Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


"கொழும்பிற்கு வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது , மாதம்  பதினைந்தாயிரம் ரூபாய்க்குள் வண்டியை ஓட்டவேண்டும். வேலைக்கு சேர்ந்த பின்னும் செலவிற்காக  வீட்டில் தொங்கிக்கொண்டிருக்க முடியாது.
மாமியின் வீடாக இருந்தாலும் வேண்டா விருந்தாளியாக மாறிவிடும் முன் நானாகவே வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிடுவது நல்லது....ம்  பார்க்கலாம் மார்க்கஸ் என்ன சொல்கிறான் என்று" என்றவாறு மனதிற்குள் தன்னுடனேயே பேசிக்கொண்டு பாதையின் இருபுறமும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் அவன்.
மணிக்கட்டிலிருந்த கடிகாரமோ விநாடியை நிமிடங்களாக மாற்றிக்கொண்டிருக்க, இந்த மார்க்கஸை மட்டும் காணவில்லை. தொலைபேசியை சட்டைப்பையில் இருந்து உருவி உயிர்கொடுத்து மார்க்கஸ் எனும் பெயரை தேடி அழைப்பை ஏற்படுத்திய மறுகணமே அங்கு ......தொடரும்

யாழ் 24 ம் அகவையை சிறப்பிக்கும் முகமாக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்

  • கருத்துக்கள உறவுகள்

அக்கினியின் கதையெண்டாலே கொஞ்சம் வேப்பிலையும், விபூதியும் பக்கத்தில வைச்சுக் கொண்டு தான் வாசிக்க வேணும்…! தொடருங்கோ… அக்கினி…!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

    
தோள்பட்டையில் திடீரென ஒரு கை விழுந்ததும் திடுக்கிட்டு திரும்பினான் அவன். அங்கே மார்க்கஸ் சிரித்துக்கொண்டு நிற்க  அவனோ "டேய் உன்னைத்தான் பார்த்துக்கொண்டு நிண்டனான். கோல் எடுப்பம் என்று போனை தூக்க நீ வந்திட்டாய், சரி நான் கேட்டவிடயம் எப்படி ஏதாச்சும் சிக்கிச்சா....?" என்று முடித்தான்.
மார்க்கஸோ தலையை மெதுவாக ஆட்டிவிட்டு மச்சான் இங்க வெக்கை அதிகமாக இருக்கு வா கூலாக ஏதாவது சாப்பிட்டுக்கொண்டு கதைப்பம் என்று அருகே இருந்த கூல் பாரினுள் நுழைய இவனும் தொற்றிக்கொண்டான்.

இரண்டு பழரச கோப்பைகளை மேசையில் வைத்துக்கொண்டு மெதுவாக உறிஞ்சியவாறே இருவரும் பேச ஆரம்பித்தனர். மார்க்கஸ் ஆரம்பித்தான் "மச்சான் உன்னோட பட்ஜெட்டிற்கு கொழும்பில் இடம் பார்ப்பது கஷ்ட்டம், மாத வாடகைக்கே உன்னுடைய முழு சம்பளம் பத்தாது, நானும் தேடி தேடி களைச்சு போயிட்டன் 
ஆனால் ஒரு இடமிருக்கு தெஹிவளை பக்கம் கொஞ்சம் ஒதுக்குபுறமாக இருக்கும். நிறைய சிறிய சிறிய அறைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள், நம்மை போல நிறைய பேர் அங்கே தங்கி இருக்கிறார்கள் 
தனி அறை ஏழாயிரத்து ஐநூறு வரும், இன்னொருவருடன் சேர்ந்து தங்கினால் நான்காயிரத்திற்குள் முடிக்கலாம். கரண்ட் செலவை அவர்களே பார்த்து கொள்வார்கள். உனக்கு சம்மதம் என்றால் சொல் நாளைக்கே போய் பார்த்து விட்டு வரலாம்".

மறுபேச்சின்றி தலையை ஆட்டினான் அவன். மாமியின் வீட்டில் நான்  படும் அவஸ்தைகளுக்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத்தவாறு.
"சரி மச்சி நாளைக்கு மாலை 5 மணி போல போய் பார்க்கலாம் தானே என்று கேட்கவும் மார்க்கஸ்.. ம்ம் 
நான் அவர்களுக்கு தகவல் சொல்லிவிடுகிறேன் நாளைக்கு போவோம்" என்று சொல்லிக்கொண்டே இருவரும் எழுந்து கடையை விட்டு வெளியேறினர். மார்க்கஸ் கையினால் ஐந்து என்று சைகை செய்துவிட்டு திரும்பி வேகமாக நடந்து இவனது பார்வையை விட்டு மறையவும் இவனும் எதிர்திசையில் நடக்கலானான்.
மனமோ மிகுதியாக இருந்தவற்றை அசைபோடும் வேலையிலிறங்கியது..................(தொடரும்)     

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, அக்னியஷ்த்ரா said:

யாழ் 24 ம் அகவையை சிறப்பிக்கும் முகமாக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்

அக்னி ஏன் அகவை 24 திரியில் எழுதாமல் கதைகதையாம் திரிக்குள் எழுதுகிறீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

அக்னி ஏன் அகவை 24 திரியில் எழுதாமல் கதைகதையாம் திரிக்குள் எழுதுகிறீர்கள்?

கவனிக்கவில்லை....அண்ணை 
நிர்வாகத்தின் கவனத்திற்கு...தயை கூர்ந்து இந்த திரியை 24 ம் அகவை  சுய ஆக்கங்களிற்குள் செருகி விடவும்

  • கருத்துக்கள உறவுகள்

சரி அக்னி இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

சுவாரிசமாக இருக்கிறது.தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க யாழில் சாமத்திலயும் நிக்கிறனாங்க அமானிய தொடரில பேய் பிசாசு ஏதாச்சும் கொண்டந்துடாதீங்க..தொடருங்க..✍🤭

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமே… கதையை, வாசிக்கும் ஆவலை துண்டுகின்றது.
தொடருங்கள்… அக்னியஷ்த்ரா.

37 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கவனிக்கவில்லை....அண்ணை 
நிர்வாகத்தின் கவனத்திற்கு...தயை கூர்ந்து இந்த திரியை 24 ம் அகவை  சுய ஆக்கங்களிற்குள் செருகி விடவும்

செய்தாச்சு...

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

அக்னி ஏன் அகவை 24 திரியில் எழுதாமல் கதைகதையாம் திரிக்குள் எழுதுகிறீர்கள்?

உஸ் .......சத்தம் போடாதீர்கள்.....அமானுஷ்யமாய் அது பேய் போய் அதன் இடத்தில் சேர்ந்திடும்........! 

10 hours ago, யாயினி said:

நாங்க யாழில் சாமத்திலயும் நிக்கிறனாங்க அமானிய தொடரில பேய் பிசாசு ஏதாச்சும் கொண்டந்துடாதீங்க..தொடருங்க..✍🤭

கதையின் அமானிஸ்யத்தில் யாயினி வரமாட்டேன் நான் இனி என்று ஓடணும் அக்நி, (தொடருங்கள்.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பேய்/பிசாசு கதையோ? ஏற்கனவே Night Stalker பார்த்துவிட்டு செம கலக்கத்தில இருக்கிறேன்.. இனி இதற்குள் வரவில்லை

நன்றி. 

வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, suvy said:

 

கதையின் அமானிஸ்யத்தில் யாயினி வரமாட்டேன் நான் இனி என்று ஓடணும் அக்நி, (தொடருங்கள்.....!  😂

அய்..என்ன ஒரு வில்லத்தனம்..பாருங்கவன்.✍🤭😀👋

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அக்னி. உங்கட பள்ளிக் கூட கதையை இன்னும் மறக்கேல்ல ...என்னை மாதிரி உங்களுக்கும்  திரில்லர் ,பேய்க் கதைகள் என்றால் விருப்பம் போல 😆

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2022 at 01:05, ரதி said:

தொடருங்கள் அக்னி. உங்கட பள்ளிக் கூட கதையை இன்னும் மறக்கேல்ல ...என்னை மாதிரி உங்களுக்கும்  திரில்லர் ,பேய்க் கதைகள் என்றால் விருப்பம் போல 😆

இப்ப நாங்க இங்க திரில்லர் வாழ்கையே வாழ்ந்து கொண்டு இருக்கிறம் என்றால் பாருங்கவன்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் படிக்கும் ஆவலுடன் உள்ளோம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரித்திரம் - 2

 சிறுவயதினில் இவனது வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவனை மடியில் தூக்கி வைத்து கொஞ்சி பாசத்தை பொழிந்த இவனது மாமியே இன்று இவனை நடத்தும் முறை அவனது  மனதை பிழிந்தது. குளித்து முடிக்கமுன் 
பிரதான நீர்க்குழாயை மூடுவதும், இரவு 10 மணிக்குப்பின் இவனது அறைக்குரிய சுற்றுடைப்பானை அணைத்துவிடுவதும் இப்படி இவன் அனுபவிக்கும் கொடுமைகளை மனது அசைபோட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக "இந்த சனியன் எப்போது இங்கேயிருந்து வெளியேறுமோ" என்று இவன் காது படவே பேசிக்கொண்டது இவனால் தாங்கமுடியாத சம்பவமாகி அது ஒரு வடுவாகவே பதிந்தும் விட்டது.
ஒரு கட்டத்திற்கு மேல் இனி இந்த இடத்திலிருந்து வெளியேறுவதே நல்லது நமது குறைந்த பட்ச மரியாதையையாவது காப்பாற்றிக்கொள்வோம்  என்று முடிவெடுத்ததன் வெளிப்பாடே இந்த தேடல்.

ஒருவாரியாக இன்றைய இலத்திரனியல் நேரத்தாளினை பூர்த்திசெய்தாகிவிட்டது, இனி மென்பொருள் ஒருங்கிணைப்பு சோதனையாளர் அவரது வழு கண்டுப்பிடிப்புகளை பதிவேற்றும் வரை அவனுக்கு சிறு நிம்மதி 
வேலையில் மூழ்கியிருந்தவன் சட்டென்று நினைவு வந்தவனாக மணிக்கட்டை திருப்பிப்பார்த்தான் 
கடிகார முள் மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது.

தனது கணனி மேசையிருந்து விடுபட்டு அவனது மேலாளரின் அறையின் கதவினை தட்டினான்.
வரலாம் என்ற ஆங்கில உச்சரிப்பு கதவின் சாரளம் ஊடே வரவும் திறந்து கொண்டு உள்ளே  சென்றான்.
"எக்ஸ்கியூஸ் மீ சேர்" என்ற  மெதுவான வார்த்தையை கேட்ட அவனது மேலாளர் கணணிக்குள் புதைத்திருந்த தலையை விடுவித்துக்கொண்டு நிமிர்ந்து பார்வையினாலேயே அவனை அளந்தார்.

சேர் ஒரு வன் அவர் பெர்மிசன் வேணும், புது ரூம் ரெண்டுக்கு பார்க்கிறேன் 5 மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள். கேட்டுக்கொண்டிருந்த மேலாளர் "ஹவ் அபௌட் தி டாஸ்க் லிஸ்ட்" என்று வரவேண்டிய இடத்திற்கு தயக்கமே இல்லாமல் பாய்ந்தார். 
அவனும் அதுதானே பயலாவது கேட்டவுடன் தூக்கி கொடுப்பதாவது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே 
"ஐ ஹாவ் கொம்பிலீட்டட் இட் அண்ட் ரிலீஸ்ட் போர் கியூ ஏ டெஸ்டிங்: என்று முடித்தான்.
திருப்தியுடன் தலையை ஆட்டிய மேலாளர் "ஓகே யு கேன் டேக் தி பிரேக்" என்று முடித்துவிட்டு இவனது பதிலுக்கு காத்திராமல் கணனியினுள் மீண்டும் தலையை புதைத்தார்.

"தங் யூ சேர்" என்று விட்டு அறையை விட்டு வெளியே வந்த அவன் ஓட்டமும் நடையுமாக அலுவலகத்தை விட்டு  வெளியே வந்து எதிரே வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியை நோக்கி கையை நீட்டினான் 

தலையை வெளியே நீட்டிய சாரதி சேர் எங்க போகவேணும் என்று சிங்களத்தில் கேட்கவும். தெஹிவளை மேம்பாலம் அருகில் என்று முடித்தான் . 
சாரதி "சேர் மீட்டர் போடல ஒரு 300 ரூபாய் கொடுங்க" என்று அவன் தலையை சொறியவும், 300 அதிகம் 250 தாறன் ஆனால் இவ்வளவு விரைவாக கொண்டு செல்லமுடியுமோ அவ்வளவு விரைவாக போகவேண்டும் என்று இவன் சொல்லவும்.
ஏறுங்கோ  சேர் என்று சிரித்துக்கொண்டே முச்சக்கரவண்டியின் இக்னிஷியனை உசுப்பினான், சற்றைக்கெல்லாம் டுப்ளிகேஷன் தெருவில் முச்சக்கரவண்டி சீறத்தொடங்கியது. பாம்பு போவதுபோல வளைந்து நெளிந்து முச்சக்கரவண்டி எடுத்த வேகத்தில் எதற்க்காக இவனிடம் வேகமாக செல்லச் சொன்னோமோ ..? பாவி நமக்கே பால் ஊத்திவிடுவான் போல என்று தன்னைத்தானே நொந்துகொண்டான் அவன்.

நேரம் 4:50 காலிவீதி போக்குவரத்து நெரிசலை முச்சக்கரவண்டியின் வேகத்தில் லாவகமாக கடந்து நெருங்கியிருந்தான் அவன். இன்னும் மார்க்கஸை காணோம் சரி கொஞ்சம் பொறுக்கலாம் என்று நினைத்த மாத்திரத்தில் கைபேசி கிறுகிறுத்தது மார்க்கஸிடமிருந்து ஒரு குறுந்தகவல், வந்துகொண்டேயிருக்கிறேன் இன்னும் 5 நிமிடத்தில் நெருங்கிவிடுவேன் என்று இருந்தது.

சரியாக சொன்ன நேரத்தில் பேருந்து நிறுத்தத்திலிருந்து வெளிப்பட்டான் மார்க்கஸ், கையை அசைத்தவாறே நெருங்கியவன் "என்ன மச்சி ரெடியா வா போகலாம் நான் ஏற்கனவே சொல்லிட்டேன், இரண்டு அறைகளில் இரண்டு இடங்கள் மட்டுமே காலியாக இருக்கிறதாம், ஒன்று முதலாம் மாடியிலும் மற்றயது அதே தளத்திலும் தான் இருக்கிறதாம். இரண்டிலும் ஒவ்வொரொருவர் வீதம் இருப்பதால் நீ சேர்ந்துதான் தங்கவேண்டும் உனக்கு சம்மதம் தானே என்று கேட்டான். இவனோ தனது  நிலையை முழுவதுமாக மார்க்கசிடம் சொல்லவில்லையென்பதால் மார்க்கசும்  பயல் எதற்கும் தயார் என்பதை அறியவில்லை.
சிரித்துக்கொண்டே அதெல்லாம் ஒரு மேட்டரே  இல்லை மச்சி என்று சொல்லிவிட்டு இன்னுமோர் முச்சக்கரவண்டியை இடை மறித்து மார்க்கசுடன் அதில் ஏறிக்கொண்டான்

முகவரியை முச்சக்கரவண்டி சாரதியிடம் சொல்லவும் அவனும் கல்கிஸ்ஸை பக்கம் முச்சக்கரவண்டியை விரட்டத்தொடங்கினான், சரியாக ஒரு 15 நிமிட பயணத்தில் கொஞ்சம் ஒதுக்குப்புறமாக கடற்கரையை அண்டியாதாக ஒரு பெரிய கட்டிடம் தெரியத்தொடங்கியது, மார்க்கஸ் இவனை உசுப்பி அந்த கட்டிடத்தை காட்டினான். கொஞ்சம் வெளிறிப்போய் அழுக்குப்படிந்திருந்த அந்த கட்டிடம் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பழைய கட்டிடம் என்று மிக இலகுவாக வெளிக்காட்டிக்கொண்டது.

கட்டிடத்தின் முன்னே இறங்கிய இருவரும் இறங்கவும் காவலாளி வெளிப்படவும் சரியாக இருந்தது,
நாணயத்தாள்களை எண்ணி இவன் முச்சக்கரவண்டி சாரதியிடம் கொடுத்துக்கொண்டிருக்க மார்க்ஸோ காவலாளியுடன் எதுவோ பேசிக்கொண்டிருந்தான். சரியாக இவன் திரும்ப மார்கசோ உரிமையாளர் உள்ளே தான் இருக்கிறாராம் முதலாம் மாடியில் ஏறி போகட்டுமாம் என்று கையை வாயிலை நோக்கிகாட்டினான்.
காவலாளியும் ஒரு முறைப்புடன் இருவரையும் ஏறியிறங்க பார்த்துக்கொண்டே கதவை திறந்து விட 
இருவரும் உள்நுழைந்தனர் ....(தொடரும்)          

      
       

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க இதமாக இருக்கின்றது…! தொடருங்கள், அக்கினி….!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகின்றது, தொடருங்கள் அக்நி......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2022 at 03:16, அக்னியஷ்த்ரா said:

கரண்ட் செலவை அவர்களே பார்த்து கொள்வார்கள்.

இப்பத்தான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். ஆரம்பமே நன்றாக இருக்கு👍🏾

இல்லாத கரண்டுக்கு ️  என்ன செலவு?😏

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசக உள்ளங்களிடம் மன்னிப்பு கெரோனாவால் பாதிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்தலில் உள்ளதால் தொடர்ந்து எழுத முடியவில்லை. முடிந்தவரை மிக விரைவில் எழுத முயற்சிக்கிறேன்

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, அக்னியஷ்த்ரா said:

வாசக உள்ளங்களிடம் மன்னிப்பு கெரோனாவால் பாதிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்தலில் உள்ளதால் தொடர்ந்து எழுத முடியவில்லை. முடிந்தவரை மிக விரைவில் எழுத முயற்சிக்கிறேன்

விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் 
 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, அக்னியஷ்த்ரா said:

வாசக உள்ளங்களிடம் மன்னிப்பு கெரோனாவால் பாதிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்தலில் உள்ளதால் தொடர்ந்து எழுத முடியவில்லை. முடிந்தவரை மிக விரைவில் எழுத முயற்சிக்கிறேன்

கவனமாக இருங்கள்.விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நலமுடன் மீண்டு வாருங்கள்.......!   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். போதிய ஓய்வெடுத்து  நலமுடன் திரும்பி வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில்… நலம் பெற வேண்டுகின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.