Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாத்தையாக்களும் கருணாக்களும்!

Featured Replies

கிழக்கில் விரைவில் உள்ளுராட்சி சபைத் தேர்தலையும் மகாண சபைத் தேர்தலையும் நடத்தவதற்கு சிறிலங்கா அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மகாண சபை தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என்றாலும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறான ஒரு தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட முடியாதை நிலை நிலவுகிறது. அதனால் கருணா குழுவே அதிக இடங்களை கைப்பற்றக் கூடிய நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது. தமிழினத்திற்கு துரோகம் இழைக்கின்ற கருணா குழுவிற்கு கிழக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்ற ஆச்சரியாமான கேள்வி எழலாம். வாக்களிப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு என்பதுதான் அதற்கு பதில்.

அதற்கு காரணம் கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் உருவாக்கிவிடப்பட்டள்ள பகைமை உணர்வுகள். பல ஆண்டுகளாகவே முஸ்லீம்கள் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக அங்குள்ள தமிழ் மக்கள் ஏதாவது ஒரு தமிழ்கட்சிக்கு வாக்களித்து பழகிவிட்டார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்பது கிழக்கில் பல ஆண்டுகளாக நடைபெறவே இல்லை. புறக்கணிக்கவும் மாட்டார்கள்.

ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தேர்தலில் நின்றால் அவர்களிற்கு வாக்களிப்பார்கள். இல்லையென்றால் வேறு ஏதாவது தமிழ் கட்சிக்கு வாக்களித்து விடுவார்கள். இதுதான் கிழக்கில் உள்ள வாக்களிப்பு நிலைமை. இவ்வாறான நிலை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒட்டுக் குழுக்கள் தமிழ் முஸ்லீம் உறவு ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக செயற்பட்டு வருகிறார்கள்.

தமிழர்களும் முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட பிணக்குகளை ஆராய்கின்ற போது இரு தரப்பிலும் மாறி மாறி தவறுகள் இருந்து வந்ததையும், அவைகளை சிறிலங்கா அரசு சரியாகப் பயன்படுத்திக்கொண்டதையும் காணக்கூடியதாக உள்ளது.

1915ஆம் ஆண்டு சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. அப்பொழுது இலங்கையை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேய அரசு முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்திய சிங்களத் தலைவர்களையும், காடையர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆங்கிலேய அரசு முஸ்லீம்களுக்கு சார்பாக நடந்து கொள்வதாக சிங்களத் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இந்த நேரத்தில் தமிழர்களின் தலைவர்களாக இருந்தவர்கள் முஸ்லீம்களும் தமிழர்கள் என்ற ரீதியில் முஸ்லீம்களை ஆதரித்திருக்க வேண்டும். ஆகக் குறைந்தது நடுநிலையாவது வகித்திருக்க வேண்டும். ஆனால் தமிழர்களின் தலைமை ஒரு பெரும் தவறை இழைத்தது. அன்றைக்கு தமிழர் தலைவராக இருந்த சேர்.பொன் இராமநாதன் சிங்களவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்.

அப்பொழுது முதலாம் உலக யுத்தம் (1914 - 1918) நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். கப்பற் போக்குவரத்து என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாக இருந்தது. ஆனால் ஆபத்தையும் பொருட்படுத்தாது சேர்.பொன் இராமநாதன் இங்கிலாந்த பயணமானார். அங்கே சிங்களவர்களுக்காக வாதாடினார். வாதாடி கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களையும், காடையர்களையும் விடுவிக்கச் செய்தார். இலங்கை திரும்பிய இராமநாதனை சிங்களவர்கள் ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ரதத்தை சிங்களவர்களே இழுத்தனர்.

சில தமிழர்கள் இராமநாதனை ரதத்தில் வைத்து சிங்களவர்கள் இழுத்த சம்பவத்தை பெருமையோடு குறிப்பிடுவார்கள். உண்மையில் தமிழர்கள் வெட்கப்பட வேண்டிய சம்பவம் அது. அன்றைய தமிழர் தலைமை முஸ்லீம்களுக்கு எதிரான சிங்களவர்களுக்கு ஆதரவாக நின்று பெரும் தவறைச் செய்து விட்டது. முஸ்லீம்களை பிரித்து வைத்து விட்டது.

அதன் பிற்பாடு பல ஆண்டுகள் கழித்து தந்தை செல்வா அவர்கள் இரண்டு சமூகங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டார். அதில் ஓரளவு வெற்றியம் கண்டார்.

தந்தை செல்வாவின் தலைமையிலான தமிழரசுக் கட்சியின் சார்பில் முஸ்லீம்கள் வெற்றி பெற்றனர். தமிழர்கள் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் உள்ள தொகுதிகளைக் கூட முஸ்லீம் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கி அவர்களை தமிழரசுக் கட்சி வெற்றி பெற வைத்தது.

ஆனால் இம் முறை முஸ்லீம் பிரதிநிதிகள் தவறு செய்தனர். தமிழர்களினதும் மற்றும் முஸ்லீம்களினதும் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றவர்கள் கட்சி மாறி அரசில் இணைந்தனர். இது ஒரு முறையோ அல்லது இரு முறையோ மட்டும் நடைபெறவில்லை. பட்டியல் போடுகின்ற அளவிற்கு பலமுறை நடந்தது. ஒரு நேரத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் முஸ்லீம் பிரதிநிதிகளிடம் "கட்சி மாறக் கூடாது" என்று சத்தியம் வாங்க வேண்டிய அளவிற்கு ஒவ்வொரு முறையும் கட்சி மாறுதல் நடந்தது. சத்தியம் செய்து கொடுத்துவர்களும் அதைக் காப்பாற்றவில்லை.

அதன் பிறகு ஆயுதம் தாங்கிய ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான பொழுது, தமிழ் - முஸ்லீம் உறவு தழைப்பது போன்ற காட்சிகள் தென்பட்டன. சிங்கள பௌத்தர் அல்லாத அனைவரையும் சிறிலங்காவில் இருந்து இல்லாமல் செய்கின்ற திட்டத்தையே சிங்கள அரசுகள் கொண்டுள்ளன என்கின்ற உண்மையை உணர்ந்த முஸ்லீம் இளைஞர்களும் விடுதலை இயக்கங்களில் இணைந்து தமிழீழத் தாயகம் அமைப்பதற்கு போராடினர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி நூற்றுக் கணக்கான முஸ்லீம்கள் மாவீரர் ஆகி உள்ளனர். லெப் கேணல் ஜீனைதீன் என்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது முஸ்லீம் மாவீரர் ஆவார்.

இவ்வாறு ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் தமிழர் முஸ்லீம் ஒற்றுமையில் வளர்ச்சி ஏற்பட்டாலும், கடைசியில் இரண்டு சமூகங்களையும் பிளவு படுத்துகின்ற சிங்கள அரசின் முயற்சியே வெற்றி பெற்றது. இதற்கு சில தமிழ் ஆயுதக் குழுக்கள் முஸ்லீம் மக்கள் மீது அடாவடித்தனமான முறையில் நடந்து கொண்டதும் துணை போனது.

முஸ்லீம்கள் மத்தியில் உருவான தனிக் கட்சிகளும் அரசியல் இலாபம் கருதி தமிழர் முஸ்லீம் ஒற்றுமை ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தன. இவை எல்லாவற்றையும் விட 1990ஆம் ஆண்டில் நடந்த படுகொலைகளும், முஸ்லீம்கள் வெளியேற்றமும் இரண்டு சமூகத்தினர் மத்தியிலும் மிகப் பெரிய இடைவெளியை உருவாக்கின. அந்த இடைவெளி குறைந்த விடக் கூடாது என்பதில் இன்றைக்கு வரைக்கும் பல தீய சக்திகள் வெகு கவனமாக செயற்பட்டு வருகின்றன.

1990ஆம் ஆண்டு ஒகஸ்டின் ஆரம்பத்தில் காத்தான்குடி, ஏறாவூர் போன்ற பகுதிகளில் நூற்றுக் கணக்கான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முஸ்லீம்கள் மத்தியில் பதட்டத்தையும் தமிழர் மீது வெறுப்பையும் ஏற்படுத்துவதற்கான அனைத்துச் செயற்பாடுகளையும் சிறிலங்காப் புலனாய்வுத்துறை செய்தது. பல கிராமங்களில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுவதாக பொய்யான செய்திகளையும் பரப்பியது. முஸ்லீம்கள் மீதான படுகொலைகளின் பின்னால் சிறிலங்காவின் புலனாய்வுத்துறை செயற்பட்டது என்று நம்புவதற்கு வலுவான காரணங்கள் உண்டு.

முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிறிலங்கா இராணுவத்திற்கு அஞ்சி வீரமுனைக் கிராமத்திற்கு இடம் பெயர்ந்திருந்த தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும் முஸ்லீம் துணைப் படையினரும் இணைந்த பெரும் படுகொலை ஒன்றை நிகழ்த்தினர். 400இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். வேறு பல தமிழ் கிராமங்களும் சிறிலங்கா இராணுவத்தின் முஸ்லீம் துணைப் படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகின. தமிழ் மக்கள் மீதான தாக்குதலின் பின்னால் முஸ்லீம் ஒட்டுக் குழுவான "ஜிகாத்" செயற்படுவதாக அன்று விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இவ்வாறு இரு சமூகங்களுக்கும் இடையில் கடும் பகையை உருவாக்கிய சிறிலங்காப் புலனாய்வுத்துறை யாழ் குடாவில் உள்ள முஸ்லீம்களையும் கலவரத்திற்கு தூண்டியது. அவ்வாறான ஒரு கலவரத்தை தடுப்பதற்கு அன்றைய நிலையில் தம்மிடம் பலம் இல்லை என்பதை உணர்ந்த விடுதலைப் புலிகள் முஸ்லீம்களை யாழில் இருந்து வெளியேற்றினர். இது முஸ்லீம்கள் மனதில் மேலும் ஒரு வடுவாகிப் போனது.

தமிழர் முஸ்லீம் உறவின் அவசியத்தினை உணர்ந்த விடுதலைப் புலிகள் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதற்கு மன்னிப்புக் கோரினர். தமிழ் மக்கள் யாழில் மீண்டும் குடியேறுகின்ற நிலை வருகின்ற போது முஸ்லீம் மக்களும் யாழில் மீண்டும் குடியேற்றப்படுவர் என்று வாக்குறுதியும் வழங்கினர். முஸ்லீம் கட்சிகளோடும், மதத் தலைவர்களோடும் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவிற்கு வழி வகுத்தனர்.

ஆனால் சிறிலங்காப் புலனாய்வுத்துறை இப்பொழுதும் வேகமாக செயற்பட்டது. ஒட்டுக் குழுக்களான கருணா குழுவையும், ஜிகாத் குழுவையும் பயன்படுத்தி மீண்டும் மாறி மாறி கொலைகளை நிகழ்த்தியது. இன்று வரைக்கும் தமிழினத்தின் மத்தியில் தமிழர் முஸ்லீம் என்ற பிளவை உருவாக்குவதிலும், இரு சமூகங்கள் மத்தியில் பகையை வளர்ப்பதிலும் சிறிலங்கா அரசு வெற்றி பெற்று வருகிறது என்பது வேதனையான உண்மை.

தமிழர்களும் முஸ்லீம்களும் பகையோடு இருப்பதால் பலன் பெறுவது கிழக்கை பிரிக்க விரும்புகின்ற சிங்கள அரசும், ஒட்டுக் குழுக்களுமே ஆகும். முஸ்லீம்களை கொலை செய்வதிலும் கிராமங்களை விட்டு விரட்டி அடிப்பதிலும் சிறிலங்காப் படைகளும் கருணா குழுவும் முன்னிலையில் நின்று செயற்படுகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போதே கருணா முஸ்லீம்களுடன் கடுமையாகச் செயற்பட்டார் என்ற செய்திகள் பல உண்டு. இதற்காக அவர் வடக்கிற்கு அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.

அன்றைக்கே முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் பகைமையை வளர்க்கின்ற முயற்சிகளில் கருணா ஈடுபட்டதானது கருணாவிற்கு நீண்ட காலத்திட்டம் இருந்ததா என்ற கேள்வியை எழுப்புகின்றது. அதே போன்று யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றுவதில் முன்னின்று ஆர்வமாக செயற்பட்டவர் யார் என்று பார்த்தால் அங்கும் ஒரு ஆச்சியமான பதில் இருக்கிறது. விடுதலைப் புலிகளின் அன்றைய பிரதித் தலைவர் மாத்தையாவே அவர்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பின்பு துரோகிகளாக இனம் காணப்பட்டார்கள். இது இவர்கள் அந்நிய சக்திகளிடம் பல ஆண்டுகளுக்கு முன்பே விலை போய்விட்டார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் உயர்ந்த பண்பு வெளிப்படுகிறது. மாத்தையா, கருணா போன்றவர்கள் விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்தாலும், அவர்களை விடுதலைப் புலிகள் காட்டிக் கொடுப்பதில்லை. தமது இயக்கத்தில் இருந்த பொழுது அவர்கள் செய்த செயற்பாடுகளுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்ளும் சிறந்த பண்பை விடுதலைப் புலிகளிடம் காணக் கூடியதாக உள்ளது.

தமிழினத்தை வடக்கு கிழக்கு என்றும் தமிழர் முஸ்லீம் என்று பிளவு படுத்துகின்ற தீய சக்திகளுக்கும் கறுப்பு ஆடுகளுக்கும் மத்தியில் இரண்டு சமூகங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் விடுதலைப் புலிகள் உறுதியாகவே இருக்கிறார்கள். முஸ்லீம் சமூகத்தை தனிக் கலாச்சாரம் உள்ள ஒரு தனித்துவமான சமூகமாக அங்கீகரித்திருக்கும் விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் முஸ்லீம்களுக்கு தனி அலகு வழங்கவும் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லீம்கள் மீது வெறுப்புக்களை வளர்த்து வைத்திருக்கும் தமிழர்களும், தமிழர்கள் மீது வெறுப்புக்களை வளர்த்து வைத்திருக்கும் முஸ்லீம்களும் குறிப்பிட்டளவு இருக்கிறார்கள். உண்மையான ஒற்றுமை ஏற்படுவதற்கு இவர்களே தடையாக இருக்கிறார்கள். முஸ்லீம்களோடு ஒற்றுமையை விரும்புகின்ற விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்ற தமிழர்களில் கூட பலர் முஸ்லீம்கள் விடயத்தில் மாத்தையாக்களாகவும், கருணாக்களாகவும் சிந்திப்பதை பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஒற்றுமை ஏற்படுவதற்கு மனம் திறந்த பேச்சு அவசியம். தமிழர் தரப்பில் உள்ள தலைவர்களும் அறிஞர்களும் முதலில் தமிழர்களுடன் பேச வேண்டும். முஸ்லீம்கள் பற்றி தமிழர்கள் மத்தியில் உள்ள அச்சங்களையும் சந்தேகங்களையும் களைய வேண்டும். இதையே முஸ்லீம் தலைவர்களும் தமது மக்கள் மத்தியில் செய்ய வேண்டும். அரசியல் இலாபத்திற்காக சில முஸ்லீம் கட்சிகளும், தமிழ் ஒட்டுக் குழுக்களும் இதற்கு தடையாக இருந்தாலும், இதை செய்துதான் தீர வேண்டும்.

ஒற்றுமை ஏற்படவில்லை என்றால் கிழக்கு விடுவிக்கப்படாதவரை அங்கு நடைபெறும் தேர்தல்களில் ஒட்டுக் குழுக்கள் மக்கள் வாக்குகளைப் பெற்று, ஊராட்சி, மகாணசபை, நாடாளுமன்றம் என்று வளர்ச்சி அடைவது நடந்துதான் தீரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர் சபேசனின் மிக நல்ல கட்டுரை. இன்றைய காலத்தில் தேவையான கருத்துக்கள்.

அவர்கள் அரேபியாவிலிருந்தோ பாரசிகத்திலிருந்தோ வந்தவர்கள் அல்ல. நமது தமிழ் உறவுகள். நம்மவர்கள் அந்நிய மதமான இந்து மதத்தை அறியாமல் கொண்டாடுவதுபோல் அவர்களும் இஸ்லாம் மதத்தைக் கொண்டாடுகிறார்கள்.

அந்தத் தமிழர்கள் மிகவும் அருமையாக தமிழ் பேசுகின்றனர். தொழுகை, நோன்பு என தூய தமிழ்ச் சொற்கள் அவர்களது வழிபாட்டில் கலந்திருக்கின்றன. ஆனால் இந்து மதத்தை தழுவிய நமது தமிழர்களோ விரதம், உபவாசம், பிரார்த்தனை, அர்ச்சனை என தமிழைத் தவிர்த்து சமஸ்கிருதத்தை பயன்படுத்துகின்றனர்.

தமிழுக்குத் தொண்டு செய்த எத்தனையோ இஸ்லாமியர்கள் இருக்கின்றனர்.

இந்துத்துவம் போல் இஸ்லாமிய அடிப்படைவாதம் தவறாக இருந்தாலும், மற்ற மதங்களைப் போல் இஸ்லாம் மதத்திலும் மூடநம்பிக்கைகள் இருந்தாலும் இந்து மதத்தைப் போல் பிறவி ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் மதம் அல்ல அது.

அது காட்டும் சகோதரத்துவமும் சமத்துவமும் போற்றுதலுக்குரியது

தமிழர்களோடு தமிழர்களாக அவர்கள் தமிழ் ஈழத்தில் வாழவேண்டும்.

Edited by இளங்கோ

உம்மா , வாப்பா, ராத்தா.. ஹ்ஜ் , நிக்கா, மவுத், அல்ஹா, இப்படி பல சொல்களும் தூய தமிழ் சொற்களா என்ன..?? வேணும் எண்டால் கேழுங்கோ மேலும் பல அராபிய சொற்களை தமிழில் சொல்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களும் முஸ்லீம்களும் பகையோடு இருப்பதால் பலன் பெறுவது கிழக்கை பிரிக்க விரும்புகின்ற சிங்கள அரசும், ஒட்டுக் குழுக்களுமே ஆகும். முஸ்லீம்களை கொலை செய்வதிலும் கிராமங்களை விட்டு விரட்டி அடிப்பதிலும் சிறிலங்காப் படைகளும் கருணா குழுவும் முன்னிலையில் நின்று செயற்படுகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போதே கருணா முஸ்லீம்களுடன் கடுமையாகச் செயற்பட்டார் என்ற செய்திகள் பல உண்டு. இதற்காக அவர் வடக்கிற்கு அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.

காலத்துக்கு ஏற்ப நல்ல கட்டுரை சபேசன் அவர்களே

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோ தன் குறுக்குப் புத்தியை எல்லா இடத்திலும் காட்ட முயல்கின்றார். இந்து மதத்தவர்கள் போல, அவர்கள் வாயை மூடிக் கொண்டு இருக்கமாட்டார்கள் என்பதால் அவர்கள் குறித்து அடக்கி வாசிக்கின்றார் போல.

எங்கு போனாலும் இந்து மதத்தையும் பிராமணர்களையும் திட்டும் இவர்களின் வெறி எப்போது அடங்கும்???

தோழர் சபேசனின் மிக நல்ல கட்டுரை. இன்றைய காலத்தில் தேவையான கருத்துக்கள்.

அவர்கள் அரேபியாவிலிருந்தோ பாரசிகத்திலிருந்தோ வந்தவர்கள் அல்ல. நமது தமிழ் உறவுகள். நம்மவர்கள் அந்நிய மதமான இந்து மதத்தை அறியாமல் கொண்டாடுவதுபோல் அவர்களும் இஸ்லாம் மதத்தைக் கொண்டாடுகிறார்கள்.

அந்தத் தமிழர்கள் மிகவும் அருமையாக தமிழ் பேசுகின்றனர். தொழுகைஇ நோன்பு என தூய தமிழ்ச் சொற்கள் அவர்களது வழிபாட்டில் கலந்திருக்கின்றன. ஆனால் இந்து மதத்தை தழுவிய நமது தமிழர்களோ விரதம்இ உபவாசம்இ பிரார்த்தனைஇ அர்ச்சனை என தமிழைத் தவிர்த்து சமஸ்கிருதத்தை பயன்படுத்துகின்றனர்.

தமிழுக்குத் தொண்டு செய்த எத்தனையோ இஸ்லாமியர்கள் இருக்கின்றனர்.

இந்துத்துவம் போல் இஸ்லாமிய அடிப்படைவாதம் தவறாக இருந்தாலும்இ மற்ற மதங்களைப் போல் இஸ்லாம் மதத்திலும் மூடநம்பிக்கைகள் இருந்தாலும் இந்து மதத்தைப் போல் பிறவி ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் மதம் அல்ல அது.

அது காட்டும் சகோதரத்துவமும் சமத்துவமும் போற்றுதலுக்குரியது

தமிழர்களோடு தமிழர்களாக அவர்கள் தமிழ் ஈழத்தில் வாழவேண்டும்.- இளங்கோ

-----------------------------------------------------------------------------------------

உம்மா இ வாப்பாஇ ராத்தா.. ஹ்ஜ் இ நிக்காஇ மவுத்இ அல்ஹாஇ இப்படி பல சொல்களும் தூய தமிழ் சொற்களா என்ன..?? வேணும் எண்டால் கேழுங்கோ மேலும் பல அராபிய சொற்களை தமிழில் சொல்கிறேன்... - தயா

----------------------------------------------------------------

இளங்கோ தன் குறுக்குப் புத்தியை எல்லா இடத்திலும் காட்ட முயல்கின்றார். இந்து மதத்தவர்கள் போலஇ அவர்கள் வாயை மூடிக் கொண்டு இருக்கமாட்டார்கள் என்பதால் அவர்கள் குறித்து அடக்கி வாசிக்கின்றார் போல.

எங்கு போனாலும் இந்து மதத்தையும் பிராமணர்களையும் திட்டும் இவர்களின் வெறி எப்போது அடங்கும்???- தூயவன்

----------------------------------------------------------------------------------------

மேற்கண்ட பதிவுகள் கட்டுரையின் நோக்கத்தில் இருந்து விலகுகின்றது. மொழியை அடிப்படையாக கொண்டு நாம் ஓர் இனம் என்ற ஒற்றுமைக்குள் வரவேண்டும். ஒப்பீடுகள் இந்த இடத்தில் அவசியமற்றது. தமிழ் பேசும் முஸ்லீம்கள் தமிழ் பேசும் இந்துக்கள் தமிழ் பேசும் கிருத்துவர்கள் என்று அவரவர் விரும்பிய மார்க்கத்தில் அவர்கள் இருப்பினும் தமிழர்கள் என்ற உணர்வை முன்நிறுத்துவதும் தமிழர்களுக்கும் சிங்களப்பேரின வாதிகளுக்கும் தான் பிரச்சனை என்பதை விளங்குவதும் தான் முக்கியம்.

இளங்கோ அவர்களே முரண்பாட்டை ஒப்பீடுகள் செய்து ஆரம்பித்து வைக்கின்றீர்கள். இது கவலைக்குரியது.

தமிழ் பேசும் முஸ்லீம் மதத்தை சார்ந்தவர்களுக்கும் சிங்களப் பேரினவாதத்க்கும் உள்ள வரலாற்று வழியாக தொடரும் முரண்பாடுகளை பற்றி கருத்துப்பகிர்வில் முக்கியத்துவம் கொடுங்கள். தமிழ் பேசும் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் வேற்றுமை வளர்த்த சிங்களத்தின் சதிகள் பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மொழி மனித சமுதாயத்தின் தேவை சார்ந்தது. மதம் மனித சமுதாயத்தின் நம்பிக்கை சார்ந்தது. தேவை சார்ந்த கருவை மையப்படுத்தியே இனத்தின் தேசியவாதம் மையப்பட்டுத்தப்படுகின்றது.; தமிழினத்தின் தேசியவாத நீரோட்டத்தில் மதம் கலந்து தெளிவற்ற நீரோட்டமாக கடந்த காலங்கள் நகர்ந்து விட்டது. இதில் சிங்களம் தன்னாலானவரை குட்டையை கலக்கி மீன்பிடித்துக்கொண்டிருக்கி

Edited by sukan

ஈழத்தில் மதத்தை தடை செய்தால் என்ன?

ஈழத்தில் மதத்தை தடை செய்தால் என்ன?

மதம் தடை செய்யப்படக் கூடாது. உலகில் ஒவ்வொருவருக்கும் தாம் விரும்பும் மதத்தையோ கடவுளையோ பின்பற்றும் உரிமை உண்டு. அதைப் பறிப்பது மனித உரிமை மீறலாகும்.

மாறாக மதச் சார்பற்ற ஆட்சிதான் உருவாக்கப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் மதத்தை தடை செய்தால் என்ன?
<<

எத்தனை இலகுவாகக் கேட்டுவிட்டீர்கள்; இது சாத்தியமா என்ன?மொழிக்கான போராட்டமே இன்னும் ஓயவில்லை!

திரு:சபேசன் அவர்களது கருத்து, விவரித்த விதம், விளக்கம் யாவையும் பல கோணங்களில் சிந்திக்கத் தூண்டியது.

இன்றைய கிழக்கில் தமிழர்களின் நிலை என்ன?! எப்பேர்ப்பட்ட நிலையை உருவாக்கிவிடப்போகின்றது?

அன்றைய தவறுகளின் விளைவுகள் இன்று எவ்வாறு விஸ்வரூபம் எடுக்கப்போகின்றது என்பது எல்லோரது மனதையும் குடையும் கேள்வி!

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலத்துக்கு தேவையான அருமையான கட்டுரையினைப் படைத்திருக்கிறார் சபேசன் அவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நல்ல ஒரு ஆக்கம்,சிறிலங்கவை பொறுத்தவரை முஸ்லீம்கள் தங்களை தமிழர்கள் என்று அடையாளபடுத்த விரும்பவில்லை அவர்கள் முஸ்லீம்கள் என்று தங்களை அடையாளபடுத்த விரும்புகிறார்கள்,உலகிலேயே சகல மொழி பேசுபவர்களிளும் முஸ்லீம்கள் இருகிறார்கள் ஆனால் சிங்களத்தை தாய்மொழியாக கொண்ட முஸ்லீம்கள் சிறிலங்காவில் உருவாகி கொண்டு இருகிறார்கள் இவர்கள் 50 வருடம் சென்றபின் சிங்கள் முஸ்லீம்களாக இருப்பார்கள் தவிர தமிழ் பேசுபவர்களாக இருக்க போவதில்லை.

என் வாழ்கையில் நடந்த சம்பவம் மத்தியகிழக்கு நாடுகளிள் நான் வேலை செய்தபோது ஒரு தமிழ் நாட்டு முஸ்லீம் சிறிலங்கா மூஸ்லீமை பார்த்து அப்ப நீங்க தமிழா என்று கேட்டார் உடனே சிறிலங்கா மூஸ்லீம் கோபபட்டு இல்லை,நான் ஒரு முஸ்லீம் என்று தன்னை அடையாளபடுத்துறதிற்கு முற்பட்டார் இந்தியாவை பொறுத்தவரை அங்கு மலையாளம் முஸ்லீம்கள்,தமிழ்முஸ்லீம்கள

தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் தமிழ்பற்றுள்ளவர்கள். அவர்கள் அவ்வாறு இருப்பதற்கான காரணங்களை அறிய முற்படுவது பயனுள்ளதாக இருக்கும்.

-1- புத்தன் சொன்னது போல் அங்கு பல்மொழி பேசும் பல்லின இஸ்லாமியர்கள் இருப்பதால் அதனுள் தமது தனித்துவத்தை மொழிசார்ந்து பேண முற்படுகிறார்களா?

-2- இந்துத்துவவாதிகளின் அடக்குமுறை என்பது அவர்களை தமிழராக பார்க்கத் தூண்டுகிறதா? அப்படி இருந்தால் மதத்தால் மற்றய மொழிபேசும் இஸ்லாமியர்களோடு தம்மை இணைத்து ஒருமித்த குரலை எழுப்பாது தமிழராக காட்டுவது ஏன்? இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஒரு குடையின் கீழ் king makers ஆகும் நிலையில் இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் அந்தந்த மொழிசார் இனம் சார் அரசியலில் தம்மை இனம் காண்பது அவர்களிற்கு பொருத்தமாக இருக்கிறதா?

-3- இலங்கைத் தீவில் உள்ள இஸ்லாமியர்களிற்கு மொழிப்பற்று ஏன் இல்லை? அவர்களது அரசியல் என்பது தமிழர்கள் சிங்களவர்களிற்கு இடையில் இருந்த பிணக்கினால் king makers ஆக இருந்ததால் வந்த பின்னணியா? சாதாரண இலங்கை இஸ்லாமியருக்கு அப்படிப்பட்ட ஒரு அரசியல் நிலைப்பாடு எப்படி வேகமாகப் பரவியது? கடந்த 30 வருடங்களிற்குள் ஒரு குழுமத்தின் upper middle உம் elites உம் பரவலாக இப்படி ஒரு நிலைப்பாட்டிற்கு ஒற்றுமையாக வருவது வேகமான பரவலாகத்தான் எனக்குப்படுகுது.

  • கருத்துக்கள உறவுகள்

quote name='இணையவன்' date='Aug 22 2007, 04:08 PM' post='336756']

மதம் தடை செய்யப்படக் கூடாது. உலகில் ஒவ்வொருவருக்கும் தாம் விரும்பும் மதத்தையோ கடவுளையோ பின்பற்றும் உரிமை உண்டு. அதைப் பறிப்பது மனித உரிமை மீறலாகும்.

மாறாக மதச் சார்பற்ற ஆட்சிதான் உருவாக்கப்படும்.

மதத்தினால் மக்களுக்கு பிரயோசனம் இல்லையென்றால், மக்களுக்கு பிரச்சனயை உருவாக்குகிறது எனில் மதம் எதற்கு? இல்லாமல் இருப்பதே நல்லது.மதம் மனிதனின் நன்மைக்கு மனிதனால் உருவாக்கப்பட்டது. அது மனிதனுக்கு உதவாத போது அதனை இல்லாது செய்ய மனிதனுக்கு உரிமை நிச்சயமாக இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கோ தன் குறுக்குப் புத்தியை எல்லா இடத்திலும் காட்ட முயல்கின்றார். இந்து மதத்தவர்கள் போல, அவர்கள் வாயை மூடிக் கொண்டு இருக்கமாட்டார்கள் என்பதால் அவர்கள் குறித்து அடக்கி வாசிக்கின்றார் போல.

எங்கு போனாலும் இந்து மதத்தையும் பிராமணர்களையும் திட்டும் இவர்களின் வெறி எப்போது அடங்கும்???

தனிமனித தாக்குதல்கள் தேவையற்றது என நினைக்கிறேன்.

நண்பர் தூயவன் அவர்களே!

மதம் மடமையின் பிறப்பிடம் என்ற எங்களின் கருத்து அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

ஆனால் இந்து மதம் போல் மற்ற மதங்கள் படு மோசமாக இல்லை. இஸ்லாமில் பிறவி ஏற்றத்தாழ்வுகள் இல்லை ஆனால் பெண்ணடிமைத்தனம் உண்டு. பௌத்தத்தை நான் மதமாகக் கருதவில்லை. ஆனால் பெண்களுக்கு அன்றே சமத்துவத்தைக் கொடுத்தவர் புத்தர். சமணத்தையும் நான் மதமாகக் கருதவில்லை ( ஏனெனில் பௌத்தமும் சமணமும் கடவுளை மறுத்தவை). தமிழ் இலக்கியத்திற்கு புது ரத்தம் பாய்ச்சியவர்கள் என்ற வகையில் சமணத்துறவிகளிடம் மதிப்பு உள்ளது. கிறிஸ்தவம் மூடநம்பிக்கைகளின் களமாக இருந்தாலும் தமிழ் சமூகத்தில் பல நல்ல சமூகமாற்றங்களுக்கு உதவியிருக்கின்றன (உதாரணம் : பெண்கல்வி ....).

ஆனால் பார்ப்னியமும் இந்து மதமும் என்ன செய்தவை? சாதி என்ற சொல்லே இல்லாத தமிழ் சமூகத்தில் சாதிய இழிவைக் கற்பித்தன. தமிழர்களை தாசி புத்திரர்கள் என்றவர்கள் யார்? தமிழை நீச பாஷை என்று கூறி விலக்கி வைத்தவர்கள் யார்?

சபேசனின் இந்தப் பதிவு தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் இஸ்லாமியத் தமிழர்களை இணைப்பது தொடர்பானது. சிங்களப் பெருந்தேசியத்தை எதிர்கொள்ள இது மிகவும் அவசியம். இது தொடர்பான கருத்துக்களை இங்கு வைப்பது நல்லது.

இரு பக்கங்களிலும் தவறுகள் உள்ளன. சபேசன் எழுதி உள்ளதைப்போல் அன்றைய தலைவர்களின் தவறுகள் இவற்றுக்கு பெரிதும் காரணமாக இருந்திருக்கின்றன. அவர்களும் தமிழர்கள்தானே!

Edited by இளங்கோ

காலத்தின் தேவையானதும் யதார்த்தமானதுமான பல விடயங்களை உள்ளடக்கிய கட்டுரை.

புத்தன் கூறுவதைப் போல இஸ்லாமியர்க்ள தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள வில்லை என்பது உண்மை தான். அதேவேளை தமிழர்களாகிய எங்களில் பலரும் இஸ்லாமியர்களை தமிழர்களாக ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.

ஏன் நாங்கள் மலையகத் தமிழர்களைக் கூட எங்கள் சகோதரர்களாகப் பார்க்கவில்லையே. இந்தியப் பிரஜாவுரிமைப் பறிப்பின் போது கூட நாங்கள் பெரும் வரலாற்றுத் தவறைச் செய்திருக்கிறோம்.

பழையதை விட்டுவிட்டு இப்போது நாம் எவ்வாறு ஓரணியில் திரள முடியும் என்று திட்டமிட்டு;ச சயெல்படுவதே தேவையாக இருக்கிறது.

வடதமிழீழ இஸ்லாமியர்களை போல் இல்லை தெந்தமிழீழ இஸ்லாமியர்கள் ஆனாலும் இஅவர்களை இனைத்தே தமிழீழம் அமையாவேண்டிய நிலையில் நாம் ஆகவே கட்டுரையாளர் சொன்னது போல அதுக்கான முன்னேடுப்புக்களை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்( உண்மையில் இஸ்லாமியர்கள் விடயத்தில் தலைவர் தெளிவாக செய்ற்படுகிறார்கள் ஆனால் அவர்கள் தான் தற்காலிக அரசியல் லாபத்துக்காக தங்களையும் எங்களையும் அழிவுக்கு கொண்டு செல்வதுக்கு சிங்கள அரசுக்கு உதவியாக நிக்கிறார்கள்)

மலையக தமிழர்களை பொறுத்த மட்டில் அவர்களின் பிரச்சனை வேறு ஆனால் அதையும் எங்கள் போரரட்டத்தின் முலம் தீர்க்க முடியும் ..

தமிழீழம் அமையும் போது நிச்சயமாக அவர்கள் சிங்கள காடையர்களால் அடித்து திரத்த படுவார்கள்

அவர்களுக்கு தமிழீழ வாழ்வுரிமை கொடுக்கப்படவேண்டும் பட்ட கஷ்டத்துடன் சில வருடம் வேலை இல்லாத பல பிரச்சனைகள் தோன்றலாம் அல்லது அடங்கி இருந்த சாதி பிரச்சனைகள் எழலாம் ஆனா அதை எல்லாம் அடக்கி ஒன்று பட்டு சிறந்த தமிழீழத்தை கட்டிஎழுப்ப தமிழீழத் தமிழர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் மனவுறுத்தியோடு செயற்ப்பட்டா நிச்சையமாக வெல்வோம்..................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.