Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை நான் அழிக்கவில்லை – எரிக்சொல்ஹெய்ம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் !

விடுதலைப் புலிகளை நான் அழிக்கவில்லை – எரிக்சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் மாகாணங்களிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் காணாமல் போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தாம் அதன் ஒரு பகுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1305023

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளை நான் அழித்தேன் என தெரிவிக்கப்படுவது சரியான விடயமில்லை- எரிக் சொல்ஹெய்ம்

By Rajeeban

15 Oct, 2022 | 08:38 AM
image

விடுதலைப்புலிகளை நான் அழித்ததாக தெரிவிக்கப்படுவது சரியானதில்லை என தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம்  காணாமல்போனவர்கள் குறித்த பதில்களை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும்  வடக்கிற்கு அதிகார பகிர்வு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தீவிரவாத போக்குடைய தமிழ் சிங்களவர்கள் உள்ளனர் சிங்கள தீவிரவாதிகள் நான் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவளித்தாக தெரிவித்தனர்,

தமிழ்தீவிரவாதிகள் நான் விடுதலைப்புலிகளை அழித்தேன் என தெரிவித்தனர் இரண்டும் சரியான விடயமில்லை.

நாங்கள் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பினோம்.

ஆனால் இன்று நான் இலங்கையின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துகி;ன்றேன் - அதன் ஒரு பகுதியாக இருப்பது குறித்து நன்றியடைகின்றேன்.

உலகின் அழகான இடங்களில் இலங்கையும் ஒன்று 

இலங்கை தனது எதிர்காலம் குறித்து சிந்திக்கவேண்டும் எப்படி பொருளாதாரரீதியாக அபிவிருத்தி செய்வது குறித்தும் மாகாணங்களிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்;;- குறிப்பாக  வடமாகாணத்திற்கு.

அதேவேளை தாய்மார் மனைவிமார் கணவன்மார் மகள்மார் உட்பட  பலர் யுத்தத்தின் இறுதி தருணங்களில் தங்களின் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறிய ஆவலாக உள்ளனர்.

ஆகவே இலங்கை காணாமல்போனவர்கள் உயிரிழந்தவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்கவேண்டும்- ஆயுதமோதலின் போது காணாமல்போதல் உயிரிழப்பு என்பது சாத்தியமே.

இலங்கை இது எவ்வாறு இடம்பெற்றது இடம்பெற்றிருக்கலாம் என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.

ஜனாதிபதி நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகளிற்கு தீர்வை காண்பது குறித்துஉறுதியாகவுள்ளார் என்பதை நான் அறிவேன் அரசியல் அமைப்பு சீர்திருத்தங்களையும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளையும் ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் முன்வந்ததன் காரணமாகவே சர்வதேச சமூகம் உதவி வழங்க முன்வந்தது.

என்னால் இலங்கையின் பொருளாதார சூழல் சவாலகள் குறித்து பேச முடியும்,எதிர்காலத்திற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கமுடியும்,

ஆனால் ஜெனீவா வர்ணணையாளராக மாறுவதற்கு நான் முயலவில்லை,அது நான் செய்ய விரும்பாத ஒன்று.

https://www.virakesari.lk/article/137672

  • கருத்துக்கள உறவுகள்

நம்புகிறோம், நம்பிக்கை தானே வாழ்க்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

நீங்கள் விடுதலை புலிகளை உளவு பார்த்ததை  என்னெண்டு சொல்லுறது????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் விடுதலை புலிகளை உளவு பார்த்ததை  என்னெண்டு சொல்லுறது????

எரிக் சொல்ஹெய்ம்... இலங்கை அரசியல்வாதிகள் மாதிரியே மாறி...
நாளுக்கு ஒவ்வொரு... பொய்யும் புரட்டும், அறிக்கையும் விட்டுக்  கொண்டு இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

விடுதலைப்புலிகளை நான் அழித்ததாக தெரிவிக்கப்படுவது சரியானதில்லை என தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர்

இவர் சமாதானத்தை ஏற்படுத்த தான் வந்ததாக கூறுகிறார் அப்படியானால் புலிகளின் காலத்தில் தீர்வு  கிடைத்து இருக்கணும் இல்லை புலிகள் இல்லாத இந்த 12 வருடகாலத்தில் தீர்வை பெற்றுகொடுத்து இருக்கனும் ஆனால் சமாதான விரும்பி எனும் வேடத்தில் இனவாத சிங்களம் எப்பவெல்லாம் கீழே விழுதோ அப்போதெல்லம் ஓடிவந்து தோள்கொடுக்கிறார் . புலிகள் இல்லாத நேரம் சிறைகளில் தமிழர்கள் அல்லல் படும் நேரம் இவர் ஓடி ஒழிந்து கிடந்தவர் தற்போது சிங்களவருக்கு பிரச்சனை என்றவுடன் தான் வந்து இருக்கிறார் . அதே போல் அக்கினி கீலவுக்கு புலிகளின் எதிர் தாக்குதலின் அகோரம் தாங்க முடியாமல் சிங்கள தேசமே கையறு நிலையில் இருக்கும்போது சமாதான தூதுவர் என்று சொல்லிக்கொண்டு இந்த வெள்ளை நரி வந்தது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, பெருமாள் said:

முற்றிலும் உண்மை.

1 hour ago, தமிழ் சிறி said:

எரிக் சொல்ஹெய்ம்... இலங்கை அரசியல்வாதிகள் மாதிரியே மாறி...
நாளுக்கு ஒவ்வொரு... பொய்யும் புரட்டும், அறிக்கையும் விட்டுக்  கொண்டு இருக்கிறார்.

முடிந்தால் உக்ரேனுக்குள் போய் சமாதான புறா வேலை பார்க்கட்டும்.😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எரிக் சொல்ஹெய்ம்... இலங்கை அரசியல்வாதிகள் மாதிரியே மாறி...
நாளுக்கு ஒவ்வொரு... பொய்யும் புரட்டும், அறிக்கையும் விட்டுக்  கொண்டு இருக்கிறார்.

அதுதான் வந்து ஒட்டிக்கொண்டிருக்கிறாரே. சமாதானத்தை ஏற்படுத்த வந்தவர் முடியாதவிடத்து வெளியேறியிருக்கவேணும். கடைசிமட்டும் விருந்துண்டு மகிழ்ந்து, இந்தியாவுக்கு ஒற்றர் வேலை பாத்து சொல்லி, அந்த இனத்தின் அழிவை வேடிக்கை பாத்து, அந்த இனம் அழிந்ததற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை, சிறையில் இருக்கும் இளைஞர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லி சிங்கள அரசை வற்புறுத்தவில்லை, மீண்டும் வந்துவிட்டார் ஏமாற்றி விருந்துண்டு ஊர் சுற்ற.  குணம் குணத்தோடுதான் சேரும், நரி இவரை தேடிப்பிடித்து கொண்டு வந்திருக்கிறது என்றால்; இதற்குப்பின்னால் பெரிய திட்டம் ஒன்று இல்லாமலில்லை, அதிலும் நம்ம சாணக்கியர்கள் சந்திப்பு சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது. வானிலை ஆலோசகருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? எதற்காக இவ்வளவு அவசரமாக சந்தித்திருக்கிறார்கள்? பழக்க தோஷத்தில மாறி போய்விட்டார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

காலநிலை ஆலோசகர்! 

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் நடந்தது இனப்படுகொலை இல்லை என்று சொன்னவர் நீங்கள் தான் திரு சொல்கைம். எப்படி இப்படியான மனிதர்கள் மனச்சாட்சி இல்லாமல் வாழ்கிறார்களோ தெரியவில்லை.

இந்த நரி பேச்சுவார்த்தையில் இறங்கிய போதே ஒரு பலஸ்தீனியர் சொன்னார் தங்களை கெடுத்தது மட்டுமில்லாமல் உங்கள் நாட்டிலும் வந்து இறங்கி விட்டார்கள்(நோர்வே) என.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

எரிக் சொல்ஹெய்ம்... இலங்கை அரசியல்வாதிகள் மாதிரியே மாறி...
நாளுக்கு ஒவ்வொரு... பொய்யும் புரட்டும், அறிக்கையும் விட்டுக்  கொண்டு இருக்கிறார்.

பண்டியுடன் சேர்ந்தா பசுவும் ———— தின்னும்

என்று சும்மாவா சொன்னார்கள்.

இன்று வரை தமிழர்களுக்கு ஒரு தீர்வு

அரசிடம் கையளித்தவர்களை காணாமல் போனோர் பட்டியலில் எப்படி சேர்ந்தார்கள்

கருணா பிள்ளையான் போன்றோர் வெளியுலகில் சுதந்திரமாக நடமாடும் போது சாப்பாடு கொடுத்தவன் அது இது என்று அரசியல் கைதிகளாக பிடித்து விசாரணை எதுவுமின்றி சிறைச்சாலையில் அடைத்து வைத்துள்ளார்களே

இதுகளைப் பற்றி என்றாவது வாய் திறந்ததுண்டா?

வெட்கம் கெட்ட மனிதன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் !

விடுதலைப் புலிகளை நான் அழிக்கவில்லை – எரிக்சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் மாகாணங்களிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் காணாமல் போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தாம் அதன் ஒரு பகுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1305023

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தாம் அதன் ஒரு பகுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

என்னது! சமாதானம் வந்து விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்+
10 hours ago, பெருமாள் said:

இவர் சமாதானத்தை ஏற்படுத்த தான் வந்ததாக கூறுகிறார் அப்படியானால் புலிகளின் காலத்தில் தீர்வு  கிடைத்து இருக்கணும் இல்லை புலிகள் இல்லாத இந்த 12 வருடகாலத்தில் தீர்வை பெற்றுகொடுத்து இருக்கனும் ஆனால் சமாதான விரும்பி எனும் வேடத்தில் இனவாத சிங்களம் எப்பவெல்லாம் கீழே விழுதோ அப்போதெல்லம் ஓடிவந்து தோள்கொடுக்கிறார் . புலிகள் இல்லாத நேரம் சிறைகளில் தமிழர்கள் அல்லல் படும் நேரம் இவர் ஓடி ஒழிந்து கிடந்தவர் தற்போது சிங்களவருக்கு பிரச்சனை என்றவுடன் தான் வந்து இருக்கிறார் . அதே போல் அக்கினி கீலவுக்கு புலிகளின் எதிர் தாக்குதலின் அகோரம் தாங்க முடியாமல் சிங்கள தேசமே கையறு நிலையில் இருக்கும்போது சமாதான தூதுவர் என்று சொல்லிக்கொண்டு இந்த வெள்ளை நரி வந்தது .

முழுக் கள்ளன்.

கூட இருந்து முதுகில் குத்தியவன். 

ஆனாலும் புலிகள் இவனது குணத்தைப் பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். எங்கோ ஒரு ஒலிப்பேழையில் இவனைப் பற்றியும் அக்காசி பற்றியும் கூறியிருந்தனர்.

அதை யோகி மாமா தான் சொல்லியிருந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தாம் அதன் ஒரு பகுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

என்னது! சமாதானம் வந்து விட்டதா?

சாணக்கியனும் சுமந்திரனும் ...சொல்கைமுடன் ரீ குடிக்கிறபடத்தைப் பார்த்தால் அப்படித்தான் கிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்ப தனக்குத்தானே வெள்ளையடிக்க முனைகிறார். எனி ஏற்றுக் கொண்டால் என்ன விட்டால் என்ன.

இப்பவும் அழிவுகளுக்கு வக்காளத்து வாங்குகிறார்.

யுத்தத்தில் இழப்புக்கள் நிகழும் என்பதை யாவரும் அறிவர். ஆனால் யுத்தத்தை நிறுத்திவிட்டு சரணடையச் சொல்லிவிட்டு திட்டமிட்டு கொல்லுவதும்.. பாதுகாப்பு வலயங்களை நிறுவிவிட்டு மக்களை அங்கு அழைத்துக் கொல்வதும்.. சரணடைந்தவர்களை காணாமல் ஆக்குவதும்.. யுத்த இழப்புக்கள் அல்ல. யுத்தம் முடிந்த பல ஆண்டுகளான பின்னும் அந்த மக்களையும் அவர்களின் பூமியையும் ஆக்கிரமித்து நிற்பதும் யுத்தத்தின் விளைவல்ல.

திட்டமிட்ட இன அழிப்பின் விளைவுகளாகும்.

இதனை முண்டு கொடுத்து நடப்பித்த சொல்கைம் யுத்த நிறுத்த கண்காணிப்பாளர் என்ற வகையில் யுத்தம் ஒன்று ஆரம்பிக்கப்படுவதையும் தடுக்கத் தவறியதோடு.. யுத்தத்தின் போதும்.. பின்னுமான திட்டமிட்ட இன அழிப்புக்களையும் தடுக்கத் தவறிவிட்டார். இது புலி அழிப்புக்கும் மேலான மகா கொடுமையான செயலாகும். இதற்கு சொல்கைம் தார்மீகப் பொறுப்பேர்க்க வேண்டும்.. மேற்கு நாடுகளையும் ஹிந்தியாவையும் இணைத்து இந்தக் கொடுமையை அரங்கேற்றியதற்காக. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

இவர் சமாதானத்தை ஏற்படுத்த தான் வந்ததாக கூறுகிறார் அப்படியானால் புலிகளின் காலத்தில் தீர்வு  கிடைத்து இருக்கணும் இல்லை புலிகள் இல்லாத இந்த 12 வருடகாலத்தில் தீர்வை பெற்றுகொடுத்து இருக்கனும் ஆனால் சமாதான விரும்பி எனும் வேடத்தில் இனவாத சிங்களம் எப்பவெல்லாம் கீழே விழுதோ அப்போதெல்லம் ஓடிவந்து தோள்கொடுக்கிறார் . புலிகள் இல்லாத நேரம் சிறைகளில் தமிழர்கள் அல்லல் படும் நேரம் இவர் ஓடி ஒழிந்து கிடந்தவர் தற்போது சிங்களவருக்கு பிரச்சனை என்றவுடன் தான் வந்து இருக்கிறார் . அதே போல் அக்கினி கீலவுக்கு புலிகளின் எதிர் தாக்குதலின் அகோரம் தாங்க முடியாமல் சிங்கள தேசமே கையறு நிலையில் இருக்கும்போது சமாதான தூதுவர் என்று சொல்லிக்கொண்டு இந்த வெள்ளை நரி வந்தது .

சொல்ல இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை 🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

இவர் இப்ப தனக்குத்தானே வெள்ளையடிக்க முனைகிறார். எனி ஏற்றுக் கொண்டால் என்ன விட்டால் என்ன.

இப்பவும் அழிவுகளுக்கு வக்காளத்து வாங்குகிறார்.

யுத்தத்தில் இழப்புக்கள் நிகழும் என்பதை யாவரும் அறிவர். ஆனால் யுத்தத்தை நிறுத்திவிட்டு சரணடையச் சொல்லிவிட்டு திட்டமிட்டு கொல்லுவதும்.. பாதுகாப்பு வலயங்களை நிறுவிவிட்டு மக்களை அங்கு அழைத்துக் கொல்வதும்.. சரணடைந்தவர்களை காணாமல் ஆக்குவதும்.. யுத்த இழப்புக்கள் அல்ல. யுத்தம் முடிந்த பல ஆண்டுகளான பின்னும் அந்த மக்களையும் அவர்களின் பூமியையும் ஆக்கிரமித்து நிற்பதும் யுத்தத்தின் விளைவல்ல.

திட்டமிட்ட இன அழிப்பின் விளைவுகளாகும்.

இதனை முண்டு கொடுத்து நடப்பித்த சொல்கைம் யுத்த நிறுத்த கண்காணிப்பாளர் என்ற வகையில் யுத்தம் ஒன்று ஆரம்பிக்கப்படுவதையும் தடுக்கத் தவறியதோடு.. யுத்தத்தின் போதும்.. பின்னுமான திட்டமிட்ட இன அழிப்புக்களையும் தடுக்கத் தவறிவிட்டார். இது புலி அழிப்புக்கும் மேலான மகா கொடுமையான செயலாகும். இதற்கு சொல்கைம் தார்மீகப் பொறுப்பேர்க்க வேண்டும்.. மேற்கு நாடுகளையும் ஹிந்தியாவையும் இணைத்து இந்தக் கொடுமையை அரங்கேற்றியதற்காக. 

நன்றி உங்கள் கருத்துக்களுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

சிறிலங்காவில் நடந்தது இனப்படுகொலை இல்லை என்று சொன்னவர் நீங்கள் தான் திரு சொல்கைம். எப்படி இப்படியான மனிதர்கள் மனச்சாட்சி இல்லாமல் வாழ்கிறார்களோ தெரியவில்லை.

அதை விட புலிகளும் யுத்த குற்றம் செய்தவர்கள் என்று யுத்தம் முடிந்தபின் நஞ்சு கக்கியவர் அந்த பத்திரிகை செய்தியை தேடிக்கொண்டு இருக்கிறன் .

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

விடுதலைப்புலிகளை நான் அழித்ததாக தெரிவிக்கப்படுவது சரியானதில்லை

வெட்டிய  கத்தியை யாரும் குற்றஞ்சுமத்துவதில்லை, வெட்டியவரையே குற்றவாளி என்கிறோம். அழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியவர் நீங்கள். இது நடக்கும் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது இவருக்கு, ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பை எச்சரிக்க தவறியவர், அவர்களுக்கு ஒத்துழைப்போ, தகவலோ வழங்காமல், விடயத்திற்கு அப்பாற்பட்ட   தரப்புக்கு தகவல் சேகரித்து கொடுத்து, ரகசியம் கசியாமல் காத்து, புலிகள் வைத்த வேண்டுகோளை உரிய தரப்பிற்கு தெரியப்படுத்த தவறியதோடு, காலந்தாழ்த்தி மவுனம் காத்து பிழையான தகவலை பரப்பியவர் இவர். இப்போ எந்த முகத்தோடு தோற்றுப்போன முகத்தோடு மீண்டும் தமிழரின் காயங்களோடு விளையாடி வீழ்த்த தயாராக காத்திருக்கிறார். இறுதி சந்திப்பு என்று நன்றாக தெரிந்தும் அவர்களோடு எந்த குற்ற உணர்வும் இல்லாமல் இருந்து, விருந்துண்டு சென்றிருக்கிறார். அவரது கள்ள மனச்சாட்சி இப்போ குறுகுறுக்குது அப்பப்போ சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். நம்பியோரை நெஞ்சிலே குத்திய துரோகி, மீண்டும் அவர்கள் முகத்தில் விழிக்கும் வஞ்சிரம் கொண்டவர்.

16 hours ago, கிருபன் said:

சிங்கள தீவிரவாதிகள் நான் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவளித்தாக தெரிவித்தனர்,

அப்படியான உங்களை எப்படி மீண்டும் இந்த நாட்டுக்குள் அழைத்தனர்? சும்மா இருப்பவர்களை புலிகளை மீள உருவாக்குகிறார், புலிகளுக்கு ஆதரவு அளிக்கிறார் என்று கைது செய்யும் போது; உங்களை எப்படி ஆலோசகராக அழைத்தனர்? ஏன் எரிக் நீர் வந்தபோதெல்லாம், தேடி வந்து தனது இரு கைகளையும்  நீட்டி சிரித்த முகத்துடன் உம்மை வரவேற்ற அந்த முகம் உங்கள் கண்  முன் வருவதில்லையா? எப்படி அந்த முகத்தை மறந்து அதற்கு இழைத்த துரோகத்தை மறந்து இப்படி உங்களால் பேச, நடமாட முடிகிறது? உங்களுக்கு விருந்து முக்கியம் அனுபவியுங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'CーD ஸ்ரீ லங்கா அரசோடதான் எப்பவும் நாங்கள்..!'

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

May be an image of 4 people and text that says 'CーD ஸ்ரீ லங்கா அரசோடதான் எப்பவும் நாங்கள்..!'

சொல்கெம்முக்கும் சுமந்திரனுக்கும் இடையில் ஏதோ பெட்டி மாதிரி தெரிகிறதே?

வேறு யாருக்காவது தெரிகிறதா?தெரிந்தால் என்னவாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்.....ம் தெரிகிறது தெரிகிறது, அது விருதோம்பும் சிறிய மேசையாய் இருக்கும் அதற்குள் பெட்டி இருக்கலாம்! அதற்கு பக்கத்திலும் நீண்ட பெட்டிபோல் இருக்கிறதே! இது கொஞ்சம் சிறிதாக நிறமும் வேறு நிறத்தில் தெரிகிறது. சுமந்து அந்த பெரிய பெட்டியை கேட்டு பேச்சின் இடையில்  வெளிநடப்பு செய்யப்போகிறார். வேண்டுமென்றே சுமந்திரன் கவனிப்பதற்காக வைத்திருப்பார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்+
23 hours ago, நன்னிச் சோழன் said:

அதை யோகி மாமா தான் சொல்லியிருந்தவர்.

இதான்:

https://eelam.tv/watch/ய-கரட-ணம-ய-க-அவர-கள-ன-உர-y-yogi-039-s-speech_Y3hvm9Al566FB9G.html

  • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2022 at 20:34, nedukkalapoovan said:

இவர் இப்ப தனக்குத்தானே வெள்ளையடிக்க முனைகிறார். எனி ஏற்றுக் கொண்டால் என்ன விட்டால் என்ன.

இப்பவும் அழிவுகளுக்கு வக்காளத்து வாங்குகிறார்.

யுத்தத்தில் இழப்புக்கள் நிகழும் என்பதை யாவரும் அறிவர். ஆனால் யுத்தத்தை நிறுத்திவிட்டு சரணடையச் சொல்லிவிட்டு திட்டமிட்டு கொல்லுவதும்.. பாதுகாப்பு வலயங்களை நிறுவிவிட்டு மக்களை அங்கு அழைத்துக் கொல்வதும்.. சரணடைந்தவர்களை காணாமல் ஆக்குவதும்.. யுத்த இழப்புக்கள் அல்ல. யுத்தம் முடிந்த பல ஆண்டுகளான பின்னும் அந்த மக்களையும் அவர்களின் பூமியையும் ஆக்கிரமித்து நிற்பதும் யுத்தத்தின் விளைவல்ல.

திட்டமிட்ட இன அழிப்பின் விளைவுகளாகும்.

இதனை முண்டு கொடுத்து நடப்பித்த சொல்கைம் யுத்த நிறுத்த கண்காணிப்பாளர் என்ற வகையில் யுத்தம் ஒன்று ஆரம்பிக்கப்படுவதையும் தடுக்கத் தவறியதோடு.. யுத்தத்தின் போதும்.. பின்னுமான திட்டமிட்ட இன அழிப்புக்களையும் தடுக்கத் தவறிவிட்டார். இது புலி அழிப்புக்கும் மேலான மகா கொடுமையான செயலாகும். இதற்கு சொல்கைம் தார்மீகப் பொறுப்பேர்க்க வேண்டும்.. மேற்கு நாடுகளையும் ஹிந்தியாவையும் இணைத்து இந்தக் கொடுமையை அரங்கேற்றியதற்காக. 

உறைக்கச் சொல்லியமை நன்று. இதனை  நரிச்சொல்கைம் படித்தால் புத்திவரக்கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.