Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம்!

இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

அந்த கொடூர சம்பவத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்,பிரதிப் பணிப்பாளர்கள்,நிர்வாக உத்தியோகஸ்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், உயிர்நீத்தவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

https://athavannews.com/2022/1306295

May be an image of 13 people

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ளவதனூடாகவே  சீறீலங்கா பேரினவாதத்தின் அடக்கு முறைகளை உடைத்து அடுத்த சந்ததியினருக்கு எமது பிரச்சனைகளையும் போராட்டத்தையும் கொண்டு செல்லலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

இப்படியான நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ளவதனூடாகவே  சீறீலங்கா பேரினவாதத்தின் அடக்கு முறைகளை உடைத்து அடுத்த சந்ததியினருக்கு எமது பிரச்சனைகளையும் போராட்டத்தையும் கொண்டு செல்லலாம்.

இதே ஆஸ்பத்திரிக்கு முன்னால்… காந்தி ஜெயந்தி கொண்டடின சனம்.
இங்கு வரமாட்டார்கள். சுயநலம் பிடித்த தமிழர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

1987 ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

 

1 hour ago, MEERA said:

இப்படியான நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ளவதனூடாகவே  சீறீலங்கா பேரினவாதத்தின் அடக்கு முறைகளை உடைத்து அடுத்த சந்ததியினருக்கு எமது பிரச்சனைகளையும் போராட்டத்தையும் கொண்டு செல்லலாம்.

இந்தியா போடும் எலும்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது.

1 hour ago, தமிழ் சிறி said:
1 hour ago, MEERA said:

இப்படியான நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ளவதனூடாகவே  சீறீலங்கா பேரினவாதத்தின் அடக்கு முறைகளை உடைத்து அடுத்த சந்ததியினருக்கு எமது பிரச்சனைகளையும் போராட்டத்தையும் கொண்டு செல்லலாம்.

இதே ஆஸ்பத்திரிக்கு முன்னால்… காந்தி ஜெயந்தி கொண்டடின சனம்.
இங்கு வரமாட்டார்கள். சுயநலம் பிடித்த தமிழர்கள்

கிந்தியில் சொன்னால் வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

 

இந்தியா போடும் எலும்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது.

கிந்தியில் சொன்னால் வருவார்கள்.

கொஞ்சநாள் போகட்டும்..கிண்டுவில் கிந்தி படித்தாப் பிறகு... விளங்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

  இதே இடத்தில இந்தியத் தூதுவர் பரிவாரங்களுடன் நம்மவர் கூடி காந்தி ஜெயந்தி விழா கொண்டாடி மகிழ்ந்தார்கள், ஆனால் இன்று ஆறாத காயங்களுடன் குழுமி இருக்கும் உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல யாரும் வரமாட்டார்கள். இதுதான் இந்தியா? நமது உணர்வுகளை வடித்து துடைத்து தமக்கு அடிமையாக்குவதற்கே ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்துகிறது.  இது நமக்கு நல்லது செய்யபோகுது என்று காத்திருப்போரும், கோரிக்கை வைப்போரும், அறிக்கை விடுவோரும் தாங்க முடியவில்லை சாமி! 

  • கருத்துக்கள உறவுகள்

கேவலம் கெட்ட இழிபிறவிகள் இந்திய இராணுவம்.  அநியாயமாகக் கொல்லப்பட்ட ஈழத் தமிழரின் சாபம் இந்தியாவை ஒருபோதும் உய்யவிடாது.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்லிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய துணைத் தூதரகம் ஆக்கள் இருக்கினமோ..?! இல்ல ஹிந்திய துணை தூதரகம் கேட்குதோ இல்லையோ.. ஹாந்திக்கு மாலை போடுபவர்களும்.. ஹலாமுக்கு மாலை போடுபவர்களும்.. ஹிந்திய தூதரகக் கூட்டங்களுக்கு கூப்பிடாமலே ஆஜராகுபவர்களும்.. ஏன் இங்கு.. ராஜீவ் காந்தியின் ஹிந்தியப் படைகளால் அநியாயமாகக் கொல்லப்பட்ட சொந்த மக்களுக்கு அஞ்சலி செய்ய வரவில்லை..!!

நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2022 at 04:57, alvayan said:

கொஞ்சநாள் போகட்டும்..கிண்டுவில் கிந்தி படித்தாப் பிறகு... விளங்கும்..

கொஞ்ச  நாள் போக நம்மக்களுக்கு தமிழைத்தவிர மற்ற மொழிகளில் சொன்னாற்தான் விளங்கும் நிலைக்கு ஆக்கிவிடுவார்கள், அதற்குத்தான் நம்ம தலைவர்களும் காத்திருக்கிறார்கள்!  

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.போதனா வைத்தியசாலை தீபாவளி படுகொலைகள் - 35 ஆவது ஆண்டு நினைவு

By VISHNU

23 OCT, 2022 | 01:55 PM
image

ம.ரூபன்

1974 ஜனவரி தமிழாராய்ச்சி மாநாடு பொலிசாரின் துப்பாக்கிச்சூடு ,1977 ஆகஸ்ட் 15 யாழ்.நகரில் பொலிசாரின் தீ வைப்பு, 1981 மே- ஜூன் ஐக்கிய தேசியக் கட்சி குண்டர்களால் நூலகம் எரிப்பு, 1983 க்கு பின் நகரில் இலங்கை படை தாக்குதல்கள் போன்றவற்றில் இருந்து மக்கள் பாதுகாப்பு தேடி யாழ்.வைத்தியசாலைக்குள் ஓடி ஒளிந்தபோது எவருமே உட்புகுந்து தாக்கியதில்லை.

1985 மார்ச் 30 கோட்டையில் இருந்து இலங்கை படையினர் ஏவிய எறிகணை யாழ் மருத்துவமனைக்குள் விழுந்து வெடித்ததில் 9 நோயாளர்கள் பலி, பலர் காயமடைந்ததும் வன்மையாக கண்டித்த இந்தியாவின் அமைதிகாக்கும் இராணுவமே இங்கு புகுந்து படுகொலைகளை செய்துள்ளது.

1987 ஒக்டோபர் 21-22 தீபாவளியை கொண்டாடவேண்டிய யாழ்.நகரம் குண்டு,துப்பாக்கிச் சூட்டு சத்தங்களால் அதிர்ந்தது. நகரை புலிகளிடம் இருந்து கைப்பற்ற கோட்டையில் இருந்த இந்திய (அமைதி) படையினர் எறிகணைகளை ஏவியும் ,MI 24-ஹெலியில் இருந்து  தாக்கியும் வெளியேறி மணிக்கூட்டு கோபுர வீதி,றீகல் திரையரங்க வீதி ஊடாக வைத்தியசாலை வீதிக்கு வந்து காலை 11 மணிக்கு யாழ்.வைத்தியசாலைக்குள் நுழைந்தனர்.

ஒக்டோபர் 10 இல் புலிகளுக்கு எதிராக ( Operation Pawan) நடவடிக்கையை இந்திய படை ஆரம்பித்தது. 24 மணி நேர ஊரடங்குச்சட்டம்.

பலாலி மற்றும் ஏனைய இடங்களில் இருந்து  வரும்போது மோதல்கள். கொக்குவில் பிரம்படி லேனில் 50 க்கும் மேற்பட்டபொதுமக்கள் சுட்டும் கவச வாகனங்களால் நசித்தும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.வேறு இடங்களிலும் வீடுகளுக்குள்,வீதிகளில் மக்கள் சுட்டுக்கொலை.

வெளியிடங்களில் இருந்து காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக யாழ்.வைத்தியசாலைக்கு வாகனங்களில் கொண்டுவந்தபோதும் இடை வழியிலும், நகரிலும் இந்திய படையினர் சுட்டுக்கொன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களும், ஊழியர்களும்,தாதியர்களும் துரிதமாக இரவும் பகலும் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மருத்துவமனை பாதுகாப்பானது எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது. இந்திய அமைதிப்படை எமக்கு பாதுகாப்பு என்றே சகலரும் நம்பினார்கள்.

பிரதான வாசலை அடைந்த இந்திய படையினர் சகலரையும் உள்ளே போகுமாறு கூறி கைக்குண்டை வீசி, எதிரே நின்றவர்களை எதுவித கேள்வியும் இன்றி மிருக வேட்டைபோன்று சுட்டுக்கொண்டே வந்தனர்.மருத்துவமனைக்குள் ஒரே வெடிச்சத்தங்களும் குண்டு வெடிப்பு சத்தங்களும்.விடுதிகளின் (Ward) நோயாளிகளும்,உதவிக்கு வந்த உறவினர்களும்,ஊழியர்களும் மருத்துவர்களும் செய்வதறியாது திகைத்தனர்.

நோயாளர் விடுதிகளுக்கும்,அலுவலக அறைகளுக்கும் ( கைக்குண்டு) கிறனேட்டை வீசியதில் அங்கிருந்த பலர் பலி.படையினர் துப்பாக்கியை நீட்டியபடி வந்தபோது தாதியர்களும்,மருத்துவர்களும்,ஊழியர்களும் சீருடையில் நின்று தம்மை அடையாளப்படுத்தி கைகளை உயர்த்தி சரண்டைவதாக கூறியும் சுட்டுத்தள்ளினர்.

மருத்துவர்கள் பரிமேலழகர், எம்.கே.கணேசரட்னம், ஏ.சிவபாதசுந்தரம், திருமதி வடிவேலு (மேற்றன்) திருமதி லீலாவதி(தாதி),திருமதி சிவபாக்கியம் (தாதி),திருமதி இராமநாதன் ( தாதி) சண்முகலிங்கம் ( அம்புலன்ஸ் சாரதி) கனகலிங்கம் (தொலைபேசி இயக்குனர்), கிருஷ்ணராஜா (மேற்பார்வையாளர்) சிற்றூழிர்கள் நோயாளிகள், உறவினர்கள் என எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பலர் பின் வாசல் வழியாக தப்பி ஓடினர்.எங்கும் இரத்தம்.ஒரு சடலத்தின் மேல் மற்றொரு சடலம். சடலங்களுடன் இறந்தவரைப்போல கிடந்தும் பலர் தப்பினர்.எனினும் சடலங்களையும் சுட்டனர்.ஒரே வெடிச்சத்தங்கள்.ஐயோ! ஐயோ!! தங்கள் மத தெய்வங்களின் பெயர் சொல்லி எம்மைக்காப்பாற்று என்ற அவலக்குரல்கள்.

மறுநாள் (22 ) தப்பியவர்களின் உதவியுடன் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து மரங்கள்,டயர்கள் மூலம் கொளுத்தினார்கள். இவர்களும் காணாமலாக்கப்பட்டவர்களே என உறவினர்கள் கூறுகின்றனர். இச்சம்பவங்களை நேரில் கண்டவர்களும், இவற்றை செய்த இந்திய படையிஅதிகாரிகளும், ஜவான்களும் இன்றும் உள்ளனர்.இதுவரை எந்த விசாரணைகளும் நட்ட ஈடும் இல்லை. 

யாழ்.நகரில் இருந்து வெளிவந்த 'முரசொலி', 'ஈழமுரசு' பத்திரிகைகளின் அலுவலகங்களும் இந்திய படையால் குண்டு வைத்து அழிக்கப்பட்டன.

இந்தியப் பத்திரிகைகளில் வெளிவரவில்லை.கொழும்பு பத்திரிகைகளில் வெளிவந்தன இலங்கை அரசு வன்மையாக கண்டித்தது.இதன் தகவல்கள் பின்னர் வெளியாகின.பலரும் எழுதியுள்ளனர்.அன்று இணையத்தளங்கள் இல்லை.

1988 ஜனவரி 21 பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் அனுரா பண்டாரநாயக்கா,பிரதமர் ரணசிங்க பிரேமதாச,தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலி  இந்திய படையின் பயங்கரவாதம் எனக்கண்டித்து பேசினர்.அன்றைய பிரதம நீதியரசர் சர்வானந்தாவின் வயதான சகோதரியும் கணவனும் இந்தியப் படையால் கொல்லப்பட்டதையும் அனுரா சுட்டிக்காட்டியிருந்தார்.ஜே.வி.பியினர் இதனை கண்டித்து இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்கிறது என்று அன்றும் இன்றும் கூறிவருகின்றனர்.

புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் மோதல் ஏற்பட்டபோது இடையில் சிக்கிய பொதுமக்களே உயிரிழந்தனர் எனவும்,மருத்துவமனைக்குள் இருந்து புலிகள் இந்திய படையை தாக்கியதாகவும் இந்திய அமைதிப்படையின் தளபதி லெப்ரின்ற் ஜெனரல் திபேந்தர் சிங் கூறியிருந்தார்.

இந்தியா இதற்கு மன்னிப்பும் வருத்தமும் தெரிவிக்கவில்லை. இச்சம்பவத்துக்கு பின்னர் 1987 நவம்பர் 9 இந்திய பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கையில் இந்திய அமைதிப்படையினர் தமது பணிகளை சரிவரச்செய்வதாக குறிப்பிட்டார்.

நோர்வேயின் மனித உரிமைகள் அமைப்பான ( NESoHR) இது தொடர்பாக  தகவல்களை கொண்டு 2002 இல் வெளியிட்டுள்ள அறிக்கையில் யாழ்.மருத்துவமனையில் மருத்துவர்கள், தாதியர்கள், ஊழியர்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் என 135 பேர் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர் எனத்தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் இத்தினத்தை உறவினர்களும்,மருத்துவர்களும் ஊழியர்களும் யாழ்.மருத்துவமனையில் நினைவுகூருகின்றனர். இதற்கான ஒரு நினைவு தூபி அமைக்கப்பட்டு சகலரும் அஞ்சலி செலுத்தவேண்டும். வரலாற்றில் அந்நியப்படை யாழ்ப்பாணத்தில் வைத்தியசாலைக்குள்  தமிழர்களை சுட்டு படுகொலை செய்த கொடூரத்தை என்றுமே மறக்கமுடியாது.

https://www.virakesari.lk/article/138251

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்குடாவினை புலிகளிடமிருந்து இந்திய படை மீட்ட பின்பு, இந்திய படையிலிருந்த பரா படைப்பிரிவினர் அப்போது யாழ்குடாவில் தலைமறைவாக இருந்து அரசியல் மற்றும் வழங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆயுதமற்ற புலிகள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வந்தனாராம்.

பரா படைப்பிரிவினரின் அடாவடிகள் எல்லை மீறிய நிலையில் புலிகள் அவர்களது வாகன அணியின் (1 ட்ரக், 1 ஜீப்) மீது தாக்குதலை, பரா படைப்பிரிவினரை அச்சுறுத்துவதற்காக மேற்கொண்டனராம்.

சம்பவ இடத்தில் 2 படையினர் கொல்லப்பட, வாகனத்தினை நிறுத்தாது பக்கத்திலிருந்த வைத்தியசாலைக்குள் நுழைந்து தப்பித்து கொண்டார்களாம்.

கடுமையாக காயமுற்ற 7 படையினரை அந்த வைத்தியசாலையில் பணிபுரிந்த மருத்துவர் துரிதமாக செயற்பட்டு காப்பாற்றினார்.

2 நாளின் பின்னர் அந்த அரச வைத்தியசாலைக்கு பரா படைப்பிரிவினர் சென்று தமது நன்றியினை தெரிவித்திருந்தனர்.

அந்த வைத்தியசாலை வடமராட்சியில் இருந்தது, அந்த மருத்துவர் பின்னாளில் புலிகளின் மருத்துவ பிரிவில் பணியாற்றியிருந்தார்.

On 22/10/2022 at 11:21, வாலி said:

கேவலம் கெட்ட இழிபிறவிகள் இந்திய இராணுவம்.  அநியாயமாகக் கொல்லப்பட்ட ஈழத் தமிழரின் சாபம் இந்தியாவை ஒருபோதும் உய்யவிடாது.

உங்கள் கவலைகளை உணர்ந்து கொள்ளமுடிகிறது, இழப்புகள் வலிகளை கொடுப்பவை அதனால் ஏற்படும் மனவலிகளுக்கு  தீர்வாக எதுவும் இல்லை, இந்த நிலையில்  எமது வார்த்தைகள் தெரிந்தோ தெரியாமலோ சிலரை காயப்படுத்தலாம்(தயவு செய்து உங்களது கருத்தினை தவறானது என சொல்லவில்லை எனக்கு அதற்கான தகுதியும் இல்லை, ஆனால் இந்திய இராணுவத்தால்  நானும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளேன்.).

உலகில் ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு விச ஊசி ஏற்றி கொண்டதாக கூறும் மருத்துவர், மற்றும் தாதியர்கள் இருந்த காலகட்டத்தில், மருத்துவர்கள் தாதிகளை கொன்ற அதே படையினரின் உயிர்களை காப்பாற்றும் மருத்துவர்கள் தாதியர்கள்  உள்ள தேசம் எமது தேசம். 

என்றுமே எமது இலக்கு அப்பாவிகள் இல்லை, கோழைகள்தான் அப்பாவிகளை கொல்வார்கள், வீரர்கள் எதிரியையும் மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றுவார்கள்.

எனது கருத்து தவறாக இருந்தால்

GDK (@Kungumapubonda) / Twitter

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.