Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பாலின உறவு: இலங்கை நண்பியை கரம் பிடிக்க வந்த இந்திய பெண் - மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாலின உறவு: இலங்கை நண்பியை கரம் பிடிக்க வந்த இந்திய பெண் - மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

இலங்கை பாலினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் உள்ள நண்பி ஒருவரை தேடி வந்த, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண், இலங்கை நண்பியுடன் சேர்ந்து வாழப் போவதாகவும், அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறியதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்திய தமிழ் பெண் (24 வயது) ஒருவருக்கும், இலங்கை அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பெண் (19) ஒருவருக்கும் இடையில் தொலைபேசி வழியாக நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பெண், தனது நண்பியைச் சந்திப்பதற்காக கடந்த 20ஆம் தேதி இலங்கை வந்துள்ளார். பின்னர் அவர் அம்பாறை மாவட்டம் அக்கரைபற்றிலுள்ள இலங்கை நண்பியின் வீட்டுக்குச் சென்று, அவரை இந்தியா அழைத்துச் செல்லப் போவதாகவும் அவருடனேயே வாழப் போவதாகவும் கூறியுள்ளார். இதற்கு இலங்கை நண்பியும் இணங்கியுள்ளார்.

தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த மேற்படி பெண், இலங்கை நண்பியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டதாகவும், அவ்வாறு செய்யாது விட்டால், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாகவும், இலங்கைப் பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்தே அக்கரைபற்று காவல் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்ததாக இலங்கைப் பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை பெண் - ஒன்றரை வயது பெண் குழந்தையொன்றின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கணவருடன் இவர் வாழ்ந்து வந்த நிலையிலேயே, இந்த முடிவை எடுத்துள்ளார் என அவரின் குடும்பத்தார் கூறுகின்றனர்.

தொடர்பு ஏற்பட்டது எப்படி?

இலங்கை பெண்ணின் தோழியொருவர் இந்தியாவில் வசித்து வருகின்றார். அவர் மூலமாகவே, குன்னத்தூரைச் சேர்ந்த பெண்ணின் தொடர்பு - இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் சில காலம் தொலைபேசி, வாட்ஸ்ஆப் மூலமாகப் பேசி, நட்பு வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இந்திய பெண் - தன்னுடைய இலங்கை தோழியின் வீடு தேடி வந்து, தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது விருப்பதற்கு சம்மதிக்காது விட்டால், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக, இந்தியப் பெண் தங்களை மிரட்டியதாக, இலங்கைப் பெண்ணின் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

தனது கணவவரின் வீட்டிலிருந்து கிளம்பி வந்து, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றிலுள்ள தன்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டில் இலங்கைப் பெண் தங்கியிருக்கிறார். அங்கு அவரை இந்தியப் பெண் சந்தித்தார். இலங்கைப் பெண்ணின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி, அவரின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக உள்ளார்.

மனநல அறிக்கை பெற நீதிமன்றம் உத்தரவு

 

இலங்கை பாலினம்

காவல் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, குறித்த பெண்கள் இருவரையும் கடந்த புதன்கிழமை (22ஆம் தேதி) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

இதன்போது சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரின் விளக்கங்களையும் கேட்ட நீதவான் ,அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் தெரிவித்தமையினால், இருவரையும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநல வைத்தியரிடம் காண்பித்து, வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த அறிக்கையினை ஜூன் 27ஆம் தேதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து குறித்த இருவரும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநலப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

இதன் பின்னர் மேற்படி பெண்கள் இருவரும் நீதிமன்றக் கட்டளையின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

"ஒரு பாலின விருப்பம் உளவியல் நோயல்ல"

தன் பாலின ஈர்ப்புக்கும் உளவியலுக்கும் இடையிலான தொடர்பு குறித்து அறிந்து கொள்ளும் பொருட்டு, மனநல வைத்தியர் யூ.எல். சறாப்டீனிடம் பிபிசி தமிழ் பேசியபோது; "தன்பால் ஈர்ப்பு என்பது உளவியல் பிரச்சினை அல்ல" என்றார்.

 

இலங்கை பாலினம்

 

படக்குறிப்பு,

யூ.எல். சறாப்டீன், மன நல வைத்தியர்

"ஒருபால் திருமணம் செய்து கொள்வோரை உலக அரங்கில் - உளவியல் பிரச்சினையுள்ளவர்களாகக் கருதுவதில்லை. எதிர் பாலினத்தவர்கிடையே ஏற்படும் ஈர்ப்ப்பு போலவே, தன் பாலினத்தவர்களிடையே ஏற்படும் ஈர்ப்பும் உள்ளது ஆனால், இதனை சமூகங்களும், சமயங்களும் ஏற்பதில்லை".

"இதனை உளவியல், ஒரு நோயாகவோ பிரச்சினையாகவோ பார்க்கவில்லை. இது தனி நபர்களின் உரிமை சார்ந்த விடயமாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், ஒருபாலின திருமணத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு, சமூக ரீதியிலான நெருக்குவாரங்களினாலும் வெளிக் காரணிகளாலும் உளவியல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

ஒரு பாலினத்தவர்கள் சேர்ந்து வாழ்வது சட்ட விரோதமான செயற்பாடு அல்ல. அவர்கள் திருமணம் செய்வதற்கான சட்ட அங்கிகாரம் இலங்கையில் இல்லை.

பாலியல் நாட்டம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமாக அமையும். யாருக்கு யார் மீது நாட்டம் உள்ளது என்பது, அவரவரின் பாலியல் நாட்டத்தைப் பொறுத்ததாகும்" என்கிறார் டாக்டர் சறாப்டீன்.

"தன் பாலின நாட்டத்தை முன்னொரு காலத்தில் 'பாலியல் ரீதியான வழி தவறல்' என கூறினர். இவ்வாறான நாட்டம் கொண்டவர்களை பாலியல் வக்கிரம் (Pervers) கொண்டோர்' என்றும் குறிப்பிடப்பட்டனர்.

தன் பாலின நாட்டம் என்பது சமூக, மத ரீதியாக பிழையான விடயமாக கருதப்படுகிறது ஆனாலும், சம்பந்தப்பட்ட நபர்கள் அதில்தான் நாட்டம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அது அவர்களின் விரும்பமாகும். உலக வளர்ச்சியில் இவ்விடயமானது சம்பந்தப்பட்டவர்களின் மானிட உரிமையாகக் கருதப்படுகிறது".

"உயிரினங்கள் எல்லாவற்றிலும் மாறுபட்ட பாலியல் நாட்டங்கள் உள்ளன. குரங்குகளிடையே சுய இன்பம் காணும் பழக்கம் உள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.

"தன்னைத் தானே காதலித்து திருமணம் செய்து கொள்கின்றவர்களும் உள்ளனர். இவ்வாறானவர்கள் 'நாசீசிஸ்ட்' (Narcissist) என்று அழைக்கப்படுகின்றனர். 'நாசீசிஸ்ட்' என்பது கிரேகக்கத்தில் அறியப்படும் காதல் கடவுளின் பெயர். சுய காதலை ஆங்கிலத்தில் 'நாசீசிசம்' என்பர்.

ஒருவரின் அனைத்து விதமான நாட்டங்களுக்கும் விருப்பங்களுக்கும் சுய சிந்தனைகளுக்கும் - எல்லா சந்தர்ப்பங்களிலும் சமூகத்தில் இடமளிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவரவர் வாழும் சமூகங்களிலுள்ள விழுமியங்கள், விதிமுறைகள், மதிப்புக்கள் மற்றும் அமைப்புகள் அவற்றுக்கு அனுமதிப்பதில்லை" என்றும் மனநல மருத்துவர் சறாப்டீன் கூறினார்.

தண்டனைக்குரிய குற்றம்

இது இவ்வாறிருக்க ஒரு பாலின திருணத்துக்கு இலங்கையில் சட்ட ரீதியான ஏற்பாடுகள் எவையும் இல்லை என்கிறார் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ்.

 

இலங்கை பாலினம்

 

படக்குறிப்பு,

எம்.எம். பஹீஜ், சட்டத்தரணி

"அதேவேளை தண்டனைச் சட்டக் கோவை ஏற்பாடுகளின் கீழ், ஒரு ஆணும் ஆணும் பாலியல் உறவு கொள்வதும், பெண்ணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்வதும் அல்லது மிருகங்களுடன் மனிதர்கள் பாலியல் புணர்ச்சி கொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும்" எனவும் அவர் கூறினார்.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 365 மற்றும் 365A ஆகியவை, 'இயற்கை விதிக்கு மாறான பாலியல் புணர்வு' மற்றும் 'பாரதூரமான இழிசெயல்' ஆகியவற்றினை குற்றமாக வரையறை செய்கிறது என்றும், இந்தப் பிரிவுகளின் கீழ் தன்பால் உறவின் அடிப்படையிலான பாலியல் உறவு குற்றமாகும் என்றும் கூறிய சட்டத்தரணி பஹீஜ்; "இந்தக் குற்றத்தைப் புரிவோருக்கு 10 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை வழங்க முடியும்" எனவும் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61938382

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இலங்கையில் உள்ள நண்பி ஒருவரை தேடி வந்த, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண், இலங்கை நண்பியுடன் சேர்ந்து வாழப் போவதாகவும், அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறியதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

சத்தம் போடாமல் போறத்துக்கு ஏன் பறையடிச்சவை?

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை பெண்களிடமிருந்து காப்பாற்றுவதே பெரும்பாடு......(ஓரிரு நாட்களுக்குமுன்னும் எழுதியதாக ஞாபகம்)......அதிலும் ஒரு பெண் குழந்தையொன்றுக்கு தாயுமானவர்.......!   🤔

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 365 மற்றும் 365A ஆகியவை, 'இயற்கை விதிக்கு மாறான பாலியல் புணர்வு' மற்றும் 'பாரதூரமான இழிசெயல்' ஆகியவற்றினை குற்றமாக வரையறை செய்கிறது என்றும், இந்தப் பிரிவுகளின் கீழ் தன்பால் உறவின் அடிப்படையிலான பாலியல் உறவு குற்றமாகும் என்றும் கூறிய சட்டத்தரணி பஹீஜ்; "இந்தக் குற்றத்தைப் புரிவோருக்கு 10 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை வழங்க முடியும்" எனவும் தெரிவித்தார்.

பிணத்தைப் புணர்ந்தே இன்பம்காணும் சிறீலங்காப் படைகளுக்கு மதிப்பளித்து வைத்திருக்கும் சிங்கள அரசுக்கு இது ஒன்றும் பெரிய விடயமல்ல. 

th?id=OIP.W1xWrurQYDUzyoazM_6PDQAAAA&pid=Api&P=0&w=336&h=176

 

 

Edited by Paanch

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோரன்ன; சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் பெண் ☺️

பத்தொன்பது வயசு 😍

ஒரு குழந்தை 🤗

அவருக்கு கணவர் மூலம் கிடைத்த திருப்தி போதவில்லை ☹️

நல்லகாலம் இலங்கை என்றபடியால் விளக்க மறியல்… தலை தப்பியது 🙄

 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2022 at 19:22, ஏராளன் said:

இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 365 மற்றும் 365A ஆகியவை, 'இயற்கை விதிக்கு மாறான பாலியல் புணர்வு' மற்றும் 'பாரதூரமான இழிசெயல்' ஆகியவற்றினை குற்றமாக வரையறை செய்கிறது என்றும், இந்தப் பிரிவுகளின் கீழ் தன்பால் உறவின் அடிப்படையிலான பாலியல் உறவு குற்றமாகும் என்றும் கூறிய சட்டத்தரணி பஹீஜ்

முஸ்லிம் மத ஷரியாவின் படி இவர்கள் கல்லால் எறிந்து கொல்லபட வேண்டும் அல்லது அடித்து கொல்லபட வேண்டும்.  இலங்கையும் ஒரு மதவாத நாடு அங்கே இப்படி சட்டம் இருப்பது ஆச்சரியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த விடயத்தில் நெகிழ்வு போக்கான நாடு இலஙகை.

மேலே உள்ள சட்ட பிரிவுகள் இராணி விக்டோரியா காலத்தில் ஆங்கிலேயர் அறிமுக செய்தவை என நினைக்கிறேன்.

இந்த சட்டங்கள் புத்தகத்தில் இருந்தாலும் இவற்றை பாவித்து ஓரின சேர்க்கையாளரை துன்பபடுத்துவது அதிகம் இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் எழுதிய என் கருத்து தேவையற்றது என கருதி நீக்கிவிட்டேன்.

மன்னிக்கவும்.

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் திருத்தப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாலின உறவு: முஸ்லிம் நண்பியை நாடிவந்த இந்திய பெண் விடுதலை

spacer.png

பாறுக் ஷிஹான்

ஒரு குழந்தையின் தாயாரான  முஸ்லிம்  பெண் ஒருவரை திருமணம் செய்ய இலங்கைக்கு வருகை தந்த தென்னிந்திய தமிழ்  பெண் விடுதலை செய்யப்பட்டார்.

அந்த வழக்கு  ஜூலை மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கு நீதிவானின் சமாதான அறையில் நேற்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்  இரு பெண்களின்  உளநல மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்பின்னர், முதலாவது சந்தேக நபரான, ஒன்றரை வயது குழந்தையின் தாயான 19 வயது பெண்ணை     ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவித்து பெண்கள் காப்பகமொன்றில் ஒப்படைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார். 

அவரது குழந்தையின் எதிர்கால நலன் மற்றும் குறித்த பெண்ணின் நடத்தைகள் தொடர்பில் அறிக்கை கிடைக்கும் வரை ஒப்படைக்குமாறும் உத்தரவிட்ட நீதவான் வழக்கை, எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

 இரண்டாவது சந்தேக நபரான 24 வயது மதிக்கத்தக்க  தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான   தமிழ் பெண்ணில் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை.

அவர் சார்பில், முன்னிலையான பெண் சட்டத்தரணி , அந்தப் பெண்ணை   இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் ஒப்படைத்து சொந்த இடத்திற்கு மீள  அனுப்புவதற்கு விடுத்த விண்ணப்பத்தை பரீசீலனை செய்தார். அதன்பின்னர்,  இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியை  விடுவித்து அனுமதி வழங்கினார்.

அந்தப் பெண்ணை, பெண்கள் உரிமை தொடர்பான  அமைப்பு, பெண் சட்டத்தரணியுடன் வருகை தந்து  மட்டக்களப்பில் இருந்து வேன் ஒன்றில் அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளும் இவ்வழக்கின், முதலாவது சந்தேக நபரான 19 வயது மதிக்கத்தக்க  முஸ்லிம் பெண்ணின் சார்பாக பிரசன்னமாகி, குழந்தையையும் தாயையும் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியது. 

முஸ்லிம்  பெண்ணின் முறைப்பாட்டாளர்களான  பெற்றோர், கணவன்   சார்பாக சட்டத்தரணிகளான ஏ.எம் ஜெனீர் மற்றும் எம்.ஐ றிஸ்வான் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான தமிழ் பெண்ணிற்கு மட்டக்களப்பில் இருந்து பெண்கள் உரிமைக்கான அமைப்பொன்றின் அணுசரனையில்  பெண் சட்டத்தரணி ஒருவர் ஆஜராகி இருந்தார்.

கடந்த புதன்கிழமை (22) அன்று இவ்விடயம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று நீதிமன்றத்தினால் இரு பெண்களையும் இவ்வாறு உளநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தார்.

இரு பெண்களையும்  கல்முனை ஆதார வைத்தியசாலை மனநலப் பிரிவில் சேர்க்கப்பட்டு  அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இதன் பின்னர் மேற்படி பெண்கள் இருவரும் நீதிமன்றக் கட்டளையின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த திங்கட்கிழமை (20) இந்தியாவிலிருந்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தனது முஸ்லிம்  நண்பியைத்தேடி தமிழ்நாட்டினை சேர்ந்த தமிழ்  பெண் ஒருவர் தேடி வந்துள்துள்ளதுடன்  இருவரும் நண்பிகளாக தொலைபேசி மூலம் உரையாடி வந்துள்ளனர். 

இவ்விரு பெண்களும் தற்போது திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து அக்கரைப்பற்று முஸ்லிம் பெண்ணின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர் 

மேற்படி பெண்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் திருமணம் செய்துள்ள நண்பி ஒருவர் மூலம் தொலைபேசியூடாக தொடர்பினை பேணியுள்ளதுடன் முஸ்லிம் பெண்ணுக்கு  திருமணமாகி ஒன்றரை வயது மகளும் கணவரும் இருக்கின்றார்.

பெண்ணின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி, அவரின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

https://www.tamilmirror.lk/அம்பாறை/ஒர-பலன-உறவ-மஸலம-நணபய-நடவநத-இநதய-பண-வடதல/74-299328

 

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

58 நிமிடங்களுக்கு முன்னர்
 

தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தனது தோழியை திருமணம் முடிப்பதற்காக இலங்கை வந்துள்ள இந்தியப் பெண்ணை, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக, அவரின் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு இன்று (27) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பெண்ணும் அவரின் இலங்கைத் தோழியும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்டனர்.

மூடப்பட்ட அறையில் வைத்து குறித்த வழக்கை விசாரித்த நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா; இலங்கைப் பெண்ணை ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்ததோடு, அடுத்த மாதம் 29ஆம் தேதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பணித்தார். அதுவரை அந்தப் பெண்ணை அவரின் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்குமாறும் உத்தரவிட்டார்.

அதேவேளை இந்தியாவிலிருந்து வந்துள்ள - இலங்கைப் பெண்ணின் தோழியை, இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக அவரின் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் கட்டளையிட்டார்.

இந்தியா, தமிழகம் - குன்னத்தூரிலிருந்து - தனது இலங்கைத் தோழியை திருமணம் செய்யும் நோக்குடன் இலங்கை வந்த 24 வயதுடைய தமிழ் பெண்ணும், இலங்கையைச் சேர்ந்த அவரின் முஸ்லிம் தோழியும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தியப் பெண்ணுடைய இலங்கைத் தோழியின் தந்தை, அக்கரைப்பற்று போலீஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, மேற்படி இரு பெண்களையும் கைது செய்த பொலிஸார், கடந்த 22ஆம் தேதி நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இதன்போது தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக, அந்தப் பெண்கள் இருவரும் நீதிமன்றில் தெரிவித்தார்கள்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து - மனநல மருத்துவ அறிக்கையைப் பெற்று, இன்று 27ஆம் தேதி (இன்று) நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பணித்த நீதவான், அதுவரையில் அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் முதலாவது சந்தேக நபராக இலங்கைப் பெண்ணும், இரண்டாவது சந்தேக நபராக இந்தியப் பெண்ணும் பெயரிடப்பட்டனர்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இலங்கைப் பெண்ணின் தந்தையான முறைப்பாட்டாளரின் சார்பாக சட்டத்தரணிகள் ஏ.எம். ஜெனீர் மற்றும் எம்.ஐ. றிஸ்வான் ஆகியோர் ஆஜராகினர். சந்தேக நபர்களான இரண்டு பெண்களின் சார்பாகவும் சட்டத்தரணி சதுர்திகா ஆஜரானார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பிலுள்ள பெண்கள் அமைப்பொன்று மேற்கொண்டது.

பெண்ணும் பெண்ணும் திருமணம் முடிப்பது குறித்து நீதிமன்றத்தில் விளக்கம்

இன்றைய வழக்கு விசாரணையின் போது; இலங்கையில் பெண்ணும் பெண்ணும் திருமணம் முடிப்பது குற்றம் என, சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை எனும் விடயம் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அதேவேளை அவ்வாறான திருமணத்துக்குரிய சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் இல்லை என்பது பற்றி குறிப்பிடப்பட்டதாகவும், வழக்கில் ஆஜரான சட்டத்தரணியொருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

 

இலங்கை: தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

"அதேவேளை இலங்கை வந்துள்ள இந்தியப் பெண், இலங்கையின் குடிவரவு - குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் எவ்வித குற்றமும் மேற்கொள்ளவில்லை எனும் விடயம் - வழக்கு விசாரணையின் போது சுட்டிக்காட்டப்பட்டது". எனவும் சட்டத்தரணி கூறினார்.

"இந்தக் காரணங்களை முன்னிறுத்தி, இந்தியப் பெண்ணை இந்த வழக்கிலிருந்து நீதவான் விடுவித்ததோடு, சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைவாக, குறித்த பெண்ணை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக, அவரின் நாட்டுக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்" எனவும் அந்த சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதற்கிணங்க வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்தியப் பெண்ணை அவருக்காக ஆஜரான சட்டத்தரணி மற்றும் மட்டக்களப்பிலுள்ள பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் அழைத்துச் சென்றனர்.

இதேவேளை, வழக்கின் முதலாவது சந்தேக நபரான இலங்கைப் பெண்ணை ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்த நீதிமன்றம், எதிர்வரும் 29ஆம் தேதி - அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. அதுவரையில் அந்தப் பெண்ணை அவரின் குழந்தையுடன் பெண்கள் காப்பகமொன்றில் பாதுகாப்பாக வைக்குமாறும் நீதவான் கட்டளையிட்டார்.

இதேவேளை இன்று நீதிமன்றில் ஆஜரான சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், இலங்கைப் பெண்ணினுடைய குழந்தையின் எதிர்காலம் குறித்து, நீதவானிடம் கோரிக்கையொன்றை முன்வைத்ததாகவும் அறிய முடிகிறது.

இலங்கையின் குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் நபரொருவர் தனது பராமரிப்பிலுள்ள குழந்தையொன்றைப் பிரிந்து வெளிநாடு செல்வது குற்றம் என்பதால், சந்தேக நபரான இலங்கைப் பெண், அவரின் குழந்தையை தொடர்ந்தும் பராமரிக்க வேண்டும் என இன்று நீதிமன்றில் வலியுறுத்தப்பட்டதாகவும் வழக்கில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இலங்கைப் பெண்ணின் கணவர், தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்களும் இன்று நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தனர்.

 

தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

வழக்கின் பின்னணி

இந்தியா குன்னத்தூரைச் சேர்ந்த 24 வயதுடைய தமிழ் பெண்ணொருவர், கடந்த 20ஆம் தேதி, இலங்கை - அக்கரைப்பற்றிலுள்ள தனது முஸ்லிம் தோழியின் (வயது 19) வீட்டுக்குக்கு வந்திருந்தார்.

இவர்கள் சில காலமாக தொலைபேசி மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் பேசிப் பழகி வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்யத் தீர்மானித்தனர்.

இந்த நிலையில் இலங்கை வந்த இந்தியப் பெண், தனது தோழியை இந்தியா அழைத்துச் சென்று திருமணம் செய்யவுள்ளதாகக் கூறியதோடு, அதற்கு மறுத்தால் தான் தற்கொலை செய்யப் போவதாக தங்களை மிரட்டியதாக இலங்கைப் பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக இலங்கைப் பெண்ணின் தந்தை, இவ்விடயம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரையும் கைது செய்த பொலிஸார், அவர்களை கடந்த 22ஆம் தேதி அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இதன்போது குறித்த பெண்கள் இருவரையும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநல வைத்தியரிடம் காண்பித்து, மருத்துவ அறிக்கையைப் பெற்று, அதனை 27 ஆம் தேதி (இன்று) சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதுவரை அவர்கள் இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறும் இதன்போது நீதவான் கட்டளையிட்டிருந்தார்.

மனநல மருத்துவ அறிக்கை என்ன கூறுகிறது?

நீதிமன்ற உத்தரவுக்கிணங்க மேற்படி பெண்கள் இருவரும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மனநல மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து வழங்கப்பட்ட வைத்திய அறிக்கையில், சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரும் எவ்வித உள நோய்க்கும் ஆளாகவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது.

தன்பாலின உறவு என்பது - ஓர் உளநோய் அல்ல என்று, மனநல மருத்துவர் யூ.எல். சறாப்டீன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61963619

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு வயதில் விதவையான ஒரு பாட்டி எங்கள் அருகாமையில் வாழ்ந்தார்கள். அக்கொடுமையையெல்லாம் நம் சமூகம் கடந்து வர எத்தனையோ காலம் ஆனது. அதுபோல் இதுவும் கடந்து போம். ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும் - Robert Frost ன் வரிகளைச் சுட்டு இவ்வாறு சொல்லத் தோன்றுகிறது:

Miles to go before you sleep

And miles to go before you sleep with the gender you like. 

அடிக்கோடிட்ட பகுதி அடியேன் சேர்த்தது.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2022 at 15:09, சுப.சோமசுந்தரம் said:

அக்கொடுமையையெல்லாம் நம் சமூகம் கடந்து வர எத்தனையோ காலம் ஆனது.

இந்த சுவிட்சலண்டில் கூட இவர்கள் திருமணம் செய்வதற்கு கடந்த வருடம் ஏற்று கொள்ளபட்டு இப்போது தான் நடை முறைக்கு வந்துள்ளதாம். எனது உறவினருடன் பேசிய போது சொன்னார் 64 வீதம் மக்கள் வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அங்கே குடியேறிய இலங்கை தமிழர்களிடம்  வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் 10 வீதத்திற்கும் குறைவான ஆதரவு தான்  கிடைத்திருக்குமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்மை அங்கீகாரம் செய்யும்படி, தாம் இலண்டணில் பேராட்டம் நடத்தி ஜம்பது வருட நிறைவை ஒட்டி, யூலை மாதம், தாத்தாவும், தாத்தாவும், பாட்டியும் பாட்டியுமாக வந்திருந்தனர். தாத்தா எனது கணவர் என்று தாத்தாவையும், பாட்டி எனது மணைவி என்று பாட்டியையும் காட்டி அக மகிழ்தனர்.

அன்று கேலியும், கிண்டலும் அதிகமாக இருந்ததாகவும், போலீசார் தம்மை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்ததாகவும், இன்று சட்டம் ஏற்றுக்கொள்வதாகவும், சமூகம் முற்றாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், கேலி செய்வதில்லை என்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீரடித்து நீர் விலகாது. அதுபோல் ஒருபாலின உறவையும் சட்டத்தினால் பிரிக்க முடியாது. பிரிக்க முயன்றாலும் அது நாலு சுவர்களுக்குள் ஒட்டிக்கொண்டு விடுவது பலருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

இது என் கருத்து என்றாலும், "ஊருக்கடி உபதேசம் உனக்கல்லடி பெண்ணே" என்ற மொழியை ஒட்டியே இங்கு பதியப்படுகிறது.😆 

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்த ஊரில் நடந்து இருக்கு நமக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்திருக்கு🤭🤭🤭

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பக்கத்த ஊரில் நடந்து இருக்கு நமக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்திருக்கு🤭🤭🤭

இந்தக் கண்றாவியை தெரியாமல் இருக்கிறதே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2022 at 02:36, தனிக்காட்டு ராஜா said:

பக்கத்த ஊரில் நடந்து இருக்கு நமக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்திருக்கு🤭🤭🤭

ஒரு எட்டு போய் பார்த்து விட்டு பெருமூச்சு விட்டுக்கொண்டு வந்திருக்கலாம் என்று நினைக்கிறீங்களா தனி........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2022 at 14:09, சுப.சோமசுந்தரம் said:

ஆறு வயதில் விதவையான ஒரு பாட்டி எங்கள் அருகாமையில் வாழ்ந்தார்கள். அக்கொடுமையையெல்லாம் நம் சமூகம் கடந்து வர எத்தனையோ காலம் ஆனது. அதுபோல் இதுவும் கடந்து போம். ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும் - Robert Frost ன் வரிகளைச் சுட்டு இவ்வாறு சொல்லத் தோன்றுகிறது:

Miles to go before you sleep

And miles to go before you sleep with the gender you like. 

அடிக்கோடிட்ட பகுதி அடியேன் சேர்த்தது.

அருமையான கருத்து ஐயா.

ஆராயிரம், எட்டாயிரம், பத்தாயிரத்துக்கும் அதிகமான மைல்கள் தாண்டி புலம் பெயார் தேசம் வந்து, முற்போக்கு சமூகத்தில் பல  காலம் வாழ்ந்தாலும் எம்மில் பலர் இன்னும் miles to goதான். இதை புரிந்து கொள்வதிலும் அங்கீகரிப்பதிலும்.

ஆனால் அடுத்தசந்ததி அப்படி இராது.

On 4/7/2022 at 00:48, விளங்க நினைப்பவன் said:

ஆனால் அங்கே குடியேறிய இலங்கை தமிழர்களிடம்  வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் 10 வீதத்திற்கும் குறைவான ஆதரவு தான்  கிடைத்திருக்குமாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2022 at 02:14, Nathamuni said:

தம்மை அங்கீகாரம் செய்யும்படி, தாம் இலண்டணில் பேராட்டம் நடத்தி ஜம்பது வருட நிறைவை ஒட்டி, யூலை மாதம், தாத்தாவும், தாத்தாவும், பாட்டியும் பாட்டியுமாக வந்திருந்தனர். தாத்தா எனது கணவர் என்று தாத்தாவையும், பாட்டி எனது மணைவி என்று பாட்டியையும் காட்டி அக மகிழ்தனர்.

அன்று கேலியும், கிண்டலும் அதிகமாக இருந்ததாகவும், போலீசார் தம்மை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்ததாகவும், இன்று சட்டம் ஏற்றுக்கொள்வதாகவும், சமூகம் முற்றாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், கேலி செய்வதில்லை என்றார்கள்.

அலன் டூரிங் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள்.

ஒரு கம்யூட்டர் முன்னோடி, ஜீனியஸ்.

உலகபோரின் போக்கை தனியாளாக மாற்றிய ஒரிருவரில் ஒருவர்.

லோர்ட், சேர்…இந்த நாட்டின் அத்தனை பெருமைக்கும் தகுதியான நபர்.

தன்னின சேர்க்கையளர் என்பதால், வழக்கு போட்டு, குற்றம் தீர்த்து, ஹார்மோர்ன் சிகிச்சை கொடுத்து, அவரின் உடலில் ஈஸ்டிரஜனை கூட்டி, பெண்மையாக்கி சித்திரவதை செய்தார்கள்.

அரச புலனாய்வுக்கு வேலை செய்யும் செக்யூரிட்டி கிளியரன்சையும் பறித்து - வெறும் 41 வயதில் சயனைட் அருந்தி தற்கொலை செய்ய தூண்டினார்கள்.

https://en.m.wikipedia.org/wiki/Alan_Turing

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2022 at 03:11, விளங்க நினைப்பவன் said:

முஸ்லிம் மத ஷரியாவின் படி இவர்கள் கல்லால் எறிந்து கொல்லபட வேண்டும் அல்லது அடித்து கொல்லபட வேண்டும்.  இலங்கையும் ஒரு மதவாத நாடு அங்கே இப்படி சட்டம் இருப்பது ஆச்சரியமில்லை.

அப்படி என்றால் அன்றாட கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அப்பாவி மக்களை அல்லாஹ்வின் பெயரால் கொன்று குவித்துவிட்டு அதெல்லாம் அமெரிக்க யூத சதி என்று அள்ளி விடுபவர்களை  எதனால் அடித்து கொல்ல வேண்டும் ஐயா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.