Jump to content

மட்டக்களப்பின்... பொக்கிஷமாக கருதப்படும், மாஸ்டர் சிவலிங்கம் காலமானார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பின் பொக்கிஷமாக கருதப்படும் மாஸ்டர் சிவலிங்கம் காலமானார்!

மட்டக்களப்பின்... பொக்கிஷமாக கருதப்படும், மாஸ்டர் சிவலிங்கம் காலமானார்!

இலங்கையில் சிறுவர்களுக்கு கதைகூறுவதில் விசேட தன்மையினைக்கொண்டிருந்தவரும் மட்டக்களப்பின் பொக்கிஷமாகவும் கருதப்படும் மாஸ்டர் சிவலிங்கம்  நேற்று (புதன்கிழமை) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லடியை சேர்ந்த இவர் சிறுவர்களுக்கு கதைகள் கூறுவதில் பிரபல்யம்பெற்றவராகவும் கலைஞராகவும் எழுத்தாளராகவும் பல்திறமைக்கலைஞராகவும் திகழ்ந்துவந்தார்.

காலமான மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் இறுதிக்கிரியைகள் கல்லடியில் உள்ள இல்லத்தில்  இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று கல்லடி உப்போடை இந்து மயானத்தில் மாலை 4.00 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் மறைவுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் இரங்கல் தெரிவித்துள்ளதார்.அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமரத்துவமடைந்த மட்டக்களப்பு மண்ணின் பொக்கிஷம் சூகதைமாமணி_மாஸ்ட்டர்_சிவலிங்கம் ஐயாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

எமது மட்டக்களப்பு மண்ணின் பொக்கிஷமாக கலைத்துறையில் பல்வேறு சாதனைகள் , சேவைகள் புரிந்து எமது மண்ணின் புகழை உலக அளவில் கொண்டு சென்ற எமது மண்ணின் பொக்கிஷத்தினை மட்டக்களப்பு மண் இழந்து நிற்கின்றது.

குழந்தைகள் முதல் பெரியோர்வரை சிவலிங்கம் மாமா என்றால் அறியாதோர் யாரும் இல்லை.  தனது கலைத் திறமையின் மூலம் பல உள்ளங்களை கொள்ளை கொண்ட அன்பான பண்பான மனிதர் அவர்.அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

https://athavannews.com/2022/1281540

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் இல்லையேல், எனக்கு வாசிக்கும் பழக்கமே ஏற்பட்டு இருக்காது. சிந்தாமணி வார இறுதி பத்திரிகையில் சிறுவர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் இவரது கதைகள் வந்திருக்கும். சிறு வயதில் பத்திரிகையை தூக்கியவுடன் தேடிப்படித்து வாசிக்கும் பகுதி அது.

அஞ்சலி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

வணக்கம் மருமக்களே, வணக்கம் மாமா என இலங்கை வானோயில் வார இறுதி நாட்களில் ஒலிக்கும் குரல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள், ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.  அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் ‘முதுசொம்’மை இழந்தோம்!

கிழக்கின் ‘முதுசொம்’மை இழந்தோம்! 

                         —செங்கதிரோன் — 

கிழக்கின் ‘முதுசொம்’மொன்றினை 11.05.2022 அன்று இழந்தோம். மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் மரணச் செய்தி கேட்டு மட்டக்களப்பின் மீன்மகள் பாட்டை நிறுத்தினாள். வாவிமகள் ஆட்டத்தை நிறுத்தினாள்.  

‘வணக்கம் மாமா’ என்று சிறுவர்கள் அவரை விளித்துச் சொல்வதும் சிறுவர்களை நோக்கி ‘வணக்கம் மருமக்களே’ என அவர் கூறுவதும் இனி மட்டக்களப்பு மண்ணிலே கேட்காது. 

இலங்கை ஒலிரப்புக்கூட்டுத்தாபனச் ‘சிறுவர்மலர்’ மற்றும் ‘சிறுவர் கதைவேளை’ நிகழ்ச்சிகளின் மூலம் ‘வானொலி மாமா’ வாக வலம் வந்த மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் சிறந்த கதைசொல்லி (Story Narrator) – நாடக்கலைஞர் – வில்லிசைக் கலைஞர் – ஓவியர் – பத்திரிகையாளர் – சிறுவர் இலக்கியப்படைப்பாளி –மேடைப்பேச்சாளர் எனப் பல்துறைத் திறமை மிக்கவர். 

மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் (ஆர்.இரத்தினம் சிவலிங்கம்) இலங்கையில் வில்லுப்பாட்டுக் கலையை அறிமுகம் செய்தவர். ஈழத்தில் வில்லிசையின் பிதாமகன் அவரே. கதை சொல்லும் கலை இவருக்குக் கைவந்த கலை. சுமார் பதினெட்டு ஆண்டுகள் மட்டக்களப்பு மாநகரசபை பொது நூல் நிலையத்தில் கதைசொல்லும் கலைஞனாகப் பணியாற்றி 2003இல் ஓய்வு பெற்றவர். 

மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் மட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் எனும் கிராமத்தில் 28.03.1933 அன்று பிறந்தார். தந்தையார் திரு.ந.இரத்தினம் ஆசிரியர். தாயார் திருமதி செல்லத்தங்கம். மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்திலும் மஞ்சந்தொடுவாய் சென்மேரிஸ் பாடசாலையில் கல்வியைத் தொடங்கி (1ம் 2ம் வகுப்புக்கள்) பின் கல்லடி உப்போடை இராமகிருஸ்ண மிஷன் மகளிர் பாடசாலையில் 3ம் 4ம் 5ம் வகுப்புக்களைக் கற்றார். தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடி சிவானந்த வித்தியாலத்திலும் (6ம் 7ம் வகுப்புக்கள் – 1946/47) பின் மட்டக்களப்பு அரசினர் கல்லூரியிலும் (தற்போது இந்துக்கல்லூரி -1948/52) கல்வி கற்றார். புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை, பண்டிதர் வி.சி.கந்தையா ஆகியோர் இவரது ஆசான்களாக விளங்கினார். பள்ளிப்பருவத்திலேயே நல்ல ‘பகிடிகள்’ சொல்லி மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். 

1950களின் நடுப்பகுதியில் கவிஞர் காசி ஆனந்தன் எழுதி இயக்கிய ‘அண்ணாவின் தங்கை’ எனும் நாடகம் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் (தற்போது மாநகர மண்டபம்) மேடையேற்றம் கண்டது. இதுவே மாஸ்டர் சிவலிங்கம் நடித்த முதல் நாடகமாகும். இந்நாடகத்தில் கவிஞர் காசி ஆனந்தனும் நடித்திருந்தார்.  

அடுத்தது, மட்டக்களப்புத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.இராசதுரை எழுதி இயக்கிய ‘சங்கிலியன்’ நாடகத்தில் மன்னன் சங்கிலியனின் அமைச்சராக மாஸ்டர் சிவலிங்கம் நடித்தார். அறப்போரணித்தலைவர் ஆர்.டபிள்யு.அரியநாயகம் (காக்கை வன்னியன் வேடம்) கவிஞர் காசி ஆனந்தன், இன்னொரு ‘வானொலி மாமா’வான இரா. பத்மநாதன் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். இராசதுரை சங்கிலி மன்னனாக நடித்த நாடகத்தில் ஒரு கட்டம். 

சங்கிலி மன்னனாக நடித்த இராசதுரை தன்னிடமிருக்கும் வாள் பற்றிய வரலாறுகளை எடுத்துச்சொல்லி அதன் பழமையைப் பெருமையோடு கூறி உறையிலிருந்து வாளை உருவுகிறார். வாள் உறையுள் தங்கிவிட பிடி மட்டும் வெளியே வருகிறது. பார்வையாளர்களின் சிரிப்பொலி.  

அமைச்சராக நடித்த மாஸ்டர் சிவலிங்கத்திடமிருந்து சமயோசிதமாக அந்த நேரத்திற்குப் பொருத்தமாக அவரது சொந்த வசனம் அதிரடியாக வெளிப்படுகிறது. 

 ‘மன்னா! பார்த்தாலே தெரிகிறது பழையவாள் என்று’- மீண்டும் பார்வையாளர்களின் கைதட்டலுடன் கூடிய சிரிப்பொலி எழுகிறது. 

நாடகம் முடிந்ததும் மாஸ்டர் சிவலிங்கம் இராசதுரை உட்பட எல்லோராலும் பாராட்டப்பெற்றார். 

பின்னர், கவிஞர் காசி ஆனந்தன் எழுதி இயக்கிய தமிழரசுக்கட்சியின் பிரச்சார நாடகமான ‘சூடு சாம்பலாச்சு போடியாரே’ எனும் நாடகத்தில், கவிஞர் காசி ஆனந்தன், இரா.பத்மநாதன் ஆகியோருடன் இணைந்து மாஸ்டர் சிவலிங்கமும் நடித்தார். இது மட்டக்களப்பில் நூறு தடவைகளுக்கு மேல் அரங்கேறிய நாடகமாகும். 

பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் ‘கார்ட்டூன்’ (நகை ஓவியம்) சித்திரத்துறையில் பயிற்சி பெறுவதற்காகத் தமிழகம் (தமிழ்நாடு சந்தனக் கலைக்கல்லூரி) சென்றார். அங்கே கவின் கலைகளில் அதிகம் நாட்டம் கொண்டார். ஓவியம், வில்லிசை ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். நடிப்பு, நகைச்சுவை, கதாப்பிரசங்கம், பல குரல்களில் பேசுதல் (Mimicry), வில்லுப்பாட்டு, போலச் செய்தல் (Imitation) போன்ற கலைகள் அவரை ஈர்த்தன. அங்கு திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி சில காட்சிகளும் படமாக்கப்பட்டிருந்த வேளையில் அவரது வீட்டாருக்கு அது விருப்பமில்லாத காரணத்தால் ‘அம்மாவுக்குச் சுகமில்லை’ என்று செய்தி கொடுத்து அவரை இலங்கைக்கு வரவழைத்துவிட்டனர். 1960இல் அவர் தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பினார். 

தமிழகத்திலிருந்தபோது கொத்த மங்கலம் சுப்பு, கலைவாணர் என்.எஸ்.கிருஸ்ணன் மற்றும் பலருடைய வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நேரில் கண்டும் கேட்டும் உணர்ந்த சிவலிங்கம் அவர்கள் அதனை இலங்கையிலும் அறிமுகம் செய்ய அவாக் கொண்டார். ஆம்! 1960களில் வில்லுப்பாட்டுக் கலையை இலங்கையில் முதலில் அறிமுகம் செய்தவர் இவரேயாவர். இவரது முதலாவது வில்லுப்பாட்டு நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி உப்போடை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் ‘நமக்கும் மேலே ஒருவனடா’ என்ற தலைப்பில் நடைபெற்றது. ஆரம்பகாலத்தில் வில்லிசைக்கான கதையையும் பாடல்களையும் காசி ஆனந்தனே எழுதிக் கொடுத்தார். சில நிகழ்ச்சிகளில் காசி ஆனந்தனும் மேடையில் அவரோடிணைந்து பாடியிருக்கின்றார். பின்னர் தனது வில்லுப்பாட்டுக் குழுவில் கவிஞர். செ.குணரெத்தினம், சித்தாண்டி சிவலிங்கம், கிருபைரெட்ணம் ஆசிரியர், முழக்கம் முருகப்பா, அன்பு மணி இரா.நாகலிங்கம், வி.கந்தசாமி ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று நிகழ்ச்சிகளை நடாத்திப் புகழ் பெற்றார். மிகக்குறுகிய காலத்தில் நூறு நிகழ்ச்சிகள் நடந்தேறின. நூறாவது நிகழ்ச்சி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது.  

அதன்பின் பாடசாலை மாணவ மாணவியருக்கு அக்கலையைப் பயிற்றுவிக்கத் தொடங்கினார். பாடசாலை மாணவனாக இருக்கும் போதே அவருடைய பெயருடன் ஒட்டிக் கொண்ட ‘மாஸ்டர்’ பட்டம் நிரந்தரமாகிற்று. பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை அவர்களின் புதல்வியார் மங்கையற்கரசி அவர்களே இவரது வாழ்க்கைத் துணை. காலஞ்சென்ற எஸ்.டி.சிவநாயகம் அவர்களே இவரது இலக்கியத்துறை வழிகாட்டி. 1966ம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டு எஸ். டி.சிவநாயம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தினபதி (தினசரி), சிந்தாமணி(வாரமலர்) ஆகிய பத்திரிகைகளில் அவை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பணிபுரிந்தார். இப்பத்திரிகைகளின் ‘சிறுவர் பகுதி’க்கு இவரே பொறுப்பேற்றிருந்தார். இப்பத்திரிகைகளின் ஆசிரியபீடத்தில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்த சுமார் பதினேழு ஆண்டுகள் சிறுவர் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பு பாரியது. இவரது ஆசிரியரான புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை இவரை இலங்கை வானொலியில் ‘சிறுவர் மலர்’ நிகழ்சியை நடாத்திக்கொண்டிருந்த முதலாவது ‘வானொலி மாமா’வான சரவணமுத்து அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்த பின்னர், இலங்கை வானொலியில் கதை சொல்ல ஆரம்பித்தார். 1983 ஆடிக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு, குடும்பத்தினருடன் கொழும்பிலிருந்து வெறுங்கையுடன் மட்டக்களப்பு மீண்டார். 

மட்டக்களப்புக்குத் திரும்பி வந்த மாஸ்டர் சிவலிங்கத்தை மட்டக்களப்பு மாநகரசபை அதனால் நிர்வகிக்கப்பட்டு வந்த பொது நூல்நிலையத்தில் கதை சொல்லும் கலைஞனாகப் (Story narrator) பதவியிலமர்த்தியது. இப்பதவி இவருக்கென்றே இவரது திறமையை மதித்துப் புதிதாக உருவாக்கப்பட்டதொன்றாகும்.   

மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் இயங்கும் மூன்று நூலகங்களுக்கும் சென்று கதை சொல்வார். மேல்நாடுகளில் கதை சொல்லுதல் ஒரு கலையாகவே வளர்ந்துள்ளது. பாடசாலைச் சிறுவர்கள் இவரது கதை சொல்லலில் நல்ல பயன்பெற்றனர். சிறுவர்களுக்கு மகாபாரதம், இராமாயணம் கதைகளை 1984 இல் தொடங்கித் தொடர்ச்சியாகச் சொல்லி வந்தார். வானொலி, தொலைக்காட்சி (ரூபவாகினி –வண்ணச்சோலை) ஆகிய ஊடகங்களிலும் சிறுவர் நிகழ்ச்சிகளை வழங்கினார். இவர் கதை சொல்லும் பாணி மிகவும் கவரக்கூடியது. நகைச்சுவை, நடிப்பு கலந்து கதை சொல்லும்போது கதாப்பாத்திரமாகவே மாறிவிடும் தன்மையர். மகாபாரதக் கதை சொல்லும் போது துரியோதனனின் ஆணவச் சிரிப்பையும் சகுனியின் வஞ்சகச் சிரிப்பையும் நடித்துக் காட்டுவார். சிறுவர்களுக்குக் கதை சொல்லும்போது கிழவிபோல் நடந்தும், சிறுவன்போல் ஓடியும், குரங்குபோல் பாய்ந்தும், யானைபோல் பிளிறியும், முயல்போல் துள்ளியும், மான்போல் வெருண்டும், பாம்புபோல் நெளிந்தும் சீறியும் இப்படி அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறிப் பல்வகை நடிப்புக்களையும் தனிநபர் அரங்கிலே சிறப்பாகச் செய்வார். மாஸ்டர் சிவலிங்கம் கதை சொல்ல வருகிறார் என்றால் மட்டக்களப்பிலே சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியாது. மட்டக்களப்பிலே இவரது சேவையைப் பெற்றுக்கொண்ட பாடசாலைகள், பாலர் கல்வி நிறுவனங்கள், சன சமூக நிலையங்கள் பல. மட்டக்களப்பு மாநகர சபை பொது நூல் நிலையத்தில் கதை சொல்லும் கலைஞனாக 1984செப்டம்பர் 15ந் திகதி கடமையேற்ற மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் 2003 மார்ச் 31ந் திகதி ஓய்வு பெற்றார் 

வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தொடர்ந்து இடம்பெற்றுவந்த இவரது சிறுவர்க்கான கதை கூறல் நிகழச்சியானது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஈழத்து- தமிழகத்துப் பத்திரிகைகளில் அவரது நகைச்சுவை ஆக்கங்கள் நிறைய வெளிவந்துள்ளன.1993இல் உதயம் வெளியீடாக வெளிவந்த இவரது ‘பயங்கர இரவு’ சிறுவர்களுக்கான தரமான இலக்கியப்படைப்பாகும். 1994இல் ராஜா புத்தக நிலையம் வெளியிட்ட ‘அன்பு தந்த பரிசு’ நூல் வடகிழக்கு மாகாண சாகித்தியப் பரிசு பெற்றது. 1994இல் மட்டக்களப்பிலே மாஸ்டர் சிவலிங்கம் மணிவிழாச் சபை ‘மாஸ்டர் சிவலிங்கம் மணிவிழா மலர்’ வெளியிட்டு விழாவெடுத்து இவரைக் கௌரவித்தது. 

இங்கிலாந்தில் இயங்கும் ‘Buds’ அமைப்பு (Batticaloa Underprivileged Development Society) தனது 10வது ஆண்டு விழாவையொட்டியதாக ‘விபுலானந்த கலை விழா’வை 19.07.1997 அன்று நடாத்தியபோது அதில் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களும் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். 

அவ்விழாவில் ‘விண்ணுலகில் விபுலானந்தர்’ எனும் தலைப்பில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியையும் அளித்தார். இதுவே அவர் இறுதியாக அளித்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சி. இது அவரது 127வது வில்லுப்பாட்டு ஆகும். லண்டன் சென்றிருந்த போது மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் கணபதிப்பிள்ளை அவர்களின் நினைவு நாள், லண்டன் ஈஸ்ட்காம் முருகன் ஆலய வைபவம், லண்டன் துர்க்கை அம்மன் ஆலய நிகழ்ச்சி ஆகியவற்றிலும் கலந்து கொண்டார். லண்டன் ‘Sun Rise’ வானொலியிலும் இவரின் சிறப்புரை இடம்பெற்றது. ‘Buds’ இவருக்கு லண்டனில் ‘கதைமாமணி’ பட்டம் அளித்துச் சங்கை செய்தது.  

இலங்கை கலாசார அமைச்சின் ‘கலாபூஷண’ விருது 1999′ பெற்றார். 10.10.2002 அன்று நடைபெற்ற கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கிழக்குப் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் Degree of Master of letters (Honoris Causa) – Presented by the Deen, Faculty of Arts & Culture) வழங்கியது.  

மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் நகைச்சுவையுணர்வு நிரம்பப்பெற்றவர். மிகச்சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர். 

1961இல் தமிழரசுக்கட்சி வடக்கு கிழக்கு மாகாணங்களில் கச்சேரிகளை மறித்துச் சத்தியாக்கிரகம் நடாத்தியது. மட்டக்களப்புக் கச்சேரி வாயிலை மறித்து நடந்த போராட்டத்தில் மாஸ்டர் சிவலிங்கம் பங்கேற்றிருந்தார். 

நகர மண்டத்திற்கு அருகிலிருந்த மட்டக்களப்பு வாடி வீட்டு மண்டபத்தில் சத்தியாக்கிரகிகள் சிலர் உறக்கத்திலிருந்த அதிகாலை இருட்டில் சிங்கள இராணுவ அதிகாரியொருவர் உறங்கிக் கொண்டிருந்தவர்களை ‘எலும்புடா’ எலும்புடா! (எழும்படா! எனும் அர்த்தத்தில்) என்று கூறிக்கொண்டு வந்தார். தவறுதலாக நிலத்தில் உறங்கிக்கொண்டிருந்த மாஸ்டர் சிவலிங்கத்தின் முழங்கால் எலும்பில் தனது சப்பாத்துக்காலினால் மிதித்தும் விடுகிறார். 

இச் சம்பவத்தைப் பின்னர் மாஸ்டர் சிவலிங்கம் மற்றவர்களிடம் கூறும்போது ‘அவன் எனது முழங்கால் எலும்பில் ஏறி மிதித்துவிட்டு ‘எலும்புடா’ என்று நான் சொல்ல வேண்டியதை அவன் சொல்லிக்கொண்டு போறான்’ என்று சொல்லிச் சிரித்தார்.  

நகைச்சுவைக் குமரன் (புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை வழங்கியது), நகைச்சுவை மன்னன் (FXC நடராஜா வழங்கியது). வில்லிசைக் குமரன் (பண்டிதர் V.C.கந்தையா வழங்கியது). வில்லிசைச் செல்வர் (1987 – வடகிழக்கு மாகாணசபை), பல்கலைக்கலைஞன், கனிதமிழ்க்கலைஞன், கதை வள்ளல், கதைக் கொண்டல், கலைஞானமணி, கலைக்குரிசில், அருட்கலை திலகம் (வடகிழக்கு மாகாணசபை – 1993,(கதைமாமணி (லண்டன் – 1997), கலாபூஷணம் (1999), ஆளுநர் விருது (வடகிழக்கு மாகாணம் -2000) இலக்கிய கலாநிதிப்பட்டம் (கிழக்குப் பல்கலைக்கழகம்- 2002) ஆகிய பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருந்தாலும் இவை அனைத்துக்கும் மேலாக ‘மாஸ்டர்’ என்னும் மகுடமே மக்கள் மனதை நிறைத்து நிற்கிறது.  

 1970 மட்டக்களப்பில் பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை அவர்களின் மூத்த புதல்வி மங்கையற்கரசி அவர்களை மணம் புரிந்தார். மனைவி ஆங்கில ஆசிரியை. ஒரேமகன் விவேகானந்தன் டாக்டராவார். சிந்தாமணி வார வெளியீட்டில் சிறுவர்களுக்காக இவர் எழுதிய கதைகள் சிலவற்றைக் கொழும்பு அஸ்டலக்ஸ்மி பதிப்பகம் (320,செட்டியார் தெரு, கொழும்பு-11 தொலைபேசி : 2334004) ‘சிறுவர் கதை மலர்’ எனும் தலைப்பில் நூலாக (1ம், 2ம் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. 

 தனது அந்திமக் காலத்தில் மட்டக்களப்பில் இராமகிருஸ்ண மிஸன் மாணவர் இல்லம், சாரதா இல்லம், தரிசனம், மங்கையற்கரசி மகளிர் இல்லம், மெதடிஸ்த மகளிர் இல்லம் முதலியவற்றில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு வில்லுப்பாட்டு, தாளலயம், நாடகம் முதலிய கலை நிகழ்ச்சிகளை எழுதிப் பயிற்றுவித்தார். அத்துடன் அறநெறிப் பாடசாலைகளில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசக்கதைகளை எடுத்துக்கூறியவர். 

என்னைத் தலைவராகக் கொண்ட ‘கண்ணகி கலை இலக்கியக் கூடல்’ எனும் அமைப்பு, தனது கன்னிக் கண்ணகி கலை இலக்கிய விழாவை, 2011ன் 18ஆம், 19ம் திகதிகளில் மட்டக்களப்பு மகாஐனக்கல்லூரிக் கலை அரங்கு மண்டபத்தில் நடாத்தியபோது, அதன் இரண்டாம்நாள் மாலை அமர்வான மாதவி அரங்கிற்கு (கலையரங்கும் நிறைவு விழாவும்) மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் தலைமை வகித்தமையும் — எனது ‘விளைச்சல்’ (குறுங்காவியம்) நூல் அறிமுக நிகழ்வு 16.07.2017 அன்று மட்டக்களப்பு, நாவற்குடா இந்து கலாசார நிலைய மண்டபத்தில் நடைபெற்றபோது அதனை மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தமையும் — 2019இல் எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருந்தபோது அவரும் நானும் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களை அவரது மட்டக்களப்பு வீட்டில் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தமையும் என் நெஞ்சகலா நினைவுகளாகும். 

மட்டக்களப்பு மண் மறக்கவொண்ணாத கலை இலக்கிய ஆளுமைகளுள் அமரர் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களும் ஒருவராவர். 
 

 

https://arangamnews.com/?p=7763

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென்னிந்திய மொழிகள் எல்லாம் தமிழில் இருந்து காலவொட்டதில் பிரிந்தன என்றால் எல்லோரும் ஒரே மரபு இன மக்கள்  தானே. இதிலென்ன தமிழ் பெரிய மேளம், தெலுங்கு சின்ன மேளம் என பிரிப்பு என்பது புரியவில்லை. எமக்கு தொடர்பில்லாத பக்கத்து நாட்டில் சாதிப்பிரிவினைகளை ஊக்குவிக்கும் கதையாடல்களை மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ள நாம் எமது நாட்டில் இன ஒடுக்குமுறை என்று ஒலமிடுவது முரண்பாடாக தெரியவில்லையா? 
    • அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் தோல்விக்கான 5 முக்கிய காரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பிடம் தோற்கும் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை தோற்கடித்து, அமெரிக்க அதிபராக மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைகிறார் டொனால்ட் டிரம்ப். டிரம்புக்கும் ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி, பலர் எதிர்ப்பார்த்தது போல மிக நெருக்கமானதாக இல்லை. 2020-ஆம் ஆண்டு போல் அல்லாமல், ஆரம்பம் முதலே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார். வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் பெரும்பாலான அமெரிக்கர்கள் டிரம்புக்கு தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் கடந்த ஜுலை மாதம் விலகிய பிறகு, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் கமலா ஹாரிஸ். 2016-ஆம் ஆண்டு டிரம்ப் அதிபரான போது ஹிலாரி கிளிண்டன் அவரிடம் தோல்வியை தழுவினார். அதன் பிறகு டிரம்புக்கு எதிராக போட்டியிட்டு தோற்ற பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆவார், அவர் தோற்றதற்கு முக்கியமான ஐந்து காரணங்கள் என்னென்ன?   பொருளாதாரம் வேலையின்மை குறைவாகவும், பங்குச் சந்தை வலுவாகவும் இருந்த போதிலும் கூட அமெரிக்கர்கள் பலர் பணவீக்கத்தின் விளைவுகளை சந்தித்து வருவதாக கூறுகின்றனர். நாட்டின் பொருளாதாரம் அவர்களுக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது. 1970-களில் இருந்ததை விட பணவீக்கம் அதிகரித்தது. இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்ப டிரம்புக்கு ஒரு வாய்ப்பாக இது அமைந்தது. “நீங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது செழிப்பாக இருக்கிறீர்களா?” என்ற கேள்வியை அவர் மக்களிடம் முன் வைத்தார். 2024-ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு பகுதிகளில், ஆட்சியில் இருக்கும் கட்சியை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நிலவும் பணவீக்கம் இதற்கு ஒரு காரணமாகும். அமெரிக்க வாக்காளர்களும் மாற்றத்துக்காக காத்திருந்துள்ளனர். நான்கில் ஒரு அமெரிக்கர் மட்டுமே நாட்டின் போக்கு குறித்து திருப்தியாக இருக்கின்றனர். மூன்றில் இரண்டு பேர் நாட்டின் பொருளாதாரம் குறித்து பெரிய நம்பிக்கைக் கொள்ளவில்லை. “பண வீக்க உயர்வுக்கு பைடனின், பெரிய செலவுகளை உள்ளடக்கிய திட்டங்களும் காரணமாகும். இது மக்களுக்கு கவலை அளிக்கக் கூடியதாகவே இருந்தது. பைடனின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகின. இதனால் கமலா ஹாரிஸுக்கு தேர்தல் வெற்றி சவாலானது” என்று வெளியுறவுக் கொள்கைகள் குறித்து எழுதி வரும் மைக்கேல் ஹிர்ஷ் கூறினார். சி.என்.என் ஊடகத்தின் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்புகளின் படி, பொருளாதாரத்தை கையாள்வதில் ஹாரிஸை விட டிரம்புக்கே தங்கள் ஆதரவு என 50%க்கும் மேலானவர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரம் தங்களின் பிரதான பிரச்னை என்று 31% வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். பைடனின் செல்வாக்கின்மை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பைடனின் பொருளாதாரக் கொள்கைகள் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன மாற்றத்துக்கான வேட்பாளர் என்று கமலா ஹாரிஸ் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும், ஜோ பைடன் ஆட்சியின் துணை அதிபராக இருந்து கொண்டு, தனது தலைமையிடமிருந்து தன்னை தனித்துக் காட்டுவதில் அவர் சிரமப்பட்டார். பணவீக்கத்தை கையாள்வதிலும், அமெரிக்கா - மெக்சிகோ எல்லை பிரச்னையை கையாள்வதிலும் அமெரிக்கர்களுக்கு பைடன் மீது அதிருப்தி இருந்த போதிலும், கமலா ஹாரிஸ் பைடனுக்கு விசுவாசமாக இருந்துள்ளார். இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாக, ஏபிசி ஊடகத்தின் தி வியூ என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பங்கேற்ற போது நிகழ்ந்ததை அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தனது பின்புலத்தைப் பற்றி தெரியாத அமெரிக்கர்களுக்கு கமலா ஹாரிஸ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பலர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தனர். ஆனால், பைடனை விட தான் எவ்வாறு மாறுபட்டவராக இருப்பார் என்று கேட்டதற்கு விளக்கமளிக்க கமலா தடுமாறினார். “எனக்கு எதுவும் தோன்றவில்லை” என்று அவர் பதிலளித்தார். இது டிரம்பின் பிரசார விளம்பரத்தில் பின்பு பயன்படுத்தப்பட்டது. இந்த உரையாடல் கமலாவுக்கு ‘நாசகரமானதாக’ அமைந்தது என்று பராக் ஒபாமாவின் முன்னாள் ஆலோசகர் டேவிட் எக்செல்ராட் தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியில் ஒரு “பிம்பச் சிக்கல்” நிலவுவதாக அந்தக் கட்சியுடன் தொடர்புடையவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஒருவர், முதலில் கட்சியில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மேல்தட்டு ஆட்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று பிபிசியின் லோன் வெல்ஸிடம் கூறினார். வேறு சிலர், கட்சியின் பிரசாரத்துக்கான முயற்சிகளை பாராட்டினர். விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்கள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, கட்சியின்‘பிம்பச் சிக்கலுக்கு’ காரணம் என்று கருதினர். குடியரசு கட்சி ஆதரவாளருடன் டிரம்பின் பிரசாரக் கூட்டத்தின் போது நடந்த உரையாடல் தனக்கு நினைவுக்கு வருவதாக வெல்ஸ் கூறுகிறார். “குடியரசுக் கட்சியை டிரம்ப் முற்றிலும் ‘மறு உருவாக்கம்’ செய்துள்ளார் என்று அந்த ஆதரவாளர் கூறினார். மேல் தட்டு மக்களின் கட்சி என்ற பிம்பத்திலிருந்து விலகி, உழைக்கும் வர்க்கத்தினரை டிரம்ப் அணுகினார். அதே நேரம் ஜனநாயகக் கட்சியினர் ஹாலிவுட்டின் கட்சியாக மாறிவிட்டதாக அவர் கூறினார்” என்று வெல்ஸ் தெரிவித்தார்.   சமூக பிரச்னைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருத்தடை விவகாரத்தை கமலா ஹாரிஸ் கையில் எடுத்த வேளையில் குடியேற்ற விவகாரத்தை டிரம்ப் பேசினார் பொருளாதாரத்தை தவிர, தேர்தலை தீர்மானிக்கக் கூடியவை உணர்ச்சி மிகுந்த விவகாரங்கள் ஆகும். கருத்தடை விவகாரத்தை ஜனநாயகக் கட்சியினர் கையில் எடுத்த போது, குடியேற்ற விவகாரம் குறித்து டிரம்ப் பேசினார். பைடனின் ஆட்சியில் நடைபெற்ற வரலாறு காணாத எல்லை மோதல்களும், குடியேற்றம் காரணமாக எல்லைக்கு அருகில் இல்லாத மாகாணங்களிலும் ஏற்பட்ட தாக்கங்களும், இந்த விவகாரத்தில் பைடனை விட டிரம்ப் மீது மக்கள் அதிக நம்பிக்கைக் கொள்ள காரணமாக இருந்தன என்று ப்யூ ஆய்வு மையம் நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. எடிசன் ஆய்வு கருத்துக்கணிப்புகளின் படி, கருத்தடை உரிமைகளை மீட்டெடுப்பது குறித்த கமலா ஹாரிஸின் தீவிர பிரசாரம், பெண் வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு 54% ஆதரவை பெற்றுத் தந்தது. டிரம்புக்கு 44% ஆதரவு மட்டுமே இருந்தது. எனினும், 2020-ஆம் ஆண்டில் தனது போட்டியாளருக்கு 42% பெண் வாக்காளர்களின் ஆதரவு இருந்த போது, பைடனுக்கு 57% பெண்களின் ஆதரவு இருந்தது. தனது போட்டியாளரை விட கமலா பெற்றிருந்த முன்னிலை, பைடன் பெற்றிருந்ததை விட குறைவாகும். டிரம்பின் ஆதரவாளர்களில் 54% ஆண்கள், 44% பெண்கள் ஆவர். இறுதியில், 2022-ஆம் ஆண்டு கருத்தடை விவகாரத்துக்கு இருந்த தாக்கம் இந்த முறை இல்லை. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் ஹூவர் நிறுவனத்தில் உள்ள பிரிட்டன் அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் நியால் ஃபெர்குசன், “அமெரிக்க வாக்காளர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி கடந்த நான்கு ஆண்டுகளின் கொள்கைகளை மறுத்துள்ளனர்” என்கிறார். பண வீக்கத்தை உண்டாக்கிய பொருளாதாரக் கொள்கைகள், மத்திய கிழக்கில் போருக்கு இட்டுச் சென்ற வெளியுறவுக் கொள்கை, சமூக கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர் என்று அவர் கூறுகிறார். “ஜனநாயக கட்சி தனது பல முற்போக்கான முன்னெடுப்புகளில், வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தை மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்கர்களையும், ஹிஸ்பானிக் மக்களையும் அந்நியப்படுத்தியது. நாடு முழுவதிலும் மக்களை அந்நியப்படுத்தியது” என்று அவர் பிபிசி ரேடியோ-4 நிகழ்ச்சியில் பேசிய போது தெரிவித்தார். ஜனநாயகக் கட்சிக்கு தெளிவான செய்தி கிடைத்துள்ளது. அமெரிக்க மக்களுக்கு இந்த கொள்கைகள் தேவை இல்லை. அவர்களுக்கு வலிமையின் மூலம் அமைதி வேண்டும். பணவீக்கம் இல்லாத செழிப்பு வேண்டும்.   கருப்பின மற்றும் லத்தீன் வாக்காளர்களிடையே குறைந்த செல்வாக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லத்தீன் அமெரிக்கர்கள், குறிப்பாக ஆண்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றார். பென்சில்வேனியா மாகாணத்தையும் அதன் 19 தேர்வாளர் குழு வாக்குகளையும் டிரம்ப் கைப்பற்றிய போது, அவர் வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் நுழையப் போகிறார் என்பது உறுதியானது. 1988-ஆம் ஆண்டு முதல் அந்த மாகாணத்தை ஜனநாயகக் கட்சி ஒரே ஒரு முறை மட்டுமே, 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டனை டிரம்ப் தோற்கடித்த போது மட்டுமே இழந்துள்ளது. அரிசோனா, நெவேடா, ஜார்ஜியா, வட காரோலினா போன்ற முக்கியமான மாகாணங்களில் ஹாரிஸ் தனது பிரசாரத்தின் போது அதீத கவனம் செலுத்தியிருந்தார். டிரம்ப் ஆட்சியின் போது ஏற்பட்ட பிரிவினைகளால் வெறுப்படைந்த, அங்குள்ள ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களையும் தன் பக்கம் ஈர்க்க இந்த முயற்சிகளை ஹாரிஸ் மேற்கொண்டார். ஆனால் அது பலனளிக்கவில்லை. கருப்பினத்தவர், லத்தீன் அமெரிக்கர்கள், இளம் வாக்காளர்களிடம் ஜனநாயகக் கட்சிக்கு வழக்கமாக கிடைக்கும் ஆதரவு இந்த முறை சிதறியது. கல்லூரி படிப்பை முடிந்த நகரவாசிகளிடம் கமலா தனது ஆதரவை தக்க வைத்துக் கொண்டாலும், ஜனநாயகக் கட்சியின் கோட்டைக்குள் டிரம்புக்கு கிடைத்த ஆதரவை தோற்கடிக்க அது போதவில்லை. எடிசன் ஆய்வு மையத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, கமலா ஹாரிஸ் கருப்பின மக்களின் 86% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 53% வாக்குகளையும் பெறுவார் என்று கூறியது. எனினும் 2020-ஈல் பைடன் இதை விட அதிக முன்னிலை வகித்திருந்தார். அவர் கருப்பின மக்களின் 87% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 65% வாக்குகளையும் பெற்றிருந்தார். லத்தீன் ஆண் வாக்காளர்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். அவர்களிடம் கமலாவுக்கு 44% வாக்குகளும் டிரம்புக்கு 54% வாக்குகளும் இருந்தன. இதே பிரிவு மக்களிடம் பைடனுக்கு 2020-ஈல் 59% வாக்குகள் இருந்தன. குடியரசுக் கட்சிக்கு ஆதரவான கிராமப்புற பகுதிகளில், 2020-ஆம் ஆண்டு பைடனுக்கு கிடைத்ததை விட, ஹாரிஸுக்கு குறைவான வாக்குகளே கிடைத்தன. இது 2016-ஆம் ஆண்டு கிளிண்டனுக்கு கிடைத்த ஆதரவுக்கு நிகராக குறைவாகவே இருந்தது.   டிரம்பை மையப்படுத்திய பிரசாரம் பட மூலாதாரம்,GETTY 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் செய்தது போலவே, கமலா ஹாரிஸும் டிரம்பை மையப்படுத்தியே தனது பிரசாரத்தை மேற்கொண்டார். இந்த தேர்தலை டிரம்ப் மீதான பொது வாக்கெடுப்பாக அவர் முன்னிறுத்தினார். பிரசாரத்தின் கடைசி வாரங்களில், வெள்ளை மாளிகையின் தலைமைப் பணியாளர் (chief of staff) ஜான் கெல்லி, டிரம்ப் ஹிட்லரை ஆராதிப்பவர் என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, "டிரம்பை பாசிசவாதி, மனநோயாளி, நிலையற்றவர்" என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். இந்த தேர்தலை ஜனநாயகத்துக்கான போராட்டம் என்று கமலா ஹாரிஸ் வர்ணித்தார். ஜூலை மாதம் அதிபர் தேர்தலில் இருந்து விலகும் முன் பைடனும் இதையே தான் கூறியிருந்தார். “டொனால்ட் டிரம்பை தாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்திய கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்” என்று தனது எக்ஸ் பக்கத்தில், தேர்தல் கருத்து கணிப்பாளர் ஃப்ராங் லுண்ட்ஸ் பதிவிட்டிருந்தார். “டிரம்பைப் பற்றி வாக்காளர்களுக்கு ஏற்கனவே தெரியும். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அவர் முதலாம் ஆண்டில் என்ன செய்வார் என்று தெரிந்துக் கொள்ளவே மக்கள் விரும்பினர்” என்று அவர் கூறியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy9jxzlp0q8o
    • கனடாவில் உள்ள ஒரு   கடற்கரையில்....  மலசலம் கழித்து விட்டு,   மண்ணால்  மூடி விட்டுப் போகும் அளவுக்கு கொஞ்சம் முன்னேறி இருக்கின்றார்கள் என அறிந்தேன். 😂
    • கனடாவில் (Canada) உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்தியா (India) தெரிவித்துள்ளது. இந்த கருத்தை வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (07) வெளியிட்டுள்ளார்.  அத்துடன், கடந்த ஆண்டில், கனடாவில் உள்ள இந்திய இராஜதந்திரிகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களை அதிகளவில் எதிர்கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு  இந்தநிலையில் தமது உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்ட போதும், கனேடிய தரப்பால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  அதேவேளை, கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, இந்திய பேச்சாளர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.  அத்துடன், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் வன்முறைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். https://tamilwin.com/article/indian-diplomats-in-under-surveillance-in-canada-1730990907#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.