மக்ரோனும்  இடையில் வந்தவர் இந்த கோணத்தில் பார்க்கும்போது வேறு செய்தி  சாமியார் .

நான் இணைத்த காணொளியின் பின் வரும் விமர்சனங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/3/2022 at 21:43, Sasi_varnam said:

அண்ணா,
இதெல்லாம் இங்கே பதியப்பட்ட ஒரு சில வரிகள்...
இவை எனதும் இன்னும் பலரின்  கண்ணுகளுக்கும்  தன்னிச்சையுடன் புட்டின் தொடுத்த இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் / ஞாயம் கற்பிக்கும் (justifying)  கருத்துக்களாகவே படுகின்றன.
உங்களுக்கு எப்படி?

"நான் ரஷ்யனுடன் நிற்கிறேன், டான்பாஸ் உக்ரைனில் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்தினார், அவர்கள் மே 2014 இல் அதை வென்றனர், ஆனால் மேற்கத்திய மற்றும் நேட்டோவால் ஆதரிக்கப்படும் உக்ரேனிய ஜனாதிபதி, அவை எதையும் கேட்க விரும்பவில்லை, எனவே ரஷ்ய மொழிபேசும் உக்ரேனிய மக்களின் விருப்பத்தை செயல்படுத்த ரஷ்யர்கள் அங்கு சென்று உள்ளனர்... "

"சோவியத்யூனியன் படை கட்டமைப்பு பற்றி நன்கு அறிந்து இருப்பதால் நேட்டோ வில் யுகரேனை இணையதே என்று புடினின கோரிக்கை சரியானது.
ரஷ்யா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதில் நியாயம் இருக்கிறதா?"

யாரும் போரை விரும்பவில்லை, பூட்டின் உட்பட. ஆனால் அது அமெரிக்காவின் நலனுக்காக மற்றய‌ நாடுகள் மீது திணிக்கப்படுகிறது. அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் நிறுத்த வலுவான எதிரி அவசியம். அமெரிக்காவால்  திணிக்கப்பட்ட புதிய உலக ஒழுங்கு ஒழிக்கப்பட வேண்டும். இது ஐரோப்பாவில் நிகழ்வது வரவேற்க்கத் தக்கது. அதை பூட்டினால் தான் செய்ய முடியும்."

"உக்கிரேனியர்கள் ரஸ்ய டாங்கியை,போர்வீரர்களை மறித்து தூசணத்தால் திட்டி விரட்டும் அளவுக்கு ரஷ்யா போரில் மென்போக்கு கடைப்பிடிக்கிறது.. பொதுமக்கள் இழப்பை இயன்றளவு இல்லாமல் செய்கிறது ரஷ்யா.. தேர்ந்தெடுத்த ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குகிறது.."

"இதுவரை புடின் காட்டியது வெறும் "ரயல்"தான். 
சிங்கத்தை... நேட்டோவை வைத்து, தொடர்ந்து சீண்டினால்... 
கதையை, சுத்தமாக முடித்து விடுவார். 😜 😛 😂"

"வல்லரசு  ரஷ்யாவின், இருப்புக்கு…..
😋 வலசு உக்ரைனால், ஆபத்து வரும் என்று தெரிந்தால்….  🤔
புட்டின்… தனது நாட்டை காக்க,
உக்ரைனை….. அடித்து, நொருக்குவதில்… தப்பே இல்லை. 👍🏽 😁"

"போர் நடக்க முதலே அதை தடுக்க எவ்வளவோ வழி நோட்டோ நாடுகளுக்கும் , அமெரிக்காவுக்கும் இருந்தும் , வேடிக்கை பார்க்கும் அவர்களை விட புட்டின் எவ்வளவோ மேல்"

"புட்டினை... சர்வாதிகாரி என்று அழைப்பதை, மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
புட்டின்... தனது நாட்டை, காக்கும் தேச பக்தன். 👍"

சசி சிலர் ஆங்காங்கே எழுதியது மேலோட்டமாக ரசியாவுக்கு ஆதரவாக தெரிந்தாலும் யாருமே ரசியாவுக்கு முழு ஆதரவாக எழுதவில்லை.

எல்லோரது ஆதங்கமும் சும்மா இருந்த உக்ரேனை உசுப்பேத்தி இந்த நிலமைக்கு கொண்டுவந்தவர்கள் அமெரிக்காவும் இங்கிலாந்தும் நேட்டோ போன்ற நாடுகளுமே என்பதைத் தான் திரும்ப திரும்ப வலியுறுத்தினார்கள்.

இதையே தான் பல ஆய்வாளர்களும் சொன்னார்கள் சொல்கிறார்கள்.

நீங்களே யோசித்துப் பாருங்கள்.எம்மவருக்கும் ரசியாவுக்கும் என்ன தான் சம்பந்தம்.

இங்கே எல்லோரும் அலசிய விடயங்களில் நான் கண்டு கொண்டது தான்.

உங்கள் நேரத்துக்கு மிகவும் நன்றி.
உடனடியாக பதிலெழுத முடியாமைக்கு வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எவர் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்

உக்ரைனின் பிரச்சினை எமது  பிரச்சினையை மீண்டும்  பேசவும்

நியாயம் கேட்கவும்

எமத  இனம் மீண்டும் இது  பற்றி உலக  அளவில் பேசவும் செய்திருக்கிறது

தள்ளி  இருக்கிறது

எந்த  இடத்திலும்  எல்லா  மக்களிடமும் எம்மவர்  இதை சரியாக  பாவிப்பதை  பார்க்கக்கூடியதாக  இருக்கிறது

எனக்கு  எவன்  குத்தி  என்றாலும்  அரிசியானால் சரி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எவர் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்

உக்ரைனின் பிரச்சினை எமது  பிரச்சினையை மீண்டும்  பேசவும்

நியாயம் கேட்கவும்

எமத  இனம் மீண்டும் இது  பற்றி உலக  அளவில் பேசவும் செய்திருக்கிறது

தள்ளி  இருக்கிறது

எந்த  இடத்திலும்  எல்லா  மக்களிடமும் எம்மவர்  இதை சரியாக  பாவிப்பதை  பார்க்கக்கூடியதாக  இருக்கிறது

எனக்கு  எவன்  குத்தி  என்றாலும்  அரிசியானால் சரி

இது ஒன்றைத்தான் நாங்கள் செய்யலாம். எம்மை நோக்கி வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி கிடப்பில் போடப்பட்ட எமக்கான நீதியை கேட்டு மீண்டும் ஒரு முறை அவர்களது கதவுகளை தட்டலாம். (எங்களுக்குள் உணர்ச்சிமாயமாய் கவிதை பாடி , கண்ணீர் வழியாமல்)
இதை விட ஏதாவது யுக்திகள் இருந்தால் யாராவது சொல்லட்டும் கேட்போம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, Sasi_varnam said:

இது ஒன்றைத்தான் நாங்கள் செய்யலாம். எம்மை நோக்கி வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி கிடப்பில் போடப்பட்ட எமக்கான நீதியை கேட்டு மீண்டும் ஒரு முறை அவர்களது கதவுகளை தட்டலாம். (எங்களுக்குள் உணர்ச்சிமாயமாய் கவிதை பாடி , கண்ணீர் வழியாமல்)
இதை விட ஏதாவது யுக்திகள் இருந்தால் யாராவது சொல்லட்டும் கேட்போம். 

இலங்கையில் இருக்கும் எமது தமிழ் அரசியல்வாதிகளின் தொடர்புகளும் ஆதரவும் இல்லாமல் ஏதும் செய்ய முடியுமா?

ஏனெனில் அவர்கள் தானே மக்கள் பிரதிநிதிகள். அவர்கள் அங்கு பலமாக இருக்கும் போது புலம் பெயர்ந்தவர்களால் என்ன செய்ய முடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

இணைப்பிற்கு உரிமை கோருபவன்
மீம்ஸ் மன்னன் குமாரசாமி 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இலங்கையில் இருக்கும் எமது தமிழ் அரசியல்வாதிகளின் தொடர்புகளும் ஆதரவும் இல்லாமல் ஏதும் செய்ய முடியுமா?

ஏனெனில் அவர்கள் தானே மக்கள் பிரதிநிதிகள். அவர்கள் அங்கு பலமாக இருக்கும் போது புலம் பெயர்ந்தவர்களால் என்ன செய்ய முடியும்?

புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் அகதிகளாகவே இந்த நாடுகளுக்கே வந்துள்ளோம். அந்த வகையில் நம் சொந்த நாட்டில் ஒரு சுபிட்சமாக வாழ்வதற்கான (நாமோ, அல்லது நமது உறவுகளோ) எடுக்கும் தீர்மானங்களில் நிச்சயம் எங்களது பங்களிப்பும், கருத்துகளும் உள்வாங்கள் அவசியம் என வலியுறுத்தி அது சார்ந்த அரசியல் சமைக்கப்படல் வேண்டும். 
சும்மா வெறுமனே காசு அனுப்பிக்கொண்டு இருக்கும் கூட்டமாக இருக்க முடியாது தானே.
எல்லாவற்றுக்கும் சகோதரி பிரபா சிதம்பரநாதன் சொன்ன ஒற்றுமை அவசியம். 
இனியும் காலம் தாழ்த்தாமல் இவை இடம் பெற வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

அதே அதே..

(ஏதாவது முடிவு வருமென்று யூகித்தாலும், விரும்பினாலும், உள் மனம் நம்ப மறுக்குமே  😆)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடக்கப்போகின்றதென்பதை பின் கொடியை வைத்து  ஊகித்தால் சரி....

An image of Vice President Kamala Harris meeting U.S. and Polish service members.

  • கருத்துக்கள உறவுகள்

1929 இல் அமெரிக்காவில் பங்கு சந்தை சரிவு ஏற்பட்டது (வாணிப பகுதியில் அதற்கான காரணம் கூறப்பட்டுள்ளது) அதனை தொடர்ந்து அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரம் பாதிப்புற்றது (Great Depression).

On 7/3/2022 at 18:41, vasee said:

கடன்சா, உண்மையான பெறுமதியில் (Equity) முதலிடுவதை தவறு என கூறவில்லை என நினைக்கிறேன்.

உண்மையான பெறுமதியை எவ்வாறு அறிவது?

உதாரணமாக அவுஸ்ரேலிய வீட்டு விலைகள் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னிலிருந்து 2014 வரை அதன் வளர்ச்சி விகிதம் சராசரியாக 10 ஆண்டில் வீட்டின் விலை இரட்டிப்பாகிறது என கூறுகிறார்கள்.

அதாவது ஆண்டு ஒன்றிற்கு 10% வளர்ச்சி மாதிரியுள்ளது ஆனால் அதன் வளர்ச்சி விகிதம் ஆண்டொன்றிற்கு 7 % கூட்டு வட்டியே இவ்வகையான 10 வருடத்தில் வீட்டின் விலை இரட்டிப்பாவதற்கு காரணம், இது வீட்டு தேய்மானம், பண வீக்கம் உள்ளடங்கலாக (7% முன்பு கணித்தாக நினைவிலுள்ளது).

உங்கள் கருத்து போல வீடு காணி முதலீடு நல்ல முதலீடுதான்.

ஆனால் தற்போது சிட்னியில் வீட்டின் விலை அதிகரிப்பு ஆண்டொன்றிற்கு 33% வீதம் என்றால் 7% விகிதத்திற்கும் 33% இற்குமிடையே உள்ள இடைவெளி சிந்திக்க வைக்கின்றது.

https://www.abc.net.au/news/2022-01-27/sydney-median-house-price-increases-but-growth-expected-to-slow/100785706

வீட்டு விலை அதிகரிப்பானது வருமான அதிகரிப்பை விட அதிகம். இது கடனை அதிகரிகத்து ஒரு தளம்பல் நிலையை உருவாக்கும்.

இந்த வருமான அதிகரிப்பு குறைவாக இருப்பது பெரும்பான்மையான அடிமட்ட வருமானம் பெறுபவர்களையே அதிகம் பாதிக்கும்.

உதாரணமாக அமெரிக்காவில் 2007 ஆம் ஆண்டில் வருமான வேறுபாட்டை பின்வருமாறு கூறுகிறார்கள்.

முதல் 10% மானவர்கள் நாட்டின் மொத்த வருமானத்தை தமதாக்கி கொள்கிறார்கள், அதாவது மிகுதி 90% மான மக்கள் மிகுதி 50% வருமானத்தை தமக்கிடையே ப்கிர்கிறார்கள்,

10% = 50%

1% = 24%

0.1% = 12%

0.01% = 6%

அது இவ்வாறு செல்லும்.

2007 ஆம் ஆண்டளவில் 15000 அமெரிக்கர்களின் வருமானம் 700 பில்லியன், இது கிட்டத்தட்ட இலங்கையின் ஒரு ஆண்டிற்குரிய மொத பொருளாதார வளர்ச்சியினை விட 9 மடங்கு அதிகமாகும்.

வருமான வித்தியாசமிருந்தால் அதனால் என்ன பாதிப்பு?

நாடு பொருளாதார வளர்ச்சி அடையும் போது அதனூடே அனைவரது வருமானமும் அதிகரிக்க வேண்டும் அவ்வாறில்லாமல் சில விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள் அந்த அதிகரித்த வளர்ச்சி தாம் எடுத்து கொண்டால் குறைந்த வருமானம் பெறுபவர்கள் கடன் விகிதம் அதிகரிக்கும்.

இந்த வீட்டு விலை வளர்ச்சிக்கும் வருமான அதிகரிப்பும் குறைந்த பட்சமாவது இடைவெளி குறைவாக இல்லாவிட்டால் நிலமை என்னவாகும்?

1929 அமெரிக்காவில் வருமான இடைவெளி 25% இருந்த போது பங்கு சந்தை சரிவு ஏற்பட்டது, பின்னர் அதே 1% வருமானம் 24% எட்டியபோது வீட்டு விலை சரிவு ஏற்பட்டது, இந்த இரு சந்தர்ப்பங்களிலும் உலக பொருளாதாரமும் பாதிப்பிற்குள்ளானது.

சாதாரண மக்களின் மீது அவர்கள் வாங்கும் பொருதள் முதல் அவர்கள் உழைப்பு வரை வரி விதிக்கும் அரசுகள், வரி மூலம் வருமான மீள்வினியோகம் என்று சொல்கிறது, அவ்வாறிருந்தால் ஏன் இவ்வாறான பெரிய அளவில் பணம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு பொருளாதர சரிவை உருவாக்க வேண்டும்?

JP மோர்கனை King maker என்றே கூறுவார்கள்.

இந்த சரிவிலிருந்து மீழுவதற்கு அமெரிக்காவிற்கும் அதன் நேச நாடுகளுக்கும் தமது பொருள்களை விற்பதற்கு புதிய சந்தை தேவைப்பட்டது அதற்கு அவர்கள் அறிமுகப்படுத்திய நடைமுறைதான் Free trade.

அந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகள் சுய சார்பு பொருளாதார நாடுகள் அந்த நிலமையை மாற்றி தமது பொருள்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை தம்மில் தங்கியிருக்க வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே 1944 இல் Bretton woods தீர்மானம் ஏற்படுத்தினர்.

அதில் உலக வங்கி மற்றும் ஐ எம் எப் என்ற இரு அமைப்பை உருவாக்கினர், உலக வங்கி மூலம் 2ஆம் உலக யுத்த பாதிப்பினை சரி செய்தல்.

ஐ எம் எப் மூலம் தமது வியாபாரத்திற்கு தேவையான நடைமுறையை உருவாக்கினர்.

அமெரிக்க நாணயத்தினை வர்த்தக பொது நாணயமாக்குதல்

வர்த்தகம் தங்கு தடையின்றி நடை பெற எழை நாடுகளுக்கு கடன் வசதி வழங்கி, பின் அதனை வசூலித்தல்

15 - 20 வருடங்களுக்கு நல்லாத்தான் போய் கொண்டிருந்த நிலையில் அமெரிக்க நாணயங்களை அச்சிட்டது அது நேச நாடுகளுக்கு நட்டத்தினை ஏற்படுத்தினபடியால் 1970 களின் ஆரம்பத்தில் இந்த தீர்மானம் முடிவுக்கு வந்தது.

ஆனாலும் அமெரிக்க நாணயமே வர்த்தக நாணயமாக விளங்குகிறது.

அமெரிக்க நாணயத்திற்கு போட்டியாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு நாணயத்தினை உருவாக்க லிபிய அதிபர் கடாபி முயன்றார், அதனால் அவர் அப்புறப்படுத்தப்பட்டார் என ஒரு கருத்து நிலவுகிறது.

இப்போது இரஸ்சியாவின் மீது கடும் நடவடிக்கைக்கு இந்த வர்த்தகத்தடையை அமெரிக்க மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகள் ஆயுதமாக பயன்படுத்துகிறது.

ஆனால் இரஸ்சியாவின் கூட்டாளிகளின் மேலும் தடைகள் பாயும் என அச்சுறுத்தும் அமெரிக்கா, அதனால தனது நாணயம் சர்வதேச வர்த்தக நாணய நிலையினை இழக்க கூடிய நிலை ஏற்பட்டால் உக்கிரேனை கைவிட்டு விடும்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

 உக்ரைனை காப்பாற்றும் நோக்கம் அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இருந்தாலும், இதை நேரடியான ஒரு ராணுவ முஸ்தீபுகளை கொண்டு செய்ய முற்படாது என்றே நினைக்கிறன்.
ஆகா அவர்களிடம் இருக்கும் ஒரே வழி ராணுவ தளபாட உதவி, பொருளாதார தடை.
இதில் என்ன சிக்கல் என்றால் ரஷிய ஒன்றும் இராக், அல்லது இரான் போன்ற நாடல்ல. அவர்களின் பொருளாதாரம் சீரழிந்து சேடை இழுக்க பல வருடங்கள் இந்த பொருளாதார தடை பாய வேண்டும். அது ஒட்டு மொத்த உலக நாடுகள் எல்லாவற்றியனதும்  பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கும்.  மேற்குலக மக்களுக்கு உள்ளூரில்  விலைவாசி கூடிக்கொண்டு போக ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் சுக துக்கங்களை சற்றே ஒதுக்கி, உக்ரைன் என்ற நாட்டுக்கான தங்களின் சின்ன தியாகமாக, ரஷிய அதிகாரத்தை உடைக்கும் தேவை உள்ளதாக எல்லாம் பார்க்க போவதில்லை. அடுத்த தேர்தல் எப்ப வரும் என்று பார்த்து  (ஜனநாயக ) முறைப்படி தங்களின் கஷ்டப்பட்டுக்கு காரணமாக இருந்த ஆளும் கட்சியை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.
ஆனால் ரஷியாவில் அப்படியல்ல.. என்ன தான் பொருளாதார தடையால் மக்கள் பட்டினியில் செத்தாலும் வெளியே பெரிதாக தெரிய போவதும் இல்லை, சர்வாதிகாரி புட்டினும்; இன்னும் தொடர்ந்து 10 வருடங்கள் வேண்டும் என்றாலும் ஆட்சியில் தொடரலாம்.  இதனால் எல்லாமே ஒரு இடத்தில் அடிபட்டு போகும். 
21 ஆம் நூற்றாண்டின் இந்த பெரிய சிக்கல் எப்படி தீர்க்கப்படப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கட்சிகள் ஆட்சி தலைவர்கள் மாறுதல் என்பது ஒரு வெளித்தோற்றம் மட்டுமே என கருதுகிறேன்.

எனது புரிதலின்படி மேற்கு நாடுகளின் அரசியல் சட்டம் பொதுவாக இரண்டு வகைபடும் 

1. வெஸ்மினிஸ்ரர் பாராளுமன்ற அரசியல்
2.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அரசியல் முறைமை

அமெரிக்காவில் மட்டும் இலங்கை போல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி (சர்வதிகாரம்) முறமையும் ஏனைய மேற்கு நாடுகளில் வெஸ்மினிஸ்ரர் அரசியல் முறை கொண்ட பிரதமந்திரி அதிகாரம் கொண்ட பாராளுமன்ற ஆட்சி முறமை உண்டு.

5 வருடமோ அல்லது 6 வருடமோ புதிய கட்சி வந்தாலும் நாட்டை ஆளும் சட்டத்தினை மாற்ற முடியாது என கருதுகிறேன்.

 ஓரளவிற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் சட்டத்தில் (அவசரகால) சில குறுக்கீடுகளை செய்யலாம்.

சுருக்கமாக சொல்வதென்றால் ஆட்சி மாற்றம் என்பது பழய கள்ளு புதிய மொந்தையில் என்பது போன்றது. அரசுகளின் கொள்கைகள் பெருமளவில் மாற்றம் ஏற்படுவதில்லை இந்த்தியாவில் காங்கிரஸ் அரசின் பின்னர் பிஜேபி வந்த பின்னும் அதன் இலங்கை கொள்கை காங்கிரசின் இலங்கை மீதான கொள்கை அதே மாதிரியாகவே தொடர்கிறது.

எனது கருத்து தவறாக இருக்கலாம் ஏனெனில் எனக்கு துறைசார் கல்வியறிவில்லை.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனின் பிரச்சினை வைத்து எமது  பிரச்சினை பேசபடுகிறது தான். எப்படி என்றால்  ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமிப்பது அநீதி என்று சொல்லும் தமிழர்களிடம் நீர் சொல்லுறது பிழை. அப்பாவி ரஷ்யாவையும் புரினையும் மேற்குலகநாடுகள் உக்ரேனை வைத்து பயமுறுத்துகின்றன. இந்த உக்ரேன் தான் அங்கே தமிழர்கள் மீது குண்டு வீசியது என்று தமிழர்களிடமே புரின் சார்பாக   ஆக்கிரமிப்பை நியாயபடுத்தி பேசுகிறார்கள்.

ரஷ்யா உக்ரேனில் மக்களின் மாடி குடியிருப்புகளை நோக்கி தாக்குதல்கள் நடத்திவருகிறது. ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பு  காரணமாக  ஏழை நாடுகளின் மக்கள் கோதுமை மற்றும் எண்ணை கிடைக்காமல் துன்பபடுவார்கள் என்று யுன் சபை எச்சரித்துள்ளது. மேற்குலகநாடுகளிலேயே வடை சுடுவதற்கு எண்ணை கடையில் வாங்க முடியாத நிலை தொடங்கிவிட்டதாம்.

On 14/3/2022 at 13:48, ரஞ்சித் said:

இத்திரியினை ஆரம்பித்தது குறித்து வருந்துகிறேன்

இந்த திரியை நீங்கள் ஆரம்பித்தது தான் நல்லது. தாங்கள் மட்டும் சுதந்திரமா ஜனநாயக நாடுகளில் சுதந்திரம் வசதியான வாழ்க்கைகளை அனுபவித்தபடி அப்படி வாழவிரும்பும் உக்ரேன் மக்களை ஆக்கிமிக்கும் ரஷ்யாவை  ஆதரிப்பது தவறு என்பதை சிலரையாவது உணரவைத்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.