Jump to content

யுக்ரைன் யுத்தத்தில் 240,000 பேர் பலி: அமெரிக்கா கணிப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரைன் யுத்தத்தில் 240,000 பேர் பலி: அமெரிக்கா கணிப்பு

By DIGITAL DESK 3

10 NOV, 2022 | 03:53 PM
image

யுக்ரைன் யுத்தத்தில் இதுவரை சுமார் 2 லட்சம் படையினரும் 40,000 பொதுமக்களும் பலியாகியிருக்கலாம் என அமெரிகக்h கணிப்பிட்டுள்ளது.

சுமார் ஒரு லட்சம் ரஷ்ய படையினரும், ஒரு லட்சம் யுக்ரைனிய படையினரும் யுக்ரைனில் பலியாகியிருக்கலாம் என அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தளபதிகளின் தலைவரான ஜெனரல் மார்க் மிலி கூறியுள்ளார்.

அத்துடன், மோதல்களில் சிக்கி சுமார் 40,000 பொதுமக்களும் பலியாகியிருக்கலாம் எனவும் அவர் கூறிழயுள்ளார். 

அதேவேளை, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளுக்கு மீள செல்வதற்காக யுக்ரைன் விடுத்துள்ள சமிக்ஞைகள், பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பாக அமையலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலேன்ஸ்கி, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளுக்குத் தயார் என அண்மைய நாட்களில் கூறி வருகிறார். 

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், ரஷ்ய ஜனாதிபதி பதவியிலிருந்து விளாடிமிர் புட்டின் நீக்கப்பட வேண்டுமென ஸெலேன்ஸ்கி கூறிவந்தார். ஆனால், அந்த நிபந்தனையை தற்போது அவர் கைவிட்டுள்ளார்.

யுக்ரைனில் தனது 5937 படையினர் இறந்ததாக ரஷ்யா இறுதியாக கடந்த செப்டெம்பரில் தெரிவித்திருந்தது.

தனது 9000 படையினர் இறந்ததாக யுக்ரைன் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தது.

https://www.virakesari.lk/article/139650

Link to comment
Share on other sites

ஆயுதங்களை கொடுத்து மக்களையும் படையினரையும் கொன்ற பெருமை நேட்டோவை சாரும். பலரும் அபபோதே சொன்னார்கள் பேச்சுவார்த்தைக்கு போகுமாறு. 
கெர்சானை விட்டு ரஸ்ய படைகளை விரட்டிய ஸெலன்ஸ்கி திடீரென பேச்சுவார்த்தைக்கு போகும் மர்மம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஆயுதங்களை கொடுத்து மக்களையும் படையினரையும் கொன்ற பெருமை நேட்டோவை சாரும். பலரும் அபபோதே சொன்னார்கள் பேச்சுவார்த்தைக்கு போகுமாறு. 
கெர்சானை விட்டு ரஸ்ய படைகளை விரட்டிய ஸெலன்ஸ்கி திடீரென பேச்சுவார்த்தைக்கு போகும் மர்மம் என்ன?

பெரிய அடி ஏதும் விழும் என நினைக்கிறாரோ? அல்லது பின்னிருந்து இயக்குபவர்கள் கையை விரிச்சிட்டாங்களோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

பெரிய அடி ஏதும் விழும் என நினைக்கிறாரோ? அல்லது பின்னிருந்து இயக்குபவர்கள் கையை விரிச்சிட்டாங்களோ!

இது முடிவிலா  யுத்தம் என்பது  இரு  பகுதிக்கும் தெரிந்திருக்கும்

இனி உக்ரைன் இழப்பதற்கு  பெரிதாக ஒன்றுமில்லை

ஆனால் ரசியாவுக்கு????

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

ஆயுதங்களை கொடுத்து மக்களையும் படையினரையும் கொன்ற பெருமை நேட்டோவை சாரும். பலரும் அபபோதே சொன்னார்கள் பேச்சுவார்த்தைக்கு போகுமாறு. 
கெர்சானை விட்டு ரஸ்ய படைகளை விரட்டிய ஸெலன்ஸ்கி திடீரென பேச்சுவார்த்தைக்கு போகும் மர்மம் என்ன?

ரஷ்சியாவுக்கு கெர்சான் இனாமாகக் கிடைத்தது. ரஷ்சியா உக்ரைனை ஆக்கிரமிப்பது அல்ல நோக்கம் என்பதை யுத்தத்தின் ஆரம்பத்திலேயெ சொல்லிவிட்டது. நோட்டாவாக்கம் உக்ரைனில் தடுத்து நிறுத்தப்படும் வரை ரஷ்சியா ஓயாது. ஆனால் இழப்புக்களை குறைக்க நினைக்கும். 

உக்ரைன் கைப்பற்றிய பகுதிகள் பலவும் ரஷ்சியா தானாக வெளியேறிய பகுதிகளே. உக்ரைன் யுத்தம் செய்து மீட்டதென்பது ஒரு சிறிய பகுதிதான்.

ஆனால்.. உக்ரைனை இராணுவ நீக்கம்.. நோட்டோ விரட்டல் செய்ய இப்போ ரஷ்சியாவுக்கு ஏவுகணைகளே போதும் என்றாகிவிட்டது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

இது முடிவிலா  யுத்தம் என்பது  இரு  பகுதிக்கும் தெரிந்திருக்கும்

இனி உக்ரைன் இழப்பதற்கு  பெரிதாக ஒன்றுமில்லை

ஆனால் ரசியாவுக்கு????

🤣

தலைக்கு மேல் போனபின்னர், சாண் போனாலென்ன முழம் போனாலென்ன என்கிறீர்கள் ..ம்..ம்...ம்...

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

ஆனால்.. உக்ரைனை இராணுவ நீக்கம்.. நோட்டோ விரட்டல் செய்ய இப்போ ரஷ்சியாவுக்கு ஏவுகணைகளே போதும் என்றாகிவிட்டது. 

ஏவுகணைகளை இராணுவ இலக்குகள் மீது பாவிக்காமல், மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா பாவிப்பது பயங்கரவாதம் எனத் தெரியவில்லையா! 

ரஷ்யா நீண்டகாலப் போருக்குப் போகின்றது. இதனால் நேட்டோவை இன்னமும் உள்ளே இழுக்கத்தான் முடியும். விரட்டமுடியாது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ரஷ்யா நீண்டகாலப் போருக்குப் போகின்றது. இதனால் நேட்டோவை இன்னமும் உள்ளே இழுக்கத்தான் முடியும். விரட்டமுடியாது.

நேட்டோ உள்ளே வந்தால் இழப்பு உக்ரேனுக்குத்தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஏவுகணைகளை இராணுவ இலக்குகள் மீது பாவிக்காமல், மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா பாவிப்பது பயங்கரவாதம் எனத் தெரியவில்லையா! 

ரஷ்யா நீண்டகாலப் போருக்குப் போகின்றது. இதனால் நேட்டோவை இன்னமும் உள்ளே இழுக்கத்தான் முடியும். விரட்டமுடியாது.

உண்மை நிலை. புதின் சும்மா இருந்த சுவீடனையும் பின்லாந்தையும் நேட்டோவில் தள்ளிவிட்டதுபோல் இன்னும் பல நாடுகளை இணைக்கும் திட்டம் உள்ளதுபோலும். ஒரு அரசென்றவகையிலே  மக்களது அன்றாடத் தேவைகளான மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளைத் தாக்குவதும் பயங்கரவாதமே

.யதார்த்தை உலக மக்கள் புரிந்துகொண்டாலும், உலகின் இழுவிசைக்கேற்றவாறு மக்கள் நகர்வதாகவே தெரிகிறது. அது ரஸ்யாவென்றோ /அமெரிக்காவென்றோ இல்லை. அவர்களுக்குத்தேவை அன்றாட வாழ்வு நகரவேண்டும். ஆயுதமுதலைகளுக்கு யுத்தம் தேவை

16 minutes ago, Eppothum Thamizhan said:

நேட்டோ உள்ளே வந்தால் இழப்பு உக்ரேனுக்குத்தான்!

இப்போதுமட்டும் இழப்பில்லையா? இல்லாமல் இழப்பதைவிட இணைந்து நேட்டோவின் உதவிகளை வலுப்படுத்தினால் புதினால் என்ன செய்யமுடியும்?

Edited by nochchi
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஏவுகணைகளை இராணுவ இலக்குகள் மீது பாவிக்காமல், மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா பாவிப்பது பயங்கரவாதம் எனத் தெரியவில்லையா! 

ரஷ்யா - ஜேர்மனிக்கு இடையிலான எரிவாயு குழாயை குண்டு வைத்து வெடிக்க வைத்தது சமூக நற்பணி வரிசையில் வரும்.😂

15 minutes ago, nochchi said:

உண்மை நிலை. புதின் சும்மா இருந்த சுவீடனையும் பின்லாந்தையும் நேட்டோவில் தள்ளிவிட்டதுபோல் இன்னும் பல நாடுகளை இணைக்கும் திட்டம் உள்ளதுபோலும். ஒரு அரசென்றவகையிலே  மக்களது அன்றாடத் தேவைகளான மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளைத் தாக்குவதும் பயங்கரவாதமே

நேட்டோ  மற்ற நாடுகளை பாதுகாப்பதை விட அழித்ததுதான் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

1) ஏவுகணைகளை இராணுவ இலக்குகள் மீது பாவிக்காமல், மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா பாவிப்பது பயங்கரவாதம் எனத் தெரியவில்லையா! 

2)?ரஷ்யா நீண்டகாலப் போருக்குப் போகின்றது. இதனால் நேட்டோவை இன்னமும் உள்ளே இழுக்கத்தான் முடியும். விரட்டமுடியாது.

1) நான் அடிக்கிறமாதிரி அடிப்பன், நீ நோகிறமாதிரி அழு  என்கிற மாதிரியான யுத்தத்தைச் செய்ய வேண்டும்  என்கிறீர்கள் ? 

2) அப்படியென்றால் இன்னும் NATO உக்ரேனிய யுத்தத்தில் பங்குதாரர் ஆகவில்லை என்கிறீர்கள்..

🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

ஏவுகணைகளை இராணுவ இலக்குகள் மீது பாவிக்காமல், மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா பாவிப்பது பயங்கரவாதம் எனத் தெரியவில்லையா! 

ரஷ்யா நீண்டகாலப் போருக்குப் போகின்றது. இதனால் நேட்டோவை இன்னமும் உள்ளே இழுக்கத்தான் முடியும். விரட்டமுடியாது.

அப்போ ரஷ்சியாவை யுத்த களத்தில் சந்திக்காமல்.. அந்த நாட்டு மக்களைப் பாதிக்கக் கூடிய வகையில் பொருண்மியத்தடைகள் போடுவது உள்ளிட்ட மேற்குலகின் நடவடிக்கைகளையும் பயங்கரவாதம் என்பீர்களா..??!

ரஷ்சிய கொடியை தாங்கியது என்பதற்காகவே பல உல்லாசப் படகுகளை நடுக்கடலிலும் துறைமுகங்களிலும் வைத்து கைப்பற்றிய செயல்கள்.. பயங்கரவாதம் ஆகும் தானே..?!

எங்கேயோ யுத்தம் நிகழ.. லண்டனில் இருந்த ரஷ்சிய பணக்காரரையும் அவரின் கால்பந்துக் கழகமான செல்சியையும் பழிவாங்கியது.. பயங்கரவாதம் ஆகாதோ..??!

உக்ரைன் ரஷ்சிய எல்லைப் புற நகர்களில் இருந்த எண்ணை தாங்கிகளை தாக்கியமை பயங்கரவாதம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா..??!

பொதுமக்களின் பாவனைக்குரிய கிரிமியா பாலத்தை தாக்கியது பயங்கரவாதம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா..?!

இப்படி மேற்குலகும்.. உக்ரைனும் கூசாமல்.. செய்யும் பயங்கரவாதம் பற்றி ஏன் கதைக்க மறுக்கிறீர்கள். பிரித்தானியாவின் விசேட படைப்பிரிவை சேர்ந்த ஒருவர் அண்மையில் உயிரிழந்திருக்கிறார். இதே படையணி தான் ஈழத்தில் தமிழ் மக்களை மிக மோசமாகக் கொன்றொழித்த குறிப்பாக கிழக்கு மாகாணத்தில்.. சிங்கள அதிரடிப்படைக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கி இருந்தது. ஆக.. மேற்குலகின் நேரடிப் பங்களிப்போடு நிகழ்த்தப்படும் பயங்கரவாதத்தை சமாளிக்க ரஷ்சிய எதையும் செய்யலாம் அதானே. அது எப்படி பயங்கரவாதமாகும்..?!

குறிப்பாக மேற்குலக அதிநவீன இலத்திரனியல் ஆயுதங்களின் பாவனையை மட்டுப்படுத்த.. மின் இலக்குகளை தகர்க்கப்பட வேண்டியதும்.. மின்னணு மற்றும் மின்காந்த அலை மையங்கள் அழிக்கப்படுவதும் அவசியமே. அதனால்.. அப்பாவிகள் பாதிக்கப்படுவதற்கும் மேற்குலகமே பொறுப்பு. 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nochchi said:

இப்போதுமட்டும் இழப்பில்லையா? இல்லாமல் இழப்பதைவிட இணைந்து நேட்டோவின் உதவிகளை வலுப்படுத்தினால் புதினால் என்ன செய்யமுடியும்?

உக்ரேனைஆக்கிரமிக்க போர் தொடுத்ததில் இருந்து  ரஷ்யா வளர்ந்து கொண்டு செல்கிறது என்று தான் எமது ஆட்கள் சொல்லி கொள்கிறார்கள். புதினின் பைத்தியகாரதனமான போரை நியாயபடுத்த காரணம் தேடி கொண்டு திரிகிறார்கள்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.