Jump to content

பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனுஸ்க அவுஸ்திரேலியாவிற்குள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியது நீதிமன்றம்

09 AUG, 2023 | 04:37 PM
image
 

அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான இலங்கை அணி வீரர் தனுஸ்க குணதிலக அவுஸ்திரேலியாவிற்குள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை  நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

தனது பிணைகளில் தளர்வை செய்யுமாறு கோருவதற்காக தனுஸ்ககுணதிலக சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இந்த மாதம் அவுஸ்திரேலியாவிற்குள் இரண்டு தடவை சுதந்திரமாக நடமாடுவதற்கு ஏற்ற விதத்தில் பிணையில் தளர்வை மேற்கொள்ளுமாறு தனுஸ்க குணதிலக நீதிமன்றை கோரியிருந்தார்.

இந்த கோரிக்கையை செவிமடுத்த நீதிபதி  இந்த கிழமை நான்கு நாட்களும் மாத இறுதியில் நான்குநாட்களும் தனுஸ்ககுணதிலக விமானநிலையத்தின் சர்வதேச புறப்படும் பகுதிக்கு செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

எனினும் அங்கு செல்வதற்கு 48 மணித்தியாலத்திற்கு முன்னர் தனுஸ்க குணதிலக பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

எனினும் தனுஸ்க குணதிலக வாரத்தில் மூன்று நாட்கள் காவல்நிலையத்திற்கு செல்லவேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிபதி தனுஸ்க குணதிலக ஒரு கையடக்க தொலைபேசியை மாத்திரம் பயன்படுத்தலாம் டேட்டிங் பக்கங்கள்  அப்களை பயன்படுத்த முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/161973

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரது வழக்கு எனக்கு புரிந்த வகையில் வெல்லக்கூடியது.

இருவரும் உடல் உறவுக்கு இணங்கி உள்ளனர்.

பெண்ணின் நிபந்தணை, ஆணுறை அணிய வேண்டும் என்று.

Stealthing (புதிய ஆங்கில சொல்) என்பது, உடலுறவின் போது ஆண், ஆணுறையை நீக்கிவிடுவது. இது பாலியல் பலாத்காரமாக (Rape) கருதப்படும்.

இவர்கள் விடயத்தில், எல்லாம் முடிந்து கட்டிலில் இருந்து இறங்கிய போது கீழே ஆணுறை இருந்ததை கண்டு தான் Rape பண்ணப்பட்டதாக முறையிட அவர் கைதாகியுள்ளார் ( 🥸 )

இது போன்ற வழக்கொன்றில், பிரிட்டனில், ஆணுறை நழுவியது தனக்கு தெரியாது என்று சொல்லி, உற்பத்தியாளர் தவறு என்று சொல்ல, தலையில் அடித்துக் கொண்ட யட்ய் அய்யா, வழக்கை தள்ளுபடி செய்தார்.

இந்த பெண், இவர் சொல்லப் போவதை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.

அதாவது கட்டிலில் இருந்து இறங்கும் வரை, ஆணுறை நழுவியது அவருக்கும் தெரியவில்லை. ஆக அவர் சொல்லப்போவதை இவர் முறைப்பாட்டிலே ஒத்துக்கொண்டு விட்டார்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ விவ‌கார‌ம் இன்னும் முடிந்த‌ பாடு இல்லையா🤣😁😂................

Link to comment
Share on other sites

1 hour ago, பையன்26 said:

இந்த‌ விவ‌கார‌ம் இன்னும் முடிந்த‌ பாடு இல்லையா🤣😁😂................

வக்கீல்கள் உங்களின் பணம் கரையும் வரை வழக்கை தொடர்வது தான் வழமை.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

வக்கீல்கள் உங்களின் பணம் கரையும் வரை வழக்கை தொடர்வது தான் வழமை.🙂

இவ‌ரின் கிரிக்கேட் வாழ்க்கை முடிந்து விட்ட‌து..............இவ‌ரின் கேஸ் இவ‌ள‌வு கால‌ம் நீடிக்குது என்றால் இவ‌ர் ம‌கா த‌ப்பு செய்து இருக்கிறார்..............இவ‌ர் ப‌ண‌ம் கொட்டும் தொட‌ர்க‌ளில் விளையாட‌ வில்லை..............இல‌ங்கை அணி வீர‌ர்க‌ளுக்கு ஊதிய‌ம் க‌ம்பி..............ஜ‌பிஎல்ல‌ விளையாடின‌ வீர‌ர்க‌ளிட‌ம் போதிய‌ ப‌ண‌ம் இருக்கு................வ‌ன்டு ஹ‌ச‌ர‌ங்கா இவ‌ருக்கு ப‌ண‌ உத‌வி செய்வ‌தாக‌ செய்தியில் வாசித்து இருக்கிறேன்...................

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தனுஸ்க என்னை கொலை செய்துவிடுவாரோ என அஞ்சினேன் - பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்ற விசாரணையில் தெரிவிப்பு

Published By: RAJEEBAN

18 SEP, 2023 | 01:00 PM
image
 

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஸ்க குணதிலக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய வேளை தனது உயிர்போய்விடுமோ என பயந்தேன் என பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

டின்டெர் டேட்டிங் செயலியில் தான் சந்தித்த பெண்ணிடம் நீ அச்சப்படாதே கர்ப்பம் தரிக்க மாட்டாய் என தனுஸ்க தெரிவித்துள்ளார்.

2022 ஒக்டோபர்29 ம் திகதி டேட்டிங் செயலியில் சந்தித்துள்ளார் அதற்கு நான்கு நாட்களிற்கு பின்னர் சிட்னியின் ஒபரே பாரில் சந்தித்துள்ளார்.

dhanushka_22.png

இதன் பின்னர் இருவரும் சிட்னியின் புறநகர் பகுதியில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர் - அங்கு இலங்கை அணி வீரர் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது- பாலியல் உறவின் போது ஆணுறையை  அந்தபெண்ணிற்கு தெரியாமல் அகற்றினார் என நீதிமன்றத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் தனுஸ்க குணதிலக இதனை நிராகரித்துள்ளார்.

தனுஸ்க குணதிலக தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டார் தாக்கினார் தன்னை மூச்சு திணறச்செய்தார் என  அந்த பெண் தெரிவித்துள்ளார்.

எனது கழுத்திலிருந்து  அவரது கையை அகற்ற முயற்சி செய்தேன் என அந்த பெண் நியுசவுத்வேல்ஸ் நீதிமன்ற விசாரணையின் போது இன்று தெரிவித்துள்ளார்.

தனுஸ்க ஆணுறையை அகற்றியதை தவிர சம்மதமற்ற விதத்தில் வேறு பாலியல் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்ற தகவலும் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/164835

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழகும்போது மிகவும் அன்பாக நடந்துகொண்ட தனுஸ்க பின்னர் மிருகம்போல மாறினார்- அவுஸ்திரேலிய நீதிமன்றில் பெண் தகவல்

Published By: RAJEEBAN

19 SEP, 2023 | 02:30 PM
image
 

பழகும்போது மிகவும் அன்பாக நடந்துகொண்ட தனுஸ்க பின்னர் மிருகம்போல மாறினார்- அவுஸ்திரேலிய நீதிமன்றில் பெண் தகவல்

தனுஸ்க குணதிலகவிற்கு எதிரான பாலியல் வல்லுறவு வழக்கு இன்று தொடர்ந்தும் இரண்டாவது நாளாக இடம்பெற்றவேளை பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்விட்டு அழுததுடன் பாலியல் உறவின் போது தனுஸ்க மிருகம் போல நடந்துகொண்டார் என தெரிவித்துள்ளார்.

c56aa0d049ebc507300c27a6766bf3fb.jpg

குறிப்பிட்டபெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் வல்லுறவில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள -குற்றச்சாட்டினை நிராகரித்துள்ள தனுஸ்க குணதிலக டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

2022 ம் திகதி நவம்பர் இரண்டாம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறுகின்றன-பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டவேளை தனுஸ்க குணதிலக ஆணுறையை பெண்ணின் விருப்பம் இல்லாமல் அகற்றினார் என்பதே முக்கிய குற்றச்சாட்டாக காணப்படுகின்றது.

இருவரும் ஒபேரா மதுபானசாலையில் முதலில் சந்தித்துள்ளனர் - இருவரும் கட்டித்தழுவுவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன. மது அருந்திய பின்னர் இருவரும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இன்று வீடியோமூலம் சாட்சி வழங்கியவேளை அந்த பெண் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

அவர் எனது கழுத்தை நெரித்தவேளை நான் எனது உயிருக்கு ஆபத்து என அஞ்சினேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்று சில நாட்களில் மோசமாக ஏதோ நடந்தது என அந்த பெண் தனது நண்பிக்கு குறுஞ்செய்தி அனுப்பினார் என அரச சட்டத்தரணியொருவர் தெரிவித்துள்ளார்.

நான் அனைத்து பிழைகளையும் செய்தேன் என நீங்கள் தெரிவிக்ககூடும், நாங்கள் சந்தித்தவேளை அவர் மிகவும்  அழகானவராக காணப்பட்டார். ஆனால் நாங்கள் பாலியல் உறவுகொள்ள ஆரம்பித்தவேளை தீடிரென அவர் ஏதோ மாற்றமடைந்தவராக காணப்பட்டார், மிகவும் வன்முறை குணம் கொண்டவராக காணப்பட்டார் என அந்த பெண் குறிப்பிட்ட குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற குறுஞ்செய்தியை தனது மற்றுமொரு நண்பருக்கும் அந்த பெண் அனுப்பியுள்ளார் என்ற தகவல் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளது.

caaf6952c2cdca3296b91559f09b0c05.jpg

அவர் என் மீது இருந்தார், சில சந்தர்ப்பங்களில் என்னால் மூச்சுவிடக்கூட முடியவில்லை, படுக்கை அறைக்கு சென்றவுடன் அவர் ஒரு வித்தியாசமான மனிதராக மிருகமாக மாறினார்  என அந்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/164941

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனுஸ்ககுணதிலக வழக்கு விசாரணை மூன்றாம் நாள்- பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததை காகித துண்டில் எழுதிவிட்டு குப்பையில் வீசினேன் - பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவிப்பு

Published By: RAJEEBAN

20 SEP, 2023 | 11:14 AM
image
 

தனுஸ்க குணதிலக தன்னை  பாலியல்வன்புணர்விற்கு உட்படுத்தினார் என அவுஸ்திரேலிய பெண் தெரிவித்த குற்றச்சாட்டுகளை பேப்பர் துண்டுகளில் எழுதிய பின்னர் அவற்றை குப்பைதோட்டியில் வீசியதாக பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஸ்கவிற்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணைகள் இன்று மூன்றாவது நாளாக சிட்னி நீதிமன்றத்தில் இடம்பெறுகின்ற நிலையில் இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

நடந்த சம்பவங்கள் குறித்து  நண்பர்களுடன் ஆராய்ந்த பின்னர் அந்த பெண்  நவம்பர் ஐந்தாம் திகதி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய தீர்மானித்தார் என  அரசசட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

முதலில் இது குறித்து அவர் ரோசா பே காவல்நிலையத்தின் கான்ஸ்டபிள் கட்ரீனா லக்கேர்டிஸ் என்பவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர் சொன்னதை பெண்காவல்துறை உத்தியோகத்தர் பேப்பர்துண்டுகளில் எழுதியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டப்பட்டவர் மூர்க்கத்தனமாக முத்தமிட்டார் தள்ளிவிட்டார் கடித்தார் அடித்தார் என குறுகிய நேரத்தில் தெரிவித்தது எனக்கு நினைவில் உள்ளது என  அந்த பெண் காவல்துறை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

நான் படங்களை இது குறித்து விசாரணை செய்யும் மற்றைய அதிகாரிக்கு அனுப்பினேன் எனவும் அந்த பெண்காவல்துறை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த பெண்காவல்துறை உத்தியோகத்தரை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்திய தனுஸ்ககுணதிலகவின் சட்டத்தரணி முருகன் தங்கராஜா அந்த விடயம் பதிவு செய்யப்படவேண்டிய அளவிற்கு முக்கியமானதா என நீங்கள்  நினைத்தீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீங்கள் அதனை சிறிய பேப்பரில் எழுதிவிட்டு அதனை குப்பை தொட்டியில் வீசினீர்களா எனவும் அந்த பெண் காவல்துறை உத்தியோகத்தரிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் அதனை செய்திருக்க கூடாது ஆனால் செய்தேன் என அவர் பதிலளித்துள்ளார்.

தனது அன்றைய நாள் பணி முடிந்ததும் நான் அந்த பேப்பரை வீசிஎறிந்தேன் என பெண் காவல்துறை உத்தியோகத்தர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் தான் பாலியல்வல்புணபுர்விற்கு உட்படுத்தப்பட்டார் என தெரிவித்தாரா என பெண்காவல்துறை உத்தியோகத்தரிடம் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அவர் அவ்வாறு தெரிவித்தார் நான் பின்னர் என்ன நடந்தது என்பதை பதிவு செய்துகொண்டேன் என பெண் காவல்துறை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/164989

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய பெண் எனது போன ஜென்மம் குறித்து பேசினார் - நான் அச்சமடைந்தேன் - தனுஸ்க

Published By: RAJEEBAN

21 SEP, 2023 | 11:15 AM
image
 

தனுஸ்க குணதிலக மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பெண் அவருடன் உறவில்இருந்தவேளை அவரின் போன ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்ததால் தான்  அச்சமடைந்ததாக தனுஸ்ககுணதிலக தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தனுஸ்க தெரிவித்துள்ள விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிட்ட பெண்ணை அவரது வீட்டில் முத்தமிட்டது அவருடன் பாலியல் உறவு கொண்டது போன்ற விடயங்களை தனுஸ்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் அந்த பெண்ணுடன் இடம்பெற்ற ஆன்மீக உரையாடல் குறித்து  தனுஸ்க தெரிவித்துள்ளார்,இந்த உரையாடலின் போது எனது முன்னைய ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஸ்க குறிப்பிட்டுள்ளார்.

அந்த உரையாடல் சுவராஸ்யமாக இருந்தது என நான் நினைத்தேன் அந்த பெண்ணிற்கு இலங்கை கலாச்சாரம் பௌத்தம் குறித்து நன்கு தெரிந்திருக்கின்றது என நினைத்தேன் என தெரிவிக்கும் தனுஸ்க குணதிலக பின்னர் அழுவதையும் தனது முகத்தை துடைப்பதையும் காணமுடிகின்றது.

நான் சிரித்துக்கொண்டே நான் முன்னைய ஜென்மத்தில் நான் யார்  என  தெரிவிக்க முடியுமா என கேட்டேன் நானும் அவரின் அயலவர்களும் தாய்லாந்தில் பிறந்தோம் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஸ்க குறிப்பிட்டுள்ளார்.

தன்னால் எனது போன ஜென்மத்தைபார்க்க முடிவதாக அவர் குறிப்பிட்டார் நான் அச்சமடைந்தேன் எனவும் தனுஸ்க தெரிவித்துள்ளார்.

ஏன் என தெரியவில்லை எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டது அந்த பெண் சற்றுவித்தியசாமானவராக காணப்படுகின்றார் என நினைத்தேன் அந்த பெண் எனக்கு டக்சியை ஏற்பாடு செய்து தந்தார் நான் ஆடையணிந்துகொண்டு முத்தமிட்டு அங்கிருந்து புறப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குற்றம்சாட்டியுள்ள பெண் முன்னைய ஜென்மங்கள் குறித்த பேச்சுக்களை தான் முதலில் ஆரம்பிக்கவில்லை என  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/165081

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனுஸ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை முடிவு - அடுத்த வியாழன் தீர்ப்பு;

Published By: RAJEEBAN

21 SEP, 2023 | 12:12 PM
image
 

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவந்த  இலங்கை அணியின் முன்னாள் வீரர்  தனுஸ்க குணதிலகவிற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று முடிவிற்கு வந்துள்ள அதேவேளை தனது தீர்ப்பை அடுத்த வியாழக்கிழமை அறிவிக்கவுள்ளதாக  நீதிபதி சரா ஹியுகெட் தெரிவித்துள்ளார்.

இன்றைய நான்காம் நாள் வழக்கு விசாரணையின்போது குறிப்பிட்ட பெண் எதிர்பார்த்ததை விட தனுஸ்கவுடனான பாலியல் உறவு வித்தியாசமாக அமைந்தது என அரசசட்டத்தரணி கப்பிரியலீ ஸ்டீட்மென்தெரிவித்துள்ளார்.

அது மிகவும் மூர்க்கத்தனமானதாக காணப்பட்டது குற்றம்சாட்டப்பட்டவர்  அந்த பெண்ணின் வேண்டுகோள்களை மதிக்கவில்லை  என குறிப்பிட்டுள்ளார்.

குற்றம்சாட்டியுள்ள பெண்ணை பிரிஸ்பேர்னிற்கு வருமாறு தனுஸ்ககுணதிலக அழைத்தார் தான் அதற்கான செலவை பொறுப்பேற்பதாக அவர் தெரிவித்தார் அதனை அந்த பெண் நிராகரித்துவிட்டார் என குறிப்பிட்டுள்ள  அரசவழக்கறிஞர் இருவருக்கும் இடையிலான உறவு பரஸ்பர சம்மதத்துடன் இடம்பெற்றது தெளிவாகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பிற்கு முன்னர் குற்றம்சாட்டப்பட்டவர் அந்த பெண்ணை இடைவிடாது முயற்சிசெய்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

படுக்கை அறையில் தனக்கு ஆணுறை பயன்படுத்துவது பிடிக்காது என தெரிவித்த தனுஸ்க அது தொடர்பில் அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் எனவும் அரசதரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணை திருப்திப்படுத்துவதற்காக அவர் ஆணுறையை அணிய இணங்கினார், அதனை அகற்றுவதற்கு அவருக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன எனவும் அரசதரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/165088

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்க குணதிலக்க: ஆணுறையின்றி வல்லுறவு செய்த குற்றச்சாட்டு - விசாரணையில் தெரிய வந்தது என்ன?

தனுஷ்க குணதிலக்க வழக்கு

பட மூலாதாரம்,NCA NEWSWIRE/GAYE GERARD

படக்குறிப்பு,

உடலுறவின்போது, வேண்டுமென்றே ஆணுறையைக் கழற்றியதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

7 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள், சிட்னி டவுனின் சென்டர் நீதிமன்றத்தில் நிறைவு பெற்றுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இந்த மாதம் 28ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு விசாரணைகள், செப்டம்பர் 21ஆம் தேதி இடம்பெற்றன.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணை, தனுஷ்க குணதிலக்க, சம்பவத்திற்கு முன்னரும் டிண்டர் சமூக ஊடக வாயிலாகத் தொடர்ந்தும் பின்தொடர்ந்திருந்ததாக அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், உறுதிப்படுத்த முடியாத ''கதையொன்றை" உருவாக்கியுள்ளதாக பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

 

வழக்கு விசாரணையில் என்ன தெரிய வந்தது?

தனுஷ்க குணதிலக்க வழக்கு

பட மூலாதாரம்,NCA NEWSWIRE/GAYE GERARD

படக்குறிப்பு,

தனுஷ்க குணதிலக்க மீதான பாலியல் குற்றச்சாட்டில் 28ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

இந்த பாலியல் உறவு, சம்ந்தப்பட்ட பெண் எதிர்பார்த்ததை விடவும் அல்லது அவரது தேவையை விடவும் வித்தியாசமானது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேப்ரியல் ஸ்டீட்மேன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையானது மிகவும் கடினமானது எனக் கூறிய வழக்கறிஞர், பெண்ணின் கோரிக்கைகள் அல்லது கட்டுப்பாடுகள் எதையும் அவர் மதிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக ஆணுறையை அகற்றிய நபரின் நடத்தையானது, அவர் அந்தப் பெண்ணின் கோரிக்கைகளை மதிக்கவில்லை என்பதற்கேற்ப அமைந்துள்ளது எனவும் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கும் குறிப்பிட்ட பெண்ணுக்கும் இடையே இணையத்தளத்தின் ஊடாக உருவான உறவு குறித்தும் வழக்கறிஞர் தெளிவூட்டியுள்ளார்.

அந்தப் பெண் பிரிஸ்பேன் நகருக்கு வருகை தருவதற்கான விமான டிக்கெட் செலவீனத்தை தனுஷ்க குணதிலக்க செலுத்த முயன்றுள்ள போதிலும், அதை அவர் நிராகரித்துள்ளதாக வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படுக்கையறையில், உடலுறவு கொள்வதற்கு முன்பாக, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும், அப்போது ஆணுறையைப் பயன்படுத்த விருப்பம் இல்லை என தனுஷ்க குணதிலக்க கூறியுள்ளதாகவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர், தனது ஆணுறையை அகற்றியதை அவதானிக்காத பெண், உடலுறவின் பின்னரே ஆணுறை கீழே வீசப்பட்டிருந்ததை கவனித்ததாகவும் நீதிமன்றத்தில் இதற்கு முன்னர் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

ஆனால், அந்தப் பெண்ணை திருப்திப்படுத்துவதற்காக ஆணுறையை பயன்படுத்தியுள்ளதாகவும், அதை அகற்றுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உடலுறவானது விரும்பத்தகாதவாறு இருந்தமையாலேயே, அவர் ஆணுறையை அகற்றியதை அவதானிக்கவில்லை எனவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

 
தனுஷ்க குணதிலக்க வழக்கு விசாரணை: வரும் 28ஆம் தேதி தீர்ப்பு

பட மூலாதாரம்,DANUSHKA GUNATHILAKA'S/FB

இரண்டாவது ஆணுறை பயன்படுத்தியதாக விளக்கம்

போலீஸ் விசாரணைகளின்போது, பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தனுஷ்க குணதிலக்க நிராகரித்துள்ளார். தான் உடலுறவின்போது இரண்டு ஆணுறைகளை பயன்படுத்தியிருந்ததாகவும், அதில் முதலாவதை சரியாகப் பயன்படுத்த முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது ஆணுறை விவகாரமானது, வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட போலித் தகவல் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதேவேளை, அந்தப் பெண்ணின் நடத்தையானது காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றம் பெற்றுள்ளதாகவும், பலவேறு காரணங்களால் அவர் போலியான மற்றும் அவருக்குச் சாதகமாகும் விதமான சாட்சியங்களை வழங்கியுள்ளதாகவும் பிரதிவாதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முருகன் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

ஆணுறை கழன்றதாகவும், ஏனையோரிடம் அதைச் சந்தேகமாக கூறுவதும் சம்பந்தப்பட்ட பெண்ணின் பரஸ்பர கருத்துகள் என பிரதிவாதி சார்பிலான வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த யுவதி தனது நண்பர்களுடன் நடத்திய உரையாடலில் அது தெளிவாகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.

யுவதி கூறும் கதைக்குப் பொருத்தமான விடயங்களை வெளிப்படுத்த முடியாதுள்ளதாகவும் வழக்கறிஞர் தங்கராஜ் குறிப்பிடுகின்றார்.

வேறாரு இரவு ஒன்றின்போது தனுஷ்க குணதிலக்க போட்டிகளின் பின்னர் சோர்வடைந்து இருந்ததாகவும், அந்தப்பெண்ணை குறித்த இரவில் சந்திக்க முடியாது என ஒரு சந்தர்ப்பத்தில் கூறியுள்ளதாகவும் பிரதிவாதி சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறியுள்ளார். அப்படியிருக்க, அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறுவது முரண்பாடாகக் காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதிவாதி, சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பதை வலியுறுத்திய வழக்கறிஞர் தங்கராஜ், தனக்கு பிரச்னையை உண்டாக்கவல்ல மூச்சுத்திணறல் போன்ற கண்ணுக்குத் தெரியாத காயங்களை ஏற்படுத்தும் இதுபோன்ற நடத்தைகளை நிகழ்த்துவதன் ஊடாக அவர் அபாயகர செயல்களைச் செய்வாரா எனவும் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைகள் நேற்றைய தினத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், வழக்கு மீதான தீர்ப்பு எதிர்வரும் 28ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

"வலுக்கட்டாயமாக கட்டி அணைத்துக்கொண்டார்"

தனுஷ்க குணதிலக்க வழக்கு விசாரணை: வரும் 28ஆம் தேதி தீர்ப்பு

பட மூலாதாரம்,DANUSHKA GUNATHILAKA'S/FB

வீட்டிற்கு வருகை தந்ததன் பின்னர் இருவரும் பானம் அருந்திக் கொண்டிருந்த தருணத்தில், தனுஷ்க குணதிலக்க, வலுக்கட்டாயமாக தன்னைக் கட்டியணைத்துக்கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

''அனைத்தும் மிக வேகமாக நடந்தமையால், அது எனக்கு அவ்வளவு இலகுவான சூழ்நிலையாக அமையவில்லை," எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டின் முன்புறத்திலேயே தனது ஆடைகளை தனுஷ்க குணதிலக்க கழற்றியதாகவும், அது பொது இடம் என்பதால், படுக்கையறைக்கு செல்வதற்குப் பரிந்துரை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது விருப்பம் இல்லாது தனுஷ்க குணதிலக்க வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், அது தனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆணுறையைப் பயன்படுத்துமாறு அவர் கூறியதற்கு அது தேவையில்லை எனவும் அதைப் பயன்படுத்த விருப்பமில்லை எனவும் தனுஷ்க குணதிலக்க கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

எனினும், ஆணுறையை வழங்கியவுடன், விருப்பமின்றி அதை தனுஷ்க குணதிலக்க அணிந்துகொண்டு, உடலுறவில் ஈடுபட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார்.

 
தனுஷ்க குணதிலக்க வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வழக்கு விசாரணை முடியும் வரை தனுஷ்க குணதிலக்க ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

''எனக்கு உயிர் பயம் ஏற்பட்டது"

ஆணுறையை அணிந்துகொண்ட தனுஷ்க குணதிலக்க தன்னுடன் வலுக்கட்டாயமாக 15 நிமிடங்கள் வரை பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், இதன்போது 20 முதல் 30 விநாடிகள் தனது மூச்சு நின்றதாகவும் யுவதி நீதிமன்றத்தில் சாட்சி வழங்கியுள்ளார்.

''எனது கழுத்திலிருந்த அவருடைய கையை எடுப்பதற்கு நான் முயற்சி செய்தமை எனக்கு நினைவில் வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு உயிர் பயம் ஏற்பட்டது," என அவர் கூறியுள்ளார்.

''வேகத்தை குறைத்துக் கொள்ளுமாறு நான் அவரிடம் கோரினேன். எனினும், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை," என பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

உடலுறவு முடிவடைந்த சில நிமிடங்களின் பின்னர் ஆணுறை கீழே வீழ்ந்து கிடப்பதை, தான் அவதானித்ததாக யுவதி நீதிமன்றத்தில் சாட்சி வழங்கியுள்ளார்.

 

''பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடவே விருப்பம் கொண்டார்"

தனுஷ்க குணதிலக்க வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கடந்த ஆண்டு கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலியா சென்றபோது, சமூக ஊடகத்தில் அறிமுகமான பெண்ணுடன் தனுஷ்க குணதிலக்க உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக்க, முறைப்பாட்டாளரின் தெளிவின்றி, ஆணுறையை அகற்றினாரா என்பதே வழக்கு விசாரணைகளின் பிரதான பிரச்னையாகக் காணப்படுகின்றது என முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டாளர் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவதற்கே தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அச்சத்தின் காரணமாக ஆணுறை தொடர்பில் எதுவும் கூறுவது பாதுகாப்பற்றது என, குறித்த பெண் உணர்ந்துள்ளதாக வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

''முறைப்பாட்டாளர் அதை உறுதிப்படுத்த வேண்டும்"

தனது தரப்பு பிரதிவாதியான தனுஷ்க குணதிலக்க, ''வேண்டுமென்றே சம்பந்தப்பட்ட பெண்ணின் தெளிவில்லாமல் ஆணுறையை அகற்றியமை தொடர்பில், முறைப்பாட்டாளர் அதை உறுதிப்படுத்த வேண்டும்" என தனுஷ்க குணதிலக்க சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் முருகன் தங்கராஜ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

தனுஷ்க குணதிலக்க, தனது கையடக்கத் தொலைபேசியின் ரகசிய பூட்டை திறப்பதற்கும் (அன்லாக் செய்வதற்கும்), பிடியாணையின்றி தனது ஹோட்டல் அறைக்கு வருகை தந்து, தனது பொருட்களை சோதனையிடுவதற்கும் போலீசாருக்கு இடமளித்ததாகவும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
தனுஷ்க குணதிலக்க வழக்கு
படக்குறிப்பு,

தன்மீதான குற்றச்சாட்டை தனுஷ்க குணதிலக்க நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன?

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இடைநடுவில், இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய தனுஷ்க குணதிலக்க, சமூக ஊடகத்தின் ஊடாக அறிமுகமான 29 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அந்த நாட்டு போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் யுவதியால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டிடிருந்தது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிட்னி நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த தனுஷ்க குணதிலக்க, அந்த நாட்டு போலீசாரால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.

சிட்னி நகரிலுள்ள தடுப்பு முகாமொன்றில் 11 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனுஷ்க குணதிலக்க, கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில், நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளமையால், தனுஷ்க குணதிலக்க அந்த நாட்டிலேயே தங்கியிருந்து வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இந்த மாதம் 28ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c6p02nd514xo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1b3a8cf0-5ab0-11ee-b8af-8301cdef476d.jpg

பழகும்போது மிகவும் அன்பாக நடந்துகொண்ட தனுஸ்க பின்னர் மிருகம்போல மாறினார்- அவுஸ்திரேலிய நீதிமன்றில் பெண் தகவல்

இப்போ கையில் பிடித்துக்கொண்டு திரியும் இந்த குழந்தை யார்?
நான் அவன் இல்லை படத்தில் வரும் சினேகா கரெக்ட்டரா ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே..  " திரி  முழுவதும் வாசித்ததில் பாட சாலை நாட்களில் ஒளிந்து மறைந்து        " சரோசாதேவி " புத்தகம் படித்த எபேக்ட் கிடைக்குதப்பா.. 👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் தனுஷ்க குணதிலக்க !!

தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல என நீதிமன்றம் அறிவிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

அனுமதியின்றி உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

32 வயதான அவர், டி20 உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்ரேலியா சென்றிருந்தபோது, இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் பொலிஸாரிடம் அவர் வாக்குமூலம் வழங்கும் காணொளி கடந்த வாரம் நீதிமன்றில் காட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரது நேர்காணலில் உண்மை வெளிப்படுவதாக தெரிவித்துள்ள நீதிபதி, சம்பந்தப்பட்ட பெண் எழுப்பிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு தனுஷ்க குணதிலகாவை குற்றமற்றவர் என்று அறிவித்தார்.

https://athavannews.com/2023/1351465

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து குற்றங்களிலும் இருந்து அவுஸ்திரேலியா நீதிமன்றம் தனுஷ்க்காவை விடுதலை செய்துள்ளது.. இந்த திரியில் அவன் சிங்களவன் என்ற ஒரே காரணுத்துக்காக தமது விருப்பு வெறுப்புகளை வைத்துக்கொண்டு தீர்ப்பெழுதிய தமிழ்த்தேசிய வாத யூரிகளையும் அவர்கள் கருத்துக்களையும் நினைத்துப்பார்க்கிறேன்..

இணையங்களில் அவன் ஆண் என்ற ஒரேகாரணுத்துக்காக அவனை போட்டு அடித்து குற்றவாளி என்று தீர்ப்பு எழுதிய பெண்ணியவாதிகள் மாதர்சங்க மெம்பர்களை நினைத்துப்பார்க்கிறேன்..

குற்றஞ்சாட்டியவர் ஒரு பெண் என்பதால் கண்டிப்பாக அவள் பக்கம்தான் நிக்கவேண்டும் பலவீனமானவர்கள் பக்கம் நிற்பதே அறம் என்று அவனைப்போட்டு அடித்த மாபெரும் மனித நேயவாதிகளை நினைத்துப்பார்க்கிறேன்..

இதனால்தான் சீமான் கேசிலும் சொன்னேன் குற்றவாளியா சுற்றவாளியா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும் அதற்கு முன் நீதிமன்றத்தை அனுகாமல் ஊடகங்களில் காதலித்தவர்கள் பிரிந்தபின் ஒருவரை குற்றஞ்சாட்டி பேசுவதை நீதிமன்றம்கள் தடை செய்யவேண்டும் மீறி பேசுபவர் மீது மானநஸ்ட்ட வழக்கு பாயவேண்டும் இதுதான் எதிர்காலத்தில் ஒரு வரின் புகழை கெடுக்கும் வகையில் பொய் குற்றச்சாட்டுக்களை மற்றவர் பொதுவெளியில் பேசுவதை தடுக்கும்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் சின்மயி வைரமுத்து மீது குற்றம் சுமத்துகிறார் விஜலட்சுமி சீமான் மீது குற்றம் சுமத்துகிறார்.. தமிழச்சி சோபாசக்திமேல் வேட்டியை அவிழ்த்ததாக குற்றம் சுமத்துகிறார் லீணா மணிமேகலை குற்றம் சுமத்துகிறார்..  இவை போல பல நூறு.. உடனுமா இந்த குற்றச்சாட்டுக்களுக்கெல்லாம் மறுகேள்வி இன்றி குற்றம் சாட்டியவர் பெண் என்றாளே போதும் எதிர்ப்பக்க ஆணை கண்ணை மூடிக்கொண்டு கயவன் என்று பொதுவெளியில் போட்டு அடிக்கிறார்கள்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனுஸ்க பாலியல் உறவின் போது ஆணுறையை அகற்றினார் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை - நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

28 SEP, 2023 | 11:23 AM
image
 

தனுஸ்க குணதிலக பாலியல் உறவின் போது ஆணுறையை அகற்றினார் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என தனுஸ்க குணதிலகவிற்கு எதிரான வழக்கை விசாரணை செய்த நீதிபதி தெரிவித்துள்ளார்.

தனுஸ்க குணதிலக குற்றமற்றவர் என தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி சரா ஹகெட் இதனை தெரிவித்துள்ளார்

சிட்னியின் டவுனிங் சென்டர் டிஸ்டிரிக்ட் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.

dhanuska_1113.jpg

இருவரும் தொடர்ந்து பாலியல் உறவில் ஈடுபட்டதால் ஆணுறையை அகற்றுவதற்கு குற்றம்சாட்டப்பட்டவருக்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை என  ஆதாரங்கள் உறுதி செய்கின்றன என நீதிபதி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் என தெரிவித்தவர் ஒரு புத்திசாலியான சாட்சி அவர் வேண்டுமென்றே பொய்யான விடயங்களை தெரிவிக்கவில்லை, மாறாக கிரிக்கெட் வீரரை மோசமானவராக சித்தரிப்பதற்காக அவ்வாறு நடந்துகொண்டார் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் குற்றம்சாட்டப்பட்டவருக்கு சார்பாக இல்லை என்பதை நான் காண்கின்றேன் மாறாக அது குற்றம்சாட்டப்பட்டவரின் ஆதாரங்களின் நம்பகதன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது எனவும்   நீதிபதி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/165623

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற தீர்ப்பு அனைத்தையும் தெரிவித்துவிட்டது - மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆசையாக உள்ளது - தனுஸ்க

Published By: RAJEEBAN

28 SEP, 2023 | 04:19 PM
image
 

பாலியல் வன்முறை குற்றச்சாட்டின் கீழ் விசாரணையைஎதிர்கொண்ட இலங்கை அணிவீரர் தனுஸ்க குணதிலக  குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில்  ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்குள்ளான பின்னர் முதல்தடவையாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ள அவர் தீர்ப்பு அனைத்தையும் சொல்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமானவை நான் எனது முகாமையாளாகள் சட்டத்தரணிகள் குறிப்பாக முருகன் தங்கராஜா ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். நான் அவுஸ்திரேலியாவில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது பெற்றோர்கள்  இலங்கையிலிருந்து எனக்கு உதவியவர்கள்  அனைவருக்கும் நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யார் பொய்சொன்னார்கள் யார் பொய்சொல்லவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்-எனது வாழ்க்கை மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன், நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புகின்றேன் என தனுஸ்ககுணதிலக தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/165645

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கிரிக்கெற் எண்டு நாடு, நாடா போய் என்ன வெளாட்டு காட்டுவார் எண்டு வெட்ட வெளிச்சமா தெரிவதால், உடான்ஸ் சாமியார் சொல்லுறார்:

ஓய், கிரிக்கெற் வெளாடினது போதும். அவசரமா கலியாணத்தை செய்யும்.

நம்ம நல் ஆசிகள் கிடைக்கும்! 🤣😂

@goshan_che

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

 

கிரிக்கெற் எண்டு நாடு, நாடா போய் என்ன வெளாட்டு காட்டுவார் எண்டு வெட்ட வெளிச்சமா தெரிவதால், உடான்ஸ் சாமியார் சொல்லுறார்:

ஓய், கிரிக்கெற் வெளாடினது போதும். அவசரமா கலியாணத்தை செய்யும்.

நம்ம நல் ஆசிகள் கிடைக்கும்! 🤣😂

@goshan_che

 

👆🏼வழக்கு நில்லாது (75%) என உடான்ஸ்சாமியார் அன்றே அருள்வாக்கு கூறியுள்ளார்.

அதே போல் எப்போதும் குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கு ஆதரவாகும் @பாலபத்ர ஓணாண்டி @Nathamuni @விசுகு போன்றோரும் தம் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளனர்🤣.

அதே போல்… சிங்களவன் எண்டால் கட்டாயம் அவனில்தான் பிழை என வாதாடும் குரூப்பும் தம் கடமையை செவ்வனே செய்துள்ளது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

👆🏼வழக்கு நில்லாது (75%) என உடான்ஸ்சாமியார் அன்றே அருள்வாக்கு கூறியுள்ளார்.

அதே போல் எப்போதும் குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கு ஆதரவாகும் @பாலபத்ர ஓணாண்டி @Nathamuni @விசுகு போன்றோரும் தம் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளனர்🤣.

அதே போல்… சிங்களவன் எண்டால் கட்டாயம் அவனில்தான் பிழை என வாதாடும் குரூப்பும் தம் கடமையை செவ்வனே செய்துள்ளது🤣

அதே 😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2023 at 06:30, பாலபத்ர ஓணாண்டி said:

அனைத்து குற்றங்களிலும் இருந்து அவுஸ்திரேலியா நீதிமன்றம் தனுஷ்க்காவை விடுதலை செய்துள்ளது.. இந்த திரியில் அவன் சிங்களவன் என்ற ஒரே காரணுத்துக்காக தமது விருப்பு வெறுப்புகளை வைத்துக்கொண்டு தீர்ப்பெழுதிய தமிழ்த்தேசிய வாத யூரிகளையும் அவர்கள் கருத்துக்களையும் நினைத்துப்பார்க்கிறேன்..

இணையங்களில் அவன் ஆண் என்ற ஒரேகாரணுத்துக்காக அவனை போட்டு அடித்து குற்றவாளி என்று தீர்ப்பு எழுதிய பெண்ணியவாதிகள் மாதர்சங்க மெம்பர்களை நினைத்துப்பார்க்கிறேன்..

குற்றஞ்சாட்டியவர் ஒரு பெண் என்பதால் கண்டிப்பாக அவள் பக்கம்தான் நிக்கவேண்டும் பலவீனமானவர்கள் பக்கம் நிற்பதே அறம் என்று அவனைப்போட்டு அடித்த மாபெரும் மனித நேயவாதிகளை நினைத்துப்பார்க்கிறேன்..

இதனால்தான் சீமான் கேசிலும் சொன்னேன் குற்றவாளியா சுற்றவாளியா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும் அதற்கு முன் நீதிமன்றத்தை அனுகாமல் ஊடகங்களில் காதலித்தவர்கள் பிரிந்தபின் ஒருவரை குற்றஞ்சாட்டி பேசுவதை நீதிமன்றம்கள் தடை செய்யவேண்டும் மீறி பேசுபவர் மீது மானநஸ்ட்ட வழக்கு பாயவேண்டும் இதுதான் எதிர்காலத்தில் ஒரு வரின் புகழை கெடுக்கும் வகையில் பொய் குற்றச்சாட்டுக்களை மற்றவர் பொதுவெளியில் பேசுவதை தடுக்கும்..

 

On 28/9/2023 at 06:37, பாலபத்ர ஓணாண்டி said:

இப்படித்தான் சின்மயி வைரமுத்து மீது குற்றம் சுமத்துகிறார் விஜலட்சுமி சீமான் மீது குற்றம் சுமத்துகிறார்.. தமிழச்சி சோபாசக்திமேல் வேட்டியை அவிழ்த்ததாக குற்றம் சுமத்துகிறார் லீணா மணிமேகலை குற்றம் சுமத்துகிறார்..  இவை போல பல நூறு.. உடனுமா இந்த குற்றச்சாட்டுக்களுக்கெல்லாம் மறுகேள்வி இன்றி குற்றம் சாட்டியவர் பெண் என்றாளே போதும் எதிர்ப்பக்க ஆணை கண்ணை மூடிக்கொண்டு கயவன் என்று பொதுவெளியில் போட்டு அடிக்கிறார்கள்..

இந்த ஒப்பீடே தவறு ...இவர் டேட்டிங் அப் மூலம் காசு கொடுத்து தான்  அந்தப் பெண்ணோடு படுக்க போனார்...விருப்பமில்லாமல் பலாத்காரம் செய்தார் என்று இவர் மீது குற்ற சாட்டு இல்லை ...சீமான் மீது திருமணம் செய்வதாய் சொல்லி ஏமாத்தி விட்டார் என்று குற்றசாட்டு...வைரமுத்து மேல் பாட சான்ஸ் தருவதாய் கூறி படுத்தார் என்று  குற்றசாட்டு ...முதலாதவர் நீதிமன்றத்திற்கு போய் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபித்து உள்ளார் ...மற்றவர்கள் அப்படியா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

 

இந்த ஒப்பீடே தவறு ...இவர் டேட்டிங் அப் மூலம் காசு கொடுத்து தான்  அந்தப் பெண்ணோடு படுக்க போனார்...விருப்பமில்லாமல் பலாத்காரம் செய்தார் என்று இவர் மீது குற்ற சாட்டு இல்லை ...சீமான் மீது திருமணம் செய்வதாய் சொல்லி ஏமாத்தி விட்டார் என்று குற்றசாட்டு...வைரமுத்து மேல் பாட சான்ஸ் தருவதாய் கூறி படுத்தார் என்று  குற்றசாட்டு ...முதலாதவர் நீதிமன்றத்திற்கு போய் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபித்து உள்ளார் ...மற்றவர்கள் அப்படியா ?

எப்படியாவது அண்ணனை காப்பாற்றி விட்டால் போதும்….லொஜிக் எல்லாம் கதைக்கப்படாது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

எப்படியாவது அண்ணனை காப்பாற்றி விட்டால் போதும்….லொஜிக் எல்லாம் கதைக்கப்படாது🤣

எந்த அண்ணனை ????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

எந்த அண்ணனை ????????????

இப்ப சீமான் மட்டும்தான் அண்ணை.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.