Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிய மஹிந்த

image.gif.42e1ce366da7adb4c7a415944fc2ce4a.gif
Getty ImagesCopyright: Getty Images

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ.

அந்த கடிதத்தில், மே 6ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நடந்த இணக்கப்பாடுக்கு அமைய இடைக்கால அரசை அமைக்கவும் அரசியலமைப்பு விதிகளின்படி மேற்கொள்ளப்படும் ஏற்பாடுக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக மஹிந்த கூறியுள்ளார்.

இலங்கையில் தீவிரமாகி வரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளும் அரசு தீர்வு வழங்கத் தவறியதாகக் கூறி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது.

இதைத்தொடர்ந்து இலங்கை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது.

ஆனால், கோட்டாபயவும் மஹிந்தவும் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்யப்போவதில்லை என்று அறிவித்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் செய்து முக்கிய துறைகளுக்கு புதியவர்களையும் பழைய அமைச்சர்களுக்கு வேறு துறைகளையும் ஒதுக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், இலங்கையில் நடந்த மக்கள் போராட்டம் ஒரு மாதத்தை நிறைவு செய்த வேளையில், மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் அறிவிப்பு வந்திருக்கிறது. இந்த ராஜிநாமா கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே அவரது பதவி விலகல் அதிகாரபூர்வமானதாக கருதப்படும்.

https://www.bbc.com/tamil/live/global-61375583?ns_mchannel=social&ns_source=twitter&ns_campaign=bbc_live&ns_linkname=6278f2349f4dc85502038995%26இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிய மஹிந்த%262022-05-09T10%3A51%3A38.082Z&ns_fee=0&pinned_post_locator=urn:asset:1be00e07-fb03-4b43-9872-cd39546d253e&pinned_post_asset_id=6278f2349f4dc85502038995&pinned_post_type=share

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மகிந்த! சற்று முன்னர் வெளியானது தகவல்

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது.

இதேவேளை,  அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க,  சன்ன ஜயசுமன, ஆகியோரும் பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளனர். 

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி விஷ்வரூபம் எடுத்து அரசியலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் பிரதமர் மகிந்த மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோஷம் அரசியலுக்குள்ளும், வெளியிலும் வலுப்பெற்று வந்தன. 

இந்தநிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என கடும் அழுத்தங்கள் பிறப்பிக்கப்பட்ட நியைில் தற்போது அவர் பதவி விலகியுள்ளதாக அறிய முடிகின்றது. 

அழுத்தங்களுக்கு பயந்து தான் பதவி விலகப் போவதில்லை என இதற்கு முன்னர் மகிந்த அறிவித்திருந்த நிலையில், உட்கட்சி மோதல்கள் அதிகரித்திருந்தன. 

இன்றைய தினம் தான் பதவி விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று காலை முதல்  மகிந்தவிற்கு ஆதரவானவர்களால் கலவரங்கள் உருவாக்கப்பட்டன. 

கொழும்பு காலி முகத்திடல் முழுதும் கலவர பூமியாக மாறியதை அடுத்து தற்போது மகிந்தவின் ராஜினாமா செய்தி வெளிவந்துள்ளது.  

Gallery
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடல்?

பிரதமர் பதவியை... இராஜினாமா, செய்தார் மஹிந்த.

பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவிய இராஜினாமா செய்துள்ளார்.

இதேவேளை தொழிற்துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண ஆகியோரும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

"இரண்டாம் துட்டகைமுனு" என்று போற்றப்பட்டவர்...

இரண்டு வருடத்தில் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.  

பை( BYE) பை (BYE ) மஹிந்த.

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ஒரு நாள் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என நினைத்தேன். ஆனால் இப்படி மானபங்கபடுத்தி மக்கள் அனுப்புவார்கள் என கனவில் கூட நினைக்கவில்லை.
இதே மாதம் 2009ல் பட்டாசு கொளுத்தி  கொண்டாடிய அதே மக்களால்  மகிந்வை பட்டாசு கொளுத்தி வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2009´ல் இதே,  மே மாதத்தில்... வெடி கொழுத்தி, பாற்சோறு சமைத்து,
மகிழ காரணமாக இருந்தவரை... இன்று,
அதே மாதத்தில்... துரத்தியடித்து, வெடி கொழுத்தி,
பாற்சோறு கொடுத்து... வெற்றி கொண்டாடுகின்றனர்.
 
காலம்... மிகுந்த, வியப்பான விடயங்களை...
அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கின்றது.
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people, people standing and text that says 'எந்த மே மாதத்தில் ஆரம்பித்தாரோ அதே மே மாதத்திலேயே முடிநத்து வைக்கப்பட்டது Karma is boomerang 'நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்''

எந்த மே மாதத்தில், ஆரம்பித்தாரோ...
அதே... மே மாதத்தில், முடித்து வைக்கப் பட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

குறி வைத்தது யாருக்கோ

ஆனால் வீழ்ந்தது மகிந்தா.

https://fb.watch/cUHy9fV83B/

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் பதவி விலகல் அறிவிப்பு! கொழும்பின் பல பகுதிகளில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள்.

கொழும்பின் பல பகுதிகளில் மக்களால் பட்டாசுகள் வெடிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை முதல் கொழும்பில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அரசாங்கத்திற்கு அதிலும் குறிப்பாக மகிந்தவிற்கு ஆதரவாக அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்ற இடங்களுக்கு சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை தாக்கியிருந்தனர்.

இதனையடுத்து பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன் கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட களம் உக்கிரமடைந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு வெளிவந்த நிலையில் கொழும்பின் பல பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்துள்ளனர். 

https://tamilwin.com/article/mahinda-resign-decision-colombo-situation-1652094081?fbclid=IwAR0GGyB3fg11Z71zRrAdNC6shNU3gn8rRXKjR6whz0SMHGaf54jngTk1RKY

  • கருத்துக்கள உறவுகள்


இந்த போராட்டம் ஆரம்பித்தபோது இதை சிறுபிள்ளைதனமாகவும், நக்கலும் நையாண்டியுமாய் இருந்தவரும் இருக்கிறார்கள்... இன்று நடப்பவைகளை  அவர்களும் பார்த்து பரசவமடைவதில் மகிழ்ச்சி  😃

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Sasi_varnam said:


இந்த போராட்டம் ஆரம்பித்தபோது இதை சிறுபிள்ளைதனமாகவும், நக்கலும் நையாண்டியுமாய் இருந்தவரும் இருக்கிறார்கள்... இன்று நடப்பவைகளை  அவர்களும் பார்த்து பரசவமடைவதில் மகிழ்ச்சி  😃

இது எனக்கென்னவோ கோத்தா தான் தப்ப செய்தமாதிரி இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மகிந்த! சற்று முன்னர் வெளியானது தகவல்

 

 

Gallery
 
 

கடிதத்தின் திகதியை கவனியுங்கள்.  நாளைக்   குறிப்பிடப்படவில்லையே 

2022 / 05  /  ?

The Prime Minister may have resigned, but too little, too late. And we still haven’t heard if his resignation has been “accepted”.

 
 

 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

வடிவேலுவின்... வசனத்துக்கு ஏற்ற மாதிரி.... 
மீன்பாடி வண்டிலில் எல்லாம் ஏத்தி, 
மூத்திர சந்துக்கு அனுப்பி அடித்திருக்கிறார்கள்.  😂  🤣

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாதவூரான் said:

இது எனக்கென்னவோ கோத்தா தான் தப்ப செய்தமாதிரி இருக்கு

காலம்  முடிவெடுத்துவிட்டது, யாரும் தப்ப முடியாது. பாவம் நாமல்! அரசியல் கனவு கனவாகவே போய்விட்டது. இனி இவர்கள் அரசியல் கதிரையை நினைத்தும் பார்க்க முடியாது. இதோடு எங்காவது தப்பி ஓடுவதே இவர்களுக்கு நலம். மிகுதியை விதி பாத்துக்கொள்ளும். இம்முறை நம் மாவீரர் அமைதியில் உறங்குவர்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ.

கூட்டல் கழித்தல் கணக்கு பாத்துக்கொண்டிருந்த நேரம், அப்பவே செய்திருந்தால் இவ்வளவு அழிவுகளை தடுத்திருக்கலாம். இழுத்து வெளியில போடும்வரை காத்திருந்திருக்கிறார்.

இனி நிம்மதியாய் உறங்க முடியுமா இவரால்?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

கூட்டல் கழித்தல் கணக்கு பாத்துக்கொண்டிருந்த நேரம், அப்பவே செய்திருந்தால் இவ்வளவு அழிவுகளை தடுத்திருக்கலாம். இழுத்து வெளியில போடும்வரை காத்திருந்திருக்கிறார்.

இனி நிம்மதியாய் உறங்க முடியுமா இவரால்?

உண்மைதான்…. சிங்கள சனத்துக்கு கொஞ்ச அனுதாபம் ஆவது இருந்து இருக்கும்.
இப்ப சொந்த வீடுகளும், பூர்வீக சொத்துகளும், பெற்றோரின் சமாதிகளும்…. அழிந்தது தான் கண்ட மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில ஒரு பழமொழி சொல்வார்கள், "செய்தார்க்கு செய்தவினை கோட்டான் வலை போட்டறுக்குமாம்." அது எவ்வளவு உண்மை என்று தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

காலம்  முடிவெடுத்துவிட்டது, யாரும் தப்ப முடியாது. பாவம் நாமல்! அரசியல் கனவு கனவாகவே போய்விட்டது. இனி இவர்கள் அரசியல் கதிரையை நினைத்தும் பார்க்க முடியாது. இதோடு எங்காவது தப்பி ஓடுவதே இவர்களுக்கு நலம். மிகுதியை விதி பாத்துக்கொள்ளும். இம்முறை நம் மாவீரர் அமைதியில் உறங்குவர்.

நேற்று பகல்  வேலையில் நின்றதால் செய்திகளை பார்க்க முடிய வில்லை , ஒரு 4.30 போல போனை திறந்தால் , வாட்ஸ் அப், முக புத்தகம் யாழ் என சகலதும் களை கட்டி இருந்தது, நம்பவே முடியவில்லை. அதுவும் மே மாதம் நடக்கின்றது. 2005 இல் தலைவர் சொன்னார், இவர்தான் (மகிந்த) நான் எதிர் பார்த்த ஆள், எவ்வளவு தீர்க்க தரிசனம். மாவீரர், பொது மக்கள் இனிமேல் நிம்மதியாக உறங்குவார்கள், ஏன் நாமும்  நேற்று ஏதோ மன பாரத்தை இறக்கி வைத்ததாக உணர்ந்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Ahasthiyan said:

நேற்று பகல்  வேலையில் நின்றதால் செய்திகளை பார்க்க முடிய வில்லை , ஒரு 4.30 போல போனை திறந்தால் , வாட்ஸ் அப், முக புத்தகம் யாழ் என சகலதும் களை கட்டி இருந்தது, நம்பவே முடியவில்லை. அதுவும் மே மாதம் நடக்கின்றது. 2005 இல் தலைவர் சொன்னார், இவர்தான் (மகிந்த) நான் எதிர் பார்த்த ஆள், எவ்வளவு தீர்க்க தரிசனம். மாவீரர், பொது மக்கள் இனிமேல் நிம்மதியாக உறங்குவார்கள், ஏன் நாமும்  நேற்று ஏதோ மன பாரத்தை இறக்கி வைத்ததாக உணர்ந்தோம்.

மாதம், நேரம், திகதியெல்லாம் கணித்தே காலம் வேலை செய்யும். எதுவும் தப்பாது. 2009  மண்ணைத்தொட்டு கும்பிட்டார், இன்று மண் கவ்வுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.