Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் விரும்பும் தீர்வையே ஏற்போம்! – சொல்ஹெய்மிடம் சம்பந்தன் இடித்துரைப்பு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விரும்பும் தீர்வையே ஏற்போம்! – சொல்ஹெய்மிடம் சம்பந்தன் இடித்துரைப்பு..

IMG-20221220-213625.jpg

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு தருவதாக இருந்தால், அந்தத் தீர்வு எமது மக்கள் விரும்பும் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகக் காணப்பட வேண்டும். அப்படியான தீர்வையே நாம் மனதார ஏற்றுக்கொள்வோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையிலான சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று நடைபெற்றது. சொல்ஹெய்மின் கோரிக்கைக்கு அமைவாக இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இதன்போதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

சந்திப்பின்போது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சி பேச்சுத் தொடர்பிலேயே அதிக நேரம் கலந்துரையாடப்பட்டது.

மேற்படி சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில்,

“புதிய அரசமைப்பு விடயம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்முடன் பொதுவாகப் பேசினோம்.

விசேடமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆரம்பித்துள்ள பேச்சு, தமிழ்த் தேசியப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் ஆராய்ந்தோம்.

ஜனாதிபதி, தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு தருவதாக இருந்தால் அந்தத் தீர்வு எமது மக்கள் விரும்பும் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகக் காணப்பட வேண்டும். அப்படியான தீர்வையே நாம் மனதார ஏற்றுக்கொள்வோம் என்று சொல்ஹெய்மிடம் தெரிவித்தேன்” – என்றார்.

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில்,

“இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதயசுத்தியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாம் ஆதரவு வழங்குவோம். அரைகுறைத் தீர்வை ஏற்பதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை என்பதைச் சொல்ஹெய்மிடம் சுட்டிக்காட்டினோம்” – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2022/12/181214/

  • கருத்துக்கள உறவுகள்

இடித்துரைப்பு! 😂

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கும் சுமேந்திரனுக்கும்  என்ன  தேவையோ

அதுவே ..

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாலி said:

இடித்துரைப்பு! 😂

ஆமால்ல.

அது தான் சொல்கேம் தள்ளி இருக்கிறாரோ?

2 minutes ago, விசுகு said:

சம்பந்தருக்கும் சுமேந்திரனுக்கும்  என்ன  தேவையோ

அதுவே ..

விசுகு

இருவருக்கும் அப்படி என்ன தான் தேவை.?

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுக்கு, எழுந்து நிற்க முடியாவிட்டாலும்…
அந்த சண்டித்தனம் தான் எனக்கு பிடித்தது. 😂
இல்லாட்டி… நாய், கவ்விக் கொண்டு போயிருக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆமால்ல.

அது தான் சொல்கேம் தள்ளி இருக்கிறாரோ?

விசுகு

இருவருக்கும் அப்படி என்ன தான் தேவை.?

 

(உள்நாட்டில்

ஆசியாவில் எல்லாம் சொத்து வீடு  கார் வாங்கியாச்சு)

இனி சர்வதேச  தேவைகளாக  இருக்கும் அண்ணா

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இடித்துரைப்பு! 😂

தலைப்பை பார்த்தவுடன் இந்த "இடியை" பற்றி தான் எழுத நினைத்தேன்..  சிங்கன் முந்திட்டார் 😂

  • கருத்துக்கள உறவுகள்

சொல்கைமுக்கு இதொன்னுமே தெரியாது.. இவர் இப்பதான் புதிசா இடிச்சுரைக்கிறார்.

சொல்கைம் ஒரு சர்வதேச அரசியல் வியாபாரி. சிங்களத்துக்கு இக்கட்டில் முண்டுகொடுக்க வந்திருக்கிறார்.. கூலிக்கு.

இதற்குள் தமிழர்கள் தமக்கு ஆதாயமான நன்மையைப் பெற சாத்தியங்களைத் தேடுவது தவறல்ல.. ஆனால்.. படங்காட்டிக் கொண்டிருந்தால்.. அந்தச் சூழலை சொல்கைம் நன்கு பயன்படுத்திவிட்டு.. தமிழர்களை இன்னொரு முள்ளிவாய்க்காலுக்குள் புதைக்கவும் தயங்கமாட்டார் என்பதை மனதில் இருத்திச் செயற்படுவது நல்லம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

தலைப்பை பார்த்தவுடன் இந்த "இடியை" பற்றி தான் எழுத நினைத்தேன்..  சிங்கன் முந்திட்டார் 😂

ஒரு சொல்லே அதிருதில்ல.

அது தான் சம்பந்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

இடித்துரைத்த காரணத்தால் சம்பந்தரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 😂

 தமிழ்  ஊடகங்களும் அவர்களின் தலையங்கமும். 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் தலைவர் தான் இடித்துரைப்பு செய்ததாக சொல்லவில்லை. வணக்கம்லண்டனின் தயாரிப்பு.
இடித்துரைப்பு என்றால் என்ன அர்த்தம் என்று அகராதியில் பார்த்தேன்.இடியுடன் கூடிய மழை என்று இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாலி said:

இடித்துரைப்பு! 😂

சம்பந்தனுக்கும் ..சுமந்திரனுக்கும் தான் சொல்கைம் ...இடித்துரைத்திருக்கிறார்..அதாவது இதுதான் கடைசி சந்தர்ப்பம்...வாங்கிற பெட்டியை என்மூலம் வாங்கிக்கோ..என்னை விட்டால் இனி உங்களுக்கு கிடைப்பது ...செல்லாக் காசுப் பெட்டிதான்...இதுதான் இதன் அர்த்தம்...🤣

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜனாதிபதி, தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு தருவதாக இருந்தால் அந்தத் தீர்வு எமது மக்கள் விரும்பும் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகக் காணப்பட வேண்டும். அப்படியான தீர்வையே நாம் மனதார ஏற்றுக்கொள்வோம் என்று சொல்ஹெய்மிடம் தெரிவித்தேன்” – என்றார்.

மக்களால் நிராகரிக்கப்படப்போகிறோம் என்பது நன்றாக தெரிந்து இடித்துரைக்கிறார்கள். (செயற்படுகிறார்கள்). இல்லையேல் வீடு இடிந்து நொருங்குவது திண்ணம். ஆனால் அவர்களோ இன்னொரு கட்சியை உருவாக்கி தீர்வை சிதற வைக்க முயற்சி எடுக்கப்படுகிறது. தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வரவேண்டும் என்பார்கள், அவர்கள் ஒன்று வடக்கே இழுத்தால், மற்றொன்று மேற்கே இழுக்கும், சிலதுகளை ஒன்று சேர்த்து இழுக்க முடியாது. அவ்வாறான பணிகள் அவர்களுக்கு மேலிடத்தால் வழங்கப்படும். முஸ்லீம்கள் வேறு இறக்கிவிடுவார்கள். சேர்ந்து வாருங்கள் என்று அழைப்பு, ஆனால் குட்டையை குழப்பி வேடிக்கை பார்ப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வணக்கம் இலண்டன் இணையத்தளத்தை நடத்திறரும் காலக்கதிர் பத்திரிகை ஆசிரியரும் ஒரே ஆள்போல இருக்கு.
ஒருத்தனுக்கு எழும்பி நிற்கவே முடியலையாம் இடிக்கிறதில மட்டும்  விண்ணனாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாய்வீச்சு என்றொரு சொற்தொடர் தமிழில் இருக்கு தெரியுமோ? அது வாள்வீச்சை விட வீரியமானது என்று சிலர் நினைக்கிறார்கள் போலுள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.