Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் சிந்தனையில் தெளிவு ஏற்பட உங்களிடம் ஒரு கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

// நான் தமிழ் மொழியில் உள்ள பற்று ஆர்வம் காரணமாக தொடர்பான கருத்தரங்குகளில் பேசுகிறேன், எழுதுகிறேன். ஆனால் என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே இந்த ஆர்வம், எனது துணைக்கு ஆர்வம் இல்லை.

நான், எனது சமூகத்தில், தமிழுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் பங்காற்றுவதால் பிரபல்யமாக இருக்கிறேன் என்பதால் என் பிள்ளைக்கு கட்டாயம் தமிழ் கதைக்க வேண்டும் என கூறுகிறார்கள்.. எதிர்பார்க்கிறார்கள்.. ஆனால் பிள்ளையால் முடியவில்லை என்பதால் நான் தமிழ் மொழி சம்பந்தமான விடயங்கள் பற்றி கதைக்க கூடாதா? 

நான் எனது ஆர்வம், பற்று காரணமாக தமிழுக்கு செய்யும் பங்களிப்பை எனது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து எடை போடுவது சரியா? // 

இந்த கேள்விகள் எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமானது இல்லை.. ஆனால் உங்களது கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • Replies 75
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிரபா முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
மிகவும் பெருமையாக இருக்கிறது.

ஒருவர் போல இன்னொருவர் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையே.அது பிள்ளைகளுக்கும் பொருந்தும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

பிரபா முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
மிகவும் பெருமையாக இருக்கிறது.

நன்றி அங்கிள்!!

27 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒருவர் போல இன்னொருவர் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையே.அது பிள்ளைகளுக்கும் பொருந்தும்.

உண்மைதான்.. 

இன்றிரவு ஒரு வீட்டிற்கு போயிருந்தேன்.. அங்கே நான் தனியே அப்படி இருக்க தேவையில்லை என வாதாட மற்றவர்கள் என்னிடம் கூறினார்கள், நான் நினைப்பது பிழை. 90% வீதமானவர்கள் ஓரே மாதிரி சிந்திக்கையில் நான் அதை ஏற்காவிட்டால் என்னில்தான் தவறு என்றார்கள்.. மிகவும் கவலையாகிவிட்டது

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு கண் தெரியும் என்பதற்காக கண் தெரியாதோர் வாழக்கூடாது என்று யாரும் நினைக்கவே முடியாது. அதுபோலத்தான்.. உங்களுக்கு உங்கள் தாய்மொழி அறிவு இருக்கிறது என்பதால்.. அதனை பாவிக்கக் கூடாது என்று சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. உங்களின் ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் தாய் மொழியை.. தந்தை மொழியை.. பேசுவதும் விடுவதும் அவரவர் விருப்பம்.. அவர்களுக்காகவோ.. ஊர் வாய்க்காகவே.. நீங்கள் தாய் மொழியை அதற்கான சேவையை நிராகரினுன்னு இல்லை.. அப்படி யாரும் எதிர்பார்ப்பார்கள் என்றால்.. அவர்களை நிராகரித்துவிட்டு.. உங்களுக்கு சரியென்பதை தெளிந்து செய்யுங்கள்.

எங்கள் செயல் பிறரை.. உலகை.. சூழலை பாழாக்கும் என்றால் தவிர.. மற்றும்படி எங்கள் செயலை சொல்லை யாருக்காகவும் கைவிடனும் என்ற அவசியமில்லை. அப்படி மற்றவர்கள் எதிர்பார்க்கவும் முடியாது.. அந்த உரிமை அவர்களுக்கும் இல்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உஙகள் செயறபாட்டை குறை லெ;ல முடியாது.ஆனால்  தாய் மொழியில் ஈடுபாடு கொன்ட ஒருவரின் பிள்ளை அந்த மொழியை
கதைக்க முடியவில்லை என்றால் கொஞ்சம் இடிக்கத்தான் செய்யும.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி பிரபா சிதம்பரநாதன். தமிழ் மொழி மீது பற்றும் ஆர்வமும்   இருப்பது உங்கள் உரிமை . உங்களுக்கு மிகவும் பிடித்தது . துணைக்கு ஆர்வமில்லாத போது பல தடைகள் வரக் கூடும் அது வழமை. பிள்ளைக்கு  புகட்டிட முயற்சியுங்கள். முடியாவிடடால்  அவரை அவர் போக்கில் விடவும். இதற்காக உ ங்கள் முயற்சியையோ ஆர்வத்தையோ  அணை போட வேண்டாம். 
இது உங்களுக்கான உரிமை வரம்  ஆர்வம் . எல்லோருக்கும் எல்லாம் கை வரும் என்று இல்லை.  பிள்ளைகள் வளரும் நாடு சூழல் பின்னணி   என்பதை பொறுத்தது.  மேலும் உங்கள் திறமைகள்  யாழிலும்  நாம் அறிய பங்கு பெற  வாழ்த்துக்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

மன்னிக்கவேண்டும் நிலாமதி அக்கா, இது எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெற்றது இல்லை. 

நான் போன இடத்தில் எமது சமூகத்தில் பிரபல்யமானவர்களின் பிள்ளைகளைப் பற்றி மற்றவர்கள் கதைக்கும் பொழுது, கதைத்த விடயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை, நான் உடன்படவும் இல்லை. அப்பொழுதுதான் நான்தான் ஏதும் பிழையாக நினைத்துக் கொண்டிருக்கிறேனோ என நினைத்தமையாலேயே தெளிவு பெற கேட்டேன். மற்றப்படி இது எனது தனிப்பட்ட வாழ்க்கை இல்லை. 

மிக்க நன்றி நிலாமதி அக்கா

5 hours ago, சுவைப்பிரியன் said:

உஙகள் செயறபாட்டை குறை லெ;ல முடியாது.ஆனால்  தாய் மொழியில் ஈடுபாடு கொன்ட ஒருவரின் பிள்ளை அந்த மொழியை
கதைக்க முடியவில்லை என்றால் கொஞ்சம் இடிக்கத்தான் செய்யும.

அப்படியென்றால் சமூகத்திற்கு அந்த தமிழ் ஆர்வலரின் தமிழ் பங்களிப்பு தேவையில்லை, சமூகத்திற்கு பங்களிப்பு செய்யும் நேரத்தில் பிள்ளைக்கு தமிழை கற்றுக்கொடுத்தால் சரியென நினைக்கிறீர்களா?

நன்றி சுவைப்பிரியன் அண்ணா!

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

எங்கள் செயல் பிறரை.. உலகை.. சூழலை பாழாக்கும் என்றால் தவிர.. மற்றும்படி எங்கள் செயலை சொல்லை யாருக்காகவும் கைவிடனும் என்ற அவசியமில்லை. அப்படி மற்றவர்கள் எதிர்பார்க்கவும் முடியாது.. அந்த உரிமை அவர்களுக்கும் இல்லை. 

உண்மைதான்!. 

எனக்கென்ன கவலை என்றால், இந்த மாதிரி எதிர்பார்ப்புக்களால் பிள்ளைகளையும் வேதனைப்படுத்துகிறார்கள் என்பதே. 

நான் பொதுவாக, உறவினர் வீடுகளுக்கு சென்றால் எங்களது சம வயதானவர்களுடன் அல்லது வயதில் பெரியவர்களுடன் கதைக்கும் அதே சமயத்தில் இளவயதினர்/ சிறுவர்கள் எல்லோருடனும் அவர்கள் வயதிற்கேற்ப கதைப்பதால் அவர்களிடம் இருந்து சில விடயங்களை அறிய முடிந்தது.. எனக்கு சில வழிகளில் உதவியும் உள்ளது. 

நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

எனது தந்தை போல் நானில்லை என்பது எவ்வளவு நிச்சயமோ,

அதே அளவு நிச்சயம்.

என்னை போல் என் பிள்ளை இராது என்பதுவும்.

இதில் யாரின் தெரிவும், யாரையும் கட்டுப்படுத்தாது. 

மேடை ஏறி தமிழ் பேசியவன் நீ, உன் பிள்ளையையும் அப்படித்தன் வளர்கிறாயா என்று என்னிடம் கேட்பார்கள் - சொல்லி கொடுக்கிறேன் - ஒரு பந்தை துரத்தி கொண்டு மைதானத்தில் ஓடுவதுதான் அவரின் தெரிவென்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்பேன் நான்.

8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

// நான் தமிழ் மொழியில் உள்ள பற்று ஆர்வம் காரணமாக தொடர்பான கருத்தரங்குகளில் பேசுகிறேன், எழுதுகிறேன். ஆனால் என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே இந்த ஆர்வம், எனது துணைக்கு ஆர்வம் இல்லை.

நான், எனது சமூகத்தில், தமிழுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் பங்காற்றுவதால் பிரபல்யமாக இருக்கிறேன் என்பதால் என் பிள்ளைக்கு கட்டாயம் தமிழ் கதைக்க வேண்டும் என கூறுகிறார்கள்.. எதிர்பார்க்கிறார்கள்.. ஆனால் பிள்ளையால் முடியவில்லை என்பதால் நான் தமிழ் மொழி சம்பந்தமான விடயங்கள் பற்றி கதைக்க கூடாதா? 

நான் எனது ஆர்வம், பற்று காரணமாக தமிழுக்கு செய்யும் பங்களிப்பை எனது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து எடை போடுவது சரியா? // 

இந்த கேள்விகள் எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமானது இல்லை.. ஆனால் உங்களது கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் தமிழ் மொழியில் உள்ள பற்று ஆர்வம் காரணமாக தொடர்பான கருத்தரங்குகளில் பேசுகிறேன், எழுதுகிறேன். ஆனால் என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே இந்த ஆர்வம், எனது துணைக்கு ஆர்வம் இல்லை.

தனது கொள்கைகளை சிந்தனையிலும் செயலிலும் நிறுத்தி வாழ்ந்துகாட்டும் ஒருவர் இன்னொருவருக்கு கருத்து சொல்ல அல்லது  ஆலோசனை  வழங்கும்போது அதற்கு தனியான மதிப்பு உண்டு என்பதை எவரும் மறுக்கமுடியாது.  அப்படி இல்லையென்றால் ஊருக்குத்தான் உபதேசம் அது உங்கள் வீட்டுக்கு இல்லை என்று தான் சொல்வார்கள்.

இதை கடந்து செல்வதற்கு உங்கள் கருத்தரங்குகளில் இதுபோன்ற இக்கட்டான சூழலை உருவாக்கும் மையக்கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. மேடையில்  பேசும்போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த தமிழ்மொழி அறிவை வழர்க்க வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களானால் அது மற்றவர்களின் நகைப்பிற்கிடமனாதாகவே இருக்கும். உங்கள் கருத்தை எவரும் செவிமடுக்கவும் மாட்டார்கள்.

உங்கள் மொழியார்வத்தையும் பற்றையும் கைவிடாமல் தொடர அது பிறர் சம்பந்தப்பட்டதாயின் அதற்கு ஏற்ற விதமாக உங்கள் பேசுபொருளையும் மையக்கருத்தையும் மீள்பரிசீலனை செய்து மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிய......
இங்கு ஒருவர் தமிழ்/கலாச்சார ஈடுபாடு கொண்டவர்.தமிழ்பள்ளிக்கூட வாத்தியாரும் கூட...நல்ல/துக்க விசயங்களுக்கெல்லாம் வேட்டி சட்டையுடன் மட்டுமே காட்சியளிப்பார். தமிழரை கண்டால் வணக்கம் சொல்லி தமிழில் மட்டுமே கதைப்பார்.வீட்டிலும் ஒரே தமிழ் புத்தக மயம். தமிழ் வளர்க்க/வளர வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்.

ஆனால் அவர் பிள்ளைகளோ கொச்சை தமிழ்தான் பேசுவார்கள்.தமிழ் கலாச்சாரம் அறவே இல்லை. அவரின் பிள்ளைகளா இவர்கள் என நான் நினைப்பதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

சுவைப்பிரியன் ஐயா சொன்னது போல தாய் மொழியில் ஈடுபாடு கொன்ட ஒருவரின் பிள்ளை அந்த மொழியைகதைக்க முடியவில்லை என்றால் கொஞ்சம்  இடிக்க செய்யாது, முழுமையாகவே இடிக்க செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் எனது ஆர்வம், பற்று காரணமாக தமிழுக்கு செய்யும் பங்களிப்பை எனது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து எடை போடுவது சரியா? /

பிழை

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

// நான் தமிழ் மொழியில் உள்ள பற்று ஆர்வம் காரணமாக தொடர்பான கருத்தரங்குகளில் பேசுகிறேன், எழுதுகிறேன். ஆனால் என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே இந்த ஆர்வம், எனது துணைக்கு ஆர்வம் இல்லை.

நான், எனது சமூகத்தில், தமிழுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் பங்காற்றுவதால் பிரபல்யமாக இருக்கிறேன் என்பதால் என் பிள்ளைக்கு கட்டாயம் தமிழ் கதைக்க வேண்டும் என கூறுகிறார்கள்.. எதிர்பார்க்கிறார்கள்.. ஆனால் பிள்ளையால் முடியவில்லை என்பதால் நான் தமிழ் மொழி சம்பந்தமான விடயங்கள் பற்றி கதைக்க கூடாதா? 

நான் எனது ஆர்வம், பற்று காரணமாக தமிழுக்கு செய்யும் பங்களிப்பை எனது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து எடை போடுவது சரியா? // 

இந்த கேள்விகள் எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமானது இல்லை.. ஆனால் உங்களது கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.. 

நன்றி உங்கள் பதிவிற்கு பிரபா ,

சில வருடங்களுக்கு முன்னர் சிட்னியில் உள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றில் தன்னார்வத் தொண்டனாக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. நண்பர்கள் ஊடாக இந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டேன். நேரடியாகத் தமிழ்க் கற்பித்தலில் ஈடுபடவில்லையாயினும் கூட, அது தொடர்பான செயற்பாடுகளுக்கு என்னாலான உதவிகளைச் செய்ய வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ந்தேன்.

ஆரம்பத்தில் எனது பிள்ளைகளும் என்னுடன் பாடசாலைக்கு வந்தனர். ஆர்வத்துடன் கல்விசார் செயற்பாடுகளிலும், கலை கலாசார நிகழ்வுகளிலும் பங்குகொண்டனர். காலம் செல்லச் செல்ல, ஆங்கில மூலக் கல்விக்கும், பிரதான பாடசாலையின் செயற்பாடுகளுக்கும் எனது பிள்ளைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கவே, தமிழ்க் கற்றலில் அவர்களுக்கிருந்த ஆர்வம் குறைவடையத் தொடங்கியது. பெற்றோரில் ஒருவனான எனது ஆர்வம் மட்டுமே பிள்ளைகள் தமிழினைத் தொடர்ந்து படிக்கப் போதுமானதாக இருக்காது என்பதனை நான் புரிந்துகொண்ட நேரமும் அதுதான். சில வருடங்களில் எனது இளைய மகளும் தனது தமிழ்ப் பாடசாலையுடனான தொடர்பினை பிரதான பாடசாலையில் பரீட்சையொன்றினைக் காட்டி கத்திரித்துக்கொள்ள நானும் விலகவேண்டியதாயிற்று.

அதன் பின்னர் பலர் என்னிடம் கேட்ட ஒரு கேள்விதான், தமிழ்ப் பள்ளிக்கூட அதிபராக இருந்தீர்கள், ஆனால் உங்களின் பிள்ளைகளைத் தொடர்ச்சியாக பாடசாலைக்கு அழைத்துவரமுடியாமல்ப் போய்விட்டதே? என்பதுதான். வருத்தமாக இருந்தது. ஆனால், உண்மையும் அதுதானே? பாடசாலைக்குப் பிள்ளைகளின் வரவுபற்றியும், அவர்கள் தொடர்ந்தும் தமிழினைக் கற்பதன் அவசியம்பற்றியும் அடிக்கடி பேசும் என்னால் எனது சொந்தப் பிள்ளைகளையே பாடசாலைக்குத் தொடர்ந்து அழைத்துவரமுடியாமற் போனதையிட்டு வருந்தினேன். ஆனால்,தமிழினை எமக்குப் பின்னர், அமது அடுத்த சந்ததிக்கு கொடுக்கவிரும்பும் என்னைப்போன்ற பலருக்கு இருக்கும் வருத்தம்தான் அது. 

ஆனால், எனது பிள்ளைகளுக்கு தொடர்ந்தும் தமிழினைக் கற்கும் ஆர்வம் இல்லாமற்போனதனால், நான் மற்றையவர்களின் பிள்ளைகளுக்குத் தமிழினைக் கற்றுக்கொடுப்பது ஒன்றும் தவறில்லையே? எனது பிள்ளைகள்  மூலமாக தமிழ் அடுத்த சந்ததிக்குக் கடத்தப்பட முடியாமற்போனாலும் கூட, தமிழினைக் கற்க ஆர்வத்துடன் இருக்கும் மற்றைய பிள்ளைகளூடாகவாவது தமிழினை நாம் கொண்டுசெல்வதில் தவறிருக்க முடியாது அல்லவா? 

எனது பிள்ளைகள் தமிழினைக் கற்பதை நிறுத்தியதையிட்டு நான் கவலைப்படுவதுண்டு. ஆனால், அவர்களால் முடியாவிட்டாலும், தமிழினை நேசிக்கும் இன்னும் பல பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது நாம் தமிழினைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் எனது நிலைப்பாடு.

நீண்ட 4 வருடங்களுக்குப் பின்னர் மிக அண்மையில் மீண்டும் தமிழ்ப் பாடசாலைக்கு என்னை சில உதவிகள் கேட்டு அழைத்திருந்தார்கள். பேச்சுப்போட்டிகளில் நடுவர்களில் ஒருவராகக் கடமையாற்றவும், பிள்ளைகளை தமிழில் உரையாட வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட செவ்வி செயற்பாட்டு ஒன்றிற்காகவு அழைத்திருந்தார்கள். மகிழ்வுடன் சென்று உதவிவிட்டு வந்தேன்.

அப்பிள்ளைகளுக்கு தமிழில் இருக்கும் ஆர்வத்தையும், அவர்களும் பேசும் விடயங்களையும் பார்த்தும், கேட்டும் மகிழ்ந்தேன். அவர்கள் மூலம் தமிழ் மேலும் கொண்டுசெல்லப்படும் என்பதையும் உணர்ந்தேன். எனது பிள்ளைகளால் தமிழினைக் கற்கமுடியவில்லை என்கிற ஏக்கம் அப்போது சுத்தமாக போயிருந்தது.

எனது பிள்ளைகள் கற்கிறார்களோ இல்லையோ, கற்கவிரும்பும் அனைத்துப் பிள்ளைகளுக்காகவும் என்னால் முடிந்ததைச் செய்வேன் என்று எண்ணியிருக்கிறேன். நோக்கம் எனது தாய்மொழி அழிந்துவிடக்கூடாது என்பதுதான். அதை எப்படிச் செய்தால் என்ன, விளைவு ஒன்றுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

மிகவும் யதார்தமான பதிவு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

பாடசாலைக்குப் போனால்த் தான் தமிழ் படிக்கலாம் என்பதிலிருந்து நான் விதிவிலக்கு.

பிள்ளைகள் தமிழ் பேச வேண்டுமென்றால் இதை முதலில் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@vanangaamudi, @விளங்க நினைப்பவன், மற்றும் @குமாரசாமிஅண்ணா, உங்களது கருத்துக்களிற்கு நன்றி.. 

90% வீதமானவர்களின் எதிர்பார்ப்பு உங்களது கருத்துக்களை ஒத்துத்தான் இருக்கும்.. ஆனால் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து அவரின் தமிழிற்கான  பங்களிப்பை எடைப் போடுவதால் யாருக்கு இழப்பு அதிகம்? 

14 hours ago, goshan_che said:

இதில் யாரின் தெரிவும், யாரையும் கட்டுப்படுத்தாது. 

உண்மை!!

5 hours ago, Kavi arunasalam said:

பிழை

நன்றி கவி ஐயா!

3 hours ago, ரஞ்சித் said:

நோக்கம் எனது தாய்மொழி அழிந்துவிடக்கூடாது என்பதுதான். அதை எப்படிச் செய்தால் என்ன, விளைவு ஒன்றுதான். 

இதுதான் எனது எண்ணமும்..

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

90% வீதமானவர்களின் எதிர்பார்ப்பு உங்களது கருத்துக்களை ஒத்துத்தான் இருக்கும்.. ஆனால் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து அவரின் தமிழிற்கான  பங்களிப்பை எடைப் போடுவதால் யாருக்கு இழப்பு அதிகம்? 

இதில் வணங்கா முடி சொன்ன சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி என்பதும் முக்கியம்தான்.

உதாரணமாக ஒருவர் மேடை ஏறி சீதனத்தை எதிர்த்து பேசி விட்டு, அவரின் மகனுக்கு சீதனம் வாங்கி திருமணம் முடித்து கொடுத்தால் - அது மகனின் தெரிவு என சொன்னால் - சமூகம் அவரின் போக்கை do as I preach not as I practice என்ற ஒரு வகை ஹிப்ரோகிரசி என்றே பார்க்கும் இல்லையா?

ஆகவே நாம் பிள்ளைகளுக்கு நாம் நம்புவதை சொல்லி கொடுக்கவாவது முனைந்திருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். 

அதன் பின்னும் அதை அவர்கள் கைக்கொள்ளவில்லை என்றால் - நம்மால் என்ன செய்ய முடியும்.  

இது எனது கொள்கை ஆனால் என் பிள்ளை அதன் படி நடக்கவில்லை அது அவரின் தெரிவு என சொல்ல மட்டும்தான் முடியும்.

ஆனால் யதார்தத்தில் பிள்ளைகள் தெரிவு பெற்றாரை கட்டுப்படுத்துகிறது என்பதுதான் அதிகம் உண்மையும் கூட.

எனக்கு தெரிந்த ஒருவர்  முன்னர் வெள்ளைகளை கலியாணம் முடிப்பதை, ஒத்த பால் உறவை கடுமையாக எதிர்ப்பார். ஒரு பிள்ளை வெள்ளை இனத்தவரையும் இன்னொரு பிள்ளை தன் இனத்தவரையும் துணையாக தேர்ந்து விட இப்போ அவர் இவை பற்றி கதைப்பதே இல்லை.

தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

எமது வாழ் நாள் நிலைப்பாடுகளை அடித்து நொறுக்கும் வல்லமை எம் எச்சங்களுக்கு இருக்கிறது என்பதும் உண்மைதான் 🤣.

ஆனால் மகாத்மா காந்தி போல செயல் மூலம் எமக்கும் எம் எச்சங்களுக்கும் இடையான கொள்கை இடைவெளியை தெளிவுற விளக்கி விட்டால் இதை ஓரளவு இலகுவாக கையாளலாம் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

நன்றி உங்கள் பதிவிற்கு பிரபா ,

சில வருடங்களுக்கு முன்னர் சிட்னியில் உள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றில் தன்னார்வத் தொண்டனாக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. நண்பர்கள் ஊடாக இந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டேன். நேரடியாகத் தமிழ்க் கற்பித்தலில் ஈடுபடவில்லையாயினும் கூட, அது தொடர்பான செயற்பாடுகளுக்கு என்னாலான உதவிகளைச் செய்ய வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ந்தேன்.

ஆரம்பத்தில் எனது பிள்ளைகளும் என்னுடன் பாடசாலைக்கு வந்தனர். ஆர்வத்துடன் கல்விசார் செயற்பாடுகளிலும், கலை கலாசார நிகழ்வுகளிலும் பங்குகொண்டனர். காலம் செல்லச் செல்ல, ஆங்கில மூலக் கல்விக்கும், பிரதான பாடசாலையின் செயற்பாடுகளுக்கும் எனது பிள்ளைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கவே, தமிழ்க் கற்றலில் அவர்களுக்கிருந்த ஆர்வம் குறைவடையத் தொடங்கியது. பெற்றோரில் ஒருவனான எனது ஆர்வம் மட்டுமே பிள்ளைகள் தமிழினைத் தொடர்ந்து படிக்கப் போதுமானதாக இருக்காது என்பதனை நான் புரிந்துகொண்ட நேரமும் அதுதான். சில வருடங்களில் எனது இளைய மகளும் தனது தமிழ்ப் பாடசாலையுடனான தொடர்பினை பிரதான பாடசாலையில் பரீட்சையொன்றினைக் காட்டி கத்திரித்துக்கொள்ள நானும் விலகவேண்டியதாயிற்று.

அதன் பின்னர் பலர் என்னிடம் கேட்ட ஒரு கேள்விதான், தமிழ்ப் பள்ளிக்கூட அதிபராக இருந்தீர்கள், ஆனால் உங்களின் பிள்ளைகளைத் தொடர்ச்சியாக பாடசாலைக்கு அழைத்துவரமுடியாமல்ப் போய்விட்டதே? என்பதுதான். வருத்தமாக இருந்தது. ஆனால், உண்மையும் அதுதானே? பாடசாலைக்குப் பிள்ளைகளின் வரவுபற்றியும், அவர்கள் தொடர்ந்தும் தமிழினைக் கற்பதன் அவசியம்பற்றியும் அடிக்கடி பேசும் என்னால் எனது சொந்தப் பிள்ளைகளையே பாடசாலைக்குத் தொடர்ந்து அழைத்துவரமுடியாமற் போனதையிட்டு வருந்தினேன். ஆனால்,தமிழினை எமக்குப் பின்னர், அமது அடுத்த சந்ததிக்கு கொடுக்கவிரும்பும் என்னைப்போன்ற பலருக்கு இருக்கும் வருத்தம்தான் அது. 

ஆனால், எனது பிள்ளைகளுக்கு தொடர்ந்தும் தமிழினைக் கற்கும் ஆர்வம் இல்லாமற்போனதனால், நான் மற்றையவர்களின் பிள்ளைகளுக்குத் தமிழினைக் கற்றுக்கொடுப்பது ஒன்றும் தவறில்லையே? எனது பிள்ளைகள்  மூலமாக தமிழ் அடுத்த சந்ததிக்குக் கடத்தப்பட முடியாமற்போனாலும் கூட, தமிழினைக் கற்க ஆர்வத்துடன் இருக்கும் மற்றைய பிள்ளைகளூடாகவாவது தமிழினை நாம் கொண்டுசெல்வதில் தவறிருக்க முடியாது அல்லவா? 

எனது பிள்ளைகள் தமிழினைக் கற்பதை நிறுத்தியதையிட்டு நான் கவலைப்படுவதுண்டு. ஆனால், அவர்களால் முடியாவிட்டாலும், தமிழினை நேசிக்கும் இன்னும் பல பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது நாம் தமிழினைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் எனது நிலைப்பாடு.

நீண்ட 4 வருடங்களுக்குப் பின்னர் மிக அண்மையில் மீண்டும் தமிழ்ப் பாடசாலைக்கு என்னை சில உதவிகள் கேட்டு அழைத்திருந்தார்கள். பேச்சுப்போட்டிகளில் நடுவர்களில் ஒருவராகக் கடமையாற்றவும், பிள்ளைகளை தமிழில் உரையாட வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட செவ்வி செயற்பாட்டு ஒன்றிற்காகவு அழைத்திருந்தார்கள். மகிழ்வுடன் சென்று உதவிவிட்டு வந்தேன்.

அப்பிள்ளைகளுக்கு தமிழில் இருக்கும் ஆர்வத்தையும், அவர்களும் பேசும் விடயங்களையும் பார்த்தும், கேட்டும் மகிழ்ந்தேன். அவர்கள் மூலம் தமிழ் மேலும் கொண்டுசெல்லப்படும் என்பதையும் உணர்ந்தேன். எனது பிள்ளைகளால் தமிழினைக் கற்கமுடியவில்லை என்கிற ஏக்கம் அப்போது சுத்தமாக போயிருந்தது.

எனது பிள்ளைகள் கற்கிறார்களோ இல்லையோ, கற்கவிரும்பும் அனைத்துப் பிள்ளைகளுக்காகவும் என்னால் முடிந்ததைச் செய்வேன் என்று எண்ணியிருக்கிறேன். நோக்கம் எனது தாய்மொழி அழிந்துவிடக்கூடாது என்பதுதான். அதை எப்படிச் செய்தால் என்ன, விளைவு ஒன்றுதான். 

ரஞ்சித் உங்கள் கருத்து சரி ....ஆனால் , பிரபாவின் கேள்விக்கு உங்கள் பதில் பொருந்தாது......தமிழ் படிக்க விரும்புகின்ற பிள்ளைகளுக்கு நீங்கள் படிப்பிக்கின்றதில்லைலோயோ  அல்லது அவர்களை உற்சாகப்படுத்துவதில்லோ தவறில்லை ...ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தமிழை படிக்க ஊக்கம் கொடுக்காமல் அடுத்தவர் பிள்ளைகளை தமிழ் படிக்க கூப்பிடுவதும், அவர்களை கட்டாயப்படுத்துவது தவறு ...இதனை வணங்காமுடி தெளிவாய் சொல்லி உள்ளார்.
பிள்ளைகள் தமிழை படிக்க மாட்டோம்  என்று சொன்னால் கட்டாயப்படுத்த கூடாது என்று சொல்கின்ற நீங்கள் அதே பிள்ளைகள் 10 வகுப்போடு படிப்பை நிப்பாட்ட போறோம் என்று சொன்னால் விடுவீர்களா ?....அதென்ன ஆங்கில நாடுகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு மட்டும் தமிழ் படிக்க கசக்குது ?....என்னை பொறுத்த வரை பெற்றோரில் தான் பிழை சொல்வேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

அதென்ன ஆங்கில நாடுகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு மட்டும் தமிழ் படிக்க கசக்குது ?....என்னை பொறுத்த வரை பெற்றோரில் தான் பிழை சொல்வேன் .

தங்கள் பிள்ளைகளுக்கு விருப்பமில்லை/அவசியமில்லை. அவர்கள் நினைத்ததை அல்லது விருப்பமானதை தொடரட்டும் என்ற பெருந்தன்மை உள்ளவர்கள் தான் ஊரில் கட்டாய படிப்பு படித்து இவ்வளவு முன்னேறியுள்ளார்கள். ஒரு வயது மட்டும் கட்டாய படிப்பு அவசியம். அதிலும் தாய் மொழி என்பது எழுத படிக்க வேண்டியது அவசியம் ஒவ்வொரு தமிழ் பிள்ளைகளும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு பெற்றோர் அவசியம் வற்புறுத்தி கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் வளர்ந்த பின் தமிழை தொடர்வதும் தொடராமல் விடுவதும் அவர்கள் பிரச்சனை.

எனது பிள்ளைக்கு சொந்த மொழியின் அருமை பெருமையை சொல்லி கொடுக்காமல்  உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என பறைசாற்றி மற்ற பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதை செய்யவும் மாட்டேன்.

உலகில் எத்தனையோ மனித சமூகங்களுக்கு சொந்த மொழியுமில்லை. சொந்த எழுத்துருவும் இல்லை.அப்படியிருக்க மற்ற மொழிகளுக்கு இல்லாத சிறப்பு தமிழுக்கு தன்னை வளர்த்துக்கொள்ள எத்தனை சிரமங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனது பிள்ளைக்கு சொந்த மொழியின் அருமை பெருமையை சொல்லி கொடுக்காமல்  உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என பறைசாற்றி மற்ற பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதை செய்யவும் மாட்டேன்.

இது நியாயமான நிலைப்பாடுதான்.

ஆனால் தனது பிள்ளை படிக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் ஏனைய பிள்ளைகளுக்கும் படிபிக்க கூடாது என நாம் சொல்வதில்லையே?

இப்படி சொல்வதால் தனிழ் ஆர்வம் உள்ள அந்த பெற்றாரின் ஆர்வத்தையும், அவரிடம் படிக்கும் வாய்ப்புள்ள பிள்ளையின் வாய்ப்பையும் அல்லவா ஒருசேர மழுங்கடிக்கிறோம்?

இதன் முடிவு இரெண்டு தலைமுறையில் தமிழ் கற்கும் ஆர்வம் உள்ள இருவர் அடிபட்டு போவார்கள் - அது மட்டும்தானே?

இதைதான் பிரபா மேலே கேட்கிறார், இதனால் இழப்பு யாருக்கு? என்று.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

மகாத்மா காந்தி போல செயல் மூலம் எமக்கும் எம் எச்சங்களுக்கும் இடையான கொள்கை இடைவெளியை தெளிவுற விளக்கி விட்டால் இதை ஓரளவு இலகுவாக கையாளலாம் என நினைக்கிறேன். 

அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் இடையான பிரச்சனை எங்கே வந்தது அவர்கள் தான் பிள்ளைகளின் விருப்பத்தை பவ்வியமாக ஏற்று கொள்கிறார்களே அவர்கள் கொள்கை திணிப்பு எல்லாம் பிற தமிழர்களிடம் தான்.

1 hour ago, குமாரசாமி said:

எனது பிள்ளைக்கு சொந்த மொழியின் அருமை பெருமையை சொல்லி கொடுக்காமல்  உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என பறைசாற்றி மற்ற பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதை செய்யவும் மாட்டேன்.

7 hours ago, ஈழப்பிரியன் said:

பிள்ளைகள் தமிழ் பேச வேண்டுமென்றால் இதை முதலில் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

👍 நல்ல கருத்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, goshan_che said:

இது நியாயமான நிலைப்பாடுதான்.

ஆனால் தனது பிள்ளை படிக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் ஏனைய பிள்ளைகளுக்கும் படிபிக்க கூடாது என நாம் சொல்வதில்லையே?

இப்படி சொல்வதால் தனிழ் ஆர்வம் உள்ள அந்த பெற்றாரின் ஆர்வத்தையும், அவரிடம் படிக்கும் வாய்ப்புள்ள பிள்ளையின் வாய்ப்பையும் அல்லவா ஒருசேர மழுங்கடிக்கிறோம்?

இதன் முடிவு இரெண்டு தலைமுறையில் தமிழ் கற்கும் ஆர்வம் உள்ள இருவர் அடிபட்டு போவார்கள் - அது மட்டும்தானே?

இதைதான் பிரபா மேலே கேட்கிறார், இதனால் இழப்பு யாருக்கு? என்று.

இப்போதெல்லாம் ஒரு பக்க நியாயத்தை உலக நியாயமாக்கி விடுவதையே பலர் செய்கின்றார்கள். 
எனது வீட்டுக்குள்ளேயே பெரிய இழப்பை வைத்துக்கொண்டு வெளியில் சென்று அதை நிவர்த்தி செய்வது  புண்ணியம் தேடுவது போல் தான் எனக்கு தெரிகின்றது.மற்றும் படி மற்றவர்களுக்கு கற்பிப்பது என்பதும் ஒரு வகை தானம் என்பது மறுப்பதற்கில்லை.அதை  வீட்டிலும் நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்.

பிள்ளை தமிழ் படிக்கவில்லை/நாட்டமில்லை என்றால் பேசாமல் விடுவது தான் தவறு என்று மீண்டும் சொல்கிறேன். 

 கண்ணுகளா! இப்படி இருக்கணும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

இப்போதெல்லாம் ஒரு பக்க நியாயத்தை உலக நியாயமாக்கி விடுவதையே பலர் செய்கின்றார்கள். 
எனது வீட்டுக்குள்ளேயே பெரிய இழப்பை வைத்துக்கொண்டு வெளியில் சென்று அதை நிவர்த்தி செய்வது  புண்ணியம் தேடுவது போல் தான் எனக்கு தெரிகின்றது.மற்றும் படி மற்றவர்களுக்கு கற்பிப்பது என்பதும் ஒரு வகை தானம் என்பது மறுப்பதற்கில்லை.அதை  வீட்டிலும் நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்.

பிள்ளை தமிழ் படிக்கவில்லை/நாட்டமில்லை என்றால் பேசாமல் விடுவது தான் தவறு என்று மீண்டும் சொல்கிறேன். 

 கண்ணுகளா! இப்படி இருக்கணும் 🤣

உப்பிடிதான் எங்கள கொண்டு போனது🤣

கொச்சைத்தமிழ், பேச்சுத் தமிழ், எழுத வாசிக்கத் தெரிந்த தமிழ், சரளமான தமிழ்... இவை எல்லாமே வெவ்வேறு எல்லைகளே தவிர இவர்கள் யாருமே தமிழர்கள் இல்லை.

தமிழ் தெரியாதவர்கள் தென்னாபிரிக்காவிலிருந்து எமக்கு ஆதரவு வழங்கினார்கள். மகாத்மா காந்தியின் உபதேசமே இந்தியாவுக்குத் தேவைப்பட்டது. அவரின் சொந்த பிள்ளை வளர்ப்பு அல்ல. குறுகிய மனப்பான்மையுடைய சமுதாயம் சாதி தொழில் பிரதேசம் என்று தன் இனத்தையே குறுக்கியது போதாதா ? தங்களைப் புனிதர்களாகக் காட்டித் தமிழ் ஆர்வலர்களை நோக்கிக் கைநீட்டுவது தமிழ் மீது பற்றுள்ளவர்களின் செயல் அல்ல. 

சொல்லத் துணியாததைத் சொல்லத் துணிந்த பிரபாவுக்கும் ரஞ்சித்துக்கும் நன்றிகள்.

(குறிப்பு: ரஞ்சித் ஏனைய பிள்ளைகளைத் தமிழ் படிக்கும்படி கட்டாயப்படுத்தியதாக எங்கும் குறிப்பிடவில்லை. தவிர, தனது மகள் பாடசாலையிலிருந்து விலகியதும் தானும் விலகி விட்டதாகக் கூறியுள்ளார். சிலர் அரைகுறையாக வாசித்து உணர்ச்சிவசப்பட்டுள்ளனரா அல்லது நான் தவறாக வாசித்துள்ளேனா ?)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.