Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாடகைத்தாய் மூலம் நடிகை நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாடகைத்தாய் மூலம் நடிகை நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை ?

By T. SARANYA

10 OCT, 2022 | 10:56 AM
image

வாடகைத்தாய் மூலம் நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கேரளாவை சேர்ந்த நயன்தாரா 2005 இல் தமிழில் 'ஐயா' படத்தில் அறிமுகமாகி 17 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கிறார். 

இவர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டார். இருவரும் 8 வருடங்களாக காதலித்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி மாமல்லபுரத்தில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்று வாழ்த்தினர். 

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நேற்று இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியானது. 

விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், "நானும், நயன்தாராவும் அப்பா அம்மா ஆகி விட்டோம் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

எங்கள் பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிகள் இணைந்து குழந்தைகள் வடிவில் வந்துள்ளன. எங்கள் உயிர், உலகத்துக்கு உங்கள் அனைவருடைய ஆசீர்வாதங்களும் தேவை" என்று பதிவிட்டு உள்ளார். 

அதோடு குழந்தைகளின் கால்களை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும், ரசிகர்களூம் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

நயன்தாரா கர்ப்பமாக இருக்கும் தகவலை இருவரும் வெளியிடவில்லை. இதனால் அவருக்கு குழந்தை பிறந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் அவர் வாடகைத்தாய் மூலம் இந்த குழந்தைகளை பெற்று இருப்பதாக தகவல் வெளியானது. எனினும் இது குறித்து விக்கி - நயன் தரப்பு எதுவும் குறிப்பிடவில்லை. 

ஏற்கனவே இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

65.JPG

64.JPG

310319558_507110067618547_49028395142663

https://www.virakesari.lk/article/137336

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்..🌹

ம்ம்.. ஆனாலும் இதனுள் புதைந்துள்ள சூட்சுமங்கள் ஒன்னுமே புரியலை..! 🤔

Boss-nayan.gif

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

வாழ்த்துகள்..🌹

ம்ம்.. ஆனாலும் இதனுள் புதைந்துள்ள சூட்சுமங்கள் ஒன்னுமே புரியலை..! 🤔

Boss-nayan.gif

இதில சூட்ச்சுமம் ஒன்றும் இல்லை. 

அளவுக்கு அதிகமாக, கருத்தடை மாத்திரம் பாவித்தால், சிஸ்டம் குளறுபடியாகி, பிள்ளை பெற முடியாமல் போகும்.

ஒரு மூன்று வருசத்துக்கு பிள்ளை வேண்டாம், ஜாலியா இருப்போம், என்று கருத்தடை மாத்திரை பாவிக்கும் சாதாரண குடும்ப பெண்களும், பாதிப்புக்கு உள்ளாக்கின்றனர்.

அதுதான், இந்த நடிகைகளுக்கு வரும் பெரிய பிரச்சனை.

உண்மையில், ஆணுறை அல்லது பெண்களுக்கான லூப் பாதுகாப்பானது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

இதில சூட்ச்சுமம் ஒன்றும் இல்லை. 

அளவுக்கு அதிகமாக, கருத்தடை மாத்திரம் பாவித்தால், சிஸ்டம் குளறுபடியாகி, பிள்ளை பெற முடியாமல் போகும்.

ஒரு மூன்று வருசத்துக்கு பிள்ளை வேண்டாம், ஜாலியா இருப்போம், என்று கருத்தடை மாத்திரை பாவிக்கும் சாதாரண குடும்ப பெண்களும், பாதிப்புக்கு உள்ளாக்கின்றனர்.

அதுதான், இந்த நடிகைகளுக்கு வரும் பெரிய பிரச்சனை.

உண்மையில், ஆணுறை அல்லது பெண்களுக்கான லூப் பாதுகாப்பானது. 

நாதம். நீங்கள் அனுபவசாலி 🤣

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Nathamuni said:

இதில சூட்ச்சுமம் ஒன்றும் இல்லை. 

அளவுக்கு அதிகமாக, கருத்தடை மாத்திரம் பாவித்தால், சிஸ்டம் குளறுபடியாகி, பிள்ளை பெற முடியாமல் போகும்.

ஒரு மூன்று வருசத்துக்கு பிள்ளை வேண்டாம், ஜாலியா இருப்போம், என்று கருத்தடை மாத்திரை பாவிக்கும் சாதாரண குடும்ப பெண்களும், பாதிப்புக்கு உள்ளாக்கின்றனர்.

அதுதான், இந்த நடிகைகளுக்கு வரும் பெரிய பிரச்சனை.

உண்மையில், ஆணுறை அல்லது பெண்களுக்கான லூப் பாதுகாப்பானது. 

 

29 minutes ago, Kandiah57 said:

நாதம். நீங்கள் அனுபவசாலி 🤣

 

Doctor GIFs | Tenor

நாதம்ஸ்... இதிலை, டாக்டர் பட்டம்  பெற்றவர். 😁

  • கருத்துக்கள உறவுகள்

 

Feszg2YaUAEoWJ_?format=jpg&name=small

 

நான் சூட்சுமம் என சொன்னது இந்த விதிகள் பற்றியது.

திருமணமாகி நான்கே மாதத்தில் எப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும்?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ராசவன்னியன் said:

 

Feszg2YaUAEoWJ_?format=jpg&name=small

 

நான் சூட்சுமம் என சொன்னது இந்த விதிகள் பற்றியது.

திருமணமாகி நான்கே மாதத்தில் எப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும்?

ராசவன்னியன். இதிலே 4ஆம் 5ஆம். விதிமுறைகளை பின்பற்றி பணத்தை அள்ளி விசி  நயன் விக்கி தம்பதியினர் வெற்றி பெறலாம் 😄

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

நாதம். நீங்கள் அனுபவசாலி 🤣

 

3 hours ago, தமிழ் சிறி said:

 

 

Doctor GIFs | Tenor

நாதம்ஸ்... இதிலை, டாக்டர் பட்டம்  பெற்றவர். 😁

IVF சிகிச்சை, வாடகைத்தாய், இலங்கையில், இந்தியாவில் எப்படி காசு பறிக்கிறார்கள் என்று அப்படி சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற ஒரு நண்பர் முலம் நன்கு கேள்விப்பட்டுளேன்.

அவரிடம் இருந்து அறிந்த விசயம், இந்தியாவில் அதிகம் சிகிச்சை பெறும் தமிழர்களில் அதிகமானவர்கள் மட்டக்கிளப்பு பகுதியை சேர்ந்தவர்களாம். காரணம் புரியவில்லை என்றார்.

சிலர், அங்கேயே தங்கி இருந்து, வாடகை தாய் முறையில் பெற்றுக் கொண்டு, IVF சிகிச்சை மூலம் கிடைத்தாக சொல்வதும் உண்டாம். இந்தியாவில் சாத்தியம் என்கிறார்.

எமக்கு வராதவரை, அது புரியாது. ஆனால், குழந்தை செல்வம் இல்லாமை பலருக்கு ஒரு பெரும் பரிதவிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ராசவன்னியன் said:

FetNJtNacAEz3HO?format=jpg&name=900x900

ஏனப்பா கர்ப்பமாக இருக்கேக்கையே கல்யாணமும் செய்திருக்கலாம் தானே

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, வாதவூரான் said:

ஏனப்பா கர்ப்பமாக இருக்கேக்கையே கல்யாணமும் செய்திருக்கலாம் தானே

திருமண விழா படங்கள் பார்த்திருக்கிறேன் அப்படி தெரியவில்லை  அப்படி இருத்தல் தமிழ் சிறி அண்ணை ஒரு திரி திறந்து பத்து பக்கங்கள் ஓட விட்டிருப்பார். நயன்தாரா விக்கி தம்பதியினர் திருமணத்திற்கு முன்பே வாடகை தாயை எற்பாடு செய்துள்ளனர் திருமண எழுத்து எப்போது எழுதினார்கள்?.  யாருக்காவது தெரியுமா? பல வருடங்களுக்கு முன்பே எழுதினால் சட்ட சிக்கல் வரும் வாய்ப்பு இல்லை 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதில் இத்தனை சிக்கலா? சட்ட விதிகள் தெரியுமா?

  • க.சுபகுணம்
  • பிபிசி தமிழ்
7 நிமிடங்களுக்கு முன்னர்
 

வாடகைத் தாய்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக நேற்று தங்களது சமூக ஊடக பக்கங்களில் அறிவித்தனர். இந்நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் வாடகைத் தாய் மூலம் தான் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டதாக பேசப்பட்டு வருகின்றன.

அது ஒருபுறமிருக்க, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது என்றால் என்ன, அதற்கான சட்ட விதிமுறைகள் இந்தியாவில் எப்படியுள்ளன என்பது குறித்து இங்கு பார்ப்போம். வாடகை தாய்மை என்பது ஒரு நபர் சுயமாக கருத்தரிக்க முடியாத தம்பதிக்காக குழந்தையைச் சுமந்து பெற்றெடுத்து வழங்கும் ஓர் ஏற்பாடு.

குழந்தையைச் சுமக்க முடியாத பெண்ணின் கருமுட்டை மற்றும் அவரது துணையின் விந்தணு இரண்டையும் எடுத்து உருவாக்கப்படும் கருவை, வேறொரு பெண் சுமந்து பெற்றுக் கொடுப்பார். அவர் வாடகைத் தாய் என்றழைக்கப்படுவார்.

இதில், வாடகைத் தாய் குழந்தையைச் சுமந்தாலும் அந்தக் குழந்தைக்கான முழுப் பொறுப்பும் பெற்றோரிடம் தான் இருக்கும். ஒரு பெண்ணின் கருப்பை குழந்தையைச் சுமக்க முடியாத நிலையில் இருந்தால் அவருடைய கருமுட்டையையும் அவருடைய துணையின் விந்தணுவையும் எடுத்து உருவாக்கப்படும் கருவை வாடகைத் தாய் சுமப்பார். அப்படியில்லாமல், கருப்பை குழந்தையைச் சுமக்க முடியாமலும் கருமுட்டையின் ஆரோக்கியமும் கருவை உருவாக்கும் நிலையில் இல்லாமலும் இருந்தால், தானமாக வழங்கப்படும் கருமுட்டையைப் பயன்படுத்தியும் கருவை உருவாக்கி வாடகைத் தாயின் கருப்பையில் வைக்கப்படும்.

 

இதில், தந்தையின் விந்தணுவோடு தாயின் கருமுட்டை அல்லது தானமாகப் பெற்ற கருமுட்டையும் பயன்படுத்தப்படுவது, தானமளிப்பவரின் விந்தணு மற்றும் தானமளிப்பவரின் கருமுட்டை அல்லது தாயின் கருமுட்டை என்று பயன்படுத்தப்படும்.

"வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையில் தற்போது பல கட்டுப்பாடுகள் இந்தியாவில் உள்ளன. 2022ஆம் ஆண்டில் இருந்தே பெரியளவில் யாரும் இந்த முறையை நாடுவதில்லை," என்கிறார் மகப்பேறு மருத்துவர் உமையாள் முருகேசன்.

"சில பெண்களுக்கு கருப்பை ஆரோக்கியமாக இருக்காது. சில பெண்கள் கருப்பையே இல்லாமல் பிறந்திருப்பார்கள். சில நேரங்களில் கருப்பையில் கட்டி வந்து அகற்றப்பட்டிருக்கும். இப்படி ஏதோவொரு காரணத்தால் கருப்பை பயன்படாமல் போகும்போது, சம்பந்தப்பட்ட பெண்ணி கருமுட்டை மற்றும் கணவரின் விந்தணுவை எடுத்து குழந்தையை உருவாக்கப்படும்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஆனால், அந்தக் கருவைச் சுமப்பது மட்டும் வாடகைத் தாய் என்றழைக்கப்படும் வேறு பெண்ணாக இருப்பார். குழந்தையை பெற்றுக்கொள்ளப் போகும் தம்பதியுடைய மரபணுக்களை தான் குழந்தையும் கொண்டிருக்கும். அதைச் சுமந்து, பெற்றுக் கொடுப்பது மட்டும் வேறொருவராக இருப்பார்.

பெண்ணுக்கு கருமுட்டை முழுமையாக வளர்ச்சியடையாத, அல்லது கருமுட்டையே இல்லாத நிலையில் கருப்பை இருந்தால், வேறொருவர் தானமாக வழங்கும் கருமுட்டையை கணவரின் விந்தணுவோடு சேர்த்து குழந்தைக்கான கருவை உருவாக்கலாம். அப்படி உருவாக்கிய பிறகு அதே வாடகைத் தாய் முறையில் பெற்றெடுக்கப்படும்," என்கிறார் மருத்துவர் உமையாள்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

அதிகரிக்கும் குழந்தையின்மை பிரச்னை

இந்தியாவில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகப்பேறு உதவி தொழில்நுட்ப கட்டுப்பாடு சட்டம் 2021 (ACT Regulation Act 2021), வாடகைத் தாய்மை கட்டுப்பாடு சட்டம் 2020 ஆகிய குழந்தைப் பேறு குறித்த இரண்டு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்தியாவில் மகப்பேறு மருத்துவம் கடந்த 20 ஆண்டுகளில் மிகப் பெரியளவில் வளர்ச்சியடைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு, பெங்களூரைச் சேர்ந்த மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான இனிட்டோ மேற்கொண்ட ஓர் ஆய்வில், நாடு முழுவதும் 27.5 மில்லியன் மக்கள் மகப்பேறு சார்ந்த பிரச்னைகளால் அவதிப்படுவதாகக் கூறுகிறது. இந்தியாவில் குழந்தையின்மையால் 3.9% முதல் 16.8% வரையிலான தம்பதிகள் அவதிப்படுவதாக உலக சுகாதார நிறுவன தரவுகள் குறிப்பிடுகின்றன.

குழந்தையின்மை பிரச்னை நாடு முழுக்க பெரிய சிக்கலாக உருவெடுத்த காரணத்தால் அதற்கான மருத்துவத் துறையிலும் அதன் வளர்ச்சி அதிகரித்தது. கடந்த பத்தாண்டுகளில், மகப்பேறு குறித்த நெறிமுறை அடிப்படையிலான சிக்கல்கள், குழந்தைகளின் காவல், வாடகைத் தாயின் ஆரோக்கியம் என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், அதுகுறித்த கட்டுப்பாடுகள் அதிகரித்தன.

 

வாடகைத் தாய்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆரம்பத்தில், 2005ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சில் இந்தத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கியது. 2021ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மகப்பேறு குறித்த சட்டங்கள், நாட்டில் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம், வாடகைத் தாய் சேவைகளை யார் அணுகலாம், அணுக முடியாது, தம்பதி, வாடகைத் தாய், முட்டை தானம் செய்பவர் ஆகியோரின் நலன், சிகிச்சையை வழங்கும் நிறுவனங்கள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படும் என்று பல விஷயங்களை இந்த சட்டங்கள் பேசுகின்றன.

வாடகைத் தாய்மை குறித்து சட்டம் என்ன சொல்கிறது?

மக்களவையில் 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதியன்று இதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு, 2021ஆம் ஆண்டின் இறுதியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் 2022 ஜனவரி மாதம் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்த சட்டம் வாடகைத் தாய்மை முறையை, சில கட்டுப்பாடுகளோடு வரையறுத்துள்ளது. ஒரு தம்பதிக்காக வாடகைத் தாயாக இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண், குழந்தை பிறந்த பிறகு அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மகப்பேறின்மை பிரச்னை ஒரு தம்பதிக்கு இருந்தாலோ அல்லது ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே வாடகைத் தாய் முறை அனுமதிக்கப்படுகிறது.

அதிலும் அவர்களுக்கு நெருங்கியவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும். அப்படி வாடகைத் தாயாக இருக்க முன்வருபவர், 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் பெற்றோராக விரும்பும் தம்பதிக்கு நெருக்கமான உறவினராகவும் இருக்க வேண்டும். இதை வணிக நோக்கோடு செய்வது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைப்படி குழந்தை பிறந்தவுடன், முற்றிலும் உயிரியல்ரீதியாக தம்பதியின் குழந்தையாகவே அது கருதப்படும்.

இந்த வாடகை தாய்மை ஒழுங்குமுறை சட்டம் அமலுக்கு வந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சுகாதார அமைச்சகம் வாடகைத் தாய்மை குறித்த சில விதிகளை அறிவித்தது. அதன்படி, பெற்றோராக விரும்பும் தம்பதிகள் அவர்களுக்காக குழந்தை பெற்றுக்கொடுக்கும் வாடகைத் தாய்மார்களுக்கு மூன்றாண்டுகள் சுகாதார காப்பீடு வாங்க வேண்டும். இதற்கான முயற்சியை மேற்கொள்ளும்போது, வாடகைத் தாயாக முன்வந்த பெண்ணிடம் அதற்கான சிகிச்சை முயற்சிகளை மூன்று முறைக்கு மேல் செய்யக்கூடாது. மேலும், அந்த விதிகளின்படி கர்ப்பத்தில் ஏதேனும் மருத்துவ சிக்கல் ஏற்பட்டால் கருவை கலைப்பதற்கு அவர் அனுமதிக்கப்படுவார்.

 

வாடகைத் தாய்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கருமுட்டை அல்லது விந்தணு தானம்

பதிவு செய்யப்பட்ட மகப்பேறுக்கு உதவும் தொழில்நுட்ப வங்கி, 21 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட ஆண்களின் விந்தணுவை உரிய பரிசோதனைகளுக்குப் பிறகு சேகரித்து, சேமிக்கலாம். 23 முதல் 35 வயது வரையுள்ல பெண்களின் முட்டைகளை சேமித்து வைக்கலாம்.

இந்த சட்டத்தின் கீழ், கருமுட்டையை தானமளிக்கும் பெண்களுக்குக் குறைந்தபட்சம் ஒரு குழந்தையாவது இருக்க வேண்டும். ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அதுவும் ஏழு முட்டைகள் வரை மட்டுமே தானமளிக்க முடியும். ஆண் ஒருவரின் விந்தணுவை ஒன்றுக்கு மேற்பட்ட தம்பதிகளுக்கு வங்கி வழங்கக் கூடாது.

அத்தகைய நடைமுறைகளுக்கு தம்பதிகள், தானமளிப்பவர்கள் இருவரின் எழுத்துபூர்வ ஒப்புதல் தேவை.இந்த நடைமுறையை நாடும் தம்பதிகள், கருமுட்டையை தானமளிக்கும் பெண்களுக்கு இழப்பு, சேதம், மரணம் போன்றவற்றுக்கான காப்பீடு வழங்க வேண்டும்.

குழந்தைக்கான பாலினத்தைத் தேர்வு செய்து மகப்பேறுக்கு உதவுவது தடை செய்யப்பட்டுள்ளது. அப்படிச் செய்தால், அதற்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

இந்த நடைமுறையில் பிறக்கும் குழந்தை, சட்டப்படி பெற்றோராக விரும்பி இந்த முறையில் பெற்றுக்கொண்ட தம்பதியின் உயிரியல் குழந்தையாகவே கருதப்படும். அதன்மூலம் கிடைக்கும் அனைத்தும் உரிமைகளும் குழந்தைக்கு உண்டு. தானமளிப்பவர் குழந்தை மீதான எந்த உரிமையையும் வைத்துக்கொள்ள முடியாது.

https://www.bbc.com/tamil/india-63197059

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, Kandiah57 said:

திருமண விழா படங்கள் பார்த்திருக்கிறேன் அப்படி தெரியவில்லை  அப்படி இருத்தல் தமிழ் சிறி அண்ணை ஒரு திரி திறந்து பத்து பக்கங்கள் ஓட விட்டிருப்பார். நயன்தாரா விக்கி தம்பதியினர் திருமணத்திற்கு முன்பே வாடகை தாயை எற்பாடு செய்துள்ளனர் திருமண எழுத்து எப்போது எழுதினார்கள்?.  யாருக்காவது தெரியுமா? பல வருடங்களுக்கு முன்பே எழுதினால் சட்ட சிக்கல் வரும் வாய்ப்பு இல்லை 🤣

 

Quote

வாடகைத்தாய் மூலம் நடிகை நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை ?

நான் வீட்டிலை சும்மாதான் இருக்கிறன். ஆருக்கும் வாடகை தேப்பன் வேணுமெண்டால் கூச்சப்படாமல்  விண்ணப்பிக்கலாம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நான் வீட்டிலை சும்மாதான் இருக்கிறன். ஆருக்கும் வாடகை தேப்பன் வேணுமெண்டால் கூச்சப்படாமல்  விண்ணப்பிக்கலாம். 😎

இவரைப் பார்ரா..ம்...🤗 🤭

Air.gif

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

இவரைப் பார்ரா..ம்...🤗 🤭

Air.gif

வன்னியர் பயங்கர குசும்பர்.... 😜

  • கருத்துக்கள உறவுகள்

நயன்தாரா பிள்ளை பெத்ததோடை…
பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பற்றி ஒருவரும் அக்கறை எடுக்கவில்லை. 😜
எல்லாரும்  9🦤 வீட்டுக்கு பிள்ளைப்பெறு பார்க்க போய் விட்டார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

வன்னியர் பயங்கர குசும்பர்.... 😜

இந்த வயசுல ஆளோட லொள்ளு தாங்க முடியலை. கு.சா எழுதியதை படித்தவுடன், இந்த 'காத்து' நகைச்சுவைதான் உடனே ஞாபகத்துக்கு வந்தது.
(இதை நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக்கொள்வார் என நம்புகிறேன்.)

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2022 at 11:19, Nathamuni said:

உண்மையில், ஆணுறை அல்லது பெண்களுக்கான லூப் பாதுகாப்பானது. 

லூப் பாதுகாப்பென்று யார் சொன்னது. அதனால் பல கர்ப்பபை சார்ந்த பிரச்சனைகள்.. நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. 

மனக்கட்டுப்பாடும்.. தனி நபர் ஒழுக்கமுமே சிறந்த பாதுகாப்பு. அதனை வளர்த்துக் கொள்ளாததன் விளைவுகளில் இதுவும் ஒன்று. 

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தவறல்ல. அந்த தாய்க்குரிய அந்தஸ்தும் ஊதியமும் சரிவர வழங்கப்படின். 

8 hours ago, குமாரசாமி said:

நான் வீட்டிலை சும்மாதான் இருக்கிறன். ஆருக்கும் வாடகை தேப்பன் வேணுமெண்டால் கூச்சப்படாமல்  விண்ணப்பிக்கலாம்.

உங்க விருப்பம் எதை நோக்கி என்பது விளங்குது. ஆனால்.. அங்க பிசிக்கல் ரச் எல்லாம் கிடையாது. ஊசி தான் ரச் பண்ணும். எப்படி வசதி. 🤣

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நயன்தாரா பிள்ளை பெத்ததோடை…
பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பற்றி ஒருவரும் அக்கறை எடுக்கவில்லை. 😜
எல்லாரும்  9🦤 வீட்டுக்கு பிள்ளைப்பெறு பார்க்க போய் விட்டார்கள். 😂

போனாக்களுக்குத்தானாம்  முப்பத்தொன்றுக்கு சொல்லுவினம்.ஆனால் கமரா கொண்டு போகேலாதாம்...முழு உரிமையையும் உதயநிதி வாங்கிப்போட்டாராம்...ரிவி உரிமைதான் பாருங்கோ

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, alvayan said:

போனாக்களுக்குத்தானாம்  முப்பத்தொன்றுக்கு சொல்லுவினம்.ஆனால் கமரா கொண்டு போகேலாதாம்...முழு உரிமையையும் உதயநிதி வாங்கிப்போட்டாராம்...ரிவி உரிமைதான் பாருங்கோ

இதெல்லாம் kim kardashian ஸ்டைல் வியாபாரம் தமிழ்நாட்டுக்கு புதிது .

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பற்றி.. 2008 இல் குருவிகளின் அறிவியல் வலைப்பூவில்..

கருப்பையை வாடகைக்கு விட்டு இந்தியப் பெண்கள் சாதனை.

றுபீனா என்ற பெண் கருப்பையை வாடகைக்கு விட்டு ஒரு அழகிய வெள்ளையினக் குழந்தையை அமெரிக்க உயிரியல் தாய்க்காகப் பெற்றெடுத்துள்ள காட்சி.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந் நகரில் வாழும் பெண்களில் பலர் தமது வருவாய் கருதி தங்கள் கருப்பைகளை வாடகைக்கு விட்டு குழந்தைகள் அற்றவர்களுக்கு vitro (ஆய்வுசாலை வழிமுறையில்) முறையில் ( IVF - in-vitro fertilisation ) உருவாக்கப்படும் கருக்களை சுமந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர்.

கடந்த 3.5 வருடங்களில் மட்டும் இந்த நகரில் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சுமார் 150,000 பெண்கள் தங்கள் கருப்பையை வாடகைக்கு விட்டு குழந்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதற்காக அவர்களுக்கு சுமார் $6500 தொடங்கி $15,000 வரை கூலி வழங்கப்படுகிறது. குறிப்பாக போதிய வருமானமின்றி வாழும் குடும்பங்களில் உள்ள பெண்களே இதில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பதுடன் அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து வரும் பணக்காரர்களுக்கு கூட இவர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்கின்றனர்.

http://newsimg.bbc.co.uk/media/images/44377000/jpg/_44377595_nayana_patel203.jpg

IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கும் வாடகைத் தாய்களுக்கும் உதவும் டாக்டர் Patel.

vitro முறைக்கருக்கட்டல் பொறிமுறையில் தேர்ச்சி பெற்ற இந்திய பெண் வைத்தியரான Dr Patel கூறுகையில் இந்த முறைமூலம் ஒருவருக்கு ஒருவர் உதவக் கூடியதாக இருப்பதுடன் பணமும் சம்பாதிக்க முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனக்கும் ஓரளவு வருமானம் வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் இதே முறையை தான் அமெரிக்காவில் மேற்கொண்டால் இதை விட உயர்வாக சம்பாதிக்க முடியும் எங்கிறார்.

http://newsimg.bbc.co.uk/media/images/44377000/jpg/_44377598_pushpa_family_203.jpg

கருப்பையை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் வீடு கட்டும் புஷ்பா எனும் பெண்ணும் அவளின் குடும்பத்தினரும்.

கருப்பையை வாடகைக்கு விடுதல் உலகில் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகி உள்ள போதும் இந்தியாவில் கூலிக்கு வாடகைக்கு விடுதல் சட்டப்படி பெண்களுக்கு அனுமதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.


http://kuruvikal.blogspot.com/2008/03/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/10/2022 at 12:57, ராசவன்னியன் said:

இவரைப் பார்ரா..ம்...🤗 🤭

Air.gif

வன்னியருக்கு நம்ம பவர் தெரியேல்ல......ஐயோ பாவம்😁

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

வன்னியருக்கு நம்ம பவர் தெரியேல்ல......ஐயோ பாவம்😁

 

என்ன அநியாயம்? ஒரு கிழப்பயலுடன். ஆழகிய இளம்பெண்கள் நடனமாடுகிறார்கள் ...🤣😂 எனறாலும்.   நன்றாகவே இருக்கிறது 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

என்ன அநியாயம்? ஒரு கிழப்பயலுடன். ஆழகிய இளம்பெண்கள் நடனமாடுகிறார்கள் ...🤣😂 எனறாலும்.   நன்றாகவே இருக்கிறது 🤣

ரஜனிசார் வயது வித்தியாசம் இல்லாமல் எது செய்தாலும் அநியாயமில்லையோ கந்தையர்? 🤣

Tumblr

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவன் விக்கியை..சிங்கன் என்றுயோசிச்சன்...இவன் பாவி ஊசியாலை விளையாட்டுக்காட்டி ..பேய்க்காட்டிப் போட்டான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.