Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டடம் திறப்பு : மாணவர்கள் எதிர்ப்பு போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

By VISHNU

18 AUG, 2022 | 09:19 PM

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டம் இன்று (18) திறந்து வைக்கப்பட்டது.

IMG_20220818_121054.jpg

குறித்த நேரத்திலேயே ஆர்ப்பாட்டம் முன்னேடுக்கப்பட்டது. கட்டிடமானது முழுமையாக பூரணமடையாத நிலையில், இது ஒரு அரசியல் நோக்கத்திற்காக திறந்துவைக்கப்படுவதாக தெரிவித்து பல்கழைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG_20220818_113028.jpg

தொழில்நுட்ப பீட கட்டிடம் திறந்துவைக்கப்படும் நிலையில் அங்கு சென்ற மாணவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், வெளியை வந்த மாணவர்கள்  நிகழ்வு நடைபெறும் கட்டத்ததொகுயின் அருகே கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

IMG_20220818_120534.jpg

இதன் போது மாணவர்கள் கூறுகையில், பல்கலைகழக வளாகத்திற்குள் அரசியல் தலையிடுகள் இடம்பெறக்கூடாது.  பல்கலைக்கழகத்தின் கட்டடத்தொகுதிவேலைகள் நிறைவடையாமலே அவசர அவசரமாக திறக்கப்பட்டதை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னேடுக்கப்பட்டது எனவும் கூறினர்.

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டடம் திறப்பு : மாணவர்கள் எதிர்ப்பு போராட்டம்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி வளாக புதிய கட்டட திறப்பும் ஆர்ப்பாட்டமும் – முரண்பாடும்!

August 19, 2022

spacer.png

தொழில்நுட்ப பீட ஆர்ப்பாட்டத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்கிறது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொழில்நுட்ப பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல் எனும் தலைப்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இன்று (18) யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தின் கட்டடத்திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த குழுவினருக்கு எதிராக அங்கு கல்வி கற்கும் குறிப்பிட்ட ஒரு சில மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் தொழில்நுட்ப பீட மாணவர் ஒன்றியத்திற்கும் எந்தவித தகவல்களும் அவ் மாணவர்களினால் தெரியப்படுத்தாத நிலையிலே இவ் ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட சிலரது அரசியல் சுயலாபத்திற்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டமாகவே இது காணப்படுகின்றது. நடந்த இப் போராட்டத்திற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதனை இங்கே உறுதியாகக் கூறிக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்ட மாணவர்களினால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அவர்கள் முன்வைத்த கோரிக்கையானது மாணவர் ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அக்கோரிக்கையானது நியாயமானதாக இருந்தால் கண்டிப்பாக அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இவ்வாறான தவறுகள் எதிர்வரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் தீர்க்கமாக கூறிக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

spacer.png

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டடம் நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா , பீடாதிபதிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , கல்வி அமைச்சின் செயலாளர் M.N.ரணசிங்க, மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளதாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

spacer.png

எனினும், கல்வி அமைச்சர் திறப்பு விழாவுக்கு வருகை தராத நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டடத்தை திறந்து வைத்தார்.

இதனையடுத்து, கட்டட திறப்பு விழா நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தொழில்நுட்ப பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி பல்கலைக்கழக வீதியிலிருந்து பேரணியாக சென்ற மாணவர்கள், நிகழ்வு நடைபெறும் தொழில்நுட்ப வளாகத்திற்குள் நுழைய முயற்சித்த போது, நுழைவாயிலிலிருந்த பாதுகாவலர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இதனையடுத்து, தொழில்நுட்ப வளாகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

பீடத்தின் செயற்பாடுகளை முழுமையாக பூர்த்தி செய்யாமல் திறந்து வைக்கப்படுவதாகவும், கல்வி செயற்பாடுகளுடன் தொடர்புடைய எவரேனும் கட்டடத்தை திறந்தால் தமக்கு பிரச்சினை இல்லை எனவும் அரசியல்வாதி ஒருவரை திறக்க வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் மாணவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் நிகழ்வை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேற முயற்சித்த போதிலும் மாணவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை.

கல்வி அமைச்சின் செயலாளரிடம் மாணவர்கள் தமது மகஜரை கையளித்தனர்.

இதனிடையே, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மாவட்ட அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இதனையடுத்து, திறப்பு விழாவில் கலந்துகொள்ளாமைக்கான காரணம் தொடர்பில் கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

தாமதமாக வருகை தந்ததாகவும் வட மாகாண அமைச்சர் ஒருவர் இருக்கும் நிலையில், தாம் திறந்து வைக்க வேண்டியதில்லை எனவும் அவர் பதிலளித்தார்.

https://globaltamilnews.net/2022/179876/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கல்வி அமைச்சர் திறப்பு விழாவுக்கு வருகை தராத நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டடத்தை திறந்து வைத்தார்.

3 hours ago, கிருபன் said:

பீடத்தின் செயற்பாடுகளை முழுமையாக பூர்த்தி செய்யாமல் திறந்து வைக்கப்படுவதாகவும், கல்வி செயற்பாடுகளுடன் தொடர்புடைய எவரேனும் கட்டடத்தை திறந்தால் தமக்கு பிரச்சினை இல்லை எனவும் அரசியல்வாதி ஒருவரை திறக்க வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் மாணவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

நான் நினைச்சேன் பிரச்சினை இங்குதானென்று. அது சரியாய்ப்போச்சு!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் .திறந்த பல்கலைக்கழகத்தின்... புதிய கட்டடத் தொகுதி, திறந்து வைக்கப்பட்டது!

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணம் பிராந்திய கற்கை நிலையத்தின் புதிய கட்டடத்தொகுதி திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இக்கட்டடத் தொகுதியை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10மணியளவில் திறந்து வைத்ததுடன் நினைவுக்கல்லையும் திரைநீக்கம் செய்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், கல்வி அமைச்சின் செயலாளர்.

எம்.என்.ரணசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இலங்கை திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பீ.எம்.சீ. திலகரத்ன, திறந்த பல்கலைக்கழக யாழ் பிராந்திய பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், விரிவுரையாளர்களும் மாணவர்களும் உடனிருந்தனர்.

https://athavannews.com/2022/1295411

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இக்கட்டடத் தொகுதியை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10மணியளவில் திறந்து வைத்ததுடன் நினைவுக்கல்லையும் திரைநீக்கம் செய்தார்.

அப்போ தாடியர் எதுக்கு பட்டி வெட்டுறார்? தான் திறந்ததாக படம் காட்டுவதற்கோ? ஏன் ஏராளன்! ஒரு பழைய படத்தில் நடிகரின் பெயரை மறந்துவிட்டேன், தானே மாலையை வாங்கிக்கொண்டு வந்து தனக்கு சபையில் மாலை விழுந்ததாக மனைவியிடம் கதைவிடுவாரே! இணைத்து விடுங்களேன். 

44 minutes ago, தமிழ் சிறி said:

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன்,

இவர்களுக்கு இங்கு என்ன வேலை? காவலுக்கென்று நியமிக்கப்பட்டதுகள் எஜமான் போகிற இடமெல்லாம் போகவேண்டியது கடன். யாரும்  கவனித்தீர்களா? ஒரு பெண் தாடியருக்கு பொட்டு வைத்தபின் மறு பெண்ணை தட்டி தனக்கு வைக்கும்படி சைகை காட்டுகிறார். இதுதான் இவரது பிழைப்பு! அழையாவிட்டாலும் நுழைந்து படத்துக்கு  முகத்தை காட்டுவது.

45 minutes ago, தமிழ் சிறி said:

எம்.என்.ரணசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இலங்கை திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பீ.எம்.சீ. திலகரத்ன, திறந்த பல்கலைக்கழக யாழ் பிராந்திய பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், விரிவுரையாளர்களும் மாணவர்களும் உடனிருந்தனர்.

இவர்கள் உடனிருப்பது நிஞாயமானதே.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

அப்போ தாடியர் எதுக்கு பட்டி வெட்டுறார்? தான் திறந்ததாக படம் காட்டுவதற்கோ? ஏன் ஏராளன்! ஒரு பழைய படத்தில் நடிகரின் பெயரை மறந்துவிட்டேன், தானே மாலையை வாங்கிக்கொண்டு வந்து தனக்கு சபையில் மாலை விழுந்ததாக மனைவியிடம் கதைவிடுவாரே! இணைத்து விடுங்களேன். 

இவர்களுக்கு இங்கு என்ன வேலை? காவலுக்கென்று நியமிக்கப்பட்டதுகள் எஜமான் போகிற இடமெல்லாம் போகவேண்டியது கடன். யாரும்  கவனித்தீர்களா? ஒரு பெண் தாடியருக்கு பொட்டு வைத்தபின் மறு பெண்ணை தட்டி தனக்கு வைக்கும்படி சைகை காட்டுகிறார். இதுதான் இவரது பிழைப்பு! அழையாவிட்டாலும் நுழைந்து படத்துக்கு  முகத்தை காட்டுவது.

இவர்கள் உடனிருப்பது நிஞாயமானதே.

மே  9, சிங்களப் பகுதிகளில்... சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களின் 
வீடுகள் எரிக்கப் பட்ட போது, தமிழ்ப் பகுதிகள் அமைதியாக இருந்தது.

இரண்டு நாள் கழித்து... அங்கஜன், தனது காரியாலயத்தின் வெளியில் இருந்த 
சில பதாகைகளை எரித்து விட்டு அனுதாபம் தேட முயன்ற குள்ள நரி. 
அதை... இவரின் ஆட்கள்தான் செய்தது என்று, பொது மக்கள் கண்டு பிடித்தது பெரிய பகிடி. 

கொஞ்ச நாள்... நாமலுடன் சுத்திக்கு கொண்டு திரிந்தவர்,
இப்ப இடைவேளை விட்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

t-s-balaiah-32572bfe-73ca-45d5-b750-7443c43a90e-resize-750.jpeg

அடேங்கப்பா, எல்லாம் கோட், டை கட்டி நிற்குதுகள்..!

நான்கூட இங்கிலாந்தில் திறப்பு விழா என நினைத்துவிட்டேன் சாமி.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியகீதம் சிங்களத்தில் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அப்போ தாடியர் எதுக்கு பட்டி வெட்டுறார்? தான் திறந்ததாக படம் காட்டுவதற்கோ? ஏன் ஏராளன்!

எவர் புதிய கட்டடத்தைத் திறந்தாலும் காலம் காலமாக அவர்களின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ராசவன்னியன் said:

அடேங்கப்பா, எல்லாம் கோட், டை கட்டி நிற்குதுகள்..!

நான்கூட இங்கிலாந்தில் திறப்பு விழா என நினைத்துவிட்டேன் சாமி.

எரிச்சல்....எரிச்சல்..... 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

தேசியகீதம் சிங்களத்தில் தான். 

இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்

ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி..

இதற்கு என்ன அர்த்தம்னேன்..? 😉

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

t-s-balaiah-32572bfe-73ca-45d5-b750-7443c43a90e-resize-750.jpeg

அடேங்கப்பா, எல்லாம் கோட், டை கட்டி நிற்குதுகள்..!

நான்கூட இங்கிலாந்தில் திறப்பு விழா என நினைத்துவிட்டேன் சாமி.

நாலு எழுத்து படித்தவர்கள், அப்படித்தான் நிற்பார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ராசவன்னியன் said:

இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்

ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி..

இதற்கு என்ன அர்த்தம்னேன்..? 😉

ஈழம் என்றால் மொத்த தீவும் (இலங்கை) - தமிழர் பாரம்பரிய வாழிடம் தமிழ் ஈழம்.

ஆனால் அதுக்கு மேல் வரியில் பிளவுகளை நீக்கிடுவோம் எண்டு பாடுறாங்கள் பாருங்க்கோ அதுக்குத்தான் எனக்கு 74 வருசமா அர்த்தம் விளங்கேல்ல🤣.

26 minutes ago, தமிழ் சிறி said:

நாலு எழுத்து படித்தவர்கள், அப்படித்தான் நிற்பார்கள். 😂

அப்ப படத்தில வெள்ளை வேட்டியோட நிக்கிற படியாதவர் தங்கம் எண்டுறியளா🤣.

பிகு

சும்மா படித்தவர்கள் அல்ல, ஓசி பிஸ்கோத்துக்காக படித்தவர்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அப்ப படத்தில வெள்ளை வேட்டியோட நிக்கிற படியாதவர் தங்கம் எண்டுறியளா🤣.

டக்ளஸ் தேவானந்தா… மழைக்கு கூட பள்ளிக்கூட பக்கம் போகேல்லை தானே… 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, goshan_che said:

அப்ப படத்தில வெள்ளை வேட்டியோட நிக்கிற படியாதவர் தங்கம் எண்டுறியளா🤣.

1 minute ago, தமிழ் சிறி said:

டக்ளஸ் தேவானந்தா… மழைக்கு கூட பள்ளிக்கூட பக்கம் போகேல்லை தானே… 😜

இவையள் ஊருக்கு போற பிளான் துண்டற இல்லை 😂

இவையள் ஊருக்கு போற பிளான் துண்டற இல்லை 😛

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இவையள் ஊருக்கு போற பிளான் துண்டற இல்லை 😂

இவையள் ஊருக்கு போற பிளான் துண்டற இல்லை 😛

ஐயையோ….

யாரங்ஜே! அந்த அழிப்பு விசையை (delete button) ஐ அமுக்கி விடுங்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இவையள் ஊருக்கு போற பிளான் துண்டற இல்லை 😂

1 hour ago, goshan_che said:

ஐயையோ….

யாரங்ஜே! அந்த அழிப்பு விசையை (delete button) ஐ அமுக்கி விடுங்கள்🤣.

6AB6E6E8-D3D4-4E15-A42F-D1C9EA19E7A1.thumb.jpeg.304e35f01e559ebee7228602fcec1875.jpeg

நாங்கள்  @கிருபன் ஜீ மாதிரி, மாறு வேசத்திலை போயிட்டு வருவமே... 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

6AB6E6E8-D3D4-4E15-A42F-D1C9EA19E7A1.thumb.jpeg.304e35f01e559ebee7228602fcec1875.jpeg

நாங்கள்  @கிருபன் ஜீ மாதிரி, மாறு வேசத்திலை போயிட்டு வருவமே... 😂 🤣

சும்மா இல்லை. கறுப்பு மோசமான சக்தி. பகிடியள் வேண்டாம் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

அடேங்கப்பா, எல்லாம் கோட், டை கட்டி நிற்குதுகள்..!

நான்கூட இங்கிலாந்தில் திறப்பு விழா என நினைத்துவிட்டேன் சாமி.

அங்கே வெப்பம் அதிகம் தானே அது தான் கோட் ரை எல்லாம் கட்டி கொண்டு நிற்கிறார்கள்  
நீங்கள் நேரில் பார்க்க வேண்டும் நல்ல வெப்பத்துக்கு ரை கட்டி கொண்டு நிற்க்கின்ற மாணவர்களையும் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் கட்டாந்தரையாகக் கிடந்த நிலத்தில் ஒரு அறிவியல் நகரை உருவாக்கிய பெருமை விடுதலைப் புலிகளைச் சாரும்.

தமிழர் பகுதிகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை பல்கலைக்கழக மட்டத்தில் கற்க வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு வந்த நிலையில்.. புலிகள் தான் அதனை முதலில் சாத்தியப்படுத்திக் காட்டினார்கள். 

அந்த வகையில் தமிழர் பிரதேசத்தின் இந்த கல்விசார் முன்னேற்றத்தில் புலிகளும் அத்திவாரக் கல்லாக இருப்பது பெருமை. 

இதில் தாடியர் தன்ர பெயரைப் போட்டு பலகை திறப்பதால்.. அவர் இதை திறந்து வைப்பதற்கான தகுதியுடையவர் ஆக முடியாது. கூடிக் கூத்தடிச்சிட்டு மட்டும் போகலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

சும்மா படித்தவர்கள் அல்ல, ஓசி பிஸ்கோத்துக்காக படித்தவர்கள் 🤣

இலங்கையில் விலைவாசிகள் உயர்வு மோசமடைந்துவருகிறதாம் இந்த நிலையில் ஓசி விசுகோத்து படிப்பை இலங்கை மக்கள்  எப்படி கைவிட முடியும். வெளிநாட்டுவந்தவர்களின் பிள்ளைகளும் ஓசி படிப்பு தானே படிக்கிறார்கள் ஓசி படிப்பு என்று பெயர் வந்துவிடக் கூடாது  என்பதிற்காகவோ என்னவோ கட்டாயமாக ஒரு தமிழ் ரியுசன் மாஸ்டரையும் அமர்த்தி பணம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் நகர் (Ariviyal Nagar) இலங்கையின் வட மாகாணத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும். இந்நகரம் 2000 ஆம் ஆண்டளவில் சு. ப. தமிழ்ச்செல்வன், சுஜந்தன், பூவண்ணன், தமிழேந்தி ,கருணாரத்தினம் அடிகள் ஆகியோரால் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது.[சான்று தேவை]

இந்த ஊர் பொன்னகர் என்ற ஊருக்கும் ஏ9 வீதிக்கும் இடையில் முறிகண்டிக்கும் 55-ஆம் கட்டை கிளிநொச்சிக்கும் இடையில் அமைந்துள்ளது. அறிவியல் நகர் தொடருந்து நிலையம் 2019 மார்ச் 14 இல் திறக்கப்பட்டது.[1]

https://ta.wikipedia.org/wiki/அறிவியல்_நகர்

tro0804_02.jpg

Training school exhibition held in Ariviyal Nagar

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=15565

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் விலைவாசிகள் உயர்வு மோசமடைந்துவருகிறதாம் இந்த நிலையில் ஓசி விசுகோத்து படிப்பை இலங்கை மக்கள்  எப்படி கைவிட முடியும். வெளிநாட்டுவந்தவர்களின் பிள்ளைகளும் ஓசி படிப்பு தானே படிக்கிறார்கள் ஓசி படிப்பு என்று பெயர் வந்துவிடக் கூடாது  திற்காகவோ என்னவோ கட்டாயமாக ஒரு தமிழ் ரியுசன் மாஸ்டரையும் அமர்த்தி பணம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.

இங்கு எல்லாரும் பள்ளிகூடம் கொடுத்த ஓசி பிஸ்கெட்டை சாப்பிட்டவர்கள்தான்.

சிலர் ஓசி பிஸ்கெட்டை சாப்பிட்டு விட்டு படிக்கவும் செய்தார்கள், சிலர் ஓசி பிஸ்கெட்டை மட்டும் சாப்பிட்டதோட சரி 🤣

பிகு

போசாக்கு, விட்டமின்கள் சேர்த்து இந்த பிஸ்கெட் வழங்கப்பட்டது. மிகவும் கஸ்ட ஜீவனத்தில் இருந்த பல குடும்பத்து பிள்ளைகளுக்கு சத்துணவு கிடைத்த ஒரே வழியாக இது இருந்தது.

அப்போதும் இதை ஏளனமாக பார்த்து, நாங்கள் பிஸ்கெட் சாப்பிடுவதில்லை என்று சிலர் வகுப்பில் தடிப்பை காட்டுவார்கள்.

அவர்கள் பிஸ்கெட்டையும் சேர்த்து மிச்சம் எல்லாரும் சாப்பிடுவோம்🤣.

யூ எஸ் எயிட் மூலம் அமெரிக்க அரசு கொடுத்த தானம் அது. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

வெறும் கட்டாந்தரையாகக் கிடந்த நிலத்தில் ஒரு அறிவியல் நகரை உருவாக்கிய பெருமை விடுதலைப் புலிகளைச் சாரும்.

தமிழர் பகுதிகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை பல்கலைக்கழக மட்டத்தில் கற்க வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு வந்த நிலையில்.. புலிகள் தான் அதனை முதலில் சாத்தியப்படுத்திக் காட்டினார்கள். 

அந்த வகையில் தமிழர் பிரதேசத்தின் இந்த கல்விசார் முன்னேற்றத்தில் புலிகளும் அத்திவாரக் கல்லாக இருப்பது பெருமை. 

இதில் தாடியர் தன்ர பெயரைப் போட்டு பலகை திறப்பதால்.. அவர் இதை திறந்து வைப்பதற்கான தகுதியுடையவர் ஆக முடியாது. கூடிக் கூத்தடிச்சிட்டு மட்டும் போகலாம். 

சரியான நேரத்தில், சரியான விடயத்தை நினவுபடுத்தினீர்கள்.

இலண்டன் டீ ஆர் டெக் மூலம் ஒரு பெரும் கணனி வளாகமும் இதில் அமைகப்பட்டது சமாதான காலத்தில் என நினைக்கிறேன்.

பகலவன் அண்ணாவுக்கு தெரிந்திருக்கும்.

இந்த இடத்தை யாழ் பல்கலையின் பொறியியல் பீடமாக்கும் எண்ணம் பேராசிரியர்கள் கைலாசபதி, வித்தியானந்தன் காலத்திலேயே வரைபில் இருந்தது என அறிகிறேன்.

ஆனால் அதை செயலாக்கியோர் புலிகளே.

டுபாய் போனோருக்கு தெரிந்திருக்கும், IT city, health city என்று ஒவ்வொரு பகுதியாக பிரித்து வைத்திருப்பார்கள். அதே அணுகுமுறை கையாண்டார்கள் புலிகள்.

19 minutes ago, nedukkalapoovan said:

அறிவியல் நகர் (Ariviyal Nagar) இலங்கையின் வட மாகாணத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும். இந்நகரம் 2000 ஆம் ஆண்டளவில் சு. ப. தமிழ்ச்செல்வன், சுஜந்தன், பூவண்ணன், தமிழேந்தி ,கருணாரத்தினம் அடிகள் ஆகியோரால் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது.[சான்று தேவை]

இந்த ஊர் பொன்னகர் என்ற ஊருக்கும் ஏ9 வீதிக்கும் இடையில் முறிகண்டிக்கும் 55-ஆம் கட்டை கிளிநொச்சிக்கும் இடையில் அமைந்துள்ளது. அறிவியல் நகர் தொடருந்து நிலையம் 2019 மார்ச் 14 இல் திறக்கப்பட்டது.[1]

https://ta.wikipedia.org/wiki/அறிவியல்_நகர்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.

இங்கு எல்லாரும் பள்ளிகூடம் கொடுத்த ஓசி பிஸ்கெட்டை சாப்பிட்டவர்கள்தான்.

சிலர் ஓசி பிஸ்கெட்டை சாப்பிட்டு விட்டு படிக்கவும் செய்தார்கள், சிலர் ஓசி பிஸ்கெட்டை மட்டும் சாப்பிட்டதோட சரி 🤣

பிகு

போசாக்கு, விட்டமின்கள் சேர்த்து இந்த பிஸ்கெட் வழங்கப்பட்டது. மிகவும் கஸ்ட ஜீவனத்தில் இருந்த பல குடும்பத்து பிள்ளைகளுக்கு சத்துணவு கிடைத்த ஒரே வழியாக இது இருந்தது.

அப்போதும் இதை ஏளனமாக பார்த்து, நாங்கள் பிஸ்கெட் சாப்பிடுவதில்லை என்று சிலர் வகுப்பில் தடிப்பை காட்டுவார்கள்.

அவர்கள் பிஸ்கெட்டையும் சேர்த்து மிச்சம் எல்லாரும் சாப்பிடுவோம்🤣.

யூ எஸ் எயிட் மூலம் அமெரிக்க அரசு கொடுத்த தானம் அது. 

தகவல்களுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.