Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வங்கிக் கணக்கில் தவறாக வந்த ரூ.56 கோடியை ஆடம்பரமாகச் செலவழித்த பெண்ணின் இன்றைய நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வங்கிக் கணக்கில் தவறாக வந்த ரூ.56 கோடியை ஆடம்பரமாகச் செலவழித்த பெண்ணின் இன்றைய நிலை

9 நிமிடங்களுக்கு முன்னர்
 
பணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேவமனோகரி மணிவேலின் வங்கிக் கணக்கில் 70 லடசம் டாலர் வந்தபோது, தன்னை உலகத்தின் பெரிய அதிருஷ்டசாலி என்று அவர் நினைத்தார். ஆனால் தற்போது அவரும் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலரும் பிரச்சனையில் உள்ளனர்.

இந்த விவகாரத்தில் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தவிர அவர்கள் இதற்கு வட்டி மற்றும் சட்ட நடவடிக்கை கட்டணங்களையும் செலுத்த வேண்டும்

2021 மே மாதம் Crypto.com, நிலுவையில் இருந்த நூறு ஆஸ்திரேலிய டாலர்களை தேவ மனோகரியின் கணக்கில் போட பணப் பரிவர்த்தனை செய்தபோது இந்த விவகாரம் தொடங்கியது.

ஆனால் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் தேவ மனோகரிக்கு 100 டாலர்களுக்கு பதிலாக 104,74,143 ஆஸ்திரேலிய டாலர்கள் (சுமார் 70 லட்சம் அமெரிக்க டாலர்கள்) வந்தது. பரிவர்த்தனை செய்த நபரின் தவறு இது என்றும் தொகையை எங்கே போட வேண்டுமோ அதற்கு பதிலாக தேவமனோகரியின் கணக்கு எண்ணை அவர் உள்ளீடு செய்துவிட்டார் என்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

பணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு நொடியில் கோடீஸ்வரியானார்

தேவ மனோகரி ஒரு நொடியில் கோடீஸ்வரராகிவிட்டார். இந்தப் பணத்தை நிர்வகிக்க அவருக்கு நேரத்திற்கும் பஞ்சமில்லை. அடுத்த சில மாதங்களில் இவர் தனது கணக்கில் இருந்த பணத்தின் பெரும் பகுதியை தனது நண்பருடனான கூட்டுக்கணக்கிற்கு மாற்றிவிட்டார்.

அந்த நண்பர் தனது மகளின் கணக்கிற்கு சுமார் மூன்று லட்சம் டாலர்களை மாற்றினார். மெல்போர்னுக்கு வடக்கே ஒரு வீட்டையும் தேவமனோகரி வாங்கினார். மலேஷியாவில் வசிக்கும் தனது சகோதரி திலகவதி கங்காதரி பெயரில் இந்த வீட்டை அவர் வாங்கியுள்ளார்.

நான்கு அறைகள், நான்கு குளியலறைகள், சினிமா அறை, உடற்பயிற்சி கூடம் மற்றும் இரட்டை கேரேஜ் கொண்ட இந்த வீடு 500 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு 13.5 லட்சம் டாலர்கள் செலுத்தப்பட்டது.

அதே நேரத்தில் கிரிப்டோகரன்சி நிறுவனமும் தனது தவறை உணர பல மாதங்கள் ஆயின.

ஆஸ்திரேலிய மாகாணமான விக்டோரியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் எலியட் ,"மனுதாரர் ஏழு மாதங்களுக்குப் பிறகு இந்த பெரிய தவறை அறிந்து கொண்டதாகத் தெரிகிறது" என்று தனது தீர்ப்பில் கூறினார்.

நடிகர் மாட் டேமியன் CRYPTO.COM ஐ விளம்பரப்படுத்துகிறார்

பட மூலாதாரம்,CRYPTO.COM

படக்குறிப்பு,

நடிகர் மாட் டேமியன் CRYPTO.COM ஐ விளம்பரப்படுத்துகிறார்

நீதிமன்ற தீர்ப்பு

மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிமன்றம், முழுத் தொகை மட்டுமின்றி அதற்கான வட்டி மற்றும் சட்டச் செலவுகளையும் திருப்பித் தர உத்தரவிட்டுள்ளது.

தேவ மனோகரி தனது சகோதரியின் பெயரில் வீடு வாங்கியது நிரூபணமானதால் அந்த வீட்டை விற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிரிப்டோகரன்சி நிறுவனம் இந்த ஆண்டு பிப்ரவரியில் சட்ட நடவடிக்கையைத் தொடங்கியது. மணிவேலுடன் இணைக்கப்பட்ட கணக்குகளை முடக்குவதிலும் வெற்றிபெற்றது.

இருப்பினும், கிரிப்டோ நிறுவனம் கணக்குகளை முடக்குவதற்குள் தேவமனோகரி பெரும்பாலான பணத்தை மற்ற கணக்குகளுக்கு மாற்றிவிட்டார்.

தேவ மனோகரி சொத்துக்கள் முடக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் அவரது சகோதரி வீட்டின் உரிமையாளரானார்.

இதனால் தேவ மனோகரி சகோதரியின் கணக்கையும் முடக்க வேண்டும் என்று கிரிப்டோ நிறுவனம் கோரியிருந்தது. இப்போது அவரது வீட்டை விற்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-62787555

  • கருத்துக்கள உறவுகள்

சம்பநதப் பட்டவரின் மனஉளைச்சலுக்கு நட்டஈடு வழங்க வேணும்.😄

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

தேவமனோகரி மணிவேலின் வங்கிக் கணக்கில் 70 லட்சம் டாலர் வந்தபோது, தன்னை உலகத்தின் பெரிய அதிருஷ்டசாலி என்று அவர் நினைத்தார். ஆனால் தற்போது அவரும் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலரும் பிரச்சனையில் உள்ளனர்.

மலேசிய தமிழர் போல் உள்ளது.
அவர் வாங்கிய சொத்துக்களை… வங்கி மீள எடுக்கலாம்.
ஆனால்…. செலவழித்த பணத்தை எப்படி திரும்ப எடுக்கப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

மலேசிய தமிழர் போல் உள்ளது.
அவர் வாங்கிய சொத்துக்களை… வங்கி மீள எடுக்கலாம்.
ஆனால்…. செலவழித்த பணத்தை எப்படி திரும்ப எடுக்கப் போகிறார்கள்.

தப்பித் தவறி உங்கள் வங்கி கணக்கில் பத்து மில்லியன் யூரோ  வைப்பு செய்யப்பட்டுள்ளது என்ன செய்வீங்கள்   ?  இந்த பெண் செய்த அதேபோல தான் இல்லையா?  யாழ் களத்தில் ஒருவர் குறைத்து விடுவார் 😂

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

தப்பித் தவறி உங்கள் வங்கி கணக்கில் பத்து மில்லியன் யூரோ  வைப்பு செய்யப்பட்டுள்ளது என்ன செய்வீங்கள்   ?  இந்த பெண் செய்த அதேபோல தான் இல்லையா?  யாழ் களத்தில் ஒருவர் குறைத்து விடுவார் 😂

எனக்கு... கொத்து ரொட்டி சரியான விருப்பம்.
பத்து மில்லியனுக்கும்... கொத்து ரொட்டி வாங்கி சாப்பிட்டு, ஏப்பம் விட்டு விடுவேன். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு... கொத்து ரொட்டி சரியான விருப்பம்.
பத்து மில்லியனுக்கும்... கொத்து ரொட்டி வாங்கி சாப்பிட்டு, ஏப்பம் விட்டு விடுவேன்.
அவங்களுக்கு 10 மில்லியன் திரும்ப வேணுமெண்டால், கக்கூசுக்குள்  போய், எடுக்கட்டும். 🤣

குமாரசாமி அண்ணையின். பதிவைப்பார்த்து   தெருத்திருவிழா இன்று நேற்று முந்தநாள். நடக்கும் என்று அறிந்தேன்.   எனது இடத்திலிருந்து 90 கிலோமீட்டர் வரும் நேற்று மதியம் நானும் மகனும் போயிருத்தோம்.  நல்ல கொத்து ரோட்டி. ஏழு யூரோ  மட்டுமே வேண்டி சாப்பிட்டோம்.  அப்பம...தோசை..புரியாணி   நல்ல சாப்பாடு   ஆனால்   நாலு பக்கமும் யோகோவாக்காரர். துண்டுப்பிரசுரங்களுடன் நின்றார்கள்    வாந்தீர்களா?.   இல்லை அடுத்த முறை வாருங்கள்… மூன்று நாளும்  கொத்து சாப்பிடலாம் அல்லது நிறையவே பார்சல். செய்யலாம்      😁

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

இங்கும்… தெருத்திருவிழா நடக்கும் போது  வாங்கி சாப்பிடுவது.
பிள்ளைகளுக்கும்.. நல்ல விருப்பம்.
ஜேர்மன்காரரும் இப்போ கொத்து ரொட்டிக்கு அடிமையாகி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எனக்கு... கொத்து ரொட்டி சரியான விருப்பம்.
பத்து மில்லியனுக்கும்... கொத்து ரொட்டி வாங்கி சாப்பிட்டு, ஏப்பம் விட்டு விடுவேன். 🤣

கொத்து ரொட்டி வெறும் மாவில் செய்வது சிறி 😂

உங்கள் கதையை பார்த்தால் பவுணில் என்பது போலிருக்கிறது

ல சப்பலுக்கு வாங்க கார் நிறைய கொண்டு போகலாம் 😍

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

கொத்து ரொட்டி வெறும் மாவில் செய்வது சிறி 😂

உங்கள் கதையை பார்த்தால் பவுணில் என்பது போலிருக்கிறது

ல சப்பலுக்கு வாங்க கார் நிறைய கொண்டு போகலாம் 😍

கார் நிறைய… கொத்து ரொட்டி தருகின்ற அளவுக்கு, விசுகருக்கு பெரிய மனசு.
நீங்கள் முன்பு நிறைய தந்த தாமரைக் கிழங்கை மறக்க மாட்டேன். 🥰

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இங்கும்… தெருத்திருவிழா நடக்கும் போது  வாங்கி சாப்பிடுவது.
பிள்ளைகளுக்கும்.. நல்ல விருப்பம்.
ஜேர்மன்காரரும் இப்போ கொத்து ரொட்டிக்கு அடிமையாகி விட்டார்கள்.

இங்கிருக்கும் நாடுகளில் கொத்து ரொட்டி என்று பசைமாவும் மட்டின்கறியும் சேர்த்து குழைத்தால் கொத்து ரொட்டி என்று நினைகிறார்கள் உண்மையான கொத்து ஒருகிலோ மாவில் நாப்பது ரொட்டி வரனும் அதுதான் உண்மையான கொத்து இங்கு 2௦ ரொட்டி வீசி கறியை ஊத்தி களி ரொட்டி போடுகிறார்கள் .

மிக மிக முக்கியம் ரொட்டி கிழியகூடாது நாப்பது ரொட்டி போடுபவர்களுக்கு ரொட்டி மாஸ்ட்டர் என்பார்கள் இதெல்லாம் மழைக்கு முளைத்த சாப்பாட்டு கடைகளுக்கு தெரியாது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இங்கும்… தெருத்திருவிழா நடக்கும் போது  வாங்கி சாப்பிடுவது.
பிள்ளைகளுக்கும்.. நல்ல விருப்பம்.
ஜேர்மன்காரரும் இப்போ கொத்து ரொட்டிக்கு அடிமையாகி விட்டார்கள்.

அட, நம்ம உடான்சு சுவாமியார் இருந்தால், நல்ல சட்ட விளக்கம் தந்திருப்பார். 🤔

உது பிழையான தீர்ப்பு.

$100 போட்டு பார்த்தேன். இவ்வளவு வந்தது.... அவர்கள் தான், போட்டார்கள். இதில களவு இல்லை. 

செலவழிச்சு முடிஞ்சுது. வேலை இல்லை. பெனிபிட் தான். 😎

வீடு, கார்.... எண்டு அம்புடுறதை வித்து எடுங்கோ.

மிச்சதுக்கு, கிழமைக்கு ஒரு டொலர் படி தந்து முடிக்கிறேன் என்று சொல்லி  இருந்தால், நிறுவனம் ஒத்துக்கொண்டிருக்கத்தான் வேணும். நான் இப்படியே கனடா, அமெரிக்கா பக்கம் போறன் எண்டு கிளம்பி இருக்கலாம். 🤑

பண்ணிப்பாருங்கோவன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கார் நிறைய… கொத்து ரொட்டி தருகின்ற அளவுக்கு, விசுகருக்கு பெரிய மனசு.
நீங்கள் முன்பு நிறைய தந்த தாமரைக் கிழங்கை மறக்க மாட்டேன். 🥰

இரண்டு கிழமைக்கு முன்னர் கூட ஜேர்மனிக்கு வந்திருந்தேன். கொஞ்ச புத்தகங்களை கொண்டு வந்து உங்களை சந்திக்க நினைத்தேன். இந்த நேரத்தில் உங்களுக்கு அவை துணையாக இருக்கும் ஆனால் இரண்டு நாட்கள் மட்டுமே என்பதால் அடுத்த முறை பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

குமாரசாமி அண்ணையின். பதிவைப்பார்த்து   தெருத்திருவிழா இன்று நேற்று முந்தநாள். நடக்கும் என்று அறிந்தேன்.   எனது இடத்திலிருந்து 90 கிலோமீட்டர் வரும் நேற்று மதியம் நானும் மகனும் போயிருத்தோம்.  நல்ல கொத்து ரோட்டி. ஏழு யூரோ  மட்டுமே வேண்டி சாப்பிட்டோம்.  அப்பம...தோசை..புரியாணி   நல்ல சாப்பாடு   ஆனால்   நாலு பக்கமும் யோகோவாக்காரர். துண்டுப்பிரசுரங்களுடன் நின்றார்கள்    வாந்தீர்களா?.   இல்லை அடுத்த முறை வாருங்கள்… மூன்று நாளும்  கொத்து சாப்பிடலாம் அல்லது நிறையவே பார்சல். செய்யலாம்      😁

கந்தையா அண்ணை முதலிலே சொல்லியிருந்தால் சேர்ந்து சாப்பிட்டிருக்கலாம் 😊

23 minutes ago, விசுகு said:

இரண்டு கிழமைக்கு முன்னர் கூட ஜேர்மனிக்கு வந்திருந்தேன்.  ஆனால் இரண்டு நாட்கள் மட்டுமே என்பதால் அடுத்த முறை பார்க்கலாம். 

சென்ற சனிக்கிழமை நானும் சார்சலில் ஒரு திருமண நிகழ்விற்கு வந்திருந்தேன்
அப்படியே மாறி மாறி வந்து போய்க்   கொண்டிருக்கின்றோம்
ஒரு முறையாவது சந்திக்கும் வாய்ப்புக்கு கிடைக்கும் என நினைக்கின்றேன்🙏

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்த பெண்மணிக்கு ஏரோப்பிளேனில் போன சனியன் ஏணி வைச்சு தலையில இறங்கிவிட்டுது.

கோவிட் காலகட்டத்தில் பாடசாலைகளை இல்லாமல் வீட்டில் தொலைதூர கல்வி நிகழ்ந்தபோது பிள்ளைகளுக்கு இணையத்தில் 2 சிறந்த கதிரைகள் வாங்க முயற்சித்தேன்

விலைகள் கதிரை ஒன்று தலா $150 அண்ணளவாக இருந்த நிலையில் ஒரு விளம்பரத்தில் கதிரை ஒன்று தலா $55 வீதம் இரண்டு கதிரைகள் $110 செலுத்தி கடனட்டை (டெபிட்) மூலம் வாங்கினேன்..

பொருள் உள்ள இடம் அமெரிக்கா எனக்காட்டியது,

பொருள் அனுப்ப  2 கிழமையிலிருந்து 45 நாள்களாகும் எனக்குறிப்ப்டிருந்தார்கள், ஒரு வாரத்தின் பின்னர் அந்த இணையத்தளத்தினை காணவில்லை, ஏமாற்றப்பட்டதாக உணரத்தொடங்கிய நிலையில் பணத்தினை வங்கியினை தொடர்புகொண்டு பெறமுடியுமா என இணையத்தில் தேடிய போது கடனட்டையில் வாங்கினால் வங்கியினால் அந்த பணத்தினை மீளப்பெற முடியும் என குறிப்பிட்டிருந்தது அனால் நான் வாங்கியது  டெபிட் அட்டை மூலம்.

45 நாள் வரை பொறுத்துகொள்ள முடிவெடுத்தேன், அதே நேரம் மின்ஞ்சலில் தொடர்புகொள்ள முயன்றேன் பதில் இல்லை.

பதிலழிக்கா நிலையில் வங்கியினை தொடர்பு கொண்டு காசினை மீளப்பெறப்போகிறேன் என மின்னஞ்ச்சலில் தெரிவித்தேன் அதற்கும் பதிலில்லை (வங்கி காசினை திரும்ப தராது என நினைத்தேன் ஒரு வேளை உண்மையாக ஒரு நிறுவனம் போக்குவரத்து தாமத்தினால் பாதிக்கப்படக்கூடாது என அவர்களுக்காகவும் சிந்தித்தேன்)

காசு வராது என்பது உறுதியான நிலையில் ஏமாற்றப்பட்டதாலோ அல்லது காசினை இழந்தனாலோ எது வென்று தெரியாத ஒரு அதிகமான மன அளுத்தம் ஏற்பட்டது.

 45 நாளின் பின் வங்கியினை தொடர்புகொண்டபோது அவர்கள் எந்த பிரச்சினையுமில்லை என உடனடியாக பண்த்தினை மீளழித்தார்கள், பொருள் வந்தால் பணத்தினை எவ்வாறு மீழ செலுத்துவது என்பது உனது பிரச்சினை என கூறிவிட்டார்கள்.

அது ஒரு உண்மயில் ஒரு மோசடி நிறுவனம்தான்.

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல காசினை இழந்தவர்கள் நிலையினுடன் ஒப்பிடும்போது இந்த தண்டனை தேவையானதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம்.

பெரிய தொகையை வங்கி ஊடக மாற்றும் போது, முழுத்தொகையையும் ஒரேயடியாக  மாற்ற கூடாது. மிகச் சிறிய தொகையில் இருந்து தொடங்கி, பகுதிகளாக பிரித்து மாற்ற வேண்டும்.

பெரிய தொகையில் பொருள் வாங்கும் பொது, கடன் அதை வழியாக வாங்குவதில், உங்களை அறியாமல் மோசடி இருந்தால் பணத்தை மீள பெறர் முயதர்சிப்பதற்கு சட்டத்தில் இடம் உண்டு  (uk இல் நுகர்வோர் கிரடிட் பாதுகாப்பு பகுதி 75. வேறு நாடுகளிலும் இருக்கும்).    

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kadancha said:

நீங்கள் கூறுவது சரிதான், அதனால்தான் டெபிட் அட்டையில் வாங்கிய  காசினை மீளப்பெறமுடியாது என உறுதியாக நம்பினேன், ஆனால் வங்கி, மோசடியாளரின் கணக்கிலிருந்து மீளப்பெற்றிருக்கும் என நம்புகிறேன், ஒரு வேளை மோசடியாளர் தனது வங்கி கணக்கினை மூடி இருந்தால் காசினை மீளப்பெறமுடியாது முடியாது என நினைக்கிறேன்.

நான் கடனட்டை சிறிது காலம் வைத்திருந்தேன் பின்னர் அதனை மூடிவிட்டேன், தேவைக்கதிகமான பராமரிப்பு செலவீனம்  என்பதால்.

எப்போதும் டெபிட் மற்றும் பேபால் பாவிப்பதுண்டு, அந்த காசினை கூகிள் பே மூலம் தான் செலுத்தியிருந்தேன் அவர்களை தொடர்பு கொண்ட போது கையை விரித்துவிட்டார்கள். வங்கியிடம் தொடர்பு கோள்ளுங்கள் ஆனால் டெபிட் அட்டை மூலம் பொருளுக்கான கட்டணம் செலுத்தியமையால் காசினை மீளப்பெற இயலாது என கூறினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

45 நாளின் பின் வங்கியினை தொடர்புகொண்டபோது அவர்கள் எந்த பிரச்சினையுமில்லை என உடனடியாக பண்த்தினை மீளழித்தார்கள்,

உங்கள் பணம்  திரும்ப கிடைத்தது மகிழ்ச்சி.

9 hours ago, vasee said:

பாவம் அந்த பெண்மணிக்கு ஏரோப்பிளேனில் போன சனியன் ஏணி வைச்சு தலையில இறங்கிவிட்டுது.

அந்த பெண் பாவம் இல்லை. யாருடைய காசை எடுத்து செலவழித்து விளையாடி இருக்கிறா.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அந்த பெண் பாவம் இல்லை. யாருடைய காசை எடுத்து செலவழித்து விளையாடி இருக்கிறா.

அவோட பிழை இல்லை.

கிறீப்டோகாரர் அடித்து விட்ட பொய்களுடன், அவர்கள் தவறும் சேர்ந்து கொண்டதால் வந்த விளைவு. 🤨

ஜட்ஜ் அய்யா, களவு என்று சொல்லவில்லை என்பதை கவனித்தீர்களா🤗

களவாயின் சிறை🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

மிச்சதுக்கு, கிழமைக்கு ஒரு டொலர் படி தந்து முடிக்கிறேன் என்று சொல்லி  இருந்தால், நிறுவனம் ஒத்துக்கொண்டிருக்கத்தான் வேணும். நான் இப்படியே கனடா, அமெரிக்கா பக்கம் போறன் எண்டு கிளம்பி இருக்கலாம். 🤑

பண்ணிப்பாருங்கோவன்.

கனடா, அமெரிக்கா பக்கம் போனாலும்….
“இன்ரபோல்” வந்து கதவை… டொக், டொக் என்று தட்டுமே… 😁

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

கனடா, அமெரிக்கா பக்கம் போனாலும்….
“இன்ரபோல்” வந்து கதவை… டொக், டொக் என்று தட்டுமே… 😁

இல்லையே....

களவு, கிரிமினல் குற்றம்.

இது, தவறான பணச் செலுத்துகை.

முன்பின் தெரியாதவரிடம் இருந்து வந்து, அதனை செலவு செய்தாலும் தவறு.

இன்னாரிடம் இருந்து பணம் வரும் என்று எதிர்பார்த்தீர்களா?

முதலாவது கேள்விக்கு, முன்பின் தெரியாதவராயின், பதில் இல்லை.

இங்கே, பதில் ஆம்... ஆக.... ஒரு சட்டபூர்வமான தொடர்பு இருந்தது.

எதிர்பார்த்ததிலும் கூடுதலாக அனுப்பி, பல மாதங்கள், சும்மா இருந்தது, கம்பனி தவறு.

அதுக்கு, ஜட்ஜ் அய்யா ஒண்டும் செய்ய ஏலாது. பிடுங்கக் கூடியதை பிடுங்கி கொடுக்கலாம்.

இல்லாவிடில், ஒரு சமாதானம் செய்யலாம்.

அதை தான் செய்திருக்கிறார்.

என்னைப் பொறுத்த வரை, பெரும் தொகை என்பதால் இந்தப்பெண்ணும் சட்ட ஆலோசணை பெற்றிருப்பார்.

வீடு வாங்குவது சும்மா அல்ல. பணம் எப்படி வந்தது என்று கேட்பார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, வாத்தியார் said:

கந்தையா அண்ணை முதலிலே சொல்லியிருந்தால் சேர்ந்து சாப்பிட்டிருக்கலாம் 😊

சென்ற சனிக்கிழமை நானும் சார்சலில் ஒரு திருமண நிகழ்விற்கு வந்திருந்தேன்
அப்படியே மாறி மாறி வந்து போய்க்   கொண்டிருக்கின்றோம்
ஒரு முறையாவது சந்திக்கும் வாய்ப்புக்கு கிடைக்கும் என நினைக்கின்றேன்🙏

வாத்தியார் அடுத்த வருடம் சேர்த்து சாப்பிடுவோம் 😄

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2022 at 17:44, விளங்க நினைப்பவன் said:

உங்கள் பணம்  திரும்ப கிடைத்தது மகிழ்ச்சி.

அந்த பெண் பாவம் இல்லை. யாருடைய காசை எடுத்து செலவழித்து விளையாடி இருக்கிறா.

நன்றி விளங்க நினைப்பவன்,

அந்த பெண்மணியின் உங்கள் நிலைப்பாடு மிகவும் சரி என கருதுகிறேன், ஆனால் காசை தனது கணக்கில் வைத்திருந்த காலத்திற்கு வட்டி வேறு கட்ட வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது, அந்த காசு சுனாமி மாதிரி வந்து அவரது காசையும் எடுத்து சென்று விட்டதுதான் கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் 30 வருடங்களுக்கு முன் எனது வங்கிக்கணக்கில் அண்ணளவாக $250.00 தவறுதலாக வைப்பிலிட்டார்கள். நான் வங்கிக்கு சென்று அது எனது பணம் இல்லை அதை உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள் என்றதும் அங்கிருந்த பணியாளர் யாருடைய பணம் என்று கண்டுபிடிப்பதற்கு நான் அண்ணளவாக $17.50 - $20.00 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொன்னார். நான் பரவாயில்லை பணம் எனது கணக்கிலேயே இருக்கட்டும் நீங்களாக கண்டுபிடித்தால் பணத்தை எடுத்து உரியவரிடம் கொடுங்கள் என்றுவிட்டு வந்துவிட்டேன்.
இன்றுவரை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.