Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் முன்னிலை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் முன்னிலை?

அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் முன்னிலை?

அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான போட்டியில் நுழைவதற்கு தேவையான 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை முன்னாள் போட்டியாளர் மற்றும் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் நெருங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

ரிஷி சுனக்கிற்கு 93 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் ஏற்கனவே 100ஐ எட்டியதாக ஒரு பிரச்சார வட்டாரம் கூறியது.

ஆனால், முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 44 ஆதரவாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார், லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பின் தொடரும் போட்டியில் நுழையத் தயாராகி, விடுமுறைக்கு டொமினிகன் குடியரசு சென்றிருந்த அவர் இன்று நாடு திரும்புகின்றார்.

இதுவரை 21 ஆதரவாளர்களை எண்ணி பென்னி மோர்டான்ட் அறிவித்தார்.

ஜோன்சனை ஆதரிக்கும் வர்த்தக அமைச்சர் சர் ஜேம்ஸ் டட்ரிட்ஜ், அவர் வீட்டிற்கு வருகிறார், அதற்காக தயாராக இருக்கிறார் என கூறினார்.

சுனக் அல்லது ஜோன்சன் இருவரும் தங்கள் பிரச்சாரங்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை, ஆனால் இது ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவை அறிவிப்பதை நிறுத்தவில்லை.

https://athavannews.com/2022/1306443

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 Downing Street - Wikipedia

 

May be a cartoon

இங்கிலாந்து பிரதமரின் வாசஸ்தலமான,   Downing Street 10´ம் இலக்கத்தில்...
இருக்கும் வாசல்🚪 கதவை மாற்றி...  🚪 
சுழல் கதவு பொருத்தப் படுவதாதாக,
இலங்கையில்  ஒருவர் கருத்தோவியம் வரைந்துள்ளார். 🚪 😁 😂  🤣 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பிடி இருந்த பெரிய பிரித்தானியா இப்பிடியாகிட்டுது?

விதி, வினை பொல்லாதது.

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டுஜ்கு பூசை செய்தால் மட்டும் போதாது, மாட்டுமூத்திரத்தையும் குடிக்க வேண்டும். அப்போது பிரதமராவது நிச்சயம். 

ரிசி சுனாக் இங்கிலாந்து பிரதமரானால் இந்தியாவில் சோனியா பிரதமராகலாமா? 

🤨

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஊடகங்கள்… மெதுவாக, ரிஷி சுனக் தான்…
அடுத்த இங்கிலாந்து பிரதமர் என்று வேப்பிலை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். 😂 🤣

2 minutes ago, Kapithan said:

மாட்டுஜ்கு பூசை செய்தால் மட்டும் போதாது, மாட்டுமூத்திரத்தையும் குடிக்க வேண்டும். அப்போது பிரதமராவது நிச்சயம். 

ரிசி சுனாக் இங்கிலாந்து பிரதமரானால் இந்தியாவில் சோனியா பிரதமராகலாமா? 

🤨

சோனியா… மாட்டு இறைச்சி சாப்பிட்டவர். அதனால் இந்தியப் பிரதமராக முடியாது. 😂
நீங்கள்…. அடி மடியிலை, கை வைக்கிறீங்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2022 at 16:06, தமிழ் சிறி said:

இந்திய ஊடகங்கள்… மெதுவாக, ரிஷி சுனக் தான்…
அடுத்த இங்கிலாந்து பிரதமர் என்று வேப்பிலை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். 😂 🤣

சோனியா… மாட்டு இறைச்சி சாப்பிட்டவர். அதனால் இந்தியப் பிரதமராக முடியாது. 😂
நீங்கள்…. அடி மடியிலை, கை வைக்கிறீங்கள். 🤣

கபிதனின். கேள்வி அடிப்படையற்றது பிழையாது. ஏன் என்று நாளைக்கு எழுதுகிறேன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2022 at 15:06, Kapithan said:

மாட்டுஜ்கு பூசை செய்தால் மட்டும் போதாது, மாட்டுமூத்திரத்தையும் குடிக்க வேண்டும். அப்போது பிரதமராவது நிச்சயம். 

ரிசி சுனாக் இங்கிலாந்து பிரதமரானால் இந்தியாவில் சோனியா பிரதமராகலாமா? 

🤨

ரிசி தேர்தல் மூலம் ஒருபோதும் வரமுடியாது ஊழல் நிறைந்த அவரது கட்சி மூலம் மற்றும் உதிரிகள் மூலம் வருவது உறுதி ஆகியுள்ளது முன்னாள் போக விட்டு பின்னால் நின்று கழுத்தறுப்பார்கள் அந்த கொஞ்ச நாளுக்குள் வட இந்தியர்களின் எடுபாட்டை பார்க்க வியலாது எங்கேயாவது கொலிடே போகலாம் என்று பிளான் .

  • கருத்துக்கள உறவுகள்

கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைமைக்கான போட்டி- விலகினார் பொறிஸ் ஜோன்சன்

By Rajeeban

24 Oct, 2022 | 08:50 AM
image

கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்திற்கான போட்டியிலிருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

கட்சியின் தலைமைபதவிக்கு போட்டியிடுவதற்கான ஆதரவு எனக்குள்ளது ஆனால் தலைமைக்காக போட்டியிடுவது சரியான விடயமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

நான் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்பட்டன ஆனால் நாடாளுமன்றத்தில் ஐக்கியப்பட்ட கட்சியொன்று அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

45 நாட்கள் பிரதமராக பதவி வகித்த பின்னர் லிஸ் டிரஸ் பதவி விலகியதை தொடர்ந்து கட்சியின் தலைமைக்கான போட்டி வியாழக்கிழமை ஆரம்பமாகியிருந்தது.

மூன்று வருடங்களிற்கு முன்னர் கட்சியை பொதுத்தேர்தலில் வெற்றிகரமாக வழிநடத்தினேன் இதன் காரணமாக  பொதுத்தேர்தலை தவிர்க்ககூடிய திறன் என்னிடம் உள்ளது என கருதியதால் தான் நான் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட தீர்மானித்தேன் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டிய தருணத்தில் பொதுதேர்தல் என்பது அதிலிருந்து கவனத்தை திருப்பும் விடயமாக அமைந்துவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.virakesari.lk/article/138285

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷி சூனக் பிரிட்டன் பிரதமராக வாய்ப்பு - 7 வாரங்களில் மூன்றாவது பிரதமர்; போரிஸ் ஜான்சன் என்ன செய்வார்?

  • கிறிஸ் மேசன்
  • அரசியல் ஆசிரியர், பிபிசி நியூஸ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

செப்டம்பரில் பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் தோல்வியடைந்த ரிஷி சூனக் இப்போது பிரதமராகும் தருவாயில் இருக்கிறார். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், ரிஷி சூனக் புதிய பிரதமராக வருவதற்குரிய வாய்ப்புகள் உள்ளன.

பென்னி மோர்டான்ட் தற்போது இருக்கும் ஆதரவாளர்களை விட அதிகளவிலான ஆதரவாளர்களைத் திரட்டாதவரை, இன்று ரிஷி சூனக்கின் வெற்றி உறுதி செய்யப்படலாம். எது எப்படியிருந்தாலும், வார இறுதியில் புதிய பிரதமர் வந்துவிடுவார். ஆம், ஏழே வாரங்களில் மூன்றாவது பிரதமர்.

முன்னெப்போதும் இல்லாத அளவிலான கொந்தளிப்பு, பெரும்பாலான கன்சர்வேட்டிவ் கட்சியினர் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்ளும் பேரழிவுகரமான தொடர் நிகழ்வுகள் ஆகியவை அவர்களுடைய கட்சியின் நற்பெயருக்கு ஆழமாகச் சேதம் விளைவித்துள்ளது.

சமீபத்தில்தான் நாங்கள் வெஸ்ட்மின்ஸ்டரில் பிரதமரை தேர்ந்தெடுப்பது குறித்த செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தோம். இப்போது மீண்டும் அதே செய்திகளை வழங்குகிறோம்.

 
 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

போரிஸ் ஜான்சன் அடுத்து என்ன செய்வார்?

இப்போதைய கேள்வி, "போரிஸ் ஜான்சன் அடுத்து என்ன செய்வார்?" இந்தக் கேள்வி வருவது முதல்முறை அல்ல.

கரீபியனில் இருந்து திரும்பி வந்த போரிஸ் ஜான்சன், விடுமுறையைக் கொண்டாடுவதற்காகச் சென்றிருந்த நேரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலேயே, அதுவும், அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட சில வாரங்களிலேயே தான் மீண்டும் பிரதமர் ஆவதற்கு தனக்கு எந்தளவுக்கு ஆதரவு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள சில தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து சனிக்கிழமை மதியம் முதல் தேவையான ஆதரவு தங்களிடம் இருப்பதாக அவரது குழுவினர் விளக்கமளித்தனர். இதை அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் பகிரங்கமாகக் கூறினார்.

மேலும் மற்றோர் அமைச்சரான கிறிஸ் ஹீடன்-ஹாரிஸ், சரிபார்க்கப்பட்ட ஆதரவாளர்கள் எண்ணிக்கை உட்பட கட்சிக்குத் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் போரிஸ் ஜான்சன் போட்டியில் சேரலாம் என்றும் கூறினார்.

ஆனால், இந்த கூற்றுகளுக்கான எதிர்வினை பிரதமர் தேர்தலில் மீண்டும் வரும் போரிஸ் ஜான்சன் எதிர்கொள்ளும் பல சிக்கல்களில் ஒன்றை நினைவூட்டுவதாக உள்ளது. எளிமையாகச் சொன்னால், அவர்டைய தரப்பில் இருப்பவர்களில் பலருக்கே அவருடைய வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை.

அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் இதை ஒப்புக்கொண்டார். இருப்பினும் போரிஸ் ஜான்சன் ஊரடங்கு காலத்தில் பார்ட்டிகளில் கலந்துகொண்டது குறித்து ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் தவறான தகவலைக் கொடுத்தாரா என்ற விசாரணையை எதிர்கொள்ளாமல் இருந்திருந்தால் விஷயம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

 

போரிஸ் ஜான்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவர் அந்த விசாரணையை எதிர்கொள்ளாமல் இருந்திருந்தால், அவர் மீண்டும் பிரதமர் ஆவதற்கான வழி கிடைத்திருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். ஆனால் அவருக்குக் கிடைக்கவில்லை.

அவருடைய ஆதரவு போதுமான அளவுக்கு இல்லாததால், அவர் இன்று போட்டியில் இல்லை. நாடாளுமன்ற கட்சியில் மூன்றில் ஒரு பகுதியினரையே தனக்கு ஆதரவளிக்குமாறு அவர் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. வெற்றி கூட அச்சுற்றுத்தும் மற்றும் பேரழிவு தரக்கூடியதாக இருந்திருக்கும் என்பதே அதன் பொருள். நாடாளுமன்ற கட்சியின் ஆதரவின்றி ஆட்சி செய்ய முயல்வது எப்படியிருக்கும் என்று அவருக்குத் தெரியும். அது நல்லபடியாக இருக்காது.

ஆகவே, பிரதமர் மீண்டும் மாறுகிறார்.

அது ரிஷி சூனக் என்றால், போட்டி எதுவும் இல்லையென்றால், திங்கள்கிழமை மாலை அரசர் லண்டனில் இருப்பார் என்று நான் கேள்விப்படுகிறேன்.

ஒருவேளை அரசர் தலைநகரில் அந்த நேரத்தில் இல்லாவிட்டால், சூனக் இன்று மதியம் வெற்றியாளராக உறுதி செய்யப்பட்டால், அவர் பிரதமர் ஆவதற்கு செவ்வாய்க்கிழமை வரை காத்திருப்பார். பார்க்கலாம், ஒருவேளை இன்னமும் ஒரு போட்டி இருக்கலாம்.

 

பிரிட்டன்

பட மூலாதாரம்,PA MEDIA

உண்மையில் முக்கியமானது என்னவெனில், வெற்றியாளர் யாராக இருந்தாலும் லிஸ் டிரஸால் தாங்க முடியாத அளவுக்கு இருந்த கடுமையான பிரச்னைகள் அவர்கள் கைகளுக்குச் செல்லும். ஆழமாகப் பிளவுபட்ட கட்சி, உயரும் விலைவாசி, மோசமான பொது நிதி, இது முறையான தேர்தல் இல்லை என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனால், பழைமைவாத கட்சியின் கிளர்ச்சிக்கான தீராத பசி இறுதியாகத் தணிந்துவிடும் என்று அவர்கள் நம்புவார்கள். அப்படி இல்லையென்றால், ஒரு கடினமான வேலை விரைவில் சாத்தியமற்றதாகிவிடும்.

யார் இந்த ரிஷி சூனக்?

ரிஷி சூனக் தனது இணையதளத்தில், "நான் ஒரு நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் நிறைய தியாகங்கள் செய்தார்கள். வின்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.

ரிஷி சூனக் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை பெங்களூரில் 2009இல் திருமணம் செய்துகொண்டார். இப்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 730 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அவரது அறிவிக்கப்பட்ட சொத்துகளில் பெரும்பாலானவை அவரது மனைவிக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது.

ரிஷி சூனக் சுயமாக முன்னேறியவர். அவர் தனது இணையதளத்தில், "வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து பெங்களூர் வரையிலான நிறுவனங்களுடன் இணைந்து ஒரு பெரிய முதலீட்டு நிறுவனத்தை நிறுவினேன். அது பலன் தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ரிஷி சுனக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

போரிஸ் ஜான்சனை முதுகில் குத்தியதற்காக ரிஷி சூனக் மீது கட்சியினர் பலர் கோபமாக இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். இந்த ஆண்டு ஜூலை மாதம் ரிஷி சூனக் தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகுதான் பல அமைச்சர்கள் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையை விட்டு வெளியேறினர், அதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சனும் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

இதற்குப் பிறகு, புதிய பிரதமருக்கான முதல் சுற்றில் எட்டு வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். கடைசி சுற்றுக்கு முன், கட்சி எம்பிக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும், கட்சி உறுப்பினர்களுக்கு அந்த உரிமை இல்லை. எம்.பி.க்கள் ரிஷி சூனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோரை கடைசி சுற்றுக்குத் தேர்வு செய்தனர்.

கடைசிச் சுற்றில் எம்.பி.க்கள் அல்லாமல், கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ரிஷியின் அரசியல் வாழ்க்கையை முன்னேற்ற போரிஸ் ஜான்சன் பெரிதும் உதவியதாக மக்கள் கூறுகின்றனர். ரிஷி சூனக் மீது அவர் மிகவும் கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது. ரிஷி செய்தியாளர்களிடம், போரிஸ் ஜான்சனை அணுகுவதற்குத் தாம் பல முறை முயன்றும் அவை செவிசாய்க்கப்படவில்லை என்று ஒப்புக்கொண்டார்.

கன்சர்வேடிவ் கட்சி இன்னும் வெள்ளையர் அல்லாத பிரதமரைத் தேர்ந்தெடுக்கத் தயாராக இல்லையென்றாலும், நாட்டு மக்கள் அதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. நாடு முழுவதும் ரிஷி சூனக் சூனக்கின் புகழ் லிஸ் டிரஸ்ஸுடன் ஒப்பிடும்போது மிகவும் வலுவாக உணரப்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-63370059

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை இராஜிநாமா செய்ததையடுத்து சீனாவின் ‘குளோபல் டைம்ஸ்’ ஊடகம் வெளியிட்ட கேலிச்சித்திரம்

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை இராஜிநாமா செய்ததையடுத்து சீனாவின் ‘குளோபல் டைம்ஸ்’ ஊடகம் வெளியிட்ட கேலிச்சித்திரம்

 

பிரித்தானிய முன்னாள் பிரதமர்.... லிஸ் டிரஸ்
மேசையின் "லாச்சி"  இருக்கின்ற பக்கம் அமராமல், எதிர்ப் பக்கம் இருக்கிறா. 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

ஒரு இந்தியன் இங்கிலாந்தை ஆள முடியுமென்றால் தமிழீழம் ஏன் சாத்தியப்படாது?
ஈழத்தமிழர்களே இனியாவது   தமிழன்  என்ற பெயரில் ஒன்றுபடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

Bild

ஒரு இந்தியன் இங்கிலாந்தை ஆள முடியுமென்றால் தமிழீழம் ஏன் சாத்தியப்படாது?
ஈழத்தமிழர்களே இனியாவது   தமிழன்  என்ற பெயரில் ஒன்றுபடுங்கள்.

இவர் பிரதமராக வந்தால், UK யின் வீழ்ச்சியை இவரின் தலையில் கட்டி Vடுவார்கள் 😀

  • கருத்துக்கள உறவுகள்

எவராவது இங்கிலாந்தை ஆண்டுவிட்டுப் போகட்டும் ஆனால் ஒர் இந்தியன் வரக்கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

எவராவது இங்கிலாந்தை ஆண்டுவிட்டுப் போகட்டும் ஆனால் ஒர் இந்தியன் வரக்கூடாது!

வந்தாச்சு…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rishi-Sunak-700x375.jpg

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகின்றார் ரிஷி சுனக் – எதிர்த்து போட்டியிட்டவர் விலகல்

பிரித்தானியாவில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம் மினி – பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் ஆரம்பமாகின.

பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் பென்னி மோர்டன்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவதாக ரிஷி சுனக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியில் 140க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர்.

இதேபோன்று பொரிஸ் ஜோன்சனும் போட்டியிடுவது குறித்து முறைப்படி அறிவிப்பார் என என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று பொரிஸ் ஜோன்சன் திடீரென அறிவித்தார்.

அதன்பின்னர், போதுமான எம்.பி.க்கள் ஆதரவு இல்லாத நிலையில், பென்னி மோர்டன்டும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரிஷி சுனக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 190க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம் பிரித்தானிய வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிரதமர் ஆகிறார்.

ரிஷி சுனக் பிரித்தானியாவின் 57வது பிரதமராக பதவியேற்கவுள்ளார். 42 வயது நிரம்பிய ரிஷி சுனக், நாட்டின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

https://athavannews.com/2022/1306741

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரிஷி சுனக் அமைச்சரவை: இலங்கையர் உட்பட முக்கியஸ்தர்களுக்கு வாய்ப்பு மறுப்பு | Rishi Sunak Government Appoint All Talents

பஞ்சாப் மகன்.. கர்நாடக மருமகன்.. இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டனையே ஆளப்போகும் ரிஷி சுனக் யார்?

சென்னை: பிரிட்டன் பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து பொன்னி மார்டாண்ட் விலகியதை தொடர்ந்து பிரதமராக பதவியேற்க இருக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் யார் என்ற முழு விபரத்தை பார்ப்போம். ரிஷி சுனக் கடந்த 1980 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் யாஷ்விர் மற்றும் உஷா சுனக் இந்திய - ஆப்பிரிக்க பின்புலத்தை கொண்டவர்கள்.
 

கென்யா நாட்டில் பிறந்த இவரது தந்தை யாஷ்விரின் பின்புலம் ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சார்ந்தது. ரிஷி சுனக்கின் தந்தை வழி மூதாதையர்கள் பிறந்த இடம் தற்போது பாகிஸ்தானின் குஜ்ரான்வாலாவில் உள்ளது.

1960 ஆம் ஆண்டுக்கு பிறகு ரிஷி சுனக்கின் தாத்தாவும் பாட்டியும் கென்யாவுக்கு குடிபெயர்ந்தனர். தற்போது அப்பகுதி டான்சானியா எல்லையின் கீழ் வருகிறது. அதன் பின்னர் பிரிட்டன் சென்ற அவரது தந்தை யாஷ்விர் சுனக் தேசிய சுகாதார மையத்தில் பணிபுரிந்தவர். அவரது தாய் உஷா சுனக் மருந்தகம் நடத்தி வந்தார். 42 வயதான ரிஷி சுனக் இந்து மதத்தை சேர்ந்தவர்.

தன்னுடைய பெற்றோர் ஏழை, எளிய மக்களுக்கு அர்ப்பணிப்போடு உதவுவதை பார்த்தே தான் வளர்ந்ததாக தன்னுடைய இணையதள பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார் ரிஷி சுனக். உலக புகழ்பெற்ற வின்செஸ்டர் கல்லூரி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் அரசியல், பொருளாதாரம், தத்துவம் மேலாண்மை கல்வியை பயின்றார்.

2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோல்டுமேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியில் ஆய்வாளராக பணியாற்றிய அவர், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி நடத்தி வந்த கடாமரான் வென்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக கடந்த 2013 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

கர்நாடகாவை சேர்ந்த இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தியைதான் ரிஷி சுனக் திருமணம் செய்து இருக்கிறார். "சர்வதேச அளவில் படிக்க, பணியாற்ற வாழ வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். நான் என் மனைவி அக்‌ஷதாவை கலிஃபோர்னியாவில் சந்தித்தேன். எங்களுக்கு கிருஷ்ணா, அனோஸ்கா என 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் என்னை மகிழ்ச்சியோடும், பரபரப்போடும் வைத்துள்ளார்கள்." என்று குடும்பம் குறித்து தெரிவித்து இருந்தார் சுனக்.

தன்னுடைய ஓய்வு நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, கிரிக்கெட், கால்பந்து விளையாடுவது, சினிமா பார்ப்பது போன்றவற்றை செய்கிறார் ரிஷி சுனக். அரசியலுக்கு நுழைந்த பிறகு 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராக ரிச்மாண்ட் தொகுதியில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றார் ரிஷி. 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் ரிஷி சுனக் இதே தொகுதியில் எம்பியாக தேர்வானார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிட்டனின் உள்ளாட்சி அரசியல்துறை அமைச்சராக பதவியேற்ற ரிஷி சுனக், 2019 ஆம் ஆண்டு பிரிட்டன் கருவூலத்தின் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரிட்டன் நிதியமைச்சராக பொறுப்பேற்ற அவர் இந்த ஆண்டு ஜூலை வரை பதவிவகித்தார். வீழ்ச்சியில் உள்ள பிரிட்டன் பொருளாதாரத்தை ரிஷி சுனக் பிரதமராகி மீட்பார் என்று நம்புகிறார்கள் அந்நாட்டு மக்கள்.

இந்தியாவை ஒரு காலத்தில் ஆட்சி செய்த பிரிட்டனையே ஆட்சி செய்யும் பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பதவியேற்பது இந்திய மக்களை மகிழ்ச்சியடைந்த செய்து இருக்கிறது. இதன் மூலம் பிரிட்டனின் பிரதமாரகும் முதல் இந்திய வம்சாவளி மற்றும் முதல் பிரிட்டன் - ஆசியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷி சுனக்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/who-is-rishi-sunak-the-new-indian-origin-pm-of-britian/articlecontent-pf790092-482071.html

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

பிரித்தானிய முன்னாள் பிரதமர்.... லிஸ் டிரஸ்
மேசையின் "லாச்சி"  இருக்கின்ற பக்கம் அமராமல், எதிர்ப் பக்கம் இருக்கிறா. 😜

ஆமாம் நானும் பார்த்தேன்...அது வெறும் லாச்சி    😂🤪

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

Bild

ஒரு இந்தியன் இங்கிலாந்தை ஆள முடியுமென்றால் தமிழீழம் ஏன் சாத்தியப்படாது?
ஈழத்தமிழர்களே இனியாவது   தமிழன்  என்ற பெயரில் ஒன்றுபடுங்கள்.

இலங்கையில் ரணில் பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்தார்கள்...மக்கள் அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக கூட தெரிவு செய்யவில்லையே…    இது நேற்றைய செய்தி..இன்று பெரிய பிரித்தானியாவில்   பாராளுமன்ற உறுப்பினர்கள் ரிசியை பிரதமராக தெரிவு செய்துள்ளனர்......ஆனால் மக்கள் தெரிவு செய்யவில்லை....மக்களை பற்றி ஆர் கவலைப்படுகிறார்கள்.  ? நாளை தெருவில் போகும் ஒருவரும் கூட  பிரதமர் ஆகலாம்    போகிற போக்கில்   உங்களை கூட   ஜேர்மனியின் பிரதமராக அறிவித்து  விடுவார்கள்..😂🤣கவனம். ஆனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒன்றிணைந்தாலும்.  தமிழ் ஈழம் ஒருபோதும் உருவாகாது. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Kandiah57 said:

இலங்கையில் ரணில் பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்தார்கள்...மக்கள் அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக கூட தெரிவு செய்யவில்லையே…    இது நேற்றைய செய்தி..இன்று பெரிய பிரித்தானியாவில்   பாராளுமன்ற உறுப்பினர்கள் ரிசியை பிரதமராக தெரிவு செய்துள்ளனர்......ஆனால் மக்கள் தெரிவு செய்யவில்லை....மக்களை பற்றி ஆர் கவலைப்படுகிறார்கள்.  ? நாளை தெருவில் போகும் ஒருவரும் கூட  பிரதமர் ஆகலாம்    போகிற போக்கில்   உங்களை கூட   ஜேர்மனியின் பிரதமராக அறிவித்து  விடுவார்கள்..😂🤣கவனம். ஆனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒன்றிணைந்தாலும்.  தமிழ் ஈழம் ஒருபோதும் உருவாகாது. 😂

தெருவில் போகும் ஒருவன் பிரதமராக வர முடியும் என்றால்  வரலாற்று சான்றுகளுடன் வாழும்  ஈழத்தமிழினத்திற்கு ஏன் தனிநாடு அமைய முடியாது?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

தெருவில் போகும் ஒருவன் பிரதமராக வர முடியும் என்றால்  வரலாற்று சான்றுகளுடன் வாழும்  ஈழத்தமிழினத்திற்கு ஏன் தனிநாடு அமைய முடியாது?

முடியும், அப்படி தமிழீழம் கிடைத்தால் யார் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர்?

கண்டுபிடித்துவிட்டோமா?
நமக்குத்தானே யார் தலைவரானாலும் பிடிக்காது.
நாங்களும் செய்யமாட்டோம் செய்பவர்களையும் விடமாட்டோம்.☹️

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரிட்டன் நிதியமைச்சராக பொறுப்பேற்ற அவர் இந்த ஆண்டு ஜூலை வரை பதவிவகித்தார். வீழ்ச்சியில் உள்ள பிரிட்டன் பொருளாதாரத்தை ரிஷி சுனக் பிரதமராகி மீட்பார் என்று நம்புகிறார்கள் அந்நாட்டு மக்கள்.

அரச குடும்ப சொத்தை விட  ரிசியின் சொத்து மதிப்பு அதிகமாம். அவரின் சொத்து மதிப்பு $1.1 பில்லியனை தாண்டுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

தெருவில் போகும் ஒருவன் பிரதமராக வர முடியும் என்றால்  வரலாற்று சான்றுகளுடன் வாழும்  ஈழத்தமிழினத்திற்கு ஏன் தனிநாடு அமைய முடியாது?

  உங்கள் கேள்வி பழைய கேள்வி கிட்டத்தட்ட இதேபோன்ற கேள்வியுடன் தான்  தந்தை செல்வா. தொடங்கி அல்லது அதற்கு முன்பு இருந்து பிரபாகரன் வரை மிக கடுமையாக போராட்டங்களை நடத்தினார்கள். ....பதில் 2009 முள்ளிவாய்க்கால் ஆக  இருந்தது   நாங்கள் தனிநாடு கோரியது. இலங்கையை பிரிக்கவில்லை  மாறாக தமிழர்கள் நாங்கள் சகல உரிமையுடன் வாழ்வதற்கே    .....இலங்கையின் ஐனதிபதியாக   ...பிரதமராக....தமிழர்கள் வரவேண்டும் என்று போராடினால் என்ன   வரமுடியாது   தான்.  முழு இலங்கை தமிழரும் சேர்ந்து முயற்சிகள் செய்யலாம்     😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, vaasi said:

முடியும், அப்படி தமிழீழம் கிடைத்தால் யார் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர்?

கண்டுபிடித்துவிட்டோமா?
நமக்குத்தானே யார் தலைவரானாலும் பிடிக்காது.
நாங்களும் செய்யமாட்டோம் செய்பவர்களையும் விடமாட்டோம்.☹️

கண்ணியமான தேர்தல் முறை இருக்குத்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2022 at 10:46, Kandiah57 said:

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒன்றிணைந்தாலும்.  தமிழ் ஈழம் ஒருபோதும் உருவாகாது. 😂

On 25/10/2022 at 20:07, vaasi said:

நமக்குத்தானே யார் தலைவரானாலும் பிடிக்காது.
நாங்களும் செய்யமாட்டோம் செய்பவர்களையும் விடமாட்டோம்.☹️

உண்மை தான்.
[விருப்பு புள்ளி இல்லை வழங்குவதற்கு]

பிரித்தானியாவின் 57வது பிரதமராக இப்போது இந்திய வம்சாவளி பிரிட்டிஸ்காரர்  வந்ததிற்கும் இலங்கையில் தமிழீழம் அமைக்கும் சாத்தியத்திற்கும் என்ன தொடர்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.